28.9.25

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - 25 :: நெல்லைத்தமிழன்.

 

இராஜராஜ சோழன் பல துறைகளிலும் வித்தகனாக விளங்கினான். அவன் பெற்ற வெற்றிகளாலும் அவனுடைய திறமைகளாலும் அவனுக்கு நிறைய சிறப்புப் பெயர்கள் விளங்கிவந்தன. 

பாண்டிய குலாசினி (குல நாசினி என்று அர்த்தம்), க்ஷத்திரிய சிகாமணி, நித்த விநோதன், கேரளாந்தகன், உய்யக்கொண்டான், அருண்மொழி தேவன் என்றெல்லாம் பல பெயர்கள் இராஜராஜனுக்கு இருந்தன. சோழப்பிரதேசத்தை ஒன்பது வளநாடுகளாகப் பிரித்து அவற்றிர்க்கு தன் பெயர்களை இட்டான். அதில் தஞ்சாவூர் என்பது பாண்டிய குலாசினி வளநாட்டில் வரும்.  (பாண்டிய குலாசினி  வளநாட்டுத் தஞ்சாவூர் கூற்றத்து தஞ்சாவூரில் நாம் எடுப்பித்த திருக்கற்றளி ராஜராஜேச்வரம் என்று பெருவுடையார் கல்வெட்டு பகரும்). 

இந்த தஞ்சை பெருவுடையார் கோயில் கிபி 1004ல் ஆரம்பிக்கப்பட்டு 1009ல் முடிந்திருக்கவேண்டும். இதன் குடமுழுக்கு 1010ல் நடந்த து. கிபி 1011ல் இந்தக் கோயிலின் விமானத்தில் கல்வெட்டு வெட்ட இராஜராஜன் கட்டளையிட்டிருப்பதால், திருமுழுக்கு அதன் முன்னர் முடிந்திருக்கவேண்டும் இந்தக் கோயிலின் முதல் வாயிலான திருத்தோரண வாயில், கேரளாந்தகன் வாயில் எனவும், இரண்டாம் வாயிலான திருமாளிகை வாயில், இராஜராஜன் வாயில் எனவும் அந்நாட்களில் வழங்கப்பட்டு வந்தன.

முடிந்தவரை தெரியாத செய்திகளை மாத்திரமே சொல்லவேண்டும் என்று நினைப்பதால் கோயில் சம்பந்தமான பல செய்திகளை நான் எழுதவில்லை. 

ராஜராஜ சோழனுக்கு முன்பு வரை சோழநாடு என்று பெயர் பெற்றிருந்தது, இராஜராஜன் காலதில்தான் சோழமண்டலம் என வழங்கப்பட்ட து. 

சோழ மண்டலத்தை பல வளநாடுகளாகப் பிரித்து, ஒவ்வொரு வளநாட்டையும் சிறிய நாடு அல்லது கூற்றங்களாகப் பிரித்து, அதனை ஊர்ச்சபைகளாகவும் பிரிக்கச் செய்தான்.  அதுமட்டுமல்லாமல், சோழமண்டலம் முழுவதையும் நில அளவுகள் செய்தது இவனுடைய 16ம் ஆட்சியாண்டுதான். இதனை vision உள்ளவர்கள்தாம் சிந்தித்துச் செய்ய முடியும். அதனால்தான் ராஜராஜ சோழனை இன்றும் நாம் நினைவுகொள்கிறோம்.

சோழ நாட்டை சோழமண்டலமாகச் செய்தது போல, தொண்டை நாடு  ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்றும் பாண்டியநாடு இராஜராஜ மண்டலமென்றும், நுளம்பபாடி நிகரிலிச் சோழ மண்டலமாகவும், ஈழம் மும்முடிச் சோழமண்டலமாகவும் பெயர் மாற்றம் பெற்றன. இவனை அடியொற்றி இவனது மகன் இராஜேந்திர சோழன், கங்கபாடியை முடிகொண்ட சோழமண்டலம் என்றும், தடிகைபாடியை விக்கிரம சோழ மண்டலமென்றும் நுளம்ப பாடி, நிகரிலி சோழ மண்டலமென்றும் பெயர் மாற்றம் பெற்றன. ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு தலைவர் அரசு நிர்வாகப்  பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.  பிறகு வந்த ஆட்சிக்காலத்திலும் சில மண்டலங்கள் பெயர் மாற்றம் பெற்றன. மண்டலங்களுக்கு அரசியார் பெயர்களும் சூட்டப்பட்டிருந்தன. கல்வெட்டுகள் பிரகாரம் சுமார் 40க்கும் மேற்பட்ட மண்டலங்களின் பெயர்கள் கிடைக்கின்றன.

இந்த மண்டல முறை தற்போதுள்ள மாவட்டங்களையோ இல்லை மாநிலங்களையோ ஒத்திருந்தது. இந்த சோழர்காலப் பகுப்பு முறை, அதன் பெயர்கள், நாயக்கர் மற்றும் மராத்தியர் காலத்திலும் தொடர்ந்தது. அவர்களும் சோழவளநாடு என்றே அழைத்துக்கொண்டார்கள். ஆங்கிலேய ஆட்சியின்போதுதான் மாவட்டங்களாகப் பெயர் பெற்றன.

பாண்டிய குலாசினி வளநாட்டில் சுமார் 21 கூற்றங்கள் இருந்தன (ஆற்காடு, பூதலூர், கிளியூர், கீழ்குடி என்று பல). அவற்றுள் ஒன்றுதான் தஞ்சாவூர் கூற்றம். மன்னனது அரண்மனை தஞ்சையில் இருந்தது, அங்குதான் ராஜராஜ சோழன் இருந்தான் என்பதால் தஞ்சை முக்கியத்துவம் பெற்றது. அவனுடைய காலத்துக்கு முன்பு, பழையாறையில் அரண்மனை இருந்தது. இது தவிர, மன்னர்கள் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று தங்குவார்கள் என்பதால் பல இடங்களில் மன்னன் தங்குவதற்குரிய அரண்மனைகள் இருந்தன. இராஜராஜ சோழனின் தந்தை காஞ்சீபுரத்தில் இருந்த அரண்மனைக்கு பொன் வேய்ந்து அங்கேயே தன் கடைசி காலங்களில் தங்கியிருந்தார் என்பது நமக்குத் தெரியும் (பொன்மாளிகை துஞ்சிய தேவர் என்பவர் இவர்தான்). தஞ்சையை விஜயாலய சோழன் முத்தரையர்களிடமிருந்து கைப்பற்றியபின், அவர்கள் அரண்மனை இருந்த இடத்தையே விரிவுபடுத்தி அரண்மனை செய்துகொண்டான் என்று சொல்லமுடியும். அவனுக்குப் பிறகு ஆதித்தன், பராந்தகச் சோழன், கண்டராதித்தன் மற்றும் அரிஞ்சயன் காலம்வரை தஞ்சையிலிருந்த அரண்மனையில்தான் அரசர்கள் தங்கியிருந்து ஆட்சி புரிந்தனர்.  ஆமாம் இதையெல்லாம் எப்படிச் சொல்கிறார்கள்?

பராந்தகனை, செப்பேடுகள் தஞ்சையர்கோன், தஞ்சைக்காவலன் என்று சொல்கின்றன. கண்டராதித்த சோழனின் திருவிசைப்பாவில் ‘தஞ்சையர் கோன்’ என்று வருவதால் அவரும் தஞ்சையிலிருந்துதான் ஆட்சி செய்தான் என்று கொள்ளலாம்.  இந்தச் சமயத்தில் அவர்களுக்கு பழையாறையில், முடிகொண்ட சோழபுரத்து அரண்மனையும், நந்திபுரத்தில் ஆயிரத்தளி அரண்மனையும் இருந்தன. சுந்தரச் சோழருக்கோ பழையாறை மற்றும் நந்திபுரத்தில் இருந்த அரண்மனைகளே பிடித்திருந்தன. அங்கிருந்துதான் அவர் அலுவல் மேற்கொண்டார். இது தவிர அவர் காஞ்சீபுரத்தில் இருந்த அரண்மனைக்குப் பொன் வேய்ந்து அங்கு தன் கடைசிகாலத்தில் இருந்தார் என்பதைப் பார்த்தோம். அந்தச் சமயத்தில் (பழையாறை அரண்மனைகளில்) அவரது பட்ட த்து இளவரசன் ஆதித்த கரிகாலன் தஞ்சை அரண்மனையிலிருந்து அரசு காரியங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் அங்கிருந்தபோதுதான், வீரபாண்டியன் மீது போர் தொடுத்து அவனுடைய தலையைக் கொய்து தஞ்சை நகரின் கோட்டை வாசலில் பெரிய மரக்கழியின் உச்சியில் சொருகி வைத்தான் என்று எசாலம் செப்பேடுகளில் குறிப்பிடப்படுகிறது. 

தஞ்சாவூர் கூற்றத்தில் இருந்த ஊர்களில் சில, கண்ணங்குடி (இப்போ கண்நந்தங்குடி என்று வழங்குகிறது என நினைக்கிறேன்), கருந்திட்டைக்குடி, குருகாடி (இப்போ குருவாடி), நத்தமங்கலம், தஞ்சாவூர் போன்றவை. 

தஞ்சையின் வட திசையிலுள்ள நகரப் பகுதி கருந்திட்டைக்குடி என்பது (தற்போது கரந்தை… நினைவுக்கு வருகிறாரா நம் பிரபல பதிவர்?)  இந்தப் பகுதி வெண்ணாற்றுக்குத் தெற்குப் பகுதியிலும் வீரசோழ வடவாற்றுக்கு வடக்கிலுமாக இரண்டு ஆறுகளுக்கிடையே அமைந்த வளமான பகுதி. தஞ்சையைவிட மிகப் பழமையான ஊர் என்ற பெருமை இந்த கருந்திட்டைக்குடிக்கு உண்டு.

நாம் மேலோட்டமாகப் படித்திருப்பதால், சோழ அரண்மனையை பாண்டிய மன்னன் தன் வெற்றிக்குப் பிறகு இடித்துவிட்டான், அதனால் காணக்கிடைக்கவில்லை என்றெல்லாம் நம் நினைவுக்கு வரும். அதில் முழு உண்மை இல்லை. ஏனென்றால் பாண்டிய மன்னன் அழித்த அரண்மனை(கள்) எது(எவை) என்பது நமக்குத் தெரியவேண்டும்.

தஞ்சாவூரில் மன்னனின் அரண்மனை தஞ்சை பெரியகோயிலுக்கு அருகாமையில்தான் அமைந்திருந்திருக்கவேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கோயிலுக்கு உண்டான தளிச்சேரிப் பெண்கள் வசித்த வீதிகள் கோயிலின் வடமேற்கில் உள்ள அணுக்கன் திருவாயிலை ஒட்டியே இருந்திருக்கவேண்டும்.  சங்கநிதி, பதுமநிதி, அஷ்டமங்கலங்கள் எல்லாம் இந்த அணுக்கன் வாயிலிலேயும், இதன் எதிரே உள்ள அர்த்த மண்டபத்தின் வடக்குப்புற வாயிலிலேயும் மாத்திரம் காணப்படுவதால் இராஜராஜன் இந்த வாயில் வழியாகத்தான் கோயிலுக்குள் நுழைந்திருக்கவேண்டும் என்று கருதுகிறார்கள். இந்த அரண்மனை விஷயத்தை வரும் பகுதியில்தான் தொடரவேண்டும். காரணம், இராஜராஜன் நுழைந்த அந்த வடவாயிலை அடுத்த பகுதியில்தான் காண்போம் என்று நினைக்கிறேன்.












கோயிலின் பக்கத்தில் மனிதர்கள் சிறு துரும்பாகத் தெரிவர். அதுவே இந்தக் கோயிலின் பிரம்மாண்டத்தைச் சொல்லும்  இருந்தாலும் கோயிலின் பின் பகுதியில் நான் மாத்திரம் நின்றுகொண்டு எடுத்துக்கொண்ட இந்தப் புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்தமானது.


ஒவ்வொரு பகுதியிலும் நுழைவாயிலின் இரு புறமும் ஒற்றைக் கல்லால் அமைக்கப்பட்ட துவாரபாலகர்கள். எப்படி யோசித்து, அதற்கான கற்களை 75 கிமீ தூரம் கொண்டுவந்து செதுக்கிக் கட்டியிருக்கிறார்கள் பாருங்கள்.




இந்த சுப்ரமணியர் கோயில், 16ம் நூற்றாண்டில் செவப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. இந்தக் கோயிலில் கர்பக்ரஹம், அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் உள்ளன. ஆறு முகங்களோடு மயில் மீது அமர்ந்திருக்கும் கோலத்தில் ஒற்றைக் கல்லால் செய்யப்பட்ட மூர்த்தம் கர்பக்ரஹத்தில் உள்ளது. கோயிலின் வெளிப்புறச் சுவற்றில் நிறைய சிற்பங்களும், சிவபுராணம் மற்றும் இராமாயணக் காட்சிகளும் செதுக்கப்பட்டிருக்கின்றன.

சுப்ரமண்யர், மயில் வாகனத்தில். 






அறுமுகன் கோயில் (சுப்ரமண்யர் கோயில்) மிகுந்த கலைநயத்துடன் கட்டப்பட்டிருக்கிறது. 16ம் நூற்றாண்டில்தான் கட்டப்பட்டிருக்கிறது. இது பற்றி விவரமாக நான் இன்னொரு பதிவில் எழுதுகிறேன். இங்குள்ள சிற்பங்கள், செய்கலை நேர்த்தி மிக மிக அழகுவாய்ந்தவை. 

எத்தனை வருடங்கள் உழைத்து உருவாக்கிய கோயில் இது.  இதனைப் பற்றி பல்வேறு செய்திகளை நீங்கள் படித்திருப்பீர்கள். அதனால் அவற்றைப் பற்றி நிறைய எழுத வேண்டியதில்லை. இருந்தாலும் அங்கிருக்கும் சிற்பங்கள் போன்றவற்றைக் காணவேண்டாமா?  அடுத்த வாரம் தொடர்வோமா?

(தொடரும்) 

67 கருத்துகள்:

  1. சிறந்த படைப்பு...
    துல்லியமாக தகவல்கள்..
    தலை வணங்குகின்றேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சார். நீங்க உள்ளூர்கார்ர். அதனால் எழுதும்போது தவறு வந்துவிடக் கூடாது என நினைப்பேன்.

      நீக்கு
  2. முருகன் கோயிலை எழுப்பியவர்களும் சோழர்களே என்ற கருத்தும் உண்டு... அங்கு சோழர் காலத்து கல்வெட்டு ஒன்று கூட இல்லை என்பதே பிரச்னை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதில் உண்மையிருக்கலாம். அங்கு முருகன் கோவில் இருந்து, பழுதுபட்டு, முற்றிலும் சீரமைக்கப்பட்டிருந்திருக்கலாம். இருந்தாலும் அங்கு நாயக்கர் காலக் கல்வெட்டு இருப்பதாகத்தான் அறிகிறேன்.

      நீக்கு
  3. எட்டாம் வகுப்பில் எனது ஆசிரியர்களின் கூற்றுப்படியே மேற்சொன்ன கருத்து..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறு வயதில் ஆசிரியர் கூறுவது, மற்றும் நாம் மதிக்கும் பெரியோர்கள் கூறுவது வரலாற்று உண்மையாக்க்கூட இருக்கும். இருந்தாலும் பட்டயங்கள், கல்வெட்டுகள், நூல்கள் ஆகியவையே வரலாற்றை அறுதியிடுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

      நீக்கு
  4. தூங்கியவன் கன்று கிடாக் கன்று என்றொரு பழமொழி கிராமப் புறங்களில் உண்டு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா. அருமையான பழமொழி. அதனால்தான் கோவிலை ஆக்கிரமித்துக்கொண்டு, அதன் அருகில் உள்ள குளத்தையும் ஆக்கிரமித்துக்கொண்டு, இது சோழர் காலத்திலிருந்து எங்களுடையது எனச் சொல்லித் திரிகின்றனர். திரையுலகிலும், தூங்கும்போது காலாட்டிக்கொண்டே தூங்கவேண்டும், இல்லையென்றால் ஆள் அவுட் என நினைத்துவிடுவார்கள் என்பர்.

      நீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா ஹரிஹரன் மேடம். ப்ரார்த்தனைக்கு நன்றி

      நீக்கு
  6. வணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே

    இந்த வார கோவில் பதிவும், படங்களும் எப்போதும் போல் அருமை. சோழ மன்னர்களின் சிறப்பை அதுவும் இராஜராஜன் சோழனின் சிறப்பை நன்றாக விவரித்து எழுதியுள்ளீர்கள். அந்தக்காலத்திற்கே போய் வந்த உணர்வு கிடைத்தது ஐந்து வருடத்தில் இவ்வளவு பெரிய கோவில் நிறைவுற்றது வியப்புத்தான்..!

    படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. சிற்பங்கள் மிக தெளிவு. சுப்பிரமணியர் கோவில் அழகாக உள்ளது. துவார பாலகர்கள் கண்கொள்ளா காட்சி. நீங்கள் கோவிலைப் பற்றி கூறிய தகவல்களை மனதில் இருத்திக் கொண்டு மீண்டும் ஒரு முறை அங்குச் சென்று நிதானமாக சுற்றிப் பார்க்க வேண்டுமென்ற ஆசை எழுகிறது இறைவன் அருளால் வாய்ப்பு கிடைத்தால், பார்க்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் கமலா ஹரிஹரன் மேடம். அதைப்பற்றி அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நாம் எடுத்துச் சொல்லவேண்டும்.

      நீக்கு
  7. சரித்திர தகவல்களை எழுதுவது கொஞ்சம் கஷ்டம், அதிக தகவல்களை கொடுத்தால் அலுப்பாக இருக்கும், குறைவாக இருந்தால் விஷயம் இல்லை என்று தோன்றும். சரியான அளவில் விஷயங்களை தந்திருக்கிறார்கள். படங்களும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம். எழுதும்போது எனக்குப் பிடித்திருந்தால்தான் எழுதுவேன். சில நேரங்களில் வரலாற்றைச் சுருக்குவது கடினம். படிப்பவர்கள்தாம் அன்றைய பகுதி போரடித்ததா என்று சொல்லணும்.

      நீக்கு
  8. தஞ்சை பெரியகோவிலில் இருக்கும் துவாரபாலகர் சிற்பத்தின் சிறப்பை பாலகுமாரன் 'உடையார்' நாவலில் எழுதியிருப்பார். அந்த படத்தை பகிர்ந்திருக்கலாமோ?
    இங்கே இன்னொரு விஷயத்தை சொல்ல தயக்கமாகத்தான் இருக்கிறது, ஏனென்றால் சிலருக்கு என்மீது கோபம் வரலாம். தஞ்சை பெரிய கோவில் பெரிய கோவில் என்று என்னதான் பெருமை பேசினாலும் அங்கிருக்கும் இறை சன்னதிகளில் தெய்வ சானித்தியம் குறைவுதான். திருச்சி தாயுமானவர் சன்னதியில் மனம் குழைந்து, நெக்குருகும். திருவிடைமருதூர் மகாலிங்கம் சன்னிதி, காளஹஸ்தி, திருவண்ணாமலை போன்ற இடங்களில் நமக்கு கிடைக்கும் இறையுணர்வு அலாதி. மதுரை, ராமேஸ்வரம் குறைந்ததா என்ன?சிதம்பரம் சொல்லவே வேண்டாம். ஆனால் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் ஒரு மியூசியத்திற்கு சென்று சிலைகளை பார்ப்பது போலத்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாமும் இன்னும் விளக்கமாகவே வரும். காரணம் அந்த துவாரகாலகர்களை ஏன் இப்படி உருவாக்கினார்கள் என்பதற்கான மூலக் காரணத்தைப் படிக்க நேர்ந்ததால்.

      நீங்கள் எழுதியதில் தவறில்லை. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் விருந்தாவனம் தந்த ஆன்மீக உணர்வுக்கும் தற்போது அதீத பயணியர்களால் அது தரும் ஆன்மீக உணர்வுக்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கும். எனக்கும் சில நேரங்களில், என்னடா இந்தக் கோயிலை (அது எந்தக் கோயிலாக இருந்தாலும்) டூரிஸ்ட் மாதிரி பார்க்கிறோமே என்ற எண்ணம் தோன்றும். கோயில்களில் குறையில்லை. நாம் எடுத்துச் செல்லும், மன உணர்வு என்ற பாத்திரத்தில்தான் பிரச்சனை என நினைத்துக்கொள்வேன். ஒரே நாளில் நவகிரக கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்வது என்பது சுற்றுலாப் பயணம் என்பதுபோல .ஆகிவிடும்.மிக்க நன்றி

      நீக்கு
    2. பெருவுடையார் மிகச் சக்தி வாய்ந்தவர் எனவும் அவரின் சக்தியை அவ்வப்போது ம்ந்திரங்கள் மூலம் பூட்டி/கட்டி வைக்க வேண்டும் எனவும் அப்படிச் செய்யாததால் தான் முக்கியத் தலைவர்கள் பலருக்கும் தீங்கு நேரிடுவதாகச் சொல்லுவார்கள். இன்னும் சிலர் தான் என்னும் அதிகாரம், அஹங்காரம் இருந்தாலும் அவர்களுக்குத் துன்பங்கள் நேரும் என்றும் சொல்கின்றனர். கோயிலில் சாந்நித்தியம் குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம். மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் கூட இப்போதைய நாட்களில் ஒரு சுற்றுலாத்தலம்போலவே ஆகி இருக்கே! என்ன செய்ய முடியும்?

      நீக்கு
    3. //மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் கூட// அப்படிப்பார்த்தால் இராமேஸ்வரம் போன்ற பலப்பல பிரபலமான, மக்கள் கூட்டம் நெருக்கியடிக்கும் கோயில்கள் பற்றியும் இப்படி கருத்து தெரிவிக்கலாமே. தற்காலங்களில் எல்லாக் கோயில்களிலும் பெரும் கூட்டம் வருகிறது (சில கோயில்களில் கூட்டமே இல்லை என்பது வேறு விஷயம்)

      நீக்கு
    4. ராமேஸ்வரம் கோயில் பத்தித் தெரியலை. ஆனால் மதுரை மீனாக்ஷி பற்றிப் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகின்றனர். கூட்டத்துக்கும் சாந்நித்தியம் இல்லாமல் போவதற்கும் தொடர்பு இருப்பதாய்த் தெரியலை. வழிபாடுகளில் குறைகள் நேர்ந்தாலோ, வழிபாட்டு முறைகள் மாறினாலோ ஆகமத்தை மீறிச் செயல்பட்டாலோதான் இப்படி எல்லாம் நடக்கும்.

      நீக்கு
    5. ஆகம மற்றும் கோயிலில் தவறுதலாக நடைபெறும் தவறுகளுக்கு வருடத்துக்கு ஒரு முறை பவித்ரோத்ஸவம் என்ற ஒன்று நடைபெற்று அந்தத் தவறுகளையெல்லாம் சரி செய்வார்கள்.

      நீக்கு
  9. /// தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் ஒரு மியூசியத்திற்கு சென்று சிலைகளை பார்ப்பது போலத்தான் இருக்கும்.. ///

    அதனால் என்ன செய்யலாம் இப்போது ???...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதற்கு மேலுள்ள பதில் பொருத்தமாக இருக்கிறது என எண்ணுகிறேன். இறைவன் சன்னிதியில் எனக்கு வேறுபாடு தோன்றுவதில்லை. நாம் எப்படி அணுகுகிறோம் அல்லது அந்த இடம் நமக்கு என்னவிதமான உணர்வைக் கொடுக்கிறது என்பதில்தான் வேறுபாடு.

      நீக்கு
  10. //சிலருக்கு என்மீது கோபம் வரலாம்.//

    இதை வேறு சொல்லி விட்டார்கள்...

    எனக்கொன்றும் வருத்தமில்லை..
    அவரவருக்கு வாய்த்தது எவ்வளவோ அவ்வளவே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜு சார்... பக்தி உணர்விற்கு அடிப்படை மன அமைதி, சுற்றுப்புற அமைதி. பெரியகோயிலில் வரலாறும் பிணைந்து கிடப்பதால் இருபிரிவினரும் வருவதால் அவர்களுக்கு இந்த எண்ணம் வந்திருக்கிறது.

      நீக்கு
  11. இதற்கு முன் பலரும் இப்படிச் சொல்லி இருக்கின்றனர்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும், சாதாரணமான, கூட்டமற்ற வேளைகளில் சுவாமி தரிசனம் செய்வதற்கும், விழாக்கூட்டத்தின் இடையே மூச்சுமுட்ட நின்று தரிசிப்பதற்குமான வேறுபாடு தெரிந்திருக்கும். சில தஞ்சைக் கோயில்களில் அமைதியான சமயங்களில் நமக்குக் கிடைக்கும் உணர்வே தனி.

      நீக்கு
  12. எனக்கு யாதொன்றும் வருத்தமில்லை..

    அன்பின் கருத்துரைகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  13. சோழர் வரலாற்றில் நான் அறியாத சில பக்கங்களையும் நன்கு தந்துள்ளீர்கள் கண்டுகோண்டோம். நன்றி.

    துவாரகா பாலகர்கள் சிற்பம் சிறப்பானது நாமும் சென்ற நேரம் படம் எடுத்திருந்தோம். நந்தி, சுவர் ஓவியங்களின் படங்களும் எடுத்தோம்.

    கோவில் பின் புறமும் படம் எடுத்திருந்தோம்.

    திருமதி. பானுமதி வெங்கடேசன் அவர்களின் கருத்து
    "தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் ஒரு மியூசியத்திற்கு சென்று சிலைகளை பார்ப்பது போலத்தான் இருக்கும்" நாங்கள் பிரமாண்ட கோவிலையும் கலை நயத்தையும் பார்த்து வியப்புற்ற வேளை, எமது புலன்கள் அவ்வழியே செல்வதால் இப்படியான எண்ணம் எமக்கு வருகிறது என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மாதேவி அவர்கள். நீங்களும் படங்களை எடுத்து கோயிலை நன்கு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்ததா? மகிழ்ச்சி.

      என்னதான் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாக இருந்தாலும், கோயில் என்பது இறைவனின் இருப்பிடம்தானே.

      நீக்கு
  14. இந்தத் தஞ்சைக்கோயில் மூடப்பட்டுத் தொல்லியல் பாதுகாப்பிலேயே இருந்தப்போ இருந்து பார்த்துக் கொண்டு இருக்கேன். வழிபாடுகள் எல்லாம் பின்னால் ஏற்பட்டது தான். முன்னெல்லாம் குறிப்பிட்ட நேரம் தவிர்த்து மாலை நேரங்களில் எல்லாம் கோயிலைச் சென்று பார்க்கவே முடியாத நிலையும் இருந்தது. எப்போது முதல் வழிபாடுகள் ஆரம்பிச்சது என்பது துல்லியமாக நினைவில் இல்லை. ஆனால் பின்னர் வந்த நாட்களிலும் போயிருக்கோம். ஒரு பிரதோஷம் அன்று பிரதோஷம்னே தெரியாமல் தற்செயலாகப் போக நேர்ந்தது. எல்லாக் கோயில்களையும் போலத் தான் இங்கும் பிரதோஷ தீபாராதனை நடந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சாம்பசிவம் மேடம்... அப்படியா.. முன்பெல்லாம் வழிபாடுகள் இல்லையா? எனக்கும் அப்படித் தோன்றியது கீசா மேடம். முன்பெல்லாம் தாராசுரத்தில் அந்தக் கோயிலில் குறிப்பிட்ட குறைந்த நேரம்தான் பூஜாரி இருப்பார், கோயில் திறந்திருக்கும். இப்போது அப்படி இல்லை என்று தோன்றுகிறது.

      இப்போல்லாம் பிரதோஷம் பல கோயில்களில் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

      நீக்கு
  15. தற்காலங்களில் அன்னாபிஷேஹம் முதற்கொண்டு நன்கு சிறப்புடன் நடைபெற்று வருகிறது. சமீப காலங்களில் இந்தக்கோயிலுக்குப் போனதெல்லாம் மாலை வேளைகளிலேயே.கர்பகிரஹம் அருகே நின்று பார்க்க முடிந்திருக்கிறது. பிரம்மாண்டம் நம்மை அசத்தும் அதே வேளையில் லிங்கத்தின் நேர் மேலே உள்ள வெற்றிடமும் மேலே தெரியும் பரந்த ஆகாயமும் அதன் மூலம் நாம் அறிந்து கொள்ளும் இறை சக்தியும் மனதைப் பரவசப்படுத்தும்.

    தாராசுரம் கோயிலும் இப்படியான தொல்பொருள்துறையின் கீழே இருப்பது தான். அங்கேயும் பெரும்பாலானோர் ஆய்வு செய்யும் நோக்கத்திலேயே வருகின்றனர். அடுத்துக் காஞ்சி கைலாசநாதர் கோயில். இங்கே போய் பானுமதி பார்த்திருக்காங்களானு தெரியலை. நாங்க கடைசியாப் போனது பதினைந்து வருஷம் முன்னால் அம்பத்தூரில் இருந்தப்போ. அங்கிருந்து நினைச்சாக் காஞ்சிபுரம் போயிடுவோம். கைலாசநாதர் கோயிலில் கர்பகிரஹம், இறைவன் ஆகியோரைத் தேடித்தான் கண்டு பிடிக்கணும். சாயந்திரத்துக்கு மேல் யாரும் இருக்க மாட்டாங்க. இப்போ எப்படியோ? தெரியாது. ஊரை விட்டுத் தள்ளி வேறே இருக்கும். இப்போ நடமாட்டங்கள் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க ரொம்பவே அனுபவித்து தரிசனம் செய்திருக்கீங்க. இறைவனைப் பார்க்கும்போது மனம் பரவசப்படும். அதை அனுபவிக்கும்போதுதான் தெரியும்.

      காஞ்சி கைலாசநாதர் கோயிலை நான் இன்னும் தரிசிக்கவில்லை என்பதை வெட்கத்துடன் சொல்லிக்கொள்கிறேன். அதே காலத்தின் வைணவக் கோயிலை நன்றாக தரிசித்திருக்கிறேன், இங்கும் பதிவு செய்த நினைவு. அடுத்த முறை கண்டிப்பாக அந்தக் கோயிலுக்குச் செல்வேன்.

      நீக்கு
    2. தஞ்சைக்கோயிலுக்கு எப்போப் போனாலும் பெருவுடையாரைத் தரிசிக்கும் வேளையில் அவருக்கு நேர் மேலே தான் பார்ப்பேன். கோயில் மகுடாகம முறைப்படி கட்டியது எனவும் கருவறை கட்டிய பின்னர் லிங்கப்பிரதிஷ்டை இல்லை எனவும் முதலிலேயே பிரதிஷ்டை ஆன பின்னரே கருவறை கட்டியதாகவும் இருவேறு சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேல் முதல்முறை கும்பாபிஷேஹத்தின் போது ஏற்பட்ட தீ விபத்தினால் கோயிலுக்கு உள்ளேயே வரப் பிரபலங்கள், தலைவர்கள், தலைவிகள் தவிர்த்து வந்ததும் வரலாறு. முக்கியமாய்க் கருணாநிதி முதல்வராக இருந்தப்போவும் இந்திரா காந்தி பிரதமராக இருந்தப்போவும்! இருவருக்குமே பிரச்னைகள் முளைத்தன என்பார்கள்.

      நீக்கு
    3. தரையிலிருந்து சில அடிகள் மேல் வரைக்கும் சதுரத் தொட்டி மாதிரி கட்டப்பட்டிருக்கும் கோயில் அதுக்கு மேலே போகப்போகக் கூம்பு வடிவத்தில் /கோபுர வடிவத்தில் வருகிறது. அதுக்கும் மேலே தான் கலசம் வைச்சிருக்காங்க.

      நீக்கு
    4. சிலருடைய கணிப்பு லிங்கமும் பகுதி பகுதியாகச் செதுக்கப்பட்டுத் துண்டுகளாகக்கருவறைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கே சேர்க்கப்பட்டவை என்கின்றனர்.

      நீக்கு
    5. இப்போல்லாம் கொஞ்சம் தள்ளியிருந்துதான் பெருவுடையாரை சேவிக்க முடிகிறது. நீங்க கருவறையின் மேற்பகுதியை எப்படிப் பார்த்தீங்க? நான் இது பற்றிய தகவல்களை புத்தகத்தில் பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேனே தவிர, நேரே பார்க்கவில்லை.

      நீக்கு
    6. ஆனால் எந்த நூலுமே, கோயில் கலசத்தைப் போல, பெருவுடையாரும் பகுதி பகுதியாக இருக்கிறார் என்று சொல்லவில்லை. அது மிகப் பெரிய லிங்கம் என்றுதான் சொல்கிறது கீசா மேடம்.

      நீக்கு
    7. இந்தச் செய்தி ஒரு வரலாற்று ஆய்வுத் தளத்தில் சில வருடங்கள் முன்னர் நான் படித்தது. பெயர் மறந்துவிட்டேன். பழைய பதிவுகளில் கிடைக்குதானு பார்க்கிறேன்.

      நீக்கு
    8. கூட்டமில்லாத ஒரு மதியத்தில் கருவறைக்கு அருகே தரிசனம் செய்தப்போப் பார்த்தது சில வருடங்கள் இருக்கலாம். மற்றச் செய்திகள் அனைத்தும் ஆய்வு செய்து சொல்லப்பட்டவை. தளம் பெயர் வரலாறு.காம் என நினைக்கிறேன்.

      நீக்கு
    9. உங்களுடைய பின்னூட்டங்கள் எனக்கு நிறைய தகவல்கள் தருகின்றன. மிக்க நன்றி கீசா மேடம்.

      நீக்கு
  16. தஞ்சைப் பெரிய கோயில் கும்பாபிஷேஹம் முதல் முதல் 1996-97 ஆம் வருஷம் நடைபெற்றதன் பின்னரே கோயிலில் மெல்ல மெல்ல பக்தர்கள் நடமாட்டம் துவங்கி மற்றக் கோயில்களைப் போல் மாற ஆரம்பித்தது. அதன் பின்னர் 23 ஆண்டுகளுக்குப் பின்னர் 2020களீல் நடைபெற்ற பின்னர் கோயிலைப் போய்ப் பார்க்கவில்லை. ஆனால் பையரும் மருமகளும் போய் வந்தனர். நாங்க கூட்டம் காரணமாகக் காரிலேயே உட்கார்ந்து விட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போல்லாம் நல்ல கூட்டம் கீசா மேடம். சாதாரண நாட்களிலும் பெரிய கோயிலைப் பார்க்க நிறையபேர்கள் வருகின்றனர். அவற்றுள் கல்லூரியில் படிப்பவர்களும் அனேகம். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வரலாறு தெரியாது என்பதுதான் சோகம். (ஒரு தடவை நான் இராஜராஜன் கோயிலுக்குள் செல்லும் வாசல் அருகே, அங்கு வந்திருந்த மூன்று கல்லூரிப்-அல்லது ப்ளஸ் டூ, பெண்களுக்கு கல்வெட்டைக் காட்டிச் சொன்னபோது அசிரத்தையாக இருந்தார்கள். அப்போது மனைவியும் உடனிருந்தார். பொக்கிஷத்தை அறியாமல் இருக்கிறார்களே என்று தோன்றியது)

      நீக்கு
    2. இப்போதைய மாணவ, மாணவிகள் பெரும்பாலும் வரலாற்றை அறியாமலே படித்து வருகின்றனர். மத்திய அரசு பாடத்திட்டத்திலோ மிகக்குறைவாகவே இந்திய அரசியல் பாடங்கள், அதிலும் மிகச் சிறிய பகுதியே தமிழகம் பற்றிய வரலாறு காணக் கிடைக்கும். விரிவாக மாநில அரசுப் பாடத்திட்டத்திலும் இல்லை. கற்பிப்பவர்களும் இல்லை. கிராமங்களில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியப் பெண்கள் டேஞ்சரை "டங்கர்" என்று உச்சரிக்கச் சொல்லிக் கொடுக்கின்றனர். முகநூலில் வந்தது.

      நீக்கு
    3. இது பற்றி பலர் குறை சொல்லியிருக்கிறார்கள் (ஆசிரியர்களாகப் பணியாற்றுபவர்கள்). இருந்தாலும் டெடிகேடட் ஆகப் பணியாற்றும் ஆசிரியர்கள் பலர் இருக்கின்றார்கள், மாணவர்களின் குவாலிட்டிதான் மிகவும் குறைந்துவிட்டது என்று நினைக்கிறேன் கீசா மேடம். மிக்க நன்றி

      நீக்கு
  17. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  18. தஞ்சை கோயில் படங்களும் வரலாறும் அருமையாக இருக்கிறது
    பதிவு.

    முன்பு கூட்டம் இருக்காது, வரிசையில் நிற்க வேண்டாம் பார்த்து விடலாம் எளிதாக. இப்போது கூட்டம் இருக்கிறது, வரிசையில் காத்து கிடக்கும் நிலையும் இருக்கிறது.

    எவ்வளவு கூட்டம் இருந்தாலும் தரிசனம் நன்கு செய்யலாம். சுவாமியும், அம்மனும், முருகனும், சண்டேஷ்வரரும் கண்ணை விட்டு மறையாமல் அன்று முழுவதும் நிறைந்து இருப்பார்கள். இப்போதும் கண்ணை மூடி நினைத்தால் கண்ணில் வந்து நிற்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி அரசு மேடம்... இப்போ எல்லாக் கோயில்களிலும் எல்லாக் காலங்களிலும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. உங்கள் மனக்கண்ணில் தெய்வங்கள் வருவதே மிகப் பெரிய விஷயம். பல நேரங்களில் எனக்கு வருவதில்லை அல்லது உருவம் மங்கலாக இருந்துவிடும்.

      நீக்கு
  19. சுப்ரமண்யர், மயில் வாகனத்தில் புன்சிரிப்புடன் இருக்கிறார்.
    நவராத்திரி காலத்தில் தீமையை அழித்த அம்மன் திருவுருவங்களை கண்டு களித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுப்ரமணியர் உருவமும் எனக்கு மிகவும் உவப்பாக இருந்தது. ரசித்ததற்கு நன்றி கோமதி அரசு மேடம்

      நீக்கு
  20. படங்கள் அட்டகாசம், நெல்லை. சில தகவல்கள் புதியவை.

    மீண்டும் வரேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா ரங்கன் க்கா. ஞாயிறு ஏன் காணவில்லை?

      நீக்கு
    2. ஞாயிறு பிஸியாகிவிட்டது நெல்லை. அதான் வர முடியலை.

      கீதா

      நீக்கு
  21. கேரளாந்தகன், உய்யக்கொண்டான், அருண்மொழி தேவன்//

    இந்த மூன்று பெயர்களும் தெரிந்தவை. மற்றவை இப்பதான் தெரிந்து கொள்கிறேன் கூடவே இப்பெயர்களால் ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்விஷயங்களும்.

    வரலாறு முக்கியமப்பா என்பதற்கு கல்வெட்டுகள் எவ்வளவு முக்கியம் என்பதும் விளங்கும்.

    அதே சமயம் கல்வெட்டுகளில் அப்போது பழக்கத்தில்இருந்த வழக்கு மொழிகளில் ஸ்க்ரிப்ட் இருப்பதால் இதை வாசித்து வரலாறு எழுதுபவர்களில் அவர்களுக்குப் புரிந்ததை வைத்து எழுதுவதால் சில சமயங்களில் வரலாறு கொஞ்சம் வேறுபடுகிறதோ ஒவ்வொருவர் பார்வையிலும்? என்றும் தோன்றும்.

    அது போல சில ஸ்க்ரிப்டுகள் பின்னர் மாற்றியும் எழுதப்பட்டிருக்கலாம் என்றும் தோன்றும். இருந்தாலும் இவைதான் வரலாற்றிற்கு மிகவும் முக்கியமானவை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை கீதா ரங்கன். கல்வெட்டுகளில் குழப்பம் இருக்காது. பிறகு மாற்றியும் எழுத இயலாது. ஆனால் சில இடங்களில் பழுதுபட்டிருக்கலாம்.

      வரலாறு ஒவ்வொருவர் பார்வையிலும் வேறுபடும். உதாரணமா, பாகிஸ்தான், ஆபரேஷன் சிந்தூரில் அவங்களுக்குத்தான் வெற்றி என்று சொல்வதைப்போல, அதற்கு ஆமாம் சாமி போடும் பெரிய அண்ணனைப்போல, நரசிம்ம பல்லவன் புலிகேசியை வெற்றி பெற்றதற்கும், புலிகேசி, நரசிம்ம பல்லவனைத் துரத்தித் துரத்தி வெற்றி பெற்றதற்கும் கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன.

      நீக்கு
  22. ராஜராஜன் ராஜேந்திரனின் ஆட்சி மண்டலங்கள் கிட்டத்தட்ட இப்போதைய மாவட்டங்கள் மாநிலங்கள் போன்று என்று தோன்றுகிறது.

    இப்பவும் மாநிலங்கள், மாவட்டங்கள் பெயர் மாற்றப்படுகின்றனவே அப்படி அப்போதும் நடந்திருக்கிறது.

    //இந்த மண்டல முறை தற்போதுள்ள மாவட்டங்களையோ இல்லை மாநிலங்களையோ ஒத்திருந்தது.//

    அட! கீதா, உனக்கும் கொஞ்சம் மூளை எல்லாம் இருக்கு என்று என்னை நானே ஷொட்டிக் கொண்டேன்!!!ஹிஹிஹிஹி

    இந்த லைன் படிக்கும் முன்னரே எனக்குத் தோன்றியது இது.

    காஞ்சீபுரத்தில் இருந்த அரண்மனைக்கு பொன் வேய்ந்து//

    இது எப்படிச் செய்தாங்க? அரசு கஜானாவிலிருந்தா அல்லது சொந்தப் பணத்திலிருந்தா? சொந்தப்பணம் என்றேல்லாம் இருக்குமா? அதாவது இப்போது முதல்வர், பிரதமம மந்திரிகளுக்கு எல்லாம் ஒரு வருமானம் குறிப்பிடப்படுவது போன்று?

    அரசு கஜானாவிலிருந்து என்றால் அது மக்களின் வரிப்பணம் ஆயிற்றே? அப்படினா இப்ப செய்வது போல் என்று ஆகிவிடாதோ? ஊழல் என்று?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரண்மனை என்பது அரசனின் சொத்து, அதாவது ஆட்சியின் சொத்து. அதனைச் சிறப்பாக வைத்துக்கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பு. நிறைய வெற்றிகள் பெற்றிருக்கிறோம், அதனால் நம் சோழப்பேரரசின் அரண்மனை பொன்வேய்ந்து இருக்கணும் என்று நினைத்திருக்கலாம் (இராஜராஜன் காலத்திலோ அல்லது அதற்குப் பிறகோ தஞ்சை பெரியகோயில் விமானம் பொன்வேய்ந்திருந்தது). இப்போல்லாம் கவர்னர் மாளிகை, ஜனாதிபதி மாளிகையில் பூந்தோட்டங்கள், அழகுப் பொருட்கள் இருக்கின்றனவே. அதனால் ஊழல் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது

      நீக்கு
  23. போர் என்பதே மனிதனின் ஆணவத்தைக் குறிப்பிடும். போர் தர்மம் அது இது என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. மனிதன் ஒருவனை இன்னொருவர்ன் அடித்துக் கொல்வதில் என்ன தர்மம் இருக்கிறது? அதில் பல சாதாரண மக்களும் அழிவது. இதோ இப்போது வரை. விலங்குகளைச் சொல்கிறோம் அதுங்கதான் தன் ஏரியா என்று அதன் 5 அறிவின் செயல்பாடு ஆனால் ஆறறிவும் சிந்திக்கும் திறனும் கொண்ட மனுஷனும் அப்படித்தான் இருக்கிறான். இது நாடுகளுக்கு மட்டுமல்ல குடும்பங்களுக்கும் தான். சொத்துச் சண்டை வருவதில்லையா? அடிபிடி கொலைன்னு வரதில்லையா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போர் என்பது பொருளாதாரத்தை வளர்க்கும், அழிக்கும் ஒரு செலவினமாக ஆகி பலப்பல வருடங்களாகின்றன. முன்பு ஒரு நாட்டின்மீது போரிட்டு அவர்களின் செல்வத்தைக் கவர்ந்து வருவது. நாடு பிடிப்பது என்பதெல்லாம் காரணமாக இருந்தன. இப்போது, இரு நாடுகளுக்கிடையில் சண்டை மூண்டால், நிறைய ஆயுதம் விற்கலாம், அபூர்வ மினரல்களை லவட்டலாம், பிறகு சமாதானம் பேசி நோபல் பரிசுக்கு முயலலாம் என்பது காரணங்களாகின்றன.

      நீக்கு
  24. சிற்பங்கள் ஒவ்வொன்றும் அத்தனை அழகு. இடையிடையே சாளரங்கள் அழகா இருக்கு பார்க்க.

    கோபுரத்தின் அமைப்பு ரொம்ப அழகு. பிரமிடு போன்று அதாவது கூம்பு வடிவம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தஞ்சை பெரிய கோயிலை எத்தனை முறைகள் பார்த்தாலும் அலுப்பதில்லை. இவர்களை முன்னோர்களாகக் கொண்ட மக்கள் எத்தனைபேர் தஞ்சைப் பகுதிகளில் இருக்கின்றார்களோ, எந்த நிலையில் இருக்கின்றார்களோ என்று யோசிப்பேன்.

      நீக்கு
  25. நீங்க மட்டும் எங்க நிக்கறீங்க? கொஞ்சம் அப்பால ஒருவர் நிற்பது தெரிகிறதே

    ஆனால் அந்தப் படம் கோபுரம் செமையா இருக்கு ஆமா அதன் அருகில் சென்றால் நாம் ரொம்பச் சின்னவங்களாகத்தான் தெரிவோம் அத்தனை பிரம்மாண்டம்.

    கோபுரத்தின் அவை வாயிலா? சாளரம் இல்லையா? இரண்டு துவாரபாலகர்கள் - ஆமா அழகான வடிவமைப்பு. இப்படி இருப்பதால் அது வாயில் என்று சொல்லப்படுதோ?

    அது மஹிஷாசுர தேவியா? இப்ப புதுசா வைத்திருக்கிறார்களோ? இல்லை பழையதை சீர் திருத்தியிருக்காங்களா? நிறம் வித்தியாசமாக இருக்கிறதே!

    எல்லாமே செம அழகு கலைவடிவம். நீங்க எடுத்த விதமும் சூப்பர், நெல்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீங்க மட்டும் எங்க நிக்கறீங்க?// இனி குறுக்க வராதீங்கடா என்று மத்தவர்களுக்கு தடா போட்டுவிடுகிறேன். ஹாஹா. வெயில், நிழலைப் பொறுத்து சிலைகள் வித்தியாசமாகத் தெரிகின்றன. எனக்குமே இந்தச் சிற்பங்கள் ரொம்பவே பிடித்திருந்தன. மிக்க நன்றி கீதா ரங்கன் க்கா.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!