நெல்லைத்தமிழன் :
கேள்வி : என்னுடைய சிறிய வயதில், வீட்டில் ஏதோ ஒரு இடத்தில் ஃபேன் இருந்தாலே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். வெயிலின் தாக்கமே தெரியாதது போலத் தோன்றும். ஆனால் இப்போதெல்லாம் கசகசவென இருக்கும்போது ஏசி இருந்தால்தான் பெட்டராகத் தோன்றுவதன் காரணம் என்ன?
# இருக்கிறது - முடிகிறது - சுகம் என்பதால் அனுபவிக்க ஆசைப்படுகிறோம்.
கேள்வி : சரித்திரக் கதைகளில் கல்கி எழுதியதைப் போன்று எவருமே எழுதியதாக எனக்குத் தோன்றவில்லை. அதன் காரணமாக நான் நினைப்பது, நம் முன்னோர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று நாம் எண்ணும் அந்த நெறிப்படியே தன்னுடைய நாவலைக் கொண்டு சென்றதுதான். உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
# நம் மனதில் உள்ள சித்திரத்தை ஒத்த பாத்திரங்களும், நமக்குப் பிடித்தமான வழியில் சம்பாஷணையும் நாம் ஆராதிக்கும் சரித்திர பிரபலங்களை உயர்வாக சித்தரிக்கும் இயல்பும் கொண்ட நாவல்கள் வெற்றி பெறுவது இயற்கை தான். கல்கி இந்த எல்லாவற்றையுமே மனதில் வாங்கிக் கொண்டு நாவல்களை எழுதி இருக்கிறார் என்று நினைக்கத் தோன்றுகிறது. அவை அப்படியே நடந்த வரலாறாக இருக்க வாய்ப்பில்லை என்பதை நாம் எளிதாக மறந்து விடுகிறோம்.
கேள்வி : பஞ்சு மிட்டாய் நீங்கள் எந்த வயதில் முதன் முதலில் சாப்பிட்டிருக்கிறீர்கள்?
# பஞ்சு மிட்டாய் என் பத்தாவது வயதில் சாப்பிட்டதாக எனக்கு நினைவு. இது சற்று முன்பின்னாக இருக்கலாம்.
கேள்வி : அன்றைக்கு நாம் உபயோகித்த அதே வாசனையுடன் லைஃப் பாய் சோப் இப்போது கிடைக்குமா?
# காட்டமான கார்பாலிக் நெடியுடன் கூடிய லைப்பாய் சோப்பு இப்போது கிடைக்காது என்று நினைக்கிறேன். அது மிகப் பெரிய சைஸ். மிகச் சொற்ப விலை. ஏழைகளின் சோப். அதை வாங்கி மூன்று நான்கு துண்டுகளாக்கி ஒவ்வொருவருக்கும் ஒரு துண்டு கொடுப்பார்கள் எங்கள் வீட்டில்.
அனேகமாக அதிக கார்பாலிக் அமிலம் சருமத்துக்கு நல்லதல்ல என்னும் கருத்து பரவியதால் அது மறைந்து போய்விட்டதா, அல்லது அவ்வளவு பெரிய சோப்பை அவ்வளவு மலிவான முறையில் விற்க வேண்டாம் என்று நினைத்து விட்டார்களா என்பது தெரியவில்லை. ஆரோக்கியமான பொருள் என்பதற்காக மட்டும் அதிக அளவில் வாங்கும் தன்மை கூட கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. லைப்பாய் சோப் காணாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். லைப்பாய் பெயர் ஆராய்ச்சி சோப் உறையிலிருந்ந ஆளின் படம் என நிறைய நேரம் சிறு வயதில் செலவழித்திருக்கிறேன்.
லண்டனில் ஒத்தெல்லோ நாடகம். ஏதோ ஒரு பாத்திரம் "என் பாவங்களை என் கைகளில் இருந்து எப்படி கழுவப்போகிறேன்" என்று வசனம் பேசியபோது அரங்கில் இருந்த ஒரு நபர் , "லைப்பாய் சோப் உபயோகியுங்கள் " என்று சொன்னதாகவும் அதற்காக லீவர் பிரதர்ஸ் நிறுவனம் அவருக்கு ஒரு பரிசு வழங்கியதாகவும் ஒரு சுவாரசியமான கதை உண்டு. உண்மையா என்று தெரியவில்லை.
கேள்வி : ஒரு நடிகர் மறைந்துவிட்டால், நல்லவேளை இப்போ அந்தப் படம் இன்னும் நல்லா ஓட ஆரம்பிக்கும் என்று படத்தின் தயாரிப்பாளரும், நல்லவேளை முன்னமே அவரைப்பற்றி எல்லாத் தகவல்களையும் சேகரித்து காணொளி தயார் செய்துவிட்டேன், அதைப் போடுவதற்கு நல்ல சந்தர்ப்பம் வந்திருக்கிறது என்று தொலைக்காட்சியும், நாளைக்கு லீவு விடுவாங்களா (அவர் அரசியலிலும் இருந்திருந்தால்) என்று மாணவர்களும் எதிர்பார்ப்பார்கள் என்று தோன்றுகிறது. அவருக்காக உண்மையில் யார்தான் வருத்தப்படுவார்கள்?
# அவர் சம்பாதித்துக் கொண்டு இருப்பவராக இருந்திருந்தால் அதன் பயனை அனுபவித்தவர்கள் எல்லாரும் வருத்தம் தான் படுவார்கள். மற்றபடி வெளியிடப்படும் எல்லா வருத்த / அனுதாபச் செய்திகளும் ஒரு சம்பிரதாயமாக செய்யப்படுவதுதான்.
அப்படிப்பட்ட ஒரு நடிகரின் பேரில் உண்மையான அன்பு கொண்டவர்கள் இருக்கவே முடியாது என்று எண்ணுவது சரியாக இருக்குமா ?
= = = = = = = = =
படமும், பதமும் :
நெல்லைத்தமிழன் :
அழகாகக் காட்சியளிக்கும் இந்தத் தேயிலைத் தோட்டத்தைப் பாருங்கள். உண்மையில் தேயிலை என்பது மர வகையைச் சார்ந்தது. தேயிலையைப் பறிக்கச் சுலபமாக இருக்கவேண்டும் என்பதற்காக அவ்வப்போது வெட்டிக்கொண்டே (பறித்துக்கொண்டே) இருப்பதால் நமக்கு இடுப்பு உயரத்தில் தேயிலை செடிபோலப் படர்ந்து இருக்கின்றன. இதனைப்பற்றி அந்தப் பயணத்தொடரில் எழுதுகிறேன்.
- - - - - - - -
வேர்களைப் பார்த்தாலே தெரியும். தேயிலை மரத்தைச் செடியாக வைப்பதற்கு அதன் இலைகளைத் தொடர்ந்து பறிப்பதுதான் காரணமாக இருக்கிறது என்று. நான் தேயிலை மரத்தையும் ஒரு சில இடங்களில் பார்த்தேன். அந்தப் படத்தைப் பிறகு பகிர்கிறேன்
- - - - - - -
தாய்வானில் Jade Marketக்குச் சென்றிருந்தேன். அங்கு பலவித விலையுயர்ந்த மணிகள் (கற்கள்) கொஞ்சம் விலை குறைவாகக் கிடைக்கும். அந்த மார்க்கெட்டில் நிறைய வாள்கள், குறுவாள்கள், கத்திகள் போன்றவைகளை விற்கும் கடைகளும் இருந்தன. இந்த வாள்களெல்லாம் போரில் (அனேகமாக வட இந்திய அல்லது சீன) வீரர்களால் உபயோகிக்கப்பட்டவை. எனக்கு அவற்றில் ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு (வீர சிவாஜி போலக் கற்பனை செய்து) படம் எடுத்துக்கொள்ள ரொம்பவே ஆசை. அவர்களிடம் என் ஆசையைச் சொன்னேன். அவர்கள், இவையெல்லாம் போரில் உபயோகிக்கப்பட்டவை. எங்கள் நம்பிக்கையின்படி, அந்த உறையிலிருந்து வாளை வெளியில் எடுத்தால் இரத்தம் பார்க்காமல் அவை உறைக்குத் திரும்பாது. அதனால் அவற்றைக் கையில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார். வேண்டுமானால் ஒரு கத்தி தருகிறேன் (அதுவும் போர் வீரன் உபயோகித்தது). அதனுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.
சரி.. அந்த வாய்ப்பை விடுவானேன் என்று ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.
- - - - - - - - - - - - -
நம்ம நாட்டில் நாம் பொதுவா பெரியவர்களை மதிக்கும் வழக்கம் குறைவு. வடநாட்டில் நிச்சயம் பெரியவர்களின் கால்களைத் தொட்டு வணங்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. எங்கள் வளாகத்திலேயே, சின்னக் குழந்தைகள் பள்ளிப் பேருந்தில் ஏறுவதற்கு முன்னர், பெற்றோரின் காலைத் தொட்டு வணங்குவதைக் கண்டிருக்கிறேன். அரசாங்கம், வயதானவர்களுக்காக எந்த ஸ்பெஷல் கவனிப்பும் செய்வதில்லை என்றே நினைக்கிறேன். தாய்வானில் இருக்கும் பார்க்குகளில் பெரியவர்களுக்காக சில நடைபாதைகளைப் போட்டு இரு புறமும் தாங்கு கம்பிகள் (SS rails) வைத்துள்ளார்கள். வீட்டில் உள்ள பெரியவர்களை பூங்காவிற்குக் கூட்டிவந்து அங்கு நடக்கவிடுகிறார்கள். அவர்களும் இந்தக் கம்பிகளைப் பிடித்துக்கொண்டே நடக்கிறார்கள். தேவையென்றால் உறவினர் கூடவே இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் இன்னும் தெளிவாகத் தெரியும். அதுபோல நடைபாதையும் வழுக்கும்படி இல்லாமல் மழை பெய்தாலும் வழுக்காதபடி gripஉடன் இருக்கும்.
- - - - - - - - - - - - - - -
பானுமதி வெங்கடேஸ்வரன்

இன்றைய உலகில் ஸ்மார்ட்போன்கள் ஒரு நொடியில் நூற்றுக்கணக்கான படங்களை எடுக்கும் நிலையில், டிகாம் சந்தின் கேமரா முன் நிற்கும் ஒருவர், சில பல நிமிடங்கள் பொறுமையாக இருந்தால்தான் ஒரு படம் எடுக்க முடியும். ஆனால் அந்த அனுபவம் மிகவும் விசேஷமானது.
“இது எனக்கு ஒரு தொழில் மட்டுமல்ல, என் தாத்தாவிடமிருந்து வந்த ஒரு பாரம்பரியம். உலகம் முழுவதும் டிஜிட்டல் ஆனாலும், என் கேமரா இன்னும் மக்களின் இதயத்தை வெல்லுகிறது. இந்த பாரம்பரியத்தை முடிந்தவரை நீட்டிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்,” என்கிறார் டிகாம் சந்த்.
புகைப்படங்கள் என்பது எப்போதும் பழமையான விஷயங்களை இனிதாக அசைபோட வைப்பதுதான், அந்தப் பழமை மாறாத கேமராவில் எடுக்கும் போது அந்த அனுபவம் இன்னும் இனிமையாகிறது.
டிகாம் சந்தின் மரப்பெட்டி கேமரா ஓர் சாதனம் மட்டும் அல்ல; அது காலத்தைக் கடந்து நிற்கும் புகைப்படக் கலையின் மரபுச் சின்னம். - - எல். முருகராஜ்
இருக்கிறது முடிகிறது..... என்பது சரியான பதிலாகத் தோன்றவில்லை. உடல் ஒரு சுகத்துக்குப் பழகிவிட்டால் முந்தைய நிலைமைக்குப் போக விரும்பாது. நம்ம வெஸ்டேர்ன் டாய்லெட் இந்தியன் டாய்லெட் மாதிரி. பயணங்களில் ஏசி அறை வெஸ்டேர்ன் டாய்லெட் என்பது குறைந்தபட்ச எதிர்பார்ப்பாகிவிட்டது.
பதிலளிநீக்குஇதனால்தான் வாழ்ந்து கெட்டவர்களிடம் அனுதாபம் உண்டாகிறது
வாங்க நெல்லை.. உடல் ஒரு சுகத்துக்கு பழகி விட்டால் பழைய நிலையை மனம் விரும்புவதில்லை, நாடுவதில்லை என்பது நூறு சதவிகிதம் உண்மை.
நீக்குவசதிகளைப் பொருத்தவரை , கட்டுபடி ஆகாத எதையும் ஒதுக்கி வைக்கிறோம் , இல்லையேல் கஷ்டப் பட்டாவது பிடித்து வைக்கிறோம் என்பது நான் அனுபவத்தில் கண்டது.
நீக்குஉண்மை. ஃபிரிஜ் வாஷிங் மெஷின் வாங்கிய எங்கள் வீட்டில் டிஷ் வாஷர், வேலைக்கார ரோபோ போன்றவை வாங்கவில்லை!
நீக்குநடிகரின் பேரில் உண்மையான அன்பு கொண்டவர்கள்... விதிவிலக்குகள் தவிர ஒவ்வொரு மனிதன் மறையும்போது சிலருக்காவது வருத்தம் ஏற்படும்.
பதிலளிநீக்குஆனால் உலகமே அழுதது, திரையுலகமே அதிர்ச்சி, தமிழகமே தள்ளாடுகிறது-இது வருத்தத்தினால் தள்ளாட்டம்..... இவையெல்லாமே புருடா என்பது என் எண்ணம்
இதோடு கூட இன்னொரு டெம்ப்லேட் வரியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். "அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது" !!
நீக்கு// உலகமே அழுதது //
இதைப் படிக்கும்போது காதலிக்க நேரமில்லை நாகேஷ் நினைவுக்கு வருகிறார்.
மிகைபடக்கூறல் மீடியா லட்சணம். அதே போல் ஆதாயம் இருந்தால் அரை லிட்டர் கண்ணீர் வடிப்பது அரசியல் சாணக்கியம். ஆனாலும், மிகச் சில விதிவிலக்குகள் தவிர , பெரும்பாலும் எவர் மரணம் அடைந்தாலும் அதை எண்ணி உண்மையாக வருத்தப்படும் ஓரிரு நபர்களாவது இருப்பார்கள் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.
நீக்குலாபம் கருதி துக்கம் விசாரிப்பது இன்றைய தர்மம்.
நீக்குகண்ணதாசன், நடிகைஷோபா, முத்துராமன் இவர்களின் மரணம் மிகவும் வருத்தத்தை தந்தது. சிவாஜியின் மரண செய்தியை ஒரு ப்ரெளசிங் சென்டரில் இ-மெயில் செக் பண்ண சென்றபொழுதுதான் பார்த்தேன். அதிர்ச்சியில், "ஐயையோ!" என்று பெரிதாக கத்தி விட்டேன். பக்கத்தில் ப்ரெளஸ் பண்ணிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் என்னைப் பார்த்தார்கள், அதை நடத்திக் கொண்டிருந்த இளைஞர் எனக்கு ஏதோ ஆகி விட்டது என்று நினைத்து ஓடி வந்தார். ஒரு சில நாட்களில் 'Sivaji the Legend' என்று என் மகளை அவள் பள்ளியில் பேசச் சொன்னார்கள். நான் உணர்வுபூர்வமாக எழுதி கொடுத்ததை அவள் பேசியதை அவளுடைய பல ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.
நீக்குசிவாஜி, கண்ணதாசன், ஷோபா இவர்களின் இழப்பெல்லாம் ஈடு செய்யக் கூடியதா என்ன? கிரேஸி மோகன் மரணம் கூட வருத்தமாகத்தான் இருந்தது. ஜெயலலிதாவின் மரணம் ஏனோ மனத்தை கணக்கச் செய்தது.
இதுபோன்ற சில மரணங்கள் மனதை பாதிப்பதுண்டு. ஆனால் வெற்றிடம், நிரப்ப முடியாத இழப்பு என்று சொல்ல முடியாது. சிவாஜி தன் கடைசி காலங்களில் நடிப்பதையே நிறுத்தி இருந்தார். SPB கூட பாடுவது நின்று போயிருந்தது. நமக்கு அவர்களை பிடிக்கும். அவ்வளவுதான்.
நீக்குஎனக்கு அதிர்ச்சி வருத்தம் சோகம் ஆற்றாமை ஏற்படுத்தியது ஜெ அவர்களின் மரணம். எனக்கு சக்தி இருந்திருந்தால் அவர் உடல் ஆரோக்கியத்தைச் சரிப்படுத்தி இன்னும் இருபது வருடங்கள் ஆயுள் கொடுத்திருந்திருப்பேன்
நீக்கு'ஜெ' மரணம் இயற்கையா செயற்கையா என்பதே வெளி வரப்போவதில்லை. வலிமையான தலைமையை இழந்து இன்றுவரை தவித்துக் கொண்டிருக்கிறது அதிமுக.
நீக்குஇவரது மரணம் ஈடு செய்ய முடியாத மரணம் என்று நிரூபணமாகி இருக்கிறது. நிரப்ப முடியாத வெற்றிடமாகவே இருக்கிறது.
கார்பாலிக் அமிலமோ என்னவோ.. லைப்பாய் சோப் வாசனை ரொம்பப் பிடிக்கும். இப்போது கிடைத்தாலும் வாங்கி உபயோகிக்க ஆசை.
பதிலளிநீக்குஅது சரி.. எல்லா சோப்புகளுமே கெடுதல்தான். இல்லாமலா தயாரித்தபிறகு பல வாரங்கள் கழித்துதான் விற்பதற்கு உகந்ததாக ஆகும்?
முன் நாட்களில் பீர்க்கை கூட்டை வைத்து அரப்பு தேய்த்து குளித்துக் கொண்டிருந்தோம்...
நீக்குமறுபடி,
புதிய சோப்பை பழகி விட்டால் பழைய அரப்புக்கு நாம் செல்வதில்லை!
// லைப்பாய் சோப் வாசனை ரொம்பப் பிடிக்கும் //
வியக்கிறேன்!
லைஃப்பாய் சோப் விளம்பரம் நினைவிருக்கிறதா?
நீக்கு"ஆரோக்ய வாழ்வினைக்
காப்பது லைஃப்பாய்....
லைஃப்பாய் எவ்விடமோ
ஆரோக்யம் அவ்விடமே...
லை....ஃப்.....பாய் சோப்."
//// லைப்பாய் சோப் வாசனை ரொம்பப் பிடிக்கும் //
நீக்குவியக்கிறேன்!// Me too.. Life boy சோப் பிடிக்கவெ பிடிக்காது. அது ஆண்களின் சோப் என்றுஒரு எண்ணம். பின்னாளில் அத்ன் சைஸை குறைத்து, மணத்தை மாற்றிய பொழுதும் பிடித்தம் வரவில்லை.
முன்பு சவர்க்காரம் என்று ஒரு பார் கிடைக்கும். இளமஞ்சள் நிறத்தில் நீளமாக இருக்கும். அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி துணி துவைக்க உபயோகப்படுத்தலாம். அது அக்கறையவே கரையாது. லேசில் நுரையும் வராது. கிட்டத்தட்ட துணி துவைக்கும் ப்ரஷ் போல அதையே உபயோகப்படுத்தலாம். அப்புறம் மென்மையான, எளிதில் கரையக்கூடிய, நுரை ஏராளம் தரும் ரின் போன்ற பொருட்கள் வந்து மார்க்கெட்டைப் பிடித்தன. லைஃப்பாய் பார்த்தால் எனக்கு இதன் நினைவும் வரும்!
நீக்குபெரும்பாலான தியேட்டரில் திரைப்படத்தின் முன் அல்லது இடைவேளைக்குப்பின் லைப்பாய் விளம்பரம் வரும். கல்லூரிக் காலத்தில் கெமிஸ்ட்ரி லேபில் கை அலம்பிக்கொள்ள லைப்பாயை வைத்திருந்தது அதிர்ச்சி.
நீக்குநல்லவேளை பாவெ மேடத்திற்கு எனக்கு லக்ஸ் லிரில் பிடிக்கும்னு தெரியாது. இல்லாவிட்டால் நெல்லைக்கு பெண்கள் சோப் பிடிக்கிறதா என ஆச்சர்யப்பட்டிருப்பார்
சரித்திரக் கதை பற்றி நீங்கள் சொல்லியிருப்பது சரி. இது பற்றி இன்னும் எழுதலாம்
பதிலளிநீக்குமனித மனம் ஒவ்வொருவரைப் பற்றியும் அவரிடம் தான் எதிர்பார்க்கும் குணம் பற்றியும் எடைபோட்டு வைக்கிறது. அதற்கு மாறாக இருப்பதை விரும்புவதில்லை. இதனைப் புரிந்து கொள்ளாத இயக்குநர்கள் தோல்விப்படம் கொடுத்திருக்கிறார்கள். தலைவர்களுக்கும் அப்படித்தான். அதனால்தான் சிலபல தலைவர்கள் அருகில் இருப்பவர்கள் அவர்களைக் கழிசடையாகத்தான் எண்ணுவார்கள் ஆனால் பொதுமக்களின் பார்வை வேறாக இருக்கும். (உதாரணம் க)
நீக்குஉண்மை. ஆனால் சிலசமயம் சில எதிர்பாரா மாறுதல்கள் இனிய ஆச்சர்யத்தைக் கொடுத்து வரவேற்பைப் பெறலாம்.
நீக்குநம்பியாரைப் பற்றிப் படித்துவிட்டு அடடா இவர் மோசமானவரில்லையா? பார்க்கிற பெண்களையெல்லாம் ரேப் பண்ணமாட்டாரா? என்று வியப்பதுபோல
நீக்குஇது மனோகருக்கும் பொருந்தும்.
நீக்குநான் மட்டும்தான் சீக்கிரம் எழுந்துக்கறேனா இல்லை காலைல பயணத்தினால் வேறு வேலையில்லாமல் இருக்கேனா? ஹாஹாஹா. தினம் பிரார்த்தனை பண்ணுபவருக்காக கடவுளே காத்திருப்பதாகத் தெரிகிறது.
பதிலளிநீக்குஹா ஹா ஹா. அவர் யாரோ, எவரோ? ஆனால், கடவுள் காத்திருப்பதை உணர்ந்து நானும் வந்து விட்டேன்.
நீக்குமுன்னெல்லாம் நான்கரை மணிக்கு எழுந்து கொண்டிருந்தேன். இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல ஐந்தாகி ஐந்துரையாகி ஆறாகி விட்டது. ஒரு வாரமாக ஆறு மணிக்குதான் எழுகிறேன். எழுந்து மற்ற கடமைகள் முடித்து, காப்பி போட்டு அதை அருந்தியபடியே கணினி வந்து நண்பர்களின் தளங்களை பார்த்துக் கருத்திட்டு இங்கு வர தாமதமாகி விடுகிறது!!!!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். பிரார்த்தனைகள்.
நீக்கு// நாம் எண்ணும் அந்த நெறிப்படியே தன்னுடைய நாவலைக் கொண்டு சென்றதுதான். உங்களுக்கு என்ன தோன்றுகிறது? //
பதிலளிநீக்குநீங்கள் கல்கி தவிர அதிகம் மற்றபேர்களின் சரித்திர நாவல் படித்ததில்லை என்று தெரிகிறது! ஹிஹிஹி..
அப்படிச் சொல்லுவதைவிட கல்கி பாணியில்லாமல் எழுதிய சரித்திர நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை எனத் தெரிகிறது எனச் சொல்லியிருக்கலாம்
நீக்குகல்கி பாணியில்லாமல் எழுதிய சரித்திர நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை எனத் தெரிகிறது
நீக்குசாண்டில்யன், நா.பார்த்தசாரதி, ஜெகசிற்பியன், விக்கிரமன், கௌதம நீலாம்பரன், அகிலன் போன்றவர்களை நெல்லை படித்தது இல்லையா? அதிலும் சாண்டில்யன்?
நீக்குசாண்டில்யன் சரித்திர நாவல்கள் நிறைய படித்திருகாகிறேன். மஹாராஷ்ட்ரா போன்ற இடங்களை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் (ஆங்கோஜி...) அவரல்லவா?
நீக்குஜலதீபம் - கனோஜி ஆங்கரே
நீக்கு1956 - 57 சமயத்தில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டு மூன்று புகைப்படக்காரர்கள் இருப்பார்கள். அப்போதெல்லாம் வண்ணப் படங்கள் மிக மிக விலை அதிகம் - நாம் எடுக்கவே முடியாது என்று இருந்த நிலை .கருப்பு வெள்ளை ஃபிலிம் கூட எளிதில் கிடைக்காமல் திண்டாடின காலம் என்று கூட சொல்லலாம். அந்த சமயத்தில் இந்த பூங்காவில் இருக்கிற அந்த வெகு சில புகைப்படக்காரர்கள் ஃபிலிம் இல்லாமல் புகைப்பட பிரிண்டிங் பேப்பரை பிலிம் இருக்க வேண்டிய இடத்தில் பயன்படுத்தி படங்களை எடுத்துக் கொடுப்பார்கள். அதாவது , பெரிய சைஸ் படமாக ஒருமுறை அந்த பிரிண்டிங் பேப்பரில் படத்தைப் பதிவு செய்து , நெகடிவ் பிம்பமாக வந்த அதை, சரியான தூரத்தில் வைத்து வேறொரு பிரின்டிங் பேப்பரில் அந்த நெகடிவ் பிம்பத்தை (2f same size inverted image) அதை ஒரு படம் பிடித்து அதை நமக்குத் தருவார்கள். விலை மிக மிக மலிவு. படத்தை பிராசஸ் செய்ய ஸ்டுடியோவுக்குப் போகாமல் அந்த இடத்திலேயே எல்லாம் ஒரு கருப்புத் துணிப் பைக்குள் நடக்கும். ஒரு நினைவுக்காக இருக்கட்டும் என்று அந்த புராதன கமிராவுக்கும முன் நின்று படம் எடுத்துக் கொண்டவர்கள் அநேகம்.
பதிலளிநீக்குKGS இதுபோன்ற சிலபல பழைய பொருட்களை சேகரித்து வைத்திருந்தார். அவர் வீட்டில் அவை இன்னமும் இருக்கிறது.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் முருகா....
நீக்குஎ.பி.யில் பங்களிப்பவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்களே? கல்கியை விட அதிகமான வாசகர்களை/ரசிகர்களை கொண்டிருந்த சாண்டில்யன் ரசிகர்கள் யாரும் வாயைத் திறக்க காணோமே? இதைத்தவிர கெளதம நீலாம்பரன், விக்கிரமன், கோ.வி.மணிசேகரன், காலசக்கரம் நரசிம்மா, ஏன் சுஜாதா கூட கணேச பட்டர், வசந்தகுமாரன் இவர்களை வைத்து சரித்திர கதை எழுதியிருக்கிறார் தெரியுமா?
பதிலளிநீக்கு// கல்கியை விட அதிகமான வாசகர்களை/ரசிகர்களை கொண்டிருந்த சாண்டில்யன் ரசிகர்கள் யாரும் வாயைத் திறக்க காணோமே? //
நீக்குபட்டும் படாமலும் நான் சொல்லி இருக்கேனே...!! ஆனாலும் சாண்டில்யனின் எழுத்துகளுக்கு இருக்கும் வசீகரம் மற்றவர்கள் எழுத்துக்கு இல்லை. ஆனால் சாண்டில்யன் எழுத்து ரசிக்கபப்டுவதற்கு காரணம் அவர் ஆபாச வர்ணனைகள் எழுத்துவதால்தான் என்று குறுகிய வட்டத்துக்குள் அடைக்கப் பார்ப்பார்கள். போர்க்காட்சிகளை விவரிப்பதில், ஹீரோவை மாஸாக வெளிபப்டுத்துவதில், எதிரி அதாவது வில்லனையும் மதிப்பு குறைக்காமல் அதே அளவில் விவரிப்பது என்று அவர் பாணி தனி. ஓரளவு சிவகாமியின் சபதம், சோலைமலை இளவரசி போன்ற நாவல்கள் எழுதி இருந்தாலும் கல்கிக்கு பொன்னியின் செல்வன் அளவு பெயர் வேறெதிலும் கிடைக்கவில்லை என்று நினைக்கிறேன்.
எனக்கு சாண்டில்யன் சரித்திர நாவல்கள் மிகவும் விருப்பமானவை. போர் வர்ணணைகள் அவரளவிற்கு யாரும் எழுதியதில்லை. நாவல் தொடக்கத்தில் மூணு பக்க வர்ணணைகள், சுருக்கமாகப் படிப்பேன். காதலன் காதலி வெற்றுப்பேச்சுப் பக்கங்களைப் படிக்கமாட்டேன் அறுவை என நினைத்ததால் சாண்டில்யனும் நரசிம்மாவும் நிறைய ஆதாரங்களோடு எழுதுவார்கள். கல்கி அப்படியல்ல
நீக்குபாவெ மேடத்திற்கு அநிய்யத்துக்கு தைரியம். சுஜாதாவை சரித்திர நாவலாசிரியர்கள் வரிசையில் சேர்த்ததற்கு
நீக்குகல்கி என்று சொன்னால் நாம் பொன்னியின் செல்வன் தவிர வேறெதுவும் சொல்ல மாட்டோம். நூற்றுக்கு ஐந்துபேர் சிவகாமியின் சபதம் சொல்வார்கள். மற்றபடி அவர் எழுதிய சிறுகதைகள், அகதவிகடம் பற்றி எல்லாம் சொல்பவர்கள் யார்? நகைச்சுவையாக எழுதுவார் என்று சொல்வார்கள். இப்போது படித்தால் அது சாதாரணமாக இருக்கும்.
நீக்குநரசிம்மா வரலாற்றுக்கு கதைகள் எழுதுவதில் தனி பாணி வைத்திருக்கிறார். கொஞ்சம் இந்திரா சௌந்தர்ராஜனும், கொஞ்சம் டான் ப்ரவுனும் கலந்த பாணி.
//பாவெ மேடத்திற்கு அநிய்யத்துக்கு தைரியம். சுஜாதாவை சரித்திர நாவலாசிரியர்கள் வரிசையில் சேர்த்ததற்கு// ஹஹஹா! நானே ஸ்மைலி போட வேண்டும் என்று நினைத்தேன்.
பதிலளிநீக்கு:-))
நீக்குநெல்லை ஒரு திராவிட 'மாடலா', எல்லா படத்திலும் கருப்பு சிவப்பு பனியனில் காட்சி அளிக்கிறார்.
பதிலளிநீக்கு//உடல் ஒரு சுகத்துக்குப் பழகிவிட்டால் முந்தைய நிலைமைக்குப் போக விரும்பாது. //
என்னைப்பொறுத்த வகையில் நான் சுகங்களை எதிர்பார்ப்பதுமில்லை, கிடைத்த சுகங்களை அனுபவிக்காமல் இருப்பதுமில்லை. காலை டிபன் செய்ய பல வழிகள் இருந்தும் இன்று பழஞ்சோறு, மோர், சின்ன வெங்காயம், கோங்குரா சட்னியுடன் காலை உணவை முடித்துக்கொண்டேன்.
திங்க கிழமை பதிவாக ஸ்ரீராம் ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் உணவு பட்டியலை எழுதி அவற்றின் செய்முறையை சுருக்கமாக எழுதலாம்.
உதாரணமாக
இன்றைய காலை டிபன்
இட்லி. கார சட்னி, காபி (கார சட்னி செய்முறை)
மதிய சாப்பாடு
பொன்னி அரிசி சாதம், முருங்கைக்காய் சாம்பார், புடலங்காய் கூட்டு, முளைக்கீரை பொரியல் (கூட்டு பொரியல் செய்முறை)
இரவு டிபன்
ஊத்தப்பம் தொட்டுக்கொள்ள காலையில் செய்த சட்னி, பொடி, இப்படி வித்யாசமாக பதிவிடலாம்.
Jayakumar
எனக்கு சொல்லப்பட்டிருக்கும் டாஸ்க் நிறைவேற்றுவது கஷ்டம். மதியம் ரசம் குடித்தேன், மோர் குடித்தேன் என்று எழுத வேண்டும்!
நீக்குநெல்லை, அது குரங்கு வகை தான் பபூன். Baboon.
பதிலளிநீக்குகீதா
Yes.
நீக்குவெண்ணைக் கத்தி எல்லாம் கைல வைச்சுட்டு அடுக்களைல காய் கட் பண்ற போஸ்!!!! நெல்லை அந்தப் படம் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது!! வீர சிவாஜி போல கற்பனை செஞ்சு பார்த்து!!
பதிலளிநீக்குகீதா
அது குறுவாள். என்னா ஷார்ப்.
நீக்குடிகாம் சந்த் பற்றி வாசித்திருக்கிறேன்.
பதிலளிநீக்குசுவாரசியமான தகவல்
கீதா
இவர் பற்றி வேறு எங்கு வந்தது என்று அறிந்து கொள்ள ஆவல்.
நீக்குநெல்லை பகிர்ந்திருக்கும் படங்கள் எல்லாமே நல்லாருக்கு
பதிலளிநீக்குதேயிலைத்தோட்டம் படம் அழகு. ஆமாம் கட் பண்ணுவதால்தான் உயரம் குறைவாக. அப்பதானே டீ இலை பறிக்கவும் சௌகரியம்
கீதா
பானுக்கா, ஹலோவீன், நன்றி நவிலும் நாள் இதெல்லாம் இப்ப வருமே அடுத்தடுத்து அக்டோபர்ல கடைசில ஹலொவீன், நவம்பர்ல கடைசில நன்றிநவிலல் என்று. இப்பவே தொடங்கிடாங்களா சேல்ஸ்.
பதிலளிநீக்குஇப்ப அங்கு பூஷணி சீசன் குவிந்து கிடக்கும். pumpkin butter என்று செய்து வருடத்துக்குக் கூடச் சேமித்து வைப்பாங்க.
படங்கள் நல்லாருக்கு.
கீதா
கீதா ரங்கன் அங்கு போய் பறங்கி அல்வா பறங்கி பச்சிடி பறங்கி பூரண போளி என்றெல்லாம் செய்து ஹாலூவீன் ஸ்பெஷல் என ரெஸ்டாரன்ட் திறக்கறதை விட்டுட்டு....,.
நீக்கு/வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள். அனைத்தும் நன்றாக உள்ளது.
/ கல்கியை விட அதிகமான வாசகர்களை/ரசிகர்களை கொண்டிருந்த சாண்டில்யன் ரசிகர்கள் யாரும் வாயைத் திறக்க காணோமே. /
எனக்கும் சாண்டில்யன் அவர்களின் சரித்திர கதைகள் பிடிக்கும். மனக்கண்ணெதிரே காட்சிகளை காணும் அந்த வர்ணனை வேறு எவராலும் தர முடியாது. கல்கி அவர்களது நாவல்களும் படித்திருக்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அப்போ உங்களுக்கு சாண்டில்யன்தான் முதல் இடத்தில் பிடிக்கும் என்று வைத்துக் கொள்ளலாமா?!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசகோதரர் நெல்லைத் தமிழர் அவர்கள் அனுப்பிய படங்கள் அனைத்தும், சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் அனுப்பிய படங்களும் நன்றாக உள்ளது. தேயிலை எஸ்டேட் படங்கள் அருமை.
இரத்தம் காணாது உறைக்குள் போகாத உறைவாட்கள் பற்றிய செய்திகள் நன்று. "இரத்தம் சிந்தா புரட்சியுடன்" காட்சி தரும் சகோதரர் நெல்லைத் தமிழரின் படம் நன்றாக உள்ளது.
வயதானவர்களுக்கு மதிப்பு தருபவர்கள் செயலுக்கு நாமும் தலை வணங்குவோம். இது படத்துடன் நல்ல செய்தி.
ஹாலோவீன் கொண்டாட்த்திற்கு ஏற்பாடாகும் அனைவருக்கும் வாழ்த்துகள். இங்கும் பலர் கொண்டாடுகின்றனர். (எங்கள் அப்பார்ட்மெண்டிலும்)
பழைய மாதிரி இப்போதும் புகைப்படம் எடுப்பது நல்ல செய்தி. உண்மைதான் அதில் உள்ள மகிழ்ச்சி இப்போது ஃபோனில் உடனுக்குடன் எடுத்துப் பார்ப்பதில் இல்லை. ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் போதுதான் மகிழ்ச்சி வரும். ஆக மொத்தம் இன்றைய பதிவு நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்க. சாக்லேட் வாங்கி வச்சுக்கணும்.
நீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இப்பவே சொக்கலேட்டோ.. அதுக்கு இன்னும் 2 மாதம் இருக்கே.... பூச்சி கீச்சி பிடிச்சிடாது:))))
நீக்குசென்னையில் ஹாலோவீன் கொண்டாட்டங்கள் நான் பார்த்ததில்லை. அதுசரி, நெல்லை எதைப் படித்து நல்லவேளை ஞாபகப்படுத்தினீங்கன்னு சொல்கிறார்? ஹாலோவீன் என்றால் சாக்லேட் அவசியமா?
நீக்குஹலவீன் அன்றிரவு குட்டீஸ் எல்லாம் வீட்டுக்கு வருவார்கள் அவர்களுக்கு சுவீட்ஸ் பழங்கள், இங்கு மெயினாக கோதுடன் கச்சான் சிலர் பணமும் போட்டு கிவ்ட் பாக் கொடுப்பது வழக்கம்.
நீக்குஅச்சச்சோ கொல:) கொல:) எங்கள் புளொக்கில ஒரு கத்திக் கொலை:)) மீக்குப் பயம்மாக்கிடக்கூ ஊஊஊஊ:).... மீ தேம்ஸ்க்கே ஓடிடறேன்.. தேம்ஸ் கரை ஆச்சிரமத்திலதான் நேக்குப் பாதுகாப்புக்கிடைக்கும்:))
பதிலளிநீக்குஇங்கின வந்து எப்பூடிக் கூக்குரல் போட்டாலும் ஆரும் திரும்பிப் பார்க்க மாட்டினம்:))... ஆனா மீ காண்ட் கோர்ட்டுக்கு இப்பவே போறேன்ன்ன்:)) மக்களைக்காப்பாத்தியே தீருவேன்:))))
அவனவன் பொன்னியின் செல்வன் நாவலைப் பற்றி பேசிக்கிட்டிருக்காங்க. அதில் பத்து பக்கம்கூட எழுத்துக்கூட்டிப் படித்து முடியாததால் கத்தி படத்துக்குத் தாவிட்டாங்களோ?
நீக்குஹா ஹா ஹா வைரவர் மேல ஆணையாக இப்போ ஹொலிடே முடிஞ்சு வந்ததும், பொ செ பாகம் ஒன்றை எடுத்து வந்து நடு ஹோலில் ரீ ரேபிள் மேலே வச்சிருக்கிறேன்... சத்தியமா வச்சதுக்கு இன்னும் திறக்கவில்லை:(..
நீக்குஅது என்னமோ செய்வினை செய்துவிட்டதுபோல படிக்க மனம் வருகுதில்லை, ஆனா கண்ணதாசனின்... அர்த்தமுள்ள இந்துமதம், அவளுக்காக ஒரு பாடல், சிவப்புக்கல் மூக்குத்தி.... இவை எல்லாம் பல பல தடவைகள் அலுக்காமல் திரும்ப திரும்ப படிச்சிருக்கிறேன்...
வாங்க அதிரா.. உங்கள் வரவு நல்வரவாகுக...
நீக்குநன்றி ஶ்ரீராம்… புலாலியூர்ப் பூசானந்தாவின் ஆசி உங்களுக்கு எப்பவும் கிடைக்கக் கடவது 😂😂
நீக்குவாருங்கள் அதிரா சகோதரி.
பதிலளிநீக்குநலமா? "எங்கள் புளொக்கில ஒரு கத்திக் கொலை:)" ஹா ஹா ஹா. நான் திரும்பி வந்து பாத்திட்டேன். "கத்திக் கொலைதானே..! (அதாவது கத்துக்குத்தானே கொலை.) ! யாரையும் குத்திக் கொலை இல்லையே..!:))) " தேம்ஸ் ஆசிரமம் எப்படி உள்ளது?
ஆஆஆ கமலாக்கா வாங்கோ வாங்கோ என் ஆச்சிரமக் கதவு எப்பவும் திறந்தேதான் இருக்கும், வந்து தாராளமாக தீட்சை வாங்கிட்டுப் போகலாம் நா ஒண்ணும் வாணாம் ஜொள்ள மாட்டேன்:)))..
நீக்கு//யாரையும் குத்திக் கொலை இல்லையே..!:)))///
ஹா ஹா ஹா ஆளைப்பார்த்தால் குத்தக்கூடியவர்போலவோ தெரியுதூ ஊஊஊஊ:)).. பில்டிங் ஸ்ரோங்கூ ஊஊஊஉ....... சே சே என் வாய்தேன் நேக்கு எதிரியே:))..
பாருங்கோ கமலாக்கா .. வைரவரே என, என் பாட்டில தியானத்தில ஆச்சிரம மூலையில இருந்த என்னை இப்பூடி எல்லாம் மாட்டி விடுறீங்களே.... மீ மீண்டும் ஆழ்நிலைத் தியானத்தில் அமர்கிறேன்ன்ன்ன்ன்:)))
எங்கே அந்தக் கறுப்புப்பூனைப்படைப் பாதுகாப்பைக் கொஞ்சம் கூட்டச் சொல்லுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)))
அடப்பாவி அதிரா..... சாரி... சொர்றி.. அப்பாவி அதிரா.. அஞ்சு எங்க காணாமல் போய்ட்டாங்க? சமூக சேவைல இறங்கிட்டாங்களா?
நீக்குஆஆஆஆ இதாரிது... ராதையைப் பார்த்த மயக்கம் தெளியாமல் நாக்கெல்லாம் தடக்குதே ஹா ஹா ஹா ஹையோ நேக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்... சே சே சே ஒழுங்கா தியானம் பண்ண விடுகினம் இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))...
நீக்குஅஞ்சு சமூக சேவையில் இறங்கேல்லை... ஆச்சிரம சேவையில இறக்கிட்டேன் ஆளை:)) அதாவது புலாலியூர்ப் பூஸானந்தாவுக்கு சேவை செய்கிறா ஆலமரத்தில் சே சே டங்கு ஸ்லிப்பாகுதே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) ஆஸ்ரமத்தில்:))))
படங்கள் நன்றாக இருக்கின்றன.
பதிலளிநீக்குபழைய சோப்களின் இன்றைய நிலை ? நாங்கள் சிறுவயதில் போட்ட ராணி சந்தண சோப், அப்புறம் லக்ஸ் ,பேபி சோப் இவற்றுக்கு இப்பொழுது என்னாயிற்று ?, அடுத்து வெளிநாட்டு வரவுகள். இப் பொழுது லிக்யூட் சோப் இனி என்னவோ ?
ஹலோவீன் எங்கள் வீட்டிலும் வரும். சென்றமுறை பேரன் செய்தது பேய் முகங்கள் எல்லாம் கதவுகளிலும், யன்னல்களிலும் வீட்டுக்குள்ளும் தொங்கின.:) இம் முறை என்ன வருமோ ?
எங்களுக்கு கூட சில சிலோன் நண்பர்கள் தயவில் ராணி சோப் கிடைத்திருக்கிறது. நல்ல சந்தன வாசனை அடிக்கும்.
நீக்குநன்றி மாதேவி.
கேள்வி பதில்கள் நன்று. நெல்லைத்தமிழன் அவர்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கிறது..... அலுக்காமல் சலிக்காமல் கேட்கிறார்..... தொடரட்டும் அவரது கேள்விகளும் உங்கள் பதில்களும்.
பதிலளிநீக்குமற்ற பகுதிகளும் நன்று. படங்களை ரசித்தேன். பழமையான கேமரா வைத்து படம் எடுக்கும் நபர் குறித்த தகவல் பகிர்வு நன்று.
வாங்க வெங்கட். அவர் மட்டும்தான் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறார். மற்றவர்களும் கேள்விகளுடன் முன்வருவார்கள் என்று நம்புகிறேன்.... நன்றி உங்கள் கருத்துக்கு.
நீக்குகேள்விகளும் , பதில்களும் அருமை.
பதிலளிநீக்குஅதற்கு பின்னூட்டங்களும் அருமையாக இருக்கிறது.
படமும் , பதமும் பகுதிக்கு இடம் பெற்ற நெல்லைத்தமிழன் படங்களும், பானுமதி வெங்கடேஷ்வரன் படங்களும் நன்றாக இருக்கிறது.
நன்றி கோமதி அக்கா.
நீக்குநெல்லை, பானு அக்கா சார்பிலும் நன்றி!
ஜெய்ப்பூரின் பழைய புகைப்படக் கலைஞன் பற்றிய செய்தியும் படமும் அருமை.
பதிலளிநீக்குஅந்தக்கால படங்கள் இன்னும் நன்றாக இருக்கிறது. அப்போது பொருட்காட்சியில் இப்படி பட்ட கலைஞர்கள் இருப்பார்கள்.
நன்றி கோமதி அக்கா. !
நீக்கு