29.9.25

"திங்க"க்கிழமை  :  வேர்க்கடலை சட்னி  -  பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி 

வேர்கடலை சட்னி


தேவையான பொருள்கள்:


வேர்கடலை   - ஒரு கப்

தேங்காய் துருவல்  - 1/2 கப்

வெங்காயம்(பெரியது)  - 1

தக்காளி  -  1

வற்றல் மிளகாய்  - 4 அல்லது 5

பூண்டு(optional)  -  4 பல்

இஞ்சி  -  சிறு துண்டு

புளி  - நெல்லிக்காய் அளவு

உப்பு  -  2  அல்லது 2 1/4 ஸ்பூன்

தாளிக்க:

கடுகு, உளுத்தம் பருப்பு, ஒரு மிளகாய் வற்றல்.

செய்முறை:

ஓரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடலையை வறுத்துக் கொள்ளவும். பிறகு அதோடு மிளகாய் வற்றல், புளி இவைகளையும் சேர்த்து வறுத்துக் கொண்டு தனியே வைத்துக் கொள்ளவும்.


பிறகு அதே வாணலியில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, இஞ்சி இவைகளை சேர்த்து வதக்கிக் கொண்டு, இவைகளோடு தேங்காய் துருவல் மற்றும் வறுத்து வைத்திருக்கும் கடலை, மிளகாய் வற்றல், புளி இவைகளையும் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து, உப்பு சேர்த்து, கலக்கவும். அல்லது மிக்ஸியில் அரைக்கும் பொழுதே உப்பை சேர்த்து விடலாம். 

அரைத்த விழுதில் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் இவைகளை தாளித்தால் சுவையான கடலை சட்னி ரெடி. பொங்கல், உப்புமா, தோசை இவைகளுக்கு நல்ல சைட் டிஷ்!  

5 கருத்துகள்:

  1. வேர்கடலை சட்னி செய்முறை நன்று. பூண்டு சேர்க்காமல் நாங்களும் இப்படிச் செய்வோம்.

    தேங்காய் விலை அதிகமாகும்போது பலரும் இந்தச் சட்னி அல்லது பொட்டுக்கடலைச் சட்னிக்கு மாறிவிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல செய்முறை..

    யாரும் இதனை -
    திரும்பவும் அரைத்து வைக்காமல் இருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதோ சமீபத்தில் நான் செய்த சிலவற்றை தி பதிவாக அனுப்பப்போகிறேன். அவை இங்கேயே மற்றவர்கள் எழுதி வெளிவந்திருக்கலாம் அல்லது மற்றவர்கள் தளத்திலும் வந்திருக்கலாம். அதுக்காக நான், கேசரியில் கடுகு உ பருப்பு தாளித்துவிடவும், மைசூர்பாக்கில் அலங்காரத்துக்கு, மேலே வறுத்த முந்திரியை ஒட்டிவிடுங்கள் என்று எழுதினால் நீங்களே சண்டைக்கு வரமாட்டீங்களா துரை செல்வராஜு சார்.

      ஆமாம் இங்கு செவ்வாய்க்கு எப்போது கதை எழுதப்போகிறீர்கள்? ஏஐ துணையுன் நல்ல படங்கள் போடுவார்களே

      நீக்கு
  3. நல்லாருக்கு பானுக்கா. செய்முறை . நம் வீட்டிலும் இது செய்வதுண்டு. பூண்டு சேர்த்தும், சேர்க்காமலும்....

    பொட்டுக்கடலைக்குப் பதில் நிலக்கடலை சேர்த்துச் செய்வதுண்டு

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!