நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
5.2.26
குடையுமில்லே படையுமில்லே கூதலுக்கு ஆதரவா தாவணிய நீ பிழிய தலைதுவட்ட நான் வரவா
பிடித்த பாடல் என்ன, அந்தப் பாடலின் தாக்கம் ஏதாவது உங்கள் வாழ்வில் இருந்தால் சொல்லுங்களேன் என்று ஆரண்யநிவாஸ் அவர் வாட்ஸாப் குழுமத்தில் அன்றைய டாபிக்காக கேள்வி கேட்டிருந்தார்.
என் டைரியில் வருடம் தவறாமல் நான் எழுதி வைத்துக் கொள்ளும் வரிகள் சில உண்டு. முக்கியமான பாடல் வரி "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்ல வேண்டும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்"
இதை மட்டும் அங்கே குறிப்பிட்டிருந்தேன். மேற்கொண்டு இங்கே கொஞ்சம் கதைக்கிறேன்.
அப்போது அவர் பாஸாக ஆகவில்லை! 'வா வா வா கண்ணா வா' பாடல் எனக்கும் பாஸுக்கும் இடையில் ஒரு சங்கேதப்படலாக இருந்தது. கவனிக்கவும், சந்தேகம் என்று படித்து விடப் போகிறீர்கள்! இது கூட வேண்டுமென்று வைத்துக் கொண்டது இல்லை. நாம் முயற்சி செய்யாமல் ஒரு விஷயம் தானாக எப்படி உருவாகிறது பாருங்கள்...
ஒருமுறை கேசெட்டில் அந்தப் பாடல் போட்டதும், அந்த நேரம் பார்த்து அவர் இறங்கி எங்கள் வீட்டுக்கு வந்து ஏதோ சொல்லி, பேசிச் சென்றார். "ஓ.. இதுக்குதான் வா வா வா என்று அவன் பாட்டு போட்டானா.." என்று பாட்டி கேட்டார். அடுத்தமுறை அதே பாடல் இன்னொரு முறை இன்னொரு நாள் போடும்போது அவர் வரவில்லை. மாலை கல்லூரி விட்டு வீடு வந்துவிட்டு, எங்கள் வீட்டுக்கு வந்தவரிடம் பாட்டி 'பாவம்... இவன் மதியம் அந்தப் பாட்டைப் போட்டு விட்டு உனக்காகக் காத்திருந்தான்" என்று கிண்டலடிக்க, "எந்தப் பாட்டு" என்று கேட்டார் பாஸ். "அதான்.. வா வா வா கண்ணே வா..." என்றார் பாட்டி.
அந்த வரிகளை அவர் ஒரு கிண்டல் த்வனியில், வெக்களிக்கும் குரலில் சொன்னார்!
"அது கண்ணா வா பாட்டி, கண்ணே வா இல்லை என்றேன். "அதுசரி, நீ பாட்டு போடறே என்றால் அது கண்ணே வா என்றுதானே வரவேண்டும் என்று திருப்பி அடித்தார் பாட்டி.
அடுத்தமுறை நான் பாஸைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தபோது இந்த பழைய உரையாடல்கள் நினைவுக்கு வர, எதற்கும் இந்தப் பாட்டைப் போட்டுப் பார்ப்போம்... என்று கேசட்டை ஓடவிட்டேன்.
உள்ளே ரூமில் தினமலர் வாரமலர் படித்துக் கொண்டிருந்த பாட்டி "அவ்ளோதான்.. போட்டுட்டான் பாட்டை.. வந்துடுவா இப்போ" என்று சொல்லிக்கொண்டே புத்தகம் படிப்பதைத் தொடர்ந்தார். அவர் புத்தகம் படிக்கும் பாணியைச் சொல்ல வேண்டும். தரையில் அல்லது அங்கிருந்த மரக்கட்டிலின் மேலே ஜன்னலை ஒட்டி கால்களை நீட்டி அமர்ந்து இரண்டு கைகளாலும் புத்தகத்தைப் பிடித்து மடியில் வைத்து கண்ணாடி போட்டுகொண்டு படிப்பார். .
அடுத்த ஓரிரு நிமிடங்களில் புயலென உள்ளே நுழைந்தார் பாஸ். நான் மட்டுமே ஹாலில் இருக்க, "என்ன விஷயம்? இன்னிக்கி சண்டே.. அப்பா வீட்ல இருக்கார்.. இப்படி எல்லாம் வரமுடியாது..சீக்கிரம் சொல்லுங்க" என்று பரபரத்தார். அன்று முதல் அது அதிகாரபூர்வ அழைப்புப் பாடலாக எங்களுக்குள் ஆனது!
ஒரு முறை ஏதோ ஒரு காரணத்தால் அவர் வீட்டு பால்கனியில் மகா சோகமாக உட்கார்ந்திருந்தார் பாஸ். எங்கள் வீட்டு வாசலில் நின்றால் அவர் வீட்டு பால்கனி தெரியும். கண் கலங்கி உட்கார்ந்திருந்தார். என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ள நான் முயன்றும் சரியான பதில் வரவில்லை. சோகம் மாறவில்லை. காதல் நாட்கள் அல்லவா... நான் உடனே அந்த மூடை மாற்றத் தீர்மானித்தேன். கேஸட்டைப் போட்டேன்.
கீழ் வீடான எங்கள் வீட்டு ஹாலில் இருந்த ஜன்னலில் உள்ள இடத்தில்தான் 'டூ இன் ஒன்'னை வைத்திருப்பேன். நேஷனல் பானசானிக் ஸ்டீரியோ!ஜன்னல் கதவுகளைத் திறந்து, டேப்-ரெக்கார்டரைத் திருப்பி வெளிப்பக்கமாக ஸ்பீக்கர்கள் பார்க்கும்படி வைத்து ஒலிக்க விட்டால் தெருவே அதிரும்!
மதுரை F M வானொலியிலிருந்து பாடல்களை தெளிவாக காலி கேசெட்டில் பதிந்து வைப்பேன். அதை எடுத்து FF செய்து, சரியாக நிறுத்தி, "அந்த" வரிகளை சின்னதாக வைத்து சோதித்துக் கொண்டு, மீண்டும் சரியாக நிறுத்தி சத்தத்தைக் கூட்டி ஆன் செய்தேன்.. அமைதியான அந்த இடத்தில SPB குரல் சற்றே சத்தமாக ஒலித்தது.
"சோகத்தின் பாஷை என்ன சொன்னால் அது தீருமா? கங்கை நீர் காயக் கூடும் கண்ணீர் அது காயுமா"
நிறுத்தி விட்டேன். அங்கே மேலே ஒரு புன்னகை மலர்ந்தது.
சமீபத்தில் உறவு ஒன்று கொடுத்த பார்ட்டியில் மறுபடி வசந்த்பவன் WB சென்றபோதுற பேப்பர் ரோஸ்ட் என்று போட்டிருந்ததைப் பார்த்து ஆர்டர் செய்தேன். சார் ஒரு ஆளா சாப்பிட முடியாது என்று பயமுறுத்தினார் சர்வர். பேப்பர் ரோஸ்ட்தானே? மெல்லிசாக தானே இருக்கும்? என்று எக்ட்டேன். சற்று தயங்கி ஆமாம் மெலிசாத்தான் இருக்கும் என்றார். என் இளையவன் இதை மகாராஜா தோசை என்றான்!
ஆர்டர் சர்வ் ஆனதும் எடுக்கப்பட்ட வீடியோ இது. நாங்கள் அறுவர் இதை ஆளுக்கு கொஞ்சம் சாப்பிட்டோம். சர்வரைக் கூப்பிட்டு இதுதான் உங்கள் ஊரில் பேப்பர் ரோஸ்ட்டா? என்று கேட்டேன். "ஏன் சார்?" என்றார். "மதுரை போயிருக்கிறீர்களா?" "ஐயோ.. மதுரை மாதிரி எல்லாம் வருமா சார்?" என்று டிஃபன்ஸ் ஆடினார் சர்வர். "அங்கே போய் கோபு ஐயங்கார் கடை என்று கேளுங்கள். அங்கே சாப்பிட்டு பாருங்கள். இப்படி நடுவே காடாத்துணி போல தோசை மாவாக இருக்கே.. அங்கே மெலிதாக இந்தப் பத்திலிருந்து பார்த்தால் அந்தப் பக்கம் நீங்கள் தெரியும் அளவு இருக்கும். அதுதான் பேப்பர் ரோஸ்ட். எடுத்து சாப்பிட்டால் சில நொடியில் நாக்கில் கரைந்து விடும்" என்று சொல்லி விட்டு வந்தேன்! ராம்நாடாம்!
சென்ற வாரம் என் நண்பன் தொலைபேசி அவனுக்கு பேத்தி பிறந்திருக்கும் தகவலை சந்தோஷமாகச் சொன்னான். எனக்கும் சந்தோஷமாக இருந்தது. அவனுடைய பெண்ணை ஏழாவது எட்டாவது படிக்கும் பெண்ணாக இருப்பதிலிருந்து தெரியும். எங்கள் வீட்டு வரலக்ஷ்மி பூஜைக்கு வருடம் தவறாமல் வருவாள். அந்த மகிழ்ச்சியில் இதை எழுதி அனுப்பி அவனுக்கு அனுப்பினேன். "ஃபிரெண்டு ஹேப்பி அண்ணாச்சி!"
சில வாரங்களாக மனதில் இருக்கும் இந்த இரு பாடல்களை இன்று பகிர்ந்து விடுகிறேன்.
காதல் என்கிற உணர்வு இருக்கிறது பாருங்கள்.. அது ஒரு சுகவேதனை. "படைத்தானே பிரம்மதேவன் பதினாறு வயதுக் கோலம் இது யார் மீது பழிவாங்கும் சோதனை.. உனைக் காண்போர்க்கு சுகமான வேதனை" என்று பாடினார் புலமைப்பித்தன்.
அந்த Feel இந்தப் பாடலின் காட்சியில் நன்றாக வெளிப்பட்டிருக்கும். ஹீரோ, ஹீரோயின் இருவருமே இளம் வயது என்பது கூடுதல் ப்ளஸ். அவர்களின் இளமை கண்களுக்கு இனிமை.
நடுவில் ஒரு காட்சி. குழந்தைகளுக்கு தலை துவட்டி விடுவாள் அவள். இவனும் சட்டென சென்று அமர்ந்து தன் நனைந்த தலையை அவளுக்காக நீட்டுவான். அவள் சட்டென குளிருந்து சிரித்து துண்டை அவன் முகம் மேலே போட்டு விட்டு ஓரமாகச் சென்று மென்னகை புரிவாள்.
"குளிரடிக்கும் சாரலுக்கு குடை பிடிக்க வா மயிலே" என்று அவன் பாட, அவள், "குடையுமில்லே படையுமில்லே கூதலுக்கு ஆதரவா தாவணிய நீ பிழிய தலைதுவட்ட நான் வரவா" என்று கேட்கும் நாயகி தமிழில்!
இன்னும் சொல்லாத காதல்; சொல்லாவிடினும் பரஸ்பரம் புரிந்துகொண்ட காதல். காதலைச் சொல்லி கைபிடித்து இன்னும் போகவேண்டிய தூரம் நிறைய.. இந்த ஆரம்ப காதல் வேதனை பாடலில்.. பாருங்களேன்..
எவனோ ஒருவன் / ஒருவள் தன்னிடம் வந்து தன் காதலைச் சொல்வான்/ள் என்று எதிர்பார்ப்பதாக பாடுகிறார்கள். காதலில் அவர்கள் என்னென்ன செய்வார்கள், என்னென்ன எதிர்பார்ப்பு என்று பாடல். பாடல் முடியும்போதும் சொல்லபப்டாத காதல் வேதனை சுகமாகத் தொடக்கிறது.
ஹம் ஹை ராஹி ப்யார் கே என்னும் படத்தில் குமார் சானுவும் அல்கா யாக்னிக்கும் பாடிய பாடலுக்கு இசை இரட்டையர்கள் நதீம்-ஷ்ரவன். காட்சியில் அமீர்கான்-ஜூஹி ஜூஹி தமிழ்ப் பெண்ணாக வருவார்.
"Mujhse Mohabbat Ka Izhar Karta" (film: Hum Hain Rahi Pyar Ke)is a popular romantic song based primarily on Raag Yaman . This raga is known for its sweet, romantic, and soothing tones, which perfectly captures the sentiment of the song.
அந்த காலகட்டத்தில் கிசுகிசுவாக சொல்லப்பட்டவை அப்புறம் காலப்போக்கில் அல்லது காலம் கடந்து அதன் வீர்யம் குறைந்த நாட்களில் சம்பந்தப்பட்டவர்களே உடைத்து விடுகிறார்கள்.
ரிஷி கபூர்...
'பாபி' வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன காலகட்டத்தில் பம்பாய் சென்ற ஏ வி எம் நிறுவனத்தார் தாங்கள் தயாரிக்கும் ஒரு படத்தில் ரிஷியை நடிக்கக் கேட்டிருக்கின்றனர்.
யார் ஹீரோயின் என்று கேட்டிருக்கிறார் ரிஷி.
ஜெயசுதா என்று சொல்லி இருக்கிறார்கள் இவர்கள்.
அவரை நான் பார்க்க வேண்டுமே என்று சொல்லி இருக்கிறார் அவர்.
'இல்லை புகைப்படங்கள் இருக்கின்றன மேலும் அவர் நடித்த படத்தின் ரஷ் இருக்கிறது பாருங்கள்' என்று சொன்னாலும் ரிஷி ஜெயசுதாவை சந்திக்க வேண்டும், அதுவும் 'தனியாக' சந்திக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்திருக்கிறார். 'அடுத்த மாதம் சென்னை வருவேன். அங்கு ஏற்பாடு செய்யுங்க'ள் என்று சொல்லி இருக்கிறார்.
தேவர் படம் ஒன்றுக்காக சென்னை வந்த அவரிடம் ஜெயசுதாவை அழைத்துச் சென்றிருக்கிறார்கள் ஏ வி எம் குமரன் உள்ளிட்டவர்கள்.
ரிஷியோ, நீங்கள் எல்லாம் வெளியே செல்லுங்கள். நான் அவரிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்லி இருந்திருக்கிறார். ஜெயசுதா பயந்திருக்கிறார்.
'கவலைப்பட வேண்டாம். நாங்கள் வெளியேதான் இருக்கிறோம்' என்று அவர்கள் இருவரையும் தனியாக விட்டு விட்டு வெளியே நின்றார்களாம் ஏ வி எம் குழுவினர்.
சுமார் ஒன்றரை மணிநேரம் பேசினார்களாம்.
'என்னதான் பேசினார்களோ' என்கிறார் ஏ வி எம் குமரன். இவர்கள் உள்ளே சென்று ரிஷியிடம் தேதிகள் கேட்க, அவரோ 'ஊருக்குப் போய்ச் சொல்கிறேன்' என்று சென்று விட்டாராம்.
அப்புறம் போன் செய்து கேட்டால், 'ஜெயசுதா வேண்டாம், சுலக்ஷணா பண்டிட் என்று இங்கு ஒரு நடிகை இருக்கிறார். அவரைப் போடுங்கள்' என்று சொல்லி இருக்கிறார்.
அப்பாவிடம் - ஏ வி எம் செட்டியாரிடம் - இவர்கள் விவரம் சொல்ல, 'வேண்டாம், விட்டு விடுங்கள். ஜெயசுதாவுடன் நடிக்க சம்மதித்தால் சரி, அல்லது இங்கிருந்து நாம் சொல்லும் வேறொரு நடிகையை ஒத்துக் கொள்ளட்டும். அவர் இஷ்டத்துக்கு வேண்டாம் 'என்று அவர் சொல்ல, முயற்சி முறிந்து போனதாம்.
சரி, கொடுத்த 50,000 ரூபாய் அட்வான்ஸை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள் ஏ வி எம் குழுவினர். 'பம்பாயில் ஒருமுறை, சென்னையில் ஒருமுறை சந்தித்து பேசி (டிஸ்கஸ்) செய்திருக்கிறோம். பணம் சரியாகி விட்டது' என்று விட்டாராம் அந்த அல்பம்.
வடநாட்டு நடிகர்கள் இப்படி அல்பமாக நடந்து கொள்வது ஏ வி எம் முக்கு புதிதல்ல.
ஏற்கெனவே திலீப்குமார் ஒரு சிவாஜி படத்தை ஹிந்தியில் தான் நடிக்க விரும்புவதாய்ச் சொல்லி காஷ்மீருக்கும், மும்பைக்கும், சென்னைக்கும் அலைக்கழித்து, அப்புறம் அந்த படம் வேண்டாம், பாபு படத்தை ரீமேக் செய்யலாம் என்று சொல்லி அலைய வைத்து, கடைசியில் நடிக்கவில்லை என்று முடிவெடுத்தாராம்.
ஏ வி எம் செட்டியார் நடுவிலேயே பொறுமை இழந்து விட்டாராம். அவரிடமும் கொடுத்த அட்வான்சைக் கேட்டால் இதே போலத்தான் பதில் வந்ததாம்.
அதே படத்தில் இன்னொரு பாடல். அதே ஜோடி நடிப்பில், அதே ஜோடிக் குரலில்!
காதல் சொல்லப்பட்டு விட்டது என்று சொல்லலாம். அந்தப் பரவசமான நிலையில் இந்தப் பாடல்.. இந்தப் பாடல் அப்போது சித்ரஹாரில் போடப்பட்டால், நான் பார்க்கிறேனோ இல்லையோ என்று உடனே எனக்கு வனமாலி சித்தியிடமிருந்து ஃபோன் வரும்,. அப்போதெல்லாம் டயல் ஃபோன்தானே.. யார் ஃபோனை எடுக்கிறார்கள் என்று கூட காத்திராமல் பரபரப்பாக "ஏய்.. சித்ரஹார்ல ஸ்ரீராம் பாட்டு.. அவன் பார்த்துக்கிட்டிருக்கனா? பார்க்கச் சொல்லு" என்று சொல்லி போனை வைத்து விடுவார்! அந்த சமயங்களில் நேரில் பார்க்கும்போது 'ஸ்ரீராம் பாட்டு' என்று சொல்லிச் சொல்லி "தில்பர்க்கா தில்பர்க்கா தில்பர்க்கா" என்று பாடுவார்!
The tune of the popular song "Ghoonghat Ki Aad Se" from the film Hum Hain Rahi Pyar Ke (1993) is primarily based on Raag Shivranjani , believed to have been composed by Shankar- Jaikishan . This raga prohibits Madhyam (Ma) and Nishad (Ni), and it reflects feelings of compassion and love.
பாடலின் தாக்கம் வாழ்க்கையில் வர காதலித்திருக்கவேண்டும் என நினைக்கிறேன். குறைந்தபட்சம் அந்தத் தருணங்களில் இருவருக்கும் கேட்கும்படியாக ஏதாவது பாடலாவது ஒலித்திருக்க வேண்டும்.
என் நண்பன் தி நகரில் ஒரு பெண்ணிடம் அவள் வீட்டில் காதலைச் சொன்னபோது, தென் பாண்டிச் சீமையிலே. பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது என்று சொன்னான்.
அப்படி எல்லாம் அவசியமில்லை. பாடல்களை ரசிக்கும் மனம் இருந்தால் போதும். எது இருந்தால் போதும்? மனமிருந்தால் போதும்! (இதோ இந்த வரிகளே கூட ஒரு பாடல் வரிகளின் தாக்கம்! கண்டு பிடிக்க முடிகிறதா?)
நான் முன்னர் 'மேகம் கருக்குது மழை வரப் பார்க்குது' பாடல் எனக்கு எப்படி பிடித்துப் போனது என்பது பற்றி சொல்லி இருக்கிறேன்.
ரிஷி கபூர் பெயர் குறிப்பிடாமல் ஏவிஎம் குமரன் சொன்ன பேட்டியைக் கண்டிருக்கிறேன். தமிழக ரிஷிகபூர் கார்த்திக்காமே. அட்வான்ஸ் திரும்ப வராது, நடிக்க ஆள் வந்தால்தான் உண்டு எனப் பலரின் வயிற்றெரிச்சலைச் சம்பாதித்து, கடைசியில் அவருடைய அண்ணன் அந்தப் பணத்தை லவட்டிக்கொண்டு சென்றதுதான் மிச்சம்.
கார்த்திகைப் பொறுத்த வரை அட்வான்ஸ் வராது சரி.. ரிஷி வேறொன்றுக்கும் அல்லவா ஆசைப்பட்டிருக்கிறார்! அவர் அவருடைய மகனைக் கண்டித்து வளர்த்தாராம்! ஏ வி எம் பெயர் சொல்லியேதான் சொன்னார்.
பேப்பர் ரோஸ்ட் என்ன விலை? சூப்பர் சைஸ். கோபு ஐயங்கார் கடை தோசையை இன்று எழுதி என்ன பயன்? முந்தாநாள் அந்தத் தெருவில்தான் இருந்தேன். நாகப்பட்டினம் ஒரிஜனல் நெய் மிட்டாய் கடையில் அல்வா சூப்பரோ சூப்பர்.
125 ரூபாய் என்று நினைக்கிறேன். அவர்கள் பணம் கொடுத்ததால் தெரியவில்லை. இரண்டு டபரா மாவுக்கு அவ்வளவு காசு. இதுதான் இன்றைய ஹோட்டல் நிலவரம்.
கோபு அய்யங்கார் பேப்பர் ரோஸ்ட் பற்றி முன்னர் பலமுறை சொல்லி இருக்கிறேனே... வீட்டில் செட்னரா வாரம் நான் அபப்டி வார்த்து மகனுக்கு போட்டபோது ரசித்து சாப்பிட்டான் அவன்!
நாகப்பட்டினம் அல்வா கொஞ்சம் முறுகின பதத்தில் இருக்கும். பிரேமாவிலாஸ் சூப்பர். இந்தமுறை ஹேப்பிமென் முந்திரி அல்வா சித்தித்ததா?!! பெங்களூரு திரும்பியாச்சா? வர வர நம் பிரதமர் மாதிரி எப்போது பார்த்தாலும் வெளியூரிலேயே இருக்கிறீர்கள் நீங்கள்!!
முன்னாடி மொட்டை மாமா என்பவர் தயாரித்துக் கொண்டிருந்தவரை கொஞ்சம் முறுகல் பதத்தில் தான் இருந்திருக்கிறது. இப்போப் பழைய ஆட்கள் யாரும் இல்லை.2022 ஆம் வருடம் போன எங்க பையரும், நம்ம ரங்க்ஸும் வாங்கிட்டு வந்தாங்க. மற்றக் கடைகளின் அல்வா போல் தான் இருந்தது. அதே போல் உருளைக்கிழங்கு மசாலாவும். அம்பி கடை உருளைக்கிழங்கு என்றால் தனி மணம் ருசி(அதான் நாகப்பட்டினம் நெய் மிட்டாய்க்கடைச் சொந்தக்காரர். அப்பாவோட உறவு) இப்போல்லாம் அப்படி இல்லை. என்றாலும் பனிரண்டு மணிக்குப் பின்னர் கிடைக்காது என அம்பியின் பிள்ளை (தற்போதைய நிர்வாகி) சொன்னார். ஏழு அக்காகளுக்குப் பின்னர் பிறந்த ஒரே தம்பி அவர்.
முதல் கவிதை மிக நன்று. படித்தவுடன் எனக்கு திருச்சி கோபு சார் எழுதியிருந்த, பஸ் ஸ்டான்டில் பள்ளிக்குச் செல்லும் குட்டிப் பெண்ணாக நண்பனின் பெண்ணைப் பல வருடங்கள் பார்த்து, பிறகு அந்தப் பெண்ணே அவருடைய மூத்த மருமகளாக அமைந்ததை எழுதியிருப்பார்.
'காதல் என்பது அற்பமானது. அது பிறப்பதற்கும் அழிவதற்கும் அற்ப காரணங்களே போதும்' -- என்ற ஜெயகாந்தனின் வரிகள் தான் காதல் பற்றி எங்கு படித்தாலும் சட்டென்று வந்து என் நினைவில் படியும்.
ஹா.. ஹா.. ஹா... விவாதிக்க கீதா அக்கா, கீதா முன்வரக்கூடும். அவர்கள் பதில் பார்த்து நெல்லை வரக்கூடும். கோமதி அக்கா கொஞ்சம் சொல்வார். JKC எசப்பாட்டு பாடுவார்!
தேர்ந்து எல்லாம் எடுக்கவில்லை ஜீவி ஸார்.. அப்படி எல்லாம் எடுத்தால் நேரமும் இருக்காது, பகிர்ந்தது எது, விட்டுப்போனது எதுன்னும் குழப்பம் வந்துடும். வரிசையா எடுக்கறதுதான்!
இந்த மூலிகைப் பண்ஐகளை மூணாறில் பார்த்து நொந்து நூடுல்ஸானேன். எங்கும் வியாபாரம்தான். அதில் அலோபதி, நிச்சயம் ரிசல்டை உடனுக்குடன் காண்பிக்கும். மற்றவை அப்படி அல்ல.
"திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்ல வேண்டும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்"//
இது கண் போன போக்கிலே கால் போகலாமா பாடல்? எம் ஜி ஆர் படப் பாட்டோ? அவருடைய படங்களில் பெரும்பாலும் இப்படி வரிகள் உள்ள பாடல்கள் வருமே..
ஸ்ரீராம், எனக்கும் டயரியில் பல வரிகள் எழுதி வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தது. பெரும்பான்மை நன்மொழிகள், ஆங்கிலத்திலும் தமிழிலும் என்று.
இப்ப கூட என் தூரத்து மாமா தினமும் நன் மொழிகள் கொண்ட குட்மார்னிங்க் மெசேஜ் அனுப்புவார். சிலதை நம்ம எழுத்தில் பயன்படுத்திக் கொள்ள எடுத்து வைத்துக் கொள்வதுண்டு.
இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. பாடலின் தாக்கம் தெரிந்ததை விட, பிப்ரவரி 14 லின் தாக்கம் பதிவெங்கும் தெரிந்தது. உங்கள் பாஸ் திருமணத்திற்கு முன் எதிர் வீட்டில்தான் இருந்தாரா? உறவா, இல்லை பழகிய உறவா, எப்படியோ பழகியதில் உறவானவது குறித்த பாடல்கள் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்கள் அன்பான பாட்டியால்தான் உங்கள் காதல் முழு வெற்றியடைந்தது போலும்.! உங்கள் இனிதான காதல் திருமணத்திற்கு எப்போதும் என் நல்வாழ்த்துகள்.
குருவிசுவாசம் ஏற்கனவே எப்போதோ படித்த நினைவு. இன்றும் அது சற்று மறந்து போன நிலையில் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
எதிர் வீடு இல்லை கமலா அக்கா. கீழே இரண்டு வீடுகள் மேலே இரண்டு வீடுகள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். வலப்பக்கம் இடப்பக்கமாக இரண்டு வீடுகள். அதன் மேலே இரண்டு வீடுகள். கீழ் வீட்டு வாசலில் இருந்து அப்படியே நிமிர்ந்து மேலே பார்த்தால் பக்கத்து வீட்டுக்கு மாடி வீட்டில் இருக்கும் பால்கனி தெரியும்.
உங்கள் அனுபவங்களைப் படிக்கும் பொழுது நீங்கள் ஒரு வெளிப்படையான மனிதர் என்று தெரிகிறது. நீங்கள் விரும்பும் விஷயங்கள் உங்கள் வீட்டில் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதே?
நீங்கள் சொல்லும் சுக்கு மிளகு திப்பிலி விஷயத்தை தான் பகவான் ஜி அங்கு சொல்லியிருந்தார். என்றாலும் சுக்கு மிளகு திப்பிலியை பிரித்தால் பொருள் வராது. இந்த வார்த்தையை பிரித்தால் வேறு ஒரு பொருள் வருகிறது பாருங்கள்..
pass ஆகாம எப்படி boss ஆக முடியும். boss pass ஆக காரணமான பாட்டை ரசித்தேன். இடையில் தங்கர் பச்சானின் இசைக்காத இசைத்தட்டு கதையும் எட்டிப்பார்த்தது. //‘‘என்னைவிட்டால் யாருமில்லை, கண்மணியே உன் கையணைக்க, உன்னைவிட்டால் வேறொருத்தி எண்ணமில்லை நான் காதலிக்க…’ // இந்த பாடலையேதான் திரும்பத் திரும்ப ஒலிக்கச் செய்தான். நானும் ஆபிசில் தூங்கியிருக்கிறேன். அதிலும் சாப்பிட்டு முடித்தபின் ஒரு கால் மணி நேரம் உட்கார்ந்தபுடியே தூங்கி விடுவேன். பின்னர் எழுந்து முகம் கழுவினால் எத்தனை புத்துணரச்சியாக இருக்கும் தெரியுமா?
வாங்க JKC சார்... நீங்கள் ஆபீஸில் கொஞ்ச நேரம் தூங்குவீர்கள் என்று முன்னாடியே சொல்லி இருக்கிறீர்கள். தங்கர்பச்சான் கதை தெரியவில்லை . ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் நாளை நமதே பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அரசாங்க அலுவலகங்களில் தலைமை அதிகாரிக்குக் கொடுக்கப்படும் தனி அறை பிரம்மாண்டமாக இருக்கும். டேபிளும் டென்னிஸ் விளையாடலாம் போலப் பெரிதாக இருக்கும். அலங்காரமெல்லாம் நல்லா இருக்கும். ஓர் ஓரமாக இரு சாய்வு நாற்காலிகள், எதிரே ஒரு டேபிள். அதைத் தொடர்ந்த ஓர் அறையில் ஓர் கட்டில் படுக்கையோடு, பின்னர் நான்கு சோஃபாக்கள், 2, 3 நாற்காலிகள், எதிரே ஒரு பெரிய டேபிள் இருக்கும். சின்னக் குளிர்சாதனப் பெட்டியில் குளிர்பானங்கள், பால் தண்ணீர் பாட்டில்கள் எல்லாம் இருக்கும். ஓர் ஓரமாக எலக்ட்ரிக் அடுப்பு இருக்கும். சின்ன அலமாரியில் விதம் விதமான கப்&சாசர்கள், பீங்கான் தட்டுக்கள், குடிக்கத் தண்ணீர் டம்பளர்கள்னு இருக்கும். அந்த ப்ளேட்கள், தம்பளர்கள், கப் அன்ட் சாசர்கள் ஒவ்வொரு வருடமும் மாத்துவாங்க. முக்கியமான வேறே அலுவலக அதிகாரிகள் வந்தால் அவங்களை வரவேற்று இந்த அறையில் உட்கார வைத்து உபசரிப்பாங்க. காஃபி பவுடர், சர்க்கரை, தேநீர் போடத் தேயிலை எல்லாம் அலமாரியில் இருக்கும். அலுவலத்துக் கடைநிலை ஊழியர் வந்து காஃபி, தேநீர் போட்டுத் தருவார். அவசர ஆலோசனைன்னால் வெளியேயே இருக்கும் நாற்காலிகள். ரகசிய ஆலோசனை எல்லாம் உள்ளே. தினம் மதியம் தலைமை அதிகாரி சாப்பாடு முடிஞ்சதும் இங்கே வந்து ஓய்வு எடுத்துப்பார். சிலர் நல்ல தூக்கம் போடுவார்களாம். மவுன்ட் ரோடில் இருக்கும் ராணுவக் கணக்கு அலுவலகத்தில் நம்ம ரங்க்ஸ் இருந்தப்போ மவுன்ட் ரோடு வானவில் போனால் ரங்க்ஸின் அலுவலகத்தில் அவர் அறைக்குப் போவோம். அந்த வசதிகளைப் பார்த்துட்டு ஆச்சரியமா இருக்கும். எங்களை உள்ளே உட்கார வைச்சுட்டு வெளியே அலுவல்களைக் கவனிச்சுட்டுப் பின்னர் ரங்க்ஸும் வருவார் வானவில் போக.
என்னுடைய மேலதிகாரியின் அறையும் இதேபோல வசதிகள் நிறைந்து இருக்கும். பார்த்திருக்கிறேன். தொலைக்காட்சிப் பெட்டி. ஒய்வெடுக்க கட்டில், மெத்தை.. இத்யாதி... இத்யாதி...
ஆமாம்,ஆமாம், சின்னக் கணினி ஒன்றும் பின்னர் தலைக்கு மேல் சுவற்றில் தொலைக்காட்சிப் பெட்டியும் இருக்கும். தொலைக்காட்சிப் பெட்டியை உள்ளறையில் வைச்சிருந்தாங்க. கணினி அவர் டேபிளில் இருந்தது.
முன்னெல்லாம் சித்ரஹாரில் தவறாமல் இடம் பெறும் பாடல்கள். எங்க பெண் அன்னிக்கிச் சீக்கிரமாவே எழுந்து குளித்துத் தயாராய்க் காத்திருப்பாள். மிலிடரி ஏரியா என்பதால் எங்களுக்கு மின்சாரம் அடிக்கடி எல்லாம் போகாது. பின்னர் நாலு வருஷம் கழிச்சு மின்சார விநியோகம் குஜராத் மின் வாரியத்திடம் போய் விட்டது. அப்போ ஒரு 2, 3 வருஷம் கஷ்டமாகத் தான் இருந்தது. என்ன ஒரு ஆறுதல்னால் பையர் காலேஜ் போயிட்டார். ஹாஸ்டல் வாசம். பெண் பட்டப்படிப்பை முடிச்சுட்டு ஏசி எஸ் படிச்சுட்டு இருந்தாள். ஆகவே படிப்பில் தடைனு அதிகம் சொல்ல முடியாது.
'குரு விசுவாசம்' 'குருவி சுவாச'மானதைப் படித்த பொழுது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. பின்னணிப் பாடகர் ஏ.எம்.ராஜா, ஜிக்கியை மணந்து கொண்டதை ஒரு தினசரியில் ராஜா, ஜிக்கி திருமணம் என்று வெளியிடுவதற்குப் பதில் ராஜாஜிக்கு திருமணம் என்று வெளியிட்டு விட்டார்களாம். :)))
ரிஷி கபூர், பற்றி ஏ.வி.எம்.குமரன் யூ டியூப் நானும் பார்த்தேன். சந்தேகத்துக்கு சாம்பார் என்பது போல ஒன்றுக்கு இரண்டாக பேப்பர் ரோஸ்ட் காணொளி போட்டு விட்டீர்களா?
என்னுடைய 39 வருட மண வாழ்க்கையில் 17 வருடங்கள்தான் நாங்கள் சேர்ந்து இருந்தோம். அதற்குப் பிறகு அவர் அங்கே நான்+குழந்தைகள் இங்கே. அவர் விடுமுறையில் ஒரு மாதம் இங்கே வருவார், நான் இரண்டு மாதங்கள் அங்கே செல்வேன். அப்படித்தான் வாழ்க்கை நகர்ந்தது. எங்களுக்கு நிறைய கடமைகள், அத்ர்காக அந்த பிரிவை ஏற்றுக் கொண்டோம். அவர் அங்கே உழைக்க, நான் இங்கே அவர் செய்ய வேண்டிய வேலைகளையும் செய்ய வேண்டும். என்னைப் போல் நிறைய பெண்கள் உண்டு. நாங்கள் எல்லோரும் தூங்கியிருந்தால் எங்களைக் பாராட்டி கவிதை எழுதுவீர்களா?
கிட்டத்தட்ட எங்களுக்கும் இதே நிலைமை தான் இருந்திருக்கணும். ஆனால் நாங்க இருவரும் ஆழமாய் யோசித்து முடிவெடுத்தோம். பணம் பெரிதில்லை. வாழ்க்கை தான் தேவைனு. அப்படி, இப்படி பணக்கஷ்டம் விடாமல் வறுத்தெடுத்தாலும் சமாளிப்போம் என முடிவெடுத்துப் பின்னரே நான் 76 ஆம் ஆண்டில் எமர்ஜென்சி இருந்த சமயம் வேலையிலிருந்து ராஜினாமா செய்தேன். இல்லைனா நான் சென்னையிலும் அவர் எங்கே மாற்றல் கிடைக்குதோ அங்கே எனவும் இருக்கச் சொன்னாங்க. சென்னையில் நான், அப்போக்குழந்தையாய் இருந்த எங்க பெண், இரு மைத்துனர்கள், கடைசி நாத்தனார் ஆகியோருடன் இருக்கணும் என்றும், மாமனார், மாமியார் கிராமத்தில் இருப்பது எனவும் சொல்லிட்டு இருந்தாங்க. புக்ககத்தில் எல்லோருக்கும் கோபம் தான். குடும்ப நிலைமையை யோசிக்கலை என்றும் பொறுப்பு இல்லை என்றும் சுயநலமாக முடிவெடுத்திருக்கா என்றும் சொன்னாங்க. எல்லாவற்றையும் கடந்து தான் எல்லோரையும் கிட்டத்தட்டப் பதினைந்து ஆண்டுகள் கூட்டுக் குடும்பத்தில் இருந்த வண்ணம் பார்த்துக் கொண்டோம். இதில் கடைசி நாத்தனார் கல்யாணம், கடைசிக் கொழுந்தனார் உபநயனம், இரண்டாவது மைத்துனர் கல்யாணம், பெரிய நாத்தனாரின் 3 பெண்கள், கல்யாணங்கள் ஒரு பிள்ளையின் , உபநயனம், அவங்களை வீட்டோடு வைத்துப் பராமரித்தது என எல்லாமும் அடங்கும். இரண்டு சம்பளம் தனித்தனியாய் வந்தாலும் இரண்டும் செலவாகிடும், சேமிப்பு இருக்காது என்பதைப் புரிந்து கொண்டே இந்த முடிவை எடுத்தோம். ஆனால் அப்ப்போ யாரும் அதைப் புரிஞ்சுக்கலை. எல்லோருக்குமே எங்களிடம் குறிப்பாய் என்னிடம் மிகக் கோபம்.
yessu! :)))) மூத்த பிள்ளைனா கல்யாணமே பண்ணிக்காமல் குடும்பத்தைக்காப்பாற்ற வேண்டும் என்று இருந்திருக்காங்க. ஆகவே இரண்டு பேர் மேலேயும் கோபம். ஆனால் நாங்க 74 ஆம் வருஷமே ராஜஸ்தான் போயாச்சு. ஆகவே எங்களை நேரிடையாப் பாதிக்கலை. ஊருக்குப் போனால் வட்டியும், முதலுமாய்க் கிடைக்கும்.
எல்லாம், தஞ்சாவூர், கும்பகோணம் நியாயம் தான். :)))) என் மாமனார் வழியில் தாயாதிகள் சிலரின் பிள்ளைகள் இப்படி இருந்தாங்க அப்போ. அதனால் மாமனார்/மாமியாரும் இதைத் தான் எதிர்பார்த்தாங்க. :))))) எல்லோருக்குமே பத்துக்கும் மேல் குழந்தைகள். இதுக்காக என் மாமனாருக்குத் தான் நிறையக் குழந்தைகள் பிறந்தும் தங்கியது 3 பெண்கள், 3 பிள்ளைகள்.
முதல் பாடல் மெட்டில் தமிழில் நிறைய பாடல்கள், விஜய் படத்தில், டைரக்டர் விக்ரமன் படங்களில் ஒரே ம்யூசிக் டைரக்டர் போடும் ஒரே மெட்டு...அடிக்கடி ரிப்பீ வேறு ஆகும் பின்னணி இசையாக...இசையமைப்பாளர் தேவா - மல்லிகையே மல்லிகையே....அப்புறம் இன்னுமொரு இசையமைப்பாளர் பெயர்...ம்ம்ம்ம் எஸ் ஏ ராஜ்குமார் என்று நினைக்கிறேன்.
எனக்கென்னமோ தோசை இப்படி முறுகலா உடையறாப்போல் தூள் தூளா வரது பிடிப்பதில்லை. ஆகவே என் ஓட்டு ஓட்டல் தோசைகளுக்கு இல்லை. சுத்தமாகத் தயாரிக்கப்பட்ட வீட்டு தோசை தான். ஓரங்கலில் நல்ல முறுகலாகவும் நடுவில் மாவு சேர்ந்து மொத்தையாக இல்லாமல் மெலிதாகவும் இருக்கும் தோசை.
இல்லை அக்கா.. தப்பாப் புரிஞ்சுகிட்டு இருக்கீங்க... உடையறாப்புல தூள் தூளா வராது. வரக்கூடாது. ஆனால் நைஸாய் மொறுமொறு என்று இருக்கும். நான் முதலில் கோபு ஐயங்கார் கடையில்தான் சாப்பிட்டேன். சிறிய கடை. உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு குறுகிய பென்ச்சுக்கு அருகிலேயே தோசைக்கல். அவர் என்ன செய்தார் என்று பார்க்க முடிந்தது.
அந்தக் காலத்திலே இருந்து இப்படிச் சின்னக் கடைதான். சட்னிக்கும் வெள்ளை அப்பத்துக்கும் அப்போல்லாம் ரொம்பவே பிரபலம். நேர் பின்னால் மேலாவணி மூல வீதியில் எங்க வீட்டு மாடி வரும். :))) அதை ஒட்டித் தான் மதுரை சோமுவின் வீடு அப்போ!
நீங்க சொல்றாப்போல் தான் நான் வார்ப்பேன். சுத்தி எல்லாம் காம்பஸில் அளந்து எடுத்தாப்போல் ஒரே மாதிரி இருக்கும். நடுவில் மூட்டையே கட்டாது. :)))) ஆனால் எழும்பூரில் ஸ்டேஷனுக்கு எதிரே சங்கீதா, அடையார் சங்கீதாவில் எல்லாம் சாப்பிட்டப்புறம் தோசை ஆசையே போயிடுத்து. பாண்டி பஜார் கீதா கஃபே கொஞ்சம் பரவாயில்லை ரகம். இப்போல்லாம் இந்தியாவில் அதுவும் சென்னையில் ஓட்டல்களுக்கெல்லாம் போய்ச் சாப்பிட்டுப் பல வருடங்கள் ஆகி விட்டன. ஸ்ரீரங்கத்தில் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் இரு ஓட்டல்களிலும் ஒன்றில் காலை டிஃபனும் இன்னொன்றில் இரவு உணவும் தேவைப்படும்போது வாங்கிப்போம்.
ஜூஹி சாவ்லாவுக்கு ஜாம்நகர் தான் சொந்த ஊர். அவர் கல்யாணத்துக்கான புடைவைகள் ஜாம்நகரில் இருந்து தான் போயிற்று. முன்னால் இருந்த கிரிக்கெட்டில் சீனியர் ஜடேஜாவும் ஜாம்நகர் தான்.
அநேகமாகக் காலம்பர (கனடாவில்) பானுமதி வந்து சொல்லுவாங்க பாருங்க. :)))))) மு.மு.வை நான் சின்ன வயசில் இருந்தே பார்த்திருக்கேன்னு கொஞ்ச நாட்கள் முன்னாடி கூடச் சொன்னேன். :))))
ஜோக்குகள் சுமார் ரகம், கவிதை ஓகே. குரு விசுவாசம் படிச்சுட்டேன். ரிஷி கபூர் பத்தியும் முன்னரே படிச்சிருக்கேன். பாஸுக்கும் உங்களுக்கும் நடந்த வெளிப்படையான காதல் காட்சிகள் அருமை. என்னதான் வீட்டுக்குத் தெரிஞ்சு காதலிச்சாலும் கல்யாணம் ஆற வரைக்கும் திக் திக் திக் தான். இல்லையா?
ஆமாம். அவளுக்கு இருநாட்களாக வயிற்று வலி எனக்கூறிக் கொண்டிருந்தாள். சாப்பாடே இறங்கவில்லை. நேற்றைக்கு முன் தினம் இரவு பத்து மணிக்கு மேல், இரு தடவை வாமிட் எடுத்து விட்டாள். எங்களுக்கு ஒரே கவலையாகி விட்டது அப்போது எப்போதும் அவளுக்கெனச் செல்லும் மருத்துவரும் அவரின் நேரம் முடிந்து வீடு திரும்பியிருப்பார். எனவே நேற்று காலை அவரிடம் நேரம் குறித்துக் கொண்டு மதியம் மருந்து மாத்திரைகள் வாங்கித் தந்த பின் சற்று நிம்மதி வந்தது. குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் மனது தவிக்கிறது. இன்று அவளுக்குப் பரவாயில்லை. தங்களின் உடன் ஆறுதலான பதிலுக்கு நன்றி சகோதரி.
கவிதைகள் இரண்டும் நன்றாக உள்ளது. நண்பரின் பேத்திக்கான கவிதையையும், லட்சுமணனின் மனைவிக்கான கவிதையையும் படித்து ரசித்தேன்.
மதுரை தோசையின்(பேப்பர் ரோஸ்ட்) மகிமையை தெரிந்து கொண்டேன். எனக்கு தோசை காணொளி படம் வரவில்லையே..! காலையில் இரண்டு படம் இருந்தது. இரண்டிலும் காணொளி இயங்கவில்லை. இப்போது ஒன்றுதான். அதிலும் அதை காண முடியவில்லை. முன்பொரு முறை நெல்லை சரவணபவனில் நல்ல மதிய பசியில், அந்த முழு தோசையை வைத்துக் கொண்டு நான் சாப்பிட முடியாமல் திண்டாடியது நினைவில் வந்தது. என்னுடன் வந்த உறவுகள் சட்டென முடித்து விட்டனர். ஒரு தோசை 40, 60 தோ நினைவில் இல்லை.
படைம்தானே பிரம்ம தேவன் பாடல் நன்றாக இருக்கும். பலமுறை கேட்டிருக்கிறேன். பகிர்ந்த இரண்டு பாடல்கள்களையும் கேட்கிறேன். ரிஷிகபூர் செய்தி இப்படியுமா என நினைக்க வைத்தது. அலுவலக தூக்கம் குறித்த ஜோக்ஸ் அனைத்தையும் ரசித்தேன். முன்பெல்லாம் அலுவலகத்தில் இந்த மாதிரி தூங்க நேரம் இருந்தது போலும்...! இல்லை, ஜோக்குகளுக்காக இந்த பொய்த் தூக்கம் உருவாக்கி அது வெளி வந்திருக்கிறதா? பகிர்வுக்கு மிக்க நன்றி.
பேத்திக்கு இன்று கொஞ்சம் பரவாயில்லை சகோதரி. குழந்தைகள் என்றால் நாம் எத்தனை கவனமுடன் இருந்தாலும் இப்படித்தான் ஏதாவது வந்து விடுகிறது. அன்புடன் நலம் விசாரித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.
/பக்தவத்சலம் காலத்திலா?!!/ ஹாஹாஹா. இப்போது பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு. அங்கு தோசை பிரபலம் என எங்கள் அண்ணா அவர் இருந்த போது அழைத்துப் போனார். நாங்கள் நெல்லைக்கு சென்றே பல வருடங்கள் ஆகி விட்டன. இப்போது அந்த பெரிய தோசையின் விலை 150 க்கும் மேலாகவே எட்டியிருக்கும்
பக்தவத்சலம் காலத்தில் ஓட்டல் தோசை அதிகம் போனால் ஒரு ரூபாய், ஒன்னரை ரூபாய்க்குள் இருந்திருக்கலாம். ஆனால் அதுவே ஜாஸ்தினு தான் சொல்லணும். அறுபதுகளில் இட்லி மதுரையில் மாமா ஒருத்தர் கொண்டு வருவார். அவரிடம் 10 பைசாவுக்கு 3 இட்லிகள். ஒரு பொட்டலம் காராசேவு 20 காசு, இனிப்பு சேவு 25 காசு. 25 காசுக்கு வடக்காவணி மூலவீதி பொன்னு ஐயங்கார் பள்ளிக்கு எதிரே இருந்த ஸுமுஹவிலாஸில் ஒரு டப்பா நிறைய சாம்பார் கிடைக்கும். அந்த சாம்பாரின் ருசிக்கு ஈடு இணை இல்லை. தங்கம், வெள்ளி விலையைக் கேட்டால் இன்னும் ஆச்சரியமாக இருக்கும். தங்கம், 10 கிராம் 90 ரூபாய்க்குள்ளும், வெள்ளி கிலோ 110 ரூபாய்க்குள்ளும் இருந்தது. அதே மாமாவிடம் 1976 இல் இட்லி வாங்குகையில் ஒரு இட்லி 20 காசு எனக் கொடுத்திருக்கார். அதுக்கே விலை ஏற்றம் எனப் புலம்பி இருக்கோம்.
"//திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்ல வேண்டும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்"//
நீங்கள் டைரியில் எழுதி வைத்த பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும். முன்பு பள்ளியில் சில நேரம் ஜாலியாக பேச்சி கொண்டு இருப்பார் வகுப்பு ஆசிரியர் பாட சொல்வார்கள் சிலரை என்னைபாட சொன்ன போது இந்த பாடலை பாடினேன். நல்ல கருத்துள்ள பாடல் என்று சொன்னார்கள் டீச்சர்.
// 'வா வா வா கண்ணா வா' பாடல் எனக்கும் பாஸுக்கும் இடையில் ஒரு சங்கேதப்பாடலாக இருந்தது. //
பாட்டின் கதையும், பாட்டி, பேரன் உரையாடலையும் ரசித்தேன். சோகத்தை போக்க பாடல் பாடி முகத்தில் புன்னைகையை வரவழைத்து விட்ட மலரும் நினைவுகள் அருமை.
பேப்பர் ரோஸ்ட் விவரமும், காணொளியும் படித்தேன். நண்பரின் பேத்திக்கு எழுதிய கவிதை மிக அருமை. நண்பரின் பேத்திக்கு வாழ்த்துகள்.
அடுத்த கவிதையும் நன்றாக இருக்கிறது.
//கணேஷ் பாலா - குருவி சுவாசம் // ரசித்தேன். பாடல்களை கேட்டேன். முன்பு அடிக்கடி கேட்ட பாடல். அண்ணன் தயவால். பாடல்களை பற்றி நீங்கள் எழுதியதும் நன்றாக இருக்கிறது.
காலை வணக்கம்.
பதிலளிநீக்குவாங்க ஜீவி ஸார்.. வணக்கம்.
நீக்குபாடலின் தாக்கம் வாழ்க்கையில் வர காதலித்திருக்கவேண்டும் என நினைக்கிறேன். குறைந்தபட்சம் அந்தத் தருணங்களில் இருவருக்கும் கேட்கும்படியாக ஏதாவது பாடலாவது ஒலித்திருக்க வேண்டும்.
பதிலளிநீக்குஎன் நண்பன் தி நகரில் ஒரு பெண்ணிடம் அவள் வீட்டில் காதலைச் சொன்னபோது, தென் பாண்டிச் சீமையிலே. பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது என்று சொன்னான்.
வாங்க நெல்லை...
நீக்குஅப்படி எல்லாம் அவசியமில்லை. பாடல்களை ரசிக்கும் மனம் இருந்தால் போதும். எது இருந்தால் போதும்? மனமிருந்தால் போதும்! (இதோ இந்த வரிகளே கூட ஒரு பாடல் வரிகளின் தாக்கம்! கண்டு பிடிக்க முடிகிறதா?)
நான் முன்னர் 'மேகம் கருக்குது மழை வரப் பார்க்குது' பாடல் எனக்கு எப்படி பிடித்துப் போனது என்பது பற்றி சொல்லி இருக்கிறேன்.
ரிஷி கபூர் பெயர் குறிப்பிடாமல் ஏவிஎம் குமரன் சொன்ன பேட்டியைக் கண்டிருக்கிறேன். தமிழக ரிஷிகபூர் கார்த்திக்காமே. அட்வான்ஸ் திரும்ப வராது, நடிக்க ஆள் வந்தால்தான் உண்டு எனப் பலரின் வயிற்றெரிச்சலைச் சம்பாதித்து, கடைசியில் அவருடைய அண்ணன் அந்தப் பணத்தை லவட்டிக்கொண்டு சென்றதுதான் மிச்சம்.
பதிலளிநீக்குகார்த்திகைப் பொறுத்த வரை அட்வான்ஸ் வராது சரி.. ரிஷி வேறொன்றுக்கும் அல்லவா ஆசைப்பட்டிருக்கிறார்! அவர் அவருடைய மகனைக் கண்டித்து வளர்த்தாராம்! ஏ வி எம் பெயர் சொல்லியேதான் சொன்னார்.
நீக்கு// கார்த்திகைப் //
நீக்குஒரு 'க்' சேர்த்துக் கொள்ளளவும்!
ஏதோ கார்த்திக் உத்தம புத்திரன் என்று நினைப்பது போல்ல்லவா இருக்கிறது? கார்த்திக், அவர் மகன் கௌதம் பற்றி நிறைய கிசுகிசுக்கள் உண்டே
நீக்குசே ச்சே.. அப்படி எல்லாம் சொல்லவில்லை! அவர் விஷயம் தான் ஊருக்கே தெரியுமே!
நீக்குகுருவி சுவாசம்... ரசிக்கும்படி இருந்தது.
பதிலளிநீக்குஆமாம். அதுதான் உடனடியாக பகிர்ந்தேன்!
நீக்குபேப்பர் ரோஸ்ட் என்ன விலை? சூப்பர் சைஸ். கோபு ஐயங்கார் கடை தோசையை இன்று எழுதி என்ன பயன்? முந்தாநாள் அந்தத் தெருவில்தான் இருந்தேன். நாகப்பட்டினம் ஒரிஜனல் நெய் மிட்டாய் கடையில் அல்வா சூப்பரோ சூப்பர்.
பதிலளிநீக்கு125 ரூபாய் என்று நினைக்கிறேன். அவர்கள் பணம் கொடுத்ததால் தெரியவில்லை. இரண்டு டபரா மாவுக்கு அவ்வளவு காசு. இதுதான் இன்றைய ஹோட்டல் நிலவரம்.
நீக்குகோபு அய்யங்கார் பேப்பர் ரோஸ்ட் பற்றி முன்னர் பலமுறை சொல்லி இருக்கிறேனே... வீட்டில் செட்னரா வாரம் நான் அபப்டி வார்த்து மகனுக்கு போட்டபோது ரசித்து சாப்பிட்டான் அவன்!
நாகப்பட்டினம் அல்வா கொஞ்சம் முறுகின பதத்தில் இருக்கும். பிரேமாவிலாஸ் சூப்பர். இந்தமுறை ஹேப்பிமென் முந்திரி அல்வா சித்தித்ததா?!! பெங்களூரு திரும்பியாச்சா? வர வர நம் பிரதமர் மாதிரி எப்போது பார்த்தாலும் வெளியூரிலேயே இருக்கிறீர்கள் நீங்கள்!!
நீக்குநாகப்பட்டினம், பிரேமா விலாஸ் இரண்டு அல்வாவையும் ருசித்தோம். சமீப வருடங்களாக, இலையில் மாத்திரம்தான் அல்வா சாப்பிடுவது, வீட்டுக்கு வாங்கிவருவதில்லை, வெயிட் போடும் என்ற பயத்தில். நாகப்பட்டினம் 50 ரூ, பிரேமா 20 ரூ. ஹேப்பிமென் அல்வா இன்னும் வேளை வரவில்லை.
நீக்குஇன்னமும் உங்களுக்கு ஹேப்பி மேன் அல்வா தரிசனம் கிட்டவில்லையா? உங்களுக்கே பெரிய விருப்பம் இல்லை என்று நினைக்கிறேன். கரெக்டா?
நீக்குமுன்னாடி மொட்டை மாமா என்பவர் தயாரித்துக் கொண்டிருந்தவரை கொஞ்சம் முறுகல் பதத்தில் தான் இருந்திருக்கிறது. இப்போப் பழைய ஆட்கள் யாரும் இல்லை.2022 ஆம் வருடம் போன எங்க பையரும், நம்ம ரங்க்ஸும் வாங்கிட்டு வந்தாங்க. மற்றக் கடைகளின் அல்வா போல் தான் இருந்தது. அதே போல் உருளைக்கிழங்கு மசாலாவும். அம்பி கடை உருளைக்கிழங்கு என்றால் தனி மணம் ருசி(அதான் நாகப்பட்டினம் நெய் மிட்டாய்க்கடைச் சொந்தக்காரர். அப்பாவோட உறவு) இப்போல்லாம் அப்படி இல்லை. என்றாலும் பனிரண்டு மணிக்குப் பின்னர் கிடைக்காது என அம்பியின் பிள்ளை (தற்போதைய நிர்வாகி) சொன்னார். ஏழு அக்காகளுக்குப் பின்னர் பிறந்த ஒரே தம்பி அவர்.
நீக்குஆனால் நான் இந்த நா ஒ நெ மி க பக்கம் மழைக்குக் கூட ஒதுங்கியதில்லை!
நீக்குவாங்க கீதா அக்கா.
கீழ வாசல்லே ஒண்ணு இருக்கு. அங்கே மறந்து கூடப்போயிடாதீங்க. பையர் ஒரு தரம் அங்கே வாங்கிட்டு வீட்டில் எல்லோருக்குமே ஒத்துக்கலை. வயிறு கடபுடா பண்ணிடுத்து.
நீக்குநான் மதுரைப் பக்கம் போய் ஒன்பது வருடங்கள் ஆகிறது!
நீக்குமுதல் கவிதை மிக நன்று. படித்தவுடன் எனக்கு திருச்சி கோபு சார் எழுதியிருந்த, பஸ் ஸ்டான்டில் பள்ளிக்குச் செல்லும் குட்டிப் பெண்ணாக நண்பனின் பெண்ணைப் பல வருடங்கள் பார்த்து, பிறகு அந்தப் பெண்ணே அவருடைய மூத்த மருமகளாக அமைந்ததை எழுதியிருப்பார்.
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா.. அது வியப்புதான் இல்லை?
நீக்குமுதல் கவிதை 'நன்று' சரி, இரண்டாவது கவிதை 'அன்று' வா?
பாட்டி கெக்கலித்தது வெக்களிக்கும்... வசந்த பவனில் கேட்டேன் போன்ற வார்த்தைகளில் எழுத்துப் பிழைகள்.
பதிலளிநீக்குபார்க்கிறேன்.
நீக்குஇன்றைய நகைச்சுவைகள் ஓகே ரகம். சிரிப்பை வரவழைக்கலை. ஆபீசில் தூக்கம், லஞ்சம் இன்னும் மாறவில்லை.
பதிலளிநீக்கு// ஆபீசில் தூக்கம், லஞ்சம் இன்னும் மாறவில்லை. //
நீக்குஇது 84 - 87 ஜோக்ஸ்.. இப்போது அப்படி இருக்க முடியாது என்று நினைக்கிறேன்!
தலைப்பில் குறிப்பிட்டிருக்கும் படையுமில்லை என்ற வார்த்தை எந்த அர்த்தத்தில் இங்கு வருகிற்து என்று புரியவில்லை. தெரிந்தால் சொல்லுங்களேன், ப்ளீஸ்
பதிலளிநீக்குநான் ராஜகுமாரன் என்று சொல்லிக்க எனக்கு அரசுக் குடையும் இல்லை, எனக்கு என்று படையும் கிடையாது.
நீக்குநான் சொல்ல வந்ததையே நெல்லையும் சொல்லி இருக்கிறார் ஜீவி ஸார்.
நீக்கு'காதல் என்பது அற்பமானது. அது பிறப்பதற்கும் அழிவதற்கும் அற்ப காரணங்களே போதும்' -- என்ற ஜெயகாந்தனின் வரிகள் தான் காதல் பற்றி எங்கு படித்தாலும் சட்டென்று வந்து என் நினைவில் படியும்.
பதிலளிநீக்குஉண்மைதான் ஜீவி ஸார். அற்பமான விஷயம் ஆயுள் வரை கூட வருகிறது.
நீக்குநான் இந்த ஆடத்திற்கு வரவில்லை. சீதை -- ஊர்மிளையைக் கோர்த்த கவிதை பற்றி யாரானும் பக்திமான்கள் கருத்து சொல்லட்டும்.
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா... விவாதிக்க கீதா அக்கா, கீதா முன்வரக்கூடும். அவர்கள் பதில் பார்த்து நெல்லை வரக்கூடும். கோமதி அக்கா கொஞ்சம் சொல்வார். JKC எசப்பாட்டு பாடுவார்!
நீக்குCount me out! :)))))
நீக்குஅச்சசோ.. ஏன்..?
நீக்குகணேஷ் பாலாவின் அந்த சிறிய குறிப்பில் இத்தனை ஆங்கில வார்த்தைகளா என்று எண்ணி திகைத்தேன்.
பதிலளிநீக்குஎல்லா மொழிகளையும் வாங்கி வளரும் ஆங்கிலம்! தமிழும் அப்படி வளரட்டுமே..
நீக்குவட நாட்டு நடிகர்களா? பாரதீய நடிகர்கள் என்று சொல்ல பழகிக் கொள்ளுங்கள். காலத்திற்கு ஏற்பவான கோலத்திற்கு அதான் பொருத்தமாக இருக்கும்.
பதிலளிநீக்குநீங்க சொல்றதைப் பார்த்தால் தென்னாட்டு நடிகர்கள்னு சொல்லக்கூடாது, திராவிட நடிகர்கள்னு சொல்லிப் பழகணும்னு சொல்வீங்க போலிருக்கே.
நீக்குஹி.. ஹி.. பாரதீயத்தை தென்னாடு -- வட நாடு என்று ஏன் பிரித்துப் பார்க்கிறிர்கள், நெல்லை?..
நீக்குபாரதீய வித்யா பவன் தாக்கத்தில் சொல்கிறீர்களா? தீய என்ற வார்த்தை வருவதால் சொல்கிறீர்களா?
நீக்குஎன்னவோ போங்க.. என்னவோ மறைபொருள்! யாரையோ கிளறீங்க!
* "கிள்றீங்க" என்று படிக்கவும்!
நீக்குஹி..ஹி.. அது என்ன ஆபீஸ் -- தூக்கம் என்று ஜோக்குகளைத் தேர்ந்தெடுத்திருக்கீங்க? அதுவும் அந்த எம்.பூங்கோதையின் ரெண்டு ஜோக்குகளிலும்.....
பதிலளிநீக்குதேர்ந்து எல்லாம் எடுக்கவில்லை ஜீவி ஸார்.. அப்படி எல்லாம் எடுத்தால் நேரமும் இருக்காது, பகிர்ந்தது எது, விட்டுப்போனது எதுன்னும் குழப்பம் வந்துடும். வரிசையா எடுக்கறதுதான்!
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா.... வணக்கம்.
நீக்குஇன்று மூலிகைப் பண்ணைக்கு
பதிலளிநீக்குசெல்ல வேண்டும்...
நாளை சந்திக்கலாம்...
இந்த மூலிகைப் பண்ஐகளை மூணாறில் பார்த்து நொந்து நூடுல்ஸானேன். எங்கும் வியாபாரம்தான். அதில் அலோபதி, நிச்சயம் ரிசல்டை உடனுக்குடன் காண்பிக்கும். மற்றவை அப்படி அல்ல.
நீக்குமெதுவாக வாருங்கள் செல்வாண்ணா. நெல்லை.. அவர் மூலிகை பண்ணை என்று சொல்வது சித்தா மருத்துவமனை என்று நினைக்கிறேன்
நீக்கு"திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்ல வேண்டும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்"//
பதிலளிநீக்குஇது கண் போன போக்கிலே கால் போகலாமா பாடல்? எம் ஜி ஆர் படப் பாட்டோ? அவருடைய படங்களில் பெரும்பாலும் இப்படி வரிகள் உள்ள பாடல்கள் வருமே..
ஸ்ரீராம், எனக்கும் டயரியில் பல வரிகள் எழுதி வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்தது. பெரும்பான்மை நன்மொழிகள், ஆங்கிலத்திலும் தமிழிலும் என்று.
இப்ப கூட என் தூரத்து மாமா தினமும் நன் மொழிகள் கொண்ட குட்மார்னிங்க் மெசேஜ் அனுப்புவார். சிலதை நம்ம எழுத்தில் பயன்படுத்திக் கொள்ள எடுத்து வைத்துக் கொள்வதுண்டு.
கீதா
வாங்க கீதா... முன்பு நான் கூட எஸ் எம் எஸ் என்று வருமே ..அவற்றையெல்லாம் எழுதி வைத்திருந்திருக்கிறேன். ஆனால் கணினியில் டிராஃப்டாக.
நீக்குபாட்டி பலே பாட்டியாக இருந்திருக்காங்களே! நல்ல பாட்டி செம சிரித்துவிட்டேன்!!
பதிலளிநீக்குகீதா
ஹா ஹா ஹா ஹா
நீக்குஅட! பாஸ் வீட்டிற்குக் கேட்கும் என்றால் அவ்வளவுதான் தூரமா கிட்டவோ? இங்க போட்டா அங்க கேட்டிருக்கிறதே.
பதிலளிநீக்குஓ அடுத்த வரியில் புரிந்துவிட்டது பாஸ் வீட்டு பால்கனி வழி தூது!
கீதா
ஹி... ஹி... ஹி...
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா..... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்கு"சோகத்தின் பாஷை என்ன சொன்னால் அது தீருமா? கங்கை நீர் காயக் கூடும் கண்ணீர் அது காயுமா"
பதிலளிநீக்குநிறுத்தி விட்டேன். அங்கே மேலே ஒரு புன்னகை மலர்ந்தது.//
ஹாஹாஹா காதலில் என்னவெல்லாம் நடந்திருக்கு...கோல்டன் மெமரிஸ்!
ஏன் கூடப் படிச்ச பசங்க இப்படித்தான் பாடல் வரிகளையே தூதாக பயன்படுத்தியது நினைவுக்கு வருகிறது.
நான் மெசெஞ்சராகவும் இருந்திருக்கிறேன்.....அதில் ஒரு சம்பவம் நடந்து விட, நான் அதன் பின் நோ சொல்லி விலகிவிட்டேன்.
ஆனால் என் நட்புகள் செய்த காதல் அவங்க ஊடல் எல்லாம் ரசித்ததுண்டு. சினிமா பார்க்கவே தேவையில்லாமல் நேரடி ஒளி/லிபரப்பாக!!!!!!
காரணம் பலசமயங்களில் தனியாகச் செல்ல முடியாதவங்க என்னைத் துணைக்குக் கூட்டிக் கொண்டு சென்றதுண்டு!
கீதா
பாடல்கள் மட்டுமா. இன்னும் என்னென்னவோ...!
நீக்குரோஸ்ட் வெளிய பார்க்க நல்லாருக்கு.
பதிலளிநீக்குநம் வீட்டிலும் ரோஸ்ட் அடிக்கடி செய்ததுண்டு கோன், சுருட்டி என்று. மெலிசாதான் இருக்கணும் நடுவிலும்...அப்பாக்கு சாப்பிட முடியலை. ஆனா எங்களுக்குச் செய்து கொள்வதுண்டு.
இங்கும் ஹோட்டலில் ரோஸ்ட் என்பது சரியாக இருப்பதில்லை
கீதா
அவர்களுக்கெல்லாம் காசு மட்டும் தான் குறி!
நீக்குகுட்டிக் குழந்தைக்குக் கவிதை அருமை ஸ்ரீராம்.
பதிலளிநீக்குஇரண்டாவதும் நல்லாருக்கு. இரண்டுமே ரசித்தேன்.
கீதா
நன்றி கீதா
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. பாடலின் தாக்கம் தெரிந்ததை விட, பிப்ரவரி 14 லின் தாக்கம் பதிவெங்கும் தெரிந்தது. உங்கள் பாஸ் திருமணத்திற்கு முன் எதிர் வீட்டில்தான் இருந்தாரா? உறவா, இல்லை பழகிய உறவா, எப்படியோ பழகியதில் உறவானவது குறித்த பாடல்கள் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்கள் அன்பான பாட்டியால்தான் உங்கள் காதல் முழு வெற்றியடைந்தது போலும்.! உங்கள் இனிதான காதல் திருமணத்திற்கு எப்போதும் என் நல்வாழ்த்துகள்.
குருவிசுவாசம் ஏற்கனவே எப்போதோ படித்த நினைவு. இன்றும் அது சற்று மறந்து போன நிலையில் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எதிர் வீடு இல்லை கமலா அக்கா. கீழே இரண்டு வீடுகள் மேலே இரண்டு வீடுகள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். வலப்பக்கம் இடப்பக்கமாக இரண்டு வீடுகள். அதன் மேலே இரண்டு வீடுகள். கீழ் வீட்டு வாசலில் இருந்து அப்படியே நிமிர்ந்து மேலே பார்த்தால் பக்கத்து வீட்டுக்கு மாடி வீட்டில் இருக்கும் பால்கனி தெரியும்.
நீக்குகுரு விசுவாசம் பற்றி நீங்கள் முகநூலில் இருந்தால் படித்திருந்தால் இது நேற்று கணேஷ் பாலா வெளியிட்டது
நீக்குஉங்கள் அனுபவங்களைப் படிக்கும் பொழுது நீங்கள் ஒரு வெளிப்படையான மனிதர் என்று தெரிகிறது. நீங்கள் விரும்பும் விஷயங்கள் உங்கள் வீட்டில் எல்லோருக்கும் தெரிந்திருக்கிறதே?
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா... வெளிப்படையான மனிதர்? ம்ம்ம்.... சில விஷயங்களில் சொல்லலாம்!
நீக்குகணேஷ் பாலா - குருவி சுவாசம் !! ரசித்தேன்.....இது சுக்குமி ளகுதி ப்பிலி போல...
பதிலளிநீக்குஒரு எழுத்து மாறும் போது ஏற்படும் குழப்பம் அல்லது வித்தியாசம் பல ரசிக்க வைக்கும். சட்டுன்னு நினைவுக்கு வரவில்லை...
கீதா
நீங்கள் சொல்லும் சுக்கு மிளகு திப்பிலி விஷயத்தை தான் பகவான் ஜி அங்கு சொல்லியிருந்தார். என்றாலும் சுக்கு மிளகு திப்பிலியை பிரித்தால் பொருள் வராது. இந்த வார்த்தையை பிரித்தால் வேறு ஒரு பொருள் வருகிறது பாருங்கள்..
நீக்குஆமாம், அதுக்குதான் சில சுவாரசியமானவை டக்குனு நினைவுக்கு வரலைன்னு சொல்லியிருக்கிறேன் வார்த்தை விளையாடல் போல...வரும்...
நீக்குகீதா
பதிலளிநீக்குpass ஆகாம எப்படி boss ஆக முடியும். boss pass ஆக காரணமான பாட்டை ரசித்தேன். இடையில் தங்கர் பச்சானின் இசைக்காத இசைத்தட்டு கதையும் எட்டிப்பார்த்தது. //‘‘என்னைவிட்டால் யாருமில்லை, கண்மணியே உன் கையணைக்க, உன்னைவிட்டால் வேறொருத்தி எண்ணமில்லை நான் காதலிக்க…’ // இந்த பாடலையேதான் திரும்பத் திரும்ப ஒலிக்கச் செய்தான்.
நானும் ஆபிசில் தூங்கியிருக்கிறேன். அதிலும் சாப்பிட்டு முடித்தபின் ஒரு கால் மணி நேரம் உட்கார்ந்தபுடியே தூங்கி விடுவேன். பின்னர் எழுந்து முகம் கழுவினால் எத்தனை புத்துணரச்சியாக இருக்கும் தெரியுமா?
Jayakumar
வாங்க JKC சார்... நீங்கள் ஆபீஸில் கொஞ்ச நேரம் தூங்குவீர்கள் என்று முன்னாடியே சொல்லி இருக்கிறீர்கள். தங்கர்பச்சான் கதை தெரியவில்லை . ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் நாளை நமதே பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
நீக்குஅரசாங்க அலுவலகங்களில் தலைமை அதிகாரிக்குக் கொடுக்கப்படும் தனி அறை பிரம்மாண்டமாக இருக்கும். டேபிளும் டென்னிஸ் விளையாடலாம் போலப் பெரிதாக இருக்கும். அலங்காரமெல்லாம் நல்லா இருக்கும். ஓர் ஓரமாக இரு சாய்வு நாற்காலிகள், எதிரே ஒரு டேபிள். அதைத் தொடர்ந்த ஓர் அறையில் ஓர் கட்டில் படுக்கையோடு, பின்னர் நான்கு சோஃபாக்கள், 2, 3 நாற்காலிகள், எதிரே ஒரு பெரிய டேபிள் இருக்கும். சின்னக் குளிர்சாதனப் பெட்டியில் குளிர்பானங்கள், பால் தண்ணீர் பாட்டில்கள் எல்லாம் இருக்கும். ஓர் ஓரமாக எலக்ட்ரிக் அடுப்பு இருக்கும். சின்ன அலமாரியில் விதம் விதமான கப்&சாசர்கள், பீங்கான் தட்டுக்கள், குடிக்கத் தண்ணீர் டம்பளர்கள்னு இருக்கும். அந்த ப்ளேட்கள், தம்பளர்கள், கப் அன்ட் சாசர்கள் ஒவ்வொரு வருடமும் மாத்துவாங்க. முக்கியமான வேறே அலுவலக அதிகாரிகள் வந்தால் அவங்களை வரவேற்று இந்த அறையில் உட்கார வைத்து உபசரிப்பாங்க. காஃபி பவுடர், சர்க்கரை, தேநீர் போடத் தேயிலை எல்லாம் அலமாரியில் இருக்கும். அலுவலத்துக் கடைநிலை ஊழியர் வந்து காஃபி, தேநீர் போட்டுத் தருவார். அவசர ஆலோசனைன்னால் வெளியேயே இருக்கும் நாற்காலிகள். ரகசிய ஆலோசனை எல்லாம் உள்ளே. தினம் மதியம் தலைமை அதிகாரி சாப்பாடு முடிஞ்சதும் இங்கே வந்து ஓய்வு எடுத்துப்பார். சிலர் நல்ல தூக்கம் போடுவார்களாம். மவுன்ட் ரோடில் இருக்கும் ராணுவக் கணக்கு அலுவலகத்தில் நம்ம ரங்க்ஸ் இருந்தப்போ மவுன்ட் ரோடு வானவில் போனால் ரங்க்ஸின் அலுவலகத்தில் அவர் அறைக்குப் போவோம். அந்த வசதிகளைப் பார்த்துட்டு ஆச்சரியமா இருக்கும். எங்களை உள்ளே உட்கார வைச்சுட்டு வெளியே அலுவல்களைக் கவனிச்சுட்டுப் பின்னர் ரங்க்ஸும் வருவார் வானவில் போக.
நீக்குஎன்னுடைய மேலதிகாரியின் அறையும் இதேபோல வசதிகள் நிறைந்து இருக்கும். பார்த்திருக்கிறேன். தொலைக்காட்சிப் பெட்டி. ஒய்வெடுக்க கட்டில், மெத்தை.. இத்யாதி... இத்யாதி...
நீக்குஆமாம்,ஆமாம், சின்னக் கணினி ஒன்றும் பின்னர் தலைக்கு மேல் சுவற்றில் தொலைக்காட்சிப் பெட்டியும் இருக்கும். தொலைக்காட்சிப் பெட்டியை உள்ளறையில் வைச்சிருந்தாங்க. கணினி அவர் டேபிளில் இருந்தது.
நீக்குரிஷி கபூர் - அல்பங்கள்....
பதிலளிநீக்குஇங்கயும் சொல்வதுண்டே கொடுத்தா திருப்பி வராதுன்னு.
கீதா
திரையுலகில் இது சகஜம்
நீக்குபாடல்கள் பின்னர் கேட்கிறேன் ஸ்ரீராம். வேலை செய்யறப்ப ஹெட் செட் இல்லாம போட்டுவிடு... இப்ப முடியலை.
பதிலளிநீக்குகீதா
ஓகே அப்புறமா கேளுங்க ஆனா அவசியம் கேளுங்கள்
நீக்குமுன்னெல்லாம் சித்ரஹாரில் தவறாமல் இடம் பெறும் பாடல்கள். எங்க பெண் அன்னிக்கிச் சீக்கிரமாவே எழுந்து குளித்துத் தயாராய்க் காத்திருப்பாள். மிலிடரி ஏரியா என்பதால் எங்களுக்கு மின்சாரம் அடிக்கடி எல்லாம் போகாது. பின்னர் நாலு வருஷம் கழிச்சு மின்சார விநியோகம் குஜராத் மின் வாரியத்திடம் போய் விட்டது. அப்போ ஒரு 2, 3 வருஷம் கஷ்டமாகத் தான் இருந்தது. என்ன ஒரு ஆறுதல்னால் பையர் காலேஜ் போயிட்டார். ஹாஸ்டல் வாசம். பெண் பட்டப்படிப்பை முடிச்சுட்டு ஏசி எஸ் படிச்சுட்டு இருந்தாள். ஆகவே படிப்பில் தடைனு அதிகம் சொல்ல முடியாது.
நீக்குசரி, அது இருக்கட்டும், இப்போ இந்தப் பாடல்கள் கேட்டீர்களோ....
நீக்குOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOhHHHHHH! Yessu 2 times
நீக்குஎப்படி, ரசிக்க முடிந்ததா?
நீக்குOh!
நீக்குஜோக்ஸ் ஓகே....
பதிலளிநீக்குகீதா
ஓகே
நீக்கு'குரு விசுவாசம்' 'குருவி சுவாச'மானதைப் படித்த பொழுது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. பின்னணிப் பாடகர் ஏ.எம்.ராஜா, ஜிக்கியை மணந்து கொண்டதை ஒரு தினசரியில் ராஜா, ஜிக்கி திருமணம் என்று வெளியிடுவதற்குப் பதில் ராஜாஜிக்கு திருமணம் என்று வெளியிட்டு விட்டார்களாம். :)))
பதிலளிநீக்குஹா ஹா ஹா
நீக்குகவிதை சிறப்பு!, ஜோக்குகள் ஓகே, அதன் படங்கள் நன்றாக இருக்கின்றன.
பதிலளிநீக்குநன்றி பானு அக்கா
நீக்குரிஷி கபூர், பற்றி ஏ.வி.எம்.குமரன் யூ டியூப் நானும் பார்த்தேன். சந்தேகத்துக்கு சாம்பார் என்பது போல ஒன்றுக்கு இரண்டாக பேப்பர் ரோஸ்ட் காணொளி போட்டு விட்டீர்களா?
பதிலளிநீக்குஅச்சச்சோ.... ஒன்றை நீக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் .வைக்கவில்லையா? இரண்டில் எதை நீக்கலாம் என்று சொல்லுங்களேன்
நீக்குஎன்னுடைய 39 வருட மண வாழ்க்கையில் 17 வருடங்கள்தான் நாங்கள் சேர்ந்து இருந்தோம். அதற்குப் பிறகு அவர் அங்கே நான்+குழந்தைகள் இங்கே. அவர் விடுமுறையில் ஒரு மாதம் இங்கே வருவார், நான் இரண்டு மாதங்கள் அங்கே செல்வேன். அப்படித்தான் வாழ்க்கை நகர்ந்தது. எங்களுக்கு நிறைய கடமைகள், அத்ர்காக அந்த பிரிவை ஏற்றுக் கொண்டோம். அவர் அங்கே உழைக்க, நான் இங்கே அவர் செய்ய வேண்டிய வேலைகளையும் செய்ய வேண்டும். என்னைப் போல் நிறைய பெண்கள் உண்டு. நாங்கள் எல்லோரும் தூங்கியிருந்தால் எங்களைக் பாராட்டி கவிதை எழுதுவீர்களா?
பதிலளிநீக்குசிரமமான நிலைதான். உங்களுக்கும் ஒரு கவிதை எழுதுவதில் என்ன தவறு? தாராளமாக எழுதலாம். நிக்ச்சயம் உங்கள் தியாகமும் பெரிதுதான்.
நீக்குஇதைப் படிக்கும்போது எனக்கு வெங்கட் - ஆதி வெங்கட் தம்பதியினர் நினைவுக்கு வருகிறார்கள்.
இப்போ வெங்கட் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு டெபுடேஷனில் மாறி வந்து ஆறு மாதங்கள் ஆகப் போகிறது.
நீக்குகிட்டத்தட்ட எங்களுக்கும் இதே நிலைமை தான் இருந்திருக்கணும். ஆனால் நாங்க இருவரும் ஆழமாய் யோசித்து முடிவெடுத்தோம். பணம் பெரிதில்லை. வாழ்க்கை தான் தேவைனு. அப்படி, இப்படி பணக்கஷ்டம் விடாமல் வறுத்தெடுத்தாலும் சமாளிப்போம் என முடிவெடுத்துப் பின்னரே நான் 76 ஆம் ஆண்டில் எமர்ஜென்சி இருந்த சமயம் வேலையிலிருந்து ராஜினாமா செய்தேன். இல்லைனா நான் சென்னையிலும் அவர் எங்கே மாற்றல் கிடைக்குதோ அங்கே எனவும் இருக்கச் சொன்னாங்க. சென்னையில் நான், அப்போக்குழந்தையாய் இருந்த எங்க பெண், இரு மைத்துனர்கள், கடைசி நாத்தனார் ஆகியோருடன் இருக்கணும் என்றும், மாமனார், மாமியார் கிராமத்தில் இருப்பது எனவும் சொல்லிட்டு இருந்தாங்க. புக்ககத்தில் எல்லோருக்கும் கோபம் தான். குடும்ப நிலைமையை யோசிக்கலை என்றும் பொறுப்பு இல்லை என்றும் சுயநலமாக முடிவெடுத்திருக்கா என்றும் சொன்னாங்க. எல்லாவற்றையும் கடந்து தான் எல்லோரையும் கிட்டத்தட்டப் பதினைந்து ஆண்டுகள் கூட்டுக் குடும்பத்தில் இருந்த வண்ணம் பார்த்துக் கொண்டோம். இதில் கடைசி நாத்தனார் கல்யாணம், கடைசிக் கொழுந்தனார் உபநயனம், இரண்டாவது மைத்துனர் கல்யாணம், பெரிய நாத்தனாரின் 3 பெண்கள், கல்யாணங்கள் ஒரு பிள்ளையின் , உபநயனம், அவங்களை வீட்டோடு வைத்துப் பராமரித்தது என எல்லாமும் அடங்கும். இரண்டு சம்பளம் தனித்தனியாய் வந்தாலும் இரண்டும் செலவாகிடும், சேமிப்பு இருக்காது என்பதைப் புரிந்து கொண்டே இந்த முடிவை எடுத்தோம். ஆனால் அப்ப்போ யாரும் அதைப் புரிஞ்சுக்கலை. எல்லோருக்குமே எங்களிடம் குறிப்பாய் என்னிடம் மிகக் கோபம்.
நீக்குஆமாம். வெங்கட் திருச்சி அலுவலகத்துக்கு மாறுதல் வாங்கி வந்து விட்டார் என்று தெரியும். மீண்டும் வசந்தம்.
நீக்குநல்ல முடிவுதான் எடுத்திருக்கிறீர்கள். மாமாவும் சேர்ந்துதானே எடுத்த முடிவு? அவர் மேலும் கோபம் இருந்ததா?
நீக்குyessu! :)))) மூத்த பிள்ளைனா கல்யாணமே பண்ணிக்காமல் குடும்பத்தைக்காப்பாற்ற வேண்டும் என்று இருந்திருக்காங்க. ஆகவே இரண்டு பேர் மேலேயும் கோபம். ஆனால் நாங்க 74 ஆம் வருஷமே ராஜஸ்தான் போயாச்சு. ஆகவே எங்களை நேரிடையாப் பாதிக்கலை. ஊருக்குப் போனால் வட்டியும், முதலுமாய்க் கிடைக்கும்.
நீக்குகல்யாணமே பண்ணிக்காமலா? அட ராமா... எந்த ஊர் நியாயம் இது!
நீக்குஎல்லாம், தஞ்சாவூர், கும்பகோணம் நியாயம் தான். :)))) என் மாமனார் வழியில் தாயாதிகள் சிலரின் பிள்ளைகள் இப்படி இருந்தாங்க அப்போ. அதனால் மாமனார்/மாமியாரும் இதைத் தான் எதிர்பார்த்தாங்க. :))))) எல்லோருக்குமே பத்துக்கும் மேல் குழந்தைகள். இதுக்காக என் மாமனாருக்குத் தான் நிறையக் குழந்தைகள் பிறந்தும் தங்கியது 3 பெண்கள், 3 பிள்ளைகள்.
நீக்குமுதல் பாடல் மெட்டில் தமிழில் நிறைய பாடல்கள், விஜய் படத்தில், டைரக்டர் விக்ரமன் படங்களில் ஒரே ம்யூசிக் டைரக்டர் போடும் ஒரே மெட்டு...அடிக்கடி ரிப்பீ வேறு ஆகும் பின்னணி இசையாக...இசையமைப்பாளர் தேவா - மல்லிகையே மல்லிகையே....அப்புறம் இன்னுமொரு இசையமைப்பாளர் பெயர்...ம்ம்ம்ம் எஸ் ஏ ராஜ்குமார் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குகீதா
உங்களுக்கு அப்படி தோன்றுகிறதா கீதா? எனக்கு தோன்றவில்லை! வேறு வேறு வகையறா என்றுதான் தோன்றுகிறது.
நீக்குஸ்ரீராம், உங்களுக்கு என்னென்ன பாட்டு பிடிக்கும்னு அப்ப குடும்பத்துக்கே தெரியும் போல...இப்ப ஊர் உலகத்துக்கே தெரியும்!!!!
பதிலளிநீக்குஇரண்டாவது பாடலும் நல்லாருக்கு.
கீதா
ஹா.. ஹா.. ஹா... நன்றி கீதா.
நீக்குஎனக்கென்னமோ தோசை இப்படி முறுகலா உடையறாப்போல் தூள் தூளா வரது பிடிப்பதில்லை. ஆகவே என் ஓட்டு ஓட்டல் தோசைகளுக்கு இல்லை. சுத்தமாகத் தயாரிக்கப்பட்ட வீட்டு தோசை தான். ஓரங்கலில் நல்ல முறுகலாகவும் நடுவில் மாவு சேர்ந்து மொத்தையாக இல்லாமல் மெலிதாகவும் இருக்கும் தோசை.
பதிலளிநீக்குஇல்லை அக்கா.. தப்பாப் புரிஞ்சுகிட்டு இருக்கீங்க... உடையறாப்புல தூள் தூளா வராது. வரக்கூடாது. ஆனால் நைஸாய் மொறுமொறு என்று இருக்கும். நான் முதலில் கோபு ஐயங்கார் கடையில்தான் சாப்பிட்டேன். சிறிய கடை. உட்கார்ந்திருக்கும் இடத்துக்கு குறுகிய பென்ச்சுக்கு அருகிலேயே தோசைக்கல். அவர் என்ன செய்தார் என்று பார்க்க முடிந்தது.
நீக்குஅந்தக் காலத்திலே இருந்து இப்படிச் சின்னக் கடைதான். சட்னிக்கும் வெள்ளை அப்பத்துக்கும் அப்போல்லாம் ரொம்பவே பிரபலம். நேர் பின்னால் மேலாவணி மூல வீதியில் எங்க வீட்டு மாடி வரும். :))) அதை ஒட்டித் தான் மதுரை சோமுவின் வீடு அப்போ!
நீக்குநீங்க சொல்றாப்போல் தான் நான் வார்ப்பேன். சுத்தி எல்லாம் காம்பஸில் அளந்து எடுத்தாப்போல் ஒரே மாதிரி இருக்கும். நடுவில் மூட்டையே கட்டாது. :)))) ஆனால் எழும்பூரில் ஸ்டேஷனுக்கு எதிரே சங்கீதா, அடையார் சங்கீதாவில் எல்லாம் சாப்பிட்டப்புறம் தோசை ஆசையே போயிடுத்து. பாண்டி பஜார் கீதா கஃபே கொஞ்சம் பரவாயில்லை ரகம். இப்போல்லாம் இந்தியாவில் அதுவும் சென்னையில் ஓட்டல்களுக்கெல்லாம் போய்ச் சாப்பிட்டுப் பல வருடங்கள் ஆகி விட்டன. ஸ்ரீரங்கத்தில் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் இரு ஓட்டல்களிலும் ஒன்றில் காலை டிஃபனும் இன்னொன்றில் இரவு உணவும் தேவைப்படும்போது வாங்கிப்போம்.
நீக்குஈத வெள்ளை அப்பம் பெயர் நினைவுக்கு வராமல் போனவாரம் அவஸ்தை. ரேஸ்கோர்ச் காலனியில் நாராயணா கபே என்று ஒன்று இருந்தது. அங்கும் வெள்ளை அப்பம் ஃபேமஸ்.
நீக்குஆனால் கீதா அக்கா... நான் எப்படி பேப்பர் ரோஸ்ட் வார்ப்பேன் என்று சொல்லவே இல்லையே...!
நீக்குஜூஹி சாவ்லாவுக்கு ஜாம்நகர் தான் சொந்த ஊர். அவர் கல்யாணத்துக்கான புடைவைகள் ஜாம்நகரில் இருந்து தான் போயிற்று. முன்னால் இருந்த கிரிக்கெட்டில் சீனியர் ஜடேஜாவும் ஜாம்நகர் தான்.
பதிலளிநீக்குஎந்த ஊராய் இருந்தால் என்ன.. அழகா இருக்கார்!
நீக்குமு.மு. மாதிரி நேரிலும் அழகு என்பார்கள்.
நீக்குமு.மு? மும்தாஜ்?
நீக்குஅநேகமாகக் காலம்பர (கனடாவில்) பானுமதி வந்து சொல்லுவாங்க பாருங்க. :)))))) மு.மு.வை நான் சின்ன வயசில் இருந்தே பார்த்திருக்கேன்னு கொஞ்ச நாட்கள் முன்னாடி கூடச் சொன்னேன். :))))
நீக்குதமிழ் நாட்டின் முன்னாள் முதல்வரா.?
நீக்குyessssssu. JJ thaan. :))))))
நீக்குஜோக்குகள் சுமார் ரகம், கவிதை ஓகே. குரு விசுவாசம் படிச்சுட்டேன். ரிஷி கபூர் பத்தியும் முன்னரே படிச்சிருக்கேன். பாஸுக்கும் உங்களுக்கும் நடந்த வெளிப்படையான காதல் காட்சிகள் அருமை. என்னதான் வீட்டுக்குத் தெரிஞ்சு காதலிச்சாலும் கல்யாணம் ஆற வரைக்கும் திக் திக் திக் தான். இல்லையா?
பதிலளிநீக்குகண்டிப்பாக.. அப்பா கடைசி நிமிடம் வரை தெரிஞ்சதாகவே காட்டிக் கொள்ளவில்லை.
நீக்குநேற்றைய பதிவுக்கு என்னைத்தேடிய உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோதரி. பேத்திக்கு சற்று உடல் நலமில்லை. அதனால் அவளுடன் நேரம் சரியாக சென்று விட்டது.
நீக்கு@ Kamala Hariharan! குழந்தைகள் உடல் நலம் சரியில்லை எனில் இப்படித் தான் நமக்குக்கவலையும் தடுமாற்றமும் ஏற்பட்டு விடும். சகஜம் தான்.
நீக்குஆமாம். அவளுக்கு இருநாட்களாக வயிற்று வலி எனக்கூறிக் கொண்டிருந்தாள். சாப்பாடே இறங்கவில்லை. நேற்றைக்கு முன் தினம் இரவு பத்து மணிக்கு மேல், இரு தடவை வாமிட் எடுத்து விட்டாள். எங்களுக்கு ஒரே கவலையாகி விட்டது அப்போது எப்போதும் அவளுக்கெனச் செல்லும் மருத்துவரும் அவரின் நேரம் முடிந்து வீடு திரும்பியிருப்பார். எனவே நேற்று காலை அவரிடம் நேரம் குறித்துக் கொண்டு மதியம் மருந்து மாத்திரைகள் வாங்கித் தந்த பின் சற்று நிம்மதி வந்தது. குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் மனது தவிக்கிறது. இன்று அவளுக்குப் பரவாயில்லை. தங்களின் உடன் ஆறுதலான பதிலுக்கு நன்றி சகோதரி.
நீக்குபேத்தியின் உடல் நிலை சீக்கிரம் சீராக ப்ரார்த்திக்கிறேன்.
நீக்குஅவளுக்கு இன்று கொஞ்சம் பரவாயில்லை. உங்களது அன்பான பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நீக்குகுட்டிக் குழந்தைக்கு கவிதை நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குதூக்கம் ஜோக்ஸ், லஞ்சம் ஹா...ஹா.
வாங்க மாதேவி. நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குகவிதைகள் இரண்டும் நன்றாக உள்ளது. நண்பரின் பேத்திக்கான கவிதையையும், லட்சுமணனின் மனைவிக்கான கவிதையையும் படித்து ரசித்தேன்.
மதுரை தோசையின்(பேப்பர் ரோஸ்ட்) மகிமையை தெரிந்து கொண்டேன். எனக்கு தோசை காணொளி படம் வரவில்லையே..! காலையில் இரண்டு படம் இருந்தது. இரண்டிலும் காணொளி இயங்கவில்லை. இப்போது ஒன்றுதான். அதிலும் அதை காண முடியவில்லை. முன்பொரு முறை நெல்லை சரவணபவனில் நல்ல மதிய பசியில், அந்த முழு தோசையை வைத்துக் கொண்டு நான் சாப்பிட முடியாமல் திண்டாடியது நினைவில் வந்தது. என்னுடன் வந்த உறவுகள் சட்டென முடித்து விட்டனர். ஒரு தோசை 40, 60 தோ நினைவில் இல்லை.
படைம்தானே பிரம்ம தேவன் பாடல் நன்றாக இருக்கும். பலமுறை கேட்டிருக்கிறேன். பகிர்ந்த இரண்டு பாடல்கள்களையும் கேட்கிறேன். ரிஷிகபூர் செய்தி இப்படியுமா என நினைக்க வைத்தது. அலுவலக தூக்கம் குறித்த ஜோக்ஸ் அனைத்தையும் ரசித்தேன். முன்பெல்லாம் அலுவலகத்தில் இந்த மாதிரி தூங்க நேரம் இருந்தது போலும்...! இல்லை, ஜோக்குகளுக்காக இந்த பொய்த் தூக்கம் உருவாக்கி அது வெளி வந்திருக்கிறதா? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அனைத்தையும் படித்து பதில் சொல்லி விட்டீர்கள். நன்றி கமலா அக்கா.. நாற்பது ரூபாய் அறுபது ரூபாய்க்கு தோசையா? பக்தவத்சலம் காலத்திலா?!!
நீக்குபேத்தியின் உடல் நலம் இப்போது எப்படி இருக்கிறது கமலா? உங்களின் கவனிப்பில் நலமாக இருப்பார் என்று நம்புகிறேன்.
நீக்குபேத்திக்கு இன்று கொஞ்சம் பரவாயில்லை சகோதரி. குழந்தைகள் என்றால் நாம் எத்தனை கவனமுடன் இருந்தாலும் இப்படித்தான் ஏதாவது வந்து விடுகிறது. அன்புடன் நலம் விசாரித்தமைக்கு மிக்க நன்றி சகோதரி.
நீக்கு/பக்தவத்சலம் காலத்திலா?!!/ ஹாஹாஹா. இப்போது பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு. அங்கு தோசை பிரபலம் என எங்கள் அண்ணா அவர் இருந்த போது அழைத்துப் போனார். நாங்கள் நெல்லைக்கு சென்றே பல வருடங்கள் ஆகி விட்டன. இப்போது அந்த பெரிய தோசையின் விலை 150 க்கும் மேலாகவே எட்டியிருக்கும்
நீக்குபக்தவத்சலம் காலத்தில் ஓட்டல் தோசை அதிகம் போனால் ஒரு ரூபாய், ஒன்னரை ரூபாய்க்குள் இருந்திருக்கலாம். ஆனால் அதுவே ஜாஸ்தினு தான் சொல்லணும். அறுபதுகளில் இட்லி மதுரையில் மாமா ஒருத்தர் கொண்டு வருவார். அவரிடம் 10 பைசாவுக்கு 3 இட்லிகள். ஒரு பொட்டலம் காராசேவு 20 காசு, இனிப்பு சேவு 25 காசு. 25 காசுக்கு வடக்காவணி மூலவீதி பொன்னு ஐயங்கார் பள்ளிக்கு எதிரே இருந்த ஸுமுஹவிலாஸில் ஒரு டப்பா நிறைய சாம்பார் கிடைக்கும். அந்த சாம்பாரின் ருசிக்கு ஈடு இணை இல்லை. தங்கம், வெள்ளி விலையைக் கேட்டால் இன்னும் ஆச்சரியமாக இருக்கும். தங்கம், 10 கிராம் 90 ரூபாய்க்குள்ளும், வெள்ளி கிலோ 110 ரூபாய்க்குள்ளும் இருந்தது. அதே மாமாவிடம் 1976 இல் இட்லி வாங்குகையில் ஒரு இட்லி 20 காசு எனக் கொடுத்திருக்கார். அதுக்கே விலை ஏற்றம் எனப் புலம்பி இருக்கோம்.
நீக்குஎட்டணாவுக்குத் தூள் பஜ்ஜி வாங்கினால் ஐந்து பேர் சாப்பிடலாம். நிறையக் கொடுப்பாங்க.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்கு"//திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்ல வேண்டும். இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்"//
பதிலளிநீக்குநீங்கள் டைரியில் எழுதி வைத்த பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும்.
முன்பு பள்ளியில் சில நேரம் ஜாலியாக பேச்சி கொண்டு இருப்பார் வகுப்பு ஆசிரியர் பாட சொல்வார்கள் சிலரை என்னைபாட சொன்ன போது இந்த பாடலை பாடினேன். நல்ல கருத்துள்ள பாடல் என்று சொன்னார்கள் டீச்சர்.
// 'வா வா வா கண்ணா வா' பாடல் எனக்கும் பாஸுக்கும் இடையில் ஒரு சங்கேதப்பாடலாக இருந்தது. //
பாட்டின் கதையும், பாட்டி, பேரன் உரையாடலையும் ரசித்தேன்.
சோகத்தை போக்க பாடல் பாடி முகத்தில் புன்னைகையை வரவழைத்து விட்ட மலரும் நினைவுகள் அருமை.
பேப்பர் ரோஸ்ட் விவரமும், காணொளியும் படித்தேன்.
பதிலளிநீக்குநண்பரின் பேத்திக்கு எழுதிய கவிதை மிக அருமை. நண்பரின் பேத்திக்கு வாழ்த்துகள்.
அடுத்த கவிதையும் நன்றாக இருக்கிறது.
//கணேஷ் பாலா - குருவி சுவாசம் //
ரசித்தேன்.
பாடல்களை கேட்டேன். முன்பு அடிக்கடி கேட்ட பாடல். அண்ணன் தயவால். பாடல்களை பற்றி நீங்கள் எழுதியதும் நன்றாக இருக்கிறது.
ஆபீஸ் நகைச்சுவைகளை ரசித்தேன்.
பதிலளிநீக்கு