நெல்லைத்தமிழன் :
கையில் இருக்கும் grip கொஞ்சம் அசந்தபோது, தூக்கம் வரும்போது இல்லாமல் போவதேன்?
# தூக்கம் என்பது இயற்கை நம் உடலின் உள்ளும் புறமும் ஓய்வு பெற நமக்கு ஈந்தது. எனவே தசைகள் தளர்த்திக் கொள்வது இயல்புதான். ஆதலால் தூங்கும்போது கை grip காணாமல் போகிறது. ( உங்கள் கேள்வியை நான் சரியாக புரிந்து கொள்ளவில்லையோ ?)
& கிரிப், steadiness எல்லாம் தூக்கத்திலும் அப்படியே நிலைக்கும் என்றால், கிளாஸ்ல தூங்கி டமால் என்று சாய்கின்ற மாணவர்களை ஆசிரியரால் சுலபமாகக் கண்டு பிடித்து, சாக் பீசால் அடிக்க இயலாது!
பக்தி உணர்வு தென்னிந்தியர்களைவிட வடவர்களுக்கு அதிகம் என்று சொல்லப்படுவதை உணர்ந்திருக்கிறீர்களா?
# பெரிய பக்திமான்கள் என்றால் நமக்கு நினைவில் முதலில் தோன்றுபவர்கள் வட இந்திய மீரா, கபீர்தாசர், துளசிதாசர் கோரகும்பர் தானே. எனவேதான் அப்படி ஒரு எண்ணம் நமக்குத் தோன்றுகிறது.
& அது என்ன அப்படிச் சொல்லிட்டீங்க! அறுபத்து மூன்று நாயன்மார்களும், 12 ஆழ்வார்களும், முருக பக்தர்களும், சக்தி வழிபாடு செய்தவர்களும், திருவிளையாடல் புராணமும், கந்தபுராணமும், ஆறுபடை வீடுகளும் எல்லாமே நம் தமிழகத்திற்கே உரிய பக்தியை பறை சாற்றவில்லையா? தென்னிந்தியர்களும் வடவர்களுக்கு ஈடானவர்கள்தான்!
சிறு வயதில் காதலித்த பெண்ணை இப்போது சந்திக்க நேர்ந்தால் மனதில் என்ன உணர்வு, எண்ணம் தோன்றும்?
# சிறுவயதில் நான் அழகி என்று நினைத்த சில பெண்களை பல ஆண்டுகள் கடந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்த போது " அட அப்போது எப்படி அழகியாக எண்ணிப் பார்த்தோம் " என்று தோன்றியது. மிக இள வயதில் <18 வேலைக்கு (மகளிர் வேலையில் இல்லாத கட்டுமான இடத்துக்குச் ) சென்றதால் 'காதல்' ஏற்பட சான்ஸ் மிஸ் ஆகிப்போனது.
& அந்த சோகக் கதையை ஏன் கேட்குறீங்க ! அந்தக் காலத்தில் எனக்கு இருந்த (அவங்களுக்குத் தெரியாது!) ஒரு டஜன் + காதலிகளை சமீப காலத்தில் நேரில் அல்லது புகைப்படத்தில் பார்த்து வெறுத்துப் போய் விட்டது!
குளிர்ச்சியானவற்றைச் சாப்பிட்டால் கண் வலிப்பதுபோல இருக்கும். சூடானவற்றைச் சாப்பிட்டால் நாக்கு பொத்துப்போவது போல இருக்கும். இவற்றின் தொடர்பு என்ன?# நரம்பு மண்டலத்தில் ஏற்படுகின்ற அதிர்வு காரணம் என்று நினைக்கிறேன்.
& குளிர்ச்சியானவற்றை சாப்பிடும்போது நீங்கள் குறிப்பிட்ட உணர்வு எனக்குத் தோன்றுவதில்லை. இரண்டிலும் ஒரே underlying காரணம் — உணர்வு நரம்புகள் மற்றும் திசுக்கள் அதிகமாக வெப்பநிலை மாற்றத்துக்கு (extreme temperature) சென்சிட்டிவ்.
-
குளிர் → நரம்பு வழியாக கண்/தலை வலி போல் தெரியும்.
-
சூடு → திசுக்களில் நேரடி சேதம் (burn) ஏற்படும்.
நடிகர்கள் கொஞ்சம் வெற்றி பெற்றாலே, இவளை ஜோடியாப் போடுங்க அவளை ஜோடியாகப் போடுங்க என்று துள்ளுவதேன்? தமன்னாவைக்கூட ஒரு கதாநாயகன் சில நாட்கள் ஷுட்டிங்கிற்குப் பிறகு மாற்றிவிட்டான் எனக்கு டிக்னிட்டிதான் முக்கியம் என சமீபத்தைய காணொளியில் சொல்லியிருந்தார்.
# புது நடிகையரைப் போட்டால் அவர்களைப் பார்க்கும் ஆர்வத்தில் ரசிகர்கள் நம் படத்திற்கு அதிகம் வருவார்கள் என்று நடிகர்கள் நினைக்கிறார்கள். அதுபோக இப்பொழுது தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என்று பிற மொழியில் உள்ள பிரபல நட்சத்திரங்களையும் ஆங்காங்கே சிறுசிறு வேஷங்களில் நடிக்க வைத்தால் அவர்களைப் பார்க்க ஒரு கூட்டம் வரும் என்றும் நினைக்கிறார்கள். இப்படி முழுவதும் வணிக ரீதியான சிந்தனைகளால்தான் புதுப்புதுக் கதாநாயகிகளைப் போடச் சொல்லி நட்சத்திரங்கள் வற்புறுத்துகின்றார் என்பது எனது எண்ணம். புதுப்புது சினேகங்கள் கிடைக்க வேண்டும் என்கிற உந்துதலும் கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும். அது பற்றி நாம் எதுவும் சொல்வதற்கு இல்லை. ரசிகர்களிடையே கூட ஒரு குறிப்பிட்ட நடிகைக்கு ஆதரவு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குதான் இருக்கும் என்பதை நாம் கண்கூடாக இந்த 50, 60 வருடங்களில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம் ?
கடை ஒழுங்காக நடக்க மாமூல் வாங்கும் ரவுடிகளுக்கும், சொந்த நிலத்தில் பயிரிட்டு வளம் பார்க்கும் விவசாயிகளிடம் இறை வசூலித்த அரசர்களுக்கும் என்ன வித்தியாசம்? (அப்படி ஏதேனும் இருந்தால்)
# வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. அரசன் வரி வசூல் செய்வது நாட்டின் நிர்வாக செலவுகளை சமாளிக்க. ரவுடி செய்யும் வசூல் அவனுடைய சொந்த செலவுகளுக்காக மட்டுமே போகிறது அல்லவா ? நியாயமான வரி விதிக்கும் அரசனை உலகம் பூராவும் வியந்து பாராட்டும் என்று வள்ளுவர் சொல்லியிருப்பது நியாயமான வார்த்தைதான். நெறி பிறழாத அரசனை ரவுடியோடு ஒப்பிடக்கூடாது.
குடியினால் நல்ல திறமைசாலிகளை (வடிவேலு பாலாஜி, ரோபோ சங்கர்...) இழப்பதற்கு அவங்களோட குடிகார நண்பர்கள்தான் காரணமா? மாகபா ராமர் போன்ற பலர். அப்புறம் இவர்கள் எந்த முகத்துடன் இரங்கல் தெரிவிக்கறாங்க?
# இந்த இரங்கல் தெரிவிப்பது என்பது ஒரு சடங்காக மாறிவிட்டது. பிரபலங்கள் யாரும் இரங்கல் தெரிவிக்காமல் போனால் இவர் ஏன் வரவில்லை அவர் ஏன் இரங்கல் சொல்லவில்லை என்று ஒரேயடியாக விமர்சனங்கள் வருகின்றன. எல்லாம் நம்ம தலையெழுத்து வேற என்ன சொல்ல?
& // குடியினால் நல்ல திறமைசாலிகளை (வடிவேலு பாலாஜி, ரோபோ சங்கர்...) இழப்பதற்கு அவங்களோட குடிகார நண்பர்கள்தான் காரணமா? // இல்லை - அவரவர்களின் தலைவிதிதான் காரணம்.
கே. சக்ரபாணி சென்னை 28.
திடீரென்று அமரிக்க அதிபர் ட்ரம்ப், 'இன்று முதல் உலகம் முழுவதிலும் செல்போன்கள் இயங்காது' என்று ஒரு அறிக்கை விட்டால் எப்படி இருக்கும்?
& 🤔 ட்ரம்ப் அறிக்கை விடுவதா! நம்ம ராகுல் சொன்னாலே போதாதோ! நிற்க! டிரம்ப் என்னும் 0.5 பை******ர் அடுத்து எதை எடுப்பார், எதைக் கிழிப்பார் என்று யாராலும் சொல்ல இயலாது!
# நடக்காது என்று தெரிந்திருப்பதால் கவலை தராது.
பானுமதி வெங்கடேஸ்வரன்:
குழந்தைகளுக்கு சொல்லும் கதைகளில் ஒரு நீதி இருக்க வேண்டும் என்பது நம் பழக்கம். ஆனால் மேற்கத்திய நாடுகளில் குழந்தைகளுக்கு சொல்லும் கதைகளில் மாரல் எதுவும் சொல்வதில்லை. குழந்தைகளை குஷிப்படுத்தும் fantasy கதைகள்தான். நீதியை வலியுறுத்தக் கூடாதாம். நம் ஊரிலும் இந்த கருத்து இப்போது வந்திருக்கிறது. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
# நர்சரி ரைம்ஸ் என்பதில் வேண்டுமானால் நீங்கள் சொல்வது போல நிறைய எதிர்மாறான விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கலாம் - (அது கூட எல்லாவற்றிலும் அல்ல). ஆனால் குழந்தைகளுக்கான கதைகளில் சிக்கலில்லாத இனிய கற்பனைகள் மட்டுமே என்பது சரிதானா என்று எனக்குத் தெரியவில்லை. தேவதைக் கதைகள் ஈசாப் கதைகள் மத அடிப்படையான கதைகள் இதெல்லாம் போதனைகள் உள்ளவைதானே.
இப்போது எல்லாவற்றையும் தூண்டித் துருவிப் பார்க்கிறார்கள். வாதத்துக்காக சொல்லப்படும் விஷயங்களை எல்லாம் நடைமுறைக்கு ஏற்றுக் கொள்ள முடியுமா என்பது என்றும் விடை காண முடியாத கேள்வி.
= = = = = = = = =
படமும், பதமும்
- - - - -
இந்தப் பருந்து கொஞ்சம் கோபக்காரப் பருந்து போல இருக்கிறது. அதனால் முகத்தை மூடி வைத்திருக்கிறார்கள்.
- - - - - - -
புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசை இருந்தாலும், மனதுக்குள், சட் என்று பருந்து கொத்திவிட்டால்? என்ற பயமும் இருந்தது!
- - - - - - - -
பானுமதி வெங்கடேஸ்வரன்:
சாதாரணமாக வெளிநாடுகளில், சுவரில் எழுதுவது, விளம்பரம் செய்வது போன்றவைகளை பார்க்க முடியாது. அதனால் இந்த சுவர் வாசகம் ஆச்சரியப்படுத்தியது.
- - - - - - - - -
சமீபத்திய சென்னை விஜயத்தில், வழக்கம் போல சென்னையின் அசுர மாற்றங்கள் கண்ணில் பட்டன. பெங்களூரு போல இப்போது - பாண்டுரங்கன் பலகாரக் கடைகள் கூட gpay phonepe என்று அசத்துகிறார்கள்.
சொந்த பந்தங்களை நேரில் கண்டு, அவர்களோடு பேசிச் சிரித்துப் பழகியது மனதுக்கு நிறைவளித்தது.
குரோம்பேட்டையைச் சுற்றியுள்ள குமரன் குன்றம், திருநீர்மலை கோவில் (மூலவரை எங்கும் காணோம்!) , உள்ளூர் சுந்தர விநாயகர் கோவில், சிறிது தொலைவில் அமைந்திருக்கும் (28 கி மீ) வல்லக்கோட்டை முருகன் கோவில் எல்லா இடங்களுக்கும் சென்று பக்தி செய்து பரவசம் அடைந்தேன்.
உறவினர் வீட்டில், அவரது மருமகளின் கைவண்ணம். இது ஒரு சிறு துளிதான். வீடு முழுவதும் இன்னும் நிறைய கைவினைப் பொருட்கள் உள்ளன.
= = = = = = = = = = = =
பெற்றோர்கள் இருவரையும் படத்தில் காண்கிறேன்... மனதில் பதிந்த வரி. குலதெய்வக் கோயில் எனும்போதே நம் முன்னோர்கள் சென்ற கோயில், தெய்வத்தை தரிசிப்பது முன்னோர்களைத் தரிசிப்பது போல என்ற கருத்து உண்டு.
பதிலளிநீக்குஆம். நன்றி.
நீக்குஒரு தசாப்தத்திற்குப் பிறகு பல இடங்களுக்கும் சென்றுவருவது உங்கள் மனதில் புத்துணர்ச்சியை உண்டாக்கியிருக்கும்.
பதிலளிநீக்குவாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தரிசிக்க வேண்டிய கோயில்களையும், பார்க்கவேண்டியவர்களையும் பார்த்துவிடுங்கள். அருமையான தமிழக உணவுவகைகளை மறந்துவிடாதீர்கள்.
அப்படியே ஆகட்டும் அரசே!
நீக்குநான் நீளப் புடலங்காய் என நினைத்து பிறகு புரிந்துகொண்டேன். பச்சை நிறப் பாம்பு ரொம்ப ஒல்லியாக இருக்கும்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது சரியே.
நீக்குநாம் வட இந்தியப் பகுதிகளில் பிரயாணம் செய்து கோயில்களைப் பார்த்தால் மக்களிடம் பக்தியுணர்வு தென்னகத்தைவிட மிக அதிகம் எனப் புரிந்துகொள்ளலாம். ஆன்மீகப் பெரியவர்கள் தென்னகத்தில் அதிகம் என்பது உண்மைதான். ஒருவேளை இங்குதான் பக்தியை வளர்க்கணும் என இறைவன் நினைத்திருக்கலாம்.
பதிலளிநீக்குகலாம்.
நீக்குஅவருக்கு நம் தலையில் மரபணு மாற்றப்பற்றவற்றைத் தலையில் கட்டணும், இந்திய விவசாயம் அவர்கள் நாட்டைச் சார்ந்திருக்கணும், பால் பொருட்களையும் இங்கே கொட்டிவிடணும் என்ற ஆசைதான் இத்தகைய எடுத்தேன் கவிழ்த்தேன் செயல்களுக்குக் காரணம். மன்மோகன் தலைமையிலான கூட்டணி அரசாக இருந்திருந்தால், நாட்டையே விற்கவும் நம் அரசியல்வியாதிகள் ராகுல் உட்பட தயங்கியிருக்க மாட்டார்கள்.
பதிலளிநீக்கு:))))
நீக்கு//காதலிகளை சமீப காலத்தில்//- எனக்கும் சிறிய வயதில் என்றுடன் படித்த சில பெண்களைச் சந்திக்க ரொம்பவே ஆசை. மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டுவிடுமோ என அச்சம். அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதும் கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்று.
பதிலளிநீக்குஆமாம் , ஆமாம்!!
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் முருகா.
நீக்குடிரம்பர் கிடக்கட்டும்...
பதிலளிநீக்குபக்கிகளுக்காக கண்ணீர் விடுபவர் இங்கே ஏராளம்..
:))))
நீக்குச்மீபத்திய டமால் டுமீல்களுக்கு பக்கி காரணம் அல்ல என்றே இன்னும் ஒரு கூட்டம் புலம்பிக் கொண்டு இருக்கின்றது..
பதிலளிநீக்குஎனெனில்
இது பாருக்குள்ளே நல்லநாடு..
:(((
நீக்குவடவர்களுக்கு பக்தி என்பது ஒரூ வெறி, போதை. தென்னவர்களுக்கு அது ஒரு சாந்தி,ஆறுதல், த்யானம். வடவர்கள் செயல்களால் தங்கள் பக்தியை வெளிப்படுத்திக்கொண்டால் தென்னவர்கள் வாக்குகளால் பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.
பதிலளிநீக்குவிடலைப்பருத்தல் ஏற்படுவது காதல் அல்ல. கவர்ச்சி. காதல் உண்மையில் மத்திய வயதில் தான் அரும்புகிறது.
Jayakumar
கருத்துரைக்கு நன்றி.
நீக்குபக்தி உணர்வு தென்னிந்தியர்களைவிட வடவர்களுக்கு அதிகம் என்று சொல்லப்படுவதை உணர்ந்திருக்கிறீர்களா? //
பதிலளிநீக்குஇதற்கான & பதில் சூப்பர்.
கீதா
நன்றி.
நீக்குநெல்லை, சமீபத்தில் தமனாவை வீடியோக்களில் பார்த்தீங்களஆ? இடையில் ரொம்ப வருத்தப்பட்டீங்களே கிழவியாகிட்டாங்க அப்படி இப்படினு. இப்ப பாருங்க சிக்னு பழைய மாதிரி....!
பதிலளிநீக்குகீதா
பழைய வீடியோவோ?
நீக்கு