14.9.25

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - 23 :: நெல்லைத்தமிழன்.

  

1.6.25 அன்று வெளியான பகுதி 22 ன் தொடர்ச்சி. 

தஞ்சை பெருவுடையார் கோயில்

சங்காலச் சோழர்களுக்குப் பிறகு தொண்டைநாடு பல்லவர் வசமும், சோழநாடு மற்றும் பாண்டிய நாட்டை களப்பிரர் என்ற வடக்குப் பகுதியிலிருந்த வந்தவர்களும் கைப்பற்றிக்கொண்டு அரசாண்டனர். கிபி 300லிருந்து இதுதான் நிலைமை. சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு பாண்டியர் சுயாட்சி பெற்றனர். கிபி 600ல் பல்லவர்கள் தொண்டைநாட்டுடன் சோழநாட்டையும் கைப்பற்றி அரசாண்டனர்.  கிட்டத்தட்ட 600 ஆண்டுகள், சோழர்கள் பல்லவர்களுக்கு அடங்கிய சிற்றரசராக உறையூர், கும்பகோணம் திருவாரூர் பகுதியை ஆண்டுவந்தனர். இதனை இடைக்காலச் சோழ அரசு என்று கூறுவர். இவர்களைப் பற்றி நிறைய தகவல்கள் இல்லை என்றாலும், பெரியபுராணம், திருமுறைகள், திவ்யப்பிரபந்தம் மற்றும் சில இலக்கியங்கள் வாயிலாக நமக்குச் சில செய்திகள் கிடைக்கின்றன. இந்த இடைக்காலச் சோழர்களில் பெயர் தெரிந்தவன் கோச் செங்கணான் என்பவன். 


திருமங்கையாழ்வார், திருநறையூர் மணிமாடக் கோயிலைப்பற்றிய பதிகம் ஒன்றில், இந்தச் சோழனைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

அம்பரமும் பெருநிலனும் திசைகள் எட்டும்*

அலைகடலும் குலவரையும் உண்டகண்டன்*

கொம்பமரும் வடமரத்தின் இலை மேல்*

பள்ளிகூடினான் திருவடியே கூடிகிற்பீர்*

வம்பவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு*

மணிவண்டு வகுளத்தின் மலர்மேல் வைகு*

செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்தகோயில்*

திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே

செம்பியன், கோச்செங்கட் சோழன் திருப்பணி செய்த கோயில் திருநறையூரில் உள்ள மணிமாடக்கோயில் என்று சொல்கிறார்.

இந்த கோச்செங்கணான், சிறந்த வீரன். சேர பாண்டியர்களை மட்டுமல்லது பல்லவரையும் பல போர்களில் வென்று சோழநாட்டை அரசாண்டவன். இவன் கையில் இருந்த வாள் ‘தெய்வவாள்’  (தெய்வவாள் வலங்கொண்ட சோழன் சேர்ந்த*) என்று திருமங்கையாழ்வார் குறிப்பிடுகிறார். சிவபக்தி கொண்டவன்.  நடராஜர் அருளால் பிறந்தவன் என்பதால் சிதம்பரம் கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்தவன். வைணவ சமயத்தையும் மதித்து நடந்துவந்தான்.  இராஜேந்திர சோழன், இந்த கோச்செங்கணானை, தன் குலத்தில் உதித்த பெரியோன் என்று பாராட்டியிருக்கிறான்.

கிபி 900ல் பல்லவரை வென்று சோழர் ஆட்சியை நிலைநிறுத்தியவன் ஆதித்த சோழன். அவனும் அவனுடைய மரபினரும் பிற்காலச் சோழர்கள் எனப்பட்டனர். பிற்காலச் சோழர்களில் மிகப் புகழ் பெற்றவன் இராஜராஜ சோழன். அவனுக்கு இளைத்தவனில்லை என்று சொல்லும்படியாக அவனுடைய மகன் இராஜேந்திர சோழனும் வரலாற்றில் மிகப் பெரும் புகழ் பெற்றான்

தஞ்சை பெருவுடையார் கோயிலைப் பற்றிப் பார்க்கப்போகும் இந்தச் சமயத்தில் இராஜராஜ சோழன் பற்றிப் பார்த்துவிடலாம்.

இராஜராஜ சோழன் காலச் சூழ்நிலையால் அரசாட்சிக்கு உரியவனானான். இவனுடைய தந்தை சுந்தரச் சோழர், பட்ட த்து இளவரசனான ஆதித்த கரிகாலன் உள்நாட்டில் கொலைசெய்யப்பட்டுவிட்ட தால் மிகவும் மனம் தளர்ந்து ஒரு வருட காலத்துக்குள் மறைந்துவிட்டான். சுந்தரச் சோழனுடன் அவனுடைய பட்ட த்து அரசி உடன்கட்டை ஏறியதை முன்பு பார்த்தோம். அவர் உடன்கட்டை ஏறியபோது குந்தவை கொஞ்சம் பெரியவள், அருண்மொழி வர்மன் சிறுவன் (பால்குடி மாறா என்று கல்வெட்டுகள் செப்புகின்றன.  எப்படித்தான் மனசு வந்ததோ.. இந்தக் காலத்தில், பெண்களுக்கு குழந்தைகள் பிறந்துவிட்டாள், அவர்கள்தாம் அவர்களுடைய உலகமாகிவிடுகிறது, கணவனை அம்போவென விட்டுவிடுகிறார்கள் என்றே பலரும் சொல்கிறார்கள். ஒரு பிரச்சனை என்று வந்துவிட்டால், தன் குழந்தைகள் பக்கம்தான் ஒவ்வொரு தாயாரும் நிற்கிறாளாம், அதிலும் பிரச்சனை தந்தைக்கும் தனயன்களுக்கும் வந்தாலும். சரி இந்தக் காலப் பிரச்சனையை மறந்துவிட்டு வரலாற்றுக்குச் செல்வோம்).

ராஜராஜனுடைய பாட்டனார் கண்டராதித்த சோழர் பெரும் சிவபக்தர். அவருடைய மனைவி செம்பியன்மாதேவி அவரைப்போலவே மிகுந்த சிவபக்தி உடையவர். தன் சொத்தை முழுமையாக தருமத்திற்காக, கோயில்களுக்காக, சைவ சமயத்துக்காகச் செலவழித்தவர். ராஜராஜன் செம்பியன் மாதேவியால் வளர்க்கப்பட்டவன். பலர் நினைப்பதுபோல சகோதரி குந்தவையினால் வளர்க்கப்பட்டவன் அல்லன். ஆனாலும் சகோதரி என்பதால் அவளிடம் மிக அதிக அன்பு வைத்திருந்திருப்பான்.  செம்பியன் மாதேவியால் வளர்க்கப்பட்டவன் என்பதால்தான். தன் வயதையும் கருத்தில் கொண்டு, தன்னுடைய சிற்றப்பா மதுராந்தக சோழன் அரியணை மேல் கொண்ட ஆசையினால் தன் தந்தைக்குப் பிறகு அவர் அரசராகவும், தான் பட்டத்து இளவரசனாக இருக்கவுமான திட்டத்திற்கு அவனுடைய ஆமோதிப்பும் இருந்தது.  (இதெல்லாமே ஊகம்தான். காரணம், மதுராந்தக சோழனுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் தன் தந்தையின் அரசாட்சியில்-ராஜராஜ சோழன் ஆட்சியிலும் அவன் இருந்தான், அறநிலையத்துறையை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு ஒரு சமயத்தில் அவன் மீது குற்றச்சாட்டு எழும்பி, அவன் சிறைப்பட்டு பிறகு சிறையில் இறந்தான் என்று படித்தேன். இதற்கான வரலாற்று ஆதாரம் என்ன என்ன இருக்கிறது என்று தெரியவில்லை)

உத்தமச் சோழன் ஆட்சியில் (மதுராந்தக சோழன்) அவன் இறக்கும் பதினைந்து ஆண்டுகள் வரை நாடு அமைதியாகவே இருந்தது.  ராஜராஜன் பட்டத்துக்கு வந்த ஓரிரு ஆண்டுகளில், தன் அண்ணன் ஆதித்த கரிகாலன் கொலைக்குக் காரணமானவர்களுக்கு தண்டனை அளித்தான், அவர்களது சொத்துக்களையும் பறித்துவிட்டான்.   இந்தப் பகுதிதான் பல வரலாற்று நாவல்களுக்குக் காரணமாக அமைந்தது. 

தன்னுடைய குலத்துக்கேற்றபடியும் செம்பியன் மாதேவியால் வளர்க்கப்பட்டதாலும் மிகுந்த சிவபக்தனாகத் திகழ்ந்தான் இராஜராஜன். தன் ஆட்சியை தென் இந்தியா முழுவதும் பரவச் செய்யவேண்டுமானால் சிறந்த படை வேண்டும் என்பதை உணர்ந்து பெரும் படையைத் திரட்டி அதற்குப் போர் பயிற்சியும் கொடுத்தான். கடற்படை ஒன்றையும் உருவாக்கினான். இவற்றைக்கொண்டு, பாண்டியர், சேர அரசுகளை வென்றான். திருவந்தபுரம் அருகே காந்தளூர்ச் சாலை என்று சொல்லப்படும் இடம் முழுவதையும் அழித்தொழித்து ‘காந்தளூர்ச்சாலை கலம் அறுத்து’ என்ற விருது பெற்றான். கொங்கு நாடு, கன்னட நாடு முழுவதும் இவன் கீழ் வந்த து. கிருஷ்ணா  நதிக்கும் கோதாவரி ஆற்றுக்கும் நடுவே இருந்த வேங்கி நாட்டை வென்று, அந்த நாட்டு இளவரசனுக்கு தன் மகள் குந்தவையை (தன் அக்கா மீது கொண்ட அன்பினால் தன் மகளுக்கு குந்தவை என்ற பெயர் வைத்தான்) மணம் செய்து கொடுத்து உறவாக்கிக்கொண்டான். அதனால் இவனுடைய செல்வாக்கு கோதாவரி ஆறு வரை பரவியிருந்த து. தன்னுடைய வலிமை மிக்க கடற்படையினால் இலங்கைத் தீவுக்குப் படையெடுத்து அதனை வென்றான். அங்கு தன் பெயரால் ஒரு கோயில் கட்டினான். இன்னும் தென் மேற்குப் பகுதியில் இருந்த மாலத்தீவுகளையும் வென்றான். கடல் கடந்து வெற்றிக்கொடி நாட்டிய முதல் சோழ அரசன் என்று இவனைச் சொல்ல லாம். இதுவே அவனுடைய மகன் இராஜேந்திர சோழனுக்கு இன்னும் பல நாடுகளை கடல் கடந்து வெல்லும் உத்வேகத்தைக் கொடுத்தது

அரசர்களின் ஆட்சியாண்டு, வயது எல்லாமே பல நேரங்களில் குழப்பமாக இருக்கும். கல்வெட்டு, ‘பால் மணம் மாறாத பாலகனை’ விட்டுவிட்டு சுந்தரச் சோழனின் மனைவி வானவன் மாதேவி உடன்கட்டை ஏறினாள் என்று சொல்கிறது. ராஜராஜன் தன் நாற்பத்தைந்தாவது வயதில் பட்டமேற்றுக்கொண்டான் என்று வரலாறு சொல்கிறது.  மதுராந்தகச் சோழன் சுமார் பதினைந்து ஆண்டுகள் அரசாண்டான். அப்படியென்றால், மதுராந்தகச் சோழன் பட்டம் பெற்றபோது, அருண்மொழிக்கு முப்பது வயதாகியிருக்கவேண்டும். அருண்மொழிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருந்திருக்கவேண்டும்.  இராஜராஜன் முப்பது வருடங்கள் அரசாண்டான். இராஜேந்திரன் தன் நாற்பத்தைந்தாம் ஆண்டில் பட்டமேற்றுக்கொண்டான். (கிபி 1012). இராஜராஜன் 988ல் பதவியேற்றிருக்கவேண்டும். 973ல் மதுராந்தகன்  பதவியேற்றிருக்கவேண்டும் (கிபி 971 என்று சொல்கின்றனர்).   இராஜராஜன் மறையும்போது 67 வயது. அதனால் 37வது வயதில் பட்டமேற்றுக்கொண்டிருக்கவேண்டும். மதுராந்தகர் பட்டமேற்றபோது அவன் வயது 22 ஆக இருந்திருக்கவேண்டும். ஆனால் ஒன்று மற்றும் தெளிவாக இருக்கிறது. 64-65ம் வயதிலேயே தன் மகனுக்கு ஆட்சிப் பொறுப்பை அளித்துவிட்டு, அரசியலிலிருந்து விடைபெற்றுக்கொண்டான்.

தஞ்சை பெரியகோயிலின் படங்கள் நான்கு வாரங்களாவது வரும் என்று நினைக்கிறேன். மிகுதியை அடுத்தடுத்த வாரங்களில் பார்ப்போம்.

இந்தப் படத்தில் முதலில் உள்ளது மராத்தா நுழைவாயில். இதுதான் முழுக் கோயிலுக்கும் முன்பக்கத்தில் அரணாக அமைந்துள்ளது. (இரண்டு பக்கங்களிலும் சிறிய சன்னிதி போன்ற மாடம் தெரியும்). அதனைத் தொடர்ந்து நமக்குத் தெரியும் கோபுரம் கேரளாந்தகன் திருவாசல்.

கேரளத்திற்கு அந்தகன் போன்று இருந்து போர் புரிந்து வென்ற இராஜராஜனது பட்டப் பெயர் கேரளாந்தகன்.

கேரளாந்தகன் வாசலில் மேல் உள்ள சிற்பங்கள்

மராத்தா நுழைவாயில் மற்றும் கேரளாந்தகன் நுழைவாயில் – இன்னொரு முறை சென்றிருந்தபோது எடுத்தது. 

கோட்டை மற்றும் அகழிகள் அப்போது இருந்தன.

இப்போது அகழி தூர்ந்து போயிருக்கிறது.

கேரளாந்தகன் நுழைவாயிலுள் நுழைந்து உட்புறமாக எடுத்த படம் இது. இதன் உட்பகுதியில் (ஆனால் வெளி வாயில்) தெரிவது மராத்தா நுழைவாயில். இரண்டுக்கும் இடையே இடைவெளி உள்ளது.

சேரர்களை எதிர்த்து வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த நுழைவாயிலின் அளவு சுமார் 30 மீட்டர் X 18 மீட்டர். கோபுரத்தின் முன் பக்கம் வரிசையாக சங்கை ஊதிக்கொண்டிருக்கும் பூதகணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நுழைவாயிலில் நிறைய சுதைச் சிற்பங்களும் காணப்படுகின்றன. இந்த கோபுரத்தின் முதல் தளத்தில் தெற்குப் பக்கம் தக்ஷிணாமூர்த்திக்கும் வடக்குப் பக்கம் பிரமனுக்கும் தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.

இராஜராஜன் திருவாசல். இது கேரளாந்தகன் நுழைவாயிலைக் கடந்தால் எதிர்ப்படுவது.

இராஜராஜன் திருவாயிலைக் கடந்தால் நாம் முதலில் பார்ப்பது நந்தி மண்டபம்.  இந்த பெரிய நந்தி மராத்தியர்கள் காலத்தில் அமைக்கப்பட்டது. முதலில் இருந்த நந்தி கோவிலை நாம் பார்த்தால் நம் வலப்புறச் சுற்று மண்டபத்தில் இப்போது இருக்கிறது. 


ராஜராஜன் திருவாயிலைக் கடந்துவந்தபிறகு உட்புறமாக எடுத்த படம். இருக்கும் இட த்தில் கோயில் பிரசாத விற்பனை ஸ்டால். நான் இந்த மாதிரி ஸ்டால்கள் பக்கமே செல்வதில்லை. அதற்கு வெளியில் ரோட்டில் இருக்கும் எந்தக் கடையிலும் வாங்கிவிடலாம் என்பது என் எண்ணம். 

முன்பெல்லாம் கோயிலில் இறைவனுக்கு கண்டருளப்பட்டவற்றை பிரசாதம் என்று அந்த அந்த நேரங்களில் தருவார்கள். இவைகள் முக்கியமானவர்களுக்கு மாத்திரம் கிடைக்கும்படியாக ஆயிற்று. பிறகு இதற்கு டிமாண்ட் அதிகமாகவும், கோயிலின் உள்ளேயே விற்பனை செய்ய ஆரம்பித்தார்கள். ஆனால் இறைவனுக்கு ஒரு அளவுக்குத்தான் பிரசாதம் செய்வார்கள். அதிகமான டிமாண்ட் இருக்கவும், கோயிலின் உள்ளேயே இன்னும் அதிகமாகச் செய்து அதனை விற்பனை செய்து அது கோயிலின் இன்னொரு வருவாயாக ஆயிற்று. அப்புறம் இதனை ஏலம் எடுத்துச் செய்ய ஆரம்பித்தார்கள். இந்த பிரசாதங்கள் என்று சொல்லப்படுபவை இறைவனுக்குப் படைத்ததல்ல. இதிலும் சோம்பேறித்தனம் வந்து, முழுவதுமாய் வெளி ஆட்களுக்கு இதனை காண்டிராக்ட் விட்டுவிடுகிறார்கள், எந்த அளவுக்கு என்றால், லாபம் மாத்திரமே குறிக்கோள்.  ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பிரசாதம் சப்ளை (ஹா ஹா ஹா) பண்ணுகிறவரே உறையூர் கோயிலுக்கும் சப்ளை. நானெல்லாம் கோயில் பிரசாதம் எங்கு தயார் செய்கிறார்கள் என்று முதலில் நம்பிக்கையானவரைக் கேட்பேன். பெரும்பாலான கோயில்களில் வெளி காண்டிராக்ட்தான். 

ஒரு வகைல, பெரிய பெரிய கோயில்களில் பல சன்னிதிகளை தரிசித்து கால் வலி எடுத்து கொஞ்சம், இந்த மாதிரி ஸ்டால்ல புளியோதரை, சர்க்கரைபொங்கல், தயிர்சாதம் சாப்பிட்டு அக்கடான்னு ரெஸ்ட் எடுக்கலாம். அதனால உபயோகம்.  எங்க போனாலும் ஒரு ஹோட்டல் பக்கத்துல இருக்கணும் என்ற நம் நினைப்புதான் இதற்கெல்லாம் காரணம். இனி கொஞ்ச நாள்ல காபி, தேநீர்னு வந்துவிடும் போலிருக்கிறது.

பெரியகோயிலில் இருந்த படம்



இராஜராஜேச்வரம் கோயிலின் முழுப் பரிமாணமும் வெளிப்படுகிறதா? இதில் முன் மண்டபத்தின் மேல் இருக்கும் பகுதியில் இரண்டாவது தளம் அமைந்திருந்தது. அது பழுதுபட்டு இடிந்துவிட்டது. தற்போது முதல் தளம் மாத்திரமே இருக்கிறது.

பிரகதீஸ்வரர் ஆலயத்தை முழுவதுமாகப் புகைப்படங்கள் எடுக்க அதிகாலை கோயில் திறந்தவுடன் சென்றால் ஆட்கள் யாரும் இல்லாமல் நிம்மதியாகப் புகைப்படங்கள் எடுக்கலாம். 




மண்டபங்கள் எழுப்ப முனைந்து பாதியில் விட்டுவிடப்பட்ட தூண்களா?

ராஜராஜன் நுழைவாயிலைக் கடந்ததும் எதிர்ப்படும் நந்தி மண்டபம். அதன் பின்புறம் கோவில் விமானம்  (உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு கோயிலின் நுழைவாயிலிலோ அல்லது அதற்கு அடுத்த தாகவோ அமைந்திருப்பது கோபுரம். இந்த கோபுரம் ஒரு கோயிலின் நான்கு பக்கங்களிலும் அமைந்திருக்கும், ஆனால் கோயில் நுழைவாயிலில் உள்ளதுதான் மிகப் பெரிதாக இருக்கும். அதனை ராஜகோபுரம் என்பர். ஆனால் கருவறையின் மீது கட்டப்பட்டிருப்பது விமானம் என்று அழைக்கப்படும். பொதுவாக விமானம் பல்வேறு வகைகளில் அமைத்திருப்பார்கள் (இது பற்றி பல கோவில்களின் உதாரணத்துடன் விளக்கினால்தான் புரியும்). இராஜ ராஜ சோழன் கட்டிய இந்தக் கோவிலில் விமானம் மிகப் பெரியதாக அமைந்துள்ளது. இராஜராஜன் தான், கோயில் விமானத்தை மிகப் பெரியதாகக் கட்டியவன் என்று சொல்லலாம்.. இது ஒரு காலத்தில் முழுவதுமாக பொன்னால் வேயப்பட்டிருந்தது.  தஞ்சை பெருவுடையார் கோயில் விமானம் மிகப் பெரியது என்பது இந்தக் கோயிலின் சிறப்பு.

மற்றபடி இந்தக் கோயிலைப் பற்றி மிகையாக நிறைய செய்திகள் (வதந்திகள்) காணக்கிடைக்கின்றன. கோவில் கோபுர நிழல் கீழே விழாது, ஒற்றைக் கல்லால் ஆன பிரம மந்திரம் எனப்படும் கல் விமானத்தின் மேலே இருக்கிறது, சாரப்பள்ளத்திலிருந்து சாய்வான மேடை அமைத்து இந்தக் கோவிலைக் கட்டினார்கள் என்றெல்லாம். இவையெல்லாம் சரியல்ல என்பதை கோவிலைப் பற்றி ஆராய்ந்தவர்கள் எழுதியிருக்கின்றனர்.

அதெல்லாம் சரிதான். இந்தப் பகுதியில் எப்போது கோயிலின் சன்னிதிக்குச் சென்று இறைவனைக் காண்பிப்பார் என்று யோசிப்பவர்களுக்கு, பெரு உடையாரின் திருவுருவம் கீழே.

தென்னாடுடைய சிவனே போற்றி  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

சரி அடுத்த வாரம் தொடர்வோம்.

(தொடரும்) 

63 கருத்துகள்:

  1. எபி ஆசிரியர்களே, ரிவிஷன் வைங்கப்பா!!!

    ம்ம் சரி இன்னிக்கு இந்தப் பாடத்தை மட்டும் படிச்சு சொல்லிட்டுப் போறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன் க்கா. திடுமென மெக்சிகோவிலிருந்து சோழர் சரித்திரத்துக்கு டிராக் மாறினதுபோல இருக்கிறதா? நமக்கெல்லாம் தெரிந்த தஞ்சை பெரியகோவிலிலிருந்து ஆரம்பிக்கிறது.

      நீக்கு
    2. அதனால ஈசியா போச்சு நெல்லை!!! ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  2. ரெஃபர் பண்ண வேண்டிவருமோ?

    கோச்செங்கணான், சுந்தரச் சோழனுக்கு என்ன உறவோ? ஜஸ்ட் முப்பாட்டனார் கொள்ளு எள்ளுப்பாட்டனார்னு வர சான்ஸ் உண்டா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மெய்கீர்த்திகள், கட்டிய கோவில்கள், பிரபந்தங்கள் திருமுறைகளில் வரும் அரசர்களின் பெயர்கள் எனப் பலதையும் வைத்து கால நிர்ணயமும் குல மன்னர்கள் வரிசையையும் ஓரளவு நிர்ணயிக்கிறார்கள். ஔவை காலக் குழப்பம், பலர் ஔவை பெயர் கொண்டிருந்தார்கள் என்றிருப்பதுபோல வரலாற்றிலும் இந்தக் குழப்பம் உண்டு.

      நீக்கு
  3. சுஜாதா எழுதிய ஒரு கதையில், வசந்த் மற்றும் கணேஷ் பேசும் போது, கணேஷ் கேட்பான் என்ன திடீர்னு வரலறுன்னு, வசந்த் சொல்வான், ஆதித்த கரிகாலனை கொன்னவங்க 4 பேரை கண்டுபிடிச்சு சுந்தரச்சோழன் வழக்கு விசாரிச்சு தண்டனை கொடுத்திருக்க வேண்டாமஆ? மர்மமா இருக்கு பாஸ் என்பான் .

    அதில் பாண்டியர்களின் முக்கியஸ்தரும் உண்டு என்று வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் சொல்வதாக வரும். சும்மா இது நினைவுக்கு வந்தது. அம்புட்டுத்தான். நான் ஆராய்ச்சில் எல்லாம் பண்ணலீங்கோ!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தச் சமயத்தில் சுந்தரச்சோழன் ரொம்ப மூப்படைந்திருந்தார். அவர் காஞ்சி பொன்மாளிகையில். இந்தக் கொலையில் சேர்ர்களின் தலையீடும்,அரசின் முக்கிய இடங்களில் இருந்தவர்களின் சம்பந்தமும் இருந்தது. அதனால்தான் முழுமையாக வெளிவரவில்லை. சமீபகால அரசில் தலைவர்கள் கொலைகளைப் பற்றி யோசித்தால் இதனைப் புரிந்துகொள்ள முடியும். அகப்பட்டவன் மீது பழி சுமத்தி தண்டனை தந்து வழக்கை முடித்துவைப்பார்கள்.

      நீக்கு
    2. அப்பவே இந்த அரசியல் கொலை பாருங்க அதான் ரகசியமாகவே போய்விட்டது இப்போது நடப்பவை போல

      கீதா

      நீக்கு
    3. அதிகாரத்தில் உள்ளவங்க ரொம்பவே ஒரு பக்க சார்பாகவும், மிகுந்த கோபக்காரங்களாகவும் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் நமக்கு ஆபத்து, நம் எதிர்காலம் சிறக்காது என்று நினைக்கறவங்க எல்லாரும் சேர்ந்து சதியில் ஈடுபடுவாங்க, நம்ம முகத்துக்கு நேரே நல்லவங்களா நடிப்பாங்க. அதுதான் அரசியல் கொலையின் மூலக்காரணம்.

      நீக்கு
  4. நெல்லை பெரிய பத்தியை கொஞ்சம் சின்ன பத்தியா பிரிச்சு போடுங்க நெல்லை. பெரிய பத்தியை வாசிக்கக் கடினமாக இருக்கு.

    ராஜராஜன் பத்தி ஏதோ கொஞ்சம் தெரியும் என்பதால் புரிந்தது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி முடிந்தவரை பார்த்துக்கொள்கிறேன். இன்னும் பல மாதங்களுக்கு வருபவற்றை ஏற்கனவே அனுப்பியாகிவிட்டது கீதா ரங்கன்.

      நீக்கு
    2. ஆமாம் அதான் சொல்லியிருக்கீங்களே. கௌ அண்ணாதானே? சொல்லிட்டா போச்சு அவரையே பிரிக்கச் சொல்லிட்டாலோ? சிரமமோ? பரவால்ல விடுங்க

      கீதா

      நீக்கு
    3. கௌதமன் சார்...சின்ன வயதிலேயே ரிட்டையர் ஆகணும்னு நினைக்கிறார். இணையத்தில் எல்லோரிடமும் தொடர்பில் இருப்பதன் சிறப்பு அவருக்குத் தெரியலையோன்னு தோணுது (சென்ற புதனன்று அவர் எழுதியிருந்ததை வைத்துச் சொல்கிறேன்)

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ரொம்ப நாள் கழித்து பிரார்த்திக்கும்போது இறைவன் சட் எனக் கேட்டுவிடமாட்டானா?

      நீக்கு
  6. // இனி கொஞ்ச நாள்ல காபி, தேநீர்னு வந்துவிடும் போலிருக்கிறது. //

    கூட சேர்த்து சிகரெட் பீடி, குட்காவும் விற்காமலிருந்தால் சரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி விஷயத்தையே ஒரு பதிவாக ஆக்கிவிடலாம் போலிருக்கிறது. சமீபத்தில் கும்பகோணம் ஆராவமுதன் கோயிலிலும் பிரசாத ஸ்டால் போட்டுள்ளார்கள். உண்மையில் பெரிய கோயில்களில் பிரசாத ஸ்டாலுக்குப் பதில் மினரல் வாட்டர் லெமன் சோடா ஸ்டால் போட்டுவிடலாம். பழனி பஞ்சாம்ருத்த்தை இப்போ எல்லா முருகன் கோயில்களுக்கும் நீட்டியிருக்கிறார்கள். என்ன ஒண்ணு, அதில் வெல்லப் பாகு தவிர வேறு என்ன என்ன இருக்கின்றன என்று கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு கொடுக்கலாம்.

      நீக்கு
    2. பஞ்சாமிருதத்தில் சுத்தம் ஒன்றுமே கிடையாது. வெறும் வெல்லபாகு. எசன்ஸ் சேர்த்திருப்பாங்களோன்னு சொல்றா மாதிரி இருக்கும்

      கீதா

      நீக்கு
    3. பஞ்சாம்ருத செய்முறை, நிறைய சிறுமலைப்பழம், தேன், கற்கண்டு, திராட்சை போன்ற உள்ளூர் பழங்கள் சேர்ப்பது. நெய் சேர்ப்பது. ஆனால் பேரீட்சை மற்றும் என்ன என்னவோ சேர்க்கிறார்கள். இருப்பதில் ஜீனிதான் விலை மலிவு என்பதாலும் வாழைப்பழமும் விலை குறைவு என்பதாலும் இந்த இரண்டையும்தான் சேர்க்கிறார்கள். அது சரி.. 50-100 ரூபாய்க்கு வேண்டுமென்றால் அவங்களும் லாபம் பார்க்கணும் இல்லையா?

      நீக்கு
  7. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இன்றைய ஞாயிறு பதிவு அருமை. தஞ்சை பெரிய கோவில் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. எங்களுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு, ஒரு தடவை முதல் முறையாக இக்கோவிலுக்கு சென்று தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் "அவன்" தீடிரென அழைத்தான. அதனால் கிடைத்தது. ஆனால், இந்த மாதிரி கோவில்களை பல முறைகள் சென்று, நிதானமாக சுற்றிப் பார்த்து ரசிக்க வேண்டும். அப்போதுதான் அதள் சிறப்புகள் புரியும். மேலும் நம்முடன் வரும் உறவுகளுக்கும் ஆர்வம் நிறைய இருக்க வேண்டும். இல்லையென்றால், "காலில் விழுந்த கஞ்சியாக" ஒரே அவசரந்தான். நாமும் "இரு.. இரு கொஞ்ச நேரம்." என கெஞ்சிக் கொண்டிருக்க இயலாது. எனெனில், அங்கு பார்க்க வேண்டிய அடுத்த கோவிலின் அட்டவணைகள் அவசியம்.

    இன்று உங்கள் பதிவில் இறைவனை மறுபடி தரிசனம் செய்து கொண்டேன். சோழ சாம்ராஜ்யத்தின் வரலாறு சிறப்பு. பிறகு நிதானமாக படிக்கிறேன். நீங்கள் விபரமாக அருமையாக எழுதியுள்ளீர்கள். உங்களின் எழுத்துத் திறமைக்கு என் வந்தனங்கள்.

    எனக்கு இது போல் அவ்வப்போது தரிசித்து வந்த கோவில்கள் பதிவை எழுத நேரம் அமைய மாட்டேன் என்கிறது. இப்போது ரொம்ப கடினமான வீட்டு வேலைகள் வேறு வந்துள்ளது. அதானால் பதிவுகளை படிக்கக் கூட பொழுதே குறைவாகத்தான் கிடைக்கிறது. பார்க்கலாம். கனவுகள் அருளால், எல்லாமே சீராகட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. (கனவுகள் தட்டச்சுப் பிழை) "கடவுள்" என்று தட்டச்சினால், "அவர்" எல்லாம் உன் "கனவுகள்தான்" என்பது போல ஆக்கி விட்டார். எல்லாமே அவன் செயல்தானே..!

      நீக்கு
    2. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். உண்மையில் அதுக வேலைகள் வருவது நன்றுதான். உடல் முடிந்தவரை உழைத்துக்கொண்டிருந்தால்தான் நல்லது.

      உங்களுக்கு தஞ்சை கோயிலுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்தது நன்று. கங்கைகொண்ட சோழபுரமும் சென்றீர்களா?

      யாத்திரைகளின்போது அவசர அவசரமாக கோயில்களின் தரிசனம் அமையும். இருந்தாலும் நான் கொஞ்சம் வேகமாக நடப்பதால் பல இடங்களையும் பார்த்து புகைப்படங்கள் எடுப்பேன். அதற்காகவே வேகவேகமாக முதலில் செல்வேன்.

      யாராவது தேங்காய் வெல்லப் பூரணம், உளுத்தம் பூரணம் கொழுக்கட்டைகளைப் படங்களுடன் பதிவாக்குவார்கள் என்று பார்த்தால் யாருமே எழுதலை.

      நீக்கு
    3. நான் என் விநாயகர் சதுர்த்தி பதிவில் வெல்லப்பூரண கொழுக்கட்டை படம் போட்டேன். (மோதகம்)

      நீக்கு
    4. இல்லை கோமதி அரசு மேடம். நான் செய்முறையோடு (திரும்பத் திரும்ப எழுதினால்தான் என்ன?) யாரேனும் எழுதியிருக்காங்களோன்னு பார்த்தேன்.

      நீக்கு
  8. எங்களது கோயிலைப் பற்றி பதிவு செய்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார். நலமா?

      அது என்ன உங்க கோயில்னு சொல்லிட்டீங்க. தஞ்சை தளிக்குளத்தார் ஆலயம் இன்னும் பல்வேறு ஆலயங்கள் நிறைந்துகிடக்கும் தஞ்சைப் பகுதியில் இந்த ஒரு கோயில்தான் என ஒன்றைச் சொல்லிவிட முடியுமா? காலமாற்றத்தால் பல கோயில்கள், அது சேர்ந்த இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இடங்கள் சுருங்கியிருக்குன்றன அல்லவா?

      நீக்கு
  9. அப்புறம் இதனை ஏலம் எடுத்துச் செய்ய ஆரம்பித்தார்கள். இந்த பிரசாதங்கள் என்று சொல்லப்படுபவை இறைவனுக்குப் படைத்தவையல்ல..

    உண்மை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்கு பேசாமல் ஆண்டவர் அல்வாக் கடை போன்ற இடங்களில் வாங்கிவிடலாமோ?

      ஆனால் திருவானைக்கா போன்றெரிய கோயிலைத் தரிசிக்க வரும் எளிய மக்கள் திருப்தியுடன் ஏதேனும் புளியோதரையோ இல்லை சர்க்கரைப் பொங்கல் தயிர்சாதம் வாங்கிப் பசியாற இந்த பிரசாத ஸ்டால்கள் உதவுகின்றன.

      நீக்கு
  10. சோழர் வரலாறு விவரங்கள் தெளிவாக இருந்தன. பெரிய கோயில் படம் ரூபாய் நோட்டில் வரை பார்த்துவிட்ட ஒன்றாகையால் ஒரு பழகிய தோற்றமே புலன் படுகிறது. ஆனாலும் சிலைகளின் க்ளோசப் புதுப் பார்வையை தருகிறது. நன்று. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயகுமார் சார். என்னதான் படங்களில் பலமுறை பார்த்தாலும் அந்த வளாகத்துக்குள் சென்றால் அது தரும் உணர்வே தனி.இராஜராஜன் வணங்கிய பெருவுடையாரைக் கண்ணால் தரிசனம் செய்யும்போது, ராஜராஜசோழன் பெயரைக் கல்வெட்டில் பார்க்கும்போது கிடைக்கும் சந்தோஷத்தை அங்கு சென்றால்தான் அனுபவிக்க இயலும்.

      நீக்கு
  11. படங்கள் எல்லாம் சூப்பர்.

    கோட்டைகள் பெரும்பாலும் அகழிகளுடன் தான் இருந்திருக்கும். இப்ப ஒன்னு சாக்கடையா இருக்கும் இல்லேனா மூடியிருக்கும் இல்லை செடி கொடிகள் வளர்ந்து அடைசலாக இருக்கும்

    அத்தனை படங்களும் சூப்பர், நெல்லை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கோயிலை இன்னும் சில வாரங்களுக்கு, அனேகமாகல்லாம் பார்த்துவிட்டோம் என்ற எண்ணம் வரும் வரை பார்க்கத்தானே போகிறோம்.

      நீக்கு
  12. நந்திமண்டபம் தெரியும் அந்தப் படம் நல்ல ஷாட்.

    பெரிய பெரிய கோவில்களில் எல்லாம் கான்ட்ராக்ட்தான் பிரசாதம் என்பது.

    நங்கநல்லூர் கோவிலில் அங்கு செய்வதுதான் பிரசாதம் அது போல திருக்குறுங்குடி கோவிலிலும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரசாதத்திற்கு டிமாண்ட் இருக்கிறது என்று தோன்றிவிட்டால் உடனே எல்லா இடங்களிலும் ஸ்டால் வந்துவிடுகிறது. முன்பெல்லாம் வைணவக் கோயில்களில் சிவன் பற்றி எதுவுமே இருக்காது. இப்போதெல்லாம் புக் ஸ்டால்கள்லாம் வந்தாகிவிட்டது.

      நீக்கு
  13. பெரு உடையாரின் திரு உருவம் சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணையம் வழங்கியது அது. ஆனால் பதிவில் இணைத்தால்தான் பலர் பார்க்க நேரிடும் என்பதால் அப்படி இணைத்தேன் கீதா ரங்கன்.

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. தஞ்சை பெரிய கோயில் படங்களும், வரலாறும்
    பாசுரமும் அருமை.
    தஞ்சை கோயில் படங்கள் எத்தனை எடுத்தாலும் ஆசை தீராது.
    படங்கள் இன்னும் இன்னும் எடுக்க ஆவலை தூண்டும்.
    வரலாறும் தேடி படிக்க படிக்க பகிர்ந்து கொள்ள விஷயங்கள் நிறைய கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை கோமதி அரசு மேடம். அதிலும் பல்வேறு புத்தகங்கள் படித்தால் அவற்றில் புதிய விஷயங்களும் கிடைக்கும். முடிந்தவரை எளிமையாகப் பகிர்ந்துகொள்ள எண்ணம்.

      நீக்கு
  16. தஞ்சை கோயில் மாயவரத்தில் இருந்தவரை அடிக்கடி போகும் கோயில்.
    ஜனவரி 1 ஆம் தேதி கங்கை கொண்ட சோழபுரம் போவதை வழக்கமாக வைத்து இருந்தோம். மதுரை வந்த பின் கூட ஜனவரி மாதம் குடும்பத்தோடு போய் வந்து பதிவு போட்டேன்.

    மகனுடன் தஞ்சை போய் வந்து நிறைய படங்களுடன் இரண்டு தொடர் பதிவு போட்டேன்.

    நீங்கள் படங்களுடன் வரலாற்றை சொல்லி பதிவு போடுவது அருமை.
    தொடர்ந்து வந்து படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் அந்த ஊர்க்காரர் அல்லவா? மாயவரமும் சிலபல முறை தாண்டியிருக்கிறேன் இன்னும் மயூரநாதர் தரிசனத்துக்கு வேளை வரவில்லை.

      கங்கைகொண்ட சோழபுரம் இந்தத் தொடரில் விரிவாக வரும். தொடர்ந்து வருவதற்கு நன்றி

      நீக்கு
  17. பெரு உடையாரின் படம் அழகு. தரினம் செய்து கொண்டேன்.
    அனையை எடுத்தீர்களா அன்னையும் அழகு, பெரிய நாயகி பெயருக்கு ஏற்றார் போல உயரமும் வாளிப்பும் அழகு. அலங்காரம் அழகாய் செய்வார்கள்
    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னையை எடுத்தீர்களா?

      நீக்கு
    2. எல்லாமும் வரும் கோமதி அரசு மேடம். எடுத்த படங்களில் பாதியாவது பகிர நினைப்பதால் பல வாரங்கள் வரலாம்.

      நீக்கு
  18. ///தஞ்சை தளிக்குளத்தார் ///

    தஞ்சை தளிக்குளத்தார் பெரிய கோயிலுக்கு உள்ளேயே மேற்குத் திருச்சுற்றில் தேவியுடன் இருக்கின்றார்...

    லோகாம்பிகை - லோகநாதர்

    இது சித்தர்களின் திருவாக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரை செல்வராஜு சார். இந்தக் கோயிலை எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் சிலவற்றை விட்டுவிட்டோமே என்ற எண்ணம் வரும். அந்தத் திருச்சுற்றில் நிறைய சிவலிங்கங்களும் அதன் பின்னணியில் ஓவியங்களும் உண்டு. அடுத்த முறை நாம் இருவரும் சேர்ந்து செல்வோம்.

      நீக்கு
  19. போன மாதம் கனவரின் தம்பி கும்பகோணத்திற்கு ஒரு திருமணத்திற்கு போய் விட்டு அப்படியே பல கோயில்களை தரிசனம் செய்து வந்தார்கள் அதில் திருநறையூர் மணிமாடக்கோயிலும் ஒன்று.
    கோச்செங்கட் சோழன்முன் பிறப்பின் நினைவால்
    யானைக்கு பயந்து மாட கோயில்கள் கட்டியதாக வரலாறு சொல்லும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோச்செங்கட்சோழன் கட்டிய மணிமாடக்கோயில்கள் அனேகமாக எல்லாமே சைவ சமயம் சார்ந்தவை. திருநறையூர் (நாச்சியார் கோயில்) ஒரு விதிவிலக்கு. அங்கு கொடிமரத்தின் அருகில் நின்றுகொண்டே வெகு தூரத்தில் (500 மீட்டர்) இருக்கும் கருவறையைத் தரிசனம் செய்துவிட முடியும். சமீபத்தில் (ஒரு மாதம் முன்பு) அந்தப் பகுதியில் எல்லாக் கோயில்களையும் தரிசனம் செய்தோம். (யானைக்குப் பயந்து-இதன் காரணம் முற்பிறவியில் சிலந்தியாகப் பிறந்து, யானை மீது இருந்த கோபம் காரணமாக, அடுத்த பிறவியில் யானை புகமுடியாத கோயில்களை எழுப்பினான் என்று வரலாறு சொல்லும் உங்களுக்கும் தெரிந்திருக்கும். இது திருவானைக்கோயிலில் நடந்தது என்பர்)

      நீக்கு
    2. ஆமாம், எல்லோருக்கும் தெரிந்த வரலாறு என்பதால் நான் முன் பிறப்பு நினைவு என்றேன் பயம் எனபதை விட கோபம் தான் சரி. சிறு சிலந்தி பூச்சியாக இருந்தபோதும் யானையின் துதிக்கையில் புகுந்து படுத்தி இரண்டும் மடிந்த வரலாறு தெரிந்தது தானே .

      நீக்கு
  20. அப்பப்பா... பொன்னியின் செல்வன் பகுதி -6 ஆக இருக்குமோ இது எனுமளவுக்கு ஆச்செனக்கு ஹா ஹா ஹா நீங்க அழகாக ஸ்கூல் சிலபஸ் க்கு உதவுவதுபோல விளக்கம் குடுத்திருக்கிறீங்கள், எனக்குத்தான் இந்த அரச கதைகள் பிடிக்காது அல்லது தலையில ஏறாது என்றுகூடச் சொல்லலாம்:)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அடப்பாவி அதிரா...ஐயையோ... அப்பாவி அதிரா.

      அரச கதைகள் ரொம்பவே இண்டெரெஸ்டிங் ஆனவை. ஆனால் முழுமையாக இல்லை. காரணம் கல்வெட்டுகளை வைத்து ஓரள்வு அனுமானிப்பதுதான்.

      இதுக்குத்தான் பொன்னியின் செல்வன் படிச்சிருந்தீங்கன்னா கொஞ்சம் நல்லா புரியும். ஆனால் அதுக்கு தமிழ் வேகமா வாசிக்கத் தெரியணும் (ஹாஹாஹா). ஒரு புத்தகத்தை விமானப் பயணத்தில் எடுத்துட்டுப் போனீங்கன்னா பாதி புத்தகம் வாசிச்சுடலாம்.

      நீக்கு
    2. நான் நெ தமிழன் விமானப்பயணத்தில்.. சே..சே.. ஈசியா பிளைட் என நாலு சொல்லில எழுதாமல் இந்த டமில்ப் புரொபிசர் பார்த்துக் கெட்டுப் போயிட்டேன் மீயும் ஹா ஹா ஹா:)

      கிண்டில் படிப்பேன், விடிய விடிய கேம் விளையாடுவேன்.. கிண்டிலில் சேரமான் காதலி, பார்த்தீபன் கனவு... என சிலது பாதியில் நிக்குது, ஆனா கண்ணதாசன் அங்கிள் கதைக?ள் வேறு சில கதைகள் கடகட என முடிச்சிடுவேன்.... கையில்லா பொம்மையும் முக்கால்வாசியில நிக்குது...
      இந்தப் பொன்னியின் செல்வனில ஆரோ சூனியம் வச்சிட்டினம் எனக்கு...
      இப்போ வீட்டில புத்தகம் படிக்க விருப்பம் வருகுதில்லை... கிடைக்கும் நேரத்தில ஏதும் ரிலாக்ஸ் ஆ தமிழ் விலொக் என யூ ரியூபில் பார்த்தால் நன்றாக இருக்குது.. மற்றும் சமையல்.

      எந்த நாடகமும் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை, கூடாதென்றில்லை என்னால முடியாது பார்க்க.. அப்படித்தான் பொன்னியின் செல்வனும் ஹா ஹா ஹா.

      நீக்கு
    3. என் அனுபவத்தில் சொல்கிறேன். புத்தகம் படிப்பதுபோல உபயோகமான பொழுதுபோக்கு வேறு கிடையாது. யூடியூப் வீடியோக்கள், ஷார்ட்ஸ் போன்றவை அப்போ பார்த்து அப்போ மறந்துபோகும் இயல்புள்ளவை. அது சரி... சிமியோன் ரீச்சரை, பிறகு பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்ததா?

      நீக்கு
  21. கோயில் சிற்பங்கள் நுழைவாயில் அவ்ளோ அழகாக இருக்கு, படங்கள் எல்லாம் ரசிக்கும்படியாக இருக்குது.

    நாங்கள் தஞ்சாவூர் போய், திங்களூர் சென்று தரிசித்துவிட்டு விட்டு, ஒரு ஹோட்டலில் தங்கி, அடுத்தநாள் அதிகாலை எழுந்து அப்படியே ஏனைய நவக்கிரக கோயில்கள் ..8 கோயில்களையும் முடித்திட வேண்டும் எனப் புறப்பட்டதால், அருகிலிருந்த தஞ்சைப் பெருங்கோயிலைப் பார்க்கவில்லை.
    அது சும்மா பார்க்க முடியாது, ஒருநாள் வேண்டும் என்பதால், இன்னொரு தடவை பார்க்கலாம் என விட்டோம்...
    இனி கடவுள் அழைக்க வேண்டும் பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி தஞ்சை பெரியகோயிலை மிஸ் பண்ணுனீங்க? சும்மா 2 மணி நேரமாவது (இரண்டு மணித் தியாலமாவது ஹாஹா) போய் பார்த்து அசந்திருக்கலாமே. வாய்ப்பு எப்போதும் வருமா?

      அது சரி..சிலர் சொல்வாங்க, நமக்கு நடக்கிற கிரகத்துக்கு ஏற்றபடி கல் மோதிரம் போட்டுக்கணும்பாங்க (பவழம், கோமேதம் வைரம் போன்று). ஆனால் எல்லாக் கற்களும் இருக்கும் நவரத்ன மோதிரம் போட்டுக்கிட்டா, ஒவ்வொன்றின் சக்தியை இன்னொன்று குறைத்து ஒரு பிரயோசனமும் இல்லைம்பாங்க. நீங்களானா, நவகிரக கோயிலுக்கும் சென்றிருக்கிறீர்களே

      நீக்கு
    2. ஹா ஹா ஹா நவக்கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் என ஒவ்வொரு கோயில் இந்தியாவில மட்டும்தானே இருக்குது, அப்போ அவை அனைத்துக்கும் ஒரு தடவையாவது போயிடோணும் எனத்தான் போனோம்...
      துன்பம் விளைவிக்கும் கிரகமாக இருந்தால், பாவம் பிள்ளை வந்துவிட்டதே என்னிடம் என கடைக்கண் பார்வையாவது கிடைக்கும் எல்லோ:)) ஐஸ் வைக்கத் தெரியாது உங்களுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா.

      சிலது நமக்கு பார்க்கக் கிடைக்கோணும் எனில் கிடைக்கும், கிடைக்காதெனில் கிடைக்காது அதனால இதுக்கெல்லாம் வருந்துவதில்லை நான்.. தத்துவம் ஐயா தத்துவம்:)))

      நீக்கு
    3. நான் சும்மா விளையாட்டுக்கு எழுதியிருந்தேன். கோயில் தரிசனம் எப்போதுமே நலம் விளைவிக்கும் அதிரா. உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது பற்றி மகிழ்ச்சிதான். பாருங்க... ஏதோ ஒரு ஊர்ல பிறந்து, ஒரு ஊர்ல வாழ்க்கை அமைந்து, இன்னொரு ஊர் கோயில்கள் தரிசனங்கள் கிடைத்திருப்பதே வரம்தானே.

      நீக்கு
  22. தங்கள் அன்பினுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  23. தஞ்சை பெரியகோவிலை மீண்டும் தரிசித்தோம்.

    ஒருமுறை நேரில் ஆற அமர தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. ஒவ்வொன்றையும் அணுவளவாக ரசிக்க வேண்டிய இடம்.

    கோவில் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. வரலாறை அழகாக விரிவாக தந்துள்ளீர்கள். ...தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி அவர்கள். தொடர்ந்து வருவதற்கு நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!