நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
5.2.26
குடையுமில்லே படையுமில்லே கூதலுக்கு ஆதரவா தாவணிய நீ பிழிய தலைதுவட்ட நான் வரவா
பிடித்த பாடல் என்ன, அந்தப் பாடலின் தாக்கம் ஏதாவது உங்கள் வாழ்வில் இருந்தால் சொல்லுங்களேன் என்று ஆரண்யநிவாஸ் அவர் வாட்ஸாப் குழுமத்தில் அன்றைய டாபிக்காக கேள்வி கேட்டிருந்தார்.
என் டைரியில் வருடம் தவறாமல் நான் எழுதி வைத்துக் கொள்ளும் வரிகள் சில உண்டு. முக்கியமான பாடல் வரி "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்ல வேண்டும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்"
இதை மட்டும் அங்கே குறிப்பிட்டிருந்தேன். மேற்கொண்டு இங்கே கொஞ்சம் கதைக்கிறேன்.
அப்போது அவர் பாஸாக ஆகவில்லை! 'வா வா வா கண்ணா வா' பாடல் எனக்கும் பாஸுக்கும் இடையில் ஒரு சங்கேதப்படலாக இருந்தது. கவனிக்கவும் சந்தேகம் என்று படித்து விடப் போகிறீர்கள்! இது கூட வேண்டுமென்று வைத்துக் கொண்டது இல்லை. நாம் முயற்சி செய்யாமல் ஒரு விஷயம் தானாக எப்படி உருவாகிறது பாருங்கள்...
ஒருமுறை கேசெட்டில் அந்தப் பாடல் போட்டதும், அந்த நேரம் பார்த்து அவர் இறங்கி எங்கள் வீட்டுக்கு வந்து ஏதோ சொல்லி, பேசிச் சென்றார். "ஓ.. இதுக்குதான் வா வா வா என்று அவன் பாட்டு போட்டானா.." என்று பாட்டி கேட்டார். அடுத்தமுறை அதே பாடல் இன்னொரு முறை இன்னொரு நாள் போடும்போது அவர் வரவில்லை. மாலை கல்லூரி விட்டு வீடு வந்துவிட்டு, எங்கள் வீட்டுக்கு வந்தவரிடம் பாட்டி 'பாவம்... இவன் மதியம் அந்தப் பாட்டைப் போட்டு விட்டு உனக்காகக் காத்திருந்தான்" என்று கிண்டலடிக்க, "எந்தப் பாட்டு" என்று கேட்டார் பாஸ். "அதான்.. வா வா வா கண்ணே வா..." என்றார் பாட்டி.
அந்த வரிகளை அவர் ஒரு கிண்டல் த்வனியில், வெக்களிக்கும் குரலில் சொன்னார்!
"அது கண்ணா வா பாட்டி, கண்ணே வா இல்லை என்றேன். "அதுசரி, நீ பாட்டு போடறே என்றால் அது கண்ணே வா என்றுதானே வரவேண்டும் என்று திருப்பி அடித்தார் பாட்டி.
அடுத்தமுறை நான் பாஸைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தபோது இந்த பழைய உரையாடல்கள் நினைவுக்கு வர, எதற்கும் இந்தப் பாட்டைப் போட்டுப் பார்ப்போம்... என்று கேசட்டை ஓடவிட்டேன்.
உள்ளே ரூமில் தினமலர் வாரமலர் படித்துக் கொண்டிருந்த பாட்டி "அவ்ளோதான்.. போட்டுட்டான் பாட்டை.. வந்துடுவா இப்போ" என்று சொல்லிக்கொண்டே புத்தகம் படிப்பதைத் தொடர்ந்தார். அவர் புத்தகம் படிக்கும் பாணியைச் சொல்ல வேண்டும். தரையில் அல்லது அங்கிருந்த மரக்கட்டிலின் மேலே ஜன்னலை ஒட்டி கால்களை நீட்டி அமர்ந்து இரண்டு கைகளாலும் புத்தகத்தைப் பிடித்து மடியில் வைத்து கண்ணாடி போட்டுகொண்டு படிப்பார். .
அடுத்த ஓரிரு நிமிடங்களில் புயலென உள்ளே நுழைந்தார் பாஸ். நான் மட்டுமே ஹாலில் இருக்க, "என்ன விஷயம்? இன்னிக்கி சண்டே.. அப்பா வீட்ல இருக்கார்.. இப்படி எல்லாம் வரமுடியாது..சீக்கிரம் சொல்லுங்க" என்று பரபரத்தார். அன்று முதல் அது அதிகாரபூர்வ அழைப்புப் பாடலாக எங்களுக்குள் ஆனது!
ஒரு முறை ஏதோ ஒரு காரணத்தால் அவர் வீட்டு பால்கனியில் மகா சோகமாக உட்கார்ந்திருந்தார் பாஸ். எங்கள் வீட்டு வாசலில் நின்றால் அவர் வீட்டு பால்கனி தெரியும். கண் கலங்கி உட்கார்ந்திருந்தார். என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ள நான் முயன்றும் சரியான பதில் வரவில்லை. சோகம் மாறவில்லை. காதல் நாட்கள் அல்லவா... நான் உடனே அந்த மூடை மாற்றத் தீர்மானித்தேன். கேஸட்டைப் போட்டேன்.
கீழ் வீடான எங்கள் வீட்டு ஹாலில் இருந்த ஜன்னலில் உள்ள இடத்தில்தான் டூ இந்த ஒன்னை வைத்திருப்பேன். நேஷனல் பானசானிக் ஸ்டீரியோ!ஜன்னல் கதவுகளைத் திறந்து, டேப்-ரெக்கார்டரைத் திருப்பி வெளிப்பக்கமாக ஸ்பீக்கர்கள் பார்க்கும்படி வைத்து ஒலிக்க விட்டால் தெருவே அதிரும்!
மதுரை F M வானொலியிலிருந்து பாடல்களை தெளிவாக காலி கேசெட்டில் பதிந்து வைப்பேன். அதை எடுத்து FF செய்து, சரியாக நிறுத்தி, "அந்த" வரிகளை சின்னதாக வைத்து சோதித்துக் கொண்டு, மீண்டும் சரியாக நிறுத்தி சத்தத்தைக் கூட்டி ஆன் செய்தேன்.. அமைதியான அந்த இடத்தில SPB குரல் சற்றே சத்தமாக ஒலித்தது.
"சோகத்தின் பாஷை என்ன சொன்னால் அது தீருமா? கங்கை நீர் காயக் கூடும் கண்ணீர் அது காயுமா"
நிறுத்தி விட்டேன். அங்கே மேலே ஒரு புன்னகை மலர்ந்தது.
சமீபத்தில் உறவு ஒன்று கொடுத்த பார்ட்டியில் மறுபடி வசந்த்பவன் WB சென்றபோதுற பேப்பர் ரோஸ்ட் என்று போட்டிருந்ததைப் பார்த்து ஆர்டர் செய்தேன். சார் ஒரு ஆளா சாப்பிட முடியாது என்று பயமுறுத்தினார் சர்வர். பேப்பர் ரோஸ்ட்தானே? மெல்லிசாக தானே இருக்கும்? என்று எக்ட்டேன். சற்று தயங்கி ஆமாம் மெலிசாத்தான் இருக்கும் என்றார். என் இளையவன் இதை மகாராஜா தோசை என்றான்!
ஆர்டர் சர்வ் ஆனதும் எடுக்கப்பட்ட வீடியோ இது. நாங்கள் அறுவர் இதை ஆளுக்கு கொஞ்சம் சாப்பிட்டோம். சர்வரைக் கூப்பிட்டு இதுதான் உங்கள் ஊரில் பேப்பர் ரோஸ்ட்டா? என்று கேட்டேன். "ஏன் சார்?" என்றார். "மதுரை போயிருக்கிறீர்களா?" "ஐயோ.. மதுரை மாதிரி எல்லாம் வருமா சார்?" என்று டிஃபன்ஸ் ஆடினார் சர்வர். "அங்கே போய் கோபு ஐயங்கார் கடை என்று கேளுங்கள். அங்கே சாப்பிட்டு பாருங்கள். இப்படி நடுவே காடாத்துணி போல தோசை மாவாக இருக்கே.. அங்கே மெலிதாக இந்தப் பத்திலிருந்து பார்த்தால் அந்தப் பக்கம் நீங்கள் தெரியும் அளவு இருக்கும். அதுதான் பேப்பர் ரோஸ்ட். எடுத்து சாப்பிட்டால் சில நொடியில் நாக்கில் கரைந்து விடும்" என்று சொல்லி விட்டு வந்தேன்! ராம்நாடாம்!
சென்ற வாரம் என் நண்பன் தொலைபேசி அவனுக்கு பேத்தி பிறந்திருக்கும் தகவலை சந்தோஷமாகச் சொன்னான். எனக்கும் சந்தோஷமாக இருந்தது. அவனுடைய பெண்ணை ஏழாவது எட்டாவது படிக்கும் பெண்ணாக இருப்பதிலிருந்து தெரியும். எங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜைக்கு வருடம் தவறாமல் வருவாள். அந்த மகிழ்ச்சியில் இதை எழுதி அனுப்பி அவனுக்கு அனுப்பினேன். "ஃபிரெண்டு ஹேப்பி அண்ணாச்சி!"
சில வாரங்களாக மனதில் இருக்கும் இந்த இரு பாடல்களை இன்று பகிர்ந்து விடுகிறேன்.
காதல் என்கிற உணர்வு இருக்கிறது பாருங்கள்.. அது ஒரு சுகவேதனை. "படைத்தானே பிரம்மதேவன் பதினாறு வயதுக் கோலம் இது யார் மீது பழிவாங்கும் சோதனை.. உனைக் காண்போர்க்கு சுகமான வேதனை" என்று பாடினார் புலமைப்பித்தன்.
அந்த Feel இந்தப் பாடலின் காட்சியில் நன்றாக வெளிப்பட்டிருக்கும். ஹீரோ, ஹீரோயின் இருவருமே இளம் வயது என்பது கூடுதல் ப்ளஸ். அவர்களின் இளமை கண்களுக்கு இனிமை.
நடுவில் ஒரு காட்சி. குழந்தைகளுக்கு தலை துவட்டி விடுவாள் அவள். இவனும் சட்டென சென்று அமர்ந்து தன் நனைந்த தலையை அவளுக்காக நீட்டுவான். அவள் சட்டென குளிருந்து சிரித்து துண்டை அவன் முகம் மேலே போட்டு விட்டு ஓரமாகச் சென்று மென்னகை புரிவாள்.
"குளிரடிக்கும் சாரலுக்கு குடை பிடிக்க வா மயிலே" என்று அவன் பாட, அவள், "குடையுமில்லே படையுமில்லே கூதலுக்கு ஆதரவா தாவணிய நீ பிழிய தலைதுவட்ட நான் வரவா" என்று கேட்கும் நாயகி தமிழில்!
இன்னும் சொல்லாத காதல்; சொல்லாவிடினும் பரஸ்பரம் புரிந்துகொண்ட காதல். காதலைச் சொல்லி கைபிடித்து இன்னும் போகவேண்டிய தூரம் நிறைய.. இந்த ஆரம்ப காதல் வேதனை பாடலில்.. பாருங்களேன்..
எவனோ ஒருவன் / ஒருவள் தன்னிடம் வந்து தன் காதலைச் சொல்வான்/ள் என்று எதிர்பார்ப்பதாக பாடுகிறார்கள். காதலில் அவர்கள் என்னென்ன செய்வார்கள், என்னென்ன எதிர்பார்ப்பு என்று பாடல். பாடல் முடியும்போதும் சொல்லபப்டாத காதல் வேதனை சுகமாகத் தொடக்கிறது.
ஹம் ஹை ராஹி ப்யார் கே என்னும் படத்தில் குமார் சானுவும் அல்கா யாக்னிக்கும் பாடிய பாடலுக்கு இசை இரட்டையர்கள் நதீம்-ஷ்ரவன். காட்சியில் அமீர்கான்-ஜூஹி ஜூஹி தமிழ்ப் பெண்ணாக வருவார்.
"Mujhse Mohabbat Ka Izhar Karta" (film: Hum Hain Rahi Pyar Ke)is a popular romantic song based primarily on Raag Yaman . This raga is known for its sweet, romantic, and soothing tones, which perfectly captures the sentiment of the song.
அந்த காலகட்டத்தில் கிசுகிசுவாக சொல்லப்பட்டவை அப்புறம் காலப்போக்கில் அல்லது காலம் கடந்து அதன் வீர்யம் குறைந்த நாட்களில் சம்பந்தப்பட்டவர்களே உடைத்து விடுகிறார்கள்.
ரிஷி கபூர்...
'பாபி' வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன காலகட்டத்தில் பம்பாய் சென்ற ஏ வி எம் நிறுவனத்தார் தாங்கள் தயாரிக்கும் ஒரு படத்தில் ரிஷியை நடிக்கக் கேட்டிருக்கின்றனர்.
யார் ஹீரோயின் என்று கேட்டிருக்கிறார் ரிஷி.
ஜெயசுதா என்று சொல்லி இருக்கிறார்கள் இவர்கள்.
அவரை நான் பார்க்க வேண்டுமே என்று சொல்லி இருக்கிறார் அவர்.
'இல்லை புகைப்படங்கள் இருக்கின்றன மேலும் அவர் நடித்த படத்தின் ரஷ் இருக்கிறது பாருங்கள்' என்று சொன்னாலும் ரிஷி ஜெயசுதாவை சந்திக்க வேண்டும், அதுவும் 'தனியாக' சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்திருக்கிறார். 'அடுத்த மாதம் சென்னை வருவேன். அங்கு ஏற்பாடு செய்யுங்க'ள் என்று சொல்லி இருக்கிறார்.
தேவர் படம் ஒன்றுக்காக சென்னை வந்த அவரிடம் ஜெயசுதாவை அழைத்துச் சென்றிருக்கிறார்கள் ஏ வி எம் குமரன் உள்ளிட்டவர்கள்.
ரிஷியோ, நீங்கள் எல்லாம் வெளியே செல்லுங்கள். நான் அவரிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்லி இருந்திருக்கிறார். ஜெயசுதா பயந்திருக்கிறார்.
'கவலைப்பட வேண்டாம். நாங்கள் வெளியேதான் இருக்கிறோம்' என்று அவர்கள் இருவரையும் தனியாக விட்டு விட்டு வெளியே நின்றார்களாம் ஏ வி எம் குழுவினர்.
சுமார் ஒன்றரை மணிநேரம் பேசினார்களாம்.
'என்னதான் பேசினார்களோ' என்கிறார் ஏ வி எம் குமரன். இவர்கள் உள்ளே சென்று ரிஷியிடம் தேதிகள் கேட்க, அவரோ 'ஊருக்குப் போய்ச் சொல்கிறேன்' என்று சென்று விட்டாராம்.
அப்புறம் போன் செய்து கேட்டால், 'ஜெயசுதா வேண்டாம், சுலக்ஷணா பண்டிட் என்று இங்கு ஒரு நடிகை இருக்கிறார். அவரைப் போடுங்கள்' என்று சொல்லி இருக்கிறார்.
அப்பாவிடம் - ஏ வி எம் செட்டியாரிடம் - இவர்கள் விவரம் சொல்ல, 'வேண்டாம், விட்டு விடுங்கள். ஜெயசுதாவுடன் நடிக்க சம்மதித்தால் சரி, அல்லது இங்கிருந்து நாம் சொல்லும் வேறொரு நடிகையை ஒத்துக் கொள்ளட்டும். அவர் இஷ்டத்துக்கு வேண்டாம் 'என்று அவர் சொல்ல, முயற்சி முறிந்து போனதாம்.
சரி, கொடுத்த 50,000 ரூபாய் அட்வான்ஸை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள் ஏ வி எம் குழுவினர். 'பம்பாயில் ஒருமுறை, சென்னையில் ஒருமுறை சந்தித்து பேசி (டிஸ்கஸ்) செய்திருக்கிறோம். பணம் சரியாகி விட்டது' என்று விட்டாராம் அந்த அல்பம்.
வடநாட்டு நடிகர்கள் இப்படி அல்பமாக நடந்து கொள்வது ஏ வி எம் முக்கு புதிதல்ல.
ஏற்கெனவே திலீப்குமார் ஒரு சிவாஜி படத்தை ஹிந்தியில் தான் நடிக்க விரும்புவதாய்ச் சொல்லி காஷ்மீருக்கும், மும்பைக்கும், சென்னைக்கும் அலைக்கழித்து, அப்புறம் அந்த படம் வேண்டாம், பாபு படத்தை ரீமேக் செய்யலாம் என்று சொல்லி அலைய வைத்து, கடைசியில் நடிக்கவில்லை என்று முடிவெடுத்தாராம்.
ஏ வி எம் செட்டியார் நடுவிலேயே பொறுமை இழந்து விட்டாராம். அவரிடமும் கொடுத்த அட்வான்சைக் கேட்டால் இதே போலத்தான் பதில் வந்ததாம்.
அதே படத்தில் இன்னொரு பாடல். அதே ஜோடி நடிப்பில், அதே ஜோடிக் குரலில்!
காதல் சொல்லப்பட்டு விட்டது என்று சொல்லலாம். அந்தப் பரவசமான நிலையில் இந்தப் பாடல்.. இந்தப் பாடல் அப்போது சித்ரஹாரில் போடப்பட்டால், நான் பார்க்கிறேனோ இல்லையோ என்று உடனே எனக்கு வனமாலி சித்தியிடமிருந்து ஃபோன் வரும்,. அப்போதெல்லாம் டயல் ஃபோன்தானே.. யார் ஃபோனை எடுக்கிறார்கள் என்று கூட காத்திராமல் பரபரப்பாக "ஏய்.. சித்ரஹார்ல ஸ்ரீராம் பாட்டு.. அவன் பார்த்துக்கிட்டிருக்கனா? பார்க்கச் சொல்லு" என்று சொல்லி போனை வைத்து விடுவார்! அந்த சமயங்களில் நேரில் பார்க்கும்போது 'ஸ்ரீராம் பாட்டு' என்று சொல்லிச் சொல்லி "தில்பர்க்கா தில்பர்க்கா தில்பர்க்கா" என்று பாடுவார்!
The tune of the popular song "Ghoonghat Ki Aad Se" from the film Hum Hain Rahi Pyar Ke (1993) is primarily based on Raag Shivranjani , believed to have been composed by Shankar- Jaikishan . This raga prohibits Madhyam (Ma) and Nishad (Ni), and it reflects feelings of compassion and love.
பாடலின் தாக்கம் வாழ்க்கையில் வர காதலித்திருக்கவேண்டும் என நினைக்கிறேன். குறைந்தபட்சம் அந்தத் தருணங்களில் இருவருக்கும் கேட்கும்படியாக ஏதாவது பாடலாவது ஒலித்திருக்க வேண்டும்.
என் நண்பன் தி நகரில் ஒரு பெண்ணிடம் அவள் வீட்டில் காதலைச் சொன்னபோது, தென் பாண்டிச் சீமையிலே. பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது என்று சொன்னான்.
அப்படி எல்லாம் அவசியமில்லை. பாடல்களை ரசிக்கும் மனம் இருந்தால் போதும். எது இருந்தால் போதும்? மனமிருந்தால் போதும்! (இதோ இந்த வரிகளே கூட ஒரு பாடல் வரிகளின் தாக்கம்! கண்டு பிடிக்க முடிகிறதா?)
நான் முன்னர் 'மேகம் கருக்குது மழை வரப் பார்க்குது' பாடல் எனக்கு எப்படி பிடித்துப் போனது என்பது பற்றி சொல்லி இருக்கிறேன்.
ரிஷி கபூர் பெயர் குறிப்பிடாமல் ஏவிஎம் குமரன் சொன்ன பேட்டியைக் கண்டிருக்கிறேன். தமிழக ரிஷிகபூர் கார்த்திக்காமே. அட்வான்ஸ் திரும்ப வராது, நடிக்க ஆள் வந்தால்தான் உண்டு எனப் பலரின் வயிற்றெரிச்சலைச் சம்பாதித்து, கடைசியில் அவருடைய அண்ணன் அந்தப் பணத்தை லவட்டிக்கொண்டு சென்றதுதான் மிச்சம்.
கார்த்திகைப் பொறுத்த வரை அட்வான்ஸ் வராது சரி.. ரிஷி வேறொன்றுக்கும் அல்லவா ஆசைப்பட்டிருக்கிறார்! அவர் அவருடைய மகனைக் கண்டித்து வளர்த்தாராம்! ஏ வி எம் பெயர் சொல்லியேதான் சொன்னார்.
பேப்பர் ரோஸ்ட் என்ன விலை? சூப்பர் சைஸ். கோபு ஐயங்கார் கடை தோசையை இன்று எழுதி என்ன பயன்? முந்தாநாள் அந்தத் தெருவில்தான் இருந்தேன். நாகப்பட்டினம் ஒரிஜனல் நெய் மிட்டாய் கடையில் அல்வா சூப்பரோ சூப்பர்.
125 ரூபாய் என்று நினைக்கிறேன். அவர்கள் பணம் கொடுத்ததால் தெரியவில்லை. இரண்டு டபரா மாவுக்கு அவ்வளவு காசு. இதுதான் இன்றைய ஹோட்டல் நிலவரம்.
கோபு அய்யங்கார் பேப்பர் ரோஸ்ட் பற்றி முன்னர் பலமுறை சொல்லி இருக்கிறேனே... வீட்டில் செட்னரா வாரம் நான் அபப்டி வார்த்து மகனுக்கு போட்டபோது ரசித்து சாப்பிட்டான் அவன்!
நாகப்பட்டினம் அல்வா கொஞ்சம் முறுகின பதத்தில் இருக்கும். பிரேமாவிலாஸ் சூப்பர். இந்தமுறை ஹேப்பிமென் முந்திரி அல்வா சித்தித்ததா?!! பெங்களூரு திரும்பியாச்சா? வர வர நம் பிரதமர் மாதிரி எப்போது பார்த்தாலும் வெளியூரிலேயே இருக்கிறீர்கள் நீங்கள்!!
முதல் கவிதை மிக நன்று. படித்தவுடன் எனக்கு திருச்சி கோபு சார் எழுதியிருந்த, பஸ் ஸ்டான்டில் பள்ளிக்குச் செல்லும் குட்டிப் பெண்ணாக நண்பனின் பெண்ணைப் பல வருடங்கள் பார்த்து, பிறகு அந்தப் பெண்ணே அவருடைய மூத்த மருமகளாக அமைந்ததை எழுதியிருப்பார்.
'காதல் என்பது அற்பமானது. அது பிறப்பதற்கும் அழிவதற்கும் அற்ப காரணங்களே போதும்' -- என்ற ஜெயகாந்தனின் வரிகள் தான் காதல் பற்றி எங்கு படித்தாலும் சட்டென்று வந்து என் நினைவில் படியும்.
ஹா.. ஹா.. ஹா... விவாதிக்க கீதா அக்கா, கீதா முன்வரக்கூடும். அவர்கள் பதில் பார்த்து நெல்லை வரக்கூடும். கோமதி அக்கா கொஞ்சம் சொல்வார். JKC எசப்பாட்டு பாடுவார்!
தேர்ந்து எல்லாம் எடுக்கவில்லை ஜீவி ஸார்.. அப்படி எல்லாம் எடுத்தால் நேரமும் இருக்காது, பகிர்ந்தது எது, விட்டுப்போனது எதுன்னும் குழப்பம் வந்துடும். வரிசையா எடுக்கறதுதான்!
இந்த மூலிகைப் பண்ஐகளை மூணாறில் பார்த்து நொந்து நூடுல்ஸானேன். எங்கும் வியாபாரம்தான். அதில் அலோபதி, நிச்சயம் ரிசல்டை உடனுக்குடன் காண்பிக்கும். மற்றவை அப்படி அல்ல.
"திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்ல வேண்டும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்"//
இது கண் போன போக்கிலே கால் போகலாமா பாடல்? எம் ஜி ஆர் படப் பாட்டோ? அவருடைய படங்களில் பெரும்பாலும் இப்படி வரிகள் உள்ள பாடல்கள் வருமே..
ஸ்ரீராம், எனக்கும் டயரியில் பல வரிகள் எழுதி வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தது. பெரும்பான்மை நன்மொழிகள், ஆங்கிலத்திலும் தமிழிலும் என்று.
இப்ப கூட என் தூரத்து மாமா தினமும் நன் மொழிகள் கொண்ட குட்மார்னிங்க் மெசேஜ் அனுப்புவார். சிலதை நம்ம எழுத்தில் பயன்படுத்திக் கொள்ள எடுத்து வைத்துக் கொள்வதுண்டு.
இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. பாடலின் தாக்கம் தெரிந்ததை விட, பிப்ரவரி 14 லின் தாக்கம் பதிவெங்கும் தெரிந்தது. உங்கள் பாஸ் திருமணத்திற்கு முன் எதிர் வீட்டில்தான் இருந்தாரா? உறவா, இல்லை பழகிய உறவா, எப்படியோ பழகியதில் உறவானவது குறித்த பாடல்கள் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்கள் அன்பான பாட்டியால்தான் உங்கள் காதல் முழு வெற்றியடைந்தது போலும்.! உங்கள் இனிதான காதல் திருமணத்திற்கு எப்போதும் என் நல்வாழ்த்துகள்.
குருவிசுவாசம் ஏற்கனவே எப்போதோ படித்த நினைவு. இன்றும் அது சற்று மறந்து போன நிலையில் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
எதிர் வீடு இல்லை கமலா அக்கா. கீழே இரண்டு வீடுகள் மேலே இரண்டு வீடுகள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். வலப்பக்கம் இடப்பக்கமாக இரண்டு வீடுகள். அதன் மேலே இரண்டு வீடுகள். கீழ் வீட்டு வாசலில் இருந்து அப்படியே நிமிர்ந்து மேலே பார்த்தால் பக்கத்து வீட்டுக்கு மாடி வீட்டில் இருக்கும் பால்கனி தெரியும்.
உங்கள் அனுபவங்களைப் படிக்கும் பொழுது நீங்கள் ஒரு வெளிப்படையான மனிதர் என்று தெரிகிறது. நீங்கள் விரும்பும் விஷயங்கள் உங்கள் வீட்டில் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதே?
நீங்கள் சொல்லும் சுக்கு மிளகு திப்பிலி விஷயத்தை தான் பகவான் ஜி அங்கு சொல்லியிருந்தார். என்றாலும் சுக்கு மிளகு திப்பிலியை பிரித்தால் பொருள் வராது. இந்த வார்த்தையை பிரித்தால் வேறு ஒரு பொருள் வருகிறது பாருங்கள்..
pass ஆகாம எப்படி boss ஆக முடியும். boss pass ஆக காரணமான பாட்டை ரசித்தேன். இடையில் தங்கர் பச்சானின் இசைக்காத இசைத்தட்டு கதையும் எட்டிப்பார்த்தது. //‘‘என்னைவிட்டால் யாருமில்லை, கண்மணியே உன் கையணைக்க, உன்னைவிட்டால் வேறொருத்தி எண்ணமில்லை நான் காதலிக்க…’ // இந்த பாடலையேதான் திரும்பத் திரும்ப ஒலிக்கச் செய்தான். நானும் ஆபிசில் தூங்கியிருக்கிறேன். அதிலும் சாப்பிட்டு முடித்தபின் ஒரு கால் மணி நேரம் உட்கார்ந்தபுடியே தூங்கி விடுவேன். பின்னர் எழுந்து முகம் கழுவினால் எத்தனை புத்துணரச்சியாக இருக்கும் தெரியுமா?
வாங்க JKC சார்... நீங்கள் ஆபீஸில் கொஞ்ச நேரம் தூங்குவீர்கள் என்று முன்னாடியே சொல்லி இருக்கிறீர்கள். தங்கர்பச்சான் கதை தெரியவில்லை . ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் நாளை நமதே பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
'குரு விசுவாசம்' 'குருவி சுவாச'மானதைப் படித்த பொழுது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. பின்னணிப் பாடகர் ஏ.எம்.ராஜா, ஜிக்கியை மணந்து கொண்டதை ஒரு தினசரியில் ராஜா, ஜிக்கி திருமணம் என்று வெளியிடுவதற்குப் பதில் ராஜாஜிக்கு திருமணம் என்று வெளியிட்டு விட்டார்களாம். :)))
ரிஷி கபூர், பற்றி ஏ.வி.எம்.குமரன் யூ டியூப் நானும் பார்த்தேன். சந்தேகத்துக்கு சாம்பார் என்பது போல ஒன்றுக்கு இரண்டாக பேப்பர் ரோஸ்ட் காணொளி போட்டு விட்டீர்களா?
காலை வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க ஜீவி ஸார்.. வணக்கம்.
நீக்குபாடலின் தாக்கம் வாழ்க்கையில் வர காதலித்திருக்கவேண்டும் என நினைக்கிறேன். குறைந்தபட்சம் அந்தத் தருணங்களில் இருவருக்கும் கேட்கும்படியாக ஏதாவது பாடலாவது ஒலித்திருக்க வேண்டும்.
பதிலளிநீக்குஎன் நண்பன் தி நகரில் ஒரு பெண்ணிடம் அவள் வீட்டில் காதலைச் சொன்னபோது, தென் பாண்டிச் சீமையிலே. பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது என்று சொன்னான்.
வாங்க நெல்லை...
நீக்குஅப்படி எல்லாம் அவசியமில்லை. பாடல்களை ரசிக்கும் மனம் இருந்தால் போதும். எது இருந்தால் போதும்? மனமிருந்தால் போதும்! (இதோ இந்த வரிகளே கூட ஒரு பாடல் வரிகளின் தாக்கம்! கண்டு பிடிக்க முடிகிறதா?)
நான் முன்னர் 'மேகம் கருக்குது மழை வரப் பார்க்குது' பாடல் எனக்கு எப்படி பிடித்துப் போனது என்பது பற்றி சொல்லி இருக்கிறேன்.
ரிஷி கபூர் பெயர் குறிப்பிடாமல் ஏவிஎம் குமரன் சொன்ன பேட்டியைக் கண்டிருக்கிறேன். தமிழக ரிஷிகபூர் கார்த்திக்காமே. அட்வான்ஸ் திரும்ப வராது, நடிக்க ஆள் வந்தால்தான் உண்டு எனப் பலரின் வயிற்றெரிச்சலைச் சம்பாதித்து, கடைசியில் அவருடைய அண்ணன் அந்தப் பணத்தை லவட்டிக்கொண்டு சென்றதுதான் மிச்சம்.
பதிலளிநீக்குகார்த்திகைப் பொறுத்த வரை அட்வான்ஸ் வராது சரி.. ரிஷி வேறொன்றுக்கும் அல்லவா ஆசைப்பட்டிருக்கிறார்! அவர் அவருடைய மகனைக் கண்டித்து வளர்த்தாராம்! ஏ வி எம் பெயர் சொல்லியேதான் சொன்னார்.
நீக்கு// கார்த்திகைப் //
நீக்குஒரு 'க்' சேர்த்துக் கொள்ளளவும்!
ஏதோ கார்த்திக் உத்தம புத்திரன் என்று நினைப்பது போல்ல்லவா இருக்கிறது? கார்த்திக், அவர் மகன் கௌதம் பற்றி நிறைய கிசுகிசுக்கள் உண்டே
நீக்குசே ச்சே.. அப்படி எல்லாம் சொல்லவில்லை! அவர் விஷயம் தான் ஊருக்கே தெரியுமே!
நீக்குகுருவி சுவாசம்... ரசிக்கும்படி இருந்தது.
பதிலளிநீக்குஆமாம். அதுதான் உடனடியாக பகிர்ந்தேன்!
நீக்குபேப்பர் ரோஸ்ட் என்ன விலை? சூப்பர் சைஸ். கோபு ஐயங்கார் கடை தோசையை இன்று எழுதி என்ன பயன்? முந்தாநாள் அந்தத் தெருவில்தான் இருந்தேன். நாகப்பட்டினம் ஒரிஜனல் நெய் மிட்டாய் கடையில் அல்வா சூப்பரோ சூப்பர்.
பதிலளிநீக்கு125 ரூபாய் என்று நினைக்கிறேன். அவர்கள் பணம் கொடுத்ததால் தெரியவில்லை. இரண்டு டபரா மாவுக்கு அவ்வளவு காசு. இதுதான் இன்றைய ஹோட்டல் நிலவரம்.
நீக்குகோபு அய்யங்கார் பேப்பர் ரோஸ்ட் பற்றி முன்னர் பலமுறை சொல்லி இருக்கிறேனே... வீட்டில் செட்னரா வாரம் நான் அபப்டி வார்த்து மகனுக்கு போட்டபோது ரசித்து சாப்பிட்டான் அவன்!
நாகப்பட்டினம் அல்வா கொஞ்சம் முறுகின பதத்தில் இருக்கும். பிரேமாவிலாஸ் சூப்பர். இந்தமுறை ஹேப்பிமென் முந்திரி அல்வா சித்தித்ததா?!! பெங்களூரு திரும்பியாச்சா? வர வர நம் பிரதமர் மாதிரி எப்போது பார்த்தாலும் வெளியூரிலேயே இருக்கிறீர்கள் நீங்கள்!!
நீக்குநாகப்பட்டினம், பிரேமா விலாஸ் இரண்டு அல்வாவையும் ருசித்தோம். சமீப வருடங்களாக, இலையில் மாத்திரம்தான் அல்வா சாப்பிடுவது, வீட்டுக்கு வாங்கிவருவதில்லை, வெயிட் போடும் என்ற பயத்தில். நாகப்பட்டினம் 50 ரூ, பிரேமா 20 ரூ. ஹேப்பிமென் அல்வா இன்னும் வேளை வரவில்லை.
நீக்குஇன்னமும் உங்களுக்கு ஹேப்பி மேன் அல்வா தரிசனம் கிட்டவில்லையா? உங்களுக்கே பெரிய விருப்பம் இல்லை என்று நினைக்கிறேன். கரெக்டா?
நீக்குமுதல் கவிதை மிக நன்று. படித்தவுடன் எனக்கு திருச்சி கோபு சார் எழுதியிருந்த, பஸ் ஸ்டான்டில் பள்ளிக்குச் செல்லும் குட்டிப் பெண்ணாக நண்பனின் பெண்ணைப் பல வருடங்கள் பார்த்து, பிறகு அந்தப் பெண்ணே அவருடைய மூத்த மருமகளாக அமைந்ததை எழுதியிருப்பார்.
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா.. அது வியப்புதான் இல்லை?
நீக்குமுதல் கவிதை 'நன்று' சரி, இரண்டாவது கவிதை 'அன்று' வா?
பாட்டி கெக்கலித்தது வெக்களிக்கும்... வசந்த பவனில் கேட்டேன் போன்ற வார்த்தைகளில் எழுத்துப் பிழைகள்.
பதிலளிநீக்குபார்க்கிறேன்.
நீக்குஇன்றைய நகைச்சுவைகள் ஓகே ரகம். சிரிப்பை வரவழைக்கலை. ஆபீசில் தூக்கம், லஞ்சம் இன்னும் மாறவில்லை.
பதிலளிநீக்கு// ஆபீசில் தூக்கம், லஞ்சம் இன்னும் மாறவில்லை. //
நீக்குஇது 84 - 87 ஜோக்ஸ்.. இப்போது அப்படி இருக்க முடியாது என்று நினைக்கிறேன்!
தலைப்பில் குறிப்பிட்டிருக்கும் படையுமில்லை என்ற வார்த்தை எந்த அர்த்தத்தில் இங்கு வருகிற்து என்று புரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்களேன், ப்ளீஸ்
பதிலளிநீக்குநான் ராஜகுமாரன் என்று சொல்லிக்க எனக்கு அரசுக் குடையும் இல்லை, எனக்கு என்று படையும் கிடையாது.
நீக்குநான் சொல்ல வந்ததையே நெல்லையும் சொல்லி இருக்கிறார் ஜீவி ஸார்.
நீக்கு'காதல் என்பது அற்பமானது. அது பிறப்பதற்கும் அழிவதற்கும் அற்ப காரணங்களே போதும்' -- என்ற ஜெயகாந்தனின் வரிகள் தான் காதல் பற்றி எங்கு படித்தாலும் சட்டென்று வந்து என் நினைவில் படியும்.
பதிலளிநீக்குஉண்மைதான் ஜீவி ஸார். அற்பமான விஷயம் ஆயுள் வரை கூட வருகிறது.
நீக்குநான் இந்த ஆடத்திற்கு வரவில்லை. சீதை -- ஊர்மிளையைக் கோர்த்த கவிதை பற்றி யாரானும் பக்திமான்கள் கருத்து சொல்லட்டும்.
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா... விவாதிக்க கீதா அக்கா, கீதா முன்வரக்கூடும். அவர்கள் பதில் பார்த்து நெல்லை வரக்கூடும். கோமதி அக்கா கொஞ்சம் சொல்வார். JKC எசப்பாட்டு பாடுவார்!
நீக்குகணேஷ் பாலாவின் அந்த சிறிய குறிப்பில் இத்தனை ஆங்கில வார்த்தைகளா என்று எண்ணி திகைத்தேன்.
பதிலளிநீக்குஎல்லா மொழிகளையும் வாங்கி வளரும் ஆங்கிலம்! தமிழும் அப்படி வளரட்டுமே..
நீக்குவட நாட்டு நடிகர்களா? பாரதீய நடிகர்கள் என்று சொல்ல பழகிக் கொள்ளுங்கள். காலத்திற்கு ஏற்பவான கோலத்திற்கு அதான் பொருத்தமாக இருக்கும்.
பதிலளிநீக்குநீங்க சொல்றதைப் பார்த்தால் தென்னாட்டு நடிகர்கள்னு சொல்லக்கூடாது, திராவிட நடிகர்கள்னு சொல்லிப் பழகணும்னு சொல்வீங்க போலிருக்கே.
நீக்குஹி.. ஹி.. பாரதீயத்தை தென்னாடு -- வட நாடு என்று ஏன் பிரித்துப் பார்க்கிறிர்கள், நெல்லை?..
நீக்குபாரதீய வித்யா பவன் தாக்கத்தில் சொல்கிறீர்களா? தீய என்ற வார்த்தை வருவதால் சொல்கிறீர்களா?
நீக்குஎன்னவோ போங்க.. என்னவோ மறைபொருள்! யாரையோ கிளறீங்க!
* "கிள்றீங்க" என்று படிக்கவும்!
நீக்குஹி..ஹி.. அது என்ன ஆபீஸ் -- தூக்கம் என்று ஜோக்குகளைத் தேர்ந்தெடுத்திருக்கீங்க? அதுவும் அந்த எம்.பூங்கோதையின் ரெண்டு ஜோக்குகளிலும்.....
பதிலளிநீக்குதேர்ந்து எல்லாம் எடுக்கவில்லை ஜீவி ஸார்.. அப்படி எல்லாம் எடுத்தால் நேரமும் இருக்காது, பகிர்ந்தது எது, விட்டுப்போனது எதுன்னும் குழப்பம் வந்துடும். வரிசையா எடுக்கறதுதான்!
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.... வணக்கம்.
நீக்குஇன்று மூலிகைப் பண்ணைக்கு
பதிலளிநீக்குசெல்ல வேண்டும்...
நாளை சந்திக்கலாம்...
இந்த மூலிகைப் பண்ஐகளை மூணாறில் பார்த்து நொந்து நூடுல்ஸானேன். எங்கும் வியாபாரம்தான். அதில் அலோபதி, நிச்சயம் ரிசல்டை உடனுக்குடன் காண்பிக்கும். மற்றவை அப்படி அல்ல.
நீக்குமெதுவாக வாருங்கள் செல்வாண்ணா. நெல்லை.. அவர் மூலிகை பண்ணை என்று சொல்வது சித்தா மருத்துவமனை என்று நினைக்கிறேன்
நீக்கு"திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்ல வேண்டும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்"//
பதிலளிநீக்குஇது கண் போன போக்கிலே கால் போகலாமா பாடல்? எம் ஜி ஆர் படப் பாட்டோ? அவருடைய படங்களில் பெரும்பாலும் இப்படி வரிகள் உள்ள பாடல்கள் வருமே..
ஸ்ரீராம், எனக்கும் டயரியில் பல வரிகள் எழுதி வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தது. பெரும்பான்மை நன்மொழிகள், ஆங்கிலத்திலும் தமிழிலும் என்று.
இப்ப கூட என் தூரத்து மாமா தினமும் நன் மொழிகள் கொண்ட குட்மார்னிங்க் மெசேஜ் அனுப்புவார். சிலதை நம்ம எழுத்தில் பயன்படுத்திக் கொள்ள எடுத்து வைத்துக் கொள்வதுண்டு.
கீதா
வாங்க கீதா... முன்பு நான் கூட எஸ் எம் எஸ் என்று வருமே ..அவற்றையெல்லாம் எழுதி வைத்திருந்திருக்கிறேன். ஆனால் கணினியில் டிராஃப்டாக.
நீக்குபாட்டி பலே பாட்டியாக இருந்திருக்காங்களே! நல்ல பாட்டி செம சிரித்துவிட்டேன்!!
பதிலளிநீக்குகீதா
ஹா ஹா ஹா ஹா
நீக்குஅட! பாஸ் வீட்டிற்குக் கேட்கும் என்றால் அவ்வளவுதான் தூரமா கிட்டவோ? இங்க போட்டா அங்க கேட்டிருக்கிறதே.
பதிலளிநீக்குஓ அடுத்த வரியில் புரிந்துவிட்டது பாஸ் வீட்டு பால்கனி வழி தூது!
கீதா
ஹி... ஹி... ஹி...
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா..... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்கு"சோகத்தின் பாஷை என்ன சொன்னால் அது தீருமா? கங்கை நீர் காயக் கூடும் கண்ணீர் அது காயுமா"
பதிலளிநீக்குநிறுத்தி விட்டேன். அங்கே மேலே ஒரு புன்னகை மலர்ந்தது.//
ஹாஹாஹா காதலில் என்னவெல்லாம் நடந்திருக்கு...கோல்டன் மெமரிஸ்!
ஏன் கூடப் படிச்ச பசங்க இப்படித்தான் பாடல் வரிகளையே தூதாக பயன்படுத்தியது நினைவுக்கு வருகிறது.
நான் மெசெஞ்சராகவும் இருந்திருக்கிறேன்.....அதில் ஒரு சம்பவம் நடந்து விட, நான் அதன் பின் நோ சொல்லி விலகிவிட்டேன்.
ஆனால் என் நட்புகள் செய்த காதல் அவங்க ஊடல் எல்லாம் ரசித்ததுண்டு. சினிமா பார்க்கவே தேவையில்லாமல் நேரடி ஒளி/லிபரப்பாக!!!!!!
காரணம் பலசமயங்களில் தனியாகச் செல்ல முடியாதவங்க என்னைத் துணைக்குக் கூட்டிக் கொண்டு சென்றதுண்டு!
கீதா
பாடல்கள் மட்டுமா. இன்னும் என்னென்னவோ...!
நீக்குரோஸ்ட் வெளிய பார்க்க நல்லாருக்கு.
பதிலளிநீக்குநம் வீட்டிலும் ரோஸ்ட் அடிக்கடி செய்ததுண்டு கோன், சுருட்டி என்று. மெலிசாதான் இருக்கணும் நடுவிலும்...அப்பாக்கு சாப்பிட முடியலை. ஆனா எங்களுக்குச் செய்து கொள்வதுண்டு.
இங்கும் ஹோட்டலில் ரோஸ்ட் என்பது சரியாக இருப்பதில்லை
கீதா
அவர்களுக்கெல்லாம் காசு மட்டும் தான் குறி!
நீக்குகுட்டிக் குழந்தைக்குக் கவிதை அருமை ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஇரண்டாவதும் நல்லாருக்கு. இரண்டுமே ரசித்தேன்.
கீதா
நன்றி கீதா
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. பாடலின் தாக்கம் தெரிந்ததை விட, பிப்ரவரி 14 லின் தாக்கம் பதிவெங்கும் தெரிந்தது. உங்கள் பாஸ் திருமணத்திற்கு முன் எதிர் வீட்டில்தான் இருந்தாரா? உறவா, இல்லை பழகிய உறவா, எப்படியோ பழகியதில் உறவானவது குறித்த பாடல்கள் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்கள் அன்பான பாட்டியால்தான் உங்கள் காதல் முழு வெற்றியடைந்தது போலும்.! உங்கள் இனிதான காதல் திருமணத்திற்கு எப்போதும் என் நல்வாழ்த்துகள்.
குருவிசுவாசம் ஏற்கனவே எப்போதோ படித்த நினைவு. இன்றும் அது சற்று மறந்து போன நிலையில் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எதிர் வீடு இல்லை கமலா அக்கா. கீழே இரண்டு வீடுகள் மேலே இரண்டு வீடுகள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். வலப்பக்கம் இடப்பக்கமாக இரண்டு வீடுகள். அதன் மேலே இரண்டு வீடுகள். கீழ் வீட்டு வாசலில் இருந்து அப்படியே நிமிர்ந்து மேலே பார்த்தால் பக்கத்து வீட்டுக்கு மாடி வீட்டில் இருக்கும் பால்கனி தெரியும்.
நீக்குகுரு விசுவாசம் பற்றி நீங்கள் முகநூலில் இருந்தால் படித்திருந்தால் இது நேற்று கணேஷ் பாலா வெளியிட்டது
நீக்குஉங்கள் அனுபவங்களைப் படிக்கும் பொழுது நீங்கள் ஒரு வெளிப்படையான மனிதர் என்று தெரிகிறது. நீங்கள் விரும்பும் விஷயங்கள் உங்கள் வீட்டில் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதே?
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா... வெளிப்படையான மனிதர்? ம்ம்ம்.... சில விஷயங்களில் சொல்லலாம்!
நீக்குகணேஷ் பாலா - குருவி சுவாசம் !! ரசித்தேன்.....இது சுக்குமி ளகுதி ப்பிலி போல...
பதிலளிநீக்குஒரு எழுத்து மாறும் போது ஏற்படும் குழப்பம் அல்லது வித்தியாசம் பல ரசிக்க வைக்கும். சட்டுன்னு நினைவுக்கு வரவில்லை...
கீதா
நீங்கள் சொல்லும் சுக்கு மிளகு திப்பிலி விஷயத்தை தான் பகவான் ஜி அங்கு சொல்லியிருந்தார். என்றாலும் சுக்கு மிளகு திப்பிலியை பிரித்தால் பொருள் வராது. இந்த வார்த்தையை பிரித்தால் வேறு ஒரு பொருள் வருகிறது பாருங்கள்..
நீக்குஆமாம், அதுக்குதான் சில சுவாரசியமானவை டக்குனு நினைவுக்கு வரலைன்னு சொல்லியிருக்கிறேன் வார்த்தை விளையாடல் போல...வரும்...
நீக்குகீதா
பதிலளிநீக்குpass ஆகாம எப்படி boss ஆக முடியும். boss pass ஆக காரணமான பாட்டை ரசித்தேன். இடையில் தங்கர் பச்சானின் இசைக்காத இசைத்தட்டு கதையும் எட்டிப்பார்த்தது. //‘‘என்னைவிட்டால் யாருமில்லை, கண்மணியே உன் கையணைக்க, உன்னைவிட்டால் வேறொருத்தி எண்ணமில்லை நான் காதலிக்க…’ // இந்த பாடலையேதான் திரும்பத் திரும்ப ஒலிக்கச் செய்தான்.
நானும் ஆபிசில் தூங்கியிருக்கிறேன். அதிலும் சாப்பிட்டு முடித்தபின் ஒரு கால் மணி நேரம் உட்கார்ந்தபுடியே தூங்கி விடுவேன். பின்னர் எழுந்து முகம் கழுவினால் எத்தனை புத்துணரச்சியாக இருக்கும் தெரியுமா?
Jayakumar
வாங்க JKC சார்... நீங்கள் ஆபீஸில் கொஞ்ச நேரம் தூங்குவீர்கள் என்று முன்னாடியே சொல்லி இருக்கிறீர்கள். தங்கர்பச்சான் கதை தெரியவில்லை . ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் நாளை நமதே பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
நீக்குரிஷி கபூர் - அல்பங்கள்....
பதிலளிநீக்குஇங்கயும் சொல்வதுண்டே கொடுத்தா திருப்பி வராதுன்னு.
கீதா
திரையுலகில் இது சகஜம்
நீக்குபாடல்கள் பின்னர் கேட்கிறேன் ஸ்ரீராம். வேலை செய்யறப்ப ஹெட் செட் இல்லாம போட்டுவிடு... இப்ப முடியலை.
பதிலளிநீக்குகீதா
ஓகே அப்புறமா கேளுங்க ஆனா அவசியம் கேளுங்கள்
நீக்குஜோக்ஸ் ஓகே....
பதிலளிநீக்குகீதா
ஓகே
நீக்கு'குரு விசுவாசம்' 'குருவி சுவாச'மானதைப் படித்த பொழுது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. பின்னணிப் பாடகர் ஏ.எம்.ராஜா, ஜிக்கியை மணந்து கொண்டதை ஒரு தினசரியில் ராஜா, ஜிக்கி திருமணம் என்று வெளியிடுவதற்குப் பதில் ராஜாஜிக்கு திருமணம் என்று வெளியிட்டு விட்டார்களாம். :)))
பதிலளிநீக்குஹா ஹா ஹா
நீக்குகவிதை சிறப்பு!, ஜோக்குகள் ஓகே, அதன் படங்கள் நன்றாக இருக்கின்றன.
பதிலளிநீக்குநன்றி பானு அக்கா
நீக்குரிஷி கபூர், பற்றி ஏ.வி.எம்.குமரன் யூ டியூப் நானும் பார்த்தேன். சந்தேகத்துக்கு சாம்பார் என்பது போல ஒன்றுக்கு இரண்டாக பேப்பர் ரோஸ்ட் காணொளி போட்டு விட்டீர்களா?
பதிலளிநீக்குஅச்சச்சோ.... ஒன்றை நீக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் .வைக்கவில்லையா? இரண்டில் எதை நீக்கலாம் என்று சொல்லுங்களேன்
நீக்கு