இந்த வாரமும் அடுத்த வாரமும் இடம்பெற வேண்டிய சில வழக்கமான கேள்விகள் இந்த மாதம் 24 ம் தேதிக்குப் பிறகு இடம்பெறலாம். KGG வெளியூர் பயணத்தில் இருப்பதால் வலைப்பக்கம் அவரால் வரமுடியவில்லை. எனவே அவர் சேமித்து வைத்துள்ள பகுதிகளையும் அனுப்ப இயலவில்லை. அவை பெங்களுரூவில் அவர் மடிக்கணினியில் சிறை இருக்கின்றன!
எனவே இந்த இரண்டு வாரம் என் ராஜாங்கம்! பொறுத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே...
உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் பதில் சொல்லும் வழக்கத்துக்கு பதிலாக இந்த வாரம் மூன்றுபேரிடம் நாங்கள் வெவ்வேறு கேள்விகள் கேட்டோம். முதலில் KGS பெண்ணும் நிதி, மற்றும் முதலீடு ஆலோசகர் திரு சுரேஷ் பத்மநாபனின் திருமதியும் ஆகிய ராதா சுரேஷிடம் முதல் கேள்வி..
கேள்வி : ஹலோ ராதா.. வாழ்க்கையில் இழக்க கூடாத விஷயம், மதிப்பு வாய்ந்த விஷயம் என்று எதைச் சொல்லலாம்?
ராதா சுரேஷ்
பதில் : நிம்மதி. அது இல்லை என்றால் எதையும் சாதிக்க முடியாது. நிம்மதி வேண்டும் . அதற்கு மனதும் இதயமும் ஒரே முடிவு எடுக்க வேண்டும். Logic and emotional balance is key to peace. When both are fine with the decision we go ahead in life.
Right - Wrong னு ஒரு ஸ்பேஸ். லாஜிக் ஸ்பேஸ். அது நம்ம மைண்ட். நம்ம தெரிஞ்சவங்க, நம்மளை சேர்ந்தவங்க ன்னு ஒரு எமோஷனல் ஸ்பேஸ். அது இதயம் அப்படிங்கற ஸ்பேஸ். எப்பவுமே நாம் ஒரு டெசிஷன் எடுக்கறோம்னா அதை நாம் அலசிப்பார்க்க விரும்புகிறோம். இதையும் செய்ய முடியுமா, அதையும் செய்ய முடியுமா என்று நினைப்பதுதான்.. சரியா? பொதுவாக நம் மனம் எந்த ஒரு விஷயத்தையும் வேறுபடுத்திப் பார்க்க முடியும். பாகுபடுத்திப் பார்க்க முடியும். இது சரி, இது தவறு என்பது மனஸுக்கு தெரியும்.
ஆனால் இதயம், அதாவது எமோஷனலா பார்க்கும்போது ஒரு விஷயம் தப்பாவே இருந்தாலும், அது நம்மவர்கள் என்று இருந்தால், 'பரவாயில்லை..சரியாகி விடும், பண்ணலாம்' என்று சொல்லும். எனவே எப்பவுமே யுத்தம் என்பது எப்பவுமே நம்ம மனசுக்கும் இதயத்துக்கும் நடக்கும் சண்டைதான். வெளிக்காரணம் எதுவும் இல்லை.
உள்ளுக்குள்தான் பிரச்னை. அதனால்தான் நம் நிம்மதி கெடுகிறது. அந்த மன அமைதி, நிம்மதி இருந்திருந்தால் நடுநிலையான நிலைப்பாடு நமக்கு கிடைக்கும். இது நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், நடக்காததற்கு ஏதோ காரணம் இருக்கும் என்று மனம் ஒத்துக்கொள்ளும்.
உதாரணமாக இன்று கூட என் அண்ணன் என்னிடம் கேட்டான், "நான் இன்னும் கூட நல்லா முயற்சி எடுத்து சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்திருந்தால் அப்பா இருந்திருப்பார் இல்லையா?"
என் மனதில் என்ன தோன்றியதென்றால் . "அப்படி நீ மேற்கொண்டு சிகிச்சை கொடுத்தும் அவர் மரணம் அடைந்திருந்தால்?"
அப்போது அதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஆஸ்பத்திரியை குறை சொல்வோம். யோசனை சொன்னவர்களை குறை சொல்வோம்.இப்படி யார் மேலாவது பழி போடத்தான் தோன்றும். அதற்கு பதிலாக அவர் இருந்த வரை நன்றாக இருந்தார். அவரை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தவில்லை என்கிற ஒரு ஒத்துக்கொள்ளும் மனப்பான்மை இதயத்துக்கும் மனதுக்கும் நடுவில் அமைந்து விட்டால் நன்றாக இருக்கும். அந்த நடுநிலை வந்த உடனேயே நமக்கே ஒரு மாதிரி நிம்மதியாக இருக்கும்.
வாழ்ந்தவர்கள் நன்றாக வாழ்ந்தார்கள். நாம் நன்றாகத்தான் பார்த்துக் கொண்டோம். இரண்டுமே ஒரு சமன்பாடுதான், சரிவிகிதமாய் 50 : 50 என்று எப்போதும் வராது.
============================== ============
ஹேமா நாராயணன்
ஆரோக்ய ஹேமா.. முன்பு நம் தளத்தில் ஓரிரு ஆரோக்ய சமையல் ரெசிப்பி தந்திருக்கிறார். எங்கள் பிளாக் - 'ஆசிரியர் ரீடர்ஸ்' வாட்சாப் குழுவில் ஸைலண்ட் உறுப்பினர்! சமீபத்தில் ரிஷிகேஷ், முக்திநாத் சென்று வந்தார். அவரிடம் ஒரு கேள்வி...
கேள்வி : ஹலோ ஹேமா... சமீபத்தில் வடநாட்டு யாத்திரை சென்று வந்தீர்கள். அதில் குறிப்பிடத்தக்க சம்பவமாக நடந்தவற்றை என்னிடம் சொல்லி இருந்தீர்கள். அதை இங்கும் சொல்லுங்களேன்
பதில் : வழக்கமாக நடந்தவற்றை இங்கு சொல்லவில்லை. வித்தியாசமாக எங்களுக்கு நேர்ந்த சில திகில் / அருள் அனுபவங்களை மட்டும் சுருக்கமாக இங்கு பகிர்கிறேன்.
28.8.2025 அன்று இரவு ஹரித்வார் இல் தங்கினோம். 29.8.25 நதியில் நீராடினோம். மாலை ஹாரத்தி 15 ஆவது படியிலிருந்து பார்த்தோம்.
அன்று இரவு அந்த படி வரை வெள்ளம். முதல்நாள் வந்திருந்தால்? நல்ல வேளை.
மறுநாள் பத்ரிநாத் கோவிலுக்கு சென்றோம், திரும்பும் போது ஒரு இடத்தில் பாறை உருண்டு வருகிறது 'லைவ்' ஆக பார்த்தேன். இதயம் நின்று துடிக்கிறது. என்ன நினைக்க? அவர் அனுபவத்தில் எவ்வளவோ இது மாதிரி ஆபத்துகளை பார்த்திருக்கக் கூடிய டிரைவரே பயந்துபோய் "ஓ... பத்ரிநாத் " என்று அலறுகிறார். மழையினால் பாதை அரித்து இருந்தது. வலது பக்கம் ஏறத்தாழ 10ஆயிரம் அடி பள்ளம். வந்த பாறை கடவுள் அருளால் சேற்றில் அழுந்தி நின்று விட்டது. 'மலைபோலே வரும் சோதனை யாவும்...' பாடல் வரிகள்தான் ஞாபகத்துக்கு வந்தன. தமிழ் சினிமா கிளைமேக்ஸ் போல அவ்வளவு பக்கத்தில் வந்து அவ்வளவு பெரிய பாறை எப்படி, எதனால் நின்றது? அந்த திகில் நொடிகளை வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது. எல்லாம் கடவுள் செயல். 6 முதல் 7 பேர்கள் பாறையை அப்புறபடுத்தினர்.
மற்றொரு இடத்தில் பெரிய பள்ளம். நாங்கள் வந்த மினி பஸ் நின்று விட்டது. எப்படியோ கடந்தோம். 3 வது இடத்தில் பாதை அரித்து போயிருந்தது. பஸ் பாறை மீது ஏறி இறங்கியது.
நாங்கள் எப்படியோ ஜோஷிமட் வந்தோம். பத்ரிநாத் செல்லும் பாதை மூடி விட்டனர். பிப்பல்கோட் டி லிருந்து ஹரித்வார் கிளம்பினோம் ரிஷிகேஷ் கிட்டே பெரிய பாறை சரிந்ததால் பாதை மூடப்பட்டது. யமுனையில் ஒரே வெள்ளம், உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஊர் வந்தோம்.
ஒவ்வொரு இடத்திலும் ஆபத்திலிருந்து அந்த இறைவன் எங்களைக் காப்பாற்றினார்.
============================== ============================== ============================== ====
காலச்சக்கரம் நரசிம்மா
கேள்வி : ஹலோ ஸார்... வணக்கம். நலம்தானே?!!
எங்கள் பிளாக்குக்காக உங்களிடம் ஒரு கேள்வி...
சேர சோழ பாண்டியர்கள் ஆண்ட தமிழ்நாடு என்று சொல்வார்கள். சோழர்களும் பாண்டியர்களும் பிரபலமான அளவு சேரர்கள் இன்றைய தமிழர்கள் இடையே பிரபலமாகவில்லை. சோழர், பாண்டியர் நீங்கள் யார் பக்கம்?! ஏன்?
பதில் : வணக்கம். நல்ல கேள்வி. சோழர்கள் பாண்டியர்கள் இருவருக்கும் ப்ராபல்யம் இருந்த அளவு சேரர்களுக்கு இல்லை என்பதற்கு காரணம் இருக்கிறது.
பாண்டியர்கள்தான் கடற்படையில் முதலாம் இடம். சமீபத்தில் பாஹுபலி படத்தில் காட்டினார்களே மரத்தை வளைத்து கட்டி அதில் இருந்துகொண்டு மதில் சுவர் தாண்டி கோட்டை உள்ளே பறந்து போவார்களே..அது காந்தளூர் சாலையிலிருந்து எடுக்கப்பட்ட யுக்திதான். சோழர்கள் அப்படிதான் தொலைதூரத்தில் எதிரிகளின் கப்பல் வருவது தெரிந்தால் பனைமரத்தில் தீ பந்துகளை, நெருப்பு பந்துகளை இரும்பு பந்துகளை கட்டி மரத்தை பூமியில் பிணைத்திருப்பார்கள். கப்பல் அருகில் வரும்போது கயிற்றை அறுத்து விடுவார்கள்.பனைமரம் நிமிரும்போது அதில் உச்சியில் கட்டி இருக்கும் இரும்பு தீப்பந்து பறந்துபோய் கப்பலைத் தாக்கும்.
சோழர்கள் போர்க்கலையில் பெரும் பங்காற்றி கடாரம், ஸ்ரீவிஜயம் எல்லாம் வென்றார்கள். அவர்களால் தமிழ்நாட்டுக்கு புகழ் கிடைத்தது. அதனாலும் சோழர்கள் பிரபலமாக இருக்கிறார்கள். மேலும் தஞ்சை பெரிய கோவில் போன்ற கட்டிடக்கலை பெருமை எல்லாமும் சோழர்களுக்கு இருக்கிறது.
பாண்டியர்கள் இலக்கியத்துக்கும், கல்விக்கும் அவை மேம்பட செய்தார்கள். சோழர்கள் போருக்கும் வளமைக்கு காரணம். எனவே இவர்கள் இருவரும் தமிழ் நாட்டில் மக்கள் மத்தியில் பெயர் பெற்றிருக்கிறார்கள்.
சேரர்களை எடுத்துக் கொண்டோமானால், சேரநாடு மலைப்பிரதேசம். மலைப்பாங்கான பகுதி, குறிஞ்சிப் பகுதி. அகத்தியர் போன்ற முனிவர்கள் தவம் செய்த இடம். சேரர்களுக்கு எதையும் மேன்மையடைய செய்தார்கள் என்பதற்கு வாய்ப்பில்லை. அவர்கள் வில்வித்தையிலும், வேட்டையாடுவதிலும்தான் கவனம் செலுத்தினார்கள். கல்வியறிவிலோ, நாட்டை வளமைப் படுத்துவதிலோ சேரர்கள் கவனம் செலுத்தவில்லை. எல்லாமே மலைப்பகுதி, வயநாடு போலதான் இருக்கும்.
பிளாக் மேஜிக்கில் சேரர்கள் வல்லுநர்ககளாக இருந்தார்கள். வான சாத்திரத்தில் வல்லுநர்கள். ஒரு பிளானட்டோரியம் கூட கட்டி இருக்கிறார்கள். அவர்கள் வெளியாட்கள் பற்றி கவலைப்படாமல் அவர்களுக்குள்ளேயே வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். ஒரே ஒருமுறைதான் சேரர்கள், பாண்டியர்களோடு கைகோர்த்து திருப்புறம்பியம் போரில் பல்லவர்கள், சோழர்களுக்கு எதிராக போரில் ஈடுபட்டார்கள்.
ஏனெனில் பல்லவர்களும் சோழர்களும் கூட்டணி அமைத்ததால், சேரர்கள் பாண்டியர்களோடு கூட்டணி சேர்ந்தார்கள். மற்றபடி அவர்கள் தாங்கள் உண்டு தங்கள் பகுதி உண்டு என்று வெளியில் எங்கும் வரவில்லை. தமிழ்நாட்டின் நிலப்பகுதி, டெல்டா கல்வி போன்றவற்றில் சேரர்களின் பங்களிப்பு எதுவும் இல்லை. ஒரே ஒரு ஆழ்வார் பிறந்தார். வைணவத்துக்கு அவர் சேவை செய்தார். மற்றபடி மதரீதியாகவும் அவர்கள் எதுவும் தமிஃழ்நாட்டுக்கு பங்களிக்கவில்லை. போர் கூட அவர்களுக்குள்ளேயே மோதிக் கொண்டார்கள். வஞ்சி சேரத்துக்கும், கொங்கு சேரத்துக்கும் ஆகாது. எனவே அவர்கள் மலையை விட்டு இறங்கி வந்து வயல்வெளி போன்ற நிலப்பகுதிகளுக்கெல்லாம் ஒன்றும் செய்யவில்லை. அதனால் சேரர்களுக்கு தமிழ் நாட்டில் அவ்வளவு மவுசு கிடையாது!
அதுதான் அவர்கள் சோழ, பாண்டியர் அளவு பிரபலமாக இல்லாததற்கு காரணம். சுதந்திரத்துக்கு அப்புறம்தான் மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்டன? சேர சோழ பாண்டியர் காலத்துக்கு அப்புறம் வெள்ளைக்காரன் காலத்துக்கு முன்னாடி தென் இந்தியாவின் மூன்று பக்கம் கரை இருப்பதால் கரைநாடு என்றுதான் கூப்பிடுவார்கள். அந்த கரைநாடுதான் கர்னாட்டிக் என்று மாறியது. வெள்ளைக்காரனுக்கு கரைநாடு என்று சொல்ல வராததால் கர்னாட்டிக் என்றான். அதுவே கர்நாடகா என்று ஆகிவிட்டது. ஆக மொத்தத்தில் தமிழ்நாட்டுக்கு சேரர்களின்பங்களிப்பு கம்மி. அதனால்தான் அவர்கள் பிரபலமில்லை. சோழர்கள் போர்க்கலையில், பாண்டியர் கல்வியிலும் பெரிய பெயர் பெற்று விளங்கினார்கள்.
அடுத்ததாக, நான் சேரர், சோழர், பழல்வர், பாண்டியன் ஆகிய நால்வருக்கும் பொதுவானவன். நான் பல்லவ நாட்டைச் சேர்ந்தவன். சோழர் சரித்திரம், பாண்டியர் சரித்திரம் எலலவற்றையும் Follow செய்து கொண்டிருக்கிறேன்! ஒரு சரித்திர எழுத்தாளர் நான் இந்த பக்கம் என்று சொல்லக் கூடாது. எப்படி ஒரு பத்திரிகையாளர் நான் இந்தக் கட்சி என்று சொல்லக் கூடாதோ அப்படிதான் ஒரு சரித்திர எழுத்தாளனாக நான் பல்லவ, சோழ, சேர பாண்டியர்களில் நான் இவர்களைதான் சப்போர்ட் செய்கிறேன் என்று சொல்லக் கூடாது. அதுதான் உண்மை. அதனால் நான் எல்லோருக்கும் பொதுவானவன்.
கேள்வி : நீங்கள் சோழர்களை அதிகம் விரும்புகிறீர்கள் என்றே என் மனதில் படும். இருக்கலாம். நீங்கள் சொல்வது போல் அதை சொல்ல முடியாது என்று சொல்லலாம். எல்லோருக்கும் பொது என்று சொன்னாலும் பெரும்பாலும் சோழர்கதைகள் பக்கம்தான் மனம் செல்கிறது. அது ஒருபுறம் இருக்க, இதில் நீங்கள் "எப்படி ஒரு பத்திரிகையாளர் நான் இந்தக் கட்சி என்று சொல்லக் கூடாதோ" என்று சொல்லி இருக்கிறீர்கள். உண்மையில் உங்களிடம் முதலில் நான் கேட்க நினைத்த கேள்வி அந்த பத்திரிகை சம்பந்தப்பட்டதுதான். அது ஒருபக்கச் சார்பாக இருக்கலாமா? அப்படி இருக்கிறதே, இது நியாயமா? என்றுதான் கேட்க நினைத்தேன். அப்புறம் அதை விட்டு விட்டு இந்தக் கேள்வியைக் கேட்டேன்.
[ இந்த என் கேள்வியில் 'அந்த'ப் பத்திரிகை சம்பந்தப்பட்டதுதான்' என்று வார்த்தை விட்டிருந்தேன். அது ஒரு பக்கச் சார்பாக இருக்கிறதே என்றும் தொடர்ந்திருந்தேன். நான் கேட்டபோது பொதுவாக 'பத்திரிகை சம்பந்தப் பட்டது'தான் என்று கேட்டிருக்க வேண்டும். என் தவறு. 'அந்த' என்கிற விகுதி சேர்ந்ததால் திரு காலச்சக்கரம் நரசிம்மா தான் வேலை செய்த பத்திரிகை என்ற அர்த்தம் அதில் வருவதால் அதற்கு பதில் அளித்திருந்தார். ஆனாலும் ஒரு பொதுவான பார்வையில் பத்திரிகைகளின் கடமை என்ன என்றும் சொல்லி விட்டார்.]
பதில் : நான் அந்தப் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக இருந்தாலும் நான் என் மனசாட்சிப்படிதான் நடந்து கொண்டேன். எந்த கட்சியின் சார்பாகவும் நான் நடந்து கொள்ள்வில்லை. அவர்கள் நிலை அப்படி. ஆனால் நான் ஒரு டிபார்ட்மென்ட் தலைவராக என் கொள்கைப்படி பிள்ளையார் சதுர்த்தி, தீபாவளி பண்டிகை எல்லாம் துறையில் கொண்டாடுவோம். என்னுடைய உரிமைகளில் அவர்கள் தலையிடவில்லை. நானும் என் கொள்கையை விட்டுக் கொடுக்கவில்லை. அந்த செய்தி நிறுவனத்தின் கொள்கை என் கொள்கையில்லை என்பது போலவே என் கொள்கை செய்தித்தாளின் கொள்கையும் இல்லை. இரண்டுக்கும் நடுவில் ஒரு பாலன்ஸ் இருந்தது. அதனால்தான் என்னால் எல்லா இடத்திலும் சுதந்திரமாக எழுத முடிகிறது..
============================================================================================
படமும் பதமும்.. நெல்லை ஸ்பெஷல்...

அங்கிருந்து (எங்கிருந்து?) பெங்களூர் விமான நிலையம் வந்தால், அங்கு, நாங்கள் என்ன தில்லிக்குச் சளைத்தவர்களா? இங்கு சந்தன மரங்கள் அதிகம். அதனால் மரத்திலேயே யானைக் கூட்டத்தைச் செய்துவைத்துள்ளோம் என்பதுபோல, விமான நிலையத்தில் பார்த்தேன். மிக அழகாக இருந்தன.
இந்த முறை ஸ்ரீ கிருஷ்ண அனுபவம் என்ற யாத்திரை சென்றிருந்தபோது, மாடு மேய்க்கும் சிறுவனாக கிருஷ்ணரும் பலராமரும் சறுக்கு விளையாடிய இடம் என்று பாறையில் சறுக்குபோல அமைந்திருந்த இடத்தைக் காண்பித்தார்கள். அந்த இடத்தின் அருகில் இருந்த வீட்டில் மிகப் பெரிய எருமையைப் பார்த்தேன். கறுப்பு நிறத்துடன் பளபளவென இருந்தது (மடுவுமே மிகவும் பெரிது)
இன்னொரு இடத்தில் யசோதை குழந்தைகளைக் குளிப்பாட்டிய குளம் என்று ஒன்றைப் பார்த்தோம். அப்போதே நல்ல மழை. அந்தக் குளத்தின் படிக்கட்டின் அருகே மழையைப் பொருட்படுத்தாமல் நின்றுகொண்டிருந்த பிரம்மாண்டமான பொலிகாளை. அதன் வசீகரம் என்னை ஈர்த்தது. அருகில் சென்றும் படமெடுத்தேன்.
வடக்கே கோதுமை வயல்கள் அதிகம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த வயல்களில் அல்லது வீட்டின் அருகாமையில் மேலே இருக்கும் குடிசை போன்று அழகிய அமைப்பைப் பார்த்தேன். வயலுக்கு உரமாக சாணியைச் சேகரித்து அதன் மீது மழை கரைத்துவிடாமல் இத்தகைய குடிசை போன்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

சிறிது சிதைந்திருந்த அத்தகைய பகுதியில் சாணிக்கரைசல் தெரிந்தது.
=========================================================================================
கே ஜி ஜி பக்கம்
கேஜிஜி கையில் பிடித்த்துக் கொண்டு இருப்பது சென்னையில் அவர் வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்துள்ள வில்வ மரத்தின் இலைகளை. சாரதாரணமாக வில்வ மரம் வீட்டில் வளர்வது அபூர்வம்.
கே ஜி ஜி சென்னை பக்கம் வந்து, அச்சரப்பாக்கம் முதல் செம்பரப்பாக்கம் வரை அலையாக அலைந்து கொண்டு இருப்பதால் பிளாக் பக்கம் வர இயலவில்லை.
சென்னையின் செப்டம்பர் மாதத்து வெயில் திகைக்க வைக்கிறது..
இப்போவே இப்படி இருந்தால் கோடை காலத்தில் எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்று கற்பனை செய்து கூட பார்க்க இயலவில்லை.
கிட்டத் தட்ட ஏழரை ஆண்டுகளுக்கு பிறகு சென்னை வந்து உறவினர்களையும், நண்பர்களையும் பார்த்ததில் மிகவும் திருப்தி.
பள்ளி கால நண்பர், நாகை நண்பருடன்
லேப்டாப் என்னுடன் கொண்டு வராததாலும் மற்றும் இணைய கனக்ஷன் இப்பொழுது நான் இருக்கும் வீட்டில் கிடையாது என்பதாலும் என்னால் இயல்பான நடவடிக்கைகளை கம்ப்யூட்டர் மூலம் மேற்கொள்ள இயலவில்லை.
டெனண்ட் விட்டுச் சென்ற வீட்டை ஒழுங்கு படுத்துவதிலும், வேறு சில பெண்டிங் வேலைகளை முடிப்பதும் என்று பொழுது போகிறது. எல்லோரும் வீட்டில் இருக்கும் நாளாக இருக்க வேண்டும் என்று உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சனி ஞாயிறில் விஜயம் செய்கிறேன்.
இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஸ்ரீராம் தான் புதன்கிழமை பதிவுகளை மேற்பார்வையிட்டு வெளியிட வேண்டும்.
முதல் கேள்வி மிகவும் சிறப்பான கேள்வி என்றால் அதற்கான ராதா அவர்களின் பதிலை ரொம்பவே ரசித்தேன். உளவியல் ரீதியான அழகான பதில்.
பதிலளிநீக்கு//ஆனால் இதயம், அதாவது எமோஷனலா பார்க்கும்போது ஒரு விஷயம் தப்பாவே இருந்தாலும், அது நம்மவர்கள் என்று இருந்தால், 'பரவாயில்லை..சரியாகி விடும், பண்ணலாம்' என்று சொல்லும்.//
உண்மை. குறிப்பாக இது பெரும்பாலான திருமணங்களில் நடக்கும் ஒன்று.
கீதா
வாங்க கீதா... திருமணங்களிலா? எப்படி சொல்கிறீர்கள்.
நீக்குஆமாம், இப்ப ஒரு பையனுக்கோ பெண்ணுக்கோ கொஞ்சம் மனசு சரியில்லாமல், திருமண வாழ்க்கைக்கு பக்குவப்படாமல் இருந்தாலும் கூட , இல்லை திருமணத்தில் அவ்வளவு நாட்டம் இல்லாமல் இருந்தாலோ, எல்லாம் கல்யாணம் ஆனா சரியாகிடும்னு பண்ணி வைப்பாங்களே அதுக்கப்புறம் கஷ்டப்படுவது யாரு?
நீக்குஅதுக்கப்புறம் குழந்தை பிறந்தா எல்லாம் சரியாகிடும்னு சொல்வாங்களே அப்ப அக்குழந்தை என்ன தப்பு பண்ணிச்சு? வந்து கஷ்டப்பட?
இது ஒரு ஸ்டுப்பிட் விஷயமாகப் பார்க்கிறேன். எல்லாம் சரியாகிடும் கல்யாணம் ஆனா என்று சொல்வது. அது எப்போதும் நடப்பதில்லை.ன். ஆராய்ந்து செய்ய வேண்டிய ஒன்று.
இது போல, அதாவது ஆண் எல்லாம் சரியாகிடுவான் கட்டி வைச்சா குடிக்க மாட்டான் திருந்திடுவான் பொறுப்பா இருப்பான் இப்படிச் சொல்வது. அது போல பொண்ணு என்ன இப்ப சமைக்கல,,,வீட்டு வேலை செய்யலை கல்யாணம் ஆனா எல்லாம் செய்வா பொறுப்பா இருப்பா என்று குத்துமதிப்பா சொல்லிச் செய்வது..
குறிப்பாக இதில் பாதிக்கப்படுவது பெரும்பான்மை பெண்கள். கொஞ்சம் ஆண்கள்.
இதை பாசிட்டிவ் எண்ணம் என்று சொல்லமாட்டேன் அதாவது சரியாகிடும் என்று சொல்வதை
கீதா
வாழ்க்கையில் ரிஸ்க் எடுப்பதும் இப்படித்தான் அந்த ரிஸ்க் சில சமயங்களில் பயன் கொடுக்கும் சில சமயம் அடிமட்டத்திற்குத் தள்ளிவிடும்.
நீக்குநேர்மறையாக இருப்பது தவறில்லை ஆனால் அதையும் ஆய்ந்து செய்ய வேண்டும். நல்லதே நடக்கும்னு நல்லது செய்யறேன்னு நேர்மறை எண்ணத்தோடு தொழில் தொடங்குவாங்க...ஆனால் டபால்னு முடங்கும். குடும்பம் கஷ்டப்படும்...எனவே எதைச் செய்தாலும் நமக்கு அதற்கான திறன் இருக்கானு கொஞ்சம் புத்தியை பயன்படுத்த வேண்டும் இங்கு எமோஷனக் ஹைஜாகிங்க்.
கீதா
ஓகே.... ஓகே.... ஓகே... cool... cool .... cool .. இப்போ ஓரளவு புரிகிறது.
நீக்குஹாஹாஹாஹா ஸ்ரீராம், நான் கூல்! இப்ப கூட ஆடிக் கொண்டே பாடிக் கொண்டே சமைக்கிறேன் ஹிஹிஹிஹி
நீக்குஇங்கு எமோஷனக் ஹைஜாகிங்க்.//
என்று சொன்னது எனக்கில்லை. முடிவு எடுப்பவங்களுக்கு.
இந்தக் கருத்துகளை ஏன் சொன்னேன் என்றால் மக்கள் இந்த பாயின்ட்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக.
கீதா
ஆம். எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதால்தான் விளக்கம் கேட்டேன். விளக்கமாக சொல்லக் கேட்டேன். நன்றி கீதா.
நீக்குஎப்பவுமே நம்ம மனசுக்கும் இதயத்துக்கும் நடக்கும் சண்டைதான். வெளிக்காரணம் எதுவும் இல்லை//
பதிலளிநீக்குஇதை intelligence/wisdom ற்கும் மனதிற்கும் அதாவது உணர்வு பூர்வமான மனதிற்கும் இடைப்பட்ட யுத்தம் எனவும் சொல்லலாம்...a dynamic interplay where emotions can either hinder or enhance rational thinking. எமொஷனல் ஹைஜாக்கிங்க் என்றும்
EQ ரொம்ப முக்கியம்.
கீதா
உண்மை. கடப்பதற்கு சிரமமான இடம்.
நீக்குஅவர் அண்ணனின் கேள்வியும் அவர் பதிலும் சூப்பர். இதுதான் மனப்போராட்டம். நம் மனம் இப்படி எல்லாம் சிக்கித் தவிப்பதால்தான் நாமே நம் பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கிறோம்.
பதிலளிநீக்குBalanced mind கிடைப்பது மிக மிகச் சிரமம். அதை நோக்கிப் பயணித்தால் முயற்சி செய்தால் நல்லாதான் இருக்கும்.
ஸ்ரீராம், ராதா அவங்ககிட்ட சொல்லுங்க ரொம்ப அழகான பதில் நான் ரசித்தேன் என்று.
கீதா
எல்லோருக்கும் அந்த Balanced mind வாய்ப்பதில்லை கீதா.. வாய்க்கப் பெற்றவர்கள் வரம் பெற்றவர்கள்.
நீக்குஅதேதான் ஸ்ரீராம். வாய்க்கப்பெற்றால் வரம்.
நீக்குகீதா
ஹேமா அவர்களின் திகில் அருள் அனுபவங்கள் நன்று.
பதிலளிநீக்குகீதா
வியப்பு, இன்னொரு வார்த்தை கைக்கு கிடைக்க மாட்டேன் என்கிறது.
நீக்குஆமாம் ஸ்ரீராம் வியப்பு...
நீக்குகீதா
மெய் சிலிர்த்தது என்றா?
நீக்குகீதா
சொல்லலாம்.
நீக்குநரசிம்மா அவர்களிடம் முதல் கேள்வி நல்ல கேள்வி அதற்கான அவர் பதில் சூப்பர் அதுவும் கடைசில அந்தப் பாரா நச் பதில்.
பதிலளிநீக்குகீதா
ஆம். அவர் பொது என்று சொன்னாலும் அவர் மனம் சோழர்களின் பக்கம் அதிகம் என்று எனக்குத் தோன்றும்!
நீக்குஅட!
நீக்குஅட! நான் சொல்ல நினைத்தது இது சொல்லிட்டீங்க
நீக்குகீதா
:))
நீக்குநரசிம்மா பாண்டியர்களைப் பத்திக்கூட அதிகம் எழுதலை. பல்லவர்கள், சோழர்கள், ஹொய்சளர்கள் பத்தித் தான் எழுதி இருக்கார், நான் படிச்ச வரை.
நீக்குசரிதான். ஆனால் அத்திமலை தேவனில் அத்தனை பேரையும் கவர் செய்து இருப்பார்.
நீக்குஅவர் பணியாற்றிய பத்திரிகையில் அவர் பாலன்ஸ் மெயின்டெய்ன் செய்ததும் ஆச்சரியம். இது எல்லாருக்கும் முடியாத ஒன்று. எல்லாருக்கும் நடக்குமா என்பதும் கேள்வி
பதிலளிநீக்குகீதா
சிரமம். ஆனாலும் நடத்திக் காட்டி இருக்கிறார். இதை அவர் ஏற்கனவே முகநூலில் சொல்லி இருக்கிறார்.
நீக்குவித்தியாசமான புதன் ஸ்ரீராம். சூப்பர் நல்லா பண்ணியிருக்கீங்க
பதிலளிநீக்குபடங்களுக்குப் பின்னர் வரேன்.
கீதா
நன்றி கீதா. முதல் வரவுக்கும், முத்தான கருத்துகளுக்கும்.
நீக்குதிங்கக் கிழமை நிலைய வித்துவான் பதவியிலிருந்து விடுமுறை எனச் சந்தோஷப்பட்டால் இப்படி கௌதமன் சார் கவுத்துட்டாரே. சந்திராஷ்டம்ம் இருக்கான்னு ஶ்ரீராம் செக் பண்ணவேண்டியதுதான்.
நீக்கு:(( :))
நீக்குராதா சுரேஷ் அவர்கள் தீவிரமாக யோசிப்பவர் என்று புரிகிறது. பதில் இன்னும் கொஞ்சம் சுருக்கமாக இருந்திருக்கலாம்.
பதிலளிநீக்குஹேமாவின் திகில் அனுபவங்கள் பகீர் என்கிறது. சிலர் பெண்ணின் அல்லது பிள்ளையின் ஃபோட்டோ அனுப்புங்கள் என்றால் க்ரூப் ஃபோட்டோவை அனுப்புவார்கள் அது போல அந்த கும்பலில் யார் ஹேமா என்று நாங்கள் கண்டுபிடிக்க வேண்டுமா?
காலசக்ரம் நரசிம்மா எந்த பத்திரிகையில் பணியாற்றினார் என்பது ஊர் அறிந்த ரகசியம், அதை வெளிப்படையாக சொன்னால் என்ன?
//நான் ஒரு டிபார்ட்மென்ட் தலைவராக என் கொள்கைப்படி பிள்ளையார் சதுர்த்தி, தீபாவளி பண்டிகை எல்லாம் துறையில் கொண்டாடுவோம். என்னுடைய உரிமைகளில் அவர்கள் தலையிடவில்லை. // இது நல்ல விஷயம்தானே?
வாங்க பானு அக்கா.,,,
நீக்கு// பதில் இன்னும் கொஞ்சம் சுருக்கமாக இருந்திருக்கலாம்.//
அவர் சுருக்கமாகத்தான் கொடுத்தார். சொல்லவரும் விஷயம் இந்த அளவுக்காவது இருந்தால்தான் படிப்பவர்களுக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியும் என்று நினைத்து சற்று விளக்கமாகக் கேட்டேன்!
// அது போல அந்த கும்பலில் யார் ஹேமா என்று நாங்கள் கண்டுபிடிக்க வேண்டுமா?//
ஆம். அது ஒரு ட்ரிக்தான்! வேண்டுமென்றே செய்யப்படவில்லை எனினும்...
//ஊர் அறிந்த ரகசியம்,//
என்னும்போது வெளிப்படையாகச் சொல்வானேன்?! திரும்பத்திரும்ப சொல்ல வேண்டுமா என்ன!
// இது நல்ல விஷயம்தானே?//
அதைதான் அவரும் சொல்லி இருக்கிறார்.
இன்னும் சற்று நேரத்தில் ஹரிகேஸநல்லூர் வெங்கட்ராமன் எனக்கு இன்று சந்திராஷடமமா? என்ரு தெரிவிப்பார். வார்த்தைகள் சற்று வேகமாக வந்து விழுந்திருக்கின்றன.
பதிலளிநீக்குஎனக்கும் சந்திராஷ்டமம்தானோ! ஆனால் நான் அதை எல்லாம் பார்ப்பதில்லை. வாங்கி கட்டிக் கொள்ள வேண்டியதுதான்!
நீக்குமுக்திநாத், பத்ரி போன்ற தலங்களைச் சேவிப்பதற்கும் பத்திரமாகத் திரும்பி வருவதற்குமே கொடுப்பினை வேண்டும். நாங்கள் இரண்டு முறை (ஓரிரு மாதங்கள் முன்பு சென்றது உட்பட) சென்று நல்ல தரிசனம் செய்திருக்கிறோம்.
பதிலளிநீக்குஇந்த இரண்டு பிரயாணங்களும் செலவு பிடிப்பவை. சமீபத்தில் (ஒரு வாரம் சில நாட்கள் முன்பு) நாங்கள் கிருஷ்ண அனுபவத்திற்காக மதுரா, விருந்தாவன், கோகுலம், கோவர்தன், குருக்ஷேத்திரம் சென்றபோது இன்னொரு 40 பேர்கள் கொண்ட குழு, நான்குமாத்த் திட்டமிடலுக்குப்பின் பஞ்ச பத்ரி யாத்திரைக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். ஜோஷிமட்டிற்குப் பிறகு கடும் நிலச் சரிவுகளால் பத்ரி செல்லும் பாதை அடைக்கப்பட்டதால் பத்ரி செல்லாமல் திரும்பினார்கள். முக்தி நாத்தில் சில (ஆறு மாதங்களுக்கு மேல்) மாதங்கள் முன்பு நடந்த சம்பவம் கேள்விப்பட்டேன். அதைவைத்து கதை எழுதி எபிக்கு அனுப்பணும் என நினைத்திருக்கிறேன்.
வாங்க நெல்லை.. இந்தமுறை நீங்களும் ஹேமாவும் ஒரே சமயத்தில் வடநாட்டு யாத்திரையில் இருந்திருக்கிறீர்கள்.
நீக்குபத்ரிநாத் யாத்திரையில் எங்கள் வண்டி (வான் தான்) பள்ளத்தில் இறங்கிக் கீழே விழும்போலத் தொங்கிக் கொண்டிருந்தது. அதுவும் ஒரு சக்கரம் மட்டும் பாதையில், பாக்கி 3 சக்கரங்களும் பள்ளத்தில். இது குறித்து முன்னரே எழுதி இருந்த நினைவு. எங்களை எல்லாம் பெட்டி, படுக்கையோடு இறங்கச் சொல்லி நடந்தே எதிர்ப்புறம் மலை ஏறிக் கொண்டிருந்த இன்னொரு வானில் ஏறச் சொல்லி, எங்க வேனை மீட்டதற்குப் பின்னர் அந்தப் பிரயாணிகளை எங்க வான் ஏற்றிக் கொண்டு திரும்ப மலை ஏறும் என்றனர். நாங்க ஏறின வேன் பல கிலோ மீட்டர் ரிவர்சிலேயே போய்ப் பின்னர் அங்கே ஒரு கிராமம் பிரியும்போது அந்த இடத்தில் யூ டர்ன் அடிச்சுத் திரும்பிக்கொண்டு மலை இறக்கப் பாதையில் இறங்க ஆரம்பிச்சது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் உட்கார்ந்திருந்தோம். கயிலை யாத்திரையின் போது கேட்கவே வேண்டாம். வண்டி பள்ளத்தில் விழுந்தது. சக்கரம் கழண்டு போச்சு. ஸ்டீல் ரேடியல் கழண்டு போச்சு எனத் திரும்பும்போது எங்களுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள். ஆனால் வண்டி ஓட்டுநர்கள் ஒற்றுமை அலாதியானது. ஒரு வண்டி நின்றால் அனைவரும் அவங்க அவங்க வண்டியை நிறுத்திவிட்டு நின்று போன வண்டியைச் சரிப்படுத்தி அது கிளம்பின பின்னாலேயே அவங்க கிளம்புவாங்க.
நீக்குஹேமா யார் என்பதைக்கண்டு பிடிப்பது கஷ்டம் இல்லை. அந்தப் படத்தில் ஹேமா கணவருக்குப் பக்கம் நிற்கும் பெண் பரிச்சயமானவராய்த் தெரிகிறார்.
நீக்குஸ்ரீரங்கம் திருவானைக்கா தானே? கண்ணில் பட்டிருப்பார்கள்.
நீக்குஹேமா அவர்களுக்கு (கணவரும் கூட வந்திருந்தாரா?) தரிசனம் வாய்த்ததும் நல்லபடியாக ஊர் வந்து சேர்ந்ததும் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅவர்கள் இருவரும் நன்றாகப் பழக்க்கூடியவர்கள். ஶ்ரீராம் மகன் திருமணத்தில் சந்தித்தோம். அதன் பிறகு திருச்சி செல்லும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அவர் வீட்டிற்குச் செல்ல நினைத்திருக்கிறோம் இருவருக்கும் சௌகரியப்பட்டால்.
அவர் குறிப்பிட்ட தேதிகளில் யமுனைக் கரையில்தான் எங்கள் யாத்திரை.
ஆம். நாணாவும் கூட சென்று வந்தார்தான். முன்னரே இந்த யாத்திரை குறித்து முன்பதிவு செய்யும்போது என்னையும் அழைத்தார். நான்தான்...!
நீக்குவந்த வாய்ப்பை சாக்குத் தேடி வீணாக்கிவிட்டீர்களே. வீடு மனைவி மக்கள் எப்போதும் நம் கூடவே இருக்கும். மாறுதலுக்குப் பயணித்திருக்கலாம்.
நீக்குஎன் கடமை... சம்சாரம் அது மின்சாரம்... உறவுகள் என்றும் வாழ்க... நூல்வேலி
நீக்குதிருப்புறம்பியம் தவிரவும் சார்ர்களுடனான போர்கள் இருந்தன. சேர்ர்கள் ஆதிக்கம் கொங்கு பகுதி வரை இருந்தன. இராஜராஜ சோழன் காலத்தில்தான் காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி, சேரநாட்டின்மீது படையெடுத்தது. பொதுவா சேர்ர்கள் அவர்கள் நிலத்தைவிட்டு வந்து தமிழக நிலங்களைப் பிடிக்கும் செயலில் ஈடுபட்டதில்லை. இன்றைய நாகர்கோயில் பகுதிகள் இயல்பாகவே சேர்ர் நிலம். நெல்லைக்கு அப்பால் பாண்டியர் நிலம் இல்லை
பதிலளிநீக்குதகவல்களுக்கு நன்றி. நான் சரித்திரத்திலும் ரொம்ப வீக்!
நீக்குசாண்டில்யன் சேரர்களைப்பற்றிக் கொஞ்சம் கொஞ்சம் விவரித்து எழுதி இருக்கார்னு நினைக்கிறேன்.
நீக்குகேஜிஜி, நான் தில்லி விமான நிலையத்தில் எடுத்த யானை படங்களை அனுப்ப மறந்துவிட்டார்.
பதிலளிநீக்குஅடடா....
நீக்குAttention KGG... Please note..
மனதின் சிக்கல்களை நன்கு கூறியிருக்கிறார் ராதா செரேஷ். அப்படிச் செய்திருந்தால், இவரிடம் காட்டியிருந்தால், இந்த டயக்னிஷனை முன்பே செய்திருந்தால், இந்த ஹாஸ்பிடலுக்குக் கூட்டிச் சென்றிருந்தால்..... எனப் பல கேள்விகள் முளைக்கும். ஆனாலும் நடந்ததை மாற்ற இயலுமா? இருப்பவர்களை நொந்து என்ன பயன் என நினைத்து அமைதியாகிவிடுவோம்.
பதிலளிநீக்குஅதேதான்... அப்படி நிகழ்வுகளை மாற்ற முடிந்தால் அப்புறம் என்ன ஆகும்? ஆனாலும் விதி வேறுவழி செயல்படும்!
நீக்குபெங்களூர் விமான நிலையம் மிக அழகாகப் பண்ணியிருக்காங்க யுனெஸ்கோ பாராட்டிச் சொல்லியிருந்ததை பெங்களூர் விமான நிலையம் தொடங்கிய சமயம் போக நேர்ந்தப்ப அப்ப யானைகள் இல்லை வேறு அழகானவை இருந்தன அருவி போன்று தோட்டம் போன்று எல்லாம் அதை வீடியோ படங்கள் எடுத்து பதிவும் போட்டேன்.
பதிலளிநீக்குயானைகள் ரொம்ப அழகா இருக்கு நெல்லை. அடுத்த முறை போகும் வாய்ப்பு கிடைத்தால் பார்க்க வேண்டும் எங்கு இருக்குன்னு
கீதா
விமான நிலையமா? இப்போதைக்கு நான் போகும் வாய்ப்பு இல்லை! இப்பல்லாம் ரயில்வே ஸ்டேஷன் போகும் வாய்ப்பே குறைந்து வருகிறதுதான்.
நீக்குஇந்த பத்திரிகை சம்பந்தமாக நீங்கள் கேள்வி கேட்டதை ரசிக்கவில்லை. நரசிம்மா அவர்கள் விறுவிறுப்பாக எழுதும் சரித்திர நாவலாசிரியர். அவருடைய அரிஞ்சயாவைப் படித்துக்கொண்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஇப்போதுதான் இதைப் படிக்கிறீர்களா?!! அத்திமலை தேவன் படித்திருக்கிறீர்களா? ஐந்து பாகம்.
நீக்குஎன் முக்கியக் கேள்வி சரித்திரம் சம்பந்தப்பட்டதுதானே? மேலும் பத்திரிகை சம்பந்தமாக நான் கேட்க நினைத்தது அவர் பணியாற்றிய பத்திரிகை பற்றி அல்ல. பொதுவாக பத்திரிகைகளின் நடுநிலை பற்றி.. பதிவிலேயே சொல்லி இருக்கிறேன்.
இந்து பத்திரிக்கையை ஸ்தாபித்தவர்கள் இப்போது இருந்திருந்தால் பத்திரிகையைக் கெடுத்த ராமின்மீது கொலைவெறி ஆகியிருப்பார்கள். இந்து பெயரை வைத்துக்கொண்டு தேசவிரோதமாகச் செயல்படும் பத்திரிகையாக ராம் அவர் கையில் வந்தவுடன் மாற்றிவிட்டார். விகடன் ஶ்ரீநிவாசன் மாத்திரம் என்ன பண்ணினார்? அவரும் அதைத்தான் செய்திருக்கிறார்.
பதிலளிநீக்குபத்திரிகைகளின் ஆரம்ப கால நிலைகளோடு இப்போதைய நிலையை ஒப்பிட முடியாது என்று நினைக்கிறேன். பணம் படைத்தவர்கள் பாக்கியசாலிகள். எதையும் விலைகொடுத்து வாங்கி விடுகிறார்கள். கலிகாலம்.
நீக்குஅந்தக் குடுவை போன்ற கூடாரங்கள் கோதுமை வயல்கள் அருகில் வீட்டில் அழகு. பார்த்திருக்கிறேன். இப்படியானதை.
பதிலளிநீக்குமழை செமையா பெய்திருக்கு போல வயல்கள் எல்லாம் தண்ணீர் நிரம்பி இருக்கிறதே.
கீதா
மழை பெய்து ஓய்ந்தபின் கண்களுக்கு தெரியும் காட்சி எப்போதுமே ரசிக்கக் கூடியது.
நீக்குநாங்கள் சென்றிருந்தபோது ஆங்காங்கே நல்ல மழை. விருந்தாவனத்தில் மழையில் ரோடு தெரியாத தண்ணீரில் நடந்தோம். நல்ல வேளை, யாத்திரையை பாதிக்கவில்லை.
நீக்குஉங்கள் இந்த கமெண்ட் என்னை "ப்ருந்தாவனத்துக்கு வருகின்றேன்" பாடலை ஒருமுறை கேட்டு வரச் செய்தது!
நீக்குஉத்திரப்பிரதேசம், பிஹாரில் நெல்லும் பயிரிடுவார்கள். அதிலும் கயா செல்லும் வழி நெடுகிலும் நெல் வயல்களை நிறையப் பார்க்கலாம்.
நீக்குஒருமுறைதான் சென்று வந்ததால் என்னால் நினைவுப்படுத்திக் கொள்ள முடியவில்லை
நீக்குவடக்கே எருமைகளும் சரி மாடுகளும் சரி நல்ல பெரிதாக, வளமாக இருப்பதைப் பார்க்கலாம் பெரும்பாலும்.
பதிலளிநீக்குபடங்கள் அழகா இருக்கு
கீதா
சின்ன வயதில் நண்பர்களுடன் பேசும்போது அமெரிக்காவில் மாடுகள் வளப்பமான இருக்கும். நிறைய பால் கறக்கும். யாரும் பால் கறப்பதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். மடிநிரம்பி பால் தானே சிந்தி சாலைகளில் பனி இருப்பதால் அவை கெட்டியாகி அப்படியே எடுத்து சாப்பிடலாம் போல இருக்கும், சாலைகளும் அவ்வளவு சுத்தம் என்றெல்லாம் கதை கேள்விப்பட்டு பேசிக்கொண்டிருப்போம். தெரியாத /பார்க்காத விஷயங்கள் பற்றி கட்டப்படும் கதைகளுக்கு குறைவா என்ன!
நீக்குராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பசு மாடுகளின் மடியே பெரிதாக இருக்கும். வாளியில் தான் பால் கறப்பார்கள். நாங்க பெரும்பாலும்பசும்பாலே வாங்குவோம். அதுக்கே வெண்ணெய் நிறைய வரும். இங்கே ஸ்ரீரங்கத்திலும் பசும்பால் தான். வீட்டில் எடுத்த வெண்ணெய் தான். மாறாக இங்கே அமுல் நெய் வாங்கறாங்க. வாசனை வராப்போல் இருக்கு. :)
நீக்குஅந்த ஊர் மக்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று தெரிகிறது
நீக்குகூம்புகூடாரங்கள் அழகு.
பதிலளிநீக்குகீதா
கௌ அண்ணா பயணம் உறவினர் நண்பர்களைச் சந்தித்தல் நல்ல விஷயம்.
பதிலளிநீக்குவெயில் என்று சொல்றீங்க. இங்கு பெங்களூரில் இருந்துவிட்டு அங்கு வெயில் தெரியும்தான். அலைச்சல் வேலைப்பளு உடம்பையும் பார்த்துக்கோங்க.
வீட்டிலேயே வில்வமரம் ஆஹா!!! வேறு என்ன செடிகள் மரங்கள் இருக்கின்றன, கௌ அண்ணா?
படங்கள் நல்லாருக்கு
கீதா
பெங்களூரு குளுமை Vs சென்னை வெய்யில்... எனக்கென்னவோ சென்னை வெய்யில்தான் பிடிக்கிறது... ஜோராக வேர்த்துக்கொண்டு, உடம்பு முழுவதும் எப்போதும் பிசுபிசு என்று ஜாலியாக இருக்கும்.
நீக்கு//எனக்கென்னவோ சென்னை வெய்யில்தான் பிடிக்கிறது... // சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற நிலைமையா? எனக்கு சென்னையில் எப்படி இருந்தோம் என்றே இருக்கு. இப்படி முந்தைய காலங்கள் ஒவ்வொன்றையும் நினைத்து எப்படி அந்தக் கஷ்டத்திலும் வாழ்ந்தோம் என்று தோன்றும்.
நீக்குவேறு வழி? எப்போது என்னால் ஊட்டி, கொடைக்கானல், பெங்களூரு என்று எங்காவது சென்று வசிக்க முடியுமா என்ன!
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குமுருகா.. முருகா...
நீக்குவாங்க செல்வாண்ணா.. வணக்கம்.
ஒன்பது வருடங்கள் எங்கும் செல்லமுடியாமலிருந்மு, இப்போது கேஜிஜிக்கு அடிக்கடி பிரயாணம். இனி எந்த விசேஷத்துக்கும் சாக்குச் சொல்ல முடியாது. அது சரி... மலைவாசஸ்தலத்திலிருந்து சென்னை வெயிலுக்குப் போய் அலையணும்னு இருந்திருக்கே.
பதிலளிநீக்குமூன்றெழுத்தில் அவர் மூச்சிருக்கும்.. கடமை... அது கடமை...
நீக்குராதாவின் பதில் நிம்மதி அவசியமானது பகிர்ந்துள்ளார்.
பதிலளிநீக்குஹேமா திகில் சம்பவங்கள் இறைவன் கையில்தான் அனைத்தும் என பல தடவைகள் உணர்த்தியுள்ளது.
சேர,சோழ பாண்டியர் பற்றி பதில் அருமை.
படங்களும் தகவல்களும் நன்று.
நன்றி மாதேவி.
நீக்குபதிவு மிகவும் பிரமாதம். மிகவும் இரசித்துப் படித்தேன்.
பதிலளிநீக்குஇனி புதன் பதிவுகளையும் ஸ்ரீராம் வசம் ஒப்படைத்து விட்டு
நான் வாலண்டரி ரிடயர்மெண்ட் வாங்கிக் கொள்ளலாமா
என்று ஸ்ட்ராங் எண்ணம் வந்துவிட்டது.
ஆ... அம்பேல்..
நீக்கு"பொத்"
தெருவில்ஒருவர், "ஹேய்... யாரோ ஒரு பையன் மயக்கம் போட்டு விழுந்திருக்கான்... யாருன்னு பாருங்க..."
:)))
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய மாறுபட்ட புதன் பதிவு நன்றாக உள்ளது. உங்கள் கேள்விகளும், நட்புகளின் பதில்களும் அருமை. ரசித்துப் படித்தேன். எப்போதும் போல் படங்களும் அதற்குரிய விளக்கங்களும் நன்றாக உள்ளது. புதனுக்கான புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்ட துடன் அதை அழகாக செய்துள்ளீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள்.
என்ககு சிலநாட்களாக நிறைய வேலைகள். உடல்நலக்குறைவுகள், மற்றும் வீட்டில் நெட் பிரச்சனை வேறு, என சென்று விட்டது. வலைத்தளம் வரவே இயலவில்லை. மன்னிக்கவும். இன்றுதான் சிறிது தலை காட்டி உள்ளேன். மீண்டும் எப்போதோ? முடிந்த வரை இந்த மாதிரி வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன். .
வாங்க கமலா அக்கா ஆளைக் காணோமே என்று பார்த்துக் கொண்டிருந்தேன். உடல்நிலை, நெட் பிரச்சினை சீக்கிரம் சரியாகட்டும். எனக்கும் கடந்த மூன்று நாட்களாக எழ முடியாத அளவுக்கு கடும் இருமல் ,கடும் காய்ச்சல்.
பதிலளிநீக்குகமலா, ஶ்ரீராம் உடல் நலம் பெற பிராத்தனைகள்
நீக்குநெட் பிரச்சனையும் விரைவில் சரியாகட்டும்
நன்றி கோமதி அக்கா
நீக்குவந்தேன் பலமுறை. ஆனால் கமெண்ட் போட மறந்துட்டேன்.
பதிலளிநீக்குகேள்விகள் பேட்டிகளாக மாறிவிட்டது ஏனோ? நெல்லையும் பா வெ மேடமும் கேட்கவில்லையா?
Jayakumar
நெல்லை நிறைய கேள்வி கேட்டிருக்கிறார் ஜே கே சி சார்! பதிவின் ஆரம்பத்தில் சொல்லி இருப்பதை படியுங்கள். கேள்வி கேட்டு பதில் வருவதை 'கேள்வி பதில்' என்றும் கொள்ளலாம். பேட்டி என்றும் எடுத்துக் கொள்ளலாம். இதை நீங்கள் ரசிக்கவில்லையா?
பதிலளிநீக்கு//"நான் இன்னும் கூட நல்லா முயற்சி எடுத்து சிகிச்சை கொடுக்க ஏற்பாடு செய்திருந்தால் அப்பா இருந்திருப்பார் இல்லையா?" //
பதிலளிநீக்குபையரும் மைத்துனரும் சொல்லிட்டு இருப்பது. எனக்கு அந்தக் கடைசி மணிகளை விட்டுட்டேனேனு அடிச்சுக்கறது. அங்கேயே இருந்தால் பிடிச்சா வைச்சிருக்கப் போறேன்? ஆனால் உங்க மாமா பெண் ரொம்பப் பிராக்டிகல். மாமா மாதிரி. அவர் சொல்வது உண்மைதான். நமக்கு நெருங்கியவர்கள் மாபெரும் தவறுகள் செய்தாலும் அதைப் பொறுத்துக் கொண்டு அவங்களுக்கே ஆதரவாய்ப் பேசும் பலர் எங்க வீட்டிலேயே உண்டு. நான் தான் யாராக இருந்தாலும் சொல்லிட்டு வாங்கிக் கட்டிப்பேன். மறைப்பது பிடிக்காது.
வாங்க கீதா அக்கா... ஒரு வகையில் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நடப்பது நடந்தே தானே தீரும்? அதை யாரால் தடுக்க முடியும்?
நீக்குஇரண்டு வாரம் என் ராஜாங்கம்! பொறுத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே...//
பதிலளிநீக்குஉங்கள் ராஜாங்கம் நன்றாக நடக்கட்டும். வாழ்த்துகள்.
ராதா சுரேஷ் சொன்னதை படித்தவுடன் எனக்கு சாரை விட்டுவிட்டோமே என்ற நினைப்புகள் அடிக்கடி வரும் நிம்மதி இழப்பு ஏற்படும். மனது புலம்பி தவிக்கும். மற்றவர்கள் ஆறுதல் மொழிகள் அப்புறம் சரிசெய்யும்.
வாங்க கோமதி அக்கா! ஒரு இழப்பு ஏற்பட்டவுடன் எல்லோருக்கும் தோன்றும் ஒரு உணர்வு இது என்று தெரிகிறது/ எனக்கும் என் அம்மா விஷயத்திலும், அப்பா விஷயத்திலும் அப்படி தோன்றியதுதான். ஆனால் நடப்பதை நிறுத்த முடியாது என்றும் ஒன்று இருக்கிறதே..
நீக்குஹேமா அவர்களின் பயண அனுபவம் போல எங்களுக்கும் கயிலை, பத்ரிநாத், முக்திநாத் போகும் போது சில இடையூறுகள் ஏற்பட்டது. இறைவன் அருளால் சரியாகி எங்கள் பயணம் தொடர்ந்தது.
பதிலளிநீக்குSo, அந்தப் பக்கம் போகும் எல்லோருக்கும் இறைவன் இந்த சோதனைகளை கொடுக்கிறார் என்று தெரிகிறது!
நீக்குகாலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் சொல்வது போல எழுத சுந்திரம் வேண்டும். அப்போதுதான் தொடர்ந்து எழுத முடியும்.
பதிலளிநீக்குபடமும் பதமும்.. நெல்லை ஸ்பெஷல்
படங்கள் எல்லாம் அருமை.
என் தம்பி வீட்டு வாசலில் வில்வ மரம் இருக்கிறது.
வைக்கோலை உள்ளே இருந்து இழுத்து மாட்டுக்கு போடுவார்கள், வெளியே குடிசை போன்ற அமைப்பு பழசாக இருந்தாலும் உள்ளே இருக்கும் வைக்கோல் புதிதாக இருக்கும்.
நட்புகளை சொந்தங்களை கண்டு அவர்களுடன் மகிழ்ந்து இருக்கட்டும் கெளதமன் சார். அவர் வீட்டுவேலைகள் நல்லபடியாக நடக்கட்டும்.
மருமகன் பொறுப்புடன் நன்றாக புதன் கிழமையை பார்த்துக் கொள்வார்.
நன்றி கோமதி அக்கா... உங்கள் நம்பிக்கை நல்லபடி நடக்கட்டும் .முயற்சிக்கிறேன்.
நீக்கு