4.10.25

பெண் பயணிக்கு பாதுகாப்பு வழங்கிய பைக் டாக்சி டிரைவர் மற்றும் நான் படிச்ச கதை,

 

இத்தனை கோடிப்பேர் உள்ள உலகில் அநாதையாகச் செத்துப் போவது துயரமானது, அமீரக நாடுகளுக்கு இங்கிருந்து பிழைப்பிற்காக கூலிவேலைக்குப் போனவர்கள் ஏராளம், இப்படிச் செல்பவர்களில் அகால மரணமடைந்தவர்களின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க வழிமுறைகளோ, வசதியோ இல்லாதவர்கள் நாடுவது கெளசர் பெய்க் அவர்களைத்தான்.

கெளசர் பெய்க் நம் சென்னைக்காரர். திருவல்லிக்கேணியில் பிறந்தவர். அம்மா வகையில் அமீர் மகால் குடும்பத்தின் உறவினர். தற்போது துபாயில் கழிவுமேலாண்மை நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். இதுவரைக்கும் இவர் ஏறத்தாழ 1300 உடல்களை உரிய முறைப்படி இறுதி மரியாதை செய்து வழியனுப்ப உதவியிருக்கிறார்.இறந்து அடையாளம் தெரியாதவர்கள் இந்தியரென்று அடையாளம் காணப்பட்டால் அந்த் அந்நாட்டுக் காவல்துறை நாடுவது கவுசரைத்தான், இறந்தவரின் உறவினர்களை தேடிக்கண்டுபிடித்து, தகவல் சொல்லி, தூதரக நடைமுறைகளை முடித்து,நண்பர்கள் உதவியுடன் அதற்கான செலவுகளை ஏற்று ஊருக்கு அனுப்பிவைப்பது வரை கடமையாகக் கருதிச் செய்கிறார்.  இறந்து நாள்பட்ட உடல்களை உறவினர்கள் அங்கேயே அடக்கம் செய்யச்சொல்வதும் நடப்பதுண்டு, அப்படியான நேரங்களில் நேரடியான ஒளிபரப்பில் அவர்கள் சொல்வதுபோல இறுதிச்சடங்குகளைச் செய்து இறந்தவருக்கு இறுதி மரியாதை செய்து அனுப்பி வைப்பது கெளசரின் வழக்கம். அந்த வகையில் இஸ்லாமியரான கெளசர் பல இந்துக்களுக்கு, குடமுடைத்துக் கொள்ளி வைத்திருக்கிறார்.   ‘சில நேரங்களில் நாட்டைவிட்டு வந்து நீண்ட நாட்கள் தொடர்பில் வராதவர்களைப்பற்றி அவரது உறவினர்கள் மூலமாகத் தகவல் வந்து சேரும். அப்படிப்பட்டவர்கள் பற்றிய விவரமறிய பலவழிகளில் முயற்சி செய்வோம். மார்ச்சுவரிகளில் அடையாளம் தெரியாத சடலங்களாகவும் அவ்வாறு தேடப்படுபவர்களைக் காண்பதுண்டு. குறைந்தபட்சம் அவர்களின் உடலையாவது சொந்த ஊருக்கு அனுப்பவோ, அல்லது இங்கேயே இறுதிச்சடங்குகள் செய்தோ ஒரு மனிதனின் வாழ்க்கையை நிறைவு செய்வோம்,’ என்கிறார்.

எங்கிருந்து தொடங்கியது இந்தப் பணி..?

 ‘2012 – என் முகநூல் நண்பர்கள் இளங்கோவன் கீதா, கலாராணி ஆகியோர் சமூகவலைதலத்தில் ஒரு செய்தியைப் பகிர்ந்திருந்தனர், தஞ்சாவூரைச் சேர்ந்த ஜேசுதாஸ் ஜெயராஜ் என்பவர் துபாயில் தச்சுத்தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார், அவர் ஒரு விபத்தில் அடிபட்டு கோமா நிலையில் இருப்பதாகவும், அவரை ஊருக்குக் கொண்டுவர அவரது குடும்பத்தாருக்கு வசதியில்லாமல் தவிப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.  அவரைத் தேடிக்கண்டுபிடித்து அரசுரீதியான சம்பிரதாயங்களை முடித்து, பணமும் திரட்டி அவரை ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துவிட்டேன், ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார், நோயாளியாக ஒருவரை அனுப்புவதற்கான சம்பிரதாயங்கள் வேறு, சடலமாக அனுப்புவதற்கான சம்பிரதாயங்கள் வேறு என்பதால் திரும்பவும் முதலிலிருந்து எல்லாவற்றையும் தொடங்க வேண்டியிருந்தது, இறந்துபோனவரின் மகனுக்கு +2 தேர்வு இருந்ததால் இந்தச் செய்தியால் அவர் தேர்வில் கவனம் செலுத்த முடியாமல் போய்விடக்கூடாது என்று கருதினேன்.  அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து முடிப்பதற்குள் அந்தத் தம்பி தேர்வெழுதி முடித்திருந்தார். அப்போது இங்குள்ள நடைமுறைகள் எனக்குத் தெரியாதென்பதால் ஏறத்தாழ பதினைந்து நாட்கள் நான் இதற்காக அலையவேண்டியிருந்தது. அதன்பிறகு நானே ஜேசுதாசின் சடலத்தை எடுத்துக்கொண்டுபோய் ஒப்படைத்துவிட்டு வந்தேன்... இப்படியாகத்தான் இந்தப் பணி் தொடங்கியது,’ என்கிறார் கெளசர்.  தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இப்படி அனுப்பி வைத்திருக்கிறார், இலங்கை, பாகிஸ்தான், அண்மையில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவரையும் அனுப்பி வைத்திருக்கிறார்.

இதில் நீங்கள் சந்திக்கும் சிக்கல் எதாவது இருக்கிறதா..?

இங்குள்ள அரசு சார்ந்த ஏற்பாடுகளைச் செய்வதிலோ, பணம் திரட்டுவதிலோகூடப் பிரச்னை எதுவுமில்லை... இங்கிருக்கும் ஒருவரது வீட்டிற்கு அழைத்து சம்பந்தப்பட்டவர் விபத்து அல்லது தற்கொலை காரணமாக இறந்துவிட்டார் என்பதைத் தெரிவித்தவுடன் நீங்கள் யார் என்று கேட்பார்கள். எனக்கு அவரோடு நேரடி தொடர்பில்லை என்று சொன்னால், அதை நம்ப மாட்டார்கள். அவரது மரணத்திற்கு ஏதோ ஒரு வகையில் நான்தான் காரணமென்று நம்பி என்னை விசாரணை செய்வார்கள்.  மும்பையில் சீதா கேம்ப் என்னும் பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவர் இங்கு ஒரு விபத்தில் இறந்துவிட்டார், அவரது உடலை நானே கொண்டு சென்றேன். அங்கிருந்தவர்கள் நான்தான் விபத்தை உண்டாக்கியவன், அந்தக் குற்ற உணர்ச்சியில்தான் உடலை ஒப்படைக்க வந்திருக்கிறேன் என என்னைச் சூழ்ந்துகொண்டு தாக்கத்தயாரானார்கள். சலீமின் தாயாரும், சகோதரரும் நிலைமையைப் புரிந்துகொண்டு காப்பாற்றி அனுப்பி வைத்தார்கள். அதன்பிறகு இவ்வாறு செல்லும்போது அந்தப் பகுதியின் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து, அவர்களின் உதவியைப் பெற்றபிறகே செல்கிறோம்.  இங்கேயே சிலருக்கு இறுதிச் சடங்கு செய்யும்போது நீ எப்படி எங்கள் சடங்குகளைச் செய்யலாம் என்று இந்துக்களும், நீ எப்படி அந்தச் சடங்கைச் செய்யலாம் என்று இஸ்லாமியர்களும் ஆட்சேபம் தெரிவிப்பதும் நடந்திருக்கிறது. அதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை,’ என்கிறார்.  சடலங்களை அனுப்பி வைப்பது மட்டுமே கெளசர் செய்யும் சேவையில்லை, ஏஜண்ட்டால் ஏமாற்றி அழைத்து வரப்பட்டவர்களை மீட்டு அனுப்பி வைப்பது, விசா முடிந்து அவதிப்படுபவர்கள் என யார்யாருக்கெல்லாம் எந்த வகையில் உதவி தேவைப்படுகிறதோ அவர்களுக்கெல்லாம் உரிய உதவிகளைச் செய்கிறார், தனியொரு மனிதனாக இவரது சேவைகளைப் பார்த்த அதில் இணைய விரும்பிய  நல்லெண்ணம் கொண்ட நண்பர்களைக் கொண்டு HOPE என்னும் வாட்சப் குழுவை உருவாக்கி இத்தகைய சேவைகளைச் செய்கிறார்கள். 2023 முதல் செயல்பட ஆரம்பித்த இந்தக்குழு துபாய், குவைத், சவூதி, கத்தார் ஆகிய நாடுகளில் இயங்குகின்றனர். தாய்லாந்து வழியாக பர்மா சென்று விசாப்பிரச்னையில் சிக்கித்தவித்த ஐம்பது தமிழர்களை மீட்டு தாயகத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள்.  பல சிக்கல்களையும் தாண்டி, உணவின்றித் தவிக்கும் பாலஸ்தீனக் குழந்தைகளுக்கும் உணவு உடைகளை அவ்வப்போது அனுப்பி வைக்கிறார் கெளசர்.  ‘இது எப்போது வேண்டுமானாலும் எனக்கு பெரிய பிரச்னையை உண்டாக்கக்கூடும், ஆனால் மனசு பொறுக்காமல் இதைச் செய்கிறேன்.  இந்த உலகத்தவிட்டு போறப்ப, நாம சேத்துவெச்ச எந்தச் செல்வமும் கூடவரப்போறதில்லைங்க, கொஞ்சம் புண்ணியத்தைத் தவிர,’ முடிக்கிறார் கௌசர். (நன்றி - கவிதா பாரதி ...)

Thank You JKC Sir.

===============================================================================


சென்னைக்கு முதல் முறையாய் வரும் அனைவருக்கும் பயனுள்ள தகவல்!!!*
"நான் சென்ட்ரல் வந்துட்டேன்.  கே.கே.நகருக்கு நான் எப்படி வரணும்?
பஸ் பிடிச்சு வரணுமா இல்லை ஆட்டோவா?''
இனி அதிகாலை நேரத்தில் சென்னைக்கு வந்து இறங்கியதும் யாருக்கும் போன் செய்து வழி கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
உங்களுக்கே உங்களுக்காக வந்துவிட்டது *'ரூட்ஸ்’*. சென்னையில் எந்த வழித்தடத்தையும் ஒரே போனில் தெரிந்துகொள்ளலாம்.
''இந்த ஐடியா நல்லா இருக்கே?'' என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான அஸ்வின் குமாரிடம் கேட்டால்,
''ஒரு நாள் ராத்திரி கிண்டி பக்கத்துல டீக்கடையில நின்னுட்டு இருந்தேன். அந்த டீக்கடைக்காரர்கிட்ட வெளியூர்க்காரங்க வந்து வழி கேட்டுட்டுப் போனாங்க.
அவருக்கும் ரூட் தெரியலை. அந்த நொடிதான் 'சென்னையில தினமும் இப்படி எத்தனை பேரு பஸ் ரூட் தெரியாம தவிக்குறங்க?
அவங்களுக்கு வழிகாட்ட ஏதாவது செய்யணும்’னு முடிவுபண்ணி, என்னோட நண்பர் பரத் சோமானிகிட்ட இதுபத்திப் பேசினேன்.
ரெண்டு பேரும் சேர்ந்து சென்னையில் ஒட்டுமொத்த பஸ் ரூட் சம்பந்தமான அத்தனை தகவல்களையும் சேகரிச்சோம்.
.
திரட்டின தகவல்களை நெட்டுல போடுறதுல எந்தப் பிரயோஜனமும் இல்ல. நடுரோட்டுல நிற்கிறவங்களால இன்டர்நெட் பார்க்க முடியாது.
அதனால நம்பர் கொடுத்து, நீங்க எங்கே போகணுமோ நாங்க ரூட் சொல்றோம்னு விளம்பரப்படுத்தினோம்.
.
ஒரு நாளைக்கு 2,500 கால்கள் வர ஆரம்பிச்சுருச்சு.
.
அப்புறம்தான் இந்த 'ரூட்ஸ்’ கம்பெனியை ஆரம்பிச்சிட்டோம்.
.
*Cell No., -> 86 95 95 95 95*
.
நம்பருக்கு யார் போன் செஞ்சாலும், அவங்களுக்குத் தேவையான பஸ் ரூட், லோக்கல் டிரெய்ன் ரூட், டைம்னு எல்லா விஷயங்களும் சொல்வோம்.
அதோட நீங்க வெளியூர் கிளம்பினால், அந்த ஊருக்கு ரயில் வசதி இருக்குதா? அதில் இடம் இருக்குதானு அத்தனை தகவல்களும் கொடுப்போம்'' என்றார்.
நல்ல தொடக்கம்!
Thank you JKC Sir..
================================================================================

ஹைதராபாத்: வாடகை கார், டாக்சி, பைக் டாக்சி டிரைவர்களுடன் கசப்பான அனுபவங்கள் குறித்தே தொடர்ந்து செய்திகள் வெளிவரும் நிலையில், பெண் பயணிக்கு பாதுகாப்பு வழங்கிய பைக் டாக்சி டிரைவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.  ஆட்டோ, கார்களை போல வாடகைக்கு பைக்கை இயக்கும் நிறுவனங்களில் ஒன்று 'ராபிடோ' இதில் பைக் ஓட்டும் நபர் ஒருவர் சமீபத்தில் பெண் பயணியை அழைத்துச் சென்று அவரது வீட்டில் விட்டுள்ளார்.  வீட்டு வாசலில் இறங்கிய அந்த பெண், வீட்டு சாவியை எங்கோ தவறவிட்டதை அறிந்தார். தோழியுடன் அந்த வீட்டை அவர் வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். இதனால் தோழியை தொடர்பு கொண்டு மாற்று சாவியை எடுத்து வரும்படி கூறியுள்ளார்.  தோழி வரும் வரை அந்தப் பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராபிடோ டிரைவர் வாசலிலேயே காத்திருந்துள்ளார். அவரது தோழி சாவியுடன் வந்த பின் விடைபெற்று சென்றார். இதை அந்த பெண் வீடியோ எடுத்து இன்னமும் மனிதாபிமானம் உள்ளது என குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். ராபிடோ டிரைவரின் இந்தச் செயலை பலரும் பாராட்டி உள்ளனர்.  இந்த சம்பவம் எங்கு நடந்தது என்ற தகவல் வெளியாகவில்லை. கர்பா இரவு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது, இந்த அனுபவத்தை பெற்றதாக அந்த பெண் குறிப்பிட்டு உள்ளார்.
=================================================================================================
 

 

நான் படிச்ச கதை (JKC)

தாய்

கதையாசிரியர்: சிவசங்கரி


வாசகர்கள் சிவசங்கரியைப் பற்றி அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. வை மு கோதையம்மாள் துடங்கி வைத்த பெண் எழுத்தாளர்கள் வரிசை லக்ஷ்மி, அம்பை, சூடாமணி, அனுராதா, சிவசங்கரி, இந்துமதி, வாஸந்தி, என்ற பட்டியலில் இடம் பெறும் சிவசங்கரியின் எழுத்து ஒரு தனி. மத்திய தர மக்கள் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சமூக அவலங்களை படம் பிடித்துக் காட்டும் கதைகள், பெண்ணுரிமையை வலியுறுத்தும் கதைகள், என்று சமூகச் சீர்திருத்தத்திற்கு முயலும் இலக்கு வாசிப்பவர்களின் மனதில் நெருடும்.

 

இந்திய இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக தொகுத்துப்பார்க்கும் இலக்கிய முயற்சியான 'இலக்கியம் மூலம் இந்திய இணைப்புதமிழுக்கு இவருடைய கொடை. 

மெல்லுணர்ச்சிகளை முன்வைக்கும் நடையும் நிகழ்வுப்போக்குகளும் கொண்ட பொதுப்போக்கு எழுத்து சிவசங்கரி எழுதியது. அவை புகழ்மிக்க வார இதழ்களில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்டன. குடியின் தீமை பற்றி சிவசங்கரி எழுதிய 'ஒரு மனிதனின் கதை' ஒரு நல்லெண்ண எழுத்து. புனைவு என்னும் வகையில் பாலங்கள் அவருடைய சிறந்த ஆக்கம் என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். மூன்று தலைமுறைப் பெண்களின் வாழ்க்கையின் விழுமிய மாறுதல்களைச் சொல்லும் நாவல் அது. சிவசங்கரியின் மேற் சொன்ன இரு நாவல்களையும், எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய 'தமிழின் சிறந்த பொழுது போக்கு நாவல்கள்' பட்டியலில், சமூக மிகுகற்பனை படைப்புகள் வரிசையில் சேர்க்கிறார் 

சிவசங்கரி அக்டோபர் 14, 1942-ல் சூர்யநாராயணன், ராஜலெக்ஷ்மி இணையருக்கு நான்காவது குழந்தையாக சென்னையில் பிறந்தார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயத்தில் கல்வி கற்றார். பின் சென்னை, SIET மகளிர் கல்லூரியில் விலங்கியலில் இளநிலைப் பட்டம் பெற்றார்.

சிவசங்கரி 1963-ல் பொறியாளர் சந்திரசேகரனை மணந்தார். சிவசங்கரி நேஷனல் சிட்டி வங்கியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார். சிவசங்கரியின் கணவர் சந்திரசேகரன் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் மண்டல மேலாளராகப் பணியாற்றியவர். சிவசங்கரியின் மாமனார் விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி என்னும் சிற்றூரில் தொடங்கிய தொழிற்சாலையை நிர்வாகம் செய்வதற்காக சிவசங்கரியும் அவர் கணவரும் தங்கள் வேலைகளைத் துறந்துவிட்டு அவ்வூருக்குச் சென்று வாழ்ந்தனர். சிவசங்கரிக்கு ஒரு மகள்.

சிவசங்கரி சூரியவம்சம் என்னும் தன்வரலாற்று நூலை எழுதியிருக்கிறார்

https://madrasmusings.com/vol-32-no-7/sivasankari-as-seen-by-sivasankari/ 

இந்த தாய்கதையாகத் தோன்றவில்லை, அவருடைய சொந்த வாழ்க்கையில் நடந்த ஒன்று என்றே எனக்குத் தோன்றுகிறது.  

தாய்

கதையாசிரியர்: சிவசங்கரி

அம்மா…”

என்ன இந்துக் குட்டீ?”

என்னம்மா பண்ணிட்டு இருக்கீங்க?”

ஒரு க்ளயண்டோட முக்கியமான விஷயம் பேச வேண்டியிருக்கு-அதுக்காக பாயிண்ட்ஸ் தயாரிச்சிகிட்டு இருக்கேன்..என்ன வேணும்மா?”

இல்லேம்மா.. வந்து…”

சொல்லு டார்லிங், அம்மாக்கு நாழியாவுது பாரு…”

நாளன்னிக்கு எங்க ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டே மம்மிநீங்களும், டாடியும் வரணும் மம்மீ..”

நாளன்னிக்கா? ஏழாம் தேதியா? சாயங்காலமா? ஸாரிடா அன்னிக்கு போர்ட் மீட்டிங் இருக்கு. முடிய ஏழு, எட்டு ஆயிடுமேடா, ஏன் முன்னாலியே சொல்லலை? ம்…? அப்பாவும் லண்டன் லேந்து அடுத்த வாரம்தான் வர்றார்…”

ப்ளீஸ் மம்மி..எல்லார் அப்பா, அம்மாவும் வருவாங்க மம்மி…”

முடிஞ்சா வரமாட்டேனா இந்தும்மா? மறுநாள் ஸண்டே தானே? அன்னிக்கு நீயும் நானும் சோழாக்குப் போய் ஒண்ணா ஸ்விம் பண்ணிட்டு சாப்பிட்டுட்டு வரலாம்ஒகே?”

ப்ராமிஸ்?”

ப்ராமிஸ்! இப்ப அம்மாவைத் தனிய விட்டுட்டு ஓடிடுடா…”

மம்மி…”

எஸ் இந்து?”

வெளிலே போகப் போறீங்களா?”

ம்ம்-ரோட்டரி கூட்டத்திலே விமன் ஆப் இண்டியாவைப் பத்தி பேசப் போறேன்

மாலை போடுவாங்களாம்மா?”

போடுவாங்கடா!”

அப்பாவும் வர்றாராம்மா?”

வரார் ஸ்வீட் ஹார்ட்…”

நா-நானும் வரட்டுமா?”

இது பெரியவங்க கூட்டம் இந்து. உனக்கு போரடிக்கும். உமாவை விட்டு உன்னை பீச்சிக்கு அழைச்சிட்டுப் போகச் சொல்றேன். ஹவ் அபௌட் ஐஸ்கிரீம்?”

உங்க மடிலே நா உட்கார்ந்துக்கட்டுமாம்மா?”

வேணாம் டார்லிங்புடவை கசங்கிடும். கிட்ட வா.. அம்மா உனக்கு ஒரு கட்டி முத்தா கொடுக்கிறேன்.. உமா, இவளை அழைச்சிட்டு பீச்சுக்குப் போயிட்டு, வர்றப்போ தாஸ்ப்ரகாஷ் ஐஸ்கிரீம் வாங்கிக் கொடு, என்ன?”

----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்து தூங்கிட்டாளா, உமா?”

இப்பத்தான் படுக்க வச்சேன். தண்ணி கேட்டா, எடுக்க வந்தேன்…”

அந்த டம்ளரை என்கிட்டே குடு. நா எடுத்துட்டுப் போறேன்.”

ஹாய் மம்மி…”

ஹலோ-குட்டிம்மா.. ஸர்ப்ரைஸ் பாத்தியா?”

மம்மிமம்மிமம்மிமம்மி…”

ஷ்.. ஷ்போதும்..போதும்டா..இந்தா தண்ணி…”

வேணாம்..கிஸ் வேணும்நிறைய..அம்மா, இப்ப உங்க மடிலே நா உட்காரலாமா? புடவை கசங்கினா பரவாயில்லையா?”

உட்காருடா..வா..இந்தக் கன்னத்துக்கு ஒரு கிஸ்-அந்தக் கன்னத்துக்கு ஒரு கிஸ். போதுமாடா?…இந்தா தண்ணி; குடிச்சிட்டு சமர்த்தா படுத்துக்கோமம்மி, இன்னிக்கு உனக்கு ஜோரா ஒரு கதை சொல்லப் போறேன்…”

ஹய்யாமம்மிஎன்....ம்..மி…”

.கே. .கே. கழுத்தை விடுடாபடு..படுத்தாச்சா?…ஒரு ஊர்ல ஜாக் ஜாக்னு ஒரு பையனாம்அவனுக்கு ஒரு அம்மாவாம்…”

மம்மிநீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க…”

தாங்க்யூடா கண்ணா-நீயும்தான் கொள்ளை அழகுசரி..பேசாம கதையைக் கேளுஅந்த பையன் ஒருநாள்என்ன உமா?”

மிஸ்டர் ராமன் போன்ல கூப்பிடறார்..அர்ஜெண்டா பேசணுமாம்…”

பத்து நிமிஷம் கழிச்சி நா பேசறேன்னு சொல்லேன். இரு, இரு, வேணாம், நானே வரேன்.”

கதை மம்மி?”

மிஸ்டர் ராமன் ஒரு முக்கியமான க்ளயண்ட் இந்து, அவசியம் இல்லாட்டி கூப்பிடமாட்டார். இன்னொரு நாள் அம்மா கதை சொல்றேன்..குட் நைட் டார்லிங்…”


கேக் ரொம்ப நல்ல இருக்கு மாலினி.. வாங்கினதா இல்லே, வீட்டிலே செய்ததா?”

வாங்கினதுதான் ராஜி..வீட்டுல செய்ய நேரம் எங்கே?”

எம்.பி.. படிச்சிட்டு, ஹுஸ்பண்ட் கூடவே ஆபீஸ்லேயும், பார்ட்னரா இருந்து, எல்லாத்தையும் கவனிச்சுக்கறே-நேரம் இருக்காதுதான்ஆண் பிள்ளைக்கு சரியாய் பெரிய வேலையும் பார்த்துகிட்டு வீட்டையும் இத்தனை அழகா நீ எப்படித்தான் கவனிக்குறியோ.. என்னால முடியாதும்மா…”

கஷ்டமாதான் இருக்குஆனாலும், நம்ம வீட்டு வேலைய நாமதானே கவனிக்கணும்…”

இதான் உன் பொண்ணா?”

இந்தூ-குளிச்சிட்டு வந்திட்டியா..இங்க வா டார்லிங். ஸே ஹல்லோ ஆண்ட்டி.. இது அவங்க டாட்டர் அனுராதா.. அழைச்சிட்டுப் போய் விளையாடுடா…”

-----------------------------------------------------------------------------------------------------

இந்த பொம்மை மாதிரி நா பார்த்ததே இல்லே-இந்தூ…”

எங்கப்பா லண்டனிலேந்து வாங்கிட்டு வந்தார்…”

அந்த வீடு?”

அது பம்பாய்ல வாங்கினதுஉன் ப்ராக்லே இது என்ன பொம்மை, பொம்மையா?”

எங்கம்மாவே எம்ப்ராய்டரி பண்ணி தைச்சது…”

உங்கம்மாவேவா?”

ஆமா-என் ப்ராக்ஸ் எல்லாம் அம்மாவே தைப்பாங்கஎங்கம்மா ரொம்ப நல்லவங்க, தெரியுமா…”

எங்கம்மாவும் தான் நல்லவங்க; ரொம்ப கெட்டிக்காரங்கஆபீஸிலே அப்பா மாதிரி எங்கம்மாவும் வேலை பண்ணறாங்களே…”

எங்கம்மா கேக் பண்ணுவாங்கஎன்னோட பீச்சிக்கு வருவாங்கஎன்னை குளுப்பாட்டி, டிரஸ் பண்ணுவாங்ககதை சொல்லுவாங்க..எப்பவும் என்கூடவே இருப்பாங்களே…”

எங்கம்மாவும்தான் கதை சொல்லுவாங்க..ஆமா, வந்து வந்துஉங்கம்மா எப்பவும் உன்கூடவே இருப்பாங்களா அனு?”

..ப்....வும்…”

---------------------------------------------------------------------------------------------

உமா, டாக்டர் வந்திருக்கார்னு சொல்லி இந்துவைக் கூட்டிட்டு வா..என்னமோ தெரியலை டாக்டர், ஒரு வாரமா இந்து சரியாவே இல்லே. எது கேட்டாலும் சரியாய் பதில் சொல்றது இல்லே. ‘ம்முனு இருக்கா. ஒழுங்கா சாப்பிடறதில்லையாம், விளையாடறதில்லையாம்......உமா சொல்றா...கிட்ட நின்னு கவனிப்போம்னா முடியாதபடி எனக்கும் இப்பப் பார்த்து ஆபீஸ்லே எக்கச்சக்க வேலை…”

சுந்தர் எங்கே?”

அவர் ஊர்ல இல்லே டாக்டர். ஒரு செமினாருக்காக கல்கத்தா போயிருக்கார்.. நாளைக்கு வந்திடுவார்.. கூப்பிட்டா வராளா பாருங்க, இந்தூ…”

வந்துட்டேன் மம்மி…”

என்னம்மா பண்ணிட்டு இருந்தே?. உன்னை செக்அப் பண்ண டாக்டர் அங்கிள் வந்திருக்கார்ஸே, குட்மார்னிங்

குட்மார்னிங்

குட்மார்னிங் இந்தூ; இப்படி வா....சொல்லு

…”

இங்கே வலிக்குதா? இங்கே?”

ம்ஹூம் இல்ல…”

என் பக்கத்திலே உட்காரு. அடேயப்பா..என்னமா வளர்ந்திட்டம்மா! உன்னை, இத்துனூண்டு குழந்தையா வெளிலே எடுத்துப் போட்டவன் நான்தான், தெரியுமா?”

அம்மா தொப்பைலேந்து என்னை வெளிலே எடுத்தது நீங்கதானா அங்கிள்?”

நானேதான்

எப்படி எடுத்தீங்க? அம்மா தொப்பைல ஜிப் இருக்கா.. திறந்து எடுத்தீங்களா?”

அதுஅப்படி இல்லே இந்தூ..அதை விளக்கிச் சொன்னா உனக்கு இப்பப் புரியாதும்மா…”

டாக்டர் படிப்பு படிச்சாதான் புரியுமா?”

ம்-ஆமா-பெருமூச்சி விடுதிரும்பு…”

அங்கிள்…”

என்னம்மா?”

வந்துவந்து..தொப்பைலேந்து எடுக்கற மாதிரி, திரும்ப தொப்பைக்குள்ளியே என்னை வைச்சிட முடியுமோ?”

?. அது எப்படி முடியும் இந்து?”

ஏன் முடியாது அங்கிள்?”

இப்ப நீ பெரிசா வளர்ந்திட்டயே!”

மருந்து கொடுத்து பெரியவளை சின்னப் பாப்பாவா சுருக்க முடியாது?”

ம்ஹூம்-முடியாது…”

ஏன் முடியாது?”

வந்து-, இன்னும் அந்த மருந்தை யாரும் கண்டு பிடிக்கலையே!”

நீங்க பெரிய டாக்டர்னு மம்மி சொல்வாங்களே, நீங்க கூட கண்டுபிடிக்கலியா அங்கிள்?. சுருக்க கண்டு பிடிச்சி, அந்த மருந்தை எனக்குக் கொடுத்து திரும்ப அம்மா தொப்பைக்குள்ள போக வைச்சிடுங்க அங்கிள். அப்பத்தான் அம்மாவோட எப்பவும் என்னால இருக்க முடியும். ப்ளீஸ் அங்கிள், ப்ளீஸ்…”

கெஞ்சலாக, ஆனால் தீவிரமாக இந்து பேசி நிறுத்த, மாலினி திடுக்கிட்டுப் போனாள். இந்துவின் உடம்பில் கோளாறு இல்லை, மனசில்தான் என்பது அப்பட்டமாய் புரிய, எதிரில் அமர்ந்திருந்த டாக்டரை ஒரு கணம் வெறித்துவிட்டு பார்வையைத் தழைத்தாள்.

சில நிமிஷங்களில் மௌனித்து, யோசித்து, நாளைக்கு சுந்தர் கல்கத்தாவிலிருந்து வந்ததும் சொல்லவேண்டியது என்ன என்பதைத் தீர்மானித்து விட்டவளாய், மகளை எட்டிப் பிடித்து இழுத்து புடவை கசங்கினா பரவாயில்லை, அம்மா மடிலே உட்காருடா…” என்று மெதுவாக அவள் கூற, அதை நம்ப முடியாதது போல இந்து கண்களை விரித்தாள். அப்புறம், ‘ஐ லவ் யூ மம்மிஎன்று சொல்லி அழுந்த தாயைக் கட்டி முத்தமிட்டாள்.

= = = = = = = =

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!