25.9.26

சும்மா இருத்தலே சுகம்.

எல்லோரும் அவரவர் சொல்வது தான் சரி என்று நினைக்கிறார்கள். தான் சொல்லும் கருத்து மட்டுமே சரி என்று நினைக்கிறார்கள்.  அடுத்தவர்கள் கருத்தை அவர்கள் வரவேற்பதில்லை.  ஏற்றுக்கொள்வதில்லை.   ஆனால் வருந்தி வருந்தி கருத்து கேட்கிறார்கள்.  

"இதைப்பற்றி உன் அபிப்ராயம் என்ன?  இதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?  மனசுல இருக்கறத சொல்லு.."  ஏதோ ஒரு வெளிப்படையான விவாதத்துக்கு தயாராக இருப்பது போலவே கேட்கிறார்கள்.  ஏதோ தன்னை மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் போல...  எவ்வளவு முன் அனுபவங்கள் இருந்தாலும், எவ்வளவு உஷாராக இருந்தாலும் நம்மையும் மீறி சில நேரம் கருத்து சொல்ல வேண்டியதாகி விடுகிறது.  

நம்பி எதுவும் சொல்ல முடியாது இல்லை?  சொன்னால் கெட்ட பெயர் தான் வருகிறது பாருங்கள்!  அப்புறம் நாம் சொன்ன கருத்துக்கு மாய்ந்து மாய்ந்து விளக்கம் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.  'ஏண்டா வாயைத் திறந்தோம்' என்று ஆகிவிடுகிறது.  சென்ற வார கவிதை மாதிரி மௌனமே நல்ல மருந்து!  வம்பே இல்லை.

இது போதாது என்று அதே விஷயம் வேறு காதுகளுக்குச் சென்று அவர்கள் மூலமும் கேள்வி வருகிறது, "நீ இப்படிச் சொன்னாயாமே....  (இன்னொருவர் பெயரைச் சொல்லி)  அவர் சரியா சொன்னாராம்" என்று...  

அந்த இன்னொரு நபர் பிழைக்கத் தெரிந்த மனிதர் என்று தெரிகிறது.   சும்மா இருத்தலே சுகம்.

ஏதோ ஒரு வகையில் எல்லோரும் அடுத்தவர்களை தவறு என்று நிரூபிப்பதிலேயே குறியாக இருக்கிறோம்.

நான் முன்பு கூட ஒரு பதிவு எழுதி இருந்தேன்.   பாஸ் வந்து கேள்வி கேட்பதும், நான் அதற்கு பதில் சொல்வதுமாக... 

'இன்று சமையல் துவையல் மட்டும் அரைத்து விடட்டுமா' என்று கேட்க,  நான் 'சரி' என்பேன்.   'இல்லைன்னா பெரியவன் சாம்பார் கேட்பான் செய்து விடுகிறேன்'  என்று சொல்ல, நான் அதற்கும் சரி என்று சொல்ல, 'இளையவன் கறி கேட்பான் அதையும் செய்து விடவா?' என்று கேட்க, அதற்கும் நான் சரி என்பேன்.   ஏனெனில்  நாம் ஏதாவது யோசனை சொன்னால் அடுத்து ஏற்படும் விளைவுகளுக்கு நம்மை பொறுப்பாக்க தயாராக இருக்கிறார்கள் -  மனைவி உட்பட.  பிறகு மற்றவர்களை சொல்லி என்ன பயன்?

******************************


எங்கள் வீட்டில் மோர் சில நாட்களாக மூக்கு சளி போல வினோதமாக இருக்கிறது.   அவ்வப்போது இது மாதிரி நிகழ்கிறது.   பிறகு தானாகவே சரி ஆகிறது.   

சில சமயங்களில் வேறு உறவினர் வீடுகளிலிருந்து உறைமோர் வாங்கி உறை குத்தினால் சரியாக வரும்.   சமயங்களில் அதுவும் அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதில்லை.   எனக்கு தெரிந்தவர்கள் பலரும் அவர்கள் வீட்டிலும் மோர் இப்படித்தான் இருக்கிறது என்கிறார்கள்.  

ஆவின் பாலில்  என்னதான் கலக்கிறார்களோ?  என்ன கோளாறு என்றே தெரிவதில்லை.  பச்சை நிற கவர் வாங்க காசு கொடுக்கிறோம்.  ஏற்கனவே எழுதி இருக்கிறேன், பச்சை நிற கவர் டிமாண்ட் என்று அதே விலை, அதே தரம் என்று சொல்லி டிலைட் என்கிற கவரைதான் பெரும்பாலும் போடுகிறார்கள்.  அது தனிப்பிரச்னை.  புதிய அரசாங்கம் வந்தும் இந்தப் பிரச்னை தீரவில்லை.

இதுமாதிரி சமயங்களில் கடையிலிருந்து மில்க்கி மிஸ்ட், அட்சயகல்பா, ஹட்ஸன் என்று தயிர் வாங்கி உபயோகிக்கிறோம்.  அதில் உறைகுத்தினால் சமயங்களில் சரியாகும்.  

சமயங்களில்தான்..

====================================================================================




நவீன கணிதம் பிறந்தது மேற்கத்திய சிந்தனையின் அடிப்படையில். இன்றைய நாட்களில் கணிதம் இரு வகையாகப் பிரிந்திருக்கிறது என்று சொல்லலாம். மற்ற துறைகளுக்கு உதவும் கணிதம், துல்லியமான கணிதம். Applied, Pure என்று இரு பெரிய பிரிவுகள்.
வேதியியல். இயற்பியல், - ஏன், உயிரியல் எல்லாவற்றுக்குமே கணிதத்தினுடைய உதவி தேவைப்படுகிறது. நவீன க்வாண்டம் இயற்பியலில் பல சித்தாந்தங்கள் கணிதத்தின் உதவிகொண்டு நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.
எண்களையும் அவைகளின் குணங்களைப் பற்றியும் தனிப்படுத்தி சிந்திப்பது. இது போன்ற இது கொஞ்சம் சிக்கலானது.
ருசி பார்க்கிறீர்களா?
மூன்று ஒரு எண் என்கிறோம். மூன்று என்றால் என்ன? மூன்றுதனம் என்று ஏதாவது தனியாக இருக்கிறதா? மூன்று என்பது ஒரு குணம். சில பொருள்களின் தொகுப்புக்கு உள்ள குணம். உதாரணம் ஒரு முக்கோணத்தின் பக்கங்கள்,. ஒரு குழந்தை சைக்கிளின் சக்கரங்கள், ஒரு கிளாவர் வடிவத்தின் இலைகள். . பரமசிவனின் கண்கள். இவை அனைத்துக்கும் பொதுவாக உள்ள ஒரு குணம் இந்த மூன்று தனம்.
எனவே 3 என்பது என்ன என்று யாராவது கேட்டால் 3 தனம் உள்ள எல்லா தொகுப்புகளின் தொகுப்பு. A set of sets. ஒரு கூடையில் மூன்று பழங்கள் இருந்தால் அந்த கூடை 3 என்ற சங்கத்தின் ஒரு அங்கத்தினர்!
மூன்று என்பது ஒரு குறியீடோ வரி வடிவமோ அல்ல.
ஒரு குறிப்பிட்ட (மூன்று தனம் என்னும்) குணம் கொண்ட பொருட்களின் தொகுப்பு.
இதுவரை புரிந்தாலே பாக்கியம். இப்போது இதிலிருந்து 'ரஸ்ஸல்ஸ் பாரடாக்ஸ்'' என்னும் அடுத்த கட்டத்துக்கு போனால் அடிக்க வருவீர்கள்/ இருந்தாலும் உங்களை யோசிக்க வைக்க ஒருவாறு எளிமைப்படுத்தப்பட்ட ரஸ்ஸல்ஸ் பாரடாக்ஸ்'!
'சின்ன' என்பது சின்ன வார்த்தை. ஆனால் 'பெரிய' என்பது பெரிய வார்த்தை அல்ல. எனவே தமிழ் வார்த்தைகளை இப்படி இரண்டு வகையாக பிரிக்க முடியும்.
ஒன்று வார்த்தையின் குணம் வார்த்தைக்கே இருப்பவை
இரண்டு வார்த்தையின் குணம் அந்த வார்த்தைக்கு இல்லாதவை.
முதல் வகை வார்த்தைகளை 'சொந்த' என்றும் இரண்டாம் வகை வார்த்தைகளை 'அந்நிய' என்றும் பெயரிட்டு வகைப்படுத்துகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது ஒரு கேள்வி.
'அந்நிய' என்னும் வார்த்தை எந்த வகையைச் சேரும்? சொந்தமா? அந்நியமா? இதை யோசித்து யோசித்து நீங்கள் தூக்கமோ முடியோ இழந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல
]]]]]]]]]]
"அறிவோம்.. சிந்திப்போம் " நூலில் சுஜாதா

==============================================================================

ஃபேஸ்புக்கிலிருந்து\=- கீழே உள்ளது எழுதியவரின் கருத்து.


தமிழகம் மறக்கமுடியா மாபெரும் நடிகரான சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி காலமானார் என்பது எல்லோருக்கும் அதிர்ச்சி செய்தி என்றாலும் சிவாஜி குடும்பம் பற்றி அறிந்தோர்க்கு மிகபெரிய துயர செய்தி
சாந்தி எனும் அந்த மூத்த மகள் சிவாஜிக்கு உயிரணைய இருந்தவர், அவர் பிறந்து வளர வளரத்தான் தனக்கு செல்வம் கொட்டியதாக சிவாஜி நம்பினார், கனிமொழி பிறந்து தன்னை முதல்வராக்கிற்று என நம்பிய கலைஞர் போல் சாந்தி பிறந்த நேரமே தான் உச்சிக்கு சென்றதாக சிவாஜியும் நம்பினார்
இது ஜோசியமா ஜாதகமா என்பது விஷயம் அல்ல, ஒரு புண்ணிய ஆத்மா பூமிக்கு வரும்போது அது சுகத்தோடும் செல்வத்தோடும் வாழும்படி அதன் பெற்றோர்க்கு பிரபஞ்சம் பல வசதிகளை பெற்றோர் மூலம் செய்யும், அப்படி சாந்திக்கும் அள்ளி கொடுத்தது காலம்
சிவாஜி தன் தியேட்டர் முதல் பல இடங்களுக்கு அவர் பெயரையே இட்டிருந்தார், சாந்தி தியேட்டர் என்பது சென்னையின் அடையாளமாக அவர் பெயரில் இருந்தது
சிவாஜியின் வெற்றிப் படங்கள் மட்டுமல்ல, பிரபுவின் சின்னதம்பி வரை அங்குதான் வருடக் கணக்கில் ஓடிய காலமும் இருந்தது
நாராயணசாமி என்பவர்க்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்திருந்தாலும் கண்ணுக்குள் வைத்து தன் மகளை காத்தே வந்தார்
எந்த மகளை சிவாஜி தன் உயிராக வைத்திருந்தாரோ அதே மகளுக்கு சோதனை அதிமுக வடிவிலும் சிவாஜியின் முக்குலத்தோர் சாதி வடிவிலும் வந்தது, 1991ல் முதல்வரான ஜெயலலிதாவுக்கு ஏகப்பட்ட ஆசைகள் முளைத்தன அதில் ஒன்று குபீர் தாயாவது

யானைகளை தத்தெடுத்து வந்த அந்த ஜெயலலிதா திடீரென 28 வயதான ஒரு மகனை சசிகலா குடும்பத்தில் இருந்து தத்தெடுத்து தாயுமானார், அவருக்கு திருமணம் செய்துவைக்க இந்த சாந்தியின் மகளான சத்தியலஷ்மியினை பெண் கேட்டார்
சிவாஜிக்கு அதில் விருப்பமில்லை என்றாலும் அன்றைய நடராஜன், சசிகலா வியூகம் முன் அவரால் நிற்க முடியவில்லை, அது கருணாநிதி விழுந்து கிடந்த நேரம் மத்தியிலும் சிவாஜிக்கு நெருக்கமானவர்கள் இல்லை
இதனால் அவருக்கு உதவ யாருமில்லை ஜெயா கும்பலின் மிரட்டலே வென்றது, அந்த திருமணமும் நடந்தது
அதை தொடர்ந்த குழப்பம் சுதாகரன் மீதான வழக்குகள், ஜெயா திடீரென நான் உனக்கு அன்னையல்ல என சுதாகரனை விரட்டி அடித்தது இன்னும் எல்லா குழப்பமும் சாந்தியினை பாதித்தது, அவரை பாதித்த துயரம் சிவாஜியினையும் பாதிக்க அவரும் 71 வயதிலே காலமானார்
சாந்தி மகளின் திருமணத்தின் போது ஜெயா சசிகலா சாரட் வண்டியில் வர, தனியே ஓரமாக அனாதைபோல் நடந்து வந்த சிவாஜியினை மறக்க முடியாது, அவரைப் பொறுத்தவரை அன்றே அவர் மனதால் மரித்துவிட்டார்
இவ்வளவுக்கும் ஜெயாவின் பரதநாட்டிய அரங்கேற்றத்தில் அவரை கண்டு வாழ்த்தியவர் சிவாஜி, ஜெயா நடிக்க வர அவரும் முதல் காரணம். ஆனால் நன்றி என்பதெல்லாம் அரசியலில் இருக்க முடியாது. ஜெயாவும் விதிவிலக்கு அல்ல‌
அந்த சசிகலா குடும்பத்தால் பாதிக்கபட்ட சாந்தியும் இன்று காலமாகிவிட்டார்
சொந்த சாதி கணக்கு மன்னார்குடி தஞ்சாவூரில் சிவாஜிக்கு இருந்த சொத்து கணக்கு என எல்லாம் கணக்கிட்டு செய்யபட்ட அந்த திருமணம் வருமான கணக்கு சரியில்லாததால் தவறி போனது, ஆண்டவன் கணக்கு சரியாகி போனது
சிவாஜிக்கு பின் மனம் தளர்ந்திருந்த சாந்தி நடக்கும் கொடுமையெல்லாம் கண்டபடி அமர்ந்திருந்தார், மருமகனின் சிறைவாழ்வு இன்னும் பல கொடுமைகளை கண்டவர் அப்படியே கவலையுற்று இன்று விடைபெற்றும் கொண்டார்
ஒருவகையில் அவர் ராசியான பிறப்பு. ஆனால் அள்ளி கொடுக்கும் குழந்தையே தீரா துன்பத்துக்கும் காரணமாகி விடும் என்பது பல இல்லங்களில் காணப்படும் விதி. அது சிவாஜி குடும்பத்திலும் கண்கண்ட சாட்சியாகிவிட்டது, இதெல்லாம் கர்ம கணக்குகள்.

சிவாஜி கணேசன் எனும் மாபெரும் கலைஞனின் மூத்த மகளாக வளர்க்கப்படும் பாக்கியம் பெற்ற அந்த ஆத்மா இன்று தன் வந்த வேலை முடித்து கொண்டு பறந்து விட்டது
இந்த இடத்தில் சொல்ல கூடாதுதான் ஆனால் திமுகவினர் எவ்வளவு ஆபாசமாக பேசுபவர்கள் அவர்கள் ஆபாசத்தின் உச்சம் என்ன என்பதற்கு இந்த அம்மையாரின் திருமண காட்சியும் ஒன்று

அப்போது சிவாஜி காங்கிரசில் இருந்தார், தன் மகள் மணம் செய்து கொடுத்தது மன்னார்குடி பகுதி என்பதால் அங்கு பிரச்சாரத்துக்கு செல்லும் போது "இது என் மகளை தந்த ஊர் அதனால் உங்களிடம் உரிமையாக காங்கிரசுக்கு வாக்கு கேட்கின்றேன்" என்றார்
எதிர்தரப்பில் திமுக அன்றைய வில்லன் நடிகர் அசோகனை பேச வைத்தது, அவர் தன் கண்களை சிமிட்டியபடியே கேட்டார் "சிவாஜி கணேசன் தன் மகளை அந்த குடும்பத்துக்கு கொடுத்தாரா இல்லை ஊருக்கே கொடுத்தாரா"

இது அன்று பெரிய சர்ச்சையானது பின்னாளில் அசோகன் அது பிரபல கட்சிதலைவர் ஒருவர் எழுதி தந்தது என்பது போல் பேசிவிட்டு சென்றுவிட்டார், அந்த பிரபல தலைவர் யார் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.

சிவாஜி நடிப்பிலே உச்சமானது மகள்பால் காட்டும் நடிப்பு, அவரின் படங்களை கவனியுங்கள் மகள் பாத்திரம் மேல் அவர் காட்டும் அன்பு எப்போதுமே அலாதியானது, உருக்கமானது.

"பார் மகளே பார்" என பாடும்போதாகட்டும், "ஞான ஒளி" படத்தில் மகளை கொண்டாடும் பாத்திரமாகட்டும், முதிர்பருவ வாசலில் நதியாவோடு "அன்புள்ள அப்பா" என பாடியதாகட்டும், தன் அந்திம காலத்தில் "பசும்பொன்" படத்தில் காட்டிய உருக்கமான மகள் பாசமாகட்டும் மகள் என்றாலே அவர் காட்டும் அந்த பாசம் நடிப்பினை மீறிய இயல்பு நிலை , முதல்மரியாதையில் கூட அந்த சாயல் உண்டு
திரையிலே அப்படி நடித்த கலைஞன் நிஜத்தில் எப்படியெல்லாம் மகளை வளர்த்திருப்பான், ஆனால் நிலையில்லா உலகில் எல்லாமே வெறும் மாயை எல்லாமே கனவு எனும் உலகில் எது நின்றுவிடமுடியும்?, இரக்கமற்ற காலம் எதற்கு காத்திருக்கும்.

சிவாஜி கணேசனுக்கு பேஸ்மேக்கர் பொருத்தபட்டு இனி மது அருந்த கூடாது எனும் நிலை இருந்தபோது, மகளின் கவலையில் அவர் உச்சத்தில் இருந்தபோது சிவகுமார் காண சென்றார்
அப்போது சிவாஜி சொன்னதுதான் வலி "கவுண்டா, எவ்வளவு சம்பாதிச்சி என்னடா? எவ்வளவு பேர் புகழ் இருந்து என்னடா? பெத்த மகள் கவலைய என்னால தீர்க்க முடியலிலியே, நான் என்னடா தகப்பன்? அவ கண்ணீர கண்ட அப்புறமும் நான் ஏன் இருக்கணும்?"

அந்த கண்ணீர் எங்கு விழுந்து பலிக்கவேண்டுமோ அப்படி பலித்தும் போனது, கர்மவினையினை முடித்துவிட்டு அந்த அம்மையாரும் கிளம்பிவிட்டார்,காலம் அதன் இயக்கத்தை அதன் விதிப்படி தொடர்கின்றது.

அந்த சாந்தி அம்மையாருக்கும் வயது 71, சிவாஜி கணேசன் மறையும் போதும் வயது அதே 71, தீரா புகழை பெரும் செல்வத்தை கொடுத்த ஆண்டவன் ஆயுளை மட்டும் இப்படி சுருக்கி வைத்திருப்பதெல்லாம் அவனுக்கே தெரிந்த ரகசியம், அந்த கணக்கை யாரால் புரிந்து கொள்ளமுடியும்?

பிரம்ம ரிஷி

=====================================================================================

இந்நூலைப் பற்றி...

"அம்மா வந்தாளைப் பற்றி நான் ரகசியங்கள் ஏதும் சொல்ல இல்லை. நூல்தான் முக்கியம். எப்படி ஏன் எழுதப்பட்டது என்பது யாருக்குமே முக்கியமில்லை என்பது என் துணிபு. கலைப் படைப்பு என்ற ஒரு நோக்கோடு அதைப் பார்ப்பது நல்லது. பலர் அதைத் தூற்றி விட்டார்கள். நான் 'பிரஷ்டன்' என்றும் சொல்லி விட்டார்கள். நம்முடைய நாட்டில் கலை, பிரஷ்டர்களிடமிருந்து தான் பிறந்து வருகிறது என்று கூற விரும்புகிறேன்.

'அம்மா வந்தாள்' நான் கண்ட கேட்ட சில மனிதர்கள், வாழ்க்கைகள், பாத்திரங்கள் இவற்றிலிருந்து வடிக்கப்பட்ட ஒரு முயற்சி, மனத்துக்குள் ஏற்படும் விசித்திரமான அனுபவங்கள், பலவற்றைப் பார்த்து ஊறி வெகுகாலமாக அனுபவித்த சில உணர்வுகள் கடைசியில் எப்படியோ உருவம் பெறுகின்றன. நாம் உருவம் கொடுப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அம்மா வந்தாளின் ஒவ்வொரு பாத்திரத்திலும், நான் பார்த்த ஏழெட்டுப் பாத்திரங்களின் சேஷ்டைகள் ஒருமித்து இருக்கின்றன. அந்த அம்மாள் நான் கண்ட ஐந்தாறு பெண்களின் கலவை. அகண்ட காவேரி, வேத பாடசாலை, சென்னையின் பெரிய மனிதர்கள், ஸம்ஸ்கிருதமும் வேதாந்தமும் படிப்பது, தஞ்சை மாவட்டத்துப் பெரிய மிராசுதார்களின் லௌகீக அடாவடிகள் இப்படி எத்த னையோ சேர்ந்து எப்படியோ ஓர் உருவமாக வந்தன.

மையக் கருத்தைப் பற்றி நான் என்ன சொல்ல வேண்டும்? இது நடக்குமா, நடக்காதா என்று விமரிசகர்கள் கூறுவார்கள். அவர்களைப் பற்றி நான் எப்போதுமே கவலைப்படுவதில்லை. இரண்டு மூன்று அளவுகோல்களை வைத்துக்கொண்டு படைப்பாளியின் விசித்திரமான அனுபவங்களை அளக்க முற்படுகிற பேதை விமரிசகன், அவனுக்குப் பலம் பழங்காலம். கலை அமைதி பற்றி ரசிகனுக்குத்தான் தெரியும். கலை உலகம் ஒரு மாயலோகம். அதையும் வாழ்க்கையின் புற உண்மைகளையும் ஒன்றெனக் குழப்பிக் கொள்ளக் கூடாது."

- தி. ஜானகிராமன் - 

நாவலிலிருந்து மாதிரிக்கு கொஞ்சம்...


சரஸ்வதி பூஜையன்று புத்தகம் படிக்கக்கூடாது என்பார்கள். ஆனால், அன்று ஒரு நாளுமில்லாத திருநாளாக புத்தகத்தின் மேல் வருகிற ஆசை! கீழே கிடக்கிற- பல்பொடி மடிக்கிற காகிதத்தை யாவது எடுத்துப் படிக்க வேண்டும் என்ற மோகம்! அப்படி ஒரு மோகம் அல்லவா பிறந்திருக்கிறது இன்று இந்தக் காவேரி மீது!

அப்படியும் சொல்வதற்கில்லை என்று திருத்திக் கொண்டான் அப்பு. காணாததைக் கண்டுவிட்டாற்போல காவேரியை இப்பொழுது பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறோம். ஆனால் பதினாறு வருடமாக, பொழுது விடிந்தால், பொழுது சாய்ந்தால் காண்கிற காவேரிதான் இது. இந்த ஊருக்கு வந்த நாளிலிருந்து அரையில் மூன்று முழ ஈரிழைத் துண்டும், தலையில் 'எஸ்' கட்டுப் பின்னலுமாக அப்பாவோடு இங்கு வந்த நாள் முதல் இந்தக் காவேரியைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 

அன்று பாடசாலையில் சேர்ப்பதற்காக அவனை அழைத்து வந்தார் அப்பா. ரயிலில் இருவரும் வந்தார்கள். இரவு முழுவதும் பயணம். திருச்சி.. ஜங்ஷனில் வண்டி மாறி, மறுபடியும் ஒரு நான்கு மணி நேரப் பயணம். சுடச்சுட வெளுப்பு வெயில் ஏறிய நேரத்தில் ஸ்டேஷனில் இறங்கினார்கள். 

ஒரு மைல் ரயில் பாதையை ஒட்டிய சாலையில் நடந்தார்கள். கிராமத்தில் நுழைந்தார்கள். பாடசாலையில் சேர்ந்தாயிற்று. இரவு கூடவே படுத்திருந்தார் அப்பா - அவனுக்குப் பக்கத்திலேயே. வெகு நேரம் வரை அவன் கையையும், முதுகையும் தடவிக் கொடுத்துக் கொண்டேயிருந்தார். விடியற் காலையில் எழுந்து இந்தக் காவேரிக்கு, இதே துறைக்குத்தான் அழைத்து வந்தார், குயில் கூவிற்று. அக்காக் குருவி கத்திற்று. 'நீ...சோவ்' என்றும் ஒரு குருவி கத்திற்று. 

காவேரி முழுவதும் வெள்ளம் மோதி மோதி பெரிய பாம்பு மூச்சு விட்டுப் புரள்கிறதுபோல நகர்ந்தது. யானை நகர்ந்து கொடுப்பது போலிருந்தது. மிரண்டு கரையிலேயே நின்ற குழந்தையைக் கையைப்பிடித்து முழங்கால் தண்ணீரில் நிறுத்திக் குளிப்பாட்டிவிட்டார் அப்பா. பிறகு வேட்டியைத் துவைத்துக் கொடுத்தார். கௌபீனத்தைக் கசக்கிக் கொடுத்தார். தலையில் அம்மா பின்னிக் கட்டிவிட்ட 'எஸ்' கட்டு கலையாமலேயே குளித்து விட்டு 'உஹு, உஹு, உஹு' என்று உதடு நடுங்க, கையிரண்டும் கூப்ப, சில்லிப்பில் சிலிர்த்துக் கொண்டே, நிர்வாணமாக, மீன்குத்தி ஒன்று தண்ணீருக்குள் செங்குத் தாகப் பாய்ந்து முழுகிச் சிலுப்புவதைப் பார்த்துக் கொண்டே நின்றான் அவன். சிலுப்பிவிட்டு, அலகில் எதையோ கவ்விக்கொண்டு, நீர் மட்டத்துக்கும் மேலேயே, தவளைக் கல் வீசினாற் போல, தொட்டும் தொடாததுமாகப் பறந்து போயிற்று மீன்குத்தி.

'சடப்'

அப்பா ஈர வேட்டியை உதறி 'இந்தா' என்று கட்டிக் கொள்ளக் கொடுத்தார். 

பிறகு, அவரே இடையைச் சுற்றி அதைக் கட்டி விட்டார். விபூதியைக் குழைத்து நெற்றியில் இட்டார்; மார்பில் இட்டார்; கையில் இட்டார். பார்த்துக் கொண்டிருக்கும் போதே கண்கட்டு வித்தைபோல, வானத்தில் நட்சத்திரம் முளைப்பது போல, ஈரம் உலர்ந்து விபூதி பளிச்சிட்ட வெண்மை!... எல்லாம் அந்த விபூதியைப் போலவே நினைவில் பட்டையடித்துத் தெரிகிறது... அன்று பிற்பகல் சாப்பிட்டுவிட்டு அப்பா ஊருக்குக் கிளம்பியதும் ஞாபகம் இருக்கிறது.

"சுந்தரம் நான் வெறுமனே என்னத்தைச் சொல்லப் போறேன்! இனிமே உம் பிள்ளை இது..." என்று வாத்தியாரிடம் சொல்லிவிட்டு, "இத பாரு.... சமர்த்தா இருக்கணும். நான் வரட்டுமா?” என்று அப்புவிடம் விடை பெற்றுக் கொண்டார்.”

நான் உங்களுக்குத் தனியா என்ன சொல்லப் போறேன். ஊர்க்குழந்தைகள்ளாம் உங்க வயத்திலே பொறந்த பேரன் மாதிரி இங்கே வளர்றது!" என்று பவானியம்மாளிடமும் சொல்லிக் கொண்டார் அப்பா.

"இந்த மாதிரி குழந்தைகள்ளாம் வந்து சேரக்கொடுத்து வைக்கணுமே! கதியில்லாம, வயத்துக்கில்லாம, நாதியில்லாம, வேதம் சொல்லிக்கிறேன்னு வந்து சேர்றதுகள். நீங்கள் நினைச்சா இதை பி.ஏ., எம்.ஏ., ன்னு படிக்க வைக்கமாட்டேளா! வேதமே பரமாத்மான்னு நிச்சயம் பண்ணி, அனுபவிச்சு, ஆசையா கொண்டு சேர்த்திருக்கேள்.

கவலைப்படாதீங்கோ. குழந்தை அம்மாகிட்ட இருக்கிற மாதிரி இருக்கும். அதுக்கு மேலே எனக்கும் சொல்லத் தெரியலே!' என்று முக்காட்டை இழுத்து விட்டு, சோகம் நிலைத்த அந்த முகம் புன்னகை பூக்க, விடை கொடுத்தாள் பவானியம்மாள்....

====================================================================================

எடிட்டர்ஸ் பேஜ் என்று இதயம் பேசுகிறது மணியன் எழுதியிருந்த ஒரு பக்கம் - அவரது 'இதயம் பேசுகிறது' புத்தகத்தில் 

அமெரிக்காவிலுள்ள சில நகரங்களுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில், டட்டன் தம்பதியரை நான் சந்தித்தேன். அது அவர்களுடைய பண்ணைவீடு. நாற்புற அடுக்கு மாடிக் கட்டடங்களையே பார்த்துப் பார்த்து அலுத்துப் போன எனக்கு, அந்த வித்தியாசமான வீடு, ஒரு நல்ல மாறுதலாக இருந்தது.

அங்கே சற்று ஒதுங்கிய, பஸ் போன்ற வீடொன்றைக் கண்டேன். 'அது என்ன?' என்று திருமதி டட்டனிடம் கேட்டேன். "அது டிரெய்வர் ஹவுஸ்.. அங்கேதான் டட்டனின் தாயார் வாழ்ந்து வருகிறார்கள்!" என்றார் அவர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

"அங்கே போய் பார்க்கலாமா?" என்று கேட்டேன். அவர் உடனே தனது மகள் கரேனை  அழைத்து, "மிஸ்டர் மணியனை அங்கே அழைத்துக்கொண்டு போய்க்காட்டு" என்றார். அப்படி அவர் சொன்னதும் கூட எனக்கு வியப்பாக இருந்தது. நானும் கரேனும் அந்த டிரெய்லர் வீட்டுக்குப் போய்ப் பார்த்து விட்டு வந்தோம். அங்கே எல்லா வசதிகளும் இருந்தன. டட்டனின் தாயார் என்னைப் பற்றிச் சிறிது நேரம் விசாரித்து விட்டு, தேநீர் கூட அளித்து உபச்சாரம் செய்தார்.   

நான் திரும்பி வந்தபோது திருமதி பெட்டிடட்டன், ஹாலில் அமர்ந்திருந்தார்.

"நீங்கள் அழைத்தபோது நான் வர மறுத்ததற்கு என்னை மன்னிக்கவேண்டும். எனக்கும், எனது மாமியாருக்கும் கொஞ்சம் மனஸ்தாபம். அதனால்தான் கரேனை அனுப்பிவைத்தேன்" என்றார். எனக்கு விஷயம் புரிந்தது.

"மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை இருப்பது சகஜம். ஆனால், அதை அன்னியரிடம் ஏன் எடுத்துச் சொல்லவேண்டும் என்று நீங்கள் யோசிக்கலாம். அதைப்பற்றி நான் தெளிவாகச் சொல்லாவிட்டால், என் மாமியாரோ அல்லது நானோ கொடுமைக்காரி என்று முடிவுக்கு நீங்கள் வந்துவிடலாம்.

உண்மையில் திருமணமாகி சில நாட்களுக்கு நான் என்னுடைய மாமியாரின் போக்குப்படிதான் நடந்து கொண்டிருந்தேன். ஆனாலும் எங்கள் இருவருக்கும் எல்லா விஷயங்களிலும் கருத்து வேறுபாடு இருந்தது. அது இயற்கைதான். தலைமுறை இடைவெளி (Generation gap) தான் அதற்குக் காரணம். அந்த நிலையில் தொடர்ந்து பூசலை வளர்த்துக்கொண்டு போவதால் என்ன லாபம்?

"என் கணவரிடம், 'இங்கேயே இன்னொரு வீட்டைக் கட்டுங்கள். அதில் தாயாரை வசதியாக வைத்துக்கொள்ளுங்கள். தாயாரைக் காப்பாற்ற வேண்டியது உங்கள் கடமை (Duty). மனைவியைப் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. (Responsibility) நீங்கள் இரண்டையும் செய்த மாதிரி இருக்கும். வீட்டிலும் நிம்மதி இருக்கும் என்றேன். இப்போது அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. இதுசரிதானே?" என்றார்.

"நீங்கள் செய்தது முற்றிலும் சரி!" என்றேன். 

நம் நாட்டில் உள்ள இளம் தம்பதியர் தெரிந்து கொள்ள வேண்டிய அனுபவபாடம் அல்லவா இது?"

===============================================================================================


முகூர்த்தம் @ கல்யாண் 


2018 ல் 'ஹிந்து தமிழ் திசை' செய்தித் தாளில் ஒரு பக்கம்  விளம்பரம் போல கல்யாண் ஜுவாலாலர்ஸ் வழங்கிய திருமணங்கள் பற்றிய அரிய தகவல்களுடன் ஒரு சுவாரஸ்யமான பகுதி வந்து கொண்டிருந்தது. வி.  ராம்ஜி என்பவர் எழுதிக் கொண்டிருந்தார்.   பொதுவாக திருமணங்கள் பற்றி தொடங்கி, அப்புறம் குறிப்பாக இந்த ஜாதியில் அப்படி அந்த ஜாதியில் இப்படி என்று  வந்தது.  என்னிடம் செங்குந்தர் முதலியார் பக்கம்  படம் இருக்கிறது.   அதை எழுத்துகளில் கொண்டு வருவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது! இணையத்தில் இதைப் பிடிக்க முடியவில்லை.  தேடியபோது ஒன்றே ஒன்று கிடைத்தது.  ஜாதி பற்றி குறிப்பிடாமல் பொதுவாக இருக்கிறது.  அது இங்கே...



மாப்பிள்ளை வீட்டார்தான் வீடு தேடி வருவார்கள். ‘எங்க வீட்டுக்கு உங்க வீட்டுப் பெண்ணை, மகாலக்ஷ்மியாக அனுப்பிவைக்க சம்மதமா?’ என்று கேட்பார்கள். ஏற்கெனவே ஜாதகம் பார்த்து, பொருத்தம் அமைந்துவிட்டால் இப்படியொரு வார்த்தையைக் கேட்டு, அடுத்தகட்ட நிகழ்வுகளுக்குள் செல்வதுதான் தேவர் சமூகத்து மக்களின் வழக்கம்.

ஆனால், அப்படியொரு பேச்சுவார்த்தையின் ஆரம்பத்திலிருந்தே இருதரப்பிலும் நாயகனும் நாயகியுமாக இருப்பவர்கள் யார் தெரியுமா? மணமக்களின் தாய்மாமாவும் மாமியும்தான்!

பெண்ணின் மாமாவும் மாமியும் இருக்க, மணமகனின் பெற்றோர், பிள்ளையின் மாமாவுடனும் மாமியுடனும் வருவார்கள். நடுநாயகமாக அமர்ந்து பேச்சைத் தொடங்குவார்கள். குடும்பம், சொத்து பத்து, சொந்த பந்தம், படிப்பு, வேலை, சம்பளம், பழக்கவழக்கம் என சகலத்தையும் பற்றிப் பேசுவார்கள்.

சீதனம் குறித்தும் நகைகள் குறித்தும் ஆரம்பத்திலேயே சரிவரப் பேசிவிடுவார்கள். ‘இது வேணும், அதைக் கொடுங்கள்’ என்பதையெல்லாம் தாண்டி, அவரவர் விருப்பத்துக்குத் தக்கபடி சீதனம் செய்வார்கள்.

நிச்சயதார்த்தத்துக்கு முன்னதாக இரண்டு வீட்டு தாய்மாமாக்கள் முன்னிலையில் தாம்பாளத்தில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பழங்கள், இனிப்பு வகைகள், பூக்கள் ஆகியவற்றை வைத்துத் திருமணத்தை உறுதி செய்துகொள்கிறார்கள். ஒப்புக்குத் தாம்பூலம் போலத்தான் இது என்றாலும் பூவைத்தல் என்றே சொல்கிறார்கள்.

நிச்சயதார்த்தப் பெருவிழா, பெண் வீட்டில் நடைபெறுகிறது. அப்போதும் தாய்மாமாக்களும் மாமிகளுமே முக்கிய இடம் வகிக்கின்றனர். மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண்ணுக்குப் பட்டுச் சேலை, 21 தட்டுகள் கொண்ட சீர்வரிசை, நகைகள் போன்றவை வழங்கப்படும். அதேபோல் மாப்பிள்ளைக்குப் பெண் வீட்டார் பட்டுவேஷ்டி - சட்டை, தங்கச் சங்கிலி, மோதிரம் போன்றவற்றை வழங்குவார்கள்.

அப்போது பெண்ணுடைய கழுத்தில் அவருடைய தாய்மாமா முதல் மாலையை அணிவிப்பார். அடுத்த மாலை மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்திருக்கும். அதேபோல் மாப்பிள்ளைக்கு அவருடைய தாய்மாமா மாலை அணிவிப்பார். தேவர் வீட்டு நிச்சயதார்த்தம், கல்யாணத்தைப்போல், ஜாம் ஜாமென்று பிரமாண்டமாக நடக்கிறது.

நிச்சயதார்த்தத்தின் போதோ அடுத்தடுத்த நாளிலோ திருமணத் தேதி உறுதி செய்யப்படும். பெண் வீட்டார் சொல்லும் தேதியை உத்தேசித்துதான் திருமண தேதி முடிவு செய்யப்படுகிறது. பத்திரிகை அடித்ததும் கையோடு குலசாமி கோயிலுக்குச் சென்று பத்திரிகை, தாலி ஆகியவற்றை வைத்து வழிபடுகிறார்கள். அதேபோல் மாப்பிள்ளை வீட்டாரும் அவர்களுடைய குலதெய்வ கோயிலுக்குச் சென்று வேண்டிக்கொள்கின்றனர். அதன் பிறகு, முதல் பத்திரிகையை இருதரப்பு தாய்மாமாக்களுக்கு வழங்குகின்றனர்.

வழக்கம்போல் திருமணத்துக்கு மூன்று அல்லது ஐந்து நாட்கள் இருக்கும்போது, வீட்டில் பந்தக்கால் நடும் விழா, சடங்கு சாங்கியங்களுடன் நடக்கிறது. அப்போது ‘பெண்ணாக்குதல்’ எனும் சடங்கை தாய்மாமாவும் மாமியும் சேர்ந்து செய்வார்கள். அன்றைக்கான உணவு செலவும் சில ஊர்களில் தாய்மாமாவே ஏற்றுக்கொள்கிறார். சுமங்கலிகள் ஒன்று சேர்ந்து, நவதானியங்கள் இட்டு, பந்தக்காலுக்கு மஞ்சள், குங்குமம், பூ வைத்து நடுவார்கள்.

இதேபோல் மாப்பிள்ளை வீட்டிலும் பந்தக்கால் வைபவம் அந்த வீட்டு சுமங்கலிகளைக் கொண்டு, தாய்மாமா, மாமி, சொந்த பந்தங்கள் முன்னிலையில் நடக்கிறது. அப்போது, மணமகனுக்கு ‘மாப்பிள்ளையாக்குதல்’ எனும் நலங்குச் சடங்கு நடக்கும்.

பெண் வீட்டுச் செலவு, இரு தரப்புச் செலவு என்று திருமணம் செய்வது வழக்கம். திருமணத்துக்கு முதல் நாள், மாப்பிள்ளையின் சகோதரியும் சில உறவினர்களும் பெண்வீட்டுக்குச் சென்று மணமகளை அழைத்து வருவார்கள். அப்போது, நிச்சயதார்த்தத்தின்போது வழங்கிய பட்டுப்புடவையைப் பெண் அணிந்துகொள்ள வேண்டும்.

அதேபோல் மாப்பிள்ளையும் நிச்சயதார்த்தத்தின் போது வழங்கிய ஆடையை அணிந்திருக்க, பெண்ணின் சகோதரர் அதாவது மாப்பிள்ளையின் மைத்துனர் வீட்டுக்கு வந்து, வரவேற்று அழைத்துக்கொண்டு மண்டபத்துக்கு வருவார். அப்போது மாப்பிள்ளைக்கு வாசனைத் திரவியங்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதெல்லாம் நடைமுறைக்கு வந்திருக்கிறது.

இந்தத் தருணங்களில் அரிசி, ஒன்பது தேங்காய், பழங்கள், இனிப்பு, வெற்றிலை, பாக்கு போன்றவை பெண்ணுக்கு வழங்கப்படும்.

மணநாளன்று காலை வேளையில் பெண், பெண்ணுடைய அப்பா, அம்மா, மாமா, மாமி ஆகியோர் ஒரு பக்கம் மணமேடையில் இருப்பார்கள். அடுத்ததாக மாப்பிள்ளை, அவருடைய அப்பா, அம்மா, மாமா, மாமி ஆகியோர் அமர்ந்திருக்க, புரோகிதர் தனித்தனியே சில மந்திரங்களைச் சொல்லிக்கொண்டிருப்பார். சடங்கு சாங்கியங்களைச் செய்துகொண்டிருப்பார். அப்போது சந்தன, குங்கும மரியாதையோடு மாப்பிள்ளைக்கு கல்யாண ஆடைகள், செயின், மோதிரம் போன்றவை வழங்கப்படும். அதேபோல் பெண்ணுக்குப் புடவை, நகைகள் முதலானவை வழங்கப்படும். இருதரப்பினருக்கும் சந்தனம் பூசி மரியாதை செய்வார்கள்.

மந்திரங்கள் ஒலிக்க, ஹோமப்புகை சூழ்ந்திருக்க, மண்டபம் முழுவதும் உறவினர்களும் நண்பர்களும் நிறைந்திருக்க பெண்ணின் கைப்பிடித்து, மாப்பிள்ளையின் கையில் ஒப்படைத்துத் தாரைவார்ப்பார் பெண்ணுடைய அப்பா. பால் முதலான பஞ்சகவ்யங்களைக் கொண்டு சுத்தப்படுத்துவார் புரோகிதர்.

தாரைவார்ப்புக்குப் பிறகு, கெட்டிமேளம் முழங்க, மாங்கல்ய மந்திரங்களைச் சொல்ல, முப்பத்து முக்கோடி தேவர்களும் சூட்சும வடிவில் வந்து ஆசீர்வதிக்க, எல்லோரும் அட்சதை தூவ, திருப்பூட்டுதல் எனும் மாங்கல்யதாரணம் அற்புதமாக நடந்தேறும்.

பால் பழம் கொடுத்து வரவேற்பு, நகைகள், பரிசுப்பொருட்கள் வழங்குதல், பெரியோரிடம் ஆசி என விழா களைகட்டும்.

வெள்ளிக்கிழமையன்று திருமணம் எனில், அன்றைக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு பெண்ணை அனுப்பமாட்டார்கள். ‘வூட்டுக்குப் பொறந்த மகாலக்ஷ்மியை வெள்ளிக்கிழமை அதுவுமா அனுப்பறதா... வேணாமப்பு’ என்பார்கள். அதை மாப்பிள்ளை வீட்டாரும் ஏற்றுக்கொண்டு, ‘எங்க வீட்டு மகாலக்ஷ்மி அவ. ஒரு ரெண்டு நாளு நல்லா இருந்துட்டு வரட்டும்’ என்று சொல்வார்கள்.

ஏனெனில், பெண் என்பவள் எப்போதுமே குலவிளக்கு. ஒரு வீட்டின் மகாலக்ஷ்மி. வம்சத்தை வாழையடி வாழையாக்கும் மகாசக்தி.

- சுபமஸ்து

========================================================================================================

மறுபடியும் ------   இன்னும் ஒன்று!

அதென்ன ஆறாம் வேற்றுமை?!  இந்தக் கதை எப்போதோ படித்தது. இப்போது நினைவில் இல்லை.


===========================================================================


பாரதியின் நகைச் சுவை

"கல்கி" எழுதுவது.

"எனக்கு நகைச்சுவை மட்டும் இல்லாவிட்டால் எப்பொழுதோ தற்கொலை செய்து கொண்டு இறந்திருப்பேன்" என்று ஒரு முறை காந்தியடிகள் கூறினார். தனி மனிதனுடைய வாழ்க்கையிலும் சரி, தேசிய வாழ்க்கையிலும் சரி, நகைச் சுவையானது முன்னேற்றத்துக்கு இன்றியமையாத அம்சங்களில் ஒன்றாகும். 

உலகில் முன்னணியில் நிற்கும் தேசத்தார் எல்லாரும் பெரிதும் நகைச்சுவை கொண்டவர்களாயிருப்பதைக் காணலாம். இங்கிலாந்து, அமெரிக்கா முகலிய தேசங்களில் ஹாஸ்ய ரசத்திற் கென்றே எத்தனையோ பத்திரிகைகளும் புத்தகங்களும் வெளியாகின்றன. 

"கழுதையின் குரல்" என்றும், "நாயின் வால்" என்றும் எடுத்துக் கொண்டு பிரபல ஆசிரியர்கள் பெருங் கட் டுரைகள் எழுதி விடுவார்கள். லட்சக் கணக்கான ஜனங்கள் அவற்றைப் படித்துச் சிரித்து மகிழ்வார்கள். 

"அக்கட்டுரைகளினால் விளையும் பயன் என்ன? அவை போதிக்கும் நீதி என்ன?'' என்று எவரும் கேட்பதில்லை. ஒரு கண நேரப் புன்னகைக்காகவும், ஒரு நிமிஷச் சிரிப்புக்காகவும் அவர்கள் ஷில்லிங் கணக்கிலும், டாலர் கணக்கிலும் பணம் கொடுத்துப் பத்திரிகைகளும் புத்தகங்களும் வாங்குகிறார்கள்.

பாரத நாடு முற்காலத்தில் சிறப்புடன் விளங்கியபோது நமது முன்னோர் நகைச்சுவை யுணர்வு அதிகமுள்ளவர்களா யிருந்தனர் என்பதற்குச் சான்றுகள் நிரம்ப இருக்கின்றன. இராஜ சபை' களில் நகையூட்டுவதற்கென்றே விகடகவிகள், விதூஷகர்கள் முதலியோர் இருந்தார்கள். ஒவ்வொரு நாடகத்திலும் விதூஷகன் ஒரு முக்கிய நாடக பாத்திரமாக விளங்கினான். 

"கம்பராமாயணம்" முதலிய காவியங்களிலும் ஹாஸ்ய ரசம் பெரிதும் காணப்படுகிறது. ஆனால் பிற்காலத்தில் தேசம் பராதீனமடைந்து தாழ்வுற்றபோது மக்க ளின் நகைச்சுவையும் வீழ்த்து பட்டதாகத் தோன்றுகிறது. (ஒருகால், நகைச்சுவை யிழந்ததே தேசத்தின் வீழ்ச்சிக்கும் காரணமா யிருக்க லாமோ?) எங்ஙனமாயினும் இக்காலத்தில் இவ்விந்திய நாட்டில், சிறப்பாகத் தமிழகத்தில், சிடுமூஞ்சி ராயர்களும், அழுமுஞ்சி செட்டியார்களும், இன்னும் இவர்களுடைய இனத்தைச் சேர்ந்தவர்களுமே அதிகமாயிருக்கிறார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது.

品品品品品

தமிழ் நாட்டின் சிறந்த வாரப்பத்திரிகை யொன்றில், உலக வர்த்தமானங்களைக் குறித்து நகைச் சுவையுள்ள குறிப்புகள் வாரந் தோறும் வெளியாகி வந்தன. இதன் பொருட்டு, மேற் கூறிய இனத்தைச் சேர்ந்த ஒரு மகான் அப்பத்திரிகையின் ஆசிரியரிடம் "ஐயோ! இப்படி ஏன் பத்திரிகையின் இடத்தை யெல்லாம் வீணாக்குகிறீர்கள்?" என்று பரிதாபத்துடன் கூறியதாகக் கேள்விப்பட்டேன். பழைய தலைமுறையைச் சேர்ந்த இத்தகைய மனிதர்களை எவராலும் திருத்த முடியாது. இளத் தலை முறையைச் சேர்ந்தவர்கள் தான் நாட்டில் நகைச் சுவையை வளர்த்து வரல் வேண்டும்.

品
ஃ

தமிழ் காட்டில் நகைச்சுவை குன்றியிருக்கிறதாயினும் அதிர் ஷ்டவசமாக அது அடியோடு அழிந்துவிடவில்லை. இந்த துர்ப்பாக்கிய நாட்டில் துயரமே மிகுந்த இந்நாளில்-பிறந்த தமிழ்ப் பிரமுகர்களிலும் சிலர் நகைச் சுவை பெற்றிருந்தனர்; பெற்றிருக்கின்றனர். 

தமிழுக்குப் புத்துயிர் தந்த காலஞ் சென்ற ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி அத்தகையோரில் ஒருவராவர். பாரதியார் நமது வாணாளில் பெரும் பகுதியும் துன்ப வாழ்க்கையே நடத்தினார்.  தமது சொந்தத் தொல்லைகளை விடத் தாய் நாட்டின் துயாங்களை நினைத்து நினைந்து அவர் உள்ளம் நைந்து உருகினார். 

எனினும் அவர் தம் நகைச் சுவையை மட்டும் இறுதி வரையில் இழக்கவில்லை யென்றே தோன்றுகிறது. அவருடைய கவிதைகள் சிலவற்றிலும் வசன நூல்களிலும் இந்நகைச்சுவை ஆங்காங்கு பீறிக் கொண்டு எழுவதைக் காணலாம்.

பாரதியின் கவிதைச் சிறப்புக்களைக் குறித்துப் பலரும் எழுதியுள்ளார்கள். ஆனால் அவரது நகைச் சுவையைக் குறித்து இது காறும் யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. எனவே, அவருடைய கவிதைகளிலும் வசன நூல்களிலும் காணப்படும் ஹாஸ்ய ரசப் பகுதிகளில் சிலவற்றை "விகடன்" ஆண்டு மடலில் இப்பகுதிகளைப் படிக்கும் நேயர்களுக்கு, எடுத்துக் காட்டுதல் பொருத்தமாயிருக்குமென்றே கம்புகிறேன். தேசம் சுதந்திரம் பெற்று சுபிட்சமாயுள்ள காலத்தில் பாரதியார் பிறந்திருந்தால், இப்போது ஆங்காங்கே குமிழிவிட்டுக் கிளம்புவதுடன் நிற்கும் அவருடைய நகைச்சுவையானது பெரு வெள்ளம்போல் பெருகி ஓடியிருக்கும் என்பதை எளிதில் அறிந்து கொள்ளக்கூடும்.

பாரதியாரின் கவிதைகளுள் குயில் பாட்டு என்னும் அற்புத கற்பனைச் சித்திரத்திலே தான் அவருடைய நகைச்சுவை ஒளிவிட்டு ஒங்குகிறது என்று கூறலாம். கவிஞன் காட்டகத்தில் தன் உள்ளத் தைக் கொள்ளைகொண்ட காதற் குயிலைத் தேடிச் சுற்று முற்றும் பார்த்துத் துடித்துக் கொண்டு வருகிறான். அப்போது அவன் கண்ட காட்சி அவன் நெஞ்சைத் திடுக்குறச் செய்கிறது. ஆனால் அக்காட்சி என்ன வென்பது முதலிலேயே கூறப்படுவதில்லை.

"வஞ்சனையே! பெண்மையே! மன்மதனாம் பொய்த் தேவே! நெஞ்சகமே! தொல்விதியி னீதியே! பாழுலகே! கண்ணாலே நான் கண்ட காட்சிதனை யென்னுரைப்பேன்! பெண்ணா லறிவிழக்கும் பித்தரெல்லாங் கேண்மினோ! மாதரெலாங் கேண்மினோ! வல்விதியே கேளாய் நீ!"
என்று கவிஞன் ஆத்திரம் பொங்கப் புலம்புவது, பின்னால் வாப் போகும் நகைச் சுவை ததும்பும் நிகழ்ச்சிக்கு ஏற்ற தோற்றுவாயாக அமைந்திருக்கிறது. 

மேற்கூறிய வரிகளைப் படித்ததும் வாசகர்கள் ஏதோ பயங்கரமான நிகழ்ச்சி வரப் போகிறதென்று எதிர் பார்க்கிறார் கள். அதற்கு மாறாக, ஹாஸ்ய ரசம் பொருந்திய ஒரு நிகழ்ச்சி கூறப் படும்போது அதன் சுவை வாசகர்களுக்குப் பன்மடங்கு மிகைப் பட்டுக் காண்கிறது. அச்சம்பவம் யாது?' கவிஞன் காணும் பயங் காக் காட்சி தான் என்ன?

கவிஞன் தேடிச் செல்லும் மாயக் குயில் ஒரு மாக்கிளையில் வீற்றிருக்கிறது. அதனருகில் ஓர் ஆண் குரங்கு காணப்படுகிறது. குயில் விழிநீர் பாய, சிறிய உடல் உடல் பதைக்க, விம்மிப் பரிந்து துயரக் குரலில் அக்குாங்கினிடம் ஏதேதோ கூறி யிரங்குகிறது. கவிஞ ன் நாமும் மரத்தடியில் ஒளிந்து நின்று அப்பெட்டைக் குயில் குரங்கினிடம் கூறிய மொழிகளை ஒட்டுக் கேட்போம்:-

வானாரே
ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே, பெண்மைதான் எப்பிறப்புக் கொண்டாலும் எந்தலே நின்னழகைத் தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ? மண்ணி லுயிர்க்கெல்லாந் தலைவரென மானிடரே எண்ணி நின்றார் தம்மை; எனிலொரு கால், ஊர்வகுத்தல் கோயில், அரசு, குடிவகுப்புப் போன்ற சில வாயிலிலே யந்த மனித ருபர் வெனலாம்.

மேனி யழகினிலும் விண்டுரைக்கும் வார்த்தையிலும் கூறியிருக்கும் கொலு நேர்த்தி தன்னிலுமே, வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிக ராவாரோ? ஆனவரையு மவர் முயன்று பார்த்தாலும், பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை எட்டுடையால் மூடி யெதிருமக்கு வந்தாலும், மீசையையும் தாடியையும் வித்தை செய்து வானரர் தம் ஆசை முகத்தினைப்போ லாக்க முயன்றிடினும், ஆடிக் குதிக்கும் அழகிலுமை கேர்வதற்கே கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில் ஏறத் தெரியாமல் ஏணி வைத்துச் சென்றாலும், வேறெத்தைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே வானரர்போ லாவாரோ? வாலுக்குப் போவதெங்கே? ஈன முறுங்கச்சை யிதற்கு நிகராமோ? பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு கச்தைபோல் வேகமுறத் தாவுகையில் வீசி யெழுவதற்கே தெய்வம் கொடுத்த திருவாலைப் போலாமோ? சைவ சுத்த போஜனமும் சாதுரியப் பார்வைகளும் வானாற் போற் சாதியொன்று மண்ணுலகின் மீ துளதோ? வானரர் தம்முள்ளே மணிபோ லுமையடைந்தேன்."

மாயக் குயிலின் இக்காதல் மொழிகளை இந்த வானச ஸ்துதித்யத்தை-நான் முதன் முதலில் படித்தபோது, "வாலுக்குப் போவ தெங்கே?" என்னும் இடத்துக்கு வந்ததும் கொல்லென்று சிரித்து விட்டேன். நான் அறிந்த அளவில், தமிழ் மொழியின் நவீன இலக்கியத்திலே சரி, நகைச்சுவையில் இதை மிஞ்சக்கூடிய பகுதி ஒன்றிருப்பதாகத் தோன்றவில்லை.
குயிலின் காதல் மொழிகளைக் கேட்டதும்,

"வற்றற் குரங்கு மதிமயங்கிக் கன்னினிலே முற்றும் வெறிபோல் முழுவெறி கொண்டாங்ஙனே, தாவிக் குதிப்பதுவும் தாளங்கள் போடுவதும் 'ஆவி யுருருதம! ஆஹா ஹா!' என்பதுவும், கண்ணைச் சிமிட்டுவதும், காலாலும் கையாலும் மண்ணைப் பிறாண்டியெங்கும் வாரி யிறைப்பதுவும்"ஆசைக் குயிலே, அரும் பொருளே, தெய்வதமே, பேசமுடியாப் பெருங்காதல் கொண்டு லிட்டேன்,"

என்று கூறுவதுமாகிய காட்சியும் நமக்குப் பேருவகை யளித்து நகைப் பூட்டுவ தொன்றாகும்.

ஆனந்த விகடன் - 1930

=================================================================================

தி கோர்ட்  -  ஜியோ ஹாட்ஸ்டார் - தமிழ் சீரிஸ் 
கோர்ட் என்று பார்த்ததுமே சீரிஸ் என்றாலும் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.  முதல் வாரம் 4 எபிஸோட் மட்டும் இருந்தது.  அடுத்த வியாழன் ப்ளஸ் எட்டு எபிஸோட் வந்து விட்டது.  ரசிக்க முடிகிறது.

கடற்கரையில் பெட்டி படுக்கையுடன் அமர்ந்திருக்கும் யாழினியை போலீஸ் விசாரித்து லேடிஸ் ஹாஸ்டலில் விடுகிறது.  விடும் முன் தனது கூரிய அறிவால் போலிஸுக்கு ஒரு உதவி செய்து விடுகிறாள்.

கோர்ட்டில் அவள் தன்னை ஸ்தாபித்துக் கொள்ள முயற்சி செய்கிறாள்.  அவளின் மைனஸ் அவள் ஸ்ட்ரெஸ் ஆகும் சமயங்களில் அவள் வாய் திக்கும்.  பெரிய ப்ளஸ் அவள் அறிவு.


தேவா எதையாவது செய்து குறுக்கு வழியில் கூட பெரிய பெயர் பெற்ற வக்கீலாகி விடவேண்டுமென்று நினைப்பவன்.  RK சாம்ராஜ்யத்தில் நுழைவது அவன் கனவு.  வேணி நேர்மையாக இருக்க பாடுபடும் வக்கீல்.  கோர்ட்டில் டீக்கடை வைத்திருக்கும் சத்யன் தனது சட்ட அறிவால் வியக்க வைக்கிறான்.  அவன் யார் என்பது ஒரு புதிர்.  கிளைமேக்சில் அவன் வருவதற்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது!  அவனது உதவியாளன் சுடலை ஒரு சுவாரஸ்யமான கேரக்டர்.  சத்யன் சிபாரிசில் வேணியிடம் உதவியாளராக சேர வரும் யாழினி சந்தர்ப்ப வசத்தால் தேவராஜிடம் சேர்ந்து விடுகிறாள்.

ஒரு கட்டத்தில் யாழினி யார் என்று தெரிய வருகிறது.  எவ்வளவு கஷ்டமான கேஸையும் அவளால் உடைக்க முடிகிறது.  அவளுக்கு கிடைக்க வேண்டிய கிரெடிட்டை இன்னொரு பெரிய வக்கீலின் உதவி வக்கீல் அபகரிக்கிறான்.  தேவராஜ் அவளுக்கு நல்ல வாய்ப்புகளைக் கொடுக்கிறான்.


சந்தர்ப்பம் அவளை அவள் யாருக்கு எதிராக வாதாடுகிறாளோ அந்த எதிர் வக்கீலின் உதவியிலேயே வசிக்க நேரிடுகிறது.

தவிர்க்க முடியாமல் ஒரு கேசில் அவளே தனியாக வாதாட நேரும்போது பிரச்னைகளை சந்திக்கிறாள், அவமானப்படுகிறாள்.  ஸ்ட்ரெஸ் நேரத்தில் வரும் திக்குவாய் அவளை போட்டுப் பார்க்கிறது.

சுவாரஸ்யமாக பார்க்கிறேன்.  தொடர் இன்னும் முடியவில்லை.

========================================================================================

இன்று SPB நினைவுநாள்.




- முடிவு விளங்காத தொடர்கதை உண்டு.. முடிக்க வேண்டுமென்று முடிப்பதும் உண்டு..
- தென்றலின் ஓசை காற்றாக தென்னையில் ஆடும் கீற்றாக என் மனம் பாடும் பாட்டாக.. கீதமே நாதமே ஓடிவா...
- நெஞ்சோரம் இந்நேரம் கள்ளூறும் இவள் ஒரு தாவணி மேகம் இதயம் அமுதில் நனையும் தொடுகையில்
- கூந்தலிலே போர்வையிடு மன்மத சேதி கொடு பாடு…
- எங்கிருந்தோ இங்கு வந்தேன் இசையில் எனை மறந்தேன்... இறைவன் சபையில் கலைஞன் நான்
- எத்தனை காலம் வாழ்ந்தாலும் என்னென்ன கோலம் கொண்டாலும் என்னுயிர் நாதம் சங்கீதம் கீதமே நாதமே ஓடிவா...
- காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும் வாழும் யோகம் மேடும் எந்தன் ராகம் சென்று ஆடும் வாகை சூடும்…
- நாதம் ஒன்று போதும் எந்தன் ஆயுள் கோடி மாதம் தீயில் நின்றபோதும் அந்த தீயே வெந்து போகும்
- எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே இன்ப நாளும் இன்று தானே
- நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போனதென்ன
- பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு வெண்ணிலவு முகிலில் போய் மறைய வெண்ணிலவு முகிலில் போய் மறைய காதலனும் நல்ல வேளை கண்டான் அவள் பூ முகத்தில் முத்தம் நூறு கொண்டான்
- ஒரு கோடி தாமரை கொடியோடு வளைத்து
என்னைச் சிறை செய்ததோ என்ன சுகமோ சுகம்
உன்னைக் கண்டு கண்டு ரசித்தே என்னை கொடுத்தேன் அங்கு காதல் எனும் அமுதை அள்ளிக் குடித்தேன்
- உனக்காகத் தானே ஆலாபனை என் பாடல் உந்தன் ஆராதனை மலர்கள் திறந்த போது அதில் பிறந்து வளர்ந்த மாது பருவம் அடைந்த கனவு இவள் சலங்கை அணிந்த நிலவு இதய வீட்டின் தீபம் இவளன்றோ……
​
===============================================================================================
1961 ல் வெளியான கப்பலோட்டிய தமிழன்  ம பொ சி  எழுதிய புத்தகத்தை (தலைப்பு உட்பட)  அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.  பாதி படம் கருப்பு வெள்ளை.  பாதி படம் கேவா காலர்!  முதலில் இதில் வ வு  சியாக நடிக்க  நம்மால் முடியுமா என்று சிவாஜி தயங்கினாராம்.  பின்னர் நடித்துக் கொடுத்திருக்கிறார்.  முதல் ரிலீஸில் நஷ்டம்.  இரண்டாவது முறை 67 ல் வெளியிடப்பட்டபோது ஜெயித்தது.  அரசு முதன் முறையாக இதற்கு வரிவிலக்கு அளித்தது.

பாரதியார் பாடலுக்கு G. ராமநாதன் இசை.  குரல் சீர்காழி கோவிந்தராஜன்.

99 கருத்துகள்:

  1. ஏ அப்பா... இன்றைக்கு நிறையப் பகுதிகள். ஒண்ணொண்ணா படிக்கணும்.

    சும்மா இருத்தலே சுகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ மை...  அதிகமாயிடுச்சோ...  வாங்க நெல்லை.  பதிவிடும் போதும்னு நிறுத்தத்தான் முயற்சிக்கிறேன்...

      நீக்கு
  2. ஒவ்வொருவரும் பெரும்பாலும் அடுத்தவங்க கருத்தைத் தெரிந்துகொள்வது வம்பு வளர்க்கத்தான். அடுத்தவங்க கருத்தைப் பார்த்துத் தன்னை மாற்றிக்கொள்ள அல்ல. அப்படி ஒரு எண்ணமிருந்தால் நம் நலத்திற்கு எத்தனை புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். அதைப் படித்து மாறியிருக்க மாட்டோமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது என்னவோ உண்மைதான்.  நாமும் எப்படா யாராவது கேட்பாங்கன்னு சட்னு ஏதாவது சொல்லிடறோம்...  கேட்காமலேயே சொல்வோம்!

      நீக்கு
    2. பொதுவாக நான் அறிவுரைனு யாருக்கும் சொன்னது இல்லை. குழந்தைகள் தப்பு உள்பட. அவங்க செய்த தப்புக்களை எடுத்துச் சொல்லுவேன். இது சரியானு யோசிங்கனு சொல்லுவேன். அதுக்கே எல்லோருக்கும் கோபம் வந்துடும் என்றாலும் ஒத்துக்கறாப்போல் இருக்கும். மற்றபடி யாருக்கும் யோசனை எல்லாம் சொன்னதே இல்லை.

      நீக்கு
    3. பரவாயில்லையே.... உஷார்...

      நீக்கு
  3. க்ளைமேட் காரணமாக இருக்கும். முன்பெல்லாம் எங்கள் வீட்டில் உரைகுத்தினார்கள். சாப்பிட ஆளில்லை என்பதால் ரொம்ப வருடங்களாகவே ந்ந்தினிதான். ஆவினைவிட அது நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை.  கிளைமேட் காரணமில்லைன்னுதான் நிஃனைக்கிறேன்.  இது எல்லா பருவத்திலும் ஏற்பட்டிருக்கு!  அவ்வப்போது இப்படியாகிறது.

      நீக்கு
    2. சில மாட்டின் பால் பதப்படுத்தும்போது சேர்க்கும் ரசாயனத்தின் விளைவு இதுவோனு நினைச்சுப்பேன். எங்களுக்கும் கறந்த மாட்டுப் பால் வாங்கும்போதே இப்படி ஆகி இருக்கு. கொழ கொழனு கரண்டியில் எடுத்தால் நூல் போல வரும். அந்தப் பால் காரரும் அவர் வீட்டிலிருந்து மோர்/தயிர் கொண்டு கொடுத்து அதை உறை ஊற்றிப் பார்க்கச் சொல்லுவார். ஆவின், ஆரோக்கியா பால்களில் இம்மாதிரிக் கட்டாயம் நேரிடும். கெட்டித்தன்மைக்காக ஏதோ சேர்ப்பாங்கனு நினைக்கிறேன். அதே ஹெரிடேஜ் பாலில் நன்றாக இருக்கும். உறை ஊத்தினாலும் நன்றாக வரும். நான் பெரும்பாலும் கறந்த பாலே வாங்குவதால் இது எப்போதேனும் நேரும். இப்போ வாங்கும் பால் காரர் பசும்பாலே கொடுப்பதால் தயிர்/மோர் எல்லாம் நன்றாக இருக்கும். ஆனால் இங்கே தோஹாவில் தயிர் நீங்க சொல்றாப்போல் தான் இருக்கு. தயிராகவும் வாங்கறாங்க. மோரும் வாங்கறாங்க. நான் தயிர் விட்டுக் கொள்வேன் என்பதால் பிள்ளை தயிர் வாங்குவதாகச் சொன்னார். இனிமேல் வாங்காதேனு சொல்லிட்டேன். தயிர் விட்டுச் சாதம் சாப்பிடுகையில் என்ன தான் காரமான ஊறுகாயுடன் சாப்பிட்டாலும் இறங்குவதில்லை. தயிர் சாதம் கையில் எடுக்கையிலேயே கொழ கொழ. மோர் தான் விட்டுக்கறேன். அதுவும் நீர் கலந்து உப்புப் போட்டு எலுமிச்சம்பழம் பிழிந்து. பால்காரர்களைக் கேட்டால் உண்மையான காரணம் சொல்லுவார்கள். ஆனால் அம்பேரிக்காவில் யோகர்ட் என்று வாங்குவது சாப்பிட நல்லா இருக்கும். ருசி அபாரமா இருக்கும்.

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    5. கீசா மேடம்... மிடில் ஈஸ்டில், தயிர்லாம் (பல பிராண்டுகள் அல் மராய் உட்பட), கொழகொழன்னு இருக்கும். நீங்க லெபான் வாங்கித் தரச் சொல்லுங்க. அது சூப்பரா இருக்கும் (மோர்).

      நீக்கு
    6. அங்கெல்லாமும் இப்படிதான் இருக்கிறது என்பது கொஞ்சம் ஆறுதலாயிருக்கு..  கஷ்டம் நமக்கு மட்டுமில்லை பாருங்க..  எனக்கும் இந்த தயிர் எல்லாம் வாங்கி போட்டுக் கொள்வது பிடிக்கவில்லை.  வீட்டில் உறைகுத்திய மோரே சுவை.

      நீக்கு
    7. செட்டியார்களில் காரைக்குடிச் செட்டியார் தவிர்த்த ஒரு செட்டியார்கள் பெரும்பாலும் நகைக்கடைச் செட்டியார்களாக இருப்பார்கள். அவங்க வீட்டில் கல்யாணத்தன்று பெண் அழைப்பு எனப் பெரிசாகப் பிரமாதமாக நடக்கும். அதுக்குப் பையர் வீட்டில் இருந்து எல்லாச் செலவும் செய்வார்கள். என் சிநேகிதி ஒருத்திக்கு எஸ்.எஸ்.எல்.சி முடிச்சதுமே அப்படிக் கல்யாணம் நடத்தினார்கள். பையர் நாங்க இருந்த மேலாவணி மூல வீதிதான். அவங்க சாரட்டில் அலங்காரங்கள் செய்து பெண்ணை அழைக்கப் பெண் வீட்டுக்கு அனுப்பினாங்க. பெண் வீட்டினரும் பிள்ளை வீட்டினரும் போட்டி போட்டுக் கொண்டு சீர் வகைகளை எடுத்துக் கொண்டு பெண்ணுடன் ஊர்வலமாக வந்தார்கள். எங்க வீட்டு வழியாத் தான் போச்சு ஊர்வலம். அந்தப் பெண் என்னைப் பார்த்ததும் தன்னையும் அறியாமல் கை ஆட்டிச் சிரித்துக் கல்யாணத்துக்கு வந்துடு என்றாள். இது நடந்தது 1966 ஆம் ஆண்டில். மோர் லெபான் தான்னு நினைக்கிறேன். எதுக்கும் பார்த்துட்டுப் பின்னர் பிள்ளையிடம் அடுத்ததரம் போகும்போது சொல்றேன். புதினா கலந்த மோர் 250 மில்லி லிட்டர் பாட்டில்களில் குடிக்கவென வருது. அதை நிறைய வாங்கி வைக்கச் சொல்லி இருக்கேன்.

      நீக்கு
  4. நகைச்சுவை... சிடுமூஞ்சி ராயர்களும் அழுமூஞ்சி செட்டியார்களும்...... நல்லவேளை.. கல்கி அவர்கள் எண்பதுகளில் இல்லை. இருந்து இப்படி எழுதியிருந்தால் பெரும் போராட்டம் வெடித்திருக்கும். சிடு மூஞ்சி குரங்குகளும் உம்மணாமூஞ்சி உராங்குட்டான்களும் என்று மாற்றும்வரை விட்டிருக்க மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.. சிவப்பு கருப்பு வெளுப்பு....! ஆனால் அவர் நகைச்சுவை என்று சொல்லி இருப்பதில் எனக்கு சிரிப்பே வரவில்லை!

      நீக்கு
    2. அப்போவெல்லாம்ம் பிள்ளைமார்கள், பிள்ளைனு போட்டுக்கொள்வதும், செட்டியார்கள், செட்டியார்னும் நாயுடுகள் நாயுடுனும், தேவமார்கள் தேவர்கள் என்றும் போட்டுக் கொண்டதோடு அப்படியே அழைக்கவும் செய்வார்களே. இப்போவும் உ.வே.சாமிநாத ஐயரவர்களுக்குத் தான் ஐயர் நீக்கி இருக்காங்களே தவிர்த்து ஜி.டி.நாயுடு அப்படித் தானே இன்னமும் அழைக்கப்படுகிறார்.

      நீக்கு
    3. கீசா மேடம்... தமிழர்களுக்குள் ஜாதி இருந்தால்தான் தெலுங்கு குடும்பத்திற்குப் பிடிக்காது. அவர்களது இடங்களைச் சேர்ந்தவர்களின் ஜாதிப் பெயரை நீக்கமாட்டார்கள். இதுகூடத் தெரியாமல் எப்படித்தான் தமிழகத்தில் இருந்தீங்களோ..

      நீக்கு
    4. தெருக்களின் பேர்களில்தான்  இவர்களால் ஜாதியை ஒழிக்க முடிகிறது.

      நீக்கு
  5. திருமணச் சடங்கு.... பெரும்பாலும் வேறுபடுவதில்லை, காலப்போக்கில் நீர்த்துப்போயிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஒரு நாடார் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். மிகவும் வேறுபட்டிருந்தது. அது. அதைப்பற்றி இங்கு எழுதியபோது இப்படி எல்லா வகைகளிலும் இருக்கும் முறைகளை எழுத ஆசை வந்தது. நடக்கவில்லை.

      நீக்கு
    2. திருமணம் பற்றிய கட்டுரையில் தேவர் என்னும் ஜாதியைக் குறிப்பிட்டே எழுதப்பட்டுள்ளது. ஆமாம், நானும் தென்னிந்திய ஸ்மார்த்தத் திருமணம் பற்றிய தொடர் எழுதும்போது இப்படி எல்லாம் சேகரிச்சு வைச்சிருந்தேன். ஆனால் ஏனோ தொடர முடியலை. அதோடு பார்சி கல்யாணங்களில் நம்மை மாதிரிப் பருப்புத் தேங்காய் இருக்கு என்பதையும் படத்தோடு சொல்லி இருந்தேன். நானும் நிறைய பிராமணரல்லாதோர் திருமணங்களில் கலந்து கொண்டிருக்கேன். எல்லாக் கல்யாணங்களிலும் காசி யாத்திரை இருந்தது. ஆனால் பெண்ணின் அப்பாவுக்குப் பதிலாகப் பெண்ணின் அண்ணன், அண்ணன் மனைவி (இருந்தால்) போய் மாப்பிள்ளையைத் திருமணத்துக்குக் கூட்டி வருகின்றனர். கிட்டத்தட்ட நம்ம பஞ்சகச்சம் மாதிரியே கட்டுவதோடு கூடுதலாகத் தலைப்பாகை உண்டு. பெண்ணை தாரை வார்த்துத் தருவது தான் அங்கேயும். பெண்ணுக்குத் துணையாக அவளுடைய நாத்தனார் (பிள்ளையின் அக்கா அல்லது தங்கை) நாத்தனார் கணவர் வந்து நிற்கின்றனர். கல்யாணச் சடங்குகளில் அவர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். பையருக்கு மைத்துனன்,மைத்துனன் மனைவி.

      நீக்கு
    3. எவ்வளவு வித்தியாசங்கள்...    வன்னியரின் பெண் அவர்கள் வீட்டில் அலங்காரங்களுடன் தயாராக இருப்பாள்.  மணமகன் வீட்டார் சீர் வரிசைகளுடன் சென்று மணமகளை அழைத்துக் கொண்டு மண்டபத்துக்கு வரவேண்டும்.  அப்படி அழைக்கச் செல்லும் மணமகன் வீட்டார் மூன்று அல்லது ஐந்து தம்பதிகள் செல்ல வேண்டும்!  அப்புறம் மணமகன் வீடு சத்திரம், அல்லது கோவிலில் வைத்து தாலி காட்டும் நிகழ்வு.

      நீக்கு
    4. தாலி கட்டும் நிகழ்வு.

      நீக்கு
  6. கடமை பொறுப்பு பற்றி மணியன் அவர் சந்தித்த மனிதர்கள் மூலமாக எழுதியிருப்பது சிறப்பு. நல்ல பகிர்வு. எல்லோருக்கும் கடமைகளும் இருக்கின்றன பொறுப்புகளும் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவற்றை நாம் எப்படி சமாளிக்கிறோம் என்பதுதான் விஷயம்..  இல்லையா?

      நீக்கு
    2. இந்த மாதிரிப் பெற்றோர் தனியாகவும், பிள்ளைகள் அவர்கள் மனைவிமார், குழந்தைகளோடு தனியாகவும் வட மாநிலங்களில் பெருமபாலும் உண்டு. சில குடும்பங்களில் ஒரே வீட்டில் தனித்தனி சமையல், படுக்கைனு இருக்காங்க. அப்பா, அம்மா பெரும்பாலும் சமைச்சுச் சாப்பிட்டாலும் பிள்ளைகள் வீட்டிலும் அழைத்து ஒரு வேளையாவது போடுகின்றனர். சகோதர ஒற்றுமை என்பதை அங்கே நிறையப் பார்க்கலாம்.. மஹாராஷ்ட்ராவில் கொன்சம் அதிகமாகவே மாமியார் படுத்தல், நாத்தனார் படுத்தல், ஓரகத்தி(மூத்தவளாய் இருந்தால்) படுத்தல் உண்டு. இதைக் கண்ணால் பார்த்திருக்கேன் ராஜஸ்தானில் ராணுவக் குடியிருப்பில் இருந்தப்போ. ஆக மொத்தம் மனிதர்கள் ஒரே மாதிரித் தான். பாஷையும் உடையும் உணவும் மட்டும் வேறாயாக இருக்கும். அங்கேயும் மாமியார் மாமனாரை வரவேற்காத மாப்பிள்ளைகளும் உண்டு. இதைப் பற்றி நிறைய நகைச்சுவைத் துணுக்குகளும் வந்திருக்கின்றன.

      நீக்கு
    3. எங்க பெண் மெம்பிஸில் இருந்தப்போப் பெரும்பாலும் ஸ்பானிஷ், ஆஃப்ரோ, அமெரிக்கன், ஒரு சில அமெரிக்கக் குடும்பங்கள் கூட்டுக் குடும்பமாக இருந்ததைக் கூடப் பார்த்திருக்கேன். சில குடும்பங்களில் தாத்தா, பாட்டி சேர்ந்தும் இருப்பாங்க. சிலர் தனியாகவும் இருப்பாங்க. ஆனால் சுற்றுலா, வெளியூர்கள்னு போனால் குடும்பமாகப் போவார்கள். அங்கேயும் குடும்ப வாழ்க்கையை ஆதரிப்பவர்கள் நிறையவே உண்டு.

      நீக்கு
    4. நம்ம பெர்செப்ஷன் காரணமா, நாம இந்தியர்கள் என்றால் கூட்டுக் குடும்பமாக அப்பா அம்மா குழந்தைகள் என்று ஈஷிக்கொண்டு இருப்பார்கள், மேற்கத்தைய நாடுகளில் 18 வயசாச்சுன்னா நீ வேற நான் வேறன்னு இருப்பாங்க என்று நினைக்கிறோம். விதிவிலக்குகள் எங்கேயும் உண்டு. இன்னும் மூன்று நான்கு தலைமுறைகளில், தமிழகம் மேற்கத்தைய நாடாகவும், மேற்கத்தைய நாடுகள் இந்த விஷயத்தில் தமிழகமாகவும் மாற வாய்ப்பு உண்டு.

      நீக்கு
    5. மேல்நாடுகள் போல வடநாட்டிலேயே தனித்தனிக் குடும்பமாக இருப்பார்கள் என்பது செய்தி.  இங்குதான் சேர்ந்து இருக்க வேண்டும் என்கிற வழக்கம் இருக்கிறது.  அந்த பலவீனம் என்னிடமும் இருக்கிறது.

      நீக்கு
  7. தி ஜா அம்மா வந்தாள் பற்றி எழுதியுள்ளது ஆர்வத்தைத் தூண்டுகிறது. தொடர்ந்து பிறகு படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது ஒரு பகுதி சேர்த்திருக்கிறேன்.  அநேகமாக அதை பார்த்திருக்க மாட்டீர்கள்.

      நீக்கு
    2. எஸ். பி. பி அவர்களின் நினைவை பற்றியதா?

      நீக்கு
    3. வாங்க கமலா அக்கா..  ஆமாம் அதுவேதான்.

      நீக்கு
  8. அனைவரும் நலமாக இருக்க பிரார்த்தனைகள். கடைசிப் பாடலைக் கேட்க எனக்குத் தெம்பில்லை. பார்க்கவும் தான்.:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா..  வணக்கம்.  பிரார்த்திப்போம்.  ஆம்..  அந்தப் பாடலில் சிவாஜியின் உடல்மொஜி

      நீக்கு
    2. தேவர் வீட்டுத் திருமணம் சிறப்பு. யப்பா 21 தட்டு பெண்ணுக்கா!!!!! வெள்ளிக்கிழமை அனுப்ப மாட்டார்களா. :) எங்கள் திருமணம் வெள்ளியன்று நடந்ததால் நானும் வெள்ளியன்றே புகுந்த வீட்டுக்குச் சென்று விட்டேன்.

      நீக்கு
    3. பாரதியின் எழுத்தை கல்கி விவரித்திருப்பது நல்ல சுவை.

      நீக்கு
    4. வெள்ளிக்கிழமை - பிறந்த வீடோ, புகுந்த வீடோ அனுப்ப மாட்டார்கள் என்பது எங்கள் வீட்டிலும் உண்டு.  சிலர் செவ்வாய்க்கிழமையும் சேர்த்துக் கொள்வார்கள்.

      நீக்கு
  9. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா.. வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா சொல்கிறீர்கள்?

      நீக்கு
    2. அதை எடுத்துவிட்டேன் மா. இன்று மி ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈகப் பெரிய பதிவு. எனக்கும் சாப்பிட்டுப் படுக்கணுங்க.:) நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி சிதறல்கள் எப்போதும் போல் அருமையாக உள்ளது புதிதாக சேர்க்கப்பட்ட பகுதியான எஸ். பி. பி அவர்களின் பாடல்கள் அனைத்தும் நெஞ்சில் நீங்காது இடம் பெற்றவை. அப்புறம் பாடல்களை ஒவ்வொன்றாக கேட்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன். .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய பகுதி சேர்க்கப்படும் முன்னரே பதிவை ஒரு பார்வை முழுமையாக பார்த்து / படித்து விட்டீர்களா?

      நீக்கு
    2. ஆம். வலிகளில் தூக்கம் கலைந்து விட்டது. ஒரளவு படித்துக் கொண்டே வந்தேன்.

      நீக்கு
    3. பரவாயில்லையே.. நன்றி.

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. //எவ்வளவு முன் அனுபவங்கள் இருந்தாலும், எவ்வளவு உஷாராக இருந்தாலும் நம்மையும் மீறி சில நேரம் கருத்து சொல்ல வேண்டியதாகி விடுகிறது. //

    ஆமாம், உண்மை. அமைதியாக இருப்பது சும்மா பார்வையாளர்களாக இருப்பது நல்லது.

    பதிலளிநீக்கு
  14. அறிவோம்.. சிந்திப்போம் " நூலில் சுஜாதா பகிர்வு நன்றாக இருக்கிறது
    இன்று பகிர்ந்த ஒவ்வொன்றையும் ஒரு தனி பதிவாக போடலாம் நன்கு படித்து கருத்து நிதானமாய் போடலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது இன்றைய பதிவில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொறுமை இல்லை அக்கா...  நெல்லையிடம் சொன்னது போல கையைக் கட்டுப்படுத்துவதே சிரமமாய் இருக்கிறது!!!

      நீக்கு
  15. சும்மா இருப்பதும் மௌனம் காப்பதும் நம்மைக் காப்பாற்றும். முக்கியமாக முதுமையில்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.  ஆனால் எந்த வயதிலுமே நா காப்பது  நல்லது!!

      நீக்கு
  16. அம்மா வந்தாள் மனசிக்கல்களை ஏற்படுத்தும். நல்ல வயதான பிறகு படித்ததால் தாண்டிப் போக முடிகிறது. அவரே தான் சொல்லி இருக்கிறாரே. இதெல்லாம் நடக்கிறது என்று!!! நானும் பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. //பேஸ்புக்கிலிருந்து\=- கீழே உள்ளது எழுதியவரின் கருத்து.//
    படித்தேன்.
    நான் பள்ளியில் படிக்கும் போது சாந்தியின் திருமணம் 14 வயதில் திருமணம் செய்து விட்டார்கள் அது தப்பு என்று பள்ளியில் டீச்சர் எல்லாம் பேசி கொண்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவாஜி பழைய வழக்கத்தை மேற்கொண்டிருந்திருக்கிறார்.

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    சிவாஜியால் நடிக்க முடியாத படமா? அவர்தான் நடிப்புக்கே திலகமாயிற்றே.!! ஒவ்வொரு பாத்திரத்தையும் நம் கண் முன்னே நிறுத்துவார். படம் முன்பு பார்த்துள்ளேன். பாடல்கள் நன்றாக இருக்கும்.

    கோர்ட் சீரீஸா.? தங்கள் விமர்சனம் படித்த பின் பார்க்கலாம் என நினைக்கிறேன். வேலைகளுக்கிடையே நேரந்தான் அமைய வேண்டும். இரண்டொரு நாட்களாக உடல்நிலை வேறு பாதிப்புடன் (பல் வலி அதனால், பிற வலிகள்.) நாட்கள் நகர்கிறது. மாற்று மருந்தாக இப்படி ஏதாவது பார்த்து, கேட்டு, பேசி, ரசித்தால், உபாதைகளின் வலி பெரிதாக தெரியாமல் இருக்கும். பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // சிவாஜியால் நடிக்க முடியாத படமா? அவர்தான் நடிப்புக்கே திலகமாயிற்றே.!! //

      அவர் அப்படி பயந்திருக்கிறார்.  எதை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்கிற மனம்!

      பல்வலி எப்பவுமே படுத்தல்தான்.  பார்த்துக் கொள்ளுங்கள் அக்கா.

      நீக்கு
  19. அன்பே ஆரமுதே , உயிர்த்தேன் இந்தப் புத்தகங்களை என்னேரமும் படிக்கலாம். சுவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது இல்லை?

      நீக்கு
    2. ஆமாம். எல்லாமே உணர்ச்சிக் குவியல். நம் வாழ்க்கையை ஒட்டிய மனிதர்கள்.

      நீக்கு
  20. தி. ஜானகிராமன் - அவர்கள் பக்கம் அவர் பேசியது அவர் கதையின் சில பகுதிகள் நன்றாக இருக்கிறது.

    //எடிட்டர்ஸ் பேஜ் என்று இதயம் பேசுகிறது மணியன் எழுதியிருந்த ஒரு பக்கம் - அவரது 'இதயம் பேசுகிறது' புத்தகத்தில் //

    திருமதி டட்டன் சொன்னது அருமை தான். கணவர், மகன் கடமை, பொறுப்பை பற்றி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நல்ல மனைவியாகவும், அதைவிட நல்ல மனுஷியாகவும் இருந்திருக்கிறார்.

      நீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    தங்கள் கருத்து உண்மைதான்.! நாம் கருத்துகள் சொல்வது எடுபடாமல் போகும் போது மௌனம் சாலச் சிறந்ததாகும். மௌனம் பல (இப்போதைய பல் வலியையும்) வலிகளையும் போக்கும்.

    இந்த பாலும், தயிரும் இப்போது நம்மை பாடாய் படுத்தி எடுக்கின்றன. பால் அடுப்பில் வைத்தால், எப்போது குதிக்குமென தெரியாது. தயிர் உரை குற்றினால், பாலாகத்தான் இருப்பேன் என அடம் பிடிக்கிறது. இது எல்லாமே இப்போதுதான் இப்படியாகிறது. அதற்கு முன் நாங்களும் எப்போதும் உரைக்குற்றிய தயிர்தான். அதிலிருந்து தினமும் வெண்ணெய் எடுத்து நெய் காய்ச்சி பயனபடுத்திருக்கிறேன். இப்போது கொஞ்ச நாட்களாக தயிர் பாக்கெட்தான் வாங்குகிறோம். இதைப் பற்றி ஒரு பதிவே எழுதலாம் என நினைத்திருக்கிறேன் . அதற்கும் ஒரு நேரம் கிடைக்க வேண்டுமே.! நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு காரணங்களுக்காக மௌனம்  ரசித்தேன்!

      இந்த பால்களில் அவர்கள் ஏதோ ரசாயனம் கலக்கிறார்கள்.  அதனால் அப்படி வருகிறதோ என்னவோ.  பாலாக இருந்து விட்டால் கூட பரவாயில்லை.  ஒரு மாதிரி மூக்குச்சளி போல இருக்கிறது.  ஆரோக்யா பால் வாங்கினால் ஓரளவு ஓகே.  ஆனால் அது என்னவோ பெருமளவு புவடர் கலந்த  பாலோ என்கிற ஐயம் எனக்கு வரும்!

      நீக்கு
    2. பால் பாக்கெட் நமக்கு பத்திரமாக்க் கிடைக்காத்தும் ஒரு காரணம். பால் திரிந்தால் வடிகட்டி பனீரை உடனே சாப்பிட்டுவிடுவேன். முழுவதும் தயிர் ஆகலைனா, அதாவது மிகவும் கடுத்த, தயிர் பத்த்தை எட்டப் போகும் இளம் தயிர் எனக்கு தோசைக்குத் தொட்டுக்கொள்ளப் பிடிக்கும்.

      நீக்கு
    3. நாங்கள் அடிக்கடி (எப்போதும்) அதை பால்கோவா (அதற்கு சர்க்கரை நான்கு ஸ்பூன் போதும்.) கிளறி சாப்பிடுவோம்.

      நீக்கு
    4. எனக்கு அல்லது எங்களுக்கு அந்தப் பொறுமை எல்லாம் கிடையாது.  பால் திரிந்து போனால் கொட்டி விடுவதுதான்.

      நீக்கு
  22. கல்யாண சடங்குகள் நன்றாக இருக்கிறது தாய்மாமாவுக்கு முக்கிய பங்கு எங்கள் பக்கமும் உண்டு. அவர் தான் காப்பு கட்டுவார். பெண்ணின் (மணமகள்) மாமா பெண்ணின் கையிலும், ஆணின் (மணமகன்) மாமா ஆண் கையிலும் காப்பு கட்டுவார். அவருக்கு புத்தாடைகள் கொடுக்கப்படும்.

    பெண்ணின் சகோதரருக்கு முக்கிய பங்கு, ஆணின் சகோதரிக்கு முக்கிய பங்கு எல்லாம் உண்டு. அவர்களுக்கு தனி சடங்கு முறைகள் உண்டு. .
    பெண்ணின் அக்கா கணவருக்கும், ஆணின் அக்கா கணவருக்கும் மரியாதை செய்வார்கள்.

    எல்லா உறவுகளையும் சடங்குகளால் இணைத்து கொண்டு கல்யாணம் செய்தார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டு கல்யாணங்களிலும் தாய் மாமனுக்கு முக்கிய பங்கு உண்டு. பெண்ணின் தாய் மாமா என்றால் மெட்டி போடுவார் . பெண்ணின் தாய் மாமா, ஆணின் தாய் மாமா இருவரும் மாலை மாற்றும் சடங்கில் மாப்பிள்ளை பெண்ணை தோளில் தூக்கிக் கொள்வார்கள். மணமகளின் சகோதரன் பொரி போடுவான். பொரி போட்ட கைக்கு மோதிரம் என்று மோதிரம் செய்து போடுவார்கள். தாலி கட்டும் சமயத்தில் கௌரி விரதம் பூஜையில் இருக்கும் மணமகளை கூடையில் வைத்து தாய் மாமா தான் மணமேடைக்கு தூக்கி வருவார்

      நீக்கு
    2. சின்ன வயசில் கல்யாணம், உபநயனம் நடந்தால் தாய்மாமனுக்கு ஓக்கே. இல்லைனா அவர்கள் பாடு திண்டாட்டம். கூடையில் வைத்துத் தூக்கிக்கொண்டு வருவதைக் கேள்விப்பட்டதில்லை.

      நீக்கு
    3. எங்கள் வழக்கத்தில் உண்டு.

      நீக்கு
  23. பாரதியின் நகைச் சுவையை கல்கி எழுதிய கட்டுரை படித்தேன்.
    தி கோர்ட் பார்க்க வேண்டும் உங்களின் விமர்சனம் நன்றாக இருக்கிறது.

    இன்று SPB நினைவுநாள் காலங்கள் தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது அவர் பாடல்கள் ஒலித்து கொண்டே இருக்கும் அவர் இருப்பை சொல்லி கொண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோர்ட் சீரிஸ் பார்க்கலாம் சுவாரசியமாக இருக்கிறது.

      எஸ்பிபியை யாராலும் மறக்க முடியாது.

      நீக்கு
  24. சீர்காழி கோவிந்தராஜன் பாடலும், சிவாஜியின் நடிப்பும் பார்க்கும் போது கண்ணில் நீர் வரும்.

    பாரதியார் பாடலுக்கு G. ராமநாதன் இசை மிக அருமையாக இருக்கும் அடிக்கடி கேட்ட பாடல்கள்., இன்றும் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் பொருத்தமான டியூனில் பாடலை கொடுத்திருக்கிறார் ராமநாதன் அவர்கள். உள்ளம் உருகும்.

      நீக்கு
  25. நடிகர் திலகத்தின் மகள் சாந்தி அம்மையாரின் மறைவு
    குறித்த பிரம்ம ரிஷியாரின் கட்டுரை மனதை கனக்கச் செய்தது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனாலும் அவரின் ஒன்றிரண்டு கருத்துக்கள் மனதை நெருடின.

      நீக்கு
  26. கேப்பிட்டல் எழுத்துக்களில் MOM என்று பார்த்தவுடன் Man Of the Match என ஒரு கணம் படித்துவிட்டேன்! Oman v HK பார்த்தவாறே எபி யைத் திறந்ததின் விளைவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த அளவு கிரிக்கெட்டில் மூழ்கி விட்டீர்கள்!

      நீக்கு
  27. நெஞ்சில் உரமுமின்றி
    நேர்மைத் திறமும் இன்றி....

    மகாகவியின் பாடலை எப்போது
    கேட்டாலும் மனம் பதறும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  தண்ணீர் விட்டா வளர்த்தோம் பாடலும்...

      நீக்கு
  28. அம்மா வந்தாள் ரெண்டு, மூணு தரம் படிச்சாச்சு.
    எஸ்பிபி பத்தி இன்னிக்கு வரும்னு நேத்திக்கே நினைச்சேன்.

    சுஜாதாவின் கணக்குப் பற்றியது எனக்கெல்லாம் ரொம்பவே ஆர்வத்தைத் தூண்டவில்லை.
    கப்பலோட்டிய தமிழன் செய்தி படிச்சிருக்கேன்.
    கோர்ட் தொடரைத் திரைப்படமாக இருந்தால் பார்க்கலாம்னு தோணுது. சீரிஸ் எல்லாம் பார்க்கப் பிடிக்கலை.

    கல்கி எழுதி இருப்பது ரசிக்க வைக்கிறது. இப்படி எல்லாம் கல்கி எழுதி இருப்பதும் இப்போத் தான் தெரியும்.
    அன்புள்ள ஆறாம் வேற்றுமை நு வந்தது தெரியும். ஆனால் படிச்ச நினைவில்லை. ரா.கி.ர.வோனு நினைச்சிருந்தேன்.

    அம்மா பற்றிய இந்தத் தொகுப்புத் திரும்பத் திரும்பப் படிச்சாச்சு.

    கல்யாண் ஜ்வெல்லரி வியாபாரத்தில் முன்னேப் பின்னே இருந்தாலும் இம்மாதிரிப் பாரம்பரியத்தை ஆதரிப்பது போற்றத் தக்கது.

    சிவாஜி மகள் சாந்தியைப் பற்றித் தான் 2,3 நாட்களாகப் படிச்சுப் படிச்சுப் படிச்சுப் படிச்சு. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா பற்றிய தொகுப்பு முன்பு போட்டிருந்தது வேறு.  எல்லாத்தையும் கவர் பண்ணிட்டீர்ங்கன்னு நினைக்கறேன்.

      இன்றைய பதிவு பற்றி நேற்று நீங்கள் ஏதோ சொல்லி .இருந்த ஞாபகம்.

      நீக்கு
  29. எஸ்.பி. .பி நினைவுநாள் அவரின் திறமை சொல்ல வார்த்தைகள் இல்லை அவர்பாடல்கள் காலம் கடந்தும் ஒலிக்கும்.

    இன்றைய பகிர்வுகள் பல விடயங்களையும் தந்துள்ளன.

    பதிலளிநீக்கு
  30. அன்புள்ள ஆறாம்வேற்றுமை, எஸ் எ பி?

    பதிலளிநீக்கு
  31. வணக்கம் ஸ்ரீராம், ரொம்ப நாள் ஆச்சு நான் தளம் வந்து.
    சும்மா இருத்தல் -ஆமாம் சில நேரங்களில் சுகம் தான்.

    இங்கு அமெரிக்காவில் எனக்கு அப்போதும் தயிர் சரியாக வருவதில்லை..முயல்வதைவிட்டு கடையிலேயே கிரீக் யோகர்ட் வாங்கத் தொடங்கிவிட்டேன்.

    சிவாஜி அவர்களின் சோகம் அறிந்து வருத்தமாக இருக்கிறது.
    பல பகுதிகள் , முழுமையாகப் படிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே..    வாங்க கிரேஸ்...   ரொம்பவே நாளாச்சு...  நல்லா இருக்கீங்களா?  இப்பவும் பிளாக்ல எழுதறீங்களா?

      நீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!