'அம்மாயி மொகுடு மாமாகு யமுடு' என்று இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தார்களாம். ஆச்சரியகரமாக தமிழில் அந்த அளவு பெரிய வெற்றி பெற்ற படம்.
வண்டிக்காரன் மகன். 1978 ல் வந்தது. அமிர்தம் இயக்கத்தில் கருணாநிதி கதை வசனத்தில் அறிஞர் அண்ணாவின் கதை.
வாலியின் பாடல்களுக்கு இசை எம் எஸ் விஸ்வநாதன். இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கும். ஒன்று, 'மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே' பாடல். வாணி ஜெயராமுடன் SPB பாடியது.
இன்று பகிரப்போவது யாரோ ரமோலாவுடன் SPB பாடும் பாடல். சரணங்களில் சும்மா குழைந்து மயக்கி இருப்பார் தலைவர்.
சுவாரஸ்யமான பாடல். SPB குரல்.
கார்த்திகை மாதம் கார்காலம்
கம்புலி எங்கும் பனிமூட்டம்
உடல் வேர்த்திட நின்றாள் பருவச்சிலை
அதை வேடிக்கை பார்த்தது..
ஏன் சிரிக்கறே என் சிரிக்கறே
பள்ளியறை ம்..ஹ்ம்…….பள்ளியறை..
படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை
படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை
சுகம் எடுக்கவும் கொடுக்கவும் பொருத்தமில்லை
சுகம் எடுக்கவும் கொடுக்கவும் பொருத்தமில்லை
மடல் கொண்ட வாழை
உடல் கொண்ட பாவை
இடை கொள்ளவில்லை
அவள் கொண்ட சேலை
அவன் வந்த பின்னே அதற்கென்ன வேலை
அவன் வந்த பின்னே அதற்கென்ன வேலை
வந்தான் செந்தேன் தந்தான்
செவ்வாய் மீது ஓயாமல் முத்தாடினான்
வண்ணம் கொஞ்சும் அன்னம்
தன் பூமேனி போதைகள் கொண்டாடினாள்
படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை
சுகம் எடுக்கவும் கொடுக்கவும் பொருத்தமில்லை
நீர் கொண்ட மேகம் நிலம் வந்து சேர
அனல் கொண்ட பூமி குளிர் கொண்டு ஆற
கொடி கொண்ட பூவில் மது வெள்ளம் ஊற
முன்னும் பின்னும் மின்னும்
பொன் மானோடு ஆனந்த நீராடினான்
மெத்தை சத்தம் தத்தை
தன் தாபங்கள் தாளாமல் போராடினாள்
குடம் கொண்ட வீணை
அவன் கொண்டு மீட்ட
குடம் கொண்ட வீணை
அவன் கொண்டு மீட்ட
சுகமென்று என்று ஸ்வரஸ்தானம் காட்ட
உறவென்ற ராகம் அரங்கேற்றமாக
இன்பம் என்னும் சந்தம் தன் பாட்டாக
பூங்கோதை தாலாட்டினாள்
இன்னும் இன்னும் என்று
தன் காதார தான் கேட்டு பாராட்டினாள்
படுத்தாள் புரண்டாள் உறக்கமில்லை
சுகம் எடுக்கவும் கொடுக்கவும் பொருத்தமில்லை
========================================================================================
இளையராஜாவுக்கு கிடைக்காத இருபதினாயிரம் ரூபாய்!
கங்கை அமரன் நிறைய அற்புதமான பாடல்களை எழுதி இருக்கிறார். அவரிடமும் சரஸ்வதி குடிகொண்டிருக்கிறாள். ஆரம்ப காலங்களில் இளையராஜா தன் பாடல்களை டம்மி வரிகள் போட்டு தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் அறிமுகம் செய்ய இவரது பாடல்களைத்தான் உபயோகித்துக் கொள்வாராம். அப்படிப்பட்ட இளையராஜா வைரமுத்து வருகைக்குப் பின்னர் இவரை அழைப்பதை வெகுவாகக் குறைத்துக் கொண்டாராம். கங்கை அமரன் ஆதங்கப்படுகிறார்.
புதிய வார்ப்புகள் படத்துக்கான பாடல் கம்போசிங்கின் போது இளையராஜா வேண்டுமென்றே ஒரு சவால் போல 'நம்தனனம் தனம் தாளம் வரும் புது ராகம் வரும்' பாடலுக்கு டியூன் போட்டு உடனே எழுதிக் கொண்டு வா' என்று சொல்லி விட்டு அடுத்த வேலையைப் பார்க்க போய்விட்டாராம். கங்கை அமரன் உடனே பேபாப்ர் பேனா, கேசெட்டுடன் மொட்டை மாடியில் போய் அமர்ந்து கொஞ்ச நேரத்தில் பாடல் எழுதிக் கொண்டு வந்தாராம். இந்தப் பாடல் பற்றி பேசும்போது அதில் ஒரு திருத்தமும் சொன்னார். "அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்" என்று எல்லோரும் பாடுகிறார்கள். உண்மையில் அது அகில் சந்தன மல்லிகை என்று வரவேண்டும்'' என்கிறார்.
கல்லுக்குள் ஈரம் படத்துக்காக கங்கை அமரன் 'சிறுபொன்மணி அசையும் அதில் தெறிக்கும்' பாடலை எழுதியதும், படித்துப் பார்த்த பாரதிராஜா மிகவும் மகிழ்ந்துபோய், ரசித்து உடனே உணர்ச்சி வசப்பட்டு கங்கை அமரனுக்கு 20,000 எடுத்துக் கொடுத்தாராம். அப்போது கண்ணதாசன் கூட ஒரு பாடலுக்கு 750 அல்லது 1000 ரூபாய்தான் வாங்கி கொண்டிருந்தாராம். ஏன், இளையராஜா கூட ஒரு படத்துக்கே அவ்வளவு பணம் அப்போது வாங்கவில்லையாம். "இந்தப் பாடல் காட்சியை எப்படி எப்படி எல்லாம் எடுக்கவேண்டும் என்று நிறைய கற்பனைகள் வருகிறது" என்றாராம் பாரதிராஜா. (ஆனால் பாடல் காட்சி அப்படி ஒன்றும் விசேஷமாக இருக்கவில்லை!)
புதிய வார்ப்புகள் படத்தில் ஒரு தெருக்கூத்து பாடல் வருமாம். அது ஒரிஜினலாக கிராமங்களில் எப்படி வருமோ அப்படி வரவேண்டும் என்று அங்கு சென்று தாளங்களை பதிவு செய்து கொண்டு வந்து அதே பாணியில் பாடினார்களாம். அதில் இளையராஜா, பாரதிராஜா, பாஸ்கர், கங்கை அமரன் எல்லோருமே குரல் கொடுத்திருப்பார்களாம்.
மகரக்கட்டு வரும்வரை இளையராஜாதான் அண்ணனின் அந்நாளைய மேடை நாடகப் பாடல்களில் பெண்குரல் என்பதை மறுபடி சொன்னார்.
மாஞ்சோலைக் கிளிதானோ பாடல் டியூனுக்கு கங்கை அமரனுக்கு வரிகள் தோன்றாமல் திகைத்து, அப்புறம் பாடல் எழுத முத்துலிங்கம் அவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டபோது அவர் எப்படி எழுதி இருக்கிறார் என்று வந்து பார்த்து பாராட்டினாராம்.
அலைகள் ஓய்வதில்லை வெற்றி விழாவில் அப்போதைய முதல்வர் எம் ஜி ஆர் "அதென்ன கப்பக்கிழங்கு"என்று கேட்டாராம்.
அதே மேடையிலேயே அதற்குவிளக்கம் கொடுத்தாராம் கங்கை அமரன்.
அவர் எழுதிய பாடல் வரிகளை இப்போதும் மனப்பாடமாக சொல்கிறார்.
============================================================================================
1974 ல் வந்த 'உன்னைத்தான் தம்பி' படம் அதை எழுதிய பஞ்சு அருணாச்சலம் அவர்களாலேயே ரீமேக் செய்யப்பட்டுபின்நாட்களில் 'ராஜா சின்ன ரோஜா'வாக வெளிவந்தது. ஒரே கதை.
உன்னைத்தான் தம்பி படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா, ஸ்ரீகாந்த், அசோகன், தேங்காய் நடித்திருந்தார்கள். வாலியின் பாடல்களுக்கு இசை விஜயபாஸ்கர்.
இந்தப் படத்திலிருந்து SPB வசந்தாவுடன் இனைந்து பாடிய இந்த "மணிவிளக்கே மாங்கனியே' பாடல். சாதாரணமாக ஆரம்பிக்கும் பாடல் சரணங்களில் 'சூடு' பிடிக்கும்!
SPB : மணி விளக்கே மாந்தளிரே
வசந்தா : உண்மையிலா
SPB : மது ரசமே ரகசியமே
வசந்தா : என்னிடமோ
SPB : கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்
வசந்தா : ஆ…பொறுத்திருங்கள்….
SPB : மணி விளக்கே மாந்தளிரே
மது ரசமே ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்
வசந்தா : லலால லலால லா
SPB : மன்மதனை அழைத்து வந்தேன்
மந்திர மணியால் பூஜை செய்வேன்
வசந்தா : லலால லலால லா
SPB : மன்மதனை அழைத்து வந்தேன்
மந்திர மணியால் பூஜை செய்வேன்
அபிஷேகம் நடத்த வந்தேன்
அந்தியிலே சாந்தி செய்வேன்
வசந்தா : லலால லலால லா
SPB : ரசிகனுக்கு இடம் தருவாய்
மடியில் வைத்து தாலாட்டுவாய்
வசந்தா : தாளாதம்மா……
SPB : மணி விளக்கே மாந்தளிரே
மது ரசமே ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்
வசந்தா : தாராராதராதர
SPB : விருந்து வந்து அழைத்ததடி
விதவிதமாய் நினைத்ததடி
மறைந்து நின்றால் என்ன சுகம்
மலரணையில் கதை சொல்லடி
வசந்தா : லலால லலால லா
SPB : மனம் கொடுத்தாள் மஹராணி
சுகம் இல்லையேல் தீராதடி ம்ம்…
பெண் : காலம் வரும்….
SPB : மணி விளக்கே மாந்தளிரே
மது ரசமே ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்
SPB : கை அழகு முல்லைச்செண்டு
கால் அழகு வாழைத்தண்டு
இடை அழகு அல்லிக்கொடி
இருவருக்கும் பொருத்தமடி
வசந்தா : லலால லலால லா
SPB : பாதி உடல் தெரியுதடி
பார்த்த வரை போதாதடி ம்ம்…
வசந்தா : கூடாதம்மா…..
SPB : மணி விளக்கே மாந்தளிரே
மது ரசமே ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்
=========================================================================================================
BR விஜயலக்ஷ்மி இயக்குனர், பந்துலுவின் மகள் சொல்கிறார்.
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் நாலு ரீல் முடிவதற்குள்ளாகவே அப்பா இறந்து விட்டார். கன்னடத்தில் புட்டண்ணா கனகலிடமும் அதே நேரம் ஒரு படம் பண்ணிக்க கொண்டிருந்தார். அந்நிலையியல் ஏகப்பட்ட கடன்தான் இருந்தது. ஒருவேளை மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படம் முடித்திருந்தால் கடன் பிரச்னை தீர்ந்திருக்கலாம். ஆனால் அப்பா இப்படி பாதியில் மறைந்ததும் குடும்பம் திகைத்து நின்றது. சிவாஜி சார் இறுதிச் சடங்குக்கு வந்து விட்டு சென்று விட்டார். எம் ஜி ஆர் அந்த மீதிப் படத்தை அவரே இயக்கி முடித்ததோடு, கடன்காரர்கள் எல்லோரையும் அழைத்து, 'இந்தக் குடும்பத்தை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. எல்லாவற்றுக்கும் நான் பொறுப்பு' என்று சொல்லி, சுத்தமாக கடன் இல்லாமல் செய்தார்.
அண்ணன் இன்னும் காலேஜ் செல்லும் நிலையில், மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு அம்மா மிகவும் கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார். அப்போது எம் ஜி ஆர் அமெரிக்கா போய்வந்தார். நானும் அண்ணனும் அவரைப் பார்க்க தோட்டத்துக்கு போனோம். ஏகப்பட்ட கூட்டம். எங்களை பார்த்து அருகில் அழைத்து ஆறுதல் சொன்னார். நான் அழுது விட்டேன். "எதற்கு அழறே... என் அப்பா மறைந்தபோது எனக்கு இரண்டு வயசு. உன் அப்பா அட்லீஸ்ட் உன் ஸ்கூலிங் எல்லாம் முடிச்சுதான மறைஞ்சிருக்கார். தைரியமா இரு" என்று சொல்லி ஜானகி அம்மாவை அழைத்து ப்ளாங் செக் தரச் செய்தாராம். இவர்கள் அதை உபயோகப்படுத்தவில்லை என்றாலும் அந்த மாரல் சப்போர்ட் எங்களுக்கு தேவையாய் இருந்தது என்கிறார். 'தமிழில் என் முதல் படமான சின்னவீடு படம் ப்ரிவியூவுக்கு வந்தபோது ஜானகி யம்மா என்னை அவரிடம் அறிமுகப்படுத்தியபோது கண்கள் மலர்ந்தது அவருக்கு. அப்போது அவருக்கு ஒரு கை வராத நிலை. ஒரு கையால் என் கையை அழுத்தப் பற்றி ஊக்கத்தை சொன்னார். He had true compassion for people. அதெல்லாம் யாருக்குமே வராது.இன்னிக்கி அமாவாசை. தர்ப்பணத்துல எம் ஜி ஆர் பெயரும் சேர்ந்துதான் செய்வோம்'.
முரடன் முத்து படத்தை வெளியிடும் சமயம் நவராத்திரியை வெளியிட வேண்டாம். அடியாகும் என்று பந்துலு ஷண்முகம் அவர்களிடம் கேட்டிருக்கிறார். ஏற்கனவே கர்ணன் பட நஷ்டத்துக்கு அப்புறம் அதை சரிக்கட்டத்தான் முரடன் முத்து எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் என்ன நடந்தது என்றால் முரடன் முத்து வெளியான அதே தினம் பக்கத்துக்கு தியேட்டரிலேயே நவராத்திரியும் வெளியாக, ஒடிந்து போனாராம் பந்துலு.
உடனே எம் ஜி ஆரிடம் ஓடி இருக்கிறார். அவர் 'சரி, நீ எனக்கு ஒரு படம் பண்ணு.. இப்பவே அட்வான்ஸ் தா' என்று சொல்ல, 'நான் எதுவும் கொண்டுவ் வரவில்லையே' என்றாராம் பந்துலு. கையில் இருப்பதைக் கொடு என்றதும் ஐந்து இருபது ரூபாய் நோட்டை அட்வான்ஸாக கொடுத்தாராம். அதை ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு அட்வான்ஸ் என்று எழுதி வைத்துக் கொண்டாராம் எம் ஜி ஆர்.
எம் ஜி ஆரும் மறைந்து, ஜானகி அம்மாவும் மறைந்து அப்புறம் அங்கேயிருந்த யாரோ அந்தக் கவரைப் பார்த்து அந்த கவரையும் நோட்டுகளையும் இவர்களிடம் கொடுத்தார்களாம்.
கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன், என்று தமிழ் விடுதலைப் போராட்ட வீரர்களை வைத்து படம் எடுத்த பந்துலுவை அவர் மறைவின்போது தமிழக அரசு சரியாக கௌரவில்லை என்கிற வருத்தம் கட்டாயம் உண்டு என்கிறார். அதே சமயம் கன்னட திரையுலகில் ஒரு வாரம் பந்துலு படங்கள் திரையிட்டு மரியாதை செய்தார்களாம். புனித் ராஜ்குமார் எல்லாம் அழைத்த உடனே விழாவுக்கு வந்து பேசி மரியாதை செய்தாராம்.
===========================================================================================
1972 ல் ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற விக்ட்டோரியா நம்பர் 203 என்கிற படத்தை தமிழில் வைரம் என்று எடுத்தார்கள். இதில் ஜெய்சங்கர், ஜெயலலிதா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்திருந்தார்கள்.
T R ராமண்ணா இயக்கம். கண்னதாசன் பாடல்களுக்கு T R பாப்பா இசை அமைத்திருந்தார். அந்தப் படத்திலிருந்து ஒரு SPB பாடல். உடன் பாடி இருப்பவர் ஜெயலலிதா.
இந்தப் பாடல் ஒரு ஹிந்திப் பாடலிலிருந்து உருவப்பட்டது. ஒரிஜினல் ஹிந்திப்; பாடலின் வரிகள் தெரியாததால் இன்னமும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள் இந்த வைரம் படத்தில் அவர் ஆடிய காபரே நடனம் ஒன்றை அப்போது எடுத்துப் போட்டு அசிங்கப்படுத்தப் பார்த்தார்களாம்.
அப்புறம் ஒரு விஷயம். T R ராமண்ணாவும் T R பாப்பாவும் உடன்பிறந்தவர்கள் அல்ல!
ஜெயலலிதா : இரு மாங்கனி போல் இதழோரம்
SPB : ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
ஜெயலலிதா : பாடுது ராகம்
ஜெயலலிதா : கண்மணி ராஜா பொங்குது
நாணம் பார்த்தது போதும்
SPB : ஒஹ்…..ஒஹ்…ஓ.. காளைக்கு யோகம்
மங்கல மேளம் குங்குமக் கோலம்
மணவறை மகிமை
ஜெயலலிதா : ஹஹ்….ஹஹ்..ஹா
அதுவரை பொறுமை…..
ஜெயலலிதா : இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
SPB : ஏங்குது மோகம்
SPB : திரை மூடும் மேடையிலே
நாடகம் பார்த்தேன்
ஜெயலலிதா : அதில் ஓடும் ஜாடையிலே
போதை
யும் பார்த்தேன்
SPB : சிரிப்பால் என்னை
மாணிக்கப்பதுமை அழைப்பது கண்டேன்
ஜெயலலிதா : எதற்கோ உங்கள் கைகள்
இரண்டும் துடிப்பது கண்டேன்
SPB : இன்றே நான் பார்க்கவா
இல்லை நாள் பார்க்கவா
ஜெயலலிதா : ஆ……ஆ ……. அவசரம் என்ன
ஜெயலலிதா : இரு மாங்கனி போல் இதழோரம்
SPB : ஏங்குது மோகம்
ஜெயலலிதா : இது காதல் பூஜை என்றால்
ஆரத்தி எங்கே
SPB : அதை காமன் வேண்டுமென்றான்
அவனிடம் தந்தேன்
ஜெயலலிதா : கடைக்கண் தீபம்
கனிமொழி யாவும் பாலபிஷேகம்
SPB : இடையெனும் பதுமை
நடையெனும் தேரில் ஊர்வல கோலம்
ஜெயலலிதா : மாலை பொன் மாலையா
இல்லை பூ மாலையா
SPB: ஆ….ஆ கோவிலில் பார்த்தோம்
ஜெயலலிதா : இரு மாங்கனி போல் இதழோரம்
SPB : ஏங்குது மோகம்
SPB : மணி மாளிகை போல் ஒரு தேகம்
ஜெயலலிதா : பாடுது ராகம்
SPB : ஒஹ் ஒஹ் ஏங்குது மோகம்
ஜெயலலிதா : ஆஹ் ஆஹ் பாடுது ராகம்
SPB : லால்லால ஏங்குது மோகம்
ஜெயலலிதா : ம்ம்ம்ம்ம் பாடுது ராகம்….
இன்றைக்கு மூன்று பாடல்களுமே என் நினைவுக்கு வரலை. பிறகுதான் காணொளி பார்க்கவேண்டும்.
பதிலளிநீக்குகங்கை அமரன் எப்போதுமே கலகலப்பாகவும் நிறைய விஷயங்களோடு பேசக்கூடியவர். அவர் பேட்டிகளை விருப்பத்துடன் படிப்பேன். நான்தான் எல்லாம் என்ற த்வனி இருக்காது. நல்ல பகிர்வு
பதிலளிநீக்குபுகழ் பெற்ற நடிகர்கள், இயக்குநர்கள் பணக் கஷ்டத்தில் இருந்தார்கள் என்ற செய்தி ரொம்பவே ஆச்சர்யமாகவும் எரிச்சலாகவும் இருக்கும். கலை இருந்தால் லக்ஷ்மி தேவி தங்கமாட்டாளா இல்லை ஜெமினி கணேசன் போல இவங்க சிந்திப்பதில்லையா என்று தோன்றும்.ஒருவரின் முதல் கடமை அவங்க குடும்பம் அல்லவா?
பதிலளிநீக்கு