26.8.26

பாராளுமன்ற உறுப்பினர்களை அதிகரிப்பதால் யாருக்கு நன்மை? + சரோஜாதேவி பகுதி 13.

 

கேள்வி பதில்கள் :

நெல்லைத்தமிழன் : 

1. பாராளுமன்ற உறுப்பினர்களை அதிகரிப்பதால் யாருக்கு நன்மை?  எதற்காக அதிகரிக்க வேண்டும்?  நீங்கள் ஏதாவது நன்மையை அவர்களிடமிருந்து இதுவரை பெற்றிருக்கிறீர்களா?  

# தொகுதி மிகப் பெரியதாக இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர் அதில் உள்ள பிரச்சனைகளை சரியாக புரிந்து கொள்வது கஷ்டமாக இருக்கும். ஜனத்தொகை கம்மியாக இருக்கும் போது அப்படி இருந்திருப்பது நியாயம்தான் ஆனால் இப்பொழுது மக்கள் தொகை பெருகிவிட்டது. தேவைகளும் பெருகியிருக்கும். ஒரு தொகுதியில் என்ன மாதிரியான தொழில்களை கொண்டு வரலாம் என்பது போன்ற பிரச்சனைகளை நாடாளுமன்ற உறுப்பினர் தானே சொல்ல வேண்டும். 

எந்த நாளும் நாடாளுமன்ற உறுப்பினரோ சட்டமன்ற உறுப்பினரோ நேரடியாக ஒரு தனி நபருக்கோ குடும்பத்துக்கோ பிரச்சனைகளை தீர்த்து வைப்பது என்பது அசாத்தியம் தான். 

அந்தக் காலத்தில் மத்திய அரசு கொண்டுவரும் சட்டங்கள் சரிவர இருக்கின்றனவா தங்கள் தொகுதிக்கு நியாயம் கிடைக்குமா என்று பார்ப்பது மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களின் முக்கியமான வேலையாக இருந்தது. இப்போது எல்லாம் தலைகீழாக மாறிப் போய்விட்டது.

2.  நாம் இந்த இலவசத்தை வாங்கக்கூடாது, இது நமக்கானது அல்ல என்று நினைத்து, ரேஷன் கார்டுக்குக் கொடுக்கும் 2000 ரூபாய், இலவச தொலைக்காட்சி, மிக்சி போன்றவற்றை வாங்காமல் தவிர்த்திருக்கிறீர்களா?  

# இந்த 2000 எல்லாம் நான் வாங்கியது கிடையாது. உண்மையில் பல நாட்களுக்கு என்னிடம் ரேஷன் கார்டே இல்லை. ஆதார் வருவதற்கு முன்னால் ரேஷன் கார்டு தான் வாக்காளர் அடையாளத்திற்கு அடிப்படை ஆதாரமாக கொள்ளப்பட்டதால் ரொம்ப சிரமப்பட்டு வாங்கினேன். 

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் வேண்டாம் என்று சொல்லச் சொல்ல மிக்சி ஃபேன் கிரைண்டர் போன்ற விஷயங்கள் எங்கள் மேல் திணிக்கப்பட்டன. அதை வீட்டு வேலை செய்பவருக்கும் அறிந்த வேறு சிலருக்கும் கொடுத்து விட்டோம்.

& நான் ஓட்டுப் போட ஆரம்பித்த நாளிலிருந்து சென்னையில் இருந்த 40 வருட காலத்திலும் எந்த இலவசப் பொருளையோ அல்லது இவசங்களையோ வாங்கியது கிடையாது. 

3.  அப்போ இந்த உடுப்பி ஹோட்டல்ல சாம்பார் வடை போடுவான் பாரு,  பேப்பர் ரோஸ்டுன்னா அந்த ஹோட்டலுக்குத்தான் போகணும் ... என்றெல்லாம் நாம் சொல்கிறோமே.. அந்த ருசி இப்போது இல்லாததன் காரணம் என்ன?  

# இடுபொருட்கள் தரம் குறைந்து போனதுதான் முக்கியமான காரணம். அதுபோக லாபம் கருதி சின்ன சின்ன தந்திரங்கள் செய்து உணவு பண்டங்களை விற்கிறார்கள். இதுவும் ஒரு காரணம்.

& ஒருவேளை நமக்கு பசி இருந்த காலங்களில் அவை ருசியாகவும், பசி இல்லாத இந்தக் காலங்களில் அந்த அளவு ருசி இல்லாததாகவும் தோன்றுகிறதோ? 

4.  பொதுவா கதம்ப சாதம் (லெமென் ரைஸ், தேங்காய் சாதம், புளியோதரை போன்று), இட்லி போன்றவைகளைக் கண்டு நமக்கு அடுத்த தலைமுறை ஓடுவதன் காரணம் என்ன? நூடுல்ஸ் பாஸ்தா பீட்சாவில் ஆர்வம் கொள்வதன் காரணம் என்ன?   

# மாற்றத்தை விரும்புவது பேஷன் ஆகிவிட்டது. விளம்பர யுகத்தில் பல பொருட்கள் தரம் இல்லாமல் இருந்தும் பலமாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனையாகின்றன.

5.  கதை அம்சமுள்ள திரைப்படங்கள், நல்ல நகைச்சுவை, அருமையான மெலோடியஸ் பாடல்கள்-அவைகளைத் தந்த இசையமைப்பாளர்கள்.. இவைகளை அனுபவித்த கடைசித் தலைமுறை நாம்தான் என்று சொல்லமுடியுமா?

# சொல்லலாம். ஆனாலும் நல்ல கதை அம்சம் கொண்ட படங்கள் மிக மிகச் சொற்பம். இப்போதைய படங்களில் எனக்கு எரிச்சலை தூண்டுவது பயங்கரமான வன்முறைக் காட்சிகள், மலிவான நகைச்சுவை.

= = = = = = = = = =

படமும், பதமும். 

பானுமதி வெங்கடேஸ்வரன் :


ஹாரி பாட்டர் (Harry Potter) நாவல் எழுதப்பட்டு 25 வருடங்கள் ஆனதை கொண்டாடும் விதமாக கனடாவில் இருக்கும்,( உலகெங்கிலும்?) Tim Hortons உணவு விடுதிகளில் ஹாரி பாட்டர் கதையில் எந்தெந்த நிறங்களில் வீடுகள் குறிப்பிடப் பட்டிருக்கிறதோ அந்தந்த நிறங்களில் டோனெட்டுகளையும், குளிர் பானங்களையும் விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். 

எனக்கு டோனெட்  பிடிக்காமல்தான் இருந்தது, இங்கு வந்ததும் பிடித்து விட்டது.



== = = = = = = =   = = = = = = = =





ஆப்பிளை சூப்பர் மார்க்கெட்டில் பார்த்திருப்பீர்கள், வண்டிகளில்,லாரிகளில் கூவி விற்பதை பார்த்திருப்பீர்கள், வீட்டில் தட்டில் நறுக்கி வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள் மரத்தில் காய்த்து தொங்குவதை பார்த்தீருக்கிறீர்களா?அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஆப்பிள் விளையும் காலம் இதுதான். செப்டம்பர்,அக்டோபரில் அறுவடை காலம். இப்போது வெளியே செல்லும் பொழுது ஆப்பிள் தோட்டங்களை பார்த்தேன். காரில் வேகமாக செல்லும் பொழுது படம் எடுக்க முடியவில்லை. நடந்து சென்ற பொழுது கண்ணில் பட்ட மரங்களில் காய்த்து தொங்கிய ஆப்பிள்கள் நான் மட்டும் ரசித்தால் போதுமா?

நெல்லைத்தமிழன் : 

( சென்ற வாரப் பதிவில் கீதா சாம்பசிவம் மேடம் கேட்ட ஜெல்லி மீன்களை (படம்தான் !!) சுடச்சுட அனுப்பிவிட்டார் நெ த ) 


நாங்க பஹ்ரைன்ல இருந்தபோது எங்க டிபார்ட்மெண்ட் மாத்திரம் இரண்டு நாட்களுக்கு ஹவார் தீவுகள் (ஹவாய் இல்லை. பஹ்ரைன்லேர்ந்து கொஞ்ச தூரத்தில் இருக்கும் ஹவார் தீவு) சென்றிருந்தோம். அங்க தங்கறதுக்கு சாப்பிட என்று ஒரு பேக்கேஜ். போட்டில்தான் அந்த தீவுக்குப் போக முடியும். கால நிலையைப் பொறுத்து, சில சமயங்களில் கடலில் ஏகப்பட்ட ஜெல்லி மீன்கள் இருக்கும் என்று எழுதியிருந்தேன். இதுதான் அந்த ஜெல்லி மீன். நீங்க நிறைய சேனல்கள்ல பார்த்திருக்கலாம்.  உயிருள்ளவை. சில நேரங்கள்ல கரையோரமா இருக்கும்போது சட் என்று Tideனிலால் நீர் குறைந்தால், கரையில் இவை கிடக்கும். வெறும் காலில் பட்டது என்றால் அரிக்கும். கெட்டியா இருக்கும் சாதக் கஞ்சி மாதிரி இருக்கும். 

( கடவுளே - இனிமே சாதம் வடிச்ச கஞ்சியைப் பார்த்தாலே .. ஹக் .. )

சில நேரங்கள்ள ஆயிரக்கணக்கா பார்க்கலாம். இந்தப் படத்திலேயும் நிறைய தெரியும். படகின் இரண்டு பக்கமும் தண்ணீர்ல ஜெல்லி மீன்களைப் பார்க்கலாம். சில நேரங்களில் கடலின் வெப்பம் காரணமாகவோ இல்லை வேறு காரணமாகவோ இப்படி அளவுக்கதிகமான ஜெல்லி மீன்கள் வந்துவிடும். குடை மாதிரி அவை நீஞ்சும். மீன்கள் என்று குறிப்பிட்டிருக்கிறேனே தவிர அவை உணவுக்கானவை அல்ல. சில வெரைட்டிகள் நிறைய விஷத் தன்மை கொண்டவை. 


கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவற்றைக் காணலாம்.


இந்தப் படத்துல ஜெல்லி மீன் நன்றாகத் தெரியும். அது நீஞ்சும் அழகே நல்லா இருக்கும்.  இதற்காக என்னுடைய புகைப்படக் கடலைத் தேடினபோது எத்தனையோ நினைவுகள். ஒரு நாள் எழுதணும், படங்களுடன் பகிரணும். வாய்ப்பு வருதா என்று பார்ப்போம்.

= = = = = = = = = = =

KGG பக்கம் : 

சரோஜாதேவி தொடர் கதை 

சென்ற வாரம் - சுட்டி : பகுதி 12 : " நாநாவின் திட்டம் : MCEL 02 " 

இனி 

இந்த வாரப் பகுதி. 

பகுதி 13 : பாவனா டீச்சர் ! 

மறுநாள் காலை பாபாவிடம் வேறு சில வடநாட்டு கம்பெனிகளின் ஆண்டு அறிக்கைகளைக் கொடுத்து அவற்றை ஆராயும்படி சொல்லிவிட்டு கிளம்பினான் நாநா. காரை முரளீஸ் கஃபே வாசலில் நிறுத்தி விட்டு, உள்ளே சென்றான். 

சமையல் வேலைகளை மேற்பார்வை பார்த்து வந்த அறுஷ்காவிடம் பாபாவுக்கு வேண்டிய உணவுகளை தன் வீட்டுக்கு அந்தந்த நேரத்தில் அனுப்பச் சொன்னான். தானும் காலை உணவு முடித்து, கல்லாவில் உட்கார்ந்து இருந்த முரளியிடம் வந்தான். 

" முரளி - எக்ஸ்பர்ட் ஏகாம்பரம் கொடுத்த விவரமான எஸ்டிமேட் எடுத்துக் கொண்டு என்னோடு வாங்க. அரோகரா பாங்க் போய் மேனேஜரிடம் பேசி உங்களுக்கு லோன் கிடைக்க வழி செய்கிறேன்" என்றான். 

இருவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். 

காரில் போகும்போது நாநா முரளியிடம் மேனேஜரிடம் அவன் என்ன பேசப் போகிறான் என்பதையும் முரளி என்ன செய்ய வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதையும் விளக்கினான். 

பிறகு இருவரும் பாங்க் சென்றார்கள். 

******.  *** 
பாங்க் லோன் நாநா திட்டமிட்ட படியே வெற்றிகரமாக முடித்தான். 

முரளீஸ் கஃபே மேம்படுத்த கடன் கொடுக்க மேனேஜர் சம்மதித்தார். நாநா அந்த அரோகரா பாங்க்கில் மேனேஜர் சொன்ன தொகைக்கு பனானா எண்டர்பிரைசஸ் சார்பாக ஒரு ஃபிக்ஸட் டெபாஸிட் கணக்கு தொடங்கினான். மேலும் முரளி வாங்கும் கடன் தொகைக்கு கியாரண்டி கையெழுத்தும் போட்டான். 

*****.  ***** 
பாபா தனக்குக் கொடுக்கப்பட்ட ஆய்வு வேலைகளை சரியாக செய்து தான் கண்டு பிடித்த விவரங்களையும் அதை எப்படிக் கண்டு பிடித்தான் என்ற விவரங்களையும் பாவனாவிற்குச் சொன்னான். பாவனாவிடம் எந்த விஷயத்தையும் ஒரு முறை சொல்லிவிட்டால் போதும் - அதன் பிறகு அது போன்ற வேலைகளை அதுவே செய்யக் கற்றுக் கொண்டு நம்மிடம் சரி பார்த்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துவிடும். இதை ஏற்கெனவே நாநா பாபாவிடம் சொல்லியிருந்தான். 


விவரங்களைக் கேட்டுக் கொண்ட பாவனா சில சந்தேகங்களை பாபாவிடம் கேட்டு சந்தேகங்களை தீர்த்துக் கொண்டது. 

" ஓ கே பாபா இனிமேல் இந்த ஆய்வுகளை எப்படி செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். இனிமேல் இந்த வகை வேலைகள் வந்தால் அதை முதல் ஆய்வு நானே செய்து உனக்கு விவரங்கள் அனுப்புகிறேன். அதை நீ சரிபார்த்து, நாநாவுக்கு உன் ரிப்போர்ட் அனுப்பலாம்" என்றது. 

" அப்படியே செய்வோம்" என்றான் பாபா. 

பிறகு கேட்டான் " பாவனா இங்கு வேலைக்கு இருக்கும் தமெனா பள்ளிக் கூடத்தில் படிக்கின்றாளா?" 

"தமெனா பள்ளிக்கூடத்தில் படிக்கும் பெண்தான். ஆனால் இங்கு வேலை செய்பவள் இல்லை. அறுஷ்காவின் அண்ணன் பெண். ஒரு தடவை அறுஷ்காவுடன் இங்கே வந்த போது  தன்னுடைய சயின்ஸ் பாடத்தில் ஒரு சந்தேகம் வர அதை அவள் நாநாவிடம் கேட்டாள். நாநா தமெனாவிடம், அவளுடைய சந்தேகங்களை என்னிடம் கேட்கச் சொன்னார். தமெனா கேட்ட சந்தேகங்களை நான் தீர்த்து வைத்தேன். அப்போதிலிருந்து என்னுடைய டியூஷன் ஸ்டூடெண்ட் ஆகிவிட்டாள் தமெனா. காலையில் ஸ்கூலுக்கு போவதற்கு முன்பு ஒரு தடவை, மாலையில் ஸ்கூலிலிருந்து வந்த பின் ஹோம் ஒர்க் செய்யும்போது, விடுமுறை நாட்கள் என்று எல்லா நாட்களிலும் டியூஷன் படிக்க வந்துவிடுவாள். வரும்போது அவளுடைய அறுஷ்கா அத்தைக்கு உதவியாக வீடு பெருக்குவது, தரை மெழுகுவது, வாசல் தெளிப்பது, கோலம் போடுவது எல்லாம் செய்வாள் . அதுதான் அவள் கொடுக்கும் டியூஷன் ஃபீஸ். நாநா வேண்டாம் என்று சொன்னாலும் கேட்கமாட்டாள்! " 

" பாவனா - உன்னை தமெனா எப்படி கூப்பிடுவாள்?"

" அக்கா என்றோ பாவனாக்கா என்றோ கூப்பிடுவாள்" 

" உனக்கு தமெனாவைவிட அதிக வயதா?"

" ஹ ஹ ஹா அதெல்லாம் இல்லை . உங்கள் கணக்குப்படி எனக்கு இன்னும் இரண்டு வயது கூட ஆகவில்லை. நாநா என்னை உருவாக்கி பாவனா என்று பெயர் வைத்தது 21 மாதங்களுக்கு முன்புதான்!" 

" ச்சே நீ 21 மாதக் குழந்தையா? எப்படி இவ்வளவு விஷயமும் தெரிந்துகொண்டாய்? " 

" உருவாக்கப்பட்ட உடனேயே ஆடியோ வீடியோ இவற்றின் மூலம் மெமரிக்கு விவரங்களை ஏற்றிக் கொள்வது, மெமரியில் இருந்து பேச்சு எழுத்து மூலமாக மற்றவர்களுடன் உரையாடுவது எல்லாம் தெரிந்து கொண்டேன். பிறகு ஒரே நாளில் உலகில் உள்ள ஏ ஐ படிப்புகள் எல்லாம் படித்துவிட்டேன். நாநா எனக்காக ஒரு ஸிம் கார்ட் வாங்கி என்னுடைய ஸிஸ்டத்தில் இணைத்துவிட்டதால் என்னை எங்கிருந்தும் பனானா எண்டர்பிரைசஸ் ஆட்கள் தொடர்பு கொண்டு எனக்கு தகவல் அனுப்பி அல்லது வாய்ஸ் கால் வீடியோ கால் வழியாக தகவல் பெற முடியும்." 

" பாவனா உன்னுடைய மொபைல் எண் என்ன?"

" உன்னுடைய மொபைல் எண்ணுக்கு அனுப்பியுள்ளேன். பாத்துக்கோ" 

" பாவனா எனக்கு ஜெர்மன் பாஷை கற்றுக் கொள்ள ஆசை. உனக்கு ஜெர்மன் மொழி தெரியுமா?" 

" தெரியுமாவா! நான் கல்லாதது இந்த உலகில் இல்லாதது. உன்னுடைய மொபைலுக்கு ஜெர்மன் மொழி முதல் பாடம் அனுப்பியுள்ளேன். பார்த்துப் படித்து தெரிந்துகொண்டு பாடத்தின் இறுதியில் உள்ள கேள்விகளுக்கு பதில் ஒரு பேப்பரில் எழுதி எனக்கு அனுப்பு. அதில் பாஸ் செய்தால் அடுத்த பாடம் அனுப்புகிறேன்." 



*****      *******    ******** 

நாநா வீட்டுக்கு வந்த பிறகு பாபா தன்னுடைய வீட்டிற்கு புறப்பட்டான். 

(தொடரும்) 

96 கருத்துகள்:

  1. டோனட்டை பிடிக்காமல் இருந்ததா? ஆச்சர்யம்தான். பஹ்ரைனில் வித வித டோனட்டுகள் நிறைய கடைகளில் (இதற்காக உள்ள ஸ்பெஷலைஸ்ட் கடைகள்) கிடைக்கும். பசங்களுக்கு மினி டோனட் பிடிக்கும். எனக்கு, ஜாம்லாம் வைத்த பலவித டோனட் பிடிக்கும்.

    அடிக்கடிலாம் வாங்கித் தரமாட்டேன். மாதம் ஒரு தடவை என்றாலே அதிகம்தான். காரணம் பசங்களுக்கு எடை போட்டுவிடும், ஹெல்த்துக்கு நல்லதல்ல என்ற பயம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டோனட் அடித் தொண்டையில் ஒரு அசட்டுத் தித்திப்பு தித்திக்கும் அதனால் பிடிக்காது. இங்கு அப்படி இல்லை, அதனால் பிடிக்கிறது. மினி டோனெட் மிகவும் சுவை. என் மகள் இந்த ஊரில் ஏதோ ஒரு பிராண்ட் டோனெட் மிகவும் நன்றாக இருக்கும் என்றாள். ஒரு முறை சாப்பிட வேண்டும்.

      நீக்கு
    2. // என் மகள் இந்த ஊரில் ஏதோ ஒரு பிராண்ட் டோனெட் மிகவும் நன்றாக இருக்கும் என்றாள். ஒரு முறை சாப்பிட வேண்டும்.//

      இன்னுமா சாப்பிட்டுப் பார்க்கவில்லை!!

      நீக்கு
    3. பா.வெ. மேடம்... நம்ம ஊரில் ஒரு வழக்கம் இருக்கு. ஹிமாச்சல் பிரதேஷுக்கு டூர் போனா அங்க எங்க இட்லி தோசை கிடைக்கும்னு தேடி சாப்பிட்டுவிட்டு நம்ம ஊர் போல இல்லைனு சொல்றது. நல்ல வேளை நம்ம மக்கள் முன்ன பின்ன சப்பாத்தி, பராந்தாலாம் சாப்பிட்டதில்லை என்பதால் நம்ம ஊர் சப்பாத்தி நார்த் இன்டியன் சைட் டிஷ், ஆஹா ஓஹோ என்பார்கள். மேற்கத்தைய டோனட்டை சென்னையிலும் பெங்களூரிலும் சாப்பிட்டால் எப்படி இருக்கும்?

      நீக்கு
    4. //மேற்கத்தைய டோனட்டை சென்னையிலும் பெங்களூரிலும் சாப்பிட்டால் எப்படி இருக்கும்?// மஸ்கட்டில்தான் முதன்முதலாக சாப்பிட்டேன், பிடிக்கவில்லை. சென்னையிலோ, பெங்களூரிலோ சாப்பிட்டதே இல்லை.

      நீக்கு
    5. டோநட் என்றால் இனிப்பு வடைதானே? பாதுஷா போன்ற டேஸ்ட் இருக்குமோ?

      நீக்கு
    6. நம்மளாலானது இன்று பா.வெ மேடத்தை வம்புக்கிழுப்போம்

      டோனட்லாம் சின்னவங்களுக்கு. பெரியவங்களுக்குப் பிடிக்காது. 45 வயசிலேயே எனக்குப் பிடிக்கலை

      பாருங்கள் கேஜிஜி அதை இனிப்பு வடைங்கறார். மோமோஸை மைதா பிள்ளையார் கொழுக்கட்டை என்பாரோ ஆம்

      நீக்கு
    7. அப்பிடீன்னா மோமோஸ் காரக்கொழுக்கட்டை இல்லையா!

      நீக்கு
    8. ஒரு விதத்தில் ஐரோப்பிய அம்பேரிக்க நாடுகளின் பாதுஷானு சொல்லலாமோ? ஒரே ஒரு முறை 2004 ஆம் ஆண்டில் ஒரு துளி கிள்ளி வாயில் போட்டுக்கொண்டேன். அப்புறமா அது இருக்கும் பக்கமே திரும்பிப் பார்த்தது இல்லை.

      நீக்கு
    9. உண்மையைச் சொன்னா டோனட் ரொம்ப நல்லாருக்கும். அதனுடைய லோகல் சுமார் வெரைட்டிதான் பால்பன்.

      எடை அதிகமாகும் என்பதைத் தவிர சாதா டோனட் சூப்பர். அதை அலங்காரம் பண்ணறேன்று வர வெரைட்டி எனக்குப் பிடிக்காது.

      இந்தியா வந்தப்பறம்தான் அதன் செய்முறை, எண்ணெய்ல பொரிப்பாங்கன்னுலாம் தெரியும்.

      நீக்கு
  2. ஆப்பிள்கள் காய்த்துத் தொங்கும்போது ஹிமாச்சல் பிரதேஷுக்குச் சுற்றுலா போகணும், அப்போ பறித்த ஆப்பிள்களைச் சாப்பிடணும் என்றெல்லாம் ஆசை. எப்போ வாய்ப்பு அமையுமோ.

    எனக்கு மரங்களை, அதிலும் காய், பழ மரங்களை வெட்டினால் பிடிக்காது. எங்கள் வீட்டில் இருந்த ஆறு வித வித மாமரங்களையும் தம்பி வீடு கட்ட வெட்டியது எனக்கு ரொம்பவே வருத்தம்.

    துளசி டீச்சரின் தொடரில், அவர் தற்போது இருக்கும் வீட்டைக் கட்டும்போதுஆப்பிள் மரங்களை வெட்டிவிட்டோம் என எழுதியதைப் படித்தபோது, அட்டா இப்படிப் பண்ணிட்டாங்களே என நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு ஆப்பிள் பிடிப்பதில்லை! எனவே இந்தப் பிரச்னை எனக்கில்லை!

      நீக்கு
    2. தஞ்சாவூரில் கான்வென்ட்லாம் இல்லையா ல்லை அப்பா அதில் படிக்க வைக்கவில்லையா? An apple a day keeps the doctor away என்ற பொய்யை நம்பியாவது சாப்பிட்டிருப்பீங்க.

      நீக்கு
    3. அங்கணதான் பட்ச்சேன்.  ஆப்பிளு  மின்னால தின்னுருக்கேன்...   இப்ப இப்ப ஆவுறதில்ல... 

      நீக்கு
    4. ஆப்பிள் அனாவசியமாக அதிக விலை. வேல்யூ இன்ஜினியரிங் தெரிந்திருப்பதால் என் பார்வையில் it is not worth.

      நீக்கு
    5. இந்தியாவிலேயே ஆப்பிள் மரங்கள் காய்த்துத் தொங்குவதைப் பார்க்கலாமே! எனக்கு என்னமோ ஆப்பிள் அவ்வளவாப் பிடிப்பதில்லை. மாவு மாதிரி இருக்கும் ஆப்பிள் எனில் கொஞ்சம் பரவாயில்லை ரகம். கொஞ்சம் புளிச்சால் உடனே ஊறுகாய் போட்டுடுவேன் அல்லது சாதம் கிளறிடுவேன். துருவிட்டு சாலட் பண்ணிடுவேன்.

      நீக்கு
    6. ஐயோ பாவம் சாம்பசிவம் சார். எவ்ளோ நாள் பச்சை ஆப்பிள் ஊறுகாயை மாங்காய் ஊறுகாய்னு நினச்சுச் சாப்பிட்டிருக்கிறாரோ ஹா ஹா

      நீக்கு
    7. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அவரே எத்தனையோ தரம் புளிப்பு ஆப்பிளை சாலட் அல்லது ஊறுகாய் போட்டுடுனு சொல்லி இருக்கார். :P

      நீக்கு
    8. ஒரு தரம் ஆப்பிள் எசென்ஸ் எல்லாம் ஊத்திட்டு ஜாம் மாதிரிக் கூடப் பண்ணிப் பார்த்தேன். போணி ஆகலை. :(

      நீக்கு
  3. பாவனா, தமன்னா அனுக்கா... ஏஐ இவர்கள் சாயலில் படங்கள் கொடுக்கலை போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. " நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா?" என்று வாணி ஜெயராம் குரலில் பாடும்!

      நீக்கு
    2. பாவனா ஏ ஐ - நினைத்த உருவத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கும்!

      நீக்கு
  4. இங்கு apple orchard களில் செப்டம்பெர், அக்டோபர் மாதங்களில் 'pick your own apple' என்று அனுமதிப்பார்களாம். நுழைவு சீட்டு பெற்றுக் கொண்டு உள்ளே சென்று நாமே மரத்திலிருந்து பறித்துக் கொள்ளலாம். .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதையெல்லாம் காணொளியில் பார்த்திருக்கிறேன். ஸ்ட்ராபெர்ரி என்றால் இருபதை பறிக்கும்கோதே லபக்கலாம். இவ்வளவு டாலர் கொடுக்கிறோமே என நினைத்து அதிகபட்சம் ஒரு ஆப்பிளுக்கு மேல் அங்கேயே லபக்க முடியாதே

      நீக்கு
    2. //இவ்வளவு டாலர் கொடுக்கிறோமே என நினைத்து அதிகபட்சம் ஒரு ஆப்பிளுக்கு மேல் அங்கேயே லபக்க முடியாதே// ஹா ஹா,உங்களுக்குத்தான் இப்படியெல்லாம் தோன்றும். பல வருடங்களுக்கு முன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்ற ஒரு நண்பர் அங்கு, ஆரன்சு, திராட்சை தோட்டங்களில் உள்ளே சென்று பார்க்க அனுமதிப்பார்களாம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாமாம், பேக் பண்ணி கொண்டு வர முடியாதாம்.

      நீக்கு
    3. *ஓரு நண்பர் சொன்னது என்று வந்திருக்க வேண்டும்.

      நீக்கு
    4. ச்சே ! இந்தியாவுல பொறந்து வளர்ந்து என்ன சுகத்தைக் கண்டேன்!

      நீக்கு
    5. grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr :))))))

      நீக்கு
    6. இந்தியாவிலும் ஹிமாசல் ப்ரதேஷ், உத்தராகண்டில் சில இடங்களில் என ஆப்பிள் தோட்டத்திற்குச் சென்று ஆப்பிள்களைப் பறித்துச் சாப்பிடலாம். நாங்க குஜராத்தில் அலுவலகத்தின் மொத்த நபர்களோடு பிக்னிக் போனப்போ ஒரு கிராமத்தில் அந்த கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவரின் விருந்தினர் விடுதியில் தங்கிச் சமைத்துச் சாப்பிட அனுமதி கொடுத்திருந்தார்கள். வயலுக்கு நடுவில் உள்ள ஒரு கட்டிடமே விருந்தினர் விடுதி. அங்கே பக்கத்திலேயே அதாவது அந்த அறையை விட்டு வெளியே வந்தால் காய்கறித் தோட்டங்கள். செழிப்பான காய்கள். தண்ணீர் வரத்தே இல்லாத (அப்போதைய காலம் தொண்ணூறுகளில்) அந்த இடத்தில் பச்சைப்பசுமையான காய்கள். எங்க சமையலுக்குப் பறிச்சுக்கச் சொன்னாங்க. கத்திரிக்காய் ரொம்ப நல்லா இருந்தது. நம்ம ரங்க்ஸுக்கு அதைப் பார்த்ததும் ஒரு ஆசை. எப்படித் தெரிஞ்சுண்டாங்களோ கிளம்பும்போது சுமார் ஒன்றரைக் கிலோ கத்திரிக்காய் எங்களுக்குக் கொடுத்தாங்க.

      நீக்கு
  5. கனடா என்ரு வந்திருப்பதால் வாசகர்கள் பா.வெ. என்று புரிந்து கொள்வார்கள் என்று நினைத்து விட்டீர்கள் போலிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆப்பிள் படம் மாத்திரம் பார்த்தவுடன் சந்தேகம் வந்தது. பிறகு உடனே புலம் பெயர்ந்த பழம் பெரும் எழுத்தாளர் எனப் புரிந்துவிட்டது

      நீக்கு
    2. //புலம் பெயர்ந்த // வந்து கொண்டே இருக்கிறேன்.
      //பழம் பெரும் எழுத்தாளர் // கர்ர்ர்ர்

      நீக்கு
    3. @ஸ்ரீராம்: சாதாரணமாக படத்தோடு அதை அனுப்பியவர் பெயரும் போடுவீர்கள், இன்று மறந்து விட்டீர்கள்.

      நீக்கு
    4. நெல்லையின் பதில் கண்டு பெயர் சேர்த்து விட்டேன்.

      நீக்கு
    5. தவறு என்னுடையது. மன்னிக்கவும்.

      நீக்கு
    6. நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. சென்ற வாரம் யதேச்சையாக பழைய புதன் பதிவை பார்க்க நேர்ந்தது. எத்தனை பேர்கள் கூடி கும்மி அடித்திருக்கிறோம்? முக்கிய காரணம் ஏஞ்சலும்,ஆதிராவும். "எங்கும் நிறைந்தாயே இன்று எங்கு மறைந்தாயோ?"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ​அதனுடன் கூட கீதா ரெங்கன்... அதிரா மகன் மருத்துவராயிருப்பார்.  ஏஞ்சல் பெண் என்ன படித்துக் கொண்டிருந்தார் என்று நினைவில்லை.  அவர்களுக்கு பிளாக் போர் அடித்து விட்டது போலும்.

      நீக்கு
  7. பதிவுகளில் பதிவிடும் விஷயங்களில் நிறைய காலத்திற்கேற்ப. மாறுதல்களைப்.பார்க்கிறேன். இது வரவேற்க வேண்டிய விஷயம். Survival தத்துவம்.
    ஆனால் பின்னூட்டங்கள் மாமாங்க காலமாய் மாறாமல் இருக்கிறது. பதிவுகளுக்கு கருத்து சொல்கிறவர்கள் சொல்கிறதை விதவிதமாக மாற்றிச் சொல்ல இன்னும் பழகவில்லை. இவர் பின்னூட்டம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று ஒரு பதிவு போட்டு விடலாம் என்கிற அப்படி அப்படியே மாறாமல் இருக்கிறது. வருங்காலத்தில் இதில் மாற்றம் ஏற்பட்டால் புது தோற்றப் பொலிவைக் கொடுக்கிற மாதிரி ஒட்டு மொத்த எபியின் அழகும்.மாறும். இது காலத்தின் கட்டாயம். ஏதோ சொல்லத் தோன்றியது. குடும்ப அபிமானத்தில் சொல்லி விட்டேன். யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி சார்.... சொல்றேன்னு மத்தவங்களும் தவறா நினைக்க வேண்டாம். காலத்துக்கேற்றபடி மாறுகிறேன் என்று அம்மாமிகள் பேன்ட் டி ஷர்ட் லெக்குன்ஸ் போட்டுக்கற மாதிரியும், மாமாக்கள் அரை டவுசரில் சுத்தற மாதிரியும், பார்க்கச் சகிக்காது என்பது என் எண்ணம். எழுத்து எண்ணத்திலிருந்து பழக்கத்திலிருந்து ஐடென்டிடியிலிருந்து வருவது. மாற்றினால் நல்லா இருக்காது.

      நீக்கு
    2. ?ர்ஸா விஜீ ள்கர்றீ கிக்ர்பார்திஎ றுன்எ ம்டுண்வேகக்ருஇ டிபப்எ ல்றான்எ ம்றற்மா

      நீக்கு
    3. :ம்ராஸ்ரீ)))) ஜெர்மன் மொழி என்று நினைத்தேன்!

      நீக்கு
    4. ஹெஹெஹெ, இப்படியும் மாறிக்கலாமா? :)))))))))))

      நீக்கு
    5. நெல்லை. நீங்க கூட சனி, ஞாயிறு பதிவுகளுக்கு மட்டும் பஞ்சகச்ச குஷிட்டிக் தரித்து மற்ற நாட்களுக்கு அரை டிராயர் மாட்டிக்கறீங்களே!
      ஹஹ்ஹஹா..(இந்த வெடிச்சிரிப்பு கூட உங்க கிட்ட கைமாத்தா வாங்கினது தான்!)
      அட! இந்த நேரத்தில் கூட நான் அரை டவுசர்--ஸ்லாக் தான்! காலை நடைபயிற்சி, காலை 5000 ஸ்டெப்ஸூக்குக் குறையாமல்.. மாலை 5000
      உடம்பில் வெயில் உரைக்க வேண்டும்! (இலவச விட்டமின் D) இது அடிப்படை தேவை.
      இங்கெல்லாம் பேண்ட் --சட்டைன்னா அது அலுவலக அலங்காரம்!

      நீக்கு
    6. குஷிட்டி -- வேஷ்டி.

      நீக்கு
    7. // குஷிட்டி -- வேஷ்டி.// ஜெர்மன் மொழியிலா?

      நீக்கு
  8. ஜெர்மன் மொழி கற்றுக்கொள்வதைப் பற்றி பிறகு எழுதறேன். சுலபமான ஹிந்தி படிக்க அடம் பிடிச்சவங்கள்லாம் வேற வழியில்லாமல் பிற நாட்டு மொழியைப் பிழைப்புக்காக்க் கற்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  9. ஓணம் வாழ்த்துகள் ஜே.கே.சி.சார், துளசிதரன் மற்றும் எல்லோருக்கும்.

    பதிலளிநீக்கு
  10. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  11. முதல் கேள்விக்கான பதில் சிறப்பு.
    நானும் இலவசங்களை பெற்றதில்லை. ரேஷன் கார்ட் கிடையாது. இருந்தாலும் வாங்கியிருக்க மாட்டேன். எங்கள் குடியிருப்பின் அசோஷியேஷனில் அப்போது தலைவராக இருந்தவர், " நாமெல்லாம் இலவச டி.வி. போன்றவைகளை பெற்றுக்கொள்ளக் கூடாது" என்று வேண்டுகோள் விடுத்தார்.

    பதிலளிநீக்கு
  12. இன்றைய இளைஞர்களுக்கு பீஸா,பர்கர்,பாஸ்தா போன்றவை பிடிக்கும் அளவிற்கு நம்முடைய பாரம்பரிய உணவுகள் ஏன் பிடிப்பதில்லை? என்ற கேள்வி எனக்கும் வரும். அதைப்போல இளம் பெண்கள், சமைக்க கற்றுக்கொள்ள துவங்கும் பொழுது, வட இந்திய உணவுகள், பேக்கரி ஐட்டம்கள்தான் கற்றுக் கொள்ள விரும்புகிறார்கள், அதுவும் ஏன் என்று தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுலப உணவுகள் என்பதாலோ அதிக மனித உழைப்பு, நேரம் தேவை இருக்காது என்பதாலோ இருக்கலாம்.

      நீக்கு
    2. நம் பாரம்பரியச் சமையல் முறையே முற்றிலும் மாறி விட்டது. அதோடு இப்போதெல்லாம் பெரும்பாலும் யூ ட்யூபில் இருந்து சமையல் கத்துக்கறதாலே அதிலே என்னென்ன போடறாங்களோ அதையே இவங்களும் போடறாங்க. உதாரணமாகத் தோசைக்குத் தக்காளிச் சட்னி அரைப்பது எனில் மி.வ.தக்காளி, கடுகு, உ.ப. பெருங்காயம், தேவையானால் சுண்டைக்காய் அளவுப் புளினு வைப்போம். அதை எல்லாவற்றையும் நன்கு வதக்கிப்போம். சட்னி அரைச்சுக் கடைசியில் கடுகு.உ.பருப்பைப் போட்டு ஒரு சுத்துச் சுத்திட்டு எடுப்போம். இப்போ அப்படி எல்லாம் இல்லை. தக்காளி வதக்கும்போதே கூடவே வெள்ளரிக்காய், காரட், சில சமயம் வெண்டைக்காய்னு சேர்த்து வதக்கறாங்க. தாளிதத்தில் போடும் கடுகு, உபருப்போடு கடலைப்பருப்பும் சேர்த்துக் கொண்டு ஒரே ஒரு மி/வத்தல் அல்லது அரை மி.வத்தல் போட்டுட்டு மேற்சொன்ன வதக்கலோடு கூடவே ஒரு கட்டுக்குக் குறையாமல் கொ.ம., புதினா சேர்த்துட்டு அரைக்கிறாங்க. பச்சைப் பசேல்னு கொ.ம. புதினா வாசனையோடு அதை மட்டும் அரைச்சுச் சாப்பிட்ட எப்படி இருக்கும்? அப்படித் தான் இருக்கு இந்தச் சட்னியும். தோசைக்கோ சப்பாத்திக்கோ தொட்டுக்கவே முடியாது.

      நீக்கு
    3. பிட்சா பேஸ் வாங்கி வீட்டிலேயே அவனில் வைச்சுப் பண்ணிக் கொடுத்திருக்கேன். அப்போல்லாம் வீட்டிலேயே அவன் இருந்ததால் குழந்தைகள் பிறந்தநால் கேக்கைக் கூட வீட்டிலேயே பண்ணியது தான். மாமியார், மாமனார் கூடவே இருந்ததால் முட்டை சேர்க்காமல் பண்ணுவேன். கன்டென்ஸ்ட் மில்க் டப்பா எப்போவுமே வைச்சிருப்பேன். இதெல்லாம் இப்போ நினைச்சுக் கூடப்பார்க்க முடியாது. ப்ரெட்/ பாவ் பாஜிக்கான பாவ் இவற்றில் உருளைக்கிழங்குக் கார மசாலா வைச்சு ஹாட் டாக் எனப்படும் ப்ரெட் (கொஞ்சம் பர்கர் மாதிரினு சொல்லலாமோ?) பண்ணுவேன். இது அடிக்கடி பண்ணி இருக்கேன். அவனிலேயே இட்லிக் குக்கரின் இட்லித் தட்டுக்களை வைச்சு வீட்டிலேயே பன் பண்ணுவேன். இப்போல்லாம் ப்ரெட் சாப்பிடுவதே கஷ்டமா இருக்கு. :(

      நீக்கு
    4. செய்முறை வெளிநாடுகளிலிருந்து வந்திருந்தாலும் ப்ரெட் சுவையும், மிருதுவும் இந்தியாவில் தான். ஈடு,இணை இல்லை.

      நீக்கு
    5. இதுக்கெல்லாம் காரணம் பெண்கள்தாம். வீட்ல சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு எப்போப் பாத்தாலும் கலந்த சாதம், இட்லி, தோசை, சாம்பார், ரசம்னு சின்னப் பசங்களுக்குப் போட்டுப்போட்டு, மாறுதல்னு நினச்சிக்கிட்டு அரிசி, ரவா உப்புமா வெரைட்டின்னு போட்டு, அடுத்த தலைமுறை பாரம்பர்ய உணவைக் கண்டால் காத தூரம் ஓடறாங்க.

      நீக்கு
    6. //கலந்த சாதம், இட்லி, தோசை, சாம்பார், ரசம்னு சின்னப் பசங்களுக்குப் போட்டுப்போட்டு, மாறுதல்னு நினச்சிக்கிட்டு அரிசி, ரவா உப்புமா வெரைட்டின்னு போட்டு,//

      இதெல்லாம் பெண்களின் சோம்பேறித்தனத்தால் பண்ணினாங்களா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    7. கீசா மேடம்...சும்மா ஜாலிக்குத்தான் எழுதினேன். உண்மையில் பெண்கள், காலைல கணவனை ஆபீஸுக்கும் குழந்தைகளை பள்ளி பஸ்ஸுக்கும் அனுப்பறவரை ரொம்பவே கடுமையான வேலைகள் இருக்கும். பசங்களுக்கு ஹோம் ஒர்க், புக்ஸ், வாட்டர் பாட்டில்... என்று ஏகப்பட்ட கவனிப்பு. இதுல கணவருக்கு காஃபி, காலைச் சமையல், பசங்களுக்கு கட்டிக்கொடுக்கறது.... ரொம்பவே வேலை. இதுல அவங்களும் வேலைக்குப் போறதுன்னா... பாவம்தான்

      நீக்கு
    8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  13. அந்தக் காலமோ, இந்தக் காலமோ வெளியாகும் படங்களுக்கும்,வெளியானதில் தரமான படங்களுக்கும் இடையே உள்ள ரேஷ்யூ ஒன்றாகத்தான் இருக்கும். அப்போது நாம் அதிகம் படங்கள் பார்க்க மாட்டோம், இப்போது ஓ.டி.டி. உபயத்தில் நிறைய படம் பார்க்கிறோம், அதனால் நல்ல படங்கள் குறைவது போல தோன்றுகிறது. வன்முறை கொஞ்சம் அதிகம்தான். பாடல்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை.

    படமும் பதிவும் பகுதி படங்கள் நன்றாக உள்ளது. சகோதரர் நெல்லைத்தமிழர் அவர்கள் அனுப்பிய படங்களும், சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் ஆப்பிள் மர படங்களும் நன்றாக உள்ளது.

    மீன்கள் கண்காட்சிகளில் இந்த ஜெல்லி வகை மீன்களை பார்த்துள்ளேன்.படங்களும் எடுத்ததாக நினைவு.

    டோனட் பார்க்க இனிப்பு வடை போலத்தான் உள்ளது. சுவை இன்னமும் அறிந்ததில்லை. குழந்தைகள் வாங்கி சாப்பிடும் போது ஒரு விள்ளல் எனக்கும் தந்திருக்கலாம். அதுவும் அவ்வளவாக நினைவில் இல்லை.

    இந்த வார கதைப்பகுதியை மொழி கற்றலில் நகர்த்தி விட்டீர்கள். இனி பாவனா ஜெர்மன் மொழி வாராவாரம் கற்று தருவார்களா? படிக்கலாம். அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. // இனி பாவனா ஜெர்மன் மொழி வாராவாரம் கற்று தருவார்களா?// பாபாவுக்குத்தான்! நமக்குக் கிடைக்காது!

      நீக்கு
    3. // இனி பாவனா ஜெர்மன் மொழி வாராவாரம் கற்று தருவார்களா?// பாபாவுக்குத்தான்! நமக்குக் கிடைக்காது!

      நீக்கு
  15. ​இன்று திருவோணம். வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி. ஓணம் என்பது குடும்பத்து உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்று கூடி மகிழ்வது. ஆனால் பிள்ளைகள் இருவரும் வெளியூர்களில், ஒருவன் வெளி நாட்டில், ஒருவன் வெளி மாநிலத்தில், லீவு கிடைப்பதும், அவர்களுடைய பிள்ளைகளின் பள்ளி விடுமுறைகளும் ஒத்து வராது.
    ஆக கிழவனும் கிழவியும் பருப்பு, சாம்பார், ரசம், அவியல், பச்சடி, வறுவல், ஒளன், அடை பிரதமன், பப்படம், ஊறுகாய், இவற்றுடன் கொண்டாடுகிறோம். காளன், தோரன், எரிசேரி, புளிசேரி, சிப்ஸ், போளி, பால் பாயசம் இல்லை.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓணம் பண்டிகை வாழ்த்துகள்!

      நீக்கு
    2. இனிய ஓணம் பண்டிகை நல்வாழ்த்துகள். ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்த இந்தப் பண்டிகை இப்போது கேரளத்துக்குப் போய்விட்டது. தமிழின் "ழ" "குட்டன்" போன்றவை போனாப்போல. :(

      நீக்கு
    3. ஓணம் பண்டிகை வாழ்த்துகள் ஜெ.கு சார். பஹ்ரைன்ல நம்பூதிரி மெஸ்ல 1 1/2 தினாருக்கு அள்ளி அள்ளி டிபன் கேரியரில் 22-24 ஐட்டங்கள் தந்தது நினைவுக்கு வருது. இரண்டு பேருக்கு தாராளமாருக்கும்.

      நீக்கு
    4. இத்தனை உணவு வகைகள் பண்ணி இருக்கீங்க. ஆனால் வடையைக் காணோமே? முப்பருப்பு வடை முக்கியமில்லையோ இன்னிக்கு?

      நீக்கு
    5. ​சாப்பாட்டிற்கு வடை சேர்ப்பது தமிழ் நாட்டில் தான். ஓணத்திற்கு வடை கிடையாது. 3 பாயசம், போளி, பழம், சர்க்கரை வறட்டி, பப்படம் ஆகியவையே முக்கியம்.

      Jayakumar

      நீக்கு
  16. ஜெல்லி மீன்களைப் பார்த்ததும் தான் இவை ஜெல்லி மீன்கள் என்பதும் அக்வேரியத்தில் பார்த்திருப்பதும் நினைவில் வந்தது.

    நெல்லை கேட்டிருக்கும் கேள்விகளும் அதற்கான பதில்களும் ஓகே. இலவசங்களை அறவே வெறுக்கிறேன். ஆனால் இங்கே இலவசம் தான் செல்லுபடி. எங்களுக்கு அம்பத்தூரில் இருந்தப்போ ரேஷன் கார்ட் இருந்ததால் இலவச டிவி வலுக்கட்டாயமாக வீட்டில் கொண்டு வந்து கொடுத்துட்டாங்க. அப்புறம் யாரோ உறவுக்காரருக்குத் தொலைக்காட்சி இல்லை என்பதால் அவருக்குக் கொடுத்தோம். ஸ்ரீரங்கம் வந்ததும் எங்க ரேஷன் கார்டில் பொருட்கள் வாங்கவும் அந்தப் புடைவை வாங்கவும் போட்டா போட்டியாக இருக்கவே ரேஷன் கார்டையே சரண்டர் பண்ணிட்டோம்.

    பதிலளிநீக்கு
  17. ஹாரி பாட்டருக்கு விழா எடுத்திருப்பது பானுமதி எழுதியதில் இருந்து தான் தெரியும். நான் ஹாரி பாட்டரெல்லாம் படிச்சதில்லை. எங்க பெண் என்னிடம் உனக்குப் பிடிக்கும், படிச்சுப் பார்னு சொல்லுவா. ஆனால் ஏனோ எனக்கு அதெல்லாம் படிக்கப் பிடிக்கலை. பானுமதியின் படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் போல் கனடாவில் இருந்துவிட்டு இங்கே "பெண்"களூர் வருவதால் கொஞ்சம் பரவாயில்லையா இருக்கும். சென்னையோ, ஸ்ரீரங்கமோ என்றால் ரொம்பக் கஷ்டம். ஸ்ரீரங்கத்தில் செப்டெம்பருக்கு அப்புறமாக் கொஞ்சம் குளிரும். நாங்க ஏசி போட்டுண்டதில்லை. நவம்பர் டிசம்பர் எனில் மின் விசிறி கூடத் தேவைப்படாது எங்களுக்கு. ஜனவரிக்குப் பின்னரே மின் விசிறி, மார்ச் பாதியில் இருந்து ஏசி என ஆரம்பிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் வீட்டில் ( பெங்களூர்) ஏ சி கிடையாது. செப்டம்பர் முதல் பெப்ரவரி வரை மின் விசிறிக்கு லீவு.

      நீக்கு
    2. நவம்பர் டிசம்பரில் போகலாம் என்று நினைத்திருக்கிறேன், கீசா மேடம் வெயிலே இருக்காது குளிரும் என்று சொல்வதால். வெயில் அதிகம்னா என் மனைவிக்கு ஒத்துக்காது.

      நீக்கு
    3. திருவரங்கம் (உங்க வாய் முகூர்த்தம் லண்டன் போனாலும் போகலாம்)

      நீக்கு
  18. ஜெல்லி மீன் படங்களைப் பகிர்ந்த நெல்லையாருக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  19. ஜெர்மன் வகுப்பு ஆரம்பிச்சுட்டீங்க போல. இதை எல்லாம் வைச்சுக் கதையின் போக்கை என்னால் நிர்ணயிக்க முடியலை. மத்தவங்களால் முடியும்னு நினைக்கிறேன். எல்லோருமே என்னைப் போல் புத்திசாலியா இருக்க வாய்ப்பில்லையே! :) இந்த வாரம் சரோஜா தேவி சப், சப், சப்னு இருக்கு. :( விறுவிறு இல்லை.

    பதிலளிநீக்கு
  20. சரோஜா​ தேவி சரோஜா தேவி மாதிரி இல்லை. நான் படிப்பதே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படிக்காமல் எப்படி சரோஜாதேவி மாதிரி இல்லை என்று சொல்கிறீர்கள்?

      நீக்கு
  21. படமும் பதிவும் படங்கள் நன்றாக உள்ளன. ஆப்பிள் ஊட்டி, கொடைக்கானலில் காய்த்திருப்பதை கண்டதுண்டு. ஜெலி மீனும் கண்டிருக்கிறேன்.

    சரோஜாதேவி.....ஜெர்மன் பாஷையும் வந்துவிட்டது......தொடர்வோம்.

    பதிலளிநீக்கு
  22. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  23. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.
    அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகள்.
    படமும், பதமும் படங்கள் விளக்கம் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    கதை நன்றாக போகிறது ஜெர்மன மொழி கற்று கொள்வதால் ஏதாவது நனமைகள் உண்டா பாபாவுக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுக்கு நன்றி. ஜெர்மன் - என்ன நன்மை என்று பாபா சொல்கிறாரா என்று பார்ப்போம்.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!