சென்ற வாரம்...
டாக்டர் இரண்டுமுறை வெளியே வந்தார் தவிர என்னை கண்டு கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.
இடைப்பட்ட நேரத்தில் இன்னும் இரண்டு பேர் இப்படி மூக்கில் காஸ் நுழைக்கப்பட்டு உட்கார வைக்கப்பட்டிருந்தனர். எனக்கொரு அல்ப சந்தோஷம் அதில் ஏற்பட்டது. என்னவென்றால், என்னை விட கொஞ்சம் இளையவராகத் தெரிந்த ஒருவர் மூக்கினுள் காஸ் நுழைக்கப்படும்போதே அலறி ஆர்ப்பாட்டம் செய்ததுதான். அவர் மகள் அருகில் கூட நின்று அவரை ஆற்றுப்ப்படுத்தி வெளியே வந்து அமரவைத்தார். என்னெதிரே அமர்ந்திருந்த அவரை நான் மனதுக்குள் புன்னகைத்தவாறு பார்த்தேன்..
நினைவிருக்கட்டும்.. இதெல்லாம் முதல் நாள் முதல் அனுவபவம்... அதில் -
டாக்டர் என்னை உள்ளே அழைத்தார்.
உள்ளே செல்ல எழுந்த என்னை விருந்தினரை அழைத்துச் செல்லும் விழா அமைப்பினர் போல உள்ளே வழி நடத்திச் சென்றார் ஒரு நர்ஸ். அறை வாசலுக்கும் சோதனை மேஜைக்கு நான்கடிதான் இருக்கும்!
"சார்! செருப்பை வெளியில போட்டுடுங்க"
போட்டுவிட்டு வந்தேன்.
"ஏறி படுங்க" சோதனை ஸ்ட்ரெக்சரை லேசாக தட்டி சுட்டினார் டாக்ட.ர்.
ஏறி படுக்க வேண்டிய மேஜை சற்றே உயரமாக இருந்ததால், அங்கு ஸ்டூல் ஏதும் காணப்படாததால், திரும்பி மேஜைக்கு முதுகு காட்டி நின்று கொண்டு, இரண்டு கைகளையும் மேஜை மேல் ஊன்றி, அழுந்தாமல் லேஸாக ஒரு எம்பு எம்பி ஏறி உட்கார்ந்தேன்
டாக்டர் பதறிவிட்டார். நர்ஸை கடிந்து கொண்டார். "நோ நோ நோ நோ நோ.."
"ஏன்மா ஒரு ஸ்டூல் போட மாட்டியா? தெரியாதா இதெல்லாம் உனக்கு? சொல்லித் தரணுமா? ஸென்ஸ் இல்ல?"
நர்ஸ் "ஸாரி ஸார்" என்று ஒரு ஸ்டூல் எடுத்து அங்கே போட்டார். "ஆமாம் இப்ப போடு" என்று அவளை முறைத்த டாக்டர் அவரே தொடர்ந்து "இப்பவாவது போட்டியே" என்று கடுப்படித்து விட்டு திரும்பி என்னிடம், "இப்படி எல்லாம் குதித்து ஏறக் கூடாது" என்றார்.
"சரி" என்றேன். சட்டென கீழே இறங்கி மறுபடியும் அந்த ஸ்டூலில் ஏறி மேலே அமர்ந்து செய்த தவறை சரி செய்யலாமா என்று ஒரு கணம் யோசித்தேன். டாக்டர் ஜோக்கை ரசிக்கும் முகமாக தெரியவில்லை. எதற்கு வம்பு என்று அடுத்த கட்டளைக்காக காத்திருந்தேன்.
"படுங்க சார்" என்றார் சற்றே அலுப்பாக. சரி என்று படுத்தேன் "கொஞ்சம் என் பக்கமா திரும்பி படுங்க" என்றார்.
சரி என்று அவர் பக்கமாக திரும்பிப் படுத்து அவரை பயத்துடன் பார்த்தேன் "இவ்வளவு வேண்டாம் கொஞ்சம் திரும்புங்க போதும்" என்று என்னை சரியான பொசிஷனில் படுக்க வைத்தார். அவர் கைகளுக்கு என் மூக்குப் பிரதேசம் பிடிபட சரியான வாகில் வைத்துக் கொண்டார்.
எனக்கு ஃபிரண்ட்ஸ் வடிவேலு "கீழ தொடடா... தரையைத் தொடடா.. படுத்தறாங்களே" ஜோக் நினைவுக்கு வந்தது!
அவர் கையில் எடுக்கும் கருவியை பார்க்காமல் இருக்க முயற்சித்தேன்.
அந்த கருவிகளே கொஞ்சம் பயமுறுத்தும். பல் ஆஸ்பத்திரியிலும் அப்படிதான். கண்களை மூடிக்கொண்டு விடுவேன். முதல் வேலையாக என் மூக்கில் இரண்டு துளைகளிலும் துருத்திக் கொண்டிருந்த Gause Cloth தை நூலை வளைந்த கத்திரியின் நுனியால் பற்றி 'விருட்' 'விருட்' என வெளியே இழுத்து ட்ரேயில் போட்டார்.
பின்னர் கிளவுஸை சரி செய்து கொண்டு இன்னொரு கருவியை எடுத்தார்.
ஒரு துளையின் உள்ளே விட்டு மெதுவாக சுரண்ட ஆரம்பித்தார். நெளிந்தேன்.
"ஆடாதீங்க"
பல்லைக் கடித்துக் கொண்டு உடலை இறுக்கி ஆடாமல் இருக்....
"ரிலாக்ஸா இருங்க.. அப்போதான் சரியா இருக்கும்,. முறுக்காதீங்க"
கம்பி போன்ற ஒன்றை உள்ளே செலுத்தி தொண்டையின் உள்ளேயா, மூக்குக்கு பின்புறம் என்று ஒன்று இருக்குமா, எங்கே என்று தெரியாத அளவில் சுரண்டினார்.
படுக்கையில் இறுக்கி பற்றிக்கொள்ள ஏதும் கிடைக்குமா என்று தேடி பற்றிக் கொண்டது நர்ஸின் கையை. நானும் அவரும் சட்டென கையை விடுவித்து மறுப்படி தேடி மெத்தையின் நுனியை பிடித்து இறுக்கினேன்.
இப்போது நர்ஸ் என் கையை லேஸாக தட்டிக் கொடுப்பது தெரிந்தது.
LA தடவைப்பட்ட Gauze என்று சொல்லி உள்ளே திணிக்கப்பட்ட துணி வேஸ்ட் என்று புரிந்தது. ஒரு மரத்துப்போகும் நிலையையும் அது கொடுக்கவில்லை.
ஒரு வழியாக இரண்டு பக்கமும் சோதனை முடிந்துதான் அவர் "சளி நிறைய சேர்ந்திருக்கிறது" என்று அறிவித்து அட்மிஷனுக்கு ஐடியா சொன்னார்.
வெளியே வந்தபோது அந்த அலறல் பார்ட்டி நகர்ந்து வாசலுக்கு நேராய் அமர்ந்து எனக்கு நடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்பது எனக்கும் புரிந்தது, டாக்டரும் பார்த்தார்.
"மவனே அடுத்தது நீதான்.. மாட்டினடா நீ" என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு வெளியே வந்தேன்!
"டோரை க்ளோஸ் பண்ணி வைக்க மாட்டியாம்மா... ஒண்ணொண்ணையும் சொல்லி சொல்லிதான் செய்வியா.. போன வாரம் இருந்த சீனியர் ஸ்டாஃப் எங்கே?" டாக்டர் மறுபடியும் கடுப்படித்துக் கொண்டே எதிர் அறைக்கு சென்றார்.
இதுதான் ஆரம்ப நாள் கதை.. மீண்டும் நான்காம் நாளுக்கு அடுத்த வாரம் வருகிறேன்!
=========================================================================================
நவ்நீத் உன்னிகிருஷ்ணன்.. உங்களில் சிலர் இவரைப்பற்றி அறிந்திருக்கலாம். இவர் இளையராஜாவின் கல்யாண தேனிலாவை கையிலெடுத்து ஒரு சிறு நிரவல் வழங்கியபோது...
=============================================================================================
பொதுவாக திரைப்படப்பாடல்களில் உன்னி கிருஷ்ணனை நான் அதிகம் ரசிப்பதில்லை. ஒன்றிரண்டு பாடல்கள் சொல்லலாம். 'நறுமுகையே நறுமுகையே' போல. இந்தப் பாடல் எப்படியோ முன்பே என்னைக் கவர்ந்திருந்தது. சமீபத்தில் ஒரு ரீல்ஸில் இசை அமைப்பாளர் பரணி இந்தப் பாடலைக் குறிப்பிட்டு இது சலநாட்டை என்றும் இதுவும் பனிவிழும் மலர்வனம் பாடலும் ஒரே ராகம் என்றும் சொன்னார்.
2002 ல் வெளியான இந்தப் படம் சார்லி சாப்ளின் பயங்கர வெற்றி பெற்றதில் இருக்கிற மொழியிலெல்லாம் இதை ரீமேக் செய்திருக்கிறார்கள். சக்தி சிதம்பரம் இந்தக் கதை தன் நண்பனின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம், கொஞ்சம் மாற்ரறி இருக்கிறேன் என்று சொன்னாலும் படம் பழைய 'யாருக்கு மாப்பிள்ளை யாரோ' போல இருந்ததாக அபிப்ராயமும் வந்ததாம்.
பரணி - இசை அமைப்பாளர் - எங்கள் தஞ்சாவூர்க்காரர். குணசேகரன் இயற்பெயர். அந்தப் பெயரிலேயே விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பில் பாடலே எழுதி இருக்கிறாராம். நான்கைந்து படங்கள் இசையமைத்திருக்கிறார்.
இன்றைய பாடல் காட்சியில் காயத்ரி ரகுராம் - ஆம், அவர்தான் - பிரபு தேவா. பா. விஜய்யின் பாடல்.
=========================================================================================
இந்த அனுபவம் நமக்கும் இருக்கும்... இல்லையா? ஹா ஹா ஹா
===========================================================================================
கவிதைப் பக்கம்...
எனக்குள் வைத்திருக்கும் விஷயம்
எப்படி நீ அறிந்தாய்
உனக்கும் தெரிந்து
ஊருக்கும் தெரிந்தும்
எனக்குள் நான் வைத்திருக்கிறேன்
என்று தான்
நினைத்துக் கொண்டிருக்கிறேன்
***************************
நீ ஏன் அங்கு வந்தாய்
ஏன் என்னுடன் பேசினாய்
பேசிவிட்டு சென்று விட்டாய்
நான் இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறேன்
உன்னோடு
வராமலே இருந்திருக்கலாம்
நீ
பார்க்காமலே இருந்திருக்கலாம்,
பேசாமலே இருந்திருக்கலாம்
நாம்
ஒரு பார்வையில் உருவானது
புதிய பந்தம்
பின்னர்
ஒரு வார்த்தையில்
உடைந்து போனது
அந்த சொந்தம்
விரும்பியபடி தான்
எல்லாம்
நடந்து கொண்டிருக்கிறதா என்ன
மெல்லிய கண்ணாடி இழைகள்
இறுகுவதற்குள்
அவசரப்பட்டு விட்டோமோ..
காலம் கடந்த ஞானோதயம்.
======================================================================================
OTT யில் பார்த்த படம் - தமிழில் - மூலம் கொரியா - அமேசான் ப்ரைம்
Exhuma - 2024
பணம் சம்பாதிப்பதற்கு புதிய வழி கண்டுபிடித்து அதை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது ஒரு நிறுவனம். அதாவது இறந்தவர்களுக்கு அவர்களை புதைக்க அவர்களுக்கு தோதான, சரியான வாஸ்துப்படி சரியான என்று சொல்லலாமா, அப்படி ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து பணம் பார்க்கிறது. குடும்பத்தில் நிம்மதி இல்லை என்று வருபவர்களுக்கு புதைக்கபப்ட்ட அவர்கள் மூதாதையரின் சவப்பெட்டிகளை வேறு இடம் மாற்றிக் கொடுத்தும் சம்பாதிக்கிறார்கள். பணம் பிரதானம்.
அப்படி ஒரு கேஸ் வருகிறது. அவர்கள் மூதாதையர் பற்றிக் கேட்டால் நூறு வருட பழமையான ஒரு சவக்குழியைத் தோண்ட வேண்டும். அவர் வீட்டில் இருக்கும் வயதான மாது வேண்டாம் என்கிறாள். தடுக்கிறாள். பயப்படுகிறாள். அவள் தந்தையின் சவக்குழி அது. அது புதைக்கபப்ட்டிருக்கும் இடமே ஒரு புதிரான இடம். அங்கு தோண்டினால் புதிய அமானுஷ்ய பிரச்னைகள் கிளம்புகின்றன.
காசுக்கு ஆசைப்பட்டு 'பெட்டியைத் திறக்க வேண்டாம்' என்கிற அந்த வயதான மகளின் எச்சரிக்கையையும் மீறி ஆஸ்பத்திரி ஊழியன் ஒருவன் தனிமையில் அதைத் திறக்க முயற்சிக்கிறான். பெட்டியிலிருந்து வெளியேறும் தாத்தா ஆவி உறவுகளை காவு கொள்ள தீர்மானிக்கிறது. என்ன செய்வது என்று அங்கு மீண்டும் தோண்டினால் மேலும் மேலும் இரண்டு சவப்பெட்டிகள் கிடைக்கின்றன. ஒன்று செங்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் தலைவர் கிம் இந்த வேலையைதொடங்கும் முன்னரே இது வேண்டாம்.. ஏதோ சரியில்லை என்று சொல்கிறார். உதவியாளர்கள் உனக்கு வேணாம்னா ஒதுங்கிக்கோ.. காசு வருது.. எப்பவும் செய்யற மாதிரி பரிகார பூஜை செய்து நாங்கள் தொடர்கிறோம்" என்று தொடர பிரச்னைகள் பூதாகரமாகின்றன. என்ன ஆகிறது, யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் கதை.
இந்தப் படமும் அந்த இன்ஸ்ட்டா அனலிஸ்ட் சிபாரிசில் பார்த்ததுதான்.
======================================================================
பழைய SMS ஜோக் ஒன்று.. Grrrr சொல்லாமல் (ர)சி(ரி)க்கவும்!!
ச்சீ.....!
குருட்டுப் பெண் எல்லோருக்கும் இனிப்பு கொடுத்துக் கொண்டிருந்தாள். அவள் குருடி என்று அறிந்திருந்த மாணவன் ஆடை இல்லாமல் குளியறையிலிருந்து வந்தவன் இனிப்பை எடுத்துக் கொண்டான்.
"என்ன விஷயம்...எதற்கு ஸ்வீட்?"
"எனக்குக் கண் கிடைத்து விட்டது"
===============================================================================
அந்தப் புன்னகை என்ன விலை?
தேனி அருகே தேவாரத்தில் நான், பாஸ்கர், இளையராஜா, அமர் நான்கு பேரும் ஒரு ஹோட்டலில் சாப்பிடச் சென்றோம். தென் மாவட்டங்களில் அந்த நாளில் எல்லா ஹோட்டலிலும் காலையில் கடையைத் திறந்ததும் பல் துலக்கக் கரியும், முகம் கழுவிக்கொண்டதும் நெற்றியில் பூச திருநீறும் வைப்பார்கள். எங்களிடம் இருந்த மொத்தக் காசையும் திரட்டி ஆளுக்கு இரண்டு இட்லி சாப்பிட்டோம்.
அப்போது இரண்டு காலும் இல்லாத ஒருவர், தன் சக்கர வண்டியில் ஹோட்டலுக்கு வந்து நெற்றியில் திருநீறு பூசுவதைப் பார்த்தேன். எனக்குப் பரிதாபமாகிவிட்டது. இரண்டு காலும் இல்லாமல் அவர் என்ன வேலை செய்து பிழைக்க முடியும்? நண்பர்களுக்குத் தெரியாமல் நான் மறைத்துவைத்திருந்த பத்து பைசாவை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அவர், "எனக்கு எதுக்குப்பா?" என்றார்.
“பரவாயில்லை, வெச்சுக்கங்க” என வற்புறுத்திக் கொடுத்தேன். பாஸ்கருக்கு 'பசியில் இருக்கிற நேரத்தில் இப்படி தானம்செய்ய வேண்டுமா' என்ற கோபம். சிறிது நேரத்தில், கால் அற்ற அவரை ஹோட்டல் பையன் கல்லா பெட்டியில் தூக்கி உட்கார வைத்தான். அவர்தான் ஹோட்டல் முதலாளி என்று அப்போதுதான் தெரிந்தது. கல்லாவில் உட்கார்ந்து அவர் என்னைப் பார்த்துப் புரிந்தாரே ஒரு புன்னகை... சான்ஸே இல்லை!
திரைப்படக் கதாசிரியர் ஆர். செல்வராஜ் - ஜூனியர் விகடன் - சந்திப்பு : தமிழ்மகன் - 24-5-2017
==================================================================================================
எனக்கு இந்தப் படத்தைக் காட்டி 'நட்பழைப்பு அனுப்பேன்' என்கிறது FaceBook. அனுப்பலாமா கீதா அக்கா !
புதிர்....
===============================================================================================
ஜெமினியுடன் ஒரு உரையாடல் :
ஸ்ரீராம் : உனக்கு ஜெமினி என்று ஏன் பெயர் வந்தது
‘ஜெமினி’ (Gemini) என்ற பெயர் வந்ததற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான பின்னணியும், முக்கியமான காரணங்களும் உள்ளன:
- லத்தீன் மொழியில் ‘இரட்டையர்கள்’ (Twins): லத்தீன் மொழியில் Gemini என்றால் "இரட்டையர்கள்" என்று பொருள். கூகிளின் இரு பெரும் ஆராய்ச்சிக் குழுக்களான DeepMind மற்றும் Google Brain ஆகிய இரண்டும் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்ட திட்ட என்பதால், இந்த இணைப்பைக் குறிக்க 'ஜெமினி' என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
- நாசாவின் ஜெமினி திட்டம் (Project Gemini): விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா (NASA) மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளித் திட்டத்தின் பெயர் 'ஜெமினி'. இது மனிதனை நிலவுக்கு அனுப்பிய 'அப்பல்லோ' திட்டத்திற்கு வழிகாட்டியாக அமைந்தது. அதேபோல, செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டமாக இது இருக்கும் என்பதைக் குறிக்கவும் இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
- இரட்டைத் திறன்கள் (Dual Capabilities): ஆரம்பத்திலிருந்தே உரை (Text), படம், ஆடியோ, வீடியோ போன்ற பலவகைத் தரவுகளையும் ஒரே நேரத்தில் புரிந்துகொண்டு செயல்படும் 'மல்டிமோடல்' (Multimodal) திறனைக் கொண்டு உருவாக்கப்பட்டதையும் இது குறிக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், இரு பெரும் AI ஆய்வுக் குழுக்களின் இணைப்பு மற்றும் மனிதகுலத்தின் அடுத்தகட்டத் தொழில்நுட்பப் பாய்ச்சல் ஆகியவற்றின் குறியீடாகவே 'ஜெமினி' என்ற பெயர் வைக்கப்பட்டது.
==========================================================================================
இன்றைய இரண்டாவது பாடல்...
1982 ல் வெளியான நினைவெல்லாம் நித்யா படம் பற்றி சொல்லவே வேண்டாம். இளையராஜாவின் தேனிசை மழை. மேலே முதல் பாடலில் சொல்லப்பட்ட 'பனிவிழும் மலர்வனம்' பாடல் இங்கே.. சலநாட்டை
ஸ்ரீதர் இயக்கத்தில் கார்த்திக், ஜெமினி மகள் ஜீஜி நடித்த (ஒரே) படம். வைரமுத்து பாடல் வரிகள்.
இளையராஜாவை சொல்வதா தலைவர் SPB யைச் சொல்வதா... தலைவா....
இரண்டு சலநாட்டையில் இது முதலிடம்... இல்லையா?
=========================================================================================
ஜோக்ஸ்...?
கொத்தாக அப்படியேயும்...
தனித்தனியாகவும்....












இன்றைய கவிதை ஒரு பெண்ணின் மனக்குரல் என்றால் அதில் ஒரு இரக்கம் இருக்கும். வழக்கம் போலவான ஆணின் அதீத அலட்டல் என்றால் 'நீ எப்படிப்பா வரப்போகிற வாழ்க்கையை எதிர்கொள்ளப் போறே?' என்ற பரிதாபம் தான் மிஞ்சும். .
பதிலளிநீக்குவாங்க ஜீவி ஸார்.. அப்படியா சொல்கிறீர்கள்?
நீக்குயதார்த்த வாழ்க்கை உண்மைகள் நிறைய. பெண்ணுக்குப் பெண் ஒன்றை எதிர்கொள்ளல் மாறுபடும் என்றாலும் ஆரம்பத்திலேயே மன உணர்வுகளை கவிழ்த்து 'அந்தக் காலத்திலேயே நீங்கள் வழிந்தது தெரியாதா?' என்ற நிஷ்டூரத்திற்கு ஆளாகி விடக்கூடாது.
நீக்குபொதுவாகவே மனத்தளவில் ஆண்கள் மிகவும் பலஹீனமானவர்கள் என்பதற்காகச் சொன்னேன்.
கவிதையின் கருத்து பொதுவில்தான் சொல்லப்பட்டிருக்கிறது!
நீக்குநானும் பொதுவில் தான் குறிப்பிட்டிருக்கிறேன்
நீக்குஅந்த குரூர ஜோக்குக்கு தண்டனையாக:
பதிலளிநீக்குவெளியிலிருந்து பார்ப்பவருக்கு
உள்ளிருப்பது தெரியாது மறைக்கும்
கண்ணாடித் தடுப்பென்ற நம்பிக்கையில்
உடை மாற்றிக் கொண்டேன்
வெளியே உலாவிய ஆள் சட்டென்று திரும்பி
நின்று விட்டது ஏனென்று தெரியவில்லை.
அட, இதுவும் நல்லாயிருக்கே....
நீக்குஅந்தத் தொடர் கட்டுரைக்கு 'பல ஆண்டுகாலம் மருத்துவமனை தொடர்பான இலாகாவில் பணியாற்றியவனின் அனுபவங்கள்' என்று தலைப்பிட்டு விடுங்கள்.
பதிலளிநீக்குநான் ஒரு பாமரன். ஒன்றும் முழுதாக அறியாதவன்.
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குவாங்க செல்வாண்ணா வணக்கம்.
நீக்குநலமே வாழ்க
பதிலளிநீக்குவாழ்க வாழ்க
நீக்குநமது வழியில் மிதுனம் என்பதும் இதைப் போலத்தான்... குழாயடி சோசியங்கள் குழப்பி விடுகின்றன...
பதிலளிநீக்குஇதுல வந்து பாத்தீங்கன்னா என்ற சொதப்பல்கள் தனிரகம்..
சமீபத்தில் 1986 ஆம் வருடம் குங்குமம் புத்தகத்தில் வந்த ஜோசியம் எடுத்துக் போட்டிருந்தேன். யாருமே கவனிக்கவில்லை! தற்சமயத்துக்கானது என்றே நினைத்தார்கள்.
நீக்குஎப்போ? லிங்க் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
நீக்குஒரு மாதத்துக்குள்... நான் எங்கேன்னு தேடுவேன்...
நீக்குhttps://engalblog.blogspot.com/2026/05/blog-post_14.html
நீக்குமேலே உள்ள பதிவில் தேதியை முதலில் மறைத்திருந்தேன்!
நீக்குகவிதைகள் கவிதைகளாக இல்லை. ஜோக்குகள் அரசியல் ஆனாலும் நடப்பு சம்பவங்களை கார்ட்டூன் ஆக்கியது போல் இருக்கிறது. ரசிக்கலாம் தான். இந்த வியாழனில் ஏனோ திருப்தி ஏற்படவில்லை
பதிலளிநீக்குJayakumar
அச்சச்சோ... வருந்துகிறேன்.
நீக்குஎனக்கும் ஏனோ திருப்தி இல்லை, ஏதோ குறைவது போல ஒரு உணர்வு.பொக்கிஷமா?
நீக்குஜோக்குகள் எல்லாம் அரதப் பழசுன்னாலும் எக்காலத்துக்கும் பொருந்துமே! மற்றபடி வியாழன் ஓகே.
நீக்குஅப்பாடி.. நன்றி கீதா அக்கா.
நீக்குகம்பி போன்ற ஒன்றை மூக்கின் உள்ளே செலுத்தி ....
பதிலளிநீக்குஎன்ன கொடுமையடா.
இந்த நிகழ்வில் நான் அதிகபட்சம் அவஸ்தைப்பட்டது அதில்தான். அந்தக் கருவியின் நுனியில் சுத்தம் செய்யும் பகுதி பொருத்தப்பட்டிருக்கும்.
நீக்குஒரு பக்கமே எப்படா முடியும் என்று இருந்தபோது இரண்டும் ஒரே இடத்தைதானே அடையும் என்று நினைத்திருந்த என் எண்ணத்தில் ஏமாற்றம்.
"முடிஞ்சுதுடா முத்துசாமி" என்று எழப்போனவனை அமுக்கி படுக்க வைத்து அடுத்த துளையில் சோதனையைத் தொடர்ந்தார் மருத்துவர்!
இப்படித்தான் நம்ம ரங்க்ஸுக்கும் கடைசித் தரமா மருத்துவமனையில் சேர்த்திருந்தப்போ, சர்க்கரை அளவு அதிகம் என்பதால் சேர்த்திருந்தோம். ஆனால் அவங்க தேவையில்லாமல் வயிற்றில் ஏதோ இருக்குனு என்.ஜி ட்யூபை மூக்குவழியாக வயிறு வரை உள்ளே செலுத்தித் தொந்திரவு கொடுத்து, 30 மில்லி தண்ணீர் தான் ட்யூப் வழியா உள்ளே போகலாம். அதை எடுக்கும் வரை சாப்பிட முடியாது. ரொம்பக் கஷ்டப்படுத்திட்டாங்க. கடைசியில் நான் போய் எங்களுக்குப் பார்க்கும் மருத்துவரிடம் சொல்லி அதை வலுக்கட்டாயமாக நீக்கச் சொன்னேன். இத்தனைக்கும் காஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்ட் இத்தனை வயதுக்குப் பின்னர் இதெல்லாம் தேவையே இல்லை. அவருக்குப் பிடிச்சதைச் சாப்பிடட்டும். என்று சொல்லிவிட்டுப் போனார். கடைசியில் அவரும் இந்த ட்யூப் தேவையில்லை என எழுதியும் கொடுத்தார். எல்லாம் நேரம்! :(
நீக்குஅப்பவே எங்கேயோ சொல்லி இருந்தீங்க..
நீக்குஅதான் அடிக்கடி புலம்பறேனே! குறிப்பிட்டு எல்லாம் சொல்ல முடியாது. நீங்கா நினைவுகள்! :(
நீக்கு// படுக்கையில் இறுக்கி பற்றிக்கொள்ள ஏதும் கிடைக்குமா என்று தேடி பற்றிக் கொண்டது நர்ஸின் கையை..//
பதிலளிநீக்குஏதோ சற்று ஆறுதல்..
ஹிஹிஹி...
நீக்குநீங்கள் கவனிக்கணும்.. நான் வேணும்னு பார்த்துச் செய்யவில்லை. நான் மருத்துவர் பக்கம் திரும்பியபடி படுத்திருக்க, கைகள் தானாய் ஒரு பற்றுக்கோலைத் தேடின!
அது ஒண்ணும் பெரிய குற்றமே இல்லை. செவிலியர் நோயாளிகளுக்குச் செய்யாத பணிவிடையா?
நீக்குஅதுதானே.. அப்படி சொல்லுங்க கீதா அக்கா.
நீக்கு
பதிலளிநீக்கு//நீ ஏன் அங்கு வந்தாய்
ஏன் என்னுடன் பேசினாய்
பேசிவிட்டு சென்று விட்டாய்
நான் இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறேன்
உன்னோடு
வராமலே இருந்திருக்கலாம்
நீ
பார்க்காமலே இருந்திருக்கலாம்,
பேசாமலே இருந்திருக்கலாம்
நாம் //
//காலம் கடந்த ஞானோதயம்.//
இரண்டு மகன்களை பெற்று ஆளாக்கி மணமும் முடித்தபின் தோன்றுகிறது ஏன் இவளை காதலித்தேன் கை பிடித்தேன் என்று!
ஹூம்
இன்றைய டிபன் கொடுமை (கோதுமை) தோசை தான்.
என்னைப்பற்றி எழுதுவதாக ஏன் கொள்கிறீர்கள்? ஆனால் ஒன்று தெரியுமோ... இப்போதெல்லாம் அடிக்கடி அதையே சாப்பிட்டு இட்லி தோசைகள் அலுத்துவிட்டது. உப்புமாக்கள் மனதில் இடம்பிடிக்கத் தொடங்குகின்றன!
நீக்கு@JKC Sir: ஹாஹாஹா! உங்கள் மனைவி ப்ளாக் பக்கம் வரமாட்டார் என்ற தைரியமா?
நீக்கு@ பா வெ ஹா ஹா நான் காதலித்து கை பிடிக்கவில்லையே. கை பிடித்தவளை காதலித்தேன். தற்போது துணையின் அவசியம், இன்றிமையாமையை உணரும்போது இப்படி சிந்திக்க தோன்றுமா?
நீக்குஸ்ரீராம் எழுதியதை அவருக்கே திருப்பிப் போட்டேன். தோசையாக.
Jayakumar
அதெல்லாம் சரி ஸ்ரீராம், இன்னிக்கும் என்ன தோசை தானா?
நீக்குJKC..... நான் காதலித்து கைப்பிடித்தவளை காதலிக்கிறேன்
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.
நீக்குஉங்கள் அனுபவத்தைப் பார்த்தால் நல்ல மருத்துவரோடு நல்ல நர்ஸும் அமைய வேண்டும் போல இருக்கிறதே. அடிப்படை அறிவு இல்லாத நர்ஸாக இருந்திருக்கிறார். அது சரி காஸை மூக்கில் நுழைத்ததற்கே அலறியவர் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு என்ன செய்தார்?
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா... எல்லா இடத்திலும் இபப்டியான பணியாளர்கள் உண்டு. எல்லோரும் எப்போதும் சரியாக இருக்க மாட்டார்கள் இல்லையா?
நீக்கு// அது சரி காஸை மூக்கில் நுழைத்ததற்கே அலறியவர் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு என்ன செய்தார்? //
நீங்கள் எப்போதும் ஒரு கட்டம் முன்னதாகவே யோசிக்கிறீர்கள்!! அடுத்த வாரம் சொல்கிறேன்!
ஜோக்குகள் பரவாயில்லை. சில ஜோக்குகளை ரசிக்க சரித்திரம் தெரிந்திருக்க வேண்டும்.
பதிலளிநீக்குஹப்பாடி... இந்த ஜோக்ஸ் போடுவது எனக்கும் பரீட்சை எழுதுவது போல இருக்கு!!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமருத்துவ அனுபவ பதிவு சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்கள் அவஸ்தைகளை நீங்கள் நகைச்சுவையாக சொல்லி வருகிறீர்கள். ஆனால், உங்கள் எழுத்துக்கள் உங்களை வேதனைகளை மறக்கடித்து விடுகின்றன( நாங்களும் உங்கள் சிரமங்களை உணராமல் ரசிப்பதற்கு மன்னிக்கவும்.)
/ஏறி படுக்க வேண்டிய மேஜை சற்றே உயரமாக இருந்ததால், அங்கு ஸ்டூல் ஏதும் காணப்படாததால், திரும்பி மேஜைக்கு முதுகு காட்டி நின்று கொண்டு, இரண்டு கைகளையும் மேஜை மேல் ஊன்றி, அழுந்தாமல் லேஸாக ஒரு எம்பு எம்பி ஏறி உட்கார்ந்தேன்/
உங்கள் வீரமான அந்த செய்கையை மனதில் கற்பனையோடு ரசித்தேன். ஹா ஹா ஹா
/சட்டென கீழே இறங்கி மறுபடியும் அந்த ஸ்டூலில் ஏறி மேலே அமர்ந்து செய்த தவறை சரி செய்யலாமா என்று ஒரு கணம் யோசித்தேன். டாக்டர் ஜோக்கை ரசிக்கும் முகமாக தெரியவில்லை. எதற்கு வம்பு என்று அடுத்த கட்டளைக்காக காத்திருந்தேன். /
ஹா ஹா ஹா. நானும் என் மனதுக்குள் அப்படித்தான் நினைத்தேன். மறுபடியும் ஸ்டூலில் கால் வைத்து இறங்குவதற்கு அந்த டாக்டர் ஏதாவது சொல்லி விட்டால் என்ன செய்வது என நான் நினைக்கும் நேரத்தில், நீங்கள் அவர் முகம் பார்த்து அந்த எண்ணத்தை கை விட்டது நல்லதாகப் போயிற்று.
மூக்கில் நடந்த மருத்துவம் பயங்கரமாக உள்ளதே..! எப்படித்தான் சமாளித்தீர்களோ.? தலைப்புடன் தொடர்புடைய பிற வரிகளையும் படித்து ரசித்தேன். (ரசித்தமைக்கு மறுபடியும் மன்னிக்கவும். ஆனால், தவறு உங்கள் எழுத்தின் மீதும் உள்ளது.:))) ) பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அட கமலா அக்கா.. நீங்கள் ரசிக்க வேண்டும் என்பதால்தானே எழுதுகிறேன். ரசிக்க(முடிய)வில்லை என்றால்தான் வருத்தம் வரும்! நம் எழுத்து சரியில்லையா என்று தோன்றும்!
நீக்குஎன் வீரமான செய்கை.. ஹா ஹா ஹா நான் என் தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள போராடினேனாக்கும்!
மூக்கு சோதனைக்கு படம் சேர்க்க முயற்சித்தேன். பொருத்தமாக கிடைக்கவில்லை!
//ஏறி படுக்க வேண்டிய மேஜை சற்றே உயரமாக இருந்ததால், அங்கு ஸ்டூல் ஏதும் காணப்படாததால், திரும்பி மேஜைக்கு முதுகு காட்டி நின்று கொண்டு, இரண்டு கைகளையும் மேஜை மேல் ஊன்றி, அழுந்தாமல் லேஸாக ஒரு எம்பு எம்பி ஏறி உட்கார்ந்தேன்//
நீக்குஎனக்கு இந்தப் பிரச்னை எந்த மருத்துவமனை அல்லது க்ளினிக் போனாலும் ஏற்படும். அநேகமாக ஸ்டூல் இருக்கும். இருந்தாலும் சில சமயங்கள் ஸ்டூலும் உயரமாக இருந்துவிடும். அதிலும் கண் பரிசோதனையின் போது தடுமாற்றம் தான். :(
ஹிஹிஹி... நாமெல்லாம் ஒரே உயரம்!
நீக்கு'பனி விழும் மலர் வனம்..' பாடலை தீபன் சக்கரவர்த்தியைத்தான் பாட வைப்பதாக இருந்தாராம் இளையராஜா. அப்போது அவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் அந்த வாய்ப்பை நழுவ விட்டாராம்.
பதிலளிநீக்குநல்லவேளை... நான் இப்படி ஒரு செய்தி கேட்டதில்லை என்றாலும் இறைவன், அந்த கொல்லூர் மூகாம்பிகை காப்பாற்றினார்.
நீக்கு?????????????
நீக்குஒன்றுமில்லை.. பனிவிழும் மலர்வனம் பாடலை தீபன் சக்கரவர்த்தி பாடாமல் கொ மூகாம்பிகை காப்பாற்றினார்!
நீக்குஇந்த மாதிரி வைத்திய அனுபவங்களைப் படிக்கும் போது
பதிலளிநீக்குகடவுளே காப்பாற்று!. - என்று மனம் மேலும் கதறுகின்றது...
எல்லா வைத்திய அனுபவங்களில் சிரமங்கள் உண்டு செல்வாண்ணா.. நான் குறிப்பிட்டு எழுதி வருகிறேன். அவ்வளவுதான்!
நீக்கு10, I0 னு வந்திருக்கு.
பதிலளிநீக்குஇன்றைய ஜோக் துணுக்கு.. இரண்டு நாள் முன்பு ஹாட்ஸ்டாரைத் துழாவி, யதேச்சையாக மகாபாரத்த்தின் கடைசிப் பகுதியில் காந்தாரி துரியோதன்னை உடலில் ஆடையில்லாமல் வரச் சொல்லுவதும், கிருஷ்ணன் சகுனி பேச்சுக்களும், சகுனி விஷயமறிந்து துரியோதன்னை எச்சரிப்பதற்குள், வாழை இலையை இடுப்பில் கட்டிக்கொண்டு அம்மா முன் நிற்க, தன் தவ வலிமையைத் திரட்டி கண்கட்டை அவிழ்த்து துரியோதன்னைப் பார்த்மு அவன் உடலை வஜ்ரமாக்கும் எபிசோடைப் பார்த்த நினைவு வந்தது
வாங்க நெல்லை... முதல் வரி சுத்தமாக புரியவில்லை. இரண்டாவது பாரா எதைப்பற்றி என்று தெரியவில்லை.
நீக்குஅதுதான், வேறு பட்ட எண், கண் பார்வை புதிர் விடை
நீக்குகுருட்டுப் பெண் எல்லோருக்கும் இனிப்பு கொடுத்த துணுக்கு... காந்தாரி
நீக்குநெல்லை சொல்லி இருக்கும் மஹாபாரதத்தின் இந்தக் குறிப்பிட்ட நிகழ்வு இப்போதும் மனதை வேதனைப் படுத்தும். என்ன இருந்தாலும் பெற்ற தாய் அல்லவா? தன் மூத்த மகனாவது நன்றாக இருக்கணும் என்பதால் தன் பதிவிரதாக்கண்களால் அவனைப் பார்த்து உடல் முழுவதையும் வஜ்ரம் போல் மாற்ற நினைச்சுக் கடைசியில் கிருஷ்ணனின் வழக்கமான திப்பிசத்தால் தோற்றுப் போனாள். :( இதைப் பொருத்தமாகக் குருட்டுப் பெண் பார்வை வந்து இனிப்புக் கொடுத்த ஜோக்கோடு நெல்லை அழகாய் இணைத்து விட்டார்.
நீக்குஎன் மரமண்டைக்கு இப்போதான் புரிந்தது. டியூப்லைட்.
நீக்குநெல்லை.. அப்போ அந்தப் பையனுக்கு உடம்பு முழுக்க சக்தி கிடைச்சிருக்கும்னு சொல்லுங்க..
நீக்குஉங்கள் ஆஸ்பத்திரி அனுபவம், எனக்கு தொண்டையில் அனஸ்தீஷியா ஸ்ப்ரே அடித்து லைட், கேமராவிடன் நீள கம்பி போன்ற ஒன்றை உள்ளே அனுப்பி மருத்துவர் சோதித்து மனைவியை ரெக்கார்ட் பண்ணச் சொன்னது நினைவுக்கு வருது
பதிலளிநீக்குஆம். கேமிராவில் வைத்துப் பார்த்துக் கொண்டே க்ளீன் செய்வார்கள்.
நீக்குகங்கை அமரன்...... என் பெரியப்பா கணித ப்ரொஃபசர், ரொம்ப ரொம்ப ஆச்சாரம். எங்கும் நடப்பதைத்தான் ப்ரிஃபர்்செய்வார். என்னை நடத்தி திருவனந்தபுரத்தில் கோவளம் பீச்சுக்குக் கூட்டிச் சென்று திரும்ப நடந்துகொண்டிருந்தபோது ஒரு வெளிநாட்டார், அவரை நோக்கி வந்து பத்து ரூபாய் கொடுத்தார். (79ல்). உடனே என் பெரியப்பா நோ நோ என்று சொல்லி ஆங்கிலத்தில் அவரைப் பற்றிச் சொல்லியதும், சாரி எனச் சொல்லிவிட்டு அகன்றார் அந்த வெளிநாட்டுக்கார்ர். இது நினைவுக்கு வந்தது
பதிலளிநீக்குஎதற்கு பத்து ரூபாய் கொடுத்தார்?
நீக்குமறுபடி ம ம ன்னு ப்ரூவ் பண்றேனா?
10 ரூ கொடுத்தது உஞ்ச விருத்தி
நீக்குஇயல்பா வெளிநாட்டவர், பிறர் கஷ்டப்படுகிறார்கள் என்றோ அல்லது அவங்களது உடை அவர்களுக்கு இவர்கள் பெரியவர்கள் என்று தோன்றினாலோ கொஞ்சம் பணம் கொடுப்பார்கள். நான் நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன்.
நீக்குஜெயகுமார் சாருக்கு உஞ்சவ்ருத்தின்னா என்னன்னு தெரியலைனு நினைக்கிறேன். உணவு அல்லது அரிசி பருப்பு. பணம் போடுவது உஞ்சவிருத்தியில் வராது.
நீக்குபணம்னால் உஞ்சவ்ருத்தி அரிசியோடு மட்டைத் தேங்காய் வைத்து மேலே ஒரு ரூபாய் பணமும் வைப்பது உண்டு.
நீக்குசாஸ்திரத்துல அது கிடையாதுன்னு நினைக்கிறேன் கீசா மேடம்
நீக்குஎப்படியோ... நான் நினைத்தது சரிதான் என்று தெரிகிறது!
நீக்குஇப்போதுதான் பார்க்கிறேன்... கண்பார்வைத் திறனுக்கான புதிரை பா.வெ மேடம் முதற்கொண்டு யாருமே படிக்கவில்லை என்று.
பதிலளிநீக்குதிருவரங்கத்திலிருந்து பெங்களூரை அடையும்போது நள்ளிரவுக்கு மேல் ஆனதால் இப்போதுதான் எழுந்தேன். அதனால் தாமதம்.
வாரத்துக்கு இரண்டுமுறை திருவரங்கமா?
நீக்குநாளை அஹோபிலம் அதைத் தொடர்ந்து காஞ்சீபுரம். ஐந்து நாட்கள் பயணம். ஹா ஹா ஹா
நீக்குசரிதான்...
நீக்குமருத்துவருடன் ஆன அனுபவங்கள் ஹெஹெஹெ. நல்லவேளையா எனக்கு இப்படி எல்லாம் வரலையோ, பிழைச்சேன். :)))))
பதிலளிநீக்குகல்யாணத் தேன் நிலா பாட்டு ரொம்பப் பிடிக்கும்னு வீடியோவைப் போட்டால் வெறும் ராக விஸ்தாரம் மட்டும். ஆனாலும் பரவாயில்லை. அதுவும் நன்றாகவே இருந்தது. சார்லி சாப்ளின் எனப் படம் வந்திருந்ததும் அதில் காயத்ரி ரகுநாம் நடிச்சிருப்பதும் இப்போத் தெரிந்து கொண்டேன். பாட்டு பரவாயில்லை ரகம் தான். சார்லி சாப்ளின் ஒரிஜினல் எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காத ஒன்றல்லவோ? கு.கு.வைத் தூக்கிக் கொண்டு கொஞ்சினால் குழந்தையில் (ஆறு மாதத்தில்) இப்படித் தான் கன்னம் பழுக்க வைச்சுடும். அடிச்சுட்டுச் சிரிக்கும் பாருங்க ஒரு சிரிப்பு. அந்த அழகுக்கு ஈடு, இணையே இல்லை. :))))
அடிக்கும் குழந்தை ஒரு வகையில் இம்சைதான். காட்டிக்கொளளவும் முடியாது! சா சா அழகா காட்டி இருக்கிறார்.
நீக்குபொல்லாதவன் படத்தில் சுருளி ரஜினியின் அடம்பிடிக்கும் குழந்தை பற்றி சொல்லும்போது "ஸ்கூலுக்கு போகமாட்டேன்னு சமர்த்தா அடம் பிடிக்குதுங்க" என்பார் எரிச்சலை மறைத்துக்கொண்டு!
கவிதைப் பக்கம் நல்லாவே இருக்கு. ஆமாம், அவசரம் தான் பட்டுட்டீங்க. :)))) கொரியா படம் கலக்கும் போல இருக்கு. முடிஞ்சால் பார்க்கணும். இன்னும் "சாவா"வும் ஷிவாஜி யும் பார்க்கலை. டங்கலைப் பார்க்க வேண்டாம்னு ஒதுக்கிட்டேன் எப்போவோ. ஆனால் தினம் தினம் வந்து உயிரை எடுக்குது பார்க்கச் சொல்லி. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
பதிலளிநீக்குஅந்தக் குருட்டுப் பெண்ணுக்குப் பார்வை கிடைத்த ஜோக்கும். ஓட்டல் முதலாளிக்குப் பத்துப் பைசா தானம் செய்த கதையும் இதோடு பத்தாயிரத்து இருநூற்று இருநூறு முறை படிச்சேன்னு நினைக்கிறேன்.
செய்ங்க, நண்பர் ஆனதும் கேளூங்க, ஏன் இப்படிக் காப்பி, பேஸ்ட் செய்யறீங்கனு? அவங்க வலைப்பக்கமும் இதே படம் தான் இருக்கு.
கண் ஷார்ப்னெஸ் டெஸ்ட் ஏற்கெனவே பண்ணிட்டேனே? எங்கே? 10 ஆம் எண்ணில் உள்ள 1 க்குப் பதிலாக ஆங்கில காபிடல் எழுத்து ஈ யும், பதினாறில் மீண்டும் ஈ யும் இருக்கும். சரியா? ஏற்கெனவே பார்த்தது என்பதால் செக் பண்ணாமல் விடை எழுதி இருக்கேன். பிள்ளையாரே காப்பாத்து! :))))
ஐ மேல ஈ உட்கார்ந்ததனால் கீசா மேடத்துக்கு ஈ தெரியுதா?
நீக்குஹெஹெஹெ, அதுவும் இரண்டிலேயும் I தான். இந்த கூகிளார் செய்த வேலை அது ஈ ஆக வந்திருக்கு. கவனிக்காமல் வெளியிட்டிருக்கேன். :))))
நீக்குபிள்ளையாருக்கு என்னிடம் ஏதோ கோபம் போல, காப்பாத்தலை. :(
நீக்குஅடுத்த தடவை, பிள்ளையார் சதுர்த்தில பூரண கொழுக்கட்டை செய்ய மறந்துவிட்டாலும், நெல்லைத்தமிழன் வீட்டுக்கு வரும்போது கண்டிப்பா செய்துகொடுத்துவிடுகிறேன் என்று நினைச்சுக்கோங்க. எல்லாம் சரியாயிடும்.
நீக்குடங்கல் நான் ஒரு தரம் பார்த்திருக்கேன். சாவா சிவாஜி பார்க்கவில்லை. உடனே எனக்கு தேசபக்தி கம்மின்னு சொல்லிட மாட்டீங்கன்னு நினைக்கறேன்.
நீக்கு// பத்தாயிரத்து இருநூற்று இருநூறு?? //
இருநூற்று இருநூறு?? ஓகே இருநூற்று இன்னூற்றொன்றாவது முறையாக பார்த்து விடுங்கள்!
அவங்க கிட்ட நீங்களே கேட்கலை. அப்புறம் நானென்ன கேட்கிறது!
விடை சரிதான்.
காரணகர்த்தா நானிருக்க, கமெண்ட் அடுத்தவருக்கு கொழுக்கட்டையா? இதென்ன அநியாயம்! எனக்குதான் வரணும்.
நீக்கு//அவங்க கிட்ட நீங்களே கேட்கலை. அப்புறம் நானென்ன கேட்கிறது!//
நீக்குஅது சரி.
இந்தத் தரம் ஆடி வெள்ளியில் கொழுக்கட்டை போடவில்லை. அதைத் தான் பிள்ளையார் மறைமுகமாகச் சொல்லி இருப்பார். ஏனோ மனசு வரலை. அதான் போடவில்லை. இனியும் போடுவேன்னு தோணலை. :(((( மாமா இருந்தால் அடிச்சுப் பிடிச்சு உடம்பு முடியலைனாக் கூடச் செய்யத் தோணும். இப்போல்லாம் எதுவுமே தோனுவதில்லை. :(
நீக்குஆடி வெள்ளியில் எல்லாம் கொழுக்கட்டை போடுவார்களா? இது ஏன் பாஸுக்கு தெரிய மாட்டேன் என்கிறது? சர்க்கரைப் பொங்கல், கேசரி.. இதை விட்டால் திருக்கண்ணமுது!
நீக்குவணக்கம் சகோதரரே
நீக்குஆடி வெள்ளியில் முதல் வாரம் இனிப்பு கொழுக்கட்டை செய்து அம்மனுக்கு நேவேத்தியம் செய்தால் பணத்தட்டுபாடு ஏதும் வாராமல் இருக்குமெனவும், கடைசி வாரமும் அவ்வாறு செய்தால் வீட்டில் ,கடன் பிரச்சனைகள் ஏதும் வராமல் இருக்குமெனவும் நான் சென்னையில் இருந்த போது பக்கத்து வீட்டில் அன்போடு எங்கள் உறவு (கிட்டத்தட்ட ஒரு அம்மாவின் பரிவோடு) மாதிரி இருந்து வந்த மாமி ஒருவர் எனக்கு அறிவுரை கூறுவார். சிலர் வாராவாரமும் இவ்வாறு செய்து அம்மனை வழிபடுவார்கள். முக்கால்வாசி சமயத்தில், ஆடியிலேயே கடைசி வெள்ளி வரலக்ஷ்மி பூஜை வந்து விடும். எனவே நான் ஆடி முதல் வாரத்தில் எப்போதுமே, இல்லாவிட்டால் சில ஆண்டுகளாகவே (அவர்கள் அங்கு குடி வருவதற்கு முன்பே) கொழுக்கட்டை செய்து வழிபட்டு பூஜை செய்வேன்.அது எனக்கு வழக்கமாக இருந்தது.
சில போதில் ஆவணி மாதம் வரலெஷ்மி முதல் வாரம் வரும் போது, ஆடி கடைசி வெள்ளியும் அந்த மாமி "நீ முதல் வாரம் செய்தது போல, இந்த கடைசி வெள்ளியும் கொழுக்கட்டை செய்து விடு" என்பார். "அதுதான் முதல் வாரத்தில் செய்தேனே !! அதனால், நீங்கள் சொல்லியபடி பணவரவு அம்மன் அருளால் வந்து விட்டால், கடன் பிரச்சனை எப்படியும் வர வாய்பில்லையே மாமி..! "என்பேன். அவர் "ஓ..! நீ அப்படிச் சொல்கிறாயா.? என்றபடி சிரிப்புடன் என் பேச்சை ரசிப்பார்.
இன்று ஆடிவெள்ளி கொழுக்கட்டை பதில்களை படித்ததும் மலரும் நினைவாக அவர் நினைவு வந்து விட்டது. அவர் இப்போது எங்கிருக்கிறாரோ ..! நல்லபடியாக இருக்கட்டும் என மனது வேண்டிக் கொள்கிறது. நானும் தொடர்ந்து அவ்வாறு ஆடி வெள்ளியில் அவ்வப்போது செய்து வந்தேன். இப்போது இயலவில்லை. ஏதோ இன்று இதையெல்லாம் இங்கு சொல்ல வேண்டும் போல இருந்தது.. சொல்லி விட்டேன். நன்றி சகோதரரே
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
எங்க வீட்டில் கொழுக்கட்டையும் இருக்கும். பாயசமும் இருக்கும். கொழுக்கட்டை பிள்ளையாருக்கு. பாயசம் தினசரி நிவேதனத்தின் போது வைக்கும் சாதத்துடன் பருப்பு, பாயசம் வைப்போம். ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை உ.வடையும் இருக்கும். இப்போல்லாம் எதுவும் இல்லை. :))))
நீக்குவணக்கம் சகோதரி
நீக்குஆமாம்..இறைவனுக்கு எனும் போதில், நிறைய பண்ண வேண்டுமென்ற ஆவல் எனக்கும் இருந்தது. முன்பெல்லாம் எனக்கும், எவ்வளவு நேரமாயினும், உபவாசம் இருக்கும் சக்தியும், வேலைகளை எவ்வளவு மேணுமானாலும் இழுத்துக் போட்டுக் கொண்டு செய்யும் சக்தியும் இருந்தது. இப்போது அது சற்று குறைந்து விட்டதை உணர்கிறேன்.
நீங்களாவது என் பதிவு போன்ற நீண்ட கருத்தை கவனித்து உடன் வந்து பதில் தந்தீர்களே..! மிக்க மகிழ்ச்சியடைந்தேன் சகோதரி. உங்களுக்கு மிக்க நன்றி. 🙏.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஜெமினி பற்றிய ஆய்வுக் கட்டுரைத் தகவல்களுக்கு நன்றி. தினம் தினம் கணினியைத் திறந்ததும் வலது ஓரத்தில் ஆஸ்க் ஜெமினினு வந்து உட்கார்ந்துக்கும். ஆனால் நான் அதைச் சட்டை பண்ணுவதில்லை. சில சமயங்களில் வலிய வந்து உதவுவதாகவும் சொல்லும். ம்ஹூம்.
பதிலளிநீக்குகொஞ்சம், கொஞ்சம், ரேகாவை நினைவூட்டுவார். படம் பார்த்திருக்கேன் . தொலைக்காட்சி தயவில். பாவம், இந்தப் படத்தில் நடிக்கையில் ஏதேதோ சிக்கல்களால் மருத்துவப் படிப்பை விட்டுட்டு வந்து நடிச்சுக் கொடுத்தார். ஜெமினிக்கு இஷ்டம் இல்லைனு கேள்விப் பட்டிருக்கேன். கமலா தான் மிகவும் கஷ்டப்பட்டு இவங்களோட வாழ்க்கையைச் சீரமைத்துக் கொடுத்ததாகவும் கேள்வி. இவங்க மருத்துவத்தில் எய்ட்ஸ் நோய்க்கான சிறப்புப் படிப்புப் படிச்சு ஒருவழியாகச் சுமார் 29/30 வயதில் மருத்துவப் படிப்பை முடிச்சாங்கனு நினைக்கிறேன். இயக்குநர் ஸ்ரீதர் ராஜன் என்பவரைக் கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் இவரால் கமலா செல்வராஜ் மாதிரி சோபிக்க முடியலை. என்னோட 2 மற்றும் 3 ஆவது நாத்தனார்கள் இருவரும் கமலா செல்வராஜின் வாடிக்கையான பேஷன்ட்கள். கடைசி நாத்தனாருக்கு ஒரு அறுவை சிகிச்சை ஜீஜீ மருத்துவமனையில் நடந்தப்போ நான் தான் முதல் ஐந்து நாட்கள் கிட்டே இருந்தேன். அப்போக் கமலா நோயாளியைப் பார்க்க வரும்போதெல்லாம் பேசுவாங்க. எல்லா வீட்டு, ஊர் வம்புகளும் நல்லாப் பேசி இருக்காங்க. இது நடந்தது சுமார் 40 வருடங்கள் முன்னால் 86 ஆம் ஆண்டில் என நினைவு.
பார்றா.... இவர்களையும் நேர்ல பார்த்து பேசிட்டீங்களா... என்னடா அநியாயம்... நான் மட்டும்தான் யாரையும் பார்க்கலை.
நீக்குஎன் 2 ஆவது நாத்தனார், எனக்கு, மற்றும் கமலா செல்வராஜ் ஆகியோருக்கு70 & 71 களில் தான் அடுத்தடுத்துக் கல்யாணம் ஆச்சு. கமலாவை ஜெமினி வீட்டில் சேர்க்காத நேரம் அது. தி.நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள மாட்லி ரோடில் தான் கமலாவும், செல்வராஜும் சின்ன க்ளினிக் வைச்சிருந்தாங்க. என் மாமனாருக்கு செல்வராஜ் தான் பார்த்தார். கார்டியாக் பிரச்னை இருக்குமோனு சந்தேகம். பின்னர் ஒண்ணுமில்லைனு சொன்னார். ஆனால் வெற்றிலை, பாக்குப் போடுவதைச் சுத்தமா நிறுத்தணும்னு சொன்னார். மாமனார் அதெல்லாம் கேட்டுக்கலை. அப்போ என் முதல் மைத்துனர், மாமனார், மாமியார், கடைசி மைத்துனர் ஆகியோர் தி.நகர் சிவாஜி தெருவில் ஒரு போர்ஷனில் இருந்தாங்க. பெரிய வீடு. கோமுட்டிச் செட்டி என்பவர்கள் வீட்டுச் சொந்தக்காரங்க. பெரிய பணம் படைச்சவங்க . மாளிகை போன்ற 2 கட்டு வீட்டை சுமார் 20 போர்ஷன்களாகப் பிரிச்சு வாடகைக்கு விட்டுட்டு அவங்க உள்ள்ள்ளே ஒரு ஹால் 2, படுக்கை அறை, சமையல் அறை, குளியல் அறை மற்றும் கொல்லைப் பக்கத் தோட்டம், கிணறு அடங்கிய பகுதியில் இருந்தாங்க. அதுக்கு வெளியே இருந்த முற்றத்தில் வாடகைக்கு இருப்பவங்களுக்கான கிணறு. பெரீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈய கிணறு. இருந்தது. எங்க குடும்பம் மாடியில் இருந்ததால் தண்ணீர் எடுக்கக் கீழே தான் வரணும். நாங்க அப்போ சிகிந்திராபாதில் இருந்தோம். லீவுக்கு இங்கே வருவோம்.
நீக்குஅப்போத் தான் அவங்களை முதல் முதலாகப் பார்த்தோம். கமலாவுக்கு முதல் பையர் பிறந்திருந்தார். அம்மாவிடம் விட்டுவிட்டு வருவதாகச் சொன்னார். அதுவும் அவங்க உள்ளே எல்லாம் போகக் கூடாதாம். வாசல் வராந்தாவிலே குழந்தையைப் போட்டுவிட்டு நிப்பாங்களாம். உள்ளே இருந்து யாராவது வந்து குழந்தையைத் தூக்கிண்டு போவாங்களாம். பின்னாட்களில் ஜெமினி மனசு மாறி அந்தக் குழந்தையை ஏற்றுக் கொண்டார் என்பார்கள். முதல் பேரன். கமலாவுக்கு மூத்த 2 அக்காக்களுக்கும் பெண்கள் தானாம். இந்தப் பையருக்குப் பூணூல் எல்லாம் போட்டாங்க. 2 ஆவது நாத்தனாருக்கு அழைப்பு வந்திருந்ததாகச் சொல்வார்கள்.
நீக்குசரிதான்.. கமலாவையும் ஜெமினி? வேற்று ஜாதியா?
நீக்குநீங்கள் சொல்லும் வீட்டு அமைப்பில் இன்னமும் யாராவது குடி இருப்பார்களா?
Selvaraj is a christian. தெரியாதா உங்களுக்கு? ஜெமினி எப்போவுமே பாப்ஜி (முதல் மனைவி) மூலம் பிறந்த பெண்களிடம் கண்டிப்பாக நடந்துப்பார் எனச் சொல்வார்கள். கமலா செல்வராஜுமே ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் இதைச் சொல்லி இருக்காங்க. மூத்த இரு பெண்களுக்கும் (அவங்களுமே மருத்துவர்கள் என நினைவு மாலதி, நாராயணினோ என்னமோ பெயர்). ஜெமினி பார்த்துச் செய்து வைத்த கல்யாணம் என்பார்கள்.
நீக்குஅந்த சிவாஜி தெரு வீடா? ரொம்பப் பெரிய வீடு. வாசல் கதவில் இருந்து உள்ளே போகவே ஐந்து நிமிஷம் ஆகும். படிகள் எல்லாம் அந்தக் காலத்து ஃபாஷன்படி வளைத்துக் கட்டப்பட்டிருக்கும். வெளியே இரு பக்கமும் உட்கார சிமென்ட் பெஞ்சுகள் இருக்கும். இப்போ இருக்கோ, இல்லை ஏதேனும் குடியிருப்பு வளாகமாக ஆகி இருக்குமோ தெரியலை. நான் தி.நகரெல்லாம் போய்ப் பல வருஷங்கள் ஆகிவிட்டன. மேற்கு மாம்பலம் தம்பி வீட்டுக்கே அவரோட 2 ஆவது பிள்ளை கல்யாணத்தில் 2021 இல் போனது. அம்பத்தூரெல்லாம் போய்ப் பத்து வருஷங்களுக்கும் மேல் ஆகின்றன. :))))
நீக்குஹையா,ஹையா, ஜோக்குகளெல்லாம் பெரிய எழுத்தில் வந்திருக்கே! ஜாலிலோ ஜிம்கானா, டோலிலோ கும்கானா! படிச்சுட்டு வரேன். ஓகே?
பதிலளிநீக்குஆமாம். ரெண்டும் கொடுத்திருக்கேன்.
நீக்குஇது நம் அரசியல் ரவீனின் கார்ட்டூன் ஜோக்குகள் அரசியல் சார்ந்திருந்தாலும் சிரிக்க வைத்தன. புன்னகையாவது வந்திருக்கணுமே?
பதிலளிநீக்குஹிஹிஹி, வடாம் ஜோக் முன்னாடியே படிச்சுட்டேன். எதிலேனு நினைவு வரலை. :))) துணுக்கு எழுத்தாளர் வெ.சீதாராமன், எல்லாத்திலேயும் எழுதுவார் என்பதால் சொல்லத் தெரியலை. ஆனால் ப்ரின்டிங் பார்த்தால் குங்குமம் மாதிரித் தெரியுது.
கணவன் பெயரைப் புரளினு மாத்தினது பத்திச் சொன்னாலும் இந்த் விஷயம் தண்டனைக்குரிய குற்றம் இல்லையோ? எனக்கென்னமோ இப்படிப் பட்ட ஜோக்குகளுக்கெல்லாம் சிரிக்கத் தோணலை. :(
பாவம், 2,3 முறை வந்து காட்சி மாறாமல் இருப்பதாக உறுதி மொழி கொடுக்கிறார், ரவீனின் இந்த அரசியல் வியாதி.
ஓஹோ, அந்தச் சின்னச் சின்ன எழுத்தில் இருப்பதைத் தனித்தனியாப் பெரிய எழுத்து விக்ரமாதித்தன் மாதிரிப் போட்டிருக்கீங்களா? எல்லாமே ரிப்பீஈட்டு. நான் "அபீட்" என்கிறாப் போல் இருக்கு. :)
ஜோக்குகளை விம் போட்டு விளக்கிட்டீங்க...
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை. இன்றைய கவிதைகள் இரண்டும் நன்றாக உள்ளது. முதல் கவிதைக்கு விடை "போதையின் விஷமந்தான்" வேறென்ன..? . இரண்டாவது கண் கெட்ட பிறகு சூ. நமஸ்காரம்.
கண் புதிருக்கான விடை 10,12,16.போன்ற எண்களின் (ஒன்று போல காட்டாத) ஒன்றின் மாற்றங்கள்.
குருட்டுப் பெண் ஸ்வீட் தந்த ஜோக் இங்கேயே (எபியில்) படித்துள்ளேன் என நினைக்கிறேன். ஆக இன்று அனைத்தும் கண்களுக்கான விஷயங்கள்தான். முதலாவது மட்டுந்தான் மூக்கின் அவஸ்தைகள்.
பாடல்கள் இரண்டும் ஒரே ராகத்தில் அமைந்திருப்பது சிறப்பு. முதலாவது கேட்டதாக நினைவில்லை. இரண்டாவது அடிக்கடி கேட்டுள்ளேன். இரண்டையும் இப்போது ஒரு முறை கேட்டு ரசிக்கிறேன்.
ஜோக் அனைத்தும் நன்றாக உள்ளது. நானும் உங்கள் ஜோக் பகிர்வு போல, இவை எல்லாவற்றையும் இப்போது ஒன்றுக்கு இரண்டாவதாக தட்டச்சு செய்து கருத்திடுகிறேன். முதலாவதை முடிக்கும் தருவாயில் அது மாயமாக மறைந்து விட்டது. இரண்டாவது அத்தனை சுவாரஸ்யம் தராது. இருப்பினும் ஏதோ நினைவு வைத்தபடி தந்திருக்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
என் இந்த கருத்தை அவசரத்தில் கவனிக்கவில்லை போலும்.! மேலும் கொழுக்கட்டை நினைவாக ஒரு கருத்தை வேறு பதிவாக தந்திருக்கிறேன்.
நீக்குஇரண்டு மூன்று நாட்களாக வரமுடியாத வேலை.
பதிலளிநீக்குஹாஸ்பிட்டல் அனுபவம் ரசனை.
பாடல்கள் நன்று. ஜோக்ஸ் சுமார்..
சாலி சப்ளின் ஹா....ஹா.
வாங்க மாதேவி.. நன்றி.
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா.. வணக்கம்.
நீக்குஆஸ்பத்திரி அனுபவ அவஸ்தைகளை சிரிப்பாக சொல்லி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்கு//"ஏன்மா ஒரு ஸ்டூல் போட மாட்டியா? தெரியாதா இதெல்லாம் உனக்கு? சொல்லித் தரணுமா? ஸென்ஸ் இல்ல?" //
ஸ்டூலை நகர்த்தாமல் அதே இடத்தில் வைக்க சொல்ல வேண்டாமா மருத்துவர் நர்ஸிடம். அவர் மேலும் தப்புதானே!
அதெல்லாம் நர்ஸ் பார்த்துச் செய்யவேண்டிய வேலை. ஏதோ காரணத்தால் அது சுவரோரமாக இருந்திருக்கிறது. ஆனால் மருத்துவர் செய்ய வேண்டிய வேலையையே அவர் சரியாக செய்யவில்லை. அதாவது எங்களிடம் - என்னிடமோ, மகன், மனைவியிடமோ - விவரம் எதுவும் சரியாக சொலல்வில்லை. அதை நாங்கள் அவர் உதவியாளர்களிடம் குறிப்பிட்டுச் சொன்னோம்.
நீக்குநவ்நீத் உன்னிகிருஷ்ணன் பாடியதை கேட்டேன் நன்றாக இருந்தது.
பதிலளிநீக்குபா. விஜய்யின் பாடலை கேட்டேன். சார்லிசாப்ளின் குழந்தையிடம் அடிவாங்குவது போல நாமு அடி வாங்குவோம். ஆனால் அவர் குழந்தையை காலால் எட்டி தள்ளுவது போல தள்ள மனம் வராது.
கவிதைப் பக்கத்தில் உங்கள் கவிதை வாசித்தேன்.
பட விமர்சனம் இறந்தவர்களையும் விடவில்லையா வாஸ்து? என்ற கேள்வியை கேட்க சொல்கிறது.
நவ்நீத் உன்னிகிருஷ்ணன் - இவர் பக்கம் சென்று பார்த்தால் நிறைய தமிழ், மலையாள பாடல்களை இப்படி இவர் பாணியில் அலசி இருக்கிறார்.
நீக்குஆமாம். குழந்தைகளை நாம் எட்டி உதைக்க மாட்டோம்.
பட விமர்சனத்தில் வாஸ்து என்கிற வார்த்தையை நான் ப்ரயோகித்திருக்கிறேன்! ஆனால் கிட்டத்தட்ட அப்படித்தான் படம் நகரும்.
மீண்டும் இறங்கி ஏறுவதை டாக்டர் ரசிக்க மாட்டார்தான். ஆனால் உங்கள் எழுத்து ரசிக்க வைக்கிறது:).
பதிலளிநீக்குகவிதைகள், அரசியல் துணுக்குகள் அருமை. தொகுப்பு நன்று.
ஆமாம். குழந்தைத்தனமாக இருக்கும்! அதனால்தான் செய்யவில்லை. நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குபழைய SMS ஜோக்
பதிலளிநீக்குநம்ப முடியவில்லை, பார்வை வந்த பெண் அலறி ஓடவில்லையே! கேள்விக்கு பதில் சொல்கிறார்.
அவர் ஒன்றும் சொல்ல முடியாமல் திகைத்து சீன போடவேண்டாம் என்று இருந்திருக்கலாம். அவன் ஏன் அப்படி வந்திருக்கிறான் என்று புரிந்துகொண்டிருக்கலாம். ஜோக்தானே.. விடுங்க!!
நீக்குதிரைப்படக் கதாசிரியர் ஆர். செல்வராஜ் போல இப்படித்தான் சிலரை தவறாக எடை போட்டு விடுகிறோம்.
பதிலளிநீக்குஜோக்ஸ் மொத்தமாகவுமத்யே தனி தனியாகவும் எடுத்து போட்டுவீட்டீர்கள்.
அரசியல் ஜோக்ஸ் கேலிகூத்துதான்.
ஆமாம். நன்றி கோமதி அக்கா.
நீக்கு