கேள்வி பதில்கள் :
நெல்லைத்தமிழன் :
1. உங்களுக்கு ஆரம்ப காலத்திலிருந்து பிடித்த நடிகைகளை படங்களுடன் வரிசைப்படுத்துங்களேன். உடனே நடிப்பைப் போட்டுக் குழப்பிக்காதீங்க
# என்னைக் கவர்ந்த தோற்றம் கொண்ட நடிகை என்று கேட்கிறீர்கள் போல இருக்கிறது. நன்றாக யோசித்து பதில் சொல்வதானால் , முதலில் அஞ்சலிதேவி, (க.க.தெய்வம்)
பிறகு பத்மினி (புதையல்)
வைஜயந்திமாலா (வாழ்க்கை, பெண்)
அதன் பிறகு - சொன்னால் நம்ப மாட்டீர்கள் - நளினி (நடிப்பு. படம் நினைவில்லை)
சுகாசினி (நெஞ்சத்தைக் கிள்ளாதே). அதன் பின்பு யாருமில்லை !!
& எனக்குப் பிடித்த நடிகைகள் :
2. எனக்கு ஃபார்ம் போகலை. ஆனால் ரன்கள்தான் வரமாட்டேங்குது என்கிறாரே சூர்யகுமார் யாதவ். அதற்கு அர்த்தம் என்ன?
# அதிர்ஷ்டம் இல்லை என்று சொல்லுகிறார் போல இருக்கிறது.
& சமீபத்து T20 போட்டிகளில் சூரியகுமார் வெளுத்து வாங்கி வருகிறார்! (Jan 2026 India Vs NewZealand.)
3. இன்னொரு வீட்டில் செய்யும் இட்லி மிளகாய்பொடி நல்லா இருப்பதாகத் தோன்றுவதன் காரணம் என்ன?
# மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் அதிகம் என்பது உலகப் பொது விதி.
& எனக்கு அப்படித் தோன்றுவதில்லை!
4. அறிஞர்கள், நல்ல படிப்பாளிகளை விட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் அளவுக்கு அதிகமாகச் சம்பாதிப்பது சமூகத்துக்கு நல்லதா?
# சமூகத்துக்கு நல்லது இல்லை தான். என்ன செய்வது ? ரசிகர்களின் ஆர்வத்தை முதலீடாக வைத்து, இவர்கள் சம்பாதித்துக் கொடுக்கும் தொகை மிக அதிகமாக இருக்கிறது என்பதன் காரணமாகத்தான் இவர்களுக்கு நம்ப முடியாத அளவுக்கு அதிக சம்பளம் கிடைக்கிறது. இது மாதிரி அதிகச் சம்பளம் அறிஞர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் கிடைக்குமானால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் அப்படியெல்லாம் நடப்பதற்குப் பொதுமக்களின் விருப்பு வெறுப்பு மிகப்பெரிய அளவில் மாற்றம் அடைய வேண்டும். அப்படி ஒரு மாற்றம் நிகழ்வது என்பது இந்த யுகத்தில் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது.
நாம் கூட இதற்கு விதிவிலக்கு இல்லை . அதாவது , நம் ஈடுபாடும் இப்படித்தானே இருக்கிறது ! நாம் யார் பின்னால் ஓடுகிறோம் என்று யோசித்துப் பாருங்கள்.
5. வீகன் உணவு உண்பவர்கள் சொல்லும் காரணங்கள் மிக ஏற்புடையதாக இருக்கிறது அல்லவா? விலங்குகளிருந்து வரும் உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லதுதானே?
# பிராணிகளைக் கொன்று தின்ன வேண்டிய தேவை இல்லை என்பதற்கான அடிப்படைக் காரணங்கள் மிகவும் பலமானவை என்பது உண்மைதான். ஆனால் அதே சமயம், இயற்கை நியதி ஜீவராசிகள் ஒன்றை ஒன்று கொன்று தின்பது இயல்பானது என்ற அடிப்படையில் வளர்ந்து வந்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. விவசாயம் செய்து பயிர்களை வளர்த்து தானியம் இலை காய் பழம் கிழங்கு இவற்றை சமைத்தோ அல்லது இயல்பாகவோ உண்பது என்பது சாத்தியமான பின், நீதி காருண்யம் இவற்றின் அடிப்படையில், ஒரு முட்டையையோ அல்லது ஒரு பிராணியையோ அழித்து உண்ண வேண்டிய தேவை இல்லை என்று ஆகிவிட்டது. அசைவத்தில் மட்டுமே சரியான புரோட்டின் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. காலம் காலமாக முட்டை மாமிசம் இவற்றைத் தவிர்த்து நல்ல ஆரோக்கியத்துடன் மக்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது இது உண்மைதானா என்கிற ஐயமும் எழுகிறது. ருசிக்காக சாப்பிடத் தொடங்கிய பின் நீதி கருணை இவற்றுக்கு இடமில்லை என்றாகிவிட்டதோ ?
= = = = = = = = = = =
படமும் பதமும் :
நெல்லைத்தமிழன் :
கடந்த ஜூலை மாதம் நான்(ங்கள்) துபாரே யானைகள் முகாமிற்குச் சென்றிருந்தோம் (கூர்க் அருகில் உள்ள இடம் இது). அங்கு செல்ல, காவிரி ஆற்றைப் படகில் கடக்கவேண்டும். வெள்ளம் பெருக்கெடுத்தால் படகுப் பிரயாணம் இருக்காது, யானைகள் முகாமிற்குச் செல்ல இயலாது. எங்கள் அதிர்ஷ்டம் அன்று காவிரியில் நீர் அதிகமாக இருந்தபோதும் படகுப் பிரயாணம் இருந்தது. காவிரியைக் கடந்து யானைகள் முகாமிற்குச் சென்றோம்.
ஏராளமான யானைகள் இருக்கும் முகாம் அது. யானைகளை நடத்திக்கூட்டிக்கொண்டு, காவிரி ஆற்றில் குளிக்கச்செய்கிறார்கள். பாதுகாப்பிற்கு யானையின் கால்களில் சங்கிலி பிணைத்திருக்கிறார்கள். யானைகளைப் பார்க்க பரவசமாக இருந்தாலும், காட்டு விலங்கை சங்கிலி கொண்டு பிணைத்திருந்தது மனதை என்னவோ செய்தது.
இதில் சைடு பிஸினெஸாக, யானையின் ஆசீர்வாதம் பெற்றுத் தருகிறேன், ஐம்பது ரூபாய்க்கு என்று சொல்கின்றனர் அங்குள்ளவர்களில் சிலர். சிறிய வயதில் அதில் எனக்கு ஆர்வம் இருந்தது. பிறகு அசூயை வந்துவிட்டது. அதன் தும்பிக்கையில் வாழைப்பழம் வைக்கவும் ஒரு மாதிரி இருக்கும், தும்பிக்கையின் சளி கையில் படுவதால். (அதுவும் நீண்ட மூக்கு தானே). அது சரி.. இப்படி யானைகளை மனிதன் கட்டுப்படுத்துவது சரியா?
- - - - - - - - - - - - -
KGG பக்கம்.
போர்த் தந்திரம் என்ற தலைப்பில் சமீபத்தில் facebook பதிவு ஒன்று படித்தேன். சுவாரசியமாக இருந்ததால், அதை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
சுன் சூ கிமு 544ஆம் ஆண்டு சீனாவில் வாழ்ந்த ஒரு மிகப்பெரும் போர்த்தந்திர நிபுணர். இவரைப் பலரும் இந்திய வரலாற்றின் சாணக்கியருக்கு ஒப்பானவராகக் கருதுகின்றனர். அவர் எழுதி 2700 ஆண்டுகள் கடந்த பின்பும், இன்றுவரை 'The Art of War' எனும் நூல் அமெரிக்கத் தொழில் மேலாண்மைப் பள்ளிகளில் ஒரு முக்கியப் பாடநூலாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய உலகப்புகழ் பெற்ற நூலை எழுதி முடித்த சுன் சூ, அதை சீன மன்னர் ஹேலுவிடம் வழங்கினார். மன்னரோ அந்த நூலை மிகுந்த அசுவாரசியமாகப் படித்துவிட்டு, "எல்லாம் நன்றாகத்தான் எழுதியிருக்கிறாய். ஆனால் வெறும் புத்தகத்தைப் படித்துவிட்டுப் போர் புரிய முடியுமா? வார்த்தைகள் இலவசம், ஆனால் அவற்றைச் செயலில் கொண்டு வருவதுதான் கடினம்" என்றார். அதற்கு சுன் சூ, "மன்னா, நடக்கச் சாத்தியமில்லாத எதையும் நான் எழுதவில்லை" என்று உறுதியாகப் பதிலளித்தார்.
உடனே மன்னர், "அப்படியானால் ஒன்று செய். நாளை அரங்கத்திற்கு வா, உனக்கு ஒரு சோதனை வைக்கிறேன். அதில் நீ வென்றால் உன்னை என் படைகளுக்கு ஆலோசகராக அறிவிக்கிறேன்" என்று சவால் விடுத்தார்.
மறுநாள் விளையாட்டு அரங்கில் மக்கள் அனைவரும் கூடினர். மன்னர் தனது சோதனையை விளக்கினார். "இதுநாள் வரை போர்ப்பயிற்சியே பெறாத ஒரு குழுவினருக்கு, இன்று மாலைக்குள் நீ போர்ப்பயிற்சி அளிக்க வேண்டும். திடீரெனப் போர் மூளும்போது சாமானிய மக்களைத் திரட்டி அவர்களுக்குப் பயிற்சி அளிக்க உனது நூல் உதவுகிறதா என்று பார்க்கலாம்" என்றார்.
"நிச்சயமாக. எங்கே படைகள்?"
மன்னர் கைதட்ட அவரது அந்தபுரத்து அழகிகள் ஓடி வந்து அரங்கில் நின்றார்கள்
"இவர்கள் தான் படைகள். இவர்களுக்கு நீ பயிற்சி கொடு பார்க்கலாம்" என்று மன்னர் சொன்னதும் அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது. சுன் சூவை அவமதிப்பதே மன்னரின் நோக்கமாக இருந்தது.
அனைவரும் சிரித்து முடிக்கும் வரை பொறுமையாக இருந்த சுன் சூ, பயிற்சியைத் தொடங்கினார். மொத்தம் 180 பெண்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்த அவர், மன்னருக்கு மிகவும் பிடித்த இரண்டு நாயகிகளை அந்தப் பிரிவுகளின் தலைவிகளாக நியமித்தார். அவர்களுக்கு இடப்பக்கம், வலப்பக்கம் திரும்புதல் போன்ற அடிப்படை ராணுவக் கட்டளைகளைத் தெளிவாக விளக்கினார்.
பயிற்சி தொடங்கியதும் அந்தப் பெண்கள் அதை ஒரு விளையாட்டாகக் கருதிச் சிரிக்கத் தொடங்கினர். அவர்கள் ஒழுங்காக அணிவகுக்காமல் வேடிக்கையாகச் செயல்பட்டனர். சுன் சூ அமைதியாக, "கட்டளைகள் தெளிவாக இல்லாவிட்டால் அது தளபதியின் தவறு. ஆனால், கட்டளைகள் தெளிவாக இருந்தும் வீரர்கள் கீழ்ப்படியவில்லை என்றால் அது படைத்தலைவர்களின் தவறு. நீங்கள் இருவரும் உங்கள் பிரிவினருக்குச் சரியான வழிகாட்டியாக இருக்க வேண்டும். நீங்களே சிரித்தால் அவர்கள் எப்படி ஒழுங்காகப் பயிற்சி பெறுவார்கள்?" என்றார்.
ஆனால் அந்தப் பெண்கள் அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் கேலியாகச் சிரித்து மார்ச் பாஸ்ட் செய்தனர். அப்போது சுன் சூ தனது வாளை உருவி, கண் இமைக்கும் நேரத்தில் அந்த இரண்டு அழகிகளின் தலைகளையும் துண்டித்தார்.
ஒட்டுமொத்த அரங்கமும் உறைந்து போனது. மன்னர் பதறிப்போய் கீழே ஓடிவந்தார். சுன் சூ நிதானமாக, "மன்னா, மாலை வரை எனக்கு நேரம் இருக்கிறது. உங்கள் படையின் செயல்பாட்டை மாலையில் பாருங்கள்" என்று கூறிவிட்டு, அடுத்த இரண்டு பெண்களைத் தலைவிகளாக நியமித்தார்.
இப்போது அங்கு சிரிப்பொலி இல்லை, மரண அமைதி நிலவியது. அந்தப் பெண்கள் ஒரு தேர்ந்த ராணுவப் படையைப் போலக் கச்சிதமாக அணிவகுப்புச் செய்தனர். மாலைக்குள் அவர்கள் மிகச்சிறந்த பயிற்சி பெற்ற வீரர்களாக மாறினர். இதைக் கண்ட மன்னர், "என் அந்தப்புரப் பெண்களுக்கே இவ்வளவு நேர்த்தியான பயிற்சி அளித்த உன்னால், என் படைகளைச் சிறந்த முறையில் வழிநடத்த முடியும்" என்று கூறி அவரைத் தளபதியாக நியமித்தார்.
இதன் பிறகு கிமு 506இல் நடைபெற்ற புகழ்பெற்ற போஜு போரில் சுன் சூவின் தலைமையிலான படை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இன்றும் அமெரிக்காவின் வெஸ்ட் பாயிண்ட் ராணுவக் கல்லூரி முதல் உலகெங்கிலும் உள்ள பல ராணுவப் பாடத்திட்டங்களில் சுன் சூவின் போர்த்தந்திரங்கள் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளன.
#History_is_his_Story
~ நியாண்டர் செல்வன்
= = = = = = = = =
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....
பதிலளிநீக்குஇன்றைய பதிவின் பகுதிகள் அனைத்தும் நன்று.
இனிய காலை வணக்கம்.....வருக, வருக!
நீக்குThe Art of War - நல்லதொரு அறிமுகம். சுன் சு அவர்கள் தேர்ந்தெடுத்த வழி பிரமிப்பு தந்தது.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குதுபாரே முகாம் - சங்கிலி கட்டப்பட்ட யானைகள் - வேதனை. இரண்டு நாட்கள் முன்னர் பதிவர் திருப்பதி மகேஷ் இங்கே சென்று வந்தார்......
பதிலளிநீக்குமுன்பு தமிழ்மணம் இருந்தபோது பல பதிவுகளுக்குச் சென்றேன். பிறகு பலரது பதிவுகள் தளம் என்னவென்றே தெரியலை. இவர்தானே சிங்கப்பூர் பயணம் பற்றி எழுதியவர்.
நீக்குஆமாம் திருப்பதி மகேஷ் சென்று வந்தார். அவரும் ஆற்றில் இறங்கி நடந்ததைச் சொன்னார்.
நீக்குநெல்லை அவர் ஃபேஸ்புக்கில் எழுதுகிறார். நான் அங்கு இல்லாததால் எனக்கு வாட்சப்பில் அனுப்பினார்.
கீதா
போர்த்தந்திரப் பகுதி ரசிக்கும்படி இருந்தது. இதைப் போல படித்ததைப் பகிர்ந்தால் மற்றவர்களும் தெரிந்துகொள்ளலாம்.
பதிலளிநீக்குஅப்படியே செய்வோம்! நன்றி.
நீக்குஅனுஷ்கா வராத்தால் இன்று ஶ்ரீராம் விடுமுறை என எடுத்துக்கொள்ளலாமா?
பதிலளிநீக்குஅனுஷ்காவுக்கு மாற்று இன்னமும் கிடைக்கவில்லை நெல்லை!
நீக்கு//அனுஷ்காவுக்கு மாற்று இன்னமும் கிடைக்கவில்லை நெல்லை!//200% ஆமோதிக்கிறேன்.
நீக்குநெல்லை....அண்ட் ஸ்ரீராம்.....ஹாஹாஹாஹா
நீக்குஸ்ரீராம் உங்க கருத்தை ஆமோதிக்கிறேன். இப்ப கூட இளைமைன்னு எங்கோ பார்த்த நினைவு.
கீதா
:)))
நீக்குசூரியகுமார்நல்லா விளையாடுறார் (வெளுக்கவில்லை. ஷர்மா நல்லா விளையாடி அவருடைய வெளுப்பு பளிச்னு தெரியலை). பாவம் சஞ்சு சாம்சன் மூன்று வாய்ப்புகள் கிடைத்தும் சொதப்பிட்டார். இனி எடுப்பாங்களோ மாட்டார்களோ
பதிலளிநீக்குஆட்டம் முடிந்து பெவிலியன் திரும்பும்போது "அப்படி என்னடா இந்த பேட்டில் இருக்கு?" என்று நியூசிலாந்து ஆட்டக்கார்கள் அபிஷேக் பேட்டை வாங்கிப் பார்த்ததாக மகன் சொன்னான்!
நீக்குஅதிர்ஷ்டம் வேண்டும்.
நீக்குஆமாம். ஆனால் அபிஷேக் என்ன சொன்னாருன்னா... எனக்கு நிறைய வித்தியாச வித்தியாசமான ஷாட்டுகள் தெரியாது. தெரிந்த சிலவற்றை நான் உபயோகிக்கிறேன். எப்போதும் இப்படி வேகமாக ரன் கிடைக்குமான்னு தெரியாதுங்கறார். அவனவன் ஒரு செஞ்சுரி அடித்த உடனேயே அடுத்த டெண்டுல்கர் நான் என்று அலட்டிக்கொள்கிறார்கள். சிலரே தன்னடக்கத்தோடு இருக்காங்க. ஷேவாக்..போன்று
நீக்குநெல்லை அந்தப் பக்கம் பஜனை, பிரபந்தம் பண்ணிட்டு இந்தப் பக்கம் வந்து முதல் கேள்வி!!!! ஹாஹாஹா...யாராச்சும் தமனாவை சொல்றாங்களா? அனுஷை சொல்றாங்களான்னு ஒரு செக்கிங் போல!!!!!
பதிலளிநீக்குகீதா
:))))
நீக்குகீதா ரங்கன்..அப்போ அப்போ செட்டு செட்டு கேள்விகளா வாட்சப்பில் அனுப்பிடுவேன். இன்னும் ரெண்டு வாரங்களுக்கு ஏற்கனவே கேட்டிருக்கும் வாய்ப்பு இருக்கு. அவைகள் சில செய்திகள் அல்லது சிலவற்றைப் பார்க்கும்போது எழும்.
நீக்குகௌ அண்ணா நினைச்சேன், சினேகா, பாவனா வந்துடுவாங்கன்னு!!!
பதிலளிநீக்குகீதா
அமலா இல்லாததில் ஏமாற்றம்!
நீக்குஅமலாவை யாரும் அவ்வளவு கண்டுக்கலையோ? இன்னும் நிறையப்பேர் நல்லா நடிக்கறவங்க இருக்காங்களே இல்லையஆ?
நீக்குகீதா
நினைவில் ஒரு வருடத்துக்கும் மேலாக தங்கியவர்களை மட்டும் வரிசையாக சொல்லியுள்ளேன்.
நீக்குஇன்னொரு வீட்டில் செய்யும் இட்லி மிளகாய்பொடி நல்லா இருப்பதாகத் தோன்றுவதன் காரணம் என்ன? //
பதிலளிநீக்குநம்ம வீட்டுல அடிக்கடி சாப்பிட்டுவிட்டு அது பழகிப் போய் சலித்து....வேறு வீட்டில் வித்தியாசமா இருக்கும் போது பிடிக்கலாம்....மாற்றம் பிடிப்பவர்களுக்கு!
கீதா
இ.மி.பொ மட்டுமா?
நீக்குஇன்னும் சில ...பல உண்டு....ஸ்ரீராம்.
நீக்குஎனக்கும் வித்தியாசமான உணவுகள் பிடிக்கும்...சுவையும்...
கீதா
கேள்வியில் மிளகாய்ப் பொடி மட்டுமா அல்லது இட்லியும் சேர்ந்தா என்ற சந்தேகம்.
நீக்குஅதென்னமோ தெரியலை. சிலருக்குப் பக்கத்து வீட்டில் செய்வது தான் ரொம்பவே உசத்தியாக இருக்கும். அவங்க கிட்டே கேட்டு வாங்கிச் சாப்பிடுவார்கள்.
நீக்குஇப்போ என் மனைவியின் அக்கா வீட்டில் 200 கிராம் கேட்டிருக்கிறேன் (மனைவி கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) மி.பொடி எல்லோரும் நல்லா பண்ணுவதில்லை. மனைவி, அம்மா எல்லோரும் நல்லா செய்வார்கள். எனக்கு கும்பகோணம் மங்களாம்பிகா இ.பொடி ரொம்பப் பிடிக்கும், ஆனால் அவங்க இப்போ ஆனை விலை குதிரை விலை ஆக்கிட்டாங்க
நீக்குபல வீடுகள்ல பருப்புப் பொடிக்கும் இ.மி.பொடிக்கும் வித்தியாசம் தெரியாம, நைஸா மைதா மாவு மாதிரி அரைச்சு வச்சிருப்பாங்க. எனக்குப் பிடிக்காது
நீக்கு// இ.மி.பொ மட்டுமா? //
நீக்குநான் கேட்க வந்ததது... ஹிஹிஹி...
அறிஞர்கள், நல்ல படிப்பாளிகளை விட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் அளவுக்கு அதிகமாகச் சம்பாதிப்பது சமூகத்துக்கு நல்லதா? //
பதிலளிநீக்குஇது நான் அடிக்கடி நினைக்கும், பேசும் விஷயம். சமூகத்தில் சினிமா, மீடியாவுக்கு, கிரிக்கெட்டிற்கு இருக்கும் ஆதரவு ஊக்கம் நல்ல அறிவாளிகளுக்கு, ஆராய்ச்சிகளுக்கு இல்லை என்பது நிதர்சனம். அதனாலதானே சமூகம் வேறு திசையில் போய்க் கொண்டிருக்கிறது அறிவியல், ஆராய்ச்சிகளில் கொடிகட்ட முடியாமல்.
விசாவுக்குப் போனப்ப, are you a Professor! wow என்றார் (என்னை இல்லைங்க!!!) அந்த இன்டெர்வ்யூ செய்தவர்..இது பல வருடங்களுக்கு முன்னர். இப்ப மகனின் தொழிலைக் கேட்டதும் இஸ் இட்? கிரேட்...அவனும் பல்கலைக்கழகத்தில் என்பதால் கண்களை விரித்து மரியாதையுடன் சொல்லிப் பேசினார்.
அதே சமயம், வீட்டிற்கு வரும் விருந்தாளிகளும் சரி, உறவுகளும் சரி மகனின் தொழிலைக் கேட்டு, இதெல்லாம் சம்பாத்தியம் வருமா? மவுசு உண்டான்னு!!! அவன் இந்தப் படிப்பை எடுக்கக் கூடாதுன்னு வீட்டில் தடுத்தவர்கள் நிறைய உண்டு.
நம் சமூகம்!
கீதா
நெல்லை போட்டோ சூப்பர்.
பதிலளிநீக்குதுபாரே ஆனைகள் முகாமுக்குத் தண்ணி ரொம்ப இல்லைனா ஆற்றில் இறங்கிக் கடக்கலாம். மணல் சாக்குகளும் போட்டிருப்பாங்க கடக்க. நமக்குத் தெரிஞ்சவங்க போயிருந்தப்ப ஆற்றில் இறங்கி நடந்து சென்றார்கள்.
கீதா
நீரோட்டத்துக்கு நடுவே மரம். ஆஹா.. அழகான படம். அங்கு படகுப் பயணம் வேறா... சூப்பர் நெல்லை.
பதிலளிநீக்குயானைகள் முகாம் ரொம்ப சுவாரஸ்யம்தான். அவ்வளவு யானைகளை நான் ஒரே இடத்தில் பார்த்ததில்லை.
பதிலளிநீக்கு@குருவாயூர் கோவிலுக்கு அருகில் மம்மியூரில் என்றுதான் நினைக்கிறேன் ஆனகூட்டா என்ற இடத்தில் நிரைய யானைகளை பராமரிப்பார்கள். பார்க்கலாம்.
நீக்குஅதுபற்றியும் இங்கு மூன்று வாரங்கள் ஞாயிறு படங்கள் பதிவு எழுதியிருந்தேனே. ஆனைக் கொட்டாரம். அங்கு யானை ஓட்டப்பந்தயம் கூடப் பார்த்தேன்
நீக்குஆனைகளைக் குளிப்பாட்டும் நேரம் 9 மணிக்குத் தொடங்கும். நாம் அந்த சமயத்தில் போனால், அருகில் சென்று தொட்டும் பார்க்கலாம். டிக்கெட் உண்டு. பாகனுடன் சேர்ந்து நாமும் ஆனையைக் குளிப்பாட்ட தனி சார்ஜ்.
பதிலளிநீக்குகீதா
ஆனை படங்கள் ரொம்ப அழகா இருக்கு அதுவும் தும்பிக்கையை நீட்டிய அந்தப் படம் சூப்பர்! எம்புட்டு நீளம்!
பதிலளிநீக்குகீதா
அஞ்சலி தேவியா? கொடுமை!
பதிலளிநீக்கு:)))
நீக்குArt o War பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்!.
பதிலளிநீக்குஆற்றின் ஓரத்தில் மரம், அதைச் சுற்றி ஓடும் நீர்.. அழகான படம்.
நன்றி.
நீக்குஅழகால் என்னைக் கவர்ந்த நடிகைகள் முதலில் ஜெயலலிதா,பிறகு ஹேமமாலினி, ஜெயப்ரதா, ஸ்ரீதேவி, குஷ்பு, ஜோதிகா, அனுஷ்கா.
பதிலளிநீக்குஆஹா! நல்ல வரிசை!
நீக்குஜெயலலிதா நேரிலும் அழகி. வெண்ணெய்ச் சிலை போலத் தான் இருந்தார். நான் அவரைப் பார்க்கும்போது "வெண்ணிற ஆடை" படத்தில் நடிக்க ஆரம்பித்த புதுசு. கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு வந்தப்போ மேலாவணி மூல வீதியில் எங்க வீட்டுக்கு எதிரே இருந்த சித்ராலயா படக்கம்பெனிக்கு வந்திருந்தார். அப்போக் கிட்டக்க இருந்து பார்த்தோம். பத்தடி தொலைவுக்குள் தான். காஞ்சனா, முத்துராமன், ஜிவாஜி, நாகேஷ் போன்றோரையும் ரவிச்சந்திரனையும் பார்த்திருக்கோம். ரவிச்சந்திரன் நன்றாகப்பேசினார். ஆனால் கையில் சிகரெட் புகைந்து கொண்டே இருந்தது.
நீக்குகாஞ்சனாவுக்கு எங்க அம்மா வடுமாங்காய் போட்டுக் கொடுத்த கதையை எல்லாம் ஏற்கெனவே பலமுறை சொல்லிட்டேன். கே.ஆர்.விஜயா அழகெல்லாம் இல்லை. நல்ல கரு(று)த்த நிறம். உயரம். ஒல்லி (அப்போ)வண்டியை விட்டு இறங்கவே மறுத்துவிட்டார்.
நீக்குஸ்ரீதேவியின் சித்தி, ஸ்ரீதேவியின் தங்கைகள் இவங்கல்லாமும் என் அண்ணா ஆழ்வார்ப்பேட்டை ராமசாமி நாயக்கர் தெருவில் இருந்தப்போ நெருங்கிய சிநேகம். தங்கைகள் இருவரும் நல்லா இருப்பாங்க என்றாலும் ஸ்ரீதேவியைப் போல் உயரம், அழகெல்லாம் இல்லை. ஒருத்தருக்கு அப்போவே கல்யாணம் ஆச்சு.
நீக்குஐயையோ மாதுரி தீக்ஷித்தை விட்டு விட்டேனே..!! காஜோல், ஜூஹி சாவ்லாவும் பிடிக்கும். மறந்த இன்னொருவர் பாரதி.
பதிலளிநீக்குமுந்தைய தலைமுறை நடிகைகளில் பத்மினி, பானுமதி, வைஜெயந்தி மாலா, கே.ஆர்.விஜயா, ஆஷா பரேக், மாலாசின்ஹா, வஹிதா ரெஹ்மான்.. போதுமா? ஃப்டாஃபட் ஜெயலக்ஷ்மி கூடபிடிக்கும். அழகான, லட்சணமான முகம்.
நல்ல தேர்வுகள்!
நீக்குவஹீதா ரஹ்மான், உண்மையான அழகி. அதுவும் ஆர்.கே.நாராயண் அவர்களின் கதையான The Guide படத்தில் அவர் ஆடிய நடனங்கள்!
நீக்குஇப்போ இருக்காரானு தெரியலை. ஆனால் வயதான பின்னரும் அவர் அழகைப் பற்றி விமரிசித்து ஒரு கட்டுரை ஏதோ ஒரு நாளிதழில் படிச்சேன். "பெண்"களூரில் இருந்தார் அப்போ.
நீக்குவஹிதா ரெஹ்மான் நான் பிறந்த செங்கல்பட்டுக்காரர்!
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குசரணம் முருகா!
நீக்குபதிவின் முதற்பகுதியில் அழகு இளமை
பதிலளிநீக்குநன்றி.
நீக்குருசிக்காக சாப்பிடத் தொடங்கிய பின் நீதி கருணை
பதிலளிநீக்குஇவற்றுக்கு இடமில்லை
முக்கியமாக -
எந்நேரமும் பிரியாணி.
:)))
நீக்குஆனைகளின் முகாம் அழகு அருமை
பதிலளிநீக்குநெ த சார்பில் நன்றி.
நீக்குஉங்கள் ஊர் அருகில் பத்துநாட்களுக்குள் வருகிறேன் துரை செல்வராஜு சார். இந்தத் தடவை நாதமுனிகள் திருவரசு போன்றவற்றைப் பார்க்கும் திட்டம் இருக்கிறது.
நீக்குகௌ அண்ணா, நீங்கள் பகிர்ந்திருக்கும் கட்டுரை சூப்பர். நல்ல தகவலும் கூட. martial art உட்படுத்தியிருப்பாரோ? அதை வாசிக்க ஆர்வம் வருகிறது. எப்படிப் பயிற்சி கொடுத்திருப்பார் என்று.
பதிலளிநீக்குகீதா
பாராட்டுக்கு நன்றி.
நீக்குகுமாரி கமலா. பானுமதி, சாவித்ரி, சரோஜா தேவி, ஜெயலலிதா, குஷ்பூ, சிம்ரன், ஆகியோரை லிஸ்டில் யாரும் இதுவரை சேர்க்கவில்லையே!!
பதிலளிநீக்குJayakumar
தவமணி, T P ராஜலக்ஷ்மி, T R ராஜகுமாரி, S D சுப்புலக்ஷ்மி ஆகியோரியும் யாரும் குறிப்பிடவில்லை என்பதை ---------------- சொல்கிறேன்!!
நீக்கு:)))
நீக்குகுமாரி கமலா, வைஜயந்தி மாலா ஆகியோரின் நடனம் மட்டுமே ரசிக்கலாம். வாய் சப்பையாக இருக்கும். இதில் வைஜயந்திமாலா கொஞ்சம் பரவாயில்லை ரகம். அஞ்சலி தேவிக்கும் சப்பை வாய் தான். ஆனால் நடிப்பு நன்றாய் இருக்கும்.
நீக்குடி.ஆர். ராஜகுமாரியைப் பல முறை நேரில் பார்த்திருக்கேன். அவர் பெயரில் இருந்த தியேட்டர் அருகே அப்போதைய சென்னை நகரப் பேருந்து நிறுத்தம் தி.நகரில் உண்டே. வீடும் அங்கே தானே! தி.நகர் தபால் நிலையத்தில் அவரை அடிக்கடி பார்த்திருக்கேன். நல்ல கறுப்பு நிறம் தான். கண்கள் அழகு என்பார்கள். காமிராவினால் அது அருமையாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கலாம். அந்நாளைய கவர்ச்சிக்கன்னி என்பார்கள்.
நீக்குஜோதிகாவை விட்டுட்டேனே
பதிலளிநீக்குஅதானே!
நீக்குஜோதிகா, பருமன், தொப்பையும் உண்டு. பேபியாக நடித்துக் கதாநாயகியான ஷாலினி அழகாய் இருப்பார். அதிகம் மேக்கப் போட மாட்டார். நதியாவும் அப்படித் தான். அழகு, மேக்கப் குறைவு.
நீக்குART OF WAR ஒரு காப்பி டிரம்ப்புக்கு அனுப்பி வைக்கலாம்.
பதிலளிநீக்குArt Of War PDF Download Link
நீக்குhttps://dn790006.ca.archive.org/0/items/TheArtOfWarBySunTzu/ArtOfWar.pdf
A// RT OF WAR ஒரு காப்பி டிரம்ப்புக்கு அனுப்பி வைக்கலாம்.//
நீக்குஹா.. ஹா.. ஹா...
ஏற்கனவே துர்க்குணி... அதுலயும் கர்ப்பிணி" சொலவடை நினைவுக்கு வருகிறது!
"சொலவடை" என்ற சொல், அனுபவ அறிவைச் சுருக்கமாகவும் கிண்டலாகவும் சொல்லும் வாய்மொழி இலக்கியத்திலிருந்து வந்தது. ‘சொல்’ (வார்த்தை) மற்றும் ‘வடை’ (வளைந்து/பகுத்து) சேர்ந்து, பேச்சுவழக்கில் அனுபவங்களைச் சுருக்கமாகப் கூறும் பழமொழியாக உருவானது. இது பெரும்பாலும் வாழ்வாதாரம், உணவு, உடை, மற்றும் சமூக அனுபவங்கள் சார்ந்து மக்களிடையே பிறந்தது.
நீக்குசொலவடை - முக்கியத் தகவல்கள்:
பொருள்: கிண்டலாகவோ, நுணுக்கமாகவோ அறிவுரை கூறும் வாய்மொழி இலக்கியம்.
தோற்றம்: மக்களின் தினசரி அனுபவங்கள், கஷ்டங்கள் மற்றும் நகைச்சுவை உணர்வில் இருந்து தோன்றியது.
வழக்கு: இது 'சொலவஞ் சொல்றது', 'சொல்லடை' போன்ற சொற்களாலும் அறியப்படுகிறது.
பயன்பாடு: ஒரு சூழலை விவரிக்க, எடுத்துக்காட்டாகக் கூற, பழமொழியாகப் பேசப் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக, பேச்சுவழக்கில் அனுபவங்கள் மற்றும் அறிவைச் சிறிய வரியாகக் கூறுவதே சொலவடை எனப்பட்டது!
சொலவடை விளக்கம் அருமை. நல்ல வேளை ரஸ வடை போன்ற ஒன்று என்று சொல்லாமல் விட்டீர்களே!
நீக்குJayakumar
எனக்கு எலந்த வடைதான் தெரியும்!
நீக்குயானைகளை அவற்றின் போக்கில் பார்ப்பதுதான் அழகு. கட்டிவைப்பது என்பது துன்புறுத்தல்தான்.
பதிலளிநீக்குகே ஜி ஜி பக்கத்தில் சுன் சூ செய்த செயல் திடுக்கிட வைத்தது.
//அவற்றின் போக்கில் பார்ப்பதுதான் அழகு. கட்டிவைப்பது என்பது துன்புறுத்தல்தான்.//இந்த மாதிரி யானைகளைப் பார்க்கும்போது எனக்கு அப்படித்தான் தோன்றும். மனதில் நமக்கு இரக்கம் வேண்டாமா? கனத்த சங்கிலியால் கட்டிவைக்கலாமா?
நீக்குயானைகளின் முகாம் கேள்விப் படாத ஒன்று. காவிரியின் விஸ்தீரணம் அசர வைத்தது. கேஜிஜியின் போர்த்தந்திரக்கட்டுரை அருமை என்றாலும் யாரோ இருவரின் போட்டிக்காக இரு அப்பாவி உயிர்கள் போய்விட்டது என்பதை நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது. இதைச் சாதாரணமாகக் கடக்க முடியலை. :(
பதிலளிநீக்குஅப்பாவி என்று எப்படிச் சொல்றீங்க கீசா மேடம்? பணிந்து நடப்பது என்பது அவசியம் அல்லவா? அலட்சியப் படுத்தியதால் தலை போய்விட்டது.
நீக்குபோர்த்தந்திரம் குறித்த கட்டுரையைப் பகிர்ந்திருக்கும் நியாண்டர் செல்வன் வெறும் செல்வன் என்னும் பெயரிலேயே நான் எழுத ஆரம்பித்த நாட்களில் இருந்தே அறிமுகம். நெருங்கிய நண்பராகத் தான் இருந்தார். பின்னர் ஏனோ தெரியாது. விலகிக் கொண்டார். இவர் எழுதிய "பேலியோ" உணவு முறை குறித்த கட்டுரைகள், வாத விவாதங்கள் இணைய உலகில் பிரபலம். மின் தமிழிலும் இருந்தார். இவருடைய கட்டுரைகளைக் குறித்து விவாதங்கள் நடக்கையில் அருமையாகப் பதில் கொடுப்பார். தினமும் தான் எடுத்துக்கப் போகும் அல்லது எடுத்துக்கொண்ட பேலியோ உணவையும் செய்முறையையும் விடாமல் பகிர்ந்து வந்தார்.
பதிலளிநீக்கு