கேள்வி பதில்கள் :
பானுமதி வெங்கடேஸ்வரன்:
கணவனோ மனைவியோ எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நமக்கு வாய்த்தது இதுதான் என்று சகித்துக் கொண்டு வாழ்ந்தது முந்தைய தலைமுறைகள். ஆனால் பிடிக்காத ஒரு விஷயத்தை அப்படி ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்? என்று கேட்கும் இன்றைய தலைமுறை.. எது சரி என்று நினைக்கிறீர்கள்?
# சகிப்புத்தன்மை காட்டி பொறுத்துப் போவதற்கான காரணம் என்ன என்பதைப் பொறுத்தது இதற்கான விடை. மிகவும் துன்பந்தரும் சூழ்நிலை இருக்குமானால் சட்டப்படி விலகி இருப்பதே இருபாலருக்கும் சரியான தீர்வு.
மோர்க்குழம்பு, இருவுளிக் குழம்பு எனப்படும் இருபுளி குழம்பு, கடி எதை அதிகம் விரும்புவீர்கள்?
# பாக்கி இரண்டும் பரிச்சயம் இல்லாத காரணத்தால் மோர்க்குழம்பு..!
& இவற்றுள் பிடிததது: மோர்க்குழம்பு.
கேள்விப்படாதது : ஈருளி எனக்கு ஒரு புளியே கேஸ் ட்ரபுள் வரும். இருபுளி டபுள் ட்ரபுள்!
கடி : நானே ஒரு கடி ஜோக் மன்னன்; எனக்கு எதற்கு வேறு கடிகள்!
கல்கண்டு பத்திரிகையில் வந்த கேள்வி பதில், துக்ளக்கில் வந்த கேள்வி பதில், அரசு பதில்கள், மதன் கேள்வி பதில், சுஜாதா கேள்வி பதில், குல்வந்த் சிங் கேள்வி பதில் எது ரசனைக்குரியது?
# குஷ்வந்த் சிங்தானே? பிளிட்ஸ் கரஞ்சியா, ஃபிலிம் இண்டியா பாபு ராவ் படேலை விட்டு விட்டீர்களே !
எல்லா கே.ப -உம் ரசனையானவைதான். மிகவும் பிடித்தது சுஜாதா, மதன், தமிழ்வாணன், அரசு, சோ.
Ask Abby சில பகுதிகள் டைஜெஸ்டில் ரசித்துப் படித்ததுண்டு. (லேசான ஏ பதில் ஒன்று மட்டுமே நினைவில் இருக்கிறது!)
& தமிழ்வாணன் - 70%, துக்ளக் 100%, அரசு 100+ , மதன் 90, சுஜாதா 100%. குஸ்வந்த் சிங் காலத்தில் எனக்கு ஆங்கில அறிவு 0 என்பதால் படித்தது இல்லை.
நெல்லைத்தமிழன் :
1. பெங்களூரில் நிறைய உயரமான அடுக்குமாடிக் குடியிருப்புகள் வந்துகொண்டே இருக்கிறதே. அதுக்கெல்லாம் தண்ணீர் மின்சாரம் இதுக்கெல்லாம் எங்க போவாங்க? அதே சமயம் செக்யூரிட்டி, வீட்டுவேலை என்று பலவற்றிலும் வேலை வாய்ப்பு அதிகமாவதும் உண்மை.
# கண் திருஷ்டி போடாதீர்கள். எப்படியோ நடந்து கொண்டுதானே இருக்கிறது ?
2. இளமையில் உங்களுக்கு மிக விருப்பமான உணவாக இருந்து இப்போது பிடிக்காமல் போனது எது?
# எதுவுமில்லை - ஜவ்வு மிட்டாய் போன்ற சிறுவயது தின்பண்டங்கள் தவிர.
& அப்படி எதுவும் இல்லை என்று நினைக்கிறேன்.
3. நான் இப்போதெல்லாம் 11 மணிக்கு மேல்தான் காலை உணவு உண்கிறேன். அடுத்த உணவு இரவு 6 மணிக்குள். இடையில் ஏதாவது கொறிப்பேன். ஒரு நாளைக்கு இத்தனை வேளை சாப்பிடணும், இத்தனை மணிக்குள் சாப்பிடணும்னு ஏதாவது இருக்கிறதா?
# இது பற்றி பலவிதமான கருத்துக்கள் உலவுகின்றன. அவரவருக்கு (பருமன் உட்பட) சிரமம் தராத எதுவானாலும் சரிதான்.
4. இன்றைக்கும் உங்களால் உங்கள் சொந்த ஊருக்குச் சென்று (நாகப்பட்டினம், தஞ்சாவூர்) சொச்ச வாழ்க்கையைக் கழிக்க இயலுமா?
# முடியும் என்றுதான் தோன்றுகிறது. போய் இருந்து பார்த்தால்தான் உறுதியாகச் சொல்ல முடியும்.
& முடியாது.
5. தற்போதுள்ள சௌகரியங்களில் எதை உங்களால் இழக்க இயலாது?
# இணைய சேவைகள். மின் விசிறி.
& கம்ப்யூட்டர், இணையம், மொபைல் ஃபோன்.
= = = = = = = =
படமும் பதமும் :
நெல்லைத்தமிழன் :
கர்ணன் தேர் அழுந்திய இடம் இதுதான். அங்கு கிணறு போன்ற ஒரு அமைப்பு உள்ளது. இங்குதான் கர்ணன், அர்ஜுனனால் தலை கொய்யப்பட்டு இறந்தான் என்று சொல்கின்றனர். இது குருக்ஷேத்திரத்தில், கர்ணன் மேடு என்று அழைக்கப்படும், தொல்லியல் துறை பாதுகாப்பில் இருக்கும் மிகப் பெரிய ஏரியாவில் உள்ளது. இது பற்றி கிருஷ்ண அனுபவம் தொடரில் எழுதுவேன்.
குருக்ஷேத்திரத்தில் பார்த்த அர்ஜுனனுக்குத் தேர் ஓட்டும் கிருஷ்ணர். அதன் மேல் பருந்து, அதனை கருடன் என்று கற்பனை செய்தால் நல்லா இருக்கு இல்லையா?
சகித்துக்கொண்டு வாழ்வது ஒரு நற்பண்பு. நாம் நினைக்கற மாதிரி நாமே இல்லையே. அலுவலகத்தில் மேலதிகாரிகள் மற்றும் பலர், நம்ம பசங்க மற்றும் அவர்களைச் சேர்ந்தவங்க எனப் பலரை நாம் சகித்துக்கொண்டு போகிறோம் பல நேரங்களில், வேறு வழியில்லாமல். அப்போ ஒளிவுமறைவு இல்லாத வாழ்க்கை பார்ட்னர் இடத்தில் ஏன் சகித்து வாழக்கூடாது?
பதிலளிநீக்குநம்முடைய சுயத்தை இழக்கக்கூடிய அளவிற்கு சகிப்புத் தன்மை அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது.
நீக்குஒரு பெண் தன் கணவன் தினசரி குளிப்பதில்லை, பல் கூட சரியாக தேய்ப்பதில்லை, தான் பலமுறை கூறியும் அவன் கேட்கவில்லை என்று விவாகரத்து கேட்க அது கிடைத்தது. அந்தப் பெண் சகித்துக் கொண்டிருக்க வேண்டுமா? இது நடந்தது நம் நாட்டில்தான். தவிர அளவிற்கு மீறி ஒன்றை சகித்துக் கொள்வது அதை ஆதரிப்பதாகும் என்பார்கள்.
எனக்குத் தெரிந்த சில குடும்பங்களில் விவாகரத்து நடந்துள்ளது. தனிப்பட்ட முறையில் அந்தப் பெண், பையன் இருவருமே நல்லவர்களாகத்தான் இருப்பார்கள், ஆனால் அந்த இரண்டு பேருக்கும் ஏன் ஒத்துப் போகவில்லை? என்று தோன்றும்.
// அந்தப் பெண் சகித்துக் கொண்டிருக்க வேண்டுமா? இது நடந்தது நம் நாட்டில்தான். //
நீக்குகல் ஆனாலும் புருஷன்; புல் ஆனாலும் கணவன்!
கள் ஆனாலும் கணவன்; Full ஆனாலும் புருஷன்!
அதெல்லாம் 90 களிலேயே முடிவுக்கு வந்து விட்டது பானு அக்கா!
மோர்குழம்பு பக்கத்தில் கூட மற்ற இரண்டும் வர முடியாது. ஆனால் அழகிய மோர்குழம்பை பூண்டு, கத்தரித்தான் போன்றவை போட்டு நம்மால் கெடுக்கமுடியும். மோர்க்குழம்பு க்கு ஏற்றது வெண்பூசனி தான், வெண்டை போன்றவையே. அம்மா செய்த மோர்க்குழம்பு வடை.. ஆஹா
பதிலளிநீக்குகேள்வி பதில் அரசு துக்ளக்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம்! என்னுடைய முதல் கேள்விக்கு நியாயமான பதிலைத் தந்திருக்கிறீர்கள். நன்றி. ஆனாலும் அப்புசாமி, சீதா பாட்டி மாதிரி ஆயுள் முழுவதும் சண்டை போட்டாலும் சேர்ந்தும் வாழ்ந்தார்களே என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
பதிலளிநீக்குஇருவுளிக் குழம்பு ரெசிபி நான் எ.பி.யில் பகிர்ந்திருக்கிறேன் என்ற நினைவு.
பதிலளிநீக்குகடியில் குஜராத்தி கடி, பஞ்சாபி கடி, ஹரியா என்றெல்லாம் உண்டு. பஞ்சாபி கடியில் பகோரா(நாம் பகோடா என்போமே அதுதான்) பொறித்து போடுவார்கள். ஹரியானா கடியில் மிளகு சேர்க்கிறார்கள். என்னுடைய ஓட்டு குஜராத்தி கடிக்குத்தான். ஆனால் 'கடி சாவலை(ஸாதத்தில் பிசைந்து சாப்பிடுவது) விட, சைட் டிஷ் ஆகத்தான் பிடிக்கும்.
என்ன இருந்தாலும் நம் ஊர் மோர்குழம்பிற்கு ஈடு உண்டா? அதுவும் பருப்புருண்டை மோர் குழம்பு ஃபர்ஸ்ட் சாய்ஸ்!
மோர்க்குழம்பிலும் பாலக்காடு மோர்க்கூட்டான், தஞ்சாவூர் மோர்க்குழம்பு, திருநெல்வேலி மோர்க்குழம்பு என்று வெரைட்டி உண்டே?
நாங்கள் குருஷேத்திரம் சென்றபொழுது இந்த கர்ணன் மேடு பார்க்கவில்லை. தவறவிட்ட இன்னொரு விஷயம் ஒரு சக்திபீட கோவில்.
பதிலளிநீக்குஅந்த கீதோபதேச சிற்பம் பிரும்மாண்டமாய் மிக அழகாக இருக்கும். பிரும்ம ஸரோவர் பார்த்தீர்களா? தவற விட முடியாது. அங்கிருந்த மகாபாரத மியூசியம், கல்பனா சாவ்லா பிளானடோரியமும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குநான் பெரும்பாலான இடங்களுக்குப் போயிருக்கிறேன். அதற்கான வாய்ப்புகளுக்கு இறைவனுக்குத்தான் நன்றி சொல்லணும். குருக்ஷேத்திரம் பலமுறைகள் போயிருக்கேன். அபிமன்யு சக்ரவியூகம், துரியோதனன் மடு இவைகளும் சிலிர்ப்பாக இருந்தன
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஅஜகஜாந்திரம் என்றால் என்னவென்று விளக்குவீர்களா?
பதிலளிநீக்குஅஜம் என்றால் ஆடு - கஜம் ஆனை. ஆடு முதல் யானை வரை = இயன்றதனைத்தும்..
நீக்கு//கர்ணனிடம் ஒரு பிராமணர் யாசகம் கேட்கும் சிலை இருக்கிறது. மகாபாரதத்தில் இல்லாத ஒன்றை அங்கு காட்சியகப்படுத்தியிருக்கிறார்கள். நான்கூட ஒரு கணம், அத்தகைய இடத்தில் இருக்கிறோமே என்று மயங்கிவிட்டேன்.//
பதிலளிநீக்குகர்ணனிடம் கவசகுண்டலத்தை யாசகம் கேட்கும் இந்திரன் சிலையாக கூட வைத்து இருக்கலாம் இல்லையா?
அந்தணர் வேடத்தில் தானே இந்திரன் வந்தார்.
அது நடந்தது இங்கல்ல கோமதி அரசு மேடம். இங்கு பிராமண வடிவில் கடைசி யாசகம் கேட்கும் நிகழ்வு என்பதற்கான சிலை
நீக்குகடைசியில் யாசகம் கேட்கும் காட்சி மார்பில் அம்பு தைத்து இருக்கும் போது தானே படத்தில் பார்த்து இருக்கிறோம். இதில் நின்று கொண்டு இருக்கிறார் அதனால் அப்படி சொன்னேன்.
நீக்குஅதுவும் குருஷேத்திர போரில் அர்ச்சுனன் கர்ணனை வீழ்த்த முடியாது என்பதால்தானே இந்திரன் இப்படி வந்து யாசகம் பெற்றார் இதுவும் போரோடு சம்பந்த பட்ட காட்சி தானே அதனால் வைத்து இருப்பார்கள் என்று நினைத்தேன்.
கேள்விகளும் பதில்களும் அருமை.
பதிலளிநீக்கு5 வது கேள்விக்கு உள்ள பதில் சரிதான்.
பதிலில் குறிப்பிட்டது அத்தியாவசியம் ஆகிவிட்டது. இல்லையென்றால் கஷ்டம் தான்.
குருக்ஷேத்திரத்தில், கர்ணன் மேடு நாங்கள் பார்க்கவில்லை.
பதிலளிநீக்குபடங்கள் நன்றாக இருக்கிறது.
நன்றி. சக்ரவியூகம் பகிர்கிறேன்
நீக்குஃபோன் பிரச்சனை சுபமாக முடிந்தது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஇதே கேள்விகளை கேட்டவர்களிடம் கேட்டால் அவர்கள் பதில் என்னவாக இருக்கும் என்று அறிந்து கொள்வதில் ஆர்வம் கூடியது.
பதிலளிநீக்குகேள்விகள் கேட்ட பா.வெ. மற்றும் நெல்லையும் இதே பகுதியில் தங்கள் பதில்களுக்கு முயற்சித்தால் சுவாரஸ்யம் கூடும். ப்ளீஸ்.. முயற்சியுங்கள்.
பெரும்பாலும் நாங்களும் பதில் அளிக்கிறோம், நான் அளிப்பதுண்டு. இப்போதும் அளித்திருக்கிறேன்.
நீக்குகடி - இதிலும் பல வகை உண்டு. சுவைத்திருக்கிறேன் - ஆனால் மோர்க்குழம்பிற்கு ஈடாகாது. கடி chசாவலை விட கடியை சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளவே பிடிக்கும். ஈருளிக் குழம்பு கேட்டிருக்கிறேனே தவிர சுவைத்தது இல்லை. மோர்க்குழம்பு is far better than கடி!
பதிலளிநீக்குபல இடங்களில் நம் சுயத்தினை இழந்து தான் வாழ வேண்டியிருக்கிறது. குடும்பம் என்று வரும்போது இன்றைய யுவன் - யுவதிகள் அதற்குத் தயாராக இல்லை! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மனிதர்களை அலுவலக ரீதியாக சந்திக்கிறேன். எத்தனையோ கதைகள்... எதைச் சொல்ல எதை விட!
குருக்ஷேத்திரா - மிகவும் நல்ல இடம்! இன்னமும் நிறைய பாதுகாக்கப்பட வேண்டிய இடம் - ஆனால் அங்கே சரியான விதத்தில் பராமரிப்பு இல்லை என்பதே வேதனைக்குரிய உண்மை. சில வருடங்களுக்கு முன்னர் திருமலா திருப்பதி தேவஸ்தானமும் அங்கே ஒரு ஆலயத்தினை நிர்மாணம் செய்திருக்கிறார்கள். சில முறை சென்றதுண்டு. இதுவரை பார்க்கவில்லை எனில் இனிமேல் அங்கே சென்றால், அக்கோவிலுக்கும் சென்று வரலாம்! பிரும்மசரோவர் அருகிலேயே இருக்கிறது இந்தக் கோவில்.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் நன்றாக உள்ளது.
மோர் குழம்பு, எப்போதும் அறிந்ததுதான். இருபுளி சாம்பார் என்பதை நாங்கள்( புகுந்த வீட்டில்) எரிவுளி சாம்பார் என்ற பெயரில் அறிந்து அதன்படியே செய்தும் வருகிறேன். எபியிலும் என்னுடைய அந்த சமையல் பதிவு இடம் பெற்றது. முருங்கை, கத்திரி, தடியங்காய் (வெண்பூசணி) சிகப்பு பூசணி( பறங்கிக்காய்) போன்ற காய்களுடன் சிறிதளவு புளி விட்டு வேக வைத்தபின், கொஞ்சம் புளித்த மோர/ தயிருடன் வறுத்த பிற சாமான்களைப் போட்டு சேர்த்து தயாரிப்பது எரிவுளி என்றும், இருபுளிகள் சேர்ந்தமையால் இருபுளி சாம்பார் எனவும் பெயர்களை கொண்டு விட்டது . இது சேவைக்கு உடன்பாடாக அமையும். இட்லி தோசைக்கும் மறுப்பேதும் சொல்லாது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்த வார படமும் பதிவும் படங்கள் நன்றாக உள்ளது. குருசேஷத்திரத்தில் கர்ணன் மேடு பற்றிய தகவல்களை அறிந்து கொண்டேன். தானம் தருவதில் சிறந்தவன் கர்ணன்.தன் உயிருள்ள வரை எதையும் தர மறுக்காத குணம் கொண்டவன். இங்கெல்லாம் சென்று வர வாய்ப்புகள் கிடைக்காவிடினும், அங்குள்ள ஒரு நல்ல அழகிய படத்தை இங்கு பதிந்த சகோதரர் நெ. தமிழருக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
கேள்வி பதிலில் ஆர்வத்தை தூண்டியது அரசு கேள்வி பதில்கள்.ஆன்மீகம்,அரசியல்,சினிமா,இலக்கியம் என்று அத்தனையையும் கவர் செய்திருப்பார்.
பதிலளிநீக்குதமிழ்வாணன் கேள்வி பதில்கள் மிகவும் சிரிய வயதில் படித்ததால் நினைவில் இல்லை. அவர் மகன் லேனா தமிழ்வாணான் பதில்கள் பிடிக்கும்.
கொஞ்சம் A வாக இருந்தாலும் சுஜாதா, மதன், குஷ்வந்த்சிங் சிரிப்போடு ரசித்ததுண்டு.
சோவின் சாதுர்யத்தை வியந்ததுண்டு. இப்போது குருமூர்த்தியின் பதில்களும் நன்றாகவே இருக்கின்றன.
சிறு வயதில் பிடித்து, இப்போது பிடிக்காமல் போன உணவு எதுவும் இல்லை. ஐஸ்க்ரீம் மீது இருந்த மோகம் குறைந்து விட்டது. சாக்லேட் இப்போதும் பிடிக்கிறது. வெண்ணெய்,, நெய் அப்படியே.
பதிலளிநீக்கு