10.10.25

வெள்ளித்திரை :: " காசை எடுத்து நீட்டு .. கழுதை பாடும் பாட்டு !"

 

அந்தக் காலத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று இங்கே: 

  • பாடல் : சிரிப்பு வருது
  • திரைப்படம்: ஆண்டவன் கட்டளை (1964)
  • பாடியவர்: சந்திரபாபு
  • வரிகள்: கண்ணதாசன்

சிரிப்பு வருது சிரிப்பு வருது

சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது..
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது..
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலை பாக்க சிரிப்பு வருது..
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலை பாக்க சிரிப்பு வருது..
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
மேடை ஏறிபேசும் போது ஆறுபோல பேச்சு
மேடை ஏறி பேசும் போது ஆறுபோல பேச்சு
கீழ இறங்கி போகும் போது சொன்னதெல்லாம் போச்சு
கீழ இறங்கி போகும் போது சொன்னதெல்லாம் போச்சு

காசை எடுத்து நீட்டு
கழுதை பாடும் பாட்டு
ஆசை வார்த்தை காட்டு
உனக்கும் கூட ஓட்டு
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலை பாக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
உள்ள பணத்தை பூட்டி வச்சி வள்ளல் வேஷம் போடு
உள்ள பணத்தை பூட்டி வச்சி வள்ளல் வேஷம் போடு
ஒளிஞ்சி மறஞ்சி ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு
ஒளிஞ்சி மறஞ்சி ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு
நல்ல கணக்க மாத்தி கள்ள கணக்க ஏத்து
நல்ல நேரம் பாத்து நண்பனை ஏமாத்து
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலை பாக்க சிரிப்பு வருது
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது


= = = = = = = =

அன்றும் இன்றும்

  
இப்போவும் கவிஞர்கள் வெள்ளாவிலதான் வெளுத்தார்களா பாடல் எழுதுவாங்களா?
    

அதுவும் நானே, இதுவும் நானே


எந்த முகத்தைப் பார்த்து மயங்கினாயோ?
== = = = = = = = =

மாயோன்

மாயோன் எனும் ஒரு திரைப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியானது பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ஆனால் படம் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் என்றும் பார்வையாளர்கள் நேர்மறை கருத்துகள் கொடுத்திருப்பதாகவும், ரேட்டிங்க் 4.2 என்றும் தெரிகிறது. 

படம் ரிலீஸ் ஆகும் முன் ப்ரொமோவாக வெளியான இளையராஜாவின் இசையில், ராகா சகோதரிகள் என்று அழைக்கப்படும் ரஞ்சனி, காயத்ரி பாடியிருக்கும் இந்தப் படத்தின் டைட்டில் ட்ராக் பாடல் மிகவும் ஹிட் ஆகி யுட்யூபில் அஃபிசியலாக Divo Music channel ல் ஏப்ரல் 2022 அன்று வெளியானதும், 
 3 மில்லியன் பார்வையாளர்கள் கிடைத்து அமோகமாகப் புகழப்பட்ட பாடல். 

அங்கு கருத்துகளைப் பார்த்தாலே தெரியும். அதோடு, கர்நாடக சங்கீதம் தெரிந்த பார்வையாளர்கள் அங்கு இந்தப் பாடல் என்ன ராகம் என்று குழம்பி என்ன ராகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருப்பதையும் பார்க்கலாம்.

அப்படி பலரின் மனதைக் கவர்ந்த பாடல், சங்கீதம் தெரியாதவர்கள் கூட ரசித்திருக்கிறார்கள் என்பதுதான் ஹைலைட் அங்குள்ள கருத்துகளைப் பார்த்தாலே புரியும்.

பாடலை எழுதியவரும் இளையராஜாதான். விஷயம் என்னவென்றால், இளையாராஜாவின் மனதிலே கூட தோன்றியிருக்காத ஒரு விஷயத்தை மக்கள் எழுதுவதுதான். 'சைவம் சார்ந்த இளையராஜா எப்படி வைணவப் பாடல் எழுதினார் சைவத்தில் தொடங்கி, வைணவத்தில் சங்கமமாவது ஒரு புரட்சி'  போன்ற கருத்துகள். மக்களின் மனநிலை இன்னும் வளரவேண்டும்.

படத்தை தயாரித்தவர் அருண்மொழி மாணிக்கம் நிறுவனம் டபிள் மீனிங்க் ப்ரொடக்ஷன். திரைக்கதை எழுதியவரும் அருண் மொழி மாணிக்கம். 
இயக்கியவர் - என் கிஷோர். 

கதாநாயகன் சிபி சத்யராஜ். கதாநாயகி - தன்யா ரவிச்சந்திரன்.
ராதாரவி, கே எஸ் ரவிகுமார், மாரிமுத்து, ஹரீஷ் பெராடி போன்றோரும் நடித்துள்ளனர்.

படம் அமேசான் ப்ரைமில் இருக்கிறதாம். அமேசான் Prime இருப்பவர்கள் பார்க்கலாம். ஃப்ரீயாக டெய்லி மோஷனிலும் இருப்பதாகத் தெரிகிறது.

கதை - பல மர்ம ரகசியங்களைக் கொண்ட ஒரு பழங்கால கோவிலில் மறைந்திருக்கும் புதையலை ஆராய முயற்சி எடுக்கும் தொல்பொருள் ஆராய்ச்சிக் குழு. அவர்களுக்கு எதிராகப் புதையலைத் திருட சிலையைக் கடத்த ஒரு கும்பல் திட்டமிடுகிறது. அதை எப்படி ஆராய்ச்சிக் குழு தகர்த்து, மர்மத்தை அவிழ்த்து வெற்றி பெற்று ஆராய்ச்சிப் பணியைத் தொடங்குகிறது என்பதுதான் கதை.
இதோ பாடல்:  

பெண் : மாயோனே… மணிவண்ணா…
மாலோனே… மாதவனே…

பெண் : தஞ்சமென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம்…
தஞ்சமென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம்…

பெண் : நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை…
நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை…
நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை…
நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை…

பெண் : மாயோனே… மணிவண்ணா…
சத்ய ஸ்வரூபா… நித்ய ப்ரகாசா…
சத்ய ஸ்வரூபா… நித்ய ப்ரகாசா…

பெண் : நேர்மையற்ற நெறியிள்ளார்…
நிமிர்ந்தே உலவுவதோ…
நேர்மையற்ற நெறியிள்ளார்…
நிமிர்ந்தே உலவுவதோ…

பெண் : நின்னை தொழும் நின் அடியார்…
தளர்ந்தே தாழ்ந்திடவோ…
நின்னை தொழும் நின் அடியார்…
தளர்ந்தே தாழ்ந்திடவோ…

பெண் : அன்றும் இன்றும் என்றென்றும்…
நடப்பதென்ன இதுதானே…
உனக்கு இது சரிதானே…
நீ விதித்து வைத்த விதிதானே…

பெண் : உனை மீறி புவிமீதோர்…
அணுவும் அசையாது…
உன் மனம் எதுவோ அது செய்…
எமது குறையை உனக்குறப்பது எவரோ…

பெண் : மாயோனே… மணிவண்ணா…

பெண் : க்ஷீரஸாகரம்தனிலே அரவணை மேல் துயில்வோனோ…
சம்சார சாகரத்துழலும் எமை கரை சேர்த்து காப்பாயே…
க்ஷீரஸாகரம்தனிலே அரவணை மேல் துயில்வோனோ
சம்சார சாகரத்துழலும் எமை கரை சேர்த்து காப்பாயே…

பெண் : நித்திரையில் இருந்தாலும்…

பெண் : நித்திரையில் இருந்தாலும்…
அத்தனையும் அறிவாயே…
துக்கம் எமை தொடராமல்…
தொட்டணைத்து காப்பாயே…

பெண் : தீயோரை திருத்தாது திருப்ணியேற்கின்றாய்…
கோயில் செல்வம் கொள்ளை போக…
தடுத்திடாமல் படுத்து கிடைப்பதலழகோ…

பெண் : மாயோனே… மணிவண்ணா…
மாலோனே… மாதவனே…

பெண் : தஞ்சமென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம்…
தஞ்சமென்று நம்பி உந்தன் தாள் பணிந்தோம்…

பெண் : நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை…
நின் சரண் அல்லாது வேறு சரண் இல்லை…

பெண் : மாயோனே…

 ஆண் : நாராயணா… நாராயணா…

கிருஷ்ணாய கோவிந்த நாராயணா…
நாராயணா…

இதோ காட்சி : 


= = = = = = =

35 கருத்துகள்:

  1. சந்திரபாபுவின், சிரிப்பு வருது பாடலை ஹாஸ்டல் வாழ்க்கையில் கேட்டு ரசித்திருக்கிறேன்.

    மாயோன் படம் பெயரையும் கேட்டதில்லை. இந்தப் பாடலைக் கேட்ட நினைவும் இல்லை. ரேட்டிங் 4.2 என்பது 5க்கா இல்லை 10க்கா என்று தெளிவாகப் போடவில்லையே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கிண்டல்தானே கூடாது. 4.2 4.3 என்றெல்லாம் வந்தால் அது 5 க்கு போடப்படும் ரேட்டிங்.

      நீக்கு
  2. கரகரப்பிரியாவில் ஆரம்பித்து ஹிந்தோளம் வரை என்ன என்ன ராகங்கள் கீதா ரங்கன் க்கா எழுதப்போகிறாரோ என காலையிலேயே கவலைப்பட வைத்துவிட்டீர்களே

    பதிலளிநீக்கு
  3. மாயோனே பாடலை இப்போது கேட்டேன். இளையராஜாவின் இசை மனதை மயக்குகிறது. காலைப் பொழுதை நல்ல பாடலின் மூலமாக ஆரம்பித்துவைத்திருக்கிறீர்கள்.

    ஶ்ரீராம் கண்களில் இத்தகைய பாடல்கள் படாத்தன் காரணம் என்னவாக இருக்கும்? இன்னும் அவருடைய பதின்ம வயதிலேயே இருப்பதாலா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் பதில் சொல்லட்டும்.

      நீக்கு
    2. இளையராஜாவின் இசை மனதை மயக்குகிறது.//

      நெல்லை, தேனுகா மயக்காமல் இருப்பாளா? அதில் ஒரு சின்ன கெஞ்சல் இழைந்தோடுவது போன்று இருக்கும்.

      தெலியலேரு ராமா - சம்சார சாகரத்தில் எதுக்கெல்லாமோ அலையும் மனுஷங்க எங்களுக்குப் பக்தியின் மார்கம் தெரியலையேனு ஒரு சின்ன வருத்தத்துடன் கெஞ்சும் பாடலை என்ன ஒரு அருமையான ராகத்தில் பாடியிருக்கிறார் தியாக பிரம்மம்!!!!! அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு ராகமும் கீர்த்தனைக்குப் பொருத்தமாக இருக்கும் அந்த bhபாவத்தைக் கொண்டு வந்துவிடும்!

      ராஜா இந்தப் பாட்டுக்கு அந்த ராகத்தைத் தேர்ந்தெடுத்தது சிறப்பு!

      கீதா

      நீக்கு
    3. ஶ்ரீராம் கண்களில் இத்தகைய பாடல்கள் படாத்தன் காரணம் என்னவாக இருக்கும்? இன்னும் அவருடைய பதின்ம வயதிலேயே இருப்பதாலா?//

      நெல்லை, ஸ்ரீராம் சின்ன பையன் தான் என்பதில் சந்தேகமில்லை!!! ஹாஹாஹா. ஆனால், பாடல் இசை , ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அவர் பகிரும் பல பாடல்கள் நல்ல இசையமைப்பும், பாடப்பட்ட விதமும் ராகங்களும் கொண்ட பாடல்கள்தான். ஸோ அது பிடிப்பதும் பிடிக்காததும் ஒவ்வொருவரின் ரசனையைப் பொருத்து.

      இப்பாடல் பலருக்கும் தெரிந்திருக்காது. படம் என்னவோ சூப்பர் ஹிட் என்று சொல்லப்பட்டாலும் பலருக்கும் படம் பற்றித் தெரிந்திருக்காது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் இப்பலாம் செய்வது போல் எந்த ஆடியோ லாஞ்சும், ப்ரமோஷன் நிகழ்வும் நடக்கவில்லை என்றே தோன்றுகிறது. மாஸ் படமும் இல்லை. இல்லைனா தெரிந்திருக்குமே. எனக்குமே என் தம்பி ஒருவர் இப்பாடலை அனுப்பியதால் தெரிந்தது இல்லைனா தெரிந்திருக்காது.

      கீதா

      நீக்கு
  4. முதல் பாடல் எந்தக் காலத்திற்க்கும் பொருந்தி வருவது..
    சிறப்பு..

    பதிலளிநீக்கு
  5. மாயோன் படத்தையும் பாடலையும் பற்றி இதுவரை கேட்டதில்லை..
    பாடல் அவ்வளவாக கவர்ந்திட வில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல பாடல். சிறந்த இசை, சிறந்த கர்நாடக இசை பாடகிகள்.

      நீக்கு
  6. /// எந்த முகத்தைப் பார்த்து
    மயங்கினாயோ?..///

    இதெல்லாம் மேலிடத்திற்குத் தெரியுமா!..

    பதிலளிநீக்கு
  7. சிரிப்பு வருது சிரிப்பு வருது - பாடல் பல முறை கேட்டு ரசித்த பாடல். சிரிப்பு வருது என்றாலும் அதனுள் மறைந்திருக்கும் ஒரு வருத்தமும் வெளிப்படும் பாடல். dark humour பாடல் என்றும் சொல்லலாமோ?

    அருமையான பாடல் நிஜத்தைச் சொல்லும் பாடல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பவும் இப்படித்தானே இருக்கிறது !!! பாடல் வரிகள் போல. கண்ணதாசன் வரிகள் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?!!!!!

      கீதா

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. மாயோன் படப் பாடல் வெளியானதும் என் தம்பி ஒருவர் அனுப்பித்தான் தெரிந்தது. என் தம்பி ஒருவர், என் தங்கை ஒருவர், நான் மூன்று பேரும் சங்கீதம் பற்றிப் பேசுபவர்கள். அதிலும் தங்கை சங்கீதத்தில் ஞானமும் நன்றாகப் பாடுபவரும் கூட. கச்சேரி செய்யும் அளவு வித்வத் உண்டு.

    தம்பி சினிமா பாடல்கள் அவ்வப்போது மேடைகளில் பாடுபவர் இப்ப குறைந்துவிட்டது.எனவே தம்பி எங்களுக்கு அனுப்பி

    "கீதே ராஜா பாரு என்னமா போட்டிருக்காரு. இது என்ன ராகம்டி? சிந்துபைரவி போல இருக்கு சிந்து பைரைவிதானே?"

    நான் கேட்டு மயங்கிக் கேட்டுக் கொண்டே இருந்தேன். அப்படியான ராகம். அதை உடனே என் மகனுக்கு அனுப்பினேன்.
    என் மகனும் அன்று கொஞ்சம் ஃப்ரீயாக இருக்க நானும் மகனும் இப்பாடலைப் பற்றிப் பேசி, சிந்துபைரவி போல இருந்தாலும் சிந்துபைரவி இல்லை. என்று தெரிந்தது. ஒரு சின்ன வித்தியாசம் தெரிந்தது. நானும் சிந்துபைரவிக்கு அருகில் என்ன ராகம் என்று நெட்டில் ஸ்வரங்கள் போட்டுப் பார்த்தப்ப தேனுகாவாக இருக்கும் என்றும் தோன்றியது ஒரே ஒரு ஸ்வரம் தான் வித்தியாசம். என் மகன், அம்மா இது தெலியலேரு ராமா போல இருக்காப்ல தெரியறது தேனுகா என்றான்.

    உடனே என் தங்கையிடம் நான் கேட்கச் சொல்லி....அவளும் தேனுகா என்றாள்.

    கடைசியில் ராகா சகோதரிகள் இதை மேடையிலேயே ராஜா ராகம் என்று ஒரு கச்சேரி பண்ணினார்களே அதிலும் இப்பாடலைப் பாடி தேனுகா என்று சொல்லியிருக்கிறார்கள்,

    ஆஹா! அப்ப நாமளும் கொஞ்சம் பரவால்ல என்று தெரிந்தது.

    ராஜாவின் மாஸ்டர் பீஸில் இதுவும் ஒன்று. ராகா சகோதரிகளும் செமையா பாடியிருக்காங்க. அந்த ஆலாபனை செமையா இருக்கும்.

    இப்பாடலைக் கேட்டால் it reverberates என்று சொல்லலாம். அந்த ராகம் அப்படியான ராகம். இசையும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. மாயோன் பாடலின் வரிகள் இப்போதைய ஒரு சில விவகாரங்களைக் குறித்தும் குறிப்பிடப்பட்டது போல் இருக்கும்.

    என்னைப் பொருத்தவரை அந்த ராகம்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மாயோன் பாடலின் வரிகள் இப்போதைய ஒரு சில விவகாரங்களைக் குறித்தும் குறிப்பிடப்பட்டது போல் இருக்கும்.// என்னவாக இருக்கும்?

      நீக்கு
    2. அண்ணே நான் அதை நோண்டி இங்க சொல்லப் போக அப்புறம் வம்பாகிடுமோ!!!!!

      அதான் உங்களுக்கும் தெரியாத செய்தியா? கோவில்கள் தேவஸ்தானம் பிரச்சனை வந்ததே!

      அதை மறைமுகமாகவும் சொல்லியிருக்கிறார் என்று சொல்லப்பட்டது!

      கீதா

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி பாடல் பகிர்வு அருமை. முதல் பாடல் அடிக்கடி கேட்டுள்ளேன். இன்று பாடலின் வார்த்தைகளோடு சேர்ந்து படிக்கும் போது நன்றாக உள்ளது சந்திரபாபு அவர்கள் நல்ல திறமைசாலி. படங்களில் வசனம் பேசும் நடிப்பிலாகட்டும், அவரே தன் சொந்த குரலில் பாடம் பாடலிலும் ஒருதன்னம்பிக்கை, துணிச்சல், உலக மக்களைப் பற்றிய பொது நோக்குத் வெளிப்படும். பொதுவாக அறிவாளிகளை இறைவன் நீண்ட நாள் உலகில் தங்க வைக்க மாட்டான் போலிருக்கிறது.

    /காசை எடுத்து நீட்டு
    கழுதை பாடும் பாட்டு
    ஆசை வார்த்தை காட்டு
    உனக்கும் கூட ஓட்டு /

    நேற்று நீங்கள் பகிர்ந்த கழுதை சின்னத்தை இப்பாடல் நினைவுபடுத்தியது.

    வெள்ளாவிப் படங்கள் அருமை. "எந்த முகத்தைப் பார்த்து மயங்கினாயோ?" யாரைப்பார்த்து அனு கேட்கிறாரோ:))) பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. அது என்ன வெள்ளாவிப் படங்கள்? இந்த நடிகைகளில் கடைசியில் இருப்பவர் தான் ஸ்ரீராமின் கனவுக்கன்னி அனுஷ்காவா?

      நீக்கு
  12. அமேசான் பிரைமில் இருக்கானு பார்த்துட்டுப் படம் பார்க்கிறேன். சுவாரசியமா இருக்கும் போல. ஆனால் படம் வந்ததும் தெரியாது. பாடலும் கேள்விப் படலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா, நான் அமேசான் ப்ரைமில் இல்லை. Daily motion ல ஃப்ரீயாக இருக்கு என்று சொல்லியிருப்பதால் பார்ப்பமேன்னு கொஞ்சம் பார்த்தேன். கதைக்கரு என்னவோ நல்ல கதைதான். ஆனால் ஸ்க்ரீன் ப்ளே சொதப்பல். இன்னும் அழகாக எடுத்திருக்கலாம். எனவே அப்படியே ஓட்டிவிட்டேன். 10 நிமிடத்திற்குள் பார்த்து முடித்துவிட்டேன்!! எனக்கு சுவாரசியமாக இல்லை.

      கீதா

      நீக்கு
    2. ஒருவேளை வருமான வரிக்கு நஷ்டக் கணக்கு காட்ட தயாரிக்கப்பட்ட படமாக இருக்கலாம்.

      நீக்கு
    3. தொல்லியல் துறை ஒரு பழம் பெரும் கோவிலை ஆராய தன் கட்டுப்பாட்டிற்குள் எடுக்கிறது அதில் புதையல் இப்படியான ஒரு கதை தமிழ் சினிமாவில் வரவில்லை என்று நினைக்கிறேன். நல்ல சான்ஸ் இதை இன்னும் நல்லா கொண்டு வந்திருக்கலாம்.

      கோவிலையும் அதற்குள் இருக்கும் புதையலையும் காப்பதற்காக ஆண்டாண்டுகாலமாகச் சொல்லப்படும் அமானுஷ்யங்கள், அதை அப்படியே காத்துவரும் கிராமத்து தலைவர், கிராம மக்கள், தொல்லியல் குழுவில் உள்ள ஒரு சீனியர் (சிலைகளைக் கடத்துபவர்) அப்புதையலை கண்டெடுத்து வெளிநாட்டிற்கு விற்க முயற்சி, அதில் ஹீரோ உட்பட ஒருகுழு. அறிவியலும் கலந்த கதை. சின்ன பூச்சி அளவில் ட்ரோன் விட்டுகோவிலுக்குள் கர்ப்ப்கிரகத்துக்குள் இருக்கும் கல்வெட்டு எழுத்துகளைக் காப்பி செய்து எங்கிருக்கு அந்தப் புதையல் என்பதைக் கண்டறிந்து....கடைசில என்ன ட்விஸ்ட் இருக்கும் என்பது நமக்கே புரிந்துவிடுகிறது.
      இதற்கு ஹீரோயின் தேவையே இல்லை.
      இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம்.
      பின்னணி இசை சூப்பர். அது போல கோவிலை எடுத்த விதம் காட்சிகள் சினிமேட்டோகிராஃபர் சூப்பர்.

      பாருங்க 10 நிமிஷத்துக்குள்ள பார்த்து இத்தனை சொல்லிட்டேன்!!! ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  13. இன்றைய 'சிரிப்பு வருது சிரிப்பு வருது......நல்ல பாடல் . கேட்டாலே சிரிப்பு வராதவர்களுக்கும் சிரிப்பு வந்துவிடும். அந்தக் காலத்தில் இருந்தே கேட்டிருக்கிறோம்.

    இரண்டாவது படமும தெரியாது பாடலும் எமக்கு புதியது. இப்பொழுதுதான் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  14. கௌ அண்ணா, நீங்க கஷ்டப்பட்டு போட்டிருக்கும் படங்களைப் பார்த்து 2 வார்த்தை சொல்லாமல் போனால் மாயோன் கோச்சுக்குவார்!!!!

    அன்றும் இன்றும்ல எனக்கென்னவோ இப்பதான் எல்லாரும் அழகா இருக்காப்ல தெரியுது. அனுஷ் தமனா உட்பட!!!

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!