கொஞ்சம் சினிமா அரட்டை....
பராசக்தி, பாசமலர், தங்கை, தங்கைக்காக, அண்ணன் ஒரு கோவில், மன்னவன் வந்தானடி என்று தங்கை சீரிஸ் படங்களில் அதிகமாக நடித்தது சிவாஜிதான். லாரி டிரைவர் ராஜாக்கண்ணுவையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்.
தங்கை என்று பார்க்காமல் அண்ணனாக சிவாஜி என்று பார்த்தால் இதனோடு பழனி, படிக்காத மேதை, குலமா குணமா, ராஜபார்ட் ரங்கதுரை என்று இன்னும் சில படங்கள்..
ஆக, பராசக்தி, பாசமலர், தங்கை, தங்கைக்காக, அண்ணன் ஒரு கோவில், மன்னவன் வந்தானடி, உத்தம புத்திரன், பழனி, படிக்காத மேதை, குலமா குணமா, ராஜபார்ட் ரங்கதுரை, என் தம்பி என்று இத்தனைக்கு படங்களில் சிவாஜி அண்ணனாக நடித்துள்ளார். நான் மறந்து விட்டு விட்டது கூட இன்னும் இருக்கலாம்.
அறிமுகமான பராசக்தியின் அதகளம் செய்து அது பெரிய ஹிட் படம் என்றால் அண்ணன் தங்கை பாசத்துக்கு இன்றளவும் உரைகல் பாசமலர்தான். இப்படி ஒரு அந்தஸ்தை அது பெறும் என்று அதன் தயாரிப்பாளர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். காலங்கள் கடந்தும் தசாப்தங்கள் கடந்தும் இன்றளவும் பாசமலர்தான் அண்ணன் தங்கைக்கு உதாரணமாக சொல்லப்படும் படம். அந்தப் படம் பார்த்து கண்ணீர் சிந்தாதவர்களே இருக்க மாட்டார்கள் - கீதா அக்கா, அப்பாதுரை தவிர!!
குலமா குணமா படத்தில் ஜெய்சங்கருக்கு அண்ணனாக அவர் கிளைமேக்ஸ் காட்சி எனக்கு மிகவும் பிடித்த காட்சிகளில் ஒன்று. அதே போல ஸ்ரீகாந்துக்கு அண்ணனாக ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் பெரிய பணக்காரராக தம்பி மாமனாரிடம் செல்லும் காட்சி. என் தம்பியில் பாலாஜியை திருத்தும் காட்சி. பழனி படத்தில் அண்ணனாக நின்று அவர் பாடும் இரண்டு பாடல்களும் அருமையான கண்ணதாசன் பாடல்கள்.
படிக்காத மேதை தனிரகம். வளர்ப்புப் பிள்ளை. அப்புறம் பெற்றோருக்குப் பிறந்த தம்பிகள். அதுவும் அப்பாவியான நடிப்பில் சிவாஜி தூள் கிளப்பி இருப்பார். படிக்காத மேதை படத்தை உல்ட்டா செய்துதான் பின்னாட்களில் கமலை வைத்து 'பேர் சொல்லும் பிள்ளை' படமும், ரஜினியை வைத்து 'தர்மதுரை' படமும் செய்தார்கள்.
பைரவி, தர்மயுத்தம், முள்ளும் மலரும் படங்களில் ரஜினி தங்கைக்கு பாசக்க்கார அண்ணனாக நடித்திருந்தார். அதில் முள்ளும் மலரும் டாப்.
முள்ளும் மலரும் ரஜினி-ஷோபா அண்ணன் தங்கை காட்சிகள் கூட ரொம்பப் பிடிக்கும். தங்கை மேல் கோபித்துக் கொண்டு 'சாப்பிடமாட்டேன் போ' சொல்லுமிடமும், கடைசி கிளைமேக்ஸும் மிகவும் .பிடிக்கும்.
===========================================================================================
===========================================================================================
நெல்லைக் கண்ணன் : காமராஜர் பற்றி உரை.
======================================================================================
கவிதைப் பக்கம் - கண்ணதாசன்.......
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்துவிடும்
கூட்டை திறந்து விட்டால் அந்த குருவி பறந்து விடும்
காலில் விலங்கும் இட்டோம்
கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில்
தினம் நாட்டியம் ஆடுகின்றோம்
தானாட மறந்தாலும் சதை மட்டும் தனியாக
தாளாமல் துடிக்கின்றதே தம்பி
தாளாமல் துடிக்கின்றதே
தாயென்றும் பிள்ளையென்றும்
தழுவிக் கிடந்தவர்கும்
தருமம் துணையில்லையே தம்பி
தருமம் துணையில்லையே
உள்ளத்திலே உள்ளதுதான்
உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டேன்
துன்பம் எல்லாம் விலகும் கண்ணா
பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில்
கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை
என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்
நீ கொடுத்த நிழலிருக்க
பெண்மை ஊஞ்சலாட வருமோ
ஒருவனுக்கு தருவதற்கு என்றே
என்றும் இந்த மனமோ
எண்ணம் என்ற ஏடெடுத்து
எழுதும் பாடலிலே தலைவி
இல்லறத்தில் நல்லறத்தை தேடும்
வாழ்க்கையிலே துணைவி
அன்பு என்ற காவியத்தில்
நல்ல ஆரம்பமே வருக
முன்னுரைத்த காதலையே
உந்தன் முடிவுரையாய்த் தருக
==========================================================================================
பழைய சாதம்!
கணக்குத்தானே வேண்டும்?
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் 'போர்டு' ஸ்தாபனத்தாருக்குப் பத்தாயிரம் டாலர் பில் ஒன்று வந்தது. பில் தொகை அதிகமாகப் படவே, விவரங்கள் கேட்டார்கள் போர்டு ஸ்தாபனத்தார்.
பில் அனுப்பியவரோ ஜெர்மனியிலிருந்து அப்போதுதாள் அமெரிக்காவில் குடியேறியிருந்த கணித மேதை சார்லஸ் பிராட்டியஸ் ஸ்டீன்மெட்ஸ். உலகப் புகழ் பெற்றவர் இவர்.
தகராறு செய்து கொண்டிருந்த ஒரு மின் உற்பத்தி இயந்திரத்தைச் சரி செய்யும் வேலைவைத்தான் போர்ட் ஸ்தாபனத்தார் அவருக்குக் கொடுத்திருந்தார்கள். ஒரு நோட்டுப் புத்தகமும், பென்சிலும் படுக்க ஒரு கட்டிலும் வேண்டுமென்று கேட்ட ஸ்டீன்மெட்ஸ், இரண்டு பகல் இரண்டு இரவுகள் கட்டிலில் சாய்ந்த வண்ணம் இயந்திரத்தின் சப்தங்களை உற்றுக் கேட்டுக் கொண்டும், ஏதோ கணக்குகளப் போட்டுக் கொண்டும் இருந்தார். பிறகு, ஓர் ஏணி மூலம் இயந்திரத்தின் மீது ஏறிச் சில அளவுகள் எடுத்து விட்டு, சாக்கட்டியால் இயந்திரத்தின் ஒரு பகுதியில் அடையாளக் குறியிட்டார்.
"குறியிடம் பட்டிருக்கும் இந்த இடத்தில் இந்தத் தகட்டை அகற்றி உள்ளேமிருக்கும் ஃபீல்டிங் காயிலிலிருந்து (Fielding coil) பதினாறு சுற்றுகளை (Windings) எடுத்து விடுங்கள்" என்றார் ஸ்டீன்மெட்ஸ். அப்படிச் செய்ததும் நன்றக இயங்கத் தொடங்கியது இயந்திரம்
தாம் அனுப்பிய பில் சரியல்லவென்றும், முழு விவரங்களும் அடங்கிய பில் ஒன்று வேண்டுமென்றும் கோரித் தம்மிடம் கணக்குக் கேட்ட போர்டு ஸ்தாபனத்தினருக்கு ஸ்டீன்மெட்ஸ் அனுப்பிய 'விவரமான' பில் இதுதான்:
சாக்கட்டியால் குறியீட்டதற்கு - 1 டாலர்
எங்கே குறிபிடவேண்டுமென்று தெரிந்து கொண்டதற்கு - 9999 டாலர்
மொத்தம் 10000 டாலர்
ஆதாரம்: இன்டர்நேஷனல் மானேஜ்மென்ட்
தகவல்: டி. என். கிருஷ்ணன் - கல்கி - 15-5-66
==========================================================================================
சாண்டில்யன் பக்கம். சாண்டில்யனுக்கு ரா பி சேதுப்பிள்ளை அறிமுகம்.. சாண்டில்யன் குமுதத்தில் எழுதிய காலத்திலேயே அமுதசுரபியிலும் தொடர்கதை எழுதி இருக்கிறார்.
அணிந்துரை
(திரு. ரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்)
பழங்காலத்தில் வடமேற்குக் கணவாய்களின் பகைவர்கள். வழியாகப் பாரத நாட்டிற்கு வந்த தொல்லைகள் பலவாகும். பாரதத்தின் செல்வத்தை விரும்பிப் படையெடுத்தனர் இந்நாட்டு மன்னர்கள் அவர்களை எதிர்த்துப் போரிட்ட வரலாற்றை நாமறிவோம். அத்தகைய படை யெடுப்புகளில் ஒன்று ஹூணர்கள் என்னும் நாடோடிச் சாதியாரால் நேர்ந்தது. அன்னவ ருடைய மின்னல் தாக்குதல்களை முறியடித்துப் பாரத நிலத்தில் அவர்கள் ஆதிக்கம் நிலைபெறா வண்ணம் தடுத்து வந்தனர் குப்த மன்னர்கள். ஆயினும், ஸ்கந்தகுப்தன் என்னும் மன்னன் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தபோது அப்பகைவரது படையெடுப்பைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அப்போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பொன்னின் மதிப்பும் நாட்டில் குறைந்துபோயிற்று.
ஸ்கந்தகுப்தனுடைய மாற்றாந் தாயாகிய ஆனந்ததேவி தன் மகன் பூரகுப்தனை அரியாசனத்தில் ஏற்ற விரும்பி எதிரியான தோரமானா என்னும் படைத்தலைவனுடன் சேர்ந்து சதி செய்து வந்தாள். அச்சமயம் ஹூணத் தலைவன் அடிலனிடம் உபாத்தியாயராகப் பணியாற்றி வந்தான் குப்த ராஜ்ய உபசேனாதிபதி அஜித் சந்திரன். இந்த உள்நாட்டுக் கலகத்தையும், தோரமானாவின் தாக்குதலையும் உபசேனாதிபதி அஜித் சந்திரன் தன் ராஜதந்திரத்தால் முறியடித்து, அடிலன் மகள் சித்ராதேவியை மணந்த வரலாற்று உண்மையைப் பகைப்புலமாகக் கொண்டு சிறந்த தொரு சரித்திர நாவலைப் புனைந்திருக்கிறார் திரு. சாண்டில்யன் அவர்கள்.
வரலாற்று நூல் எழுதுதல் எளிதன்று. அதிலும் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு மெய்ச்சான்றுகளுக்கு மாறுபடாமல், நாவலுக்கு ஏற்ற குணநலங் குன்றாமல் எழுதுதல் அதனினும் கடினமானதொன்று. மேனாட்டு ஆசிரியர்களாகிய சர் வால்டர் ஸ்காட், டூமாஸ் போன்றவர் தம் வரலாற்றுக் கற்பனை நாவல்களால் உலகப் புகழ் பெற்றதோடு தம் மொழிக்கும் ஆக்கம் தேடித் தந்திருக்கிறார்கள்.
திரு. சாண்டில்யன் அவர்கள் தமிழில் சிறந்த எழுத்தாளர். இயற்கையான நகைச்சுவையாலும் சிறந்த பாத்திரங்களைப் படைக்கும் திறத்தாலும், நன்றாகக் கதையை நடத்திச் செல்லும் நலத்தாலும் நல்லதொரு நாவலைத் தமிழ்நாட்டிற்கு அவர்கள் அளித்திருக்கிறார்கள். அவர்கள் படைத்துள்ள பல்தேவ், ராகுலன், காமினி போன்ற பாத்திரங் களே இதற்குச் சான்று.
ஏறக்குறைய ஐநூறு பக்கங்கள் கொண்ட இந்த வரலாற்று நாவலை இயற்றித் தமிழ் நாட்டிற்கு அளித்ததற்காகத் தமிழ் ஆசிரியர் சாண்டில்யனைப் போற்றுவர் என்பதில் ஐயமில்லை. மேலும் மேலும் வரலாற்றுக் கதைகளைப் பொதிந்து புனைந்து நாட்டின் புகழையும் மொழியின் வளத்தையும் வாழ்விப்பீர்களாக.
காந்தி நகர் 13-2-56
ரா. பி. சேதுப்பிள்ளை
====================================================================================
தெய்வமகன் படத்தின் ஆரம்பக் காட்சி.. சிவாஜி,,,
=========================================================================================
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி Y G மகேந்திரன் சொல்லும் .சிறு துளி தகவல்.
========================================================================================
1969 ஆம் வருட கல்கியிலிருந்து....
அகாதெமிப் பரிசு
திருஜெயகாந்தன் அவர்கள் வாசகர்களின் மனப்போக்கை அதுசரித்து எழுதும் 'மாமூல்' எழுத்தாளரல்ல, அவர் எழுத்தில் இளைஞர் சமுதாயத்தை ஈர்க்கும் சக்தியும், அவர் களுக்கு விழிப்பூட்டி வழி காட்டும் ஆற்றலும் உண்டு; சாதாரணமான ஒரு கருத்தை வைத்துக்கொண்டு ஓர் அசாதாரணப் படைப்பை வாசகர்களுக்கு அளிக்கும் திறமையும் உண்டு.
அவரது "சில நேரத்தில் சில மனிதர்கள்" என்னும் நூலுக்கு சாகித்ய அகாதெமியின் பரிக கிடைத் திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். நூலாசிரியரை வாழ்த்தஹிறோம்.
ஒரு பேதைப் பெண், அவள்தா ய், மாமன் ஆகிய குறைவான பாத்திரங்களை வைத்துக் கொண்டு நிறைவான கதையைப் படைத்து அலுப்புத் தட்டாமல் சுவையாகக் கூறியிருக்கிறார். மனித உள் ளங்களில் உள்ள ஆசாபாசங்களை -அழுக்குகளையும் கூடந்தான் - கூசாமல் வெளியிட்டு, சமூக நெறிகளின் ஊழல்களுக்குச் சவுக்கடி கொடுத்திருக்கிறார். விவாதத்துக்குரிய பல பிரச்னைகளை அநாயாசமாகத் தொட்டு அவற்றை இன்றைய வாழ்க் கையோடு பிணைத்துக் காட்டி, அப்பட்டமான உண்மைகள நிலைநாட்ட முயன்று வெற்றியடைந்திருக்கிறார்.
சந்தர்ப்ப வசத்தினாலும், தன் பேதைமையினாலும் ஓ ஆணின் இச்சைக்குப் பலியான இளம் பென் கங்காவை ஒரு விரக்திப் பிரகிருதியாய் மாற்றி அவளைக் கொண்டே தன் கதையை சொல்ல வைத்திருக்கும் பாணி பாராட்டுக் சூரியது.
வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்கும் பிடித்தமாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை. யதார்த்தத்தை நாம் புரிந்த கொள்ள மறுப்பதனாலேயே அது இல்லை என ஆகிவிடாது. யதார்த்தத்தை, அதாவது ரியலிஸத்தை அடிப்படையாசுக் கொண்டு புனையப்பட்ட நாவலுக்கு வரவேற்பு ஒரு தினுசாகத்தான் இருக்கும். ஒரு பாத்திரத்தின் மீது அர்ததமற்ற வெறுப்போ, அல்லது அசட்டுத்தனமான அனுதாபமோ கொண்டு விடும் வாசகர்கள் எழுத்தின் மூலம் மனித் வாழ்வைப் புரிந்துகொள்ள மறுத்து விடுகிறார்கள். இந்நாவலில் இக்கருத்தை வலியுறுத்தவே முயன்றிருக்கிறர் ஆசிரியர். இம் முயற்சி தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படுவதாகும்.
=======================================================================================
OTT யில் பார்த்த படம் JIO Hot Star - மா பங்காரம் - மூலம் தெலுங்கு - பார்த்தது தமிழ் வசனத்தில்
சமந்தாவுக்கு ஆக்ஷன் ரோல் ஒத்து வரவில்லை.
ஹீரோவை விட வில்லன் அழகாக இருக்கிறார். நன்றாகவும் நடிக்கிறார்.
முன்னர் 'ஈ' படத்திலும், ஏதோ ஒரு விஜய் படத்திலும் சமந்தாவைப் பார்த்து அழகாக இருக்கிறார் என்று நினைத்திருக்கிறேன். ஏன், 'நீதானே எந்தன் பொன்வசந்தம்' படத்தில் கூட நன்றாகத்தான் இருந்தார்.
இந்தப் படத்தில் டைஃபாய்டில் விழுந்து எழுந்தவர் போல இருக்கிறார். ஆனால் வில்லன் சொல்லும் டயலாக்
"அவளைக் கொன்று விடு"
"ஏன் அண்ணா?"
"அவள் ஸ்வர்ணாவாய் இருந்தால் கொன்று விடலாம். ஜான்சியாய் இருந்தால் அவள் உன்னைக் கொன்று விடுவாள்"
அவள் ஜான்ஸிதான் என்பதை நிரூபிக்க சிஷ்யனை பலி கொடுக்கும் வில்லன். படத்தில் அவன் பெயர் கருணா.
இன்னொரு இடத்தில் அவனே சமந்தாவை எதிர்க்கும்போது வெறுப்புடன் அலுத்துக் கொள்வது -
"தெரியாமல் இப்படி ஒரு ராட்சசியை (மான்ஸ்டர்) உருவாக்கி விட்டேன்"
அனாதை ஸ்வர்ணா அனாதை விடுதி காப்பாளர் பாலியல் இச்சைக்கு பலியாகாமல் சிறு வயதிலேயே அங்கிருந்து தப்பி, இங்கே அங்கே என்று அலைந்து, ஒவ்வொரு இடத்திலும் பாலியல் சவால்களை எதிர்கொள்கிறாள். அங்கே வந்த ஒரு நக்ஸலைட் போன்ற குழுவால் கவரப்பட்டு அவர்களுடன் சென்று யுத்தம் பழகுகிறாள். அவர்கள் நியாயத்தை விட அநியாயம்தான் அதிகம் செய்கிறார்கள் என்று தெரிந்ததும் கருணாவை போலீசிடம் மாட்டி விட்டு, அங்கிருந்து தப்பி, ஒரு நல்ல கணவனை அடைந்து, அவன் குடும்பத்தில் ஐக்கியமாகப் போகும் நேரம் பழைய வாழ்க்கை துரத்துகிறது.
வில்லனாக நடிக்கும் குல்ஷன் தேவய்யா கதாநாயகன் திக்நாத்தை விட நன்றாக இருக்கிறார். உடல்மொழி நன்றாக இருக்கிறது. வசனம் டெலிவரி தெளிவாக இருக்கிறது.
சரி, ஒரு நல்ல ஆக்ஷன் படமாக இருக்கும் என்று பார்த்தால் அதுவும் 50 சதவிகிதம்தான் தெரிகிறது. சும்மா ஒருமுறை பார்க்கலாம்.
============================================================================================
MGR ன் நடையும் சாவித்ரியின் நடையும் ரசிக்கத்தக்கவை. பாடலோ அருமையான பாடல். சிறுவயதில் என் மகன்களுக்கு அடிக்கடி பாடிக் காட்டும் பாடல்! குதிரையிலிருந்து MGR கீழே இறங்கி நடந்து வரும்போது குதிரை சாவித்ரியை கடிப்பது போல வரும்போது லாவகமாக அதை தள்ளி விடுவார் MGR
வேட்டைக்காரன் 1964 ல் கண்ணதாசனுடன் பிணக்கு வருவதற்கு முன் வந்த படம். பாடல்களும் அவர்தான்.இசை கே வி மஹாதேவன். குரல் TMS என்று .சொல்லவும் வேண்டுமோ...








அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குவாங்க வெங்கட்.. வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
நீக்குபாசமலர் - நான் பார்த்தது இல்லை - சினிமா என்று தெரிந்து ஏன் அழ வேண்டும்? :)
பதிலளிநீக்குஹிஹிஹி.. இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை!
நீக்குவெங்கட் நாகராஜின் வித்தியாசமான கருத்து. அவருக்கு ஆடி வெள்ளி, ஆட்டுக்கார அலமேலு போன்ற பல படங்களைத் திரையில் பார்க்கச் சென்று, தாய்மார்கள் குலவையிட்டு, சாமியாடி அதகளம் பண்ணுவதைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை போலிருக்கு.
நீக்குஹா.. ஹா.. ஹா.. வாங்க நெல்லை.. நானும் அவர் இது மாதிரி படங்கள் பார்க்கும்போது திரையரங்கில் எப்படி உட்கார்ந்திருப்பார் என்று நினைத்துப் பார்த்தேன். ஆனால் அவர் திரைப்படங்கள் பார்க்க மாட்டாராம்.
நீக்குவெங்கட் , பாசமலர் சினிமா அல்ல. திரைக்காவியம். பார்க்கும்போது அவ்வளவு ஒன்றிப்போவீர்கள். விளம்பரங்களையே ரசிக்கத்தெரிந்த உங்களுக்கு பாசமலர் கட்டாயம் மனதை பிசையும்.
நீக்குJayakumar
வாங்க JKC ஸார்.. உங்கள் பின்னூட்டம் மனதை நிறைக்கிறது!
நீக்கு@Sriram, hehehehehehehehe
நீக்குGrrrrrrrr...!
நீக்குமற்ற பகுதிகளும் நன்று. அப்பாவின் கவிதை மனதைக் கவர்ந்தது.
பதிலளிநீக்குநன்றி வெங்கட்.
நீக்குஏதாவது நாவல் வாசித்து நீங்கள் நெஞ்சம் தழுதழுத்தது உண்டா, வெங்கட்?
நீக்குஅப்படியான நாவல்கள் சட்டென எதுவும் எனக்கு நினைவுக்கு வரமாட்டேன் என்கிறது ஜீவி ஸார்.. கொஞ்சம் வரிசைப்படுத்துங்களேன்...
நீக்குநானும் யோசித்துப் பார்க்கிறேன்.. கதைகள் படித்து கண்கலங்கியதுண்டா மனம் கலங்கியதுண்டா என்று.. ஏதோ அப்படி நடந்தது போல மங்கலாக ஒரு நினைவு..
சில பாத்திரங்கள் நினைவில் நின்று கொண்டே இருக்கும்.. நந்தினி, பிச்சுமணியின் தாத்தா, கங்கா, ஏன் பிரபுவும்.. ஹென்றி, சாரங்கன்...
கீதாம்மா வந்து சொல்லுவாங்க, பாருங்கள்.
நீக்குகாத்திருக்கிறேன் / காத்திருப்போம்.
நீக்குபி.எஸ்.ராமையாவின் பல கதைகள், நாவல்கள், நாடகங்கள் பார்த்தாலும் முக்கியமாய் நினைவில் இருப்பது அவரின் போலீஸ்காரன் மகள் திரைப்படமாக வந்ததும், தேரோட்டி மகன், "கர்ணன்" என்னும் பெயரில் படமாக வந்தது தான். இரண்டிலும் எனக்குக் குறிப்பாக எதுவும் சொல்லும்படி இருந்ததில்லை. ஆனால் குமுதமோ/ஆனந்த விகடனோ எதிலோ அல்லது அவர் தனியாகவோ எழுதிய ஒரு நாவல் "நந்தா விளக்கு" என நினைக்கிறேன். அந்த நாவல் மனதை மிகவும் பாரமாக அழுத்தி இருக்கிறது. தப்பே செய்யாத கதாநாயகி கணவனால் தப்பு செய்ததாக நினைத்துக் கைவிடப்பட்டுப் பின்னர் திருந்தி வாழும் சமயம் கணவனின் இந்த சந்தேகமும், அதை அவன் எப்படித் தீர்த்துக் கொண்டான் என்பதும் அவன் வாயாலேயே தெரியவர மனம் உடைந்து போகிறாள். அந்த நாவலின் அந்தக் கடைசி வரி பல மாதங்கள் மறக்க முடியாமல் இருந்தது. இப்போ நினைவில் இல்லை.
நீக்குஅடுத்து எம்.வி.வெங்கட்ராமின் "வேள்வித் தீ". அநேகமாக எல்லோருமே படிச்சிருப்பாங்க. பலரும் ராணி முத்துவின் வெளியீடாகச் சின்னக் குறுநாவலாகப் படிச்சிருப்பாங்க. ஆனால் நான் முழுசும் படிச்சேன். அழவே அழுதிருக்கேன் முடிவை நினைச்சு. ஆனால் கதாநாயகன் அதை எல்லாம் நினைக்காமல் தனக்குப் புதுசாக் கிடைச்சப் பணக்காரத் துணையோடு சந்தோஷமாக வாழ்வதாக இருக்கும். இது தான் ஆண்களின் சுபாவம் எனத் தோன்றும்.
நீக்குஅடுத்தது தலைமுறைகள். நீல.பத்மநாபன் எழுதினது. இதை நான் படிக்கையில் ரொம்பச் சின்ன வயசு. ஆகையால் முடிவைப் படிக்கையில் கண்ணீர் கொட்டுவதை நிறுத்த முடியலை. மனதை மிகவும் பாதித்த கதைகளில் இதுவும் ஒன்று. நாஞ்சில் நாட்டுப் பிள்ளைமார் சமூகத்தின் நடைமுறைகள் நிறைந்ததொரு கதை. உணவு வகைகளும் அதில் இடம் பெற்றிருந்தன. அக்காவின் வாழ்க்கை கெட்டுப்போனதை நினைச்சு வருந்தும் தம்பி அக்காவிற்குப் புது வாழ்க்கையை ஏற்பாடு செய்தால் அந்த வழ்க்கை அவள் முன்னாள் கணவனால் சிதைக்கப்பட்டிருக்கும். ஆனால் அவன் தப்பிவிடுவான் மனநிலை பிறழ்ந்தவன் என்னும் பெயரில். உண்மை தெரிந்தும். கதாநாயகனுக்கு அவனை ஒண்ணும் செய்ய முடியாது.
அநேகமாக இதெல்லாம் முன்னரே சொல்லி/எழுதி இருப்பேன்.
நீக்குஇந்துமதியின் 'மணல் வீடுகள்' , சுஜாதாவின் 'என் இனிய இயந்திரா'வில் ஜூனோ இறந்து போவதாக ஒரு வாரத்தில் முடித்டிருப்பார். அடுத்த வாராம் வரை "ஜூனோ செத்துப் போயிடுத்து" என்று நான் புலம்பித் தள்ளினேன். 'இதயம் பேசுகிறது பத்திரிகையில் தொடராக வந்த வாசந்தியின் கதை ஒன்றில்(பெயர் மறந்து விட்டது) மாமியார் தன் மகனை தன் கைப்பிடியில் வைத்துக் கொண்டு, மருமகளை தன் மகனோடு நெருங்க விட மாட்டாள். அவனும் மனைவியை நேசித்தாலும், அம்மாவிற்கு கட்டுப்பட்டவனாய் மனைவியிடம் தன் காதலை வெளிப்படுத்த மாட்டான். மாமியார் இறந்ததும் கணவன் இனிமேலாவது அன்பாக இருப்பான் என்று நினைப்பாள். அவளுடைய கனவில் அவள் மாமியார் வந்து,"என் பிள்ளையை நான் என்னோடு கூட்டிச் செல்லப் போகிறேன், நீ என்ன செய்வாய்?" என்று கேட்பாள். அத்ற்கேற்றார் போல் அவளுடைய கணவனுக்கு புற்று நோய் வந்து அவன் இறந்து விடுவான். மனதை பெரும் பாரமாக்கிய கதை இது.
நீக்குநந்தா விளக்கு என்று தேடினால் பாலகுமாரன் கதை என்று வருகிறது. பி டி எப் கிடைக்கிறது. வேறு ஏதேதோ வருகிறது. பி எஸ் ராமையா வரவில்லை.
நீக்குவேள்வித்தீயோ தலைமுறைகளோ நான் படித்ததில்லை. ஆனால் ஜெயமோகன் சிறுகதை ஒன்று விகடனில் படித்து காலங்கி இருக்கிறேன். அதேபோல ஒரு அனுராதா ரமணன் கதை
ஜீனோ செத்துப் போனபோது நானும் கலங்கினேன். ஆனால் பெரும்பாலானோர் கலங்கியதால் சுஜாதா 'மீண்டும் ஜீனோ'வைக் கொண்டு வந்தார்.
நீக்குNovels
நீக்குVithiyin vilayattu komala
Kailasa Iyerin kedumathi
Premaharaam
Nandha Vilakku
Thinai vidaithavan
Sandhaipettai
Ok Ok
நீக்குநான் ஜீனோ படிச்சதில்லை. அதனால் அதன் தாக்கம் என்னிடம் இல்லை. தொலைக்காட்சித் தொடராகக் கூட வந்திருக்குப் போல. 90 களிலா? அப்போதான் ஜாம்நகர் போன புதுசு. ராஜஸ்தானை விட்டு வந்த வருத்தம் தீரவே இல்லை. அதோடு பெண்ணை வேறே சென்னையில் அப்பா வீட்டில் விட்டிருந்தோம். அந்தப் பிரிவு வேறே. மனம் எதிலும் செல்லாத நாட்கள் அவை.
நீக்குபானுமதி சொன்னவை எல்லாமும் படிச்சிருக்கேன். ஜீனோ தவிர்த்து. வாசந்தியின் கதையைப் படிச்சுட்டு அழுத நினைவும் இருக்கு. அப்போதைய காலத்தில் தப்பாக இருந்திருக்கலாம். ஆனால் அந்தப் பெண் அப்போவே எதையும்/யாரையும் பொருட்படுத்தாமல் தகுந்த கணவனைத் தேடிக் கல்யாணம் செய்து கொண்டிருக்கணும்.
நீக்குசரி, இப்ப படிச்சாலும் அழுகை வருமா?!
நீக்கும்னசு கஷ்டப்படும். அழுகை எல்லாம் வரும் வயசைத் தாண்டியாச்சே! :)
நீக்குவரும்!
நீக்குசமீபத்தில் ஸ்ரீராம்(எ.பி-சனிக்கிழமை பதிவு) தயவில் ஜெயமோகனின் தாயார் பாதம் மனதை அசைத்து விட்டது.
நீக்குநான் என்ன செய்வேன் என்று யோசித்தேன். புத்தகத்தை மூடி வைத்து விட்டு கொஞ்ச நேரம் சூன்யத்தை வெறித்துக் கொண்டிருப்பேனாயிருக்கும்!
நீக்கு// ஜெயமோகனின் தாயார் பாதம் மனதை அசைத்து விட்டது.//
நீக்குஆமாம். அதற்கு முன்னாலும் ஒரு சிறுகதை இங்கேயே பகிர்ந்திருந்தேன். கீதா படித்தால் சொல்வார். அது மனதை என்னவோ செய்தது.
கதைப் புத்தகங்கள் என்று மட்டும் இல்லை, ரா.கணபதி எழுதிய 'அறிவுக் கனலே, அருட்புனலே' 'அம்மா' போன்ற ஆன்மீக புத்தகங்கள், மகான்களின் சரிதம் இவையெல்லாம் அழ வைத்திருக்கின்றன. அதை அழுகை என்பதா overwhelming என்பதா?
நீக்குநான் சொன்ன கதைக்கப் பகிர்வு இடம்பெற்ற பதிவு இதோ
நீக்குhttps://engalblog.blogspot.com/2017/10/blog-post.html
ஆழமற்ற நதி. ஜெயமோகன்
https://www.jeyamohan.in/102252/
நீக்குhttps://www.jeyamohan.in/102744/
https://www.jeyamohan.in/102951/
கடைசிப் பகுதி நடை பற்றியது ஏற்கனவே வந்திருக்கிறது
பதிலளிநீக்குநடை, ரசனை எப்போதும் மாறாது இல்லையா? இப்போது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது!!!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குநலம்தானே?
நலந்தான் .இன்று கொஞ்சம் நலமாகி உள்ளேன். நேற்று என் நலம் குறித்த உங்கள் அனைவரது அன்பான கருத்துக்களுக்கும் இப்போதுதான் நன்றி தெரிவித்து விட்டு வந்தேன். இன்றும் நலம் விசாரித்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே. 🙏.
நீக்கு__/\__
நீக்குOTT-யிலெல்லாம் இது வரை படமே பார்த்திராத குழந்தை நான்.
பதிலளிநீக்குஅச்சச்சோ.. இழப்பு அதற்கல்ல...
நீக்குஇதெல்லாம் பற்றி குழந்தைக்கு என்ன தெரியும்?/சொல்லுங்கோ.
நீக்குஹிஹிஹி குண்ட்ஸா புரியுது!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வெள்ளிச் சிதறல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. அண்ணன் தங்கை படங்களை வரிசைப்படுத்திய விதத்தை ரசித்தேன். சிவாஜி அவர்களின் நடிப்பிற்கு ஈடு இணையேது. நானும் பலமுறை பாசமலர் பார்த்துள்ளேன். ஒவ்வொரு தடவையும், நம்மால் அடக்க முடியாத அளவில் கண்ணீர் வரும் அளவுக்கு அவர் நடிப்பு இருக்கும்.
இன்று சிவாஜி அவர்கள்தான் வெள்ளி சிதறல்களில் பெரும்பங்கு வகித்திருக்கிறார்.. அவர் நடிப்பின் புகழ் என்றும் மாறாதது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
பதிவில் சிவாஜி நிறைந்தது சட்டென நிகழ்ந்ததுதான். திட்டமிட்டு செய்யவில்லை. நன்றி கமலா அக்கா.
நீக்குஜூலை 21 சிவாஜி கணேசனின் நினைவுநாள்.
நீக்குகுமுதத்தில் எழுதுவதற்கு முன்பே சாண்டில்யன் பிரபலமானவர்.
பதிலளிநீக்குஇவரது 'ஜீவபூமி' நாவல் அமுதசுரபியில் தான் வெளிவந்த தொடர்கதை.
ராஜபுத்திர வம்சக் கதை. சோழர், பாண்டியர் என்று அரைத்த மாவையே அரைக்காத சுவாரஸ்யம் இதில் உண்டு. PDF-வாகவும் கிடைக்கிறது. முடிந்தால் வாசித்துப் பாருங்கள்.
ஓ அப்படியா... ஜீவபூமி மாமா வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். பார்க்கிறேன் ஜீவி ஸார். எதுவுமே வெளிவந்தபோது அந்தத் தொடருக்கு வரையப்பட்ட ஓவியங்களோடு கிடைத்தால் சொர்க்கம் கிடைத்த சுகம்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குதங்கள் அப்பாவின் கவிதை வரிகள் மனதை என்னவோ செய்தது. உங்கள் அம்மா அவர் எந்தளவிற்கு நேசித்திருக்கிறீர் என்பதை தெரிவிக்கிறது. "என்னவளை இழந்ததிலே" தொடங்கி நாலு வரிகள் மனதை மிக கனக்கச் செய்தது.
இறுதியில் பகிர்ந்த எம்ஜிஆர் பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல். அதில் இருவரின் நடிப்பையும், நடையையும் ரசிப்பேன். அந்தக் குதிரையும் அழகாகவும், நடிப்புடனும் நடித்துள்ளது பாடலுக்கு ஒரு சிறப்பு. பாடலின் வரிகளும் அர்த்தமுள்ளவை. நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குபாசமலர் படத்தில் ஒரு மோதல் காட்சியில் சிவாஜியைப் பார்த்து ஜெமினி பேசுவதாக வசனம் வரும். "Those days were gone Raju! Today all for each and each for all.. இன்னும் இந்தத் திரு நாட்கள் பாரதத்தில் வந்த பாடில்லை!
பதிலளிநீக்குஎப்போதுமே வராது ஜீவி ஸார்.. அச்சானியமாக பேசுகிறேன் என்று பார்க்காதீர்கள். வாய்ப்பு இல்லை, சாத்தியமில்லை. ஆனானப்பட்ட ரஷ்யாவிலும், சீனாவிலுமே இது முடியவில்லை!
நீக்குபொருளாதார பரவலிலோ வாழ்க்கை வசதிகளிலோ Each for all All for each சரியில்லாமல் போகலாம். ஆனால் கொள்கைப்பிடிப்பு, மற்றும் குறிக்கோள்களில் இவ்வாக்கியம் பொருந்தும் என்பதை சுதந்திரப் போராட்டம், jp போராட்டம், தற்போது நடக்கும் நீட் போராட்டம் போன்றவை நிரூபிக்கின்றன.
நீக்குYES.
நீக்கு//தற்போது நடக்கும் நீட் போராட்டம் போன்றவை நிரூபிக்கின்றன.// :))))
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா வணக்கம் .
நீக்குநலமே வாழ்க..
பதிலளிநீக்குநாடுவோம் அதையே..
நீக்குஇன்றைய பதிவு அழகு..
பதிலளிநீக்குநடிகர் திலகம் அவர்களைப் பற்றிய திரை விவரங்கள் சிறப்பு..
ரசிப்பீர்கள் என்று தெரியும்.
நீக்குஅண்ணன் தங்கை பாசத்தை எல்லாம் அனுபவிக்கக் கொடுத்து
பதிலளிநீக்குவைத்திருந்த தலைமுறை நம்முடையது..
இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கிறது செல்வாண்ணா!!
நீக்குஇப்போதும் பாசமலர் பார்க்கத்தான் ஆசை...
பதிலளிநீக்குமனதில் தைரியம் இல்லை..
ஆமாம். அதேதான்.
நீக்குஆனால் முள்ளும் மலரும் பற்றியும் பேசலாம்.
நீக்கு
பதிலளிநீக்கு//அந்தப் படம் பார்த்து கண்ணீர் சிந்தாதவர்களே இருக்க மாட்டார்கள் - கீதா அக்கா, அப்பாதுரை தவிர!!//
அப்பாதுரைக்கு ஜிவாஜியைப் பிடிக்காததுக்கு வலுவான காரணம் இருக்கும். ஆனால் எனக்கு அப்படி எல்லாம் இல்லை. எங்க வீட்டில் அப்பா,அம்மா,அண்ணா, தம்பி, சித்தி, சித்தப்பா அவங்க குழந்தைங்க, மாமாக்கள்னு எல்லோருமே ஜிவாஜி ரசிகர்கள் தான். நாமதான் எப்போவுமே தனீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஆச்சே! :)
நீங்க வேறே ஸ்ரீராம், நான் இன்னும் பாசமலர் பார்த்ததே இல்லை. நிஜமாகவே சொல்றேன். இங்கே நீங்க குறிப்பிட்டிருக்கும் படங்களில் படிக்காத மேதை மட்டும் பார்த்திருக்கேன். மத்தவை ம்ஹூம் பார்த்ததே இல்லை.
வாங்க கீதா அக்கா... வலுவான காரணம் என்று இருக்க வாய்ப்பில்லை. அவரும் ரசிப்பார். வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார். இதெல்லாம் முடியுமென்றால் கடியாது மனோதத்துவம். நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா! சும்மா மற்றவர்களை வம்பிழுப்பார்.
நீக்குசிவாஜியின் பின்னாளைய படங்கள் கொஞ்சம் ஒரு மாதிரிதான் இருந்தன. ஆனால் அதற்கு அவர் காரணமல்ல! நான் அவற்றை எல்லாம் பார்க்கவில்லை.
முள்ளும் மலரும் கதையும் படிச்சிருக்கேன். உமாசந்திரனோடது. கல்கி வெள்ளி விழா பரிசு நாவல். படமும் தொலைக்காட்சி தயவில் பார்த்திருக்கேன். முடிவு கதையில் இருப்பதைப் படத்தில் சுபமாக மாத்தி இருப்பாங்க. என்றாலும் படம் வெற்றி பெற்றது.
பதிலளிநீக்குநடிப்பும் நன்றாகவே இருந்தது. மகேந்திரனின் ட்ரீட்மெண்ட்.
நீக்குஅப்பாவின் மனப் பிரளயம் படிக்க முடியலை. எழுத்துக்களைப் பெரிதாக்க முடியலை. கீழே உள்ளவற்றைப்படிச்சேன். அவர் மனநிலை புரிகிறது. துணையை இழந்த தனிமை மிகக் கொடுமையானது, ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி. :(
பதிலளிநீக்குகாமராஜர் பத்தி என்பதோடு நெற்றியில் வேறே திருநீறு, குங்குமம் இருக்கு. இது வேறே நெல்லை கண்னனோ? பின்னால் முடிஞ்சால் பார்க்கிறேன். இப்போப் பார்க்கலை.
கண்ணதாசனின் இந்தக் கவிதை டி.எம்.எஸ்.குரலில் கேட்டிருக்கேனோ? அரைகுறை நினைவு.
கணிதமேதை ஃபோர்டுக்கு பில் அனுப்பிய செய்தி புதுசு.
மலைவாசல் படிச்சதே இல்லை. ரா.பி.சேதுப்பிள்ளையின் விபரங்களை வைத்துப் பார்த்தால் படிக்கணும்னு எண்ணம் வருது. கிடைக்குமானு முதல்லே பார்க்கணும்.
வால்டர் ஸ்காட், டூமாஸ் இருவருமே படிச்சிருந்தாலும் டூமாஸ் தான் என்னைக் கவர்ந்தவர். அவருடைய D" Artagnan காரக்டரை வைச்சுத் தான் கல்கி, "பொன்னியின் செல்வனில்" "வந்தியத் தேவனை உருவாக்கினார் என அந்த நாட்களிலேயே சொல்லிக் கொண்டிருப்பார்கள். இப்போவும் வலை உலகிலும் சிலர் நான் பொன்னியின் செல்வன், வந்தியத் தேவன் பத்திக் குறிப்பிட்டால் கல்கிக்கு ஒரிஜினாலிடி கிடையாது என்பார்கள். :)
அப்பாவின் கவிதைகள் - கடைசி நேரத்தில் தெரிவு செய்வதால் என்னாலும் எழுத்துகளாக டைப் செய்து கொடுக்க முடியவில்லை.
நீக்குநெல்லை கண்ணன் நாத்திகரல்ல. கொஞ்சம் நியாயம் பேசுவார். நான் கொடுப்பதில் 'அந்த மாதிரி' எதுவும் இல்லை.
கண்னதாசனின் கவிதை - உங்கள் யூகம் சரிதான்.
பில் - அப்பாடி.. ஒன்றாவது உங்களுக்கு புதுசாக இருப்பதில் உவகை கொள்கிறேன்!
மலைவாசல் - இணையத்தில் PDF ஆகா கிடைக்கிறது.
நற்செய்தி, நற்செய்தி, நற்செய்தி! தெய்வமகன் படம் இரண்டு தரம் பார்த்தேன். தியேட்டரில் ஒரு தரம், சென்னைத் தொலைக்காட்சியில் ஒரு தரம். ஸ்ரீராம், சந்தோஷமா?
பதிலளிநீக்குஆஹா.. ஆஹா.... சந்தோஷம் சந்தோஷம்...
நீக்குமுதல்ல படம் பார்த்தபோது புரியாத்தால் இரண்டாம் முறை பார்த்தாரா இல்லை, என்ன என்ன குறைகள் என லிஸ்ட் எடுக்க இரண்டாம் முறை பார்த்தாரா?
நீக்குஹெக்ஹெஹெ, அதெல்லாம் இல்லை நெல்லை, ஒரு தரம் தியேட்டரிலே, ஓசிப் பாஸ். இன்னொரு தரம் தொலைக்காட்சி தயவில். :) இல்லைனா ஜிவாஜி படத்துக்கெல்லாம் விழுந்தடிச்சு ஓடற டைப்பா நாம? :))))
நீக்குவிழுந்தடிச்சு ஓடலைனாலும் அப்போல்லாம் விடாம பார்த்திடுவோம்.
நீக்குஒய்.ஜி. என்ன சொல்றார்னு கேட்கணும். பின்னர் வரேன் அதுக்கு.
பதிலளிநீக்குஜெயகாந்தனுக்கு சாகித்ய அகடமி பரிசு கிடைச்சிருக்கு என்பது எனக்குப் புது விஷயம். தகவலுக்கு நன்றி.
இந்த ஜியோ ஹாட் ஸ்டார் எனக்குக் கொடுத்திருக்காங்க. ஆனாலும் மொபைலில் வருவதில்லை. மடிக்கணினியில் ஜியோ தொலைபேசி எண் போட்டு லாகின் பண்ணினாலும் வருவதில்லை. சரினு விட்டுட்டேன். முன்னாடி இப்படித் தான் இன்னொரு ஹாட் ஸ்டாரும் தகராறு பண்ணினது! அது என்ன ஹாட் ஸ்டார்? ஏதோ பேர் வருமே. ம்ம்ம்? டிஸ்னி ஹாட் ஸ்டாரா? ஆமாம்னு நினைக்கிறேன்.
ஈ படம் பார்த்தேன் தொலைக்காட்சியில். பரவாயில்லை ரகம். அதில் சமந்தாவா? அதெல்லாம் தெரியாது. :) சரி, இந்தப்படம் எதிலாவது வருதானு பார்க்கிறேன்.
ஹூம், இந்தப் படம் தானே சாவித்திரியை முற்றிலும் கீழே தள்ளிக் குழி தோண்டிப் புதைத்தது. இப்போ நினைச்சாலும் மனசு வேதனைப் படும். :(
YGM ஜெ பற்றி சொல்கிறார். ஜெயகாந்தனுக்கு சா அ பரிசு கிடைத்தது தெரியாதா? என்ன அநியாயம்? எனக்கே தெரியும்!
நீக்குடிஸ்னி ஹாட்ஸ்டார் ஜியோ ஹாட்ஸ்டார் எல்லாம் ஒண்ணுதான். தாராளமா கடிக்கணினியில் அதை வாங்கலாம். வீட்டில் வல்லுநர்களை கலந்தாலோசிக்கவும்.
சாவித்ரி விஷயம் எனக்குத் தெரியாதே... என்ன அது?
சிலவற்றைப்பொதுவெளியில் சொல்ல முடியாது. ஆனால் இது அப்போவே பலரும் பேசிய ஒரு விஷயம். :(
நீக்குசாவித்திரியை கீழே தள்ளி குழி தோண்டி புதைத்தது 'பிராப்தம்' தானே? அவருடைய இமேஜை காலி செய்தது 'சுழல்' என்னும் மலையாளப் படம்.
நீக்குYessu!
நீக்குதெய்வ மகன் காட்சியில், மேஜரும் சிவாஜிக்கு இணையாக நடித்திருக்கிறார் இல்லையா? நானும் சிவாஜி ரசிகைதான் இருந்தாலும் தெய்வமகன்... வேண்டாம், எதுக்கு வம்பு?
பதிலளிநீக்குஅப்போதைய காலகட்டத்தை மனதில் வைத்துதான் சொல்ல வேண்டும். முட்களும் கற்களும் நிறைந்த ஒரு இடத்தில ஒருவர் ஒரு சாலையை போடுவார். பின்னால் வருபவர்கள் அதற்கு அழகு செய்து, ஓரங்கள் அமைத்து மரங்கள் நட்டு என்றெல்லாம் இம்ப்ரொவைஸ் செய்வார்கள். ஆனால் சாலையை அமைத்தது? அவர் கன்றாவியாக செய்திருந்தார். அப்புறம் மற்றவர்கள்தான் நன்றாக செய்தார்கள் என்ற பெயர்தான் மிஞ்சும்.
நீக்கு@Banumathi, என் வாயிலிருந்து வார்த்தைகளைப் பிடுங்கி இருப்பீர்கள். வேண்டாம், வேண்டாம். சுத்தமான ஜிவாஜி ரசிகை ஆன நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவும்.
நீக்கு// சுத்தமான ஜிவாஜி ரசிகை ஆன நீங்களே//
நீக்கு:-))
சாவித்திரியின் பிளஸ் அனாயாசமான நடிப்பு மற்றும் அந்த குழந்தை முகம். வேட்டைக்காரன் படத்தில் நடிக்கும் பொழுதே மதுவிற்கு அடிமையாகி விட்டாரோ? முகத்தில் குழந்தைத் தனம் இல்லாமல் பொதுபொதுவென்று இருக்கும்.
பதிலளிநீக்குஎம்.ஜி.ஆர். என்னோடு ஜோடியாக சாவித்திரியால் நடிக்க முடியாது என்று கூறியதால் அதை ஒரு சவாலாக ஏற்று சாவித்திரி இந்தப் படத்தில் நடித்தார் என்று சொன்னார்கள். ஆனால் சாவித்திரியும் எம்.ஜி.ஆரும் தண்ணீரும் எண்ணெயும் போல ஒட்டாமல்தான் இருப்பார்கள்.
சாவித்ரி நடித்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் மிஸ்ஸியம்மா.
நீக்குமாயா பஜார்? கை கொடுத்த தெய்வம் பார்த்து அசந்து போனேன். கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிக்கும் முன் ராதிகாவிடம் பாரதிராஜா "கை கொடுத்த தெய்வம்' படத்தில் சாவித்திரியின் நடிப்பை பார்த்துவிட்டு வா என்றாராம்". ஏன் அப்படி சொன்னார் என்பது அந்தப் படத்தை பார்த்தால்தான் புரியும். நவராத்திரியில் ஒன்பது சிவாஜி ஒரே ஒரு சாவித்திரி. அந்த தெருக்கூத்து கலைஞர்களாக இரண்டு பேரும் கலக்கியிருப்பார்கள். எனக்குத் தெரிந்து சிவாஜியோடு நடித்து, சிவாஜியை தூக்கி சாப்பிட்டது இரண்டு பேர்கள்தான். ஒருத்தர் நாகேஷ், இன்னொருத்தர் சாவித்திரி.
நீக்குதூக்கி சாப்பிட்டது என்கிற வார்த்தையில் சிவாஜியின் மீதான மறைந்திருக்கும் பாராட்டைப் பார்க்கிறேன்! உங்கள் கருத்தில் உடன்பாடு.
நீக்குமூன்றாம் பிறை படத்தில் ஸ்ரீதேவி அவ்வளவு பாடுபட்டு நடித்திருந்தும் கமலுக்குதான் விருது கிடைத்தது. படத்தில் அவருக்கு கிடைத்த சந்தர்ப்பம் ரொம்பக் குறைவு. ஆனால் அவர் செய்தது ஸ்ரீதேவி நடிப்பை எடுத்துக் காட்ட உதவியது.
நீக்குஉங்கள் அப்பாவின் கவிதைகளில் முதல் பகுதி படிப்பது சிரமமாக இருக்கிறது. அப்பா தனிமையில் வாடியது உங்களுக்கு அப்போது புரிந்ததா?
பதிலளிநீக்குஇல்லைதான். எழுத்துகளில் தெரிகிறது. நேரில் காட்டிக் கொள்ளவில்லை. நாங்கள் அழைத்தாலும் அவர் வந்து எங்களுடன் தடார்ந்து இருந்தததில்லை.
நீக்குகணக்குதானே வேண்டும்? என்று நீங்கள் பகிர்ந்திருக்கும் விஷயத்தை கணினியை சர்வீஸ் செய்ய வந்தவர் செய்ததாக சில மேடைப் பேச்சாளர்கள் கூற கேட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குமறைந்த என் மாமா கே ஜி எஸ் கூட சொல்வார்.
நீக்கு