27.10.25

"திங்க"க்கிழமை   "  - கொண்டைக்கடலை லசான்யா   -  ராதா சுரேஷ் ரெஸிப்பி 

கொண்டைக்கடலை லசான்யா

கொண்டைக்கடலை போட்டு சுண்டல்தான் செய்ய வேண்டுமா என்ன?  சுண்டலுக்காக வேகவைத்த கொண்டைக்கடலை ஒருநாள் அவதாரம் மாற்றப்பட்டது.

வெறும் பொரியலாகவோ, சுண்டலாகவோ சாப்பிட்டு அலுத்துப் போகும் நாளில், அல்லது வீட்டில் உள்ளோர் சாப்பிட மறுக்கும் நாளில் புதிய முயற்சி உருவாகிறது.

ரெட் சாஸ், ஒயிட் சாஸ் என்று கஷ்டப்பட வேண்டியதில்லை.  சிம்பிளாக ஒன்று கூட போதும்.

தக்காளி, மிளகு, துளசி இலை, பூண்டு மற்றும் சோள மாவு சேர்த்து ஒரு சாஸ் தயாரிக்கவும்.





பின்னர் வேகவைத்த கொண்டைக்கடலையை நன்கு மசித்து எடுத்துக் கொண்டு தேவைப்பட்டால் ஓரிரு சிட்டிகை கடலைமாவு சேர்த்துக்கொண்டு இரண்டு பிளாஸ்டிக் தாள்களுக்கு நடுவில் அல்லது பட்டர் பேப்பருக்கு நடுவில் வைத்து அப்பளம் போல் இட்டு காய வைக்கவும்.  சிறிய எவர்சில்வர் தட்டின் அடியில் அழுத்தி கூட அப்பளம் தயார் செய்துகொள்ளலாம். 

பின்னர் உங்களுக்குப் பிடித்த காய்கறி பூரணத்தைச் சேர்க்கவும்.  இதுதான், இன்னதுதான் என்றில்லை.  உங்களுக்கு எது பிடிக்குமோ, எது தோன்றுகிறதோ..  அல்லது அன்று செய்த கறி மிஞ்சி இருந்தால் அதைக் கூட வைத்து ஸ்டஃப் செய்யலாம்.  எல்லாம் திப்பிச வேலைகள்தான்.

எனது தோழி ஒருவர் வெறும் கத்தரிக்காய் நடுவில் வைத்து செய்து அசத்தினார்.  இன்னொருவர் அன்று செய்த வெண்டைக்காய் கறியை நடுவில் வைத்தார்.

நான் உருளைக்கிழங்கு, கேரட், இனிப்பு பட்டாணி மற்றும் காலிஃபிளவர் ஆகியவற்றை சேர்த்து பூரணமாக்கினேன்

அதன் மேல் சீஸ் தூவவும்..

180 டிகிரியில் 25 நிமிடங்கள் சுடவும்.  எதைச் சேர்த்தாலும், என்ன செய்தாலும் இதுதான் முக்கியம்.

உங்களிடம் காய்க்கலவை மீதமாகி விட்டால் இருந்தால் அதைக் கொண்டு ராஜ்மா செய்யலாம். 

12 கருத்துகள்:

  1. அட... இது புதிய ரெசிப்பியாக இருக்கிறதே. எதையும் வீணாக்காமல் புதிய, பலரும் விரும்பும் ரெசிப்பி இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை...  இதுவரை நான் சுவைத்ததில்லை.  நேற்று உடனடியாக ஸ்விக்கியில் ஆர்டர் போட்டு ஒன்று சுவைத்துப் பார்த்தேன்.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.  வணக்கம்.  பிரார்த்திப்போம்.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய திங்கள் பதிவில் கொண்டைக்கடலையை வைத்து செய்த புது ரெசிபி வித்தியாசமாக நன்றாக உள்ளது. உடன் காய்கறிகளும் சேர்ந்த மாதிரி ஆயிற்று. சகோதரிக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  வித்தியாசமாக இருக்கிறது.  நிறைய வித்தியாசமாக முயற்சி செய்து அசத்துபவர் அவர்.

      நீக்கு
  4. லெசானியா - குவைத்தில் சாப்பிட்டிருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் நேற்றுதான் சாப்பிட்டேன்.  நமுத்துப்போன பீட்ஸா மாதிரி இருந்ததது

      நீக்கு
  5. /// 180 டிகிரியில் 25 நிமிடங்கள் சுடவும்.. ///

    எல்லாருடைய வீட்டிலும் இது சாத்தியமா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாத்தியமில்லாத வீட்டில் குக்கரில் வைக்க வேண்டியதுதான். எவ்வளவு நேரம் என்று அனுபவத்தில் தெரியும்!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!