கோடைக்கேற்ற
குளிர் பானம் - Mojito*
தேவையான பொருள்கள்:
தர்பூசணி பழச்சாறு - 800 ml.
Sprite. - 800 ml
புதினா - ஒரு கைப்பிடி
சர்க்கரை. - 1 டீ ஸ்பூன்
உப்பு - 1 டீ ஸ்பூன்
ஐஸ் கட்டிகள் சிறிதளவு
செய்முறை:
தர்பூசணியை மிக்ஸியில் சாறு எடுத்து வடிகட்டி கொள்ளவும்.
தர்பூசணி சாறு எவ்வளவு வருகிறது அதே அளவு Spriteஐக் கலக்கவும்.
புதினா, உப்பு, சர்க்கரை இவைகளை சிறிய உரலில் இடித்து அல்லது மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி வாட்டர்மிலன் ஜூஸோடு சேர்க்கவும்.
பிறகு அதில் ஐஸ்கட்டிகளை மிகக்க விட்டு ஆனந்தமாய் பருகுங்கள்.
Sprite கொஞ்சமாக சேர்த்து எலுமிச்சை சாறு சேர்த்து, எலுமிச்சம் பழத்தை மெல்லிய வட்டமாக கட் பண்ணி மிதக்க விட்டால் வேற லெவல் லுக்!
* Mojito என்பதை 'மொஜிடோ' என்று உச்சரிக்கத் கூடாது 'மொய்டோ' என்று உச்சரிக்க வேண்டும்(இது வேறயா? என்று கேட்காதீர்கள்).
================================================================================================
கொஞ்சம் பழைய சாதம்! 86 ஆம் ஆண்டு விகடன்
விகடன் 21.12.86 இதழில் 'எதற்கெடுத்தாலும் காலில் விழுவதா?' என்ற பேட்டி பற்றிப் படித்தேன். இந்த 'நாகரிகம்' பற்றி கிரேக்க நாட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சி..
அரிஸ்டாப்பஸ் எனும் கிரேக்க தத்துவ ஞானி (சாக்ரடீஸின் மாணவர்) - அன்று அந்நாட்டை ஆண்ட கொடுங்கோல் அரசன் டயோனிசியஸ் காலில் ஒரு முறை விழும்படியான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டது. நண்பன் ஒருவனுடைய உயிரைக் காக்கும் பணியில் கொடுங்கோலனின் காலில் விழுந்து கோரிக்கையை எடுத்துரைத்தார் அரிஸ்டாப்பஸ்.
இந்த இழிந்த நிலை கண்டு எள்ளி நகையாடிய நண்பர்களுக்கு பிற்பாடு ஒரு விளக்கத்தைத் தந்தார் அரிஸ்டாப்பஸ். "நான் அரசன் காலில் விழவேயில்லை. செய்தியை அவன் மூளைக்கு எட்டுமாறும் அவனது காதில் விழுமாறும், அவன் மூளைக்கு விண்ணப்பம் செய்தேன். கடவுள் அவனுக்குக் காதையும் மூளையையும் காலில் வைத்திருக்கிறார். நான் என்ன செய்வது?" என்றார் அவர். இவ் விளக்கம் காலம் கடந்து, இன்றும் பொருந்துமாறு அமைந்துள்ளது.
'கால் மூளையர்' இன்றுகூட நிரம்பியிருந்தால் யார்தான் என்ன செய்ய முடியும்? எது எப்படி இருந்த போதிலும் தாய்,தந்தை, ஆசான் அற்ற, மற்றவர் காலில் விழுவது ஈனமான செயலாகும் என நான் திண்ணமாக நம்புகிறேன். 'இந்தக் 'கால் மூளையர்' இனம் என்று மறைகிறதோ, அன்று நாடு முன்னேறும்.
-டாக்டர் கி. வேங்கடசுப்ரமணியன்,
புதுச்சேரி
==========================================================================================
கண்ணைக் கவர்ந்த காட்சிகளை சட்டென படம் பிடித்த தருணங்கள்..
இரண்டு பெரிய கழுகுகள் ஆதுரத்துடன் ஒன்றையொன்று தழுவிக் கொண்டிருப்பது போல இல்லை? வலது பக்கம் இருக்கும் பறவை ஆறுதல்தேடி இடது பக்கம் இருக்கும் பறவையின் நெஞ்சில் முகம் புதைக்க, இடதுபுற கழுகு ஆதுரத்துடன் அணைத்து ஆறுதல் கூறுகிறது!
வளைந்து திரும்பும் சாலை.. கொஞ்சம் சரிவாகக் கூட செல்கிறதோ....
அந்த மலையே ஒரு பெரிய மாளிகை / கட்டிடம் போலவும், பாதை அதற்குள் நுழையும் வாசல் போலவும் தோன்றவில்லை? மரங்களடர்ந்த அந்தச் சூழல் மனதை என்னவோ செய்யவில்லை? அமைதியைத்தேடி போவது போல..
வளைவில் சட்டென சாலை முடிந்திருந்தால்? சரேலென பெரிய சரிவாய் இருந்தால்? ஆனால் எல்லா திருப்பங்களும் திருப்பத்தைக் கொடுத்து விடுவதில்லை!
திரும்பியதும் ஒன்றுமில்லை.. இதுவும் ஒரு சாதாரண சாலைதான் என்று தெரியும்போது வருவது ஏமாற்றமா ஆறுதலா?
எதிர்பார்ப்புகளோடும் ஏமாற்றங்களோடும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது வாழ்க்கை - இந்த சாலையைப் போல..
முருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா வணக்கம்.
நீக்குநலமே வாழ்க..
பதிலளிநீக்குவாழ்க.. வாழ்க..
நீக்குஇன்றைய சாப்பாட்டுக் கடைக்கு நான் தான் முதல் பணி...
பதிலளிநீக்குபோணி பணியாகி விட்டதோ! அதுவும் சரிதான். சேவை!
நீக்குமொய்டோ...
பதிலளிநீக்குஎனக்கு ஒரு கிளாஸ் வெய்டோ!...
( வைங்கோ..)
உற்சாகங்கள் வாழ்க.
நீக்குநன்றி
நீக்குகாற்று அடைக்கப்பட்ட பானங்களில் கவனமாக இருக்கவும்..
பதிலளிநீக்குஇருந்துட்டா போச்சு!
நீக்குYessoo yessu. we never purchase those things.
நீக்குநானும் காற்று அடைக்கப்பட்ட பானங்கள் எ..ப..போ..தா..வ..து..தா..ன்.. எடுத்துக் கொள்வேன். நன்றி
நீக்குநேற்றிலிருந்து கருத்து போட முயற்ச்சித்தேன், கூகுள் அனுமதிக்கவில்லை, இப்போதுதான் அனுமதிக்கிறது. என்னவோ போடா ராகவா!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய திங்கள் பதிவில் குளிர் பானம் செய்முறை வித்தியாசமாக நன்றாக உள்ளது. முதல் படமே கவர்கிறது. படங்களும் செய்முறைகளும் நன்று. அந்த Sprite ரொம்ப விறுவிறுப்பாக இருக்குமே.! வெறும் தர்பூசணி ஜூஸ் எனக்கும் பிடிக்கும். இந்த மாதிரி சிலதை கலந்து சேர்த்தால் குழந்தைகள் விரும்பி அருந்துவார்கள்.
இதுவும் ஒருவகையில் "குலுக்கி" பானமோ..! (சகோ வெங்கட் நாகராஜன் அவர்களின் தளத்திலும் படித்து வந்தேன். இன்னும் அங்கு கருத்திடவில்லை.) இங்கு இன்றைய தலைப்பிலும் வெங்கடேஸ்வருடன்" என்ற வரி அதற்கு இணையாக ஒத்துப் போகிறது. ":)) ரசித்துப் ப(கு)டித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
நன்றி கமலா! வெங்கடேஸ்வருடன் இன்னும் திருத்தப்படவில்லை. ஸ்ரீராம் கவனிக்கவில்லை, உங்கள் கருத்தையும் படிக்கவில்லை என்று தோன்றுகிறது.
நீக்குDone. Corrected now.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபோணி தான்...
பதிலளிநீக்குகிறுக்குப் பிடித்த கூகிள் பணி என்றாக்கி விட்டது..
யார் என்ன சொன்னாலும் கேலி பண்ணினாலும் நானோ/அவரோ இந்த செயற்கைக் குளிர்பானங்களைக் குடிப்பதே இல்லை. எங்க பெண் கல்யாணம் ஆகி முதல் தரம் மும்பை போனப்போ எல்லோருமாகச் சேர்ந்து பெப்ஸி வாங்கிக் குடிக்க எங்களுக்கும் ஆளுக்கு ஒண்ணு கொடுத்தாங்க. நம்மவர் திட்டவட்டமாக மறுக்க, நான் ஒரு நாள்/ஒரே வேளை தானேனு குடிக்க அப்புறம் ஒரு மாசம் பட்ட பாடு! அதுக்கப்புறமா அதைத் தலை முழுகியாச்சு. இப்படித்தான் மாம்பலத்தில் தம்பி வீட்டில் இந்தக் குளிர்பானங்கள் பத்திப் பேச்சு வந்தப்போ தம்பி மனைவி என்னை அக்கா நீங்க அட்லீஸ்ட் பொவன்டோவானும் வாங்கி வைச்சுக்கோங்க. யாரானும் வந்தால் கொடுக்கலாம் என்றாள். நான் அதெல்லாம் கேள்விப்படவே இல்லைனு சொல்ல அது காளி மார்க்கோடது, இந்தியத் தயாரிப்பு, குடிச்சுப் பார்னு தம்பி வாங்கிக் கொண்டு வந்து கொடுக்க ஒரு வாய் விட்டுக் கொண்டதும் கண், காது, மூக்கு எல்லாம் ஜலப் பிரளயம். ஒரே ஏப்பம் அரை மணி நேரம். அப்படியே வைச்சுட்டேன். நம்ம ரங்க்ஸ் என்னைக் கன்னாபின்னாவெனத் திட்டினார். இந்த வயசிலும் நப்பாசையா என்று. அதுக்கப்புறம் அந்தத் திசையில் கூடப் படுக்கிறதில்லை.
பதிலளிநீக்குஎன்னுடைய அனுபவத்தைச் சொல்ல மட்டுமே இதை எழுதினேன். மற்றபடி பானுமதியின் புதுத் தயாரிப்புக்கு என்னுடைய பாராட்டுகள். நாங்களும் தர்பூஷணி ஜூஸில் புதினா, உப்பு, சர்க்கரை சேர்த்து வடிகட்டி அதில் சேர்த்துக் குளிர்சாதனப் பெட்டியில் அரைமணியோ ஒரு மணியோ வைச்சுட்டுக் குடிப்போம். சில சமயம் அதோடு ஆரஞ்சுச் சாறையும், மாதுளம் சாறையும் எடுத்துக் கொண்டு. ஐஸ் தயாரிக்கும் தட்டில் இது கொஞ்சம், அது கொஞ்சம்னு மாத்தி மாத்தி விட்டுட்டுப் பின்னர் ஒரு குச்சியைச் செருகி அதை ஐஸ் ப்ரூட் மாதிரிச் சாப்பிட்டிருக்கோம். ஆனால் இதெல்லாம் குழந்தைகள் கூட இருந்தவரை தான். குல்ஃபி ஸ்டான்டே வீட்டில் இன்னமும் இருக்கு. அதிலும் இம்மாதிரி ஜூஸ்கள் தயாரித்து விட்டு ஐஸ் ப்ரூட் மாதிரிச் சாப்பிட்டிருக்கோம். அல்லது வேறே ஏதானும் ஜூஸ் தயாரிச்சுட்டு அதில் இந்த ஐஸ் கட்டிகளை மிதக்க விடுவோம். இதெல்லாம் குழந்தைங்க பிறந்த நாளைக்கு வரும் குழந்தைகளுக்கான சிறப்புத் தயாரிப்பாக இருக்கும்.
பதிலளிநீக்குSpirite வேண்டாமென்றால் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம் கீதா அக்கா. நீங்கள் சொல்லியிருக்கும் விதத்தில் popsicle செய்து சாப்பிடலாம்.
நீக்குஅதனாலோ என்னமோ குழந்தைங்க பெரியவங்களா ஆகி அவங்க அவங்க வாழ்க்கையை வாழத் தொடங்கின அப்புறமா இதை எல்லாம் பண்ணவோ பண்ணிக் கொடுக்கவோ வீட்டில் யாரும் ரசிக்க இல்லை என்பதாலோ என்னமோ பண்ண முடியலை. எப்போவானும் மாங்கோ லஸ்ஸி அல்லது மாம்பழத்தைப் பாலோடு சேர்த்து அரைத்துனு பண்ணி ரங்க்ஸுக்குக் கொடுத்திருக்கேன். சர்க்கரை நோயாளி என்பதால் அவர் தயக்கத்துடன் அரைத் தம்பளர் மட்டுமே வாங்கிப்பார்.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநீங்கள் எடுத்த படங்களும், அதற்குரிய வரிகளையும் மிகவும் ரசித்தேன்.
முதல் படத்தில் தூரத்திலிருந்து பார்க்கும் போது அந்த மலைகள் கழுகுகள் போலத்தான் காணப்படுகின்றன. படத்தையும் அதற்கு தாங்கள் தந்த விளக்கத்தையும் ரசித்தேன்.
நீல வானமும், நின்று நிமிர்ந்திருக்கும் மலைகளும், ஓடி மறையும் யாருமற்ற சாலையுமாக படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. மிக மிக ரசித்துப் பார்த்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
தாங்களும் இன்று பிஸியா.? சகோதரர் நெ. தமிழரும் ஸ்ரீரங்கம் பயணம் போலிருக்கிறது.. இதுவரை காணவில்லையே.. அதனால் கேட்டேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.. இன்று நங்கநல்லூர் சென்று பல்லைக் காட்டி வந்தேன்!!!
நீக்குபடங்கள் அதுவும் சாலைப் பயணம் காரில் நான் மிகவும் ரசிக்கும் ஒன்று. ஆனால் இதெல்லாம் முதல் முறை அம்பேரிக்கா போனபின்னரே. அதுக்கு முன்னே சாலைப்பயணம் என்றால் கொஞ்சம் பயமாகவே இருக்கும். அதுவும் பேருந்துப் பயணம் எனில் கூடியவரை தவிர்த்துவிடுவேன். நாங்க ஊட்டியில் இருக்கையில் ஆரம்பித்தது இந்தக் காரில் போகும் சாலைப்பயணங்கள். பின்னர் அடிக்கடி என ஆகி இப்போதெல்லாம் பயணம் எனில் சாலைப் பயணம் அல்லது விமானப் பயணம் என்றாகி விட்டது. ரயிலைப் பார்ப்பதே படங்களில் தான்.
பதிலளிநீக்குஇது மாதிரி சொல்வதற்கும் நினைத்துப் பார்ப்பதற்கும் எனக்கும் ஷேர் ஆட்டோ, பஸ், ரயில் ஆகியவை உள்ளன!
நீக்குஎல்லாப் படங்களுமே அருமையாக வந்திருக்கின்றன என்றாலும் இந்தக் குறிப்பிட்ட சில படங்களின் காட்சியும் அதை ஒட்டிய உங்கள் கருத்தும் ரசிக்க வைக்கின்றன. மரங்கள் அடர்ந்த பாதையில் நுழையும் கார், வளைந்து செல்லும் சாலை, எனக்கு மலைப்பகுதி ஆரம்பித்ததும் செல்லும் சாலைகளின் போக்கு மிகவும் பிடிக்கும். தூரத்திலிருந்து நாம் உள்ளே நுழையும் முன்னரே ஏதோ ரகசியத்தைக் கட்டிக்காப்பாற்றப் போவது போல் தெரியும் சாலைகள் நாம் கடக்கக் கடக்கக் கடைசியில் வெறும் பாதையாகிப் போய் மறையும் விந்தை! சில இடங்களில் நடு நடுவே காரை நிறுத்திச் சுற்றுப் புறங்களைப் பார்க்கவென ஏற்பட்டிருக்கும் இடங்கள் எல்லாமே மனதில் ஒரு உற்சாகத்தை உண்டு பண்ணும்.
பதிலளிநீக்குஆஹா... இணையாக ரசித்திருப்பதற்கு நன்றி கீதா அக்கா.
நீக்குபடங்களும், அதற்கான கருத்தும் ரசிக்கும்படி இருக்கின்றன. நீங்கள் கழுகு என்று சொல்லியிருப்பது எனக்கு பெங்குயின் போல் தோன்றியது.
பதிலளிநீக்குஓ அப்படியா?
நீக்குமூன்றாவது படத்தில் நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் சரி.
பதிலளிநீக்கு__/\__
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குகுளிர்பானம் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குதர்பூசணி பழச்சாறு கோடை காலத்தில் குடிப்பேன். பிள்ளைகள் வரும் போது நீங்கள் சொன்ன முறையில் செய்து கொடுக்கிறேன் பானு.
குழந்தைகள் ரசிப்பார்கள். நன்றி கோமதி அக்கா!
நீக்குபயணத்தில் பார்த்த காட்சிகளும் அதற்கேற்ற வரிகளும் அருமை ஸ்ரீராம்.
பதிலளிநீக்கு//இரண்டு பெரிய கழுகுகள் ஆதுரத்துடன் ஒன்றையொன்று தழுவிக் கொண்டிருப்பது போல இல்லை? //
நல்ல கற்பனைக் காட்சி.
எனக்கும் பயணத்தில் படங்கள் எடுக்க பிடிக்கும்.
//எதிர்பார்ப்புகளோடும் ஏமாற்றங்களோடும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது வாழ்க்கை - இந்த சாலையைப் போல..//
வாழ்க்கை பயணம் இனிதாக போகட்டும்.
ஆள அரவம் அற்ற அந்த பாதை கல கல என்று பேசி சிரித்து கொண்டு பயணம் செய்பவர்களை எதிர்பார்த்து காத்து இருக்குமோ என்று தோன்றும்.
பதிலளிநீக்குகுளிர்பானம் செய்முறை நன்று.இளந் தலைமுறைக்கு பிடித்தமாக இருக்கும்.
பதிலளிநீக்குதர்பூசணி யூஸ் கோடைக்கு சிறந்தது செய்வோம்..ஸ்ப்ரைட் கலப்பதில்லை.
ஆமாம், இளைய தலைமுறைக்கு நிச்சயம் பிடிக்கும். sprite க்கு பதிலாக எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
பதிலளிநீக்கு