பீயம் பெசரட்டு
(JKC)
பீயம் பெசரட்டு - தெரியாத தெலுகு, தெரிந்த காலை உணவு - அரிசி -பாசிப்பயறு தோசை.
படத்தைப் பாருங்கள்.
பெசரட்டு ஆந்திர ஸ்பெஷல். தோசை பலவிதம். அதே போல் பெசரட்டும் பலவிதம். சாதாரணமாக பச்சைப்பயறு மட்டுமே அரைத்து வார்ப்பது. மெத்தென்று இருக்கும். மொரமொரப்பு வேண்டுமென்றால் அரிசி மாவும் வேண்டும். இங்கு இன்று விளம்புவது அரிசி பயறு பெசரட்டு.
தேவையான பொருட்கள்.
பச்சரிசி ஊறவைத்தது.
பச்சை பயறு ஊறவைத்தது.
பொருட்களின் விகிதம் எப்படியானாலும் சரி. உப்பை மட்டும் பார்த்து அளந்து சேருங்கள்.
பச்சைப்பயறு ஸ்டாக் இல்லை. ஆனால் சாலடுக்கு முளை கட்டிய பயறு பிரிட்ஜ்ல் இருந்தது. அதை எடுத்துக்கொண்டேன்.
பெசரட்டும் அடை போன்று தான். சுடுவதற்கு சற்று முன் அரைத்தால் போதும் மாவு புளிக்கக்கூடாது.
அரிசி பயறு அரைத்தெடுத்த மாவு படம்.
தோசைக்கல்லில் வார்த்து
முதல் பெசரட்டு (மெது, கல் காயவில்லை)
கல் காய்ந்தபின் இரண்டாம் பெசரட்டு முறுகலாக
முறுக வந்ததைக் காட்ட பிரமிட் வடிவத்தில் பெசரட்டு தரப்படுகிறது.
தொட்டுக்கொள்ள நிலக்கடலை-வேர்க்கடலை-மல்லாட்டை சட்னி. கார சட்னி.
சாதாரணமாக பெசரட்டு மேல் நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறப்படும்.
பிள்ளைகள், பெரியோர்களுக்கு ஏற்ற எளிதில் செரிக்கும் சத்தான உணவு.
பொருள், வடிவம், செய்முறை விளக்கம் : JKC.
செய்து காட்டியவர் மனைவியார் (பாஸ்)
நல்லா வந்திருக்கு பெசரட். (ஆந்திர அடை). பொதுவா அடைக்கு தொட்டுக்க மி.பொடி ந.எண்ணெய் அல்லது எங்க அம்மாவின் விருப்பமான ப.மிளகாய், உப்பு பெருங்காயம் நைசா அரைத்தது பிடிக்கும். பெசரட்டுக்கும் அது நல்லா இருக்கும். சமீபத்தில் புளிமிளகாயும் பிடிக்குது.
பதிலளிநீக்கு