11.9.25

ஒரு டீ ரெண்டு டீ மூணு டீ நாலு டீ


அந்தப் பெண்மணிகளின் பின்னால் சாப்பிடுவதற்காக விரைந்து கொண்டிருந்தோம் அல்லவா...  அது அப்படியே இருக்கட்டும்.  பின்னர் தொடர்கிறேன்.  முன்னதாக வழியில் நடந்த ஒரு நிகழ்ச்சி சொல்வதற்கு விட்டுப்போய் விட்டது!

ஒருவழியாய் ஹோட்டலைக் கண்டுபிடித்து சிற்றுண்டி முடித்து கிளம்பினோம் அல்லவா...  திடீரென திருப்பதி காரை சாலை ஓரம் நிறுத்தினார்.  என்ன என்று பார்த்தால் ஒரு 'சாய் கடை'.
இறங்கி மறுபடி ரெஸ்ட் ரூமில் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார்.  ப்ரம்ம சவுச்சமா, இல்லை ஏதாவது தம்மிங் மேட்டரா தெரியவில்லை.  நான் முன்னதாக ரெஸ்ட் ரூம் வைபவத்தை முடித்துக் கொண்டு சாய் கடையை நெருங்கினேன்.  
பாஸ் காரை விட்டு இறங்க மறுத்தார்.  அலுப்பு.  டீ, காஃபி வேண்டாம் என்று சொல்லி விட்டார்.  அண்ணனும் அப்படியே.

உள்ளே அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த இளைஞர் - இளைஞர் மாதிரிதான் இருந்தார் -   புத்தகத்திலிருந்து நிமிர்ந்து "டீ ஆர் காஃபி?" என்றார். 

"ஃபில்டர் காஃபி?" என்றேன்.

"Yes.  தயார் செய்யவா?  ஒன்றா?"

"டீ என்னென்ன இருக்கிறது?"

"Only Ginger Tea" 

"சரி.  ஒரு ஜிஞ்சர் டீ.  இப்போது என் டிரைவர் வருவார்.  அவர் வந்த உடன் அவருக்கும் ஒரு டீ"



சற்று உற்றுப் பார்த்தால் அந்த அலமாரியின் கீழே பாட்டிலின் மூடிகளை இணைத்து அதில் பாட்டிலை திருகி வைத்திருக்கிறார்.  ஏதாவது எடுக்க வேண்டுமென்றால் பாட்டிலைத் திருகி எடுக்க விடும்!

"புரியவில்லை.  இப்போது உங்களுக்கு ஒரு டீ வேண்டுமா, இரண்டா?  ஏனெனில் தயார் செய்ய பத்து நிமிடம் ஆகும்"

"சட்டென முடிவெடுத்து "இரண்டு" என்று சொல்லி விட்டேன்.  அவர் என்னை ஒருமுறை திரும்பிப் பார்த்து விட்டு இன்னொரு டம்ளர் பாலை எடுத்து பாத்திரத்தில் ஊற்றினார்.

அண்ணனை 'டீ வேண்டுமா' என்று மறுபடி கேட்டேன்.  நான் அங்கு இருந்தவற்றை போட்டோ எடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தவர் அவரும் இறங்கி வந்து விட்டார்.

கடைக்காரரிடம் "மூன்று டீ" என்றேன்.  மிகவும் அதிருப்தியாய் என்னைத் திரும்பிப் பார்த்தவர் இன்னொரு டம்ளர் பாலை டிரான்ஸ்பர் செய்தார்.

பாலை அந்த பாத்திரத்தில் ஊற்றி விட்டு ஊற்றி விட்டு புத்தகம் படிப்பதைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.  என்ன புத்தகம் என்று பார்க்க முயன்றேன்.  முடியவில்லை.

பாஸை மறுபடி மறுபடி கூப்பிட்டதும் அவரும் இறங்கி வர, நான் சற்றே தயக்கத்துடன் "ஹலோ  நாலு டீ" என்றேன்.

"அவர் திரும்பி என்னை முறைத்தவர் "இங்கு என்ன நடக்கிறது?" என்றார் சற்றே எரிச்சல் ப்ளஸ் கோபத்துடன்.  இதற்கெல்லாம் கூட அதிருப்தி அடைவார்களா என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.  

"கவலை வேண்டாம்.  இதற்கு மேல் காரில் ஆட்கள் இல்லை" என்றேன்.

"அதற்கில்லை.  தயார் செய்ய பத்து நிமிடம் ஆகும் என்றேனே..  அதுதான்"
அங்கு காந்தி படத்துடன் ஒரு போர்ட் இருந்தது. அதை போட்டோ எடுத்துக் கொண்டு கடைக்காரரிடம் "காந்தி நிஜமாகவே இப்படி சொல்லி இருக்கிறாரா" என்று கேட்டேன்.  "கூகுள் பண்ணிப் பாருங்கள்" என்றார் அவர்.  

"ஏங்க..  காந்தி வக்கீல்.  ஏதாவது வியாபாரமா செய்தாரா அவர், கஸ்டமர் என்று சொல்வதற்கு?" என்று கேட்டேன்.  என்னை ஒரு  கரப்பான் பூச்சியை பார்ப்பது போல பார்த்தார் அவர்.  

"எங்கிருந்து வருகிறீர்கள்??  

"சென்னை"  

"தமிழ்?"  

"ஆம்.  தெரியுமா?"  

"தெரியாது.  கட்சிக்காரர்களையும் கஸ்டமர் என்று சொல்வார்கள்"

"புதிதாக இருக்கிறது!  நான் கேள்விப்பட்டதில்லை"

மறுபடியும் என்னை ஒரு பார்வை பார்த்துக் கொண்டார்.

அமைதியானேன்.  கடையில் ஒரு சிவராஜ்குமார் போட்டோ பெரிதாக இருந்தது.  "சிவராஜ்குமார்?" என்று கேட்டதும் அவர் முகம் மலர்ந்தது.  "ஆம்" என்று தலையாட்டினார்.


கடைசியாக அவர் தேநீரை கோப்பைகளில் ஊற்றி எங்கள் பக்கம் வைத்தார்.  உண்மையிலேயே மிகவும் தரமாக இருந்தது.  அவரிடம் என் பாராட்டுதல்களைச் சொன்னேன்.  மெல்லிய சிரிப்புடன் தலையாட்டிக் கொண்டார்.

ஓரளவு திருப்தியுடன் அங்கிருந்து புறப்பட்டு பயணத்தைக் தொடர்ந்தோம்.  இனி சாப்பிடும் இடத்துக்குச் செல்லலாம்!

==========================================================================================



==========================================================================================

படிக்க முடிகிறதா என்ன?


============================================================================================

இரண்டு செய்திகள்..  

பேர குழந்தை மீது பாசம் இருந்தாலும் வளர்க்கும் உரிமை பாட்டிக்கு கிடையாது'

மும்பை: 'பேரக்குழந்தை உடனான பாசப்பிணைப்பு, அதை வளர்க்கும் அல்லது பராமரிக்கும் உரிமையை பாட்டிக்கு வழங்காது' என, மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த தம்பதிக்கு, இரட்டை குழந்தை பிறந்தது. இதில், ஒரு குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டதை அடுத்து, அந்த குழந்தையை பெற்றோர் வளர்த்து வந்தனர். மற்றொரு குழந்தை தந்தைவழி பாட்டியிடம் வளர்ந்து வந்தது.  கடந்த ஐந்து ஆண்டுகளாக குழந்தையை பாட்டி வளர்த்து வந்தார். இந்த சூழலில், தாயாருடன் ஏற்பட்ட சொத்து தகராறு காரணமாக, குழந்தையை திரும்ப தரும்படி அதன் தந்தை வலியுறுத்தினார். இதற்கு, 74 வயதான பாட்டி மறுப்பு தெரிவித்ததுடன், தானே குழந்தையை வளர்க்க விரும்புவதாக கூறினார்.  குழந்தையை திரும்பப் பெற்றுத் தரக்கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் தந்தை முறையிட்டார். இதை எதிர்த்து குழந்தையின் பாட்டி மனு தாக்கல் செய்தார்.  அதில், 'குழந்தை பிறந்ததில் இருந்து என்னுடனேயே வளர்கிறது. அதற்கு என்னென்ன தேவை என்பது எனக்கு மட்டுமே தெரியும். கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவருக்கும் இடையே பாசப்பிணைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, குழந்தையை நானே வளர்க்க அனுமதிக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.  இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:  பாட்டி தன் பேரக் குழந்தையுடன் பாசப் பிணைப்பை பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், அதுவே, அந்த குழந்தையை வளர்க்கும் உரிமையை பாட்டிக்கு வழங்காது. குழந்தையை வளர்க்கும் உரிமை அதன் பெற்றோருக்கே உண்டு. குழந்தையை வளர்ப்பதில் அவர்களை விட சிறந்த உரிமை பாட்டிக்கு கிடையாது.  சொத்து தகராறு காரணமாக, பெற்றோரின் சட்டப்பூர்வ உரிமையை பறிக்க முடியாது. குறிப்பாக, பாட்டிக்கு 74 வயது ஆகும் நிலையில், பேரக்குழந்தையை பராமரிக்க சட்டத்தில் இடமில்லை. வளர்ப்பது மற்றும் பராமரிப்பதில், குழந்தையின் நலனே முக்கியம்.  எனவே, அடுத்த இரு வாரங்களுக்குள் குழந்தையை அதன் பெற்றோரிடம் பாட்டி தர வேண்டும். அதேபோல், குழந்தையை வந்து பார்க்க பாட்டிக்கு பெற்றோர் அனுமதி அளிக்க வேண்டும்.  

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

=======================================================================================================================

21 ஆண்டுகளுக்கு முன் தொலைத்த செயின்; பார்சலில் திரும்ப வந்த நெகிழ்ச்சி சம்பவம்

பாலக்காடு; பாலக்காடு அருகே, 21 ஆண்டுக்கு முன் எடுத்த நகையை மீண்டும் உரிமையாளருக்கு பார்சலில் அனுப்பிய நபரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.  கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், திருவேகப்புரை பைலிப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கதீஜா 65; கடந்த 21 ஆண்டுக்கு முன், வளாஞ்சேரி பகுதியில் டாக்டரை சந்திக்க சென்ற போது, மூன்றரை சவரன் தங்க செயின் தொலைந்து விட்டது.  நேற்று முன்தினம், தனது வீட்டுக்கு வந்த பார்சலை பிரித்த போது, கதீஷா குடும்பத்தினர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். பெயர் எதுவும் குறிப்பிடாமல் வந்த பார்சலில், மூன்றரை சவரன் தங்க செயின் இருந்தது.  இது குறித்து கதீஜா கூறியதாவது:  கடந்த, 21 ஆண்டுகளுக்கு முன் நானும் மகன் இப்ராஹிமும், வளாஞ்சேரி பகுதியில் உள்ள மருத்துவரை சந்திக்க சென்றிருந்தோம். அப்போது என் மூன்றரை சவரன் தங்க செயினை தொலைத்து விட்டேன். பயணம் செய்த பகுதிகளில் எல்லாம் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.  திட்டுவார்கள் என்ற பயத்தில் ஒரு வாரம் கழித்துதான் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தேன். வெளிநாட்டில் பணிபுரியும் மற்றொரு மகன் பதிலுக்கு புதிய செயினை வாங்கித் தந்தார்.  இழந்த தங்க செயின் குறித்த நினைவுகள் மட்டும் இருந்தது.  எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாதவர் ஒரு கடிதத்துடன் இழந்த செயினுக்கு பதிலாக அதே அளவுள்ள மற்றொரு செயினை பார்சலில் அனுப்பியுள்ளார். முதலில் எங்களால் இதை நம்ப முடியவில்லை. பின்னர் அந்தக் கடிதம் எங்களை நம்ப வைத்தது.  அந்தக் கடிதத்தில், 'சில ஆண்டுகளுக்கு முன் உங்களிடம் இருந்து தொலைந்து போன ஒரு தங்க நகை எனக்கு கிடைத்தது. அது என் வாழ்க்கை சூழ்நிலைக்காக பயன்படுத்தி கொண்டேன்.  இன்று நான் அதை நினைத்து வருந்தி வாழ்கிறேன். அதனால், இந்த கடிதத்துடன் அது போன்ற ஒரு தங்க செயின் வைத்துள்ளேன்.  நீங்கள் சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டு உங்கள் பிரார்த்தனையில் என்னையும் உட்படுத்த வேண்டும்' இப்படி அதில் கூறியிருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.  அதே நேரத்தில், தங்க செயின் திருப்பித் தந்த நபரை குறித்து விசாரிக்க விருப்பமில்லை என கதிஜாவின் மகன் இப்ராஹிம் தெரிவித்தார்.

==========================================================================================

சிற்பியும் அவரே சிலையும் அவரே  எம் எஸ் பெருமாள் 

பேராசிரியர் சாரதா நம்பி ஆரூரன் கல்லூரி முதல்வராகவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஆணையராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆன்மிகச் சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர் எனப் பன்முகத்தன்மைகொண்டவர். மறைமலை அடிகளாரின் மகள் வயிற்றுப் பேரன், நம்பி ஆரூரனை மணந்தவர். இவர் தன் `வாழ்வை மாற்றிய வாக்கியம்' பற்றிக் கூறுகிறார்.
``அப்போது எங்களின் வீடு சென்னை, ராயப்பேட்டையில் இருந்தது. ராணி மேரி கல்லூரியில் 1965-ம் ஆண்டு இளங்கலை தமிழ் இலக்கியம் படிச்சிக்கிட்டிருந்தேன். சுகிசிவம் அண்ணன் எம்.எஸ்.பெருமாள், விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் எல்லாம் எனக்கு கிளாஸ்மேட்ஸ். ஸ்ரீதரின் மனைவி தேவசேனா எங்கக்கூடத்தான் படிச்சாங்க, அவங்க தெலுங்கு இலக்கியம். மொழிப்பாடமான ஆங்கில வகுப்பில் ஒன்றாக அமர்ந்திருப்போம்.
அப்போதெல்லாம் தமிழ்ப் படிக்கும் மாணவர்களுக்கு `இலக்கியத் திறனாய்வு' வகுப்பு நடக்கும். டாக்டர்.மு.வரதராசனார்தான் எங்களுக்கு வகுப்பெடுப்பார். இந்த வகுப்பில் கலந்துக்கிறதுக்காக பச்சையப்பன் கல்லூரி, ராணிமேரி கல்லூரி, மாநிலக் கல்லூரி மற்றும் சென்னைப் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களிலிருந்து தமிழ் படிக்கும் மாணவ மாணவிகள் அனைவருமே ஒரே வகுப்பில் அமர்ந்து வகுப்பைக் கவனிப்போம்.
இவர்கள் அனைவருக்கும் சேர்த்துத்தான் அந்த இலக்கியத் திறனாய்வு வகுப்பு இரண்டு ஆண்டுகள் நடைபெறும். அப்போதுதான் இவர்களெல்லாம் எனக்கு அறிமுகமானார்கள்.
அப்போது மு.வரதராசனார், பெண் சுதந்திரம் பற்றியும் அது எந்த அளவு இருக்க வேண்டும் என்பது பற்றியும் மிகத் தெளிவாகவும் அருமையாகவும் சொல்வார்.
``பட்டம் எவ்வளவு உயரத்துல பறந்தாலும் அதனுடைய நூல் அறுந்து போகாமல் இருக்க வேண்டும். அந்த நூலின் மறுமுனை கீழே இருப்பவரின் கைகளில் இருக்க வேண்டும். ஒரு பெண்ணின் வாழ்க்கையும் அப்படித்தான்'' என்று கூறுவார். எனக்கு மிகவும் பிடித்த வாக்கியம் இது.
எங்கள் கல்லூரியின் பிரிவு உபசார விழாவின்போது அவரிடம் ஆட்டோகிராப் வாங்கப் போனேன். அப்போ ``பெண் என்பவள் நல்லவளாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவளாகவும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்'' என எழுதிக் கையொப்பமிட்டுத் தந்தார். இது என் வாழ்க்கைப் பயணத்தின் வழியெங்கும் நான் நினைவுகொள்ளும் வாக்கியம். அவரின் தலைமையில்தான் என் திருமணம் நடந்தது.
படிப்பு முடிந்ததும் 1972-ல் திருமணமாகி, நான் பி.பி.சி-யில் பணிபுரிய லண்டனுக்கு என் கணவருடன் சென்றுவிட்டேன். அங்கு 5 ஆண்டுகள் பணியாற்றினேன். அது என் வாழ்க்கையின் வசந்த காலமா இருந்தது. விதி தந்த வேதனையாய் என் கணவர் என் 39-வது வயதில் மறைந்தார்.
நூலறுந்த பட்டமானது என் வாழ்வு. புயலில் சிக்கிய படகாக நான். நானும் என் இரண்டு பெண்பிள்ளைகளும் கையறு நிலையில் இருந்தோம். நானே படகு, நானே துடுப்பு, நானே மாலுமி என்ற நிலையில் கல்லூரிப் பேராசிரியராக வாழ்க்கையைத் தொடர்ந்தேன். சிறுவயதிலேயே கைம்பெண்ணானதால் என் தலைக்குமேலே பல பருந்துகளும் கழுகுகளும் வட்டமிட்டன.
அதன் பிறகு நான் ஆன்மிகச் சொற்பொழிவாளராக, பட்டிமன்றப்பேச்சாளராக தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வலம் வந்தேன். சைவத் திருமறைகளையும் தேவார திருவாசகத்தையும் ஆழ்ந்து வாசித்தேன். அவை என் மனக்கவலையை மாற்றும் மருந்தாகின.
நான் தன்னந்தனியாக என்னுடைய இரண்டு குழந்தைகளையும் வளர்த்தேன். பொதுவாழ்க்கையில், பேச்சாளராகவும் பேராசிரியராகவும் இருந்துகொண்டு இந்தச் சமூகத்தை எதிர்கொள்வது ஒரு பெண்ணாக அத்தனை எளிதான காரியமாக இல்லை.
`மீ டூ பிரச்னை' பற்றி சமீபத்தில் பேசுகிறார்கள். சினிமா துறையில் மட்டுமல்ல. எல்லாத் துறைகளிலுமே, எல்லா காலத்திலுமே இந்தப் பிரச்னை இருந்து வந்திருக்கிறது. ஆனால், அதையெல்லாம் தாண்டி ஒரு பெண் வெற்றிபெற மிகப்பெரிய வைராக்கியமும் மன உறுதியும் தேவைப்படுகிறது. அது எனக்கு இறைவன் கொடுத்த வரம் என்றுதான் சொல்லுவேன்.
நான் சிறுவயதிலிருந்தே எங்களின் சித்தப்பா, பெரியப்பா குழந்தைகளுடன் வளர்ந்தவள். எங்கள் வீட்டில் 16 ஆண் பிள்ளைகள். நான் ஒருத்திதான் பெண்.
அதனால் எப்போதுமே என் அண்ணன், தம்பிங்க கூடவே நான் இருப்பேன். அவர்களுடன்தான் கில்லி விளையாடுவது, ஐஸ்பாய் விளையாடுவது என என் பால்ய காலம் கழிந்தது. அதனால் பிற்காலத்தில் பணியின் காரணமாக சக ஆண்களுடன் பழகுவதில் எனக்கு எந்தவித சிரமமும் இல்லாமலிருந்தது. என்னைவிட வயதில் சிறியவராக இருந்தால், `தம்பி' என்றும் பெரியவராக இருந்தால், `அண்ணன்' என்றும் கூப்பிடுவேன்.
அதனால்தான் நான் தனியாக கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் என எத்தனையோ நாடுகளுக்குப் போய் கவியரங்கம், பட்டிமன்றங்களில் பேசிவிட்டு வருகின்றேன். அதுபோன்ற தருணங்களில் மு.வரதராசனாரின் வாக்கியங்கள்தான் எனக்கு பெரிய காப்புக் கவசம். அவைதான் என் வாழ்க்கையை வழி நடத்திச் செல்லும் வெற்றி மந்திரங்கள்'' என்கிறார் பட்டிமன்றப் பேச்சாளரும் பேராசிரியருமான சாரதா நம்பி ஆரூரன்.
நன்றி: விகடன்  நன்றி R. கந்தசாமி ஸார். 
===========================================================================================

கவிஞர் வாலிக்கு அஞ்சலி...

====================================


"இந்தக் கதைக்கு விசிறி வாழை என்று ஏன்....
=================================================================================

குறிஞ்சிப் பாட்டை என் பாணியில் எழுத முஉயர்ச்சித்த நேரம்...


\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\


JKC சிபாரிசில்....

1947 ஜோக் 1

1947 ஜோக் 2. இந்த இரண்டும் பி எஸ் ராமையா ஆசிரியராக இருந்த குண்டூசி பத்திரிகையில் வந்தவை.

எனக்குப் பிடித்த ஜோக்..  எனவே ரிப்பீட்டு....

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\


94 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அடடே...   வாங்க ஜீவி ஸார்...   வணக்கம்.  இந்தியா வந்தாச்சா?  யு எஸ்தானா?

      நீக்கு
    2. இன்னும் இரண்டு மாதம் கழித்துத் தான்.

      நீக்கு
    3. Welcome. உங்கள் கண் பிரச்னை, விரல் பிரச்னை தேவலாமா?

      நீக்கு
    4. எவ்வளவோ தேவலை, ஸ்ரீராம். தவறாமல் எபி பார்த்துக் கொண்டிருப்பதால் அங்கைய செய்திகளை அறிய முடிகிறது.
      தங்கள் விசாரிப்புக்கு நன்றி.

      நீக்கு
  2. அந்தக் கவிதையில் கடைசி வரி உண்மையிலும் உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா... ஹா... புரிவது போலதான் இருக்கிறது.

      நீக்கு
  3. //விசிறிவாழை பார்க்க அழகா இருக்கும் ஆனா யாருக்கும் உபயோகம் இல்லை // உலகத்துல சாப்பிடற பொருள் மட்டும் தான் உபயோகமா?அதனுடைய அழகு தான் அதனுடைய உபயோகம்! In fact, "A thing of beauty is a joy forever." என்னவோ போடா மாதவா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீநிவாசன் ஸார்... சாவியின் அந்தக் கருத்துக்கு நான் என்ன செய்ய முடியும்?

      நீக்கு
    2. ஹா ஹா . Of course, நானும் அமரர் சாவி இடம்தான் புலம்பினேன் :-)

      நீக்கு
  4. இன்றைய வியாழன் கதம்பத்தில் இரண்டுதான் மனதில் நின்றது.

    கவிஞர் வாலி மறைந்துவிட்டார். அதற்காக திரையுலகம் ஸ்தம்பிக்கவேண்டும் என்பது என்ன எதிர்பார்ப்பு? வீராசாமியின் எதிர்பார்ப்பில் அர்த்தம் இல்லை. அடுத்தவர்களின் குறைகளைச் சொல்லும் மனோபாவமே எட்டிப்பார்த்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை... நீங்கள் அப்படிக்கா வருகிறீர்களா?

      நீக்கு
    2. நீங்கள் டிக்கெட் வாங்கிய கிரிக்கெட் மேட்ச் இன்று மாலை. காலையில் உங்கள் அபிமான சிறுகதை எழுத்தாளர் மறைந்துவிட்டார். நீங்க என்ன செய்வீங்க? வாலிக்காக அவர் சம்பந்தப்படாத திரையுலக வேலைகள் ஏன் ஸ்தம்பிக்கவேண்டும்? நம் கிரிக்கெட் வீர்ர்களே, கையில் கறுப்புப் பட்டையைக் கட்டினோமா, விளையாடினோமா என்றுதானே இருக்கிறார்கள்?

      நீக்கு
    3. நீங்கள் டிக்கெட் வாங்கிய கிரிக்கெட் மேட்ச் இன்று மாலை. காலையில் உங்கள் அபிமான சிறுகதை எழுத்தாளர் மறைந்துவிட்டார். நீங்க என்ன செய்வீங்க? //

      இந்த உதாரணம் சரியில்லையே நெல்லை. அபிமான எழுத்தாளர்....அவரோடு என்ன கதைகள் மூலம் மட்டும்தான் தொடர்பு. வேறு எந்தவகையிலும் தொடர்பு இல்லையே. மறைவுக்குப் போகக் கூட மாட்டோமே.

      ஆனால் திரையுலகில் அவரோடு தொடர்பு உடையவர்கள், படத்திற்குக் கவிதை வாங்கியவர்கள் என்பதால் அந்த பான்ட் வேறு இல்லையா?

      அதுக்காக ஸ்தம்பிக்கணும் என்றில்லை...அதாவது ஒரு வாரம் 10 நாள்னு இல்லை. மொத்த திரையுலகமும் ஒரு நாள் மௌன அஞ்சலி...அமைதியாக.....வாலியின் திறமைக்கு மதிப்பு.

      ஆனால் அந்தப் பகுதியில் "ராஜா அண்ணாமலைபுரத்தில் கலையுலகமே கண்ணீர்வடிக்க" என்ற வரி மிகைப்படுத்தல்.

      கீதா

      நீக்கு
    4. //மொத்த திரையுலகமும் ஒரு நாள் மௌன அஞ்சலி...அமைதியாக..// என்ன சொல்றீங்க நீங்க? வாலி எப்போ போவேன்னு சொல்லியிருப்பாரா? திரைப்படம் எடுக்க எத்தனை வேலைகள் இருக்கும். லொகேஷன், அட்வான்ஸ், நடிக நடிகைகள், உதவியாளர்கள் என்று ஒரு பட்டாளம், உணவு, கேரவன் என்று மற்ற வேலைகள்... எப்படி அவற்றை கேன்சல் செய்ய இயலும்? கிரிக்கெட்டில் அப்படியா நடக்குது?

      நல்லவேளை... அன்று நான் உங்கள் வீட்டுக்கு வர்றேன்னு சொல்லியிருக்கலை.. சாரி..நெல்லை.. வாலி படப் பாடல்கள் எனக்கு உயிர். இன்று மனசு சரியில்லை. நீங்க வராதீங்கன்னு சொல்லியிருப்பீங்களோ...

      இதற்கும் வாலியின் திறமைக்கும் சம்பந்தமில்லை. அவர், கண்ணதாசன் போன்றவர்கள் இறை அருள் பெற்றவர்கள்

      நீக்கு
    5. மிகவும் சரி. இதே போல்தான் " சம்பாதித்தாயே சமூகத்துக்கு என்ன செய்தாய் " என்று கேட்பதும்.

      நீக்கு
  5. இரயில்வே ஸ்டேஷன் போக எட்டணாவும் சிம்கார்டும் புன்னகைக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
  6. "காந்தி நிஜமாகவே இப்படி சொல்லி இருக்கிறாரா" என்று கேட்டேன். // உங்களுடைய ஐயம் நியாயமானது. Those were not his words. https://quoteinvestigator.com/2012/08/02/gandhi-customer/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "அண்ணா அன்றே சொன்னார் " அப்படின்னு அடிச்சு விடுற மாதிரி.

      நீக்கு
    2. வாய்ப்பில்லையேன்னுதானே நானே கேட்டேன்.  டீயை குடிச்சோமா, போனோமான்னு இருக்க மாட்டாங்களான்னு நெனச்சிருப்பார்!

      நீக்கு
  7. ஏதாவது தம்மிங் மேட்டரா தெரியவில்லை//

    தம்மிங் மேட்டர்னா தெரிஞ்சுருமே வந்ததும். புகை "நறுமணம்" வந்திடுமே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு ஏதாவது மாற்று வைத்திருந்தார்களானால்?  எங்களுக்கு அப்படி நறுமணம் எதுவும் வரவில்லைதான்!

      நீக்கு
  8. அவர் திரும்பி என்னை முறைத்தவர் "இங்கு என்ன நடக்கிறது?" என்றார் சற்றே எரிச்சல் ப்ளஸ் கோபத்துடன். இதற்கெல்லாம் கூட அதிருப்தி அடைவார்களா என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. //

    ஹாஹாஹா அது தேவை இல்லைதான் அதுவும் தொழில் செய்வோருக்குக் கூடாத ஒன்று.

    ஆனால் அது வேற ஒன்றுமில்லை, ஸ்ரீராம், கொதிக்கும் நேரத்தில் புத்தகம் வாசிக்கிறார். இடையில் தடங்கல்கள்!!!

    அவருக்குப் புத்தகம் வாசிக்கும் ஆர்வம் போலும் ஆனால் அதற்கான தனி நேரம் கிடைக்கலை போல.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவேளை அவர் கடை ஓனராயிருக்க மாட்டாரோ...   ஓனர் "கொஞ்சம் பார்த்துக்கோ ஊண்ட்ட மாடிட்டு வந்துடறேன்"னு போயிருப்பாரோ...

      நீக்கு
    2. அப்புறம் எனக்கும் தோன்றியது அப்படி, சும்மா கொஞ்ச நேரம் பார்த்துக்கன்னு ...

      கீதா

      நீக்கு
  9. காந்தியின் இந்த வாசகத்தைப் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் என் சிற்றறிவுக்கு எட்டியவரை அவர் சொன்னது இல்லை என்றே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லி இருப்பாரோ... காந்தியை நம்ப முடியாது! :P

      நீக்கு
  10. அவரிடம் என் பாராட்டுதல்களைச் சொன்னேன். மெல்லிய சிரிப்புடன் தலையாட்டிக் கொண்டார்.//

    அதான் அவரிடம் quality இருக்கு ஒரு பொருளை நன்றாகச் செய்து கொடுப்பது என்ற தரம். அதான் அவருக்கு இடையில கூடக் கொஞ்சம் சேர்க்கணும் என்றதும் எரிச்சல். அப்படிச் செய்யச் செய்ய சில சமயம் அதன் தரம் குறைந்துவிட்டால்? கொஞ்சம் perfectionist போலும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. பதில்கள்
    1. முருகா..  முருகா... 

      வாங்க செல்வாண்ணா...  வணக்கம்.

      நீக்கு
  12. ​நட்பு கவிதை நன்றாக உள்ளது.
    நண்பர்களோ, நாமோ
    நட்பை மறக்கலாம்
    ஆனால்
    எதிரிகள் எவரையும் மறப்பதில்லை
    நாமும் எதிரிகளை
    என்றும் மறப்பதில்லை

    வாலி இறப்பிற்கு புலம்பல் சரியில்லை. இருக்கும்போது மதிக்காதவர்கள் இறந்த பின் காடு வரை வருவார்கள் என்று எதிர்பார்த்தது சரியில்லை. பாரதியின் இறுதி சடங்கில் எத்தனை பேர் இருந்தனர்? தெரியும் அல்லவா?

    ஜோக்குகள் நகைக்க வைக்கின்றன.

    இந்த வியாழனில் இன்னவென்று சொல்ல முடியாத ஏதோ ஒரு குறை இருப்பதாக ஒரு சிறு குறுகுறுப்பு.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  நண்பர்களை கூட மறந்து விடுவோம்.

      // இந்த வியாழனில் இன்னவென்று சொல்ல முடியாத ஏதோ ஒரு குறை இருப்பதாக ஒரு சிறு குறுகுறுப்பு.//

      நீங்களும் ஒவ்வொரு வியாழனும் சொல்கிறீர்கள்.  அது என்ன என்று கண்டுபிடித்து சொல்ல மாட்டேன் என்கிறீர்கள்.  நானே கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லாமல் வைத்திருக்கிறீர்களோ?

      நீக்கு
  13. பழமொழி வடிவில் உணவுப்பழக்கங்களை தொகுத்துள்ளதை படித்தேன். பெரியவர்கள் அந்த காலத்தில் அழகாய்த்தான் அனுபவத்தினாலும் அக்கறையினாலும் சொல்லியிருக்கிறார்கள்! அதையெல்லாம் யார் கேட்கிரார்கள்?

    சாரதா நம்பி ஆரூரனின் எழுத்து உள்ளூர இருக்கும் வலியையும் அதையும் தாண்டிய வைராக்கியத்தையும் வெளிப்படுத்துகிறது.

    சாவியின் ' விசிறி வாழை' படித்த நினைவு வருகிறது. கோபுலுவின் ஓவியங்களுடன் வந்த தொடர்கதை! கீதா ஜான் கீட்ஸின் வரிகளை குறிப்பிட்டிருப்பதைப்போல விசிறி வாழை பெயருக்கேற்றாற்போல அத்தனை அழகு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மனோ அக்கா...   பயனிருந்தால்தான் வைத்திருக்க வேண்டும் என்று மக்கள் நினைவு இருக்கிறது போல...   நானும் உங்கள் கட்சிதான்.

      என்னிடம் ஒரிஜினல் விசிறிவாழையே பைண்டிங் செய்யப்பட்டு இருக்கிறது!

      நீக்கு
  14. உணவுப் பழக்கம் பழமொழி - புதுசு எனக்கு அதுல ஒண்ணே ஒண்ணைத் தவிர. அவசர சோறு ஆபத்து. சாப்பாட்டை நிதானமாகச் சாப்பிடணும்.

    பாட்டி வைத்தியம் நல்லாருக்கே!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணவுப்பழக்கம்...  தலைவலிக்கு முள்ளங்கி சாறு எடுத்தும் தலை வலி தீரவில்லை.   தலைவலியும் இதைப் படித்திருக்கும் போல...  பெப்பே என்று விட்டது!

      நீக்கு
  15. ஹப்பா கருத்து போய்டுச்சு. இங்க நின்னுச்சேன்னு வெங்கட்ஜி தளம் போய் போட்டேன், அங்க நிக்கலை போயிருக்கும்னு நினைக்கிறேன் உடனே இங்க வந்து ட்ரை பண்ணினேன் போய்டுச்ஹ்கு.

    ஸ்ரீராம், பாட்டி வைத்தியம் முயற்சி செஞ்சீங்களா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கும் உங்கள் கமெண்ட் பார்த்தேன். பாட்டி வைத்தியம் ஒவ்வொன்று முயற்சி செய்தேன். மன ப்ரமைதான்!

      நீக்கு
  16. கவிதை சூப்பரா இருக்கு ஸ்ரீராம். நாம மறந்திருந்தாலும் சில நட்புகள் நம்மை நினைவில் வைத்திருந்து பேசுவது எனக்கு நடந்திருக்கிறது. அப்ப தோன்றியது நாம ஏதோ ஒரு விதத்தில் அவர்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறோம் என்று

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா. கவிதை படித்து விட்டு ஜீவி ஸார் சொல்லி இருப்பதை கவனித்தீர்களா?

      நீக்கு
  17. கோர்ட்டின் தீர்ப்பு சரியே.

    out of court and the law - பாட்டிக்கு முதல் உரிமை கிடையாதுதான் உளவியல் ரீதியாகவும்....வயதும் ஆகிறது எனவே குழந்தையை வளர்ப்பது கடினமாக இருக்கலாம், மற்றும் பாட்டி இறந்தால் குழந்தை அவதிப்படும் உணர்வு ரீதியாக என்பதெல்லாம் சரி.....ஆனால் எனக்கு எழுந்த கேள்வி, அந்தத் தந்தைக்குச் சொத்துத் தகறாரு வந்திருக்கலைனா அம்மாவிடம் தன் குழந்தையைக் கேட்டிருப்பாரா? கேஸ் போட்டிருப்பாரா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாயை வாக்கிங் கூட்டிச் செல்வதற்கே ஆட்களை வேலைக்கு அமர்த்துபவர்கள், ஓசிக்கு குழந்தையை வளர்க்க ஒரு இடம் கிடைத்தால் விட்டிருப்பார்களா?

      நீக்கு
    2. கோர்ட் வயதானவர்கள்தான் முதலில் மறைவார்கள் என்னும் வழக்கமான லாஜிக் படி செயல்படுகிறது.  சமயங்களுக்கு தகுந்தாற்போல தீர்ப்புகள் மாறலாம்.

      நீக்கு
    3. குழந்தையை வளர்க்க ஆயா வேலைக்கு அப்பா அம்மாவைதான் வெளிநாட்டுக்கு அழைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்!!!

      நீக்கு
    4. //அப்பா அம்மாவைதான்// ஹாஹாஹா... அப்பாவினால் பிரயோசனமில்லை என்பது என் எண்ணம். அவங்க அங்க போயும். மனைவியை காபி கொண்டுவா, இன்னக்கு பேப்பர் வந்திடுச்சான்னு கேள்வி கேட்டுக்கிட்டிருப்பாங்க. என் பசங்க இரண்டு நாட்கள் முன்னால் கேட்டாங்க, எத்தனை தடவை நான் அவர்களுக்கு பேம்பர்ஸ் மாற்றினேன் என்று.

      நீக்கு
  18. தங்கச்செயின் பற்றிய செய்தி சுவாரசியம். குற்ற உணர்வு.
    அதை மீண்டும் கிளறாமல் இப்ராஹிம் சொன்னதும் நல்ல பக்குவப்பட்ட மனிதராகத் தெரிகிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு முன்பு வந்த ஒரு செய்தியும், அதையொட்டி நான் எழுதிய கதையும் நினைவுக்கு வந்தன.

      நீக்கு
  19. பெண் என்பவள் நல்லவளாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவளாகவும் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்//

    நல்ல வாக்கியம். சாரதா நம்பி ஆரூரான் பகுதி நெகிழ்ச்சியடையச் செய்தது. அவங்க சொல்றா மாதிரி இந்த மி டூ பிரச்சனை எல்லா காலத்திலும் உண்டு. எல்லாத் துறைகளிலும் உண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  உழைப்பு உயர்வைத் தருகிறது.  மதுரையில் என்னுடன் நம்பி ஆரூரான் என்கிற ஒருவன் கூடப் படித்தான்.  ஒருவன் என்று சொல்லவே தயக்கமாக இருக்கும்.  கொஞ்சம் வயதானது போல தோற்றம் கொண்டவன்.  இப்போது எங்கே இருக்கிறானோ(ரோ)....

      நீக்கு
  20. வாலியின் மரணத்திற்கு வராதவர்கள் என்று சொல்லப்பட்டிருப்பவர்கள், யாரும் வாலி இருக்கும் போது கொண்டாடினாங்களா என்று தெரியலை. கொண்டாடலைனா போனபிறகு என்ன சொல்ல?

    மனித மனங்கள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வாலி இருக்கும் போது கொண்டாடினாங்களா// வாலி இருக்கும்போது கொண்டாடியவர்கள் அவருடன் இரவில் சேர்ந்து தண்ணியடித்த தமிழ் கவிஞர்கள், திரைப்படத்துறையைச் சேர்ந்த இளைஞர்கள்தாம்.

      நீக்கு
    2. அப்ப கொண்டாடினவங்க கூட அவர் திறமைக்கு அல்ல பழக்கவழக்கத்துக்கு உடனிருந்ததால் போல.

      கீதா

      நீக்கு
    3. வாலி இதைப்பற்றி கூட ஒரு கவிதை அசால்ட்டாக எழுதி விட்டு போயிருப்பார். அசாத்தியமான திறமைசாலி.

      நீக்கு
  21. சமீப்ப் பயணத்தில், விருந்தாவனத்திலிருந்து காலை 6 மணிக்குக் கிளம்பினோம். பேருந்தில் பலர் அமர்ந்துவிட்டனர். ஆனால் ஒரு 4 பேர், பக்கத்தில் உள்ள தேநீர் கடையில் தேநீர் குடித்துக்கொண்டிருந்தனர். சரி என்று நானும் போனேன். எனக்கு ஒரு தேநீர் என்றேன். பிறகு ஒவ்வொருவராக நாலைந்து பேர் தங்களுக்கும் ஒன்று என்று கேட்கவும் கடைக்காரர் ஒவ்வொருவருக்காக பாலைச் சேர்த்துக்கொண்டிருந்தாரே தவிர, அடுப்பில் வைத்தமாதிரி தெரியலை. கடைசில அடுப்பில் வைக்கவும், வெளியாட்கள் இன்னும் இரண்டு பேர் வந்து தேநீர் கேட்டார்கள். உடனே அதே பாத்திரத்தில் இன்னும் இரண்டு பேருக்கான பாலைச் சேர்த்தார். இது வேலைக்காகாது என்று நினைத்தேன். அதற்குள் பேருந்து கிளம்பப்போகிறது வாருங்கள் என்று குரல் வரவும், எல்லோரும் தேநீர் கடையை விட்டுக் கிளம்பிவிட்டோம் (தேநீரும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று) கடைக்காரருக்குக் கடுப்பாக இருந்திருக்கும், ஆனால் எங்களுக்கு அதைவிட கடுப்பு. ஒவ்வொருத்தருக்காக பாலைச் சேர்த்து என்னைக்குத்தான் அடுப்பில் வைத்து தேநீர் தயாரிப்பார் என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா..  ஹா...   நம்மூர்தான் சரி..  எப்போதும் பால் கொதித்துக் கொண்டிருக்கும்.  எப்போது யார் கேட்டாலும் டீ கிளாஸை ஒரு தட்டு தட்டி நொடியில் டீ தயார் செய்து உயரத் தூக்கி ஒரு ஆற்று ஆற்றி நம்முன் உள்ள சிறு மேடையில் 'ணங்'கென்று வைத்தால் டீ க்ளாஸ் ஓரிரு சுற்றுகள் சுற்றி நிற்கும்!  எடுத்து விளிம்பைத் துடைத்து விட்டு சிந்தனையுடன் குடிக்கலாம்.

      நீக்கு
    2. இங்கே போடும் தேநீரோடு வடக்கே போடும் தேநீரை ஒப்பிடவே முடியாது. ஒருத்தருக்கானாலும் புதுசாகப்போட்டுத் தருவாங்க அங்கே. இங்கே? அதே சக்கையைக் கொதிக்க வைத்து அதிலேயே சர்க்கரை சேர்த்த பால், வெந்நீர் சேர்த்துத் தேநீர் என்னும் பெயரில் கொடுப்பாங்க. தேநீர் சாப்பிட்டால் வடக்கே ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்ட்ராவில் சாப்பிடணும். அதுவும் இஞ்சி போட்டு.

      நீக்கு
    3. வடக்கே அதிகம் தேநீர் குடித்ததில்லை. ஆனால் நமக்கு நம் ருசி நாக்குக்கு பழகி இதுதான் நல்ல ருசி என்றாகி விடுகிறது!

      நீக்கு
  22. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  23. பதிவு மிக அருமை.
    "ஹலோ நாலு டீ" என்றேன்.//

    ஆனால் மூன்று டீ தானே படத்தில் இருக்கு, அப்புறம் தனியாக இன்னொரு டீ வந்ததா? அடுத்து தனியாக ஒரு டீ படம் இருக்கே!
    அவர் டீ மாஸ்டர் இல்லை போலும் அதுதான் கோபம் வருக்கிறது நினைத்து நினைத்து ஆர்டர் வந்ததற்கு.

    அவர் கடை முதலாளி போலும் . புத்தகத்தை விரும்பி படிக்கும் நேரத்தில் குறுக்கீட்டை விரும்பவில்லை போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஆனால் மூன்று டீ தானே படத்தில் இருக்கு, அப்புறம் தனியாக இன்னொரு டீ வந்ததா? அடுத்து தனியாக ஒரு டீ படம் இருக்கே! //

      நான் படமெடுப்பதைப் பற்றி லட்சியம் செய்யாமல் திருப்பதி அவர் டீயை கையில் எடுத்து விட்டார்.  அப்புறம் என்ன தோன்றியதவ் அவர் டீயையும் கீழே வைத்து படம் எடுக்க தோதாய் நின்றார்!  அதை தனியாக எடுத்தேன்!  ஆனால் அருமையான டீ.  இங்கு ஜிஞ்சர் டீ என்பது வெல்லத்தண்ணீர் போல போடுவார்கள்.  அங்கு நன்றாக இருந்தது.

      நீக்கு
  24. உணவு பழமொழி, பாட்டி வைத்தியம், கவிதை மற்றும் பகிர்ந்த யாவும் நன்றாக இருக்கிறது. நன்றாக தேடி தேடி விஷ்யங்களை பகிர்ந்து இருக்கிறீர்கள். உங்கள் இரண்டு கவிதையும் அருமை.

    வாலி இறந்தற்கு வருத்தப்பட்டு படபிடிப்பை தள்ளி வைத்தால் நஷ்டம் ஏற்படுமே! வருத்தம் தெரிவித்து விட்டு அவர்கள் கடமையை அவர்கள் செய்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். நம் வேலையை அதற்காக நிறுத்திக் கொள்ள முடியாதுதான்.

      பாராட்டுக்கு நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  25. விசிறி வாழை பற்றிய சாவி அவர்களின் கருத்துக்கு நேர் எதிர் என் கருத்து.

    சிலவற்றைப் பார்க்கும் போது அழகியல் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி தருகிறது....மனம் இலகுவாவதற்கு உதவுகிறது,

    விசிறி வாழை வாசித்திருக்கிறேனோ? இல்லை தலைப்பு மட்டும் பரிச்சயமோ...நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி விசிறிவாழை என்னிடம் பைண்டிங் கலெக்ஷனில் இருக்கிறது. விசிறிவாழை அவ்வப்போது சில இடங்களில் பார்த்திருக்கிறேன். உடனே போட்டோ எடுக்கத் தூண்டும். அவ்வளவு கலைநயத்துடன் அழகாக இருக்கும்.

      நீக்கு
  26. மு.வரதராசனார் சாரதா நம்பி ஆரூரான் அவர்களுக்கு எழுதி கொடுத்தது நல்ல வாக்கியம் தான். நல்லவளாக இருந்தால் மட்டும் போதாது வல்லவளாகவும் பெண் இருக்க வேண்டும் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். இப்போது அப்படிதான் இருக்கிறார்கள்.

      நீக்கு
  27. குறிஞ்சிப் பாட்டின் எளிமை அதாங்க ஸ்ரீராம் நீங்கஎ ழுதியது நல்லாருக்கு! புரிந்தது.

    கோனார் தேடாமல், பாமரனுக்கும் புரிவது போல் கவிபாடும் திறன்பெற்ற புலவர்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி...   என்னையா சொல்றீங்க?  நல்லா தெளிவா கேட்டுக்கலாமேன்னுதான்...!

      நீக்கு
  28. நடிகையின் நடிப்பும், எட்டணாவும் புன்னகைக்க வைத்தன.

    சிம்கார்ட் சிரித்துவிட்டேன்!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு எபபவும் பிடித்த ஜோக் அது.  நன்றி கீதா.

      நீக்கு
  29. அடுத்த வாரம் புதன் கிழமைக்கு பத்து முதல் 15 கேள்விகள் தேவை.  நண்பர்கள் ஆளுக்கு இரண்டு கேள்விகள் எழுதி என் மெயில் ஐடிக்கு அனுப்புங்கள்.  நண்பர் சேட்டைக்காரன் வேணுஜி பதில் சொல்வார்.   "நான் என்ன ஓய் பதில் சொல்றது?" என்று கேட்டவரிடம் 'உங்கள் பாணியில் பதில் சொல்லுங்கள்' என்று கேட்டிருக்கிறேன்.  படிக்கட்டில் கால் இடறி, சிறிய விபத்தால் தோள்பட்டை வலியில் அவதிப்படுகிறார்.  கேள்விகள் டெம்ப்லேட் கேள்விகளாக இல்லாமல் வித்தியாசமாக இருந்தால் ரசிக்கப்படும்!

    sri.esi89@gmail.com

    பதிலளிநீக்கு
  30. செய்திகள் அறிந்தோம்.

    கவிதைகள் நன்று.

    ஜோக்ஸ் ரசனை. கஸ்டமர் கெயார் காசு வெட்டுமா ? விழுந்து விழுந்து சிரித்தேன்.

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. படங்களுடன் அந்த டீ ஸ்டாலும், அவரது தேனீர் தயாரிக்கும் முறைகளும், நீங்கள் ஒவ்வொருவருக்கும் கேட்டு தேனீர் அருந்திய சம்பவங்கள் குறித்த விபரங்களையும் படித்து ரசித்தேன். இங்கு புனித் ராஜ்குமார் படங்களும் இல்லாத இடங்கள் இல்லை. அவரை அனைவரும் நேசிக்கின்றனர். அந்த தேனீர் குவளையும், நன்றாக உள்ளது.

    தங்களது கவிதைகள் இரண்டும் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள். கவிஞர் வாலி மறைவன்று அதைப் பொருட்படுத்தாமல், அனைவரும் அவரை மறந்து போனது நிஜமான சோகந்தான்.

    ஜோக்ஸ் அனைத்தையும் படித்து ரசித்தேன். சிம்கார்டு ஜோக் எனக்கும் பிடித்திருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பார்த்ததும் புனீத் ராஜ்குமார்தானோ?  தெரியவில்லை.  நன்றி கமலா அக்கா.   கேள்வி அனுப்புங்கள்.

      நீக்கு
  32. நல்ல வாச்னைக்கதம்பம்

    பதிலளிநீக்கு
  33. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒரு ரீ கடையை வச்சூ..ஊஊஉ ஒம்பேது படமும் போட்டு [கெள அண்ணனிடம் பழகிட்டீங்கல்போலும்:)].. பாதி போஸ்ட்டை முடிச்சிட்டீங்க ஹா ஹா ஹா சரி சரி விடுங்கோ..

    //ப்ரம்ம சவுச்சமா//
    இது என்ன பாசை? சமஸ்கிருதமோ? எனக்குப் புரியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா....

      // //ப்ரம்ம சவுச்சமா//
      இது என்ன பாசை? சமஸ்கிருதமோ? எனக்குப் புரியவில்லை..//

      இரண்டாம் எண் இயற்கை உபாதையைக் கழிக்க நீண்ட நேரம் எடுப்பது!  ஒவ்வொரு முறையும் அவர் ரெஸ்ட் ரூமிலிருந்து வர தாமதமானது.

      டீ அனுபவம் குடித்த சுவையை விட பெற்று அனுபவம் சுவையாக இருந்தது.  அதனால்தான் சொன்னேன்.

      நீக்கு
  34. உணவுப் பழக்கம்...
    ஏற்கனவே படிச்சிருக்கிறேன், பாதுகாப்பாக வைச்சிருக்கோணும் எல்லோருக்கும் பயன் பெறும்.

    கவிதை நன்று, போனவாரக்கவிதையின் தொடர்ப்பகுதி போலவே இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை போன வாரம் என்ன பகிர்ந்தேன் என்று நானே சென்று பார்த்து வரவேண்டும்!!   உணவுப்பழக்கம் படிக்க நல்லாயிருக்கு,  யாரும் பின்பற்றுவதில்லை.  அட்லீஸ்ட் நான் பின்பற்றுவதில்லை!

      நீக்கு
  35. நிறைய இடங்களில் எல்லாம் நல்லபடி போகும்போது நன்றாகத்தான் இருக்குது, பிரச்சனை என வந்துவிட்டால் உடனே சட்டத்தைக் கையிலெடுத்து விடுகின்றனர் எல்லோரும்... அப்போ மனச்சாட்சி, அன்பு பாசம், நீதி நியாயம் எல்லாம் செத்து விடுகிறது... இப்போ நாட்டில் இப்படித்தானே பல பிரச்சனை போகிறது மாதம்பட்டி ர ராஜ் பிரச்சனை உட்பட.

    அந்தப் பாட்டிக்கு 5 வருடம் வளர்த்தபின் எவ்வளவு கஸ்டமாக கவலையாக இருக்கும்... சட்டம் எப்பவும் பீலிங்ஸ்க்கு இடம் கொடுப்பதில்லை, ஆனா மனிதர்கள் அதுக்குத்தானே முதலிடம் கொடுக்கிறோம் என்ன செய்வது...
    கர்மாதான் பதில் சொல்லும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேதான்.   மனிதர்களுக்காக சட்டமா?  சட்டத்துக்காக மனிதர்களா?  இந்தக் கேள்வியை சிவகுமார் அங்கிள் கூட நேற்று நான் (மீண்டும்) பார்த்த பௌர்ணமி அலைகள் படத்தில் அழுத்தமாகக் கேட்டார்.

      நீக்கு
  36. அந்த தங்க செயின் விவகாரம் நம்பும்படியாகவா இருக்குது?
    எனக்கென்னமோ , இந்த கதீஜா எப்பவும் திட்டிக்கொண்டும் அழுது கொண்டும் இருந்திருக்கலாம் தன் செயினை எடுத்தவர்பற்றி, வயசான காலத்தில் தாய் மகிழ்ச்சியாக இருக்கட்டுமே என இவரின் பிள்ளைகள்தான் ஆரோ இப்படிச் செய்திருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதில் ஏதோ 'க்' இருக்கிறது என்று   தெரிகிறது.அதனால்தான் அதை இங்கு பகிர்ந்தேன்.  நெகிழ்ந்துபோய் அல்ல!!

      நீக்கு
  37. வாலி பற்றிய செய்தி கவலையைக் கொடுக்கிறது, மனிதநேயம் எங்கே இருக்கிறது இப்போ... ??? ஏன் புளொக்குகளில்கூட நம்மோடிருந்தவர் ஒருவர் காலமாகிவிட்டால், அதுக்காக வருந்துவோர் அஞ்சலி போடுவோர் எத்தனை பேர்?? எல்லோரும் வழமைபோல போஸ்ட் போட்டுக்கொண்டே கடந்து போகின்றனரே... எனக்கு இதில் வருத்தம் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த விஷயத்துக்கு இரண்டு பக்கமும்  பேசலாம் அதிரா..   இதுவும் நியாயம்.  அதுவும் நியாயம்.  அதே வாலி தன் வாழ்நாளில் மற்றவர்கள் மரணித்தபோது என்ன செய்தார் என்று தேடிப்பார்க்க வேண்டும்!

      நீக்கு
  38. ஹா ஹா ஹா கடசி ஜோக்கும், தோசை ஜோக்கும் ரசிக்க வைக்குது.

    என்னால் பல சமயம் உடனே வர முடியுதில்லை ஶ்ரீராம்... அது ஏனோ கொம்பியூட்டரைத் திறக்கவே மனம் வருவதில்லை, வந்தால் கொமெண்ட்ஸ் போட்டிடுறேன் கடகடவென.. வருவதுதான் கஸ்டமாக இருக்குது ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடிக்கடி வாங்க அதிரா..  உற்சாகமா இருக்கும்.  ரெகுலரா கம்பியூட்டரைத் திறந்து பழக்கப்படுத்திட்டா அந்த அலுப்பு காணாமல் போய்விடும்.

      நீக்கு
  39. 1,2,3,4 .. டீ, மேலே பொன்மொழி குறித்த கேள்வி.. பாவம் கடைக்காரர் :).

    கவிதை மிக அருமை.

    தொகுப்பு நன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!