நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
26.9.25
அதை நேரிடையாக சொல்ல நான் நாணம் இல்லாதவள் அல்ல
இன்றைக்கு 42 ஆண்டுகளுக்கு முன்பு வந்த படம் சரணாலயம்!! மோகன் நளினி நடித்த இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் R சுந்தரராஜன். பின்னாட்களில் இவர் தரமான சில படங்களையும் இயக்கி இருந்தார்.
இந்த வாரம் இந்தப் படத்திலிருந்து இரண்டு பாடல்கள். முதல் பாடல் மலேஷியா வாசுதேவன் குரலில் ஒலிக்கும் பாடல். வாலியின் பாடலுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன்.
பாண்டே உடனான விஜய் ஆண்டனி பேட்டி சமீபத்திகள் பார்த்தேன். இதைப் பார்க்கும்வரை விஜய் ஆண்டனி மேல் எனக்கு பெரிய அபிப்ராயம் எதுவும் இல்லை. ஆனால் இதைப் பார்த்ததும் அவர்மேல் கொஞ்சம் மதிப்பு வந்தது.
அதிராத குரல். எளிமையான உரையாடல். செயற்கைத்தனம் இல்லாத உடல்மொழி
"நான் காலேஜ் முடிஞ்சு வீட்டை விட்டு வெளிய வந்தப்பதான் உலகத்தைப் பார்த்தேன். அப்பவும் எதுவும் தெரியாது. நம்பிக்கை மட்டும் இருந்தது. நான் எல்லாத்தையும் மூடத்தனமான நம்புவேன். பிளைணடா நம்புவேன்.நடந்துச்சு வேற..."
"காலத்தையும் ஆட்களையும்?
"இல்லை சார்.. நான் என்ன முடிவு பண்றேனோ அதை..."
"விஜய் ஆண்டனி இந்த ஸீன்ல நடிப்பு பின்னிட்டாருப்பா அப்படீன்னு எதை சொல்லலாம்? எப்ப சொல்லலாம்?"
"இல்லை. வராது. நீங்க இந்த ஜென்மத்துல அப்படி சொல்ல மாட்டீங்க.. எனக்கு என்ன வருதோ அதான்.. புத்திசாலிகளுக்குதான் இந்த உலகமா என்ன.. என்ன மாதிரி ஆட்களுக்கும் இடம் இருக்குதானே... எனக்கு தெரிஞ்சதை நான் செய்யறேன்...."
"அப்பா இறக்கும்போது அம்மாவுக்கு 27 வயசு. ஒன்பதாவதுதான் படித்திருந்தார்கள். கம்பாஷனேட் கிரௌண்டுல வேலை கிடைக்கும்ங்கறதே வேற சிலபேர் சொல்லிதான் தெரியும். அப்படியே வேலைக்கு போனாலும் ஸ்வீப்பர் வேலை - பெருக்கற வேலைதான் - கிடைக்கும். பத்தாவது பாஸ் பண்ணினா ஜூனியர் அசிஸ்டன்ட் வேலை கிடைக்கும்னாங்க. இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு இத்தனை வருடங்களுக்குப் பின் அம்மா தனியாக இருந்து, பத்தாவது பாஸ் பண்ணினாங்க.. அப்போ நாங்க மூணு பேரும் ஒரே ஊர்ல மூணு ஹாஸ்டல்ல இருந்தோம். அம்மா YWCA, நான் சேவியர்ஸ் ஹாஸ்டல், தங்கச்சி இஃகேனேசியஸ் கான்வென்ட் ஹாஸ்டலில்.."
"அதுக்கு காரணம் டை தான் சார். நாம ரெண்டு பேருக்கும் ஒரே வயசு.. 50 வயசு. நீங்க சினிமா இண்டஸ்ட்ரில இருந்திருந்தா நீங்களும் இப்படி இருந்திருப்பீங்க.. இண்டஸ்ட்ரியே உங்களை மாத்தி விட்டுடும்..."
"தெரியாதுன்னு நீங்க நினைக்கும்போது, பார்க்கற எல்லாமே புதுசா இருக்கு, கத்துக்கணும்னு நினைக்கும்போது யங்காவே ஃபீல் செய்வோம். அது கூட ஒரு காரணமா இருக்கலாம்."
"ஒவ்வொரு இசை அமைப்பாளரையும் பார்க்கும்போதும் நாம் எவ்வளவு கம்மியாக இருக்கோம்னு தெரிஞ்சுதா?"
"தெரிஞ்சுது. இன்னிக்கி வரைக்கும். இப்பவும் தெரியாதுன்னுதான் சொல்வேன். மொசார்ட் யாருன்னு தெரியும். இளையராஜா யாருன்னு தெரியும். தெரியாதுங்கறதை வச்சுக்கிட்டு நான் இன்ஃபீரியரா ஃபீல் பண்ணவே இல்லை. இதை இப்படி சொல்வேன். அந்தப் பக்கம் அடுத்த பாட்டு ஹிட்டுன்னுதான் சொல்வேன்.
[இது மூன்று பாகம் இருக்கிறது என்று நினைக்கிறேன். விரும்புபவர்கள் இணையத்தில் தேடி மற்ற பகுதிகளையும் பார்க்கலாம்.]
விஜய் அன்டனியின் பேட்டியைப் பார்க்கணும். இவரை சென்னை ஏர்போர்டில் ஒரு பயணத்தின்போது சந்தித்தேன். படம் எடுத்துக்கொண்டேன். மிக இயல்பானவர். இவரைப் பற்றிய நல்ல எண்ணம் தோன்றியது (பாடகி சித்ரா, தொலைக்காட்சியில் பார்ப்பது போன்றவரில்லை. சிடு சிடு, அகங்காரம் கொண்டவர் என்ற அபிப்ராயம் அவரை என் பெண்ணுடன் ஏர்போர்டில் பார்த்தபோது தோன்றியது)
வி.அ முதல் படம் பார்த்து பசங்க பயந்தார்கள். பிச்சைக்காரன் படம் நாங்க ரசித்துப் பார்த்தோம் (ப்ளூ ரே டவுன்லோடும் பார்த்தேன். பையனிடம் படம் சூப்பர் பார் என்று போட்டேன். கொஞ்ச நேரத்துல அழுதுகிட்டு, படம் பார்க்கமாட்டேன்னு சொல்லிட்டான். அவன் சென்டிமென்ட் உள்ளவன்)
இவர் சவல்லும் தூய சவேரியார், இக்னேஷியஸ் கான்வென்ட் பாளையங்கோட்டையில் உண்டு. இவர் அந்த ஊர் கார்ரா எனப் பார்க்கவேண்டும்.
வாங்க நெல்லை.. ஊடகங்களில் சகட்டு மேனிக்கு ஒருவரைப்பற்றி விமர்சனம் ஏதாவது எதிர்த்து எடுத்து விடுவார்கள். அந்த வகையில் இவர் பற்றியும் சில விமர்சனங்கள் உண்டு. ஆனால் இவரின் இந்த பேட்டி பார்த்ததும் கவரப்பட்டேன். அங்கு போனீர்கள் என்றால் இதன் மற்ற நாகங்களை உங்களுக்கு யு டியூபே சஜஸ்ட் செய்யும்.
திருநெல்வேலி ஊர் பற்றியும் அதன் பாஷை பேசாதது குறித்தும் கூட கேள்வி பதிலில் இருக்கிறது.
விஜய் அன்டனியின் பேட்டியைப் பார்க்கணும். இவரை சென்னை ஏர்போர்டில் ஒரு பயணத்தின்போது சந்தித்தேன். படம் எடுத்துக்கொண்டேன். மிக இயல்பானவர். இவரைப் பற்றிய நல்ல எண்ணம் தோன்றியது (பாடகி சித்ரா, தொலைக்காட்சியில் பார்ப்பது போன்றவரில்லை. சிடு சிடு, அகங்காரம் கொண்டவர் என்ற அபிப்ராயம் அவரை என் பெண்ணுடன் ஏர்போர்டில் பார்த்தபோது தோன்றியது)
பதிலளிநீக்குவி.அ முதல் படம் பார்த்து பசங்க பயந்தார்கள். பிச்சைக்காரன் படம் நாங்க ரசித்துப் பார்த்தோம் (ப்ளூ ரே டவுன்லோடும் பார்த்தேன். பையனிடம் படம் சூப்பர் பார் என்று போட்டேன். கொஞ்ச நேரத்துல அழுதுகிட்டு, படம் பார்க்கமாட்டேன்னு சொல்லிட்டான். அவன் சென்டிமென்ட் உள்ளவன்)
இவர் சவல்லும் தூய சவேரியார், இக்னேஷியஸ் கான்வென்ட் பாளையங்கோட்டையில் உண்டு. இவர் அந்த ஊர் கார்ரா எனப் பார்க்கவேண்டும்.
வாங்க நெல்லை..
நீக்குஊடகங்களில் சகட்டு மேனிக்கு ஒருவரைப்பற்றி விமர்சனம் ஏதாவது எதிர்த்து எடுத்து விடுவார்கள். அந்த வகையில் இவர் பற்றியும் சில விமர்சனங்கள் உண்டு. ஆனால் இவரின் இந்த பேட்டி பார்த்ததும் கவரப்பட்டேன். அங்கு போனீர்கள் என்றால் இதன் மற்ற நாகங்களை உங்களுக்கு யு டியூபே சஜஸ்ட் செய்யும்.
திருநெல்வேலி ஊர் பற்றியும் அதன் பாஷை பேசாதது குறித்தும் கூட கேள்வி பதிலில் இருக்கிறது.
இன்றைக்குப் பகிர்ந்துள்ள பாடல்களைக் கேட்ட நினைவு இல்லை. பிறகுதான் காணொளி பார்க்கணும்.
பதிலளிநீக்குஅப்படிதான் சொல்றீங்க.. அப்புறம் அதைப் பற்றி ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்!!!
நீக்குகமலா ஹரிஹரன் மேடம் நலமா? உடல்நிலை சரியில்லை என எங்கோ குறிப்பிட்டிருந்த நினைவு. அவரது பேத்தியின் எலும்பு முறிவு சரியாகிவிட்டதா?
பதிலளிநீக்குஇன்னும் சற்று நேரத்தில் கமலா அக்காவிடமிருந்து "வணக்கம் நெல்லை சகோதரரே..." என்று தொடங்கி பதில் வரும்.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குஎழுதுகிறாள் ஒரு கவிதை..
பதிலளிநீக்குபாடல் பிடித்தமான ஒன்று..
விஜய் ஆ - அவர்களது பிச்சைக்காரன் உள்பட
பதிலளிநீக்குசில படங்கள் பார்த்திருக்கின்றேன்...
இவரும் முருக பக்தராக நடிக்கின்றார்..