என்னப்பா… பஹ்ரைன் கம்பெனி வேலையைப் பற்றி எழுதப்போகிறாய் என்று பார்த்தால் நீ துபாய் கதைக்குச் சென்றுவிட்டாயே என்று கேட்பவர்களுக்கு… நானென்ன நல்ல நாவலாசிரியரா… நாவல் போல ரசனையுடன் எழுத. வெறும்ன என் அனுபவங்களை எழுதும்போது இந்த மாதிரி ஒரு இடத்தைவிட்டு இன்னொரு இடத்துக்குத் தாவுவது தவிர்க்க முடியாது.
சென்ற வாரத்தில், எனக்கு எடிசலாட்டில் வேலை கிடைத்தது பற்றியும் அதற்கு என்னுடைய பாஸ், எம்.டியிடம் தெரிவித்தபோது அதனை அவர் ஏற்காதது பற்றியும் சொல்லியிருந்தேன். பிறகு நானே எம்.டியிடம் சென்று எனக்கு வேலை கிடைத்தது பற்றித் தெரிவித்தபோது, அவர், உலகத்தில் ஏகப்பட்ட வேலைகள் இருக்கின்றன, உனக்கும் நிறைய வேலை கிடைக்கும். ஆனால் உன்னை துபாய்க்கு இந்தக் கம்பெனிதான் கொண்டுவந்திருக்கிறது. அதனால் வேறு வேலைக்கு மாற்றிக்கொள்ள அனுமதி தர முடியாது. நீயே முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றார். (அப்போது அவர் சொன்னது கடுப்பாக இருந்தது.. அடுத்தவன் வாழ்க்கையைக் கெடுக்கிறாயே என்று தோன்றியது. அனுபவம் கூடக் கூட அவர் சொன்னது மிகச் சரியானது என்றே நான் நினைத்தேன். இந்த மாதிரி சூழல் என்னுடைய துறைக்கு ஏற்பட்டபோது நான் என்ன முடிவெடுத்தேன் என்பதை இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். தனக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னி என்று மனித மனோபாவம் உண்மைதான்)
இப்படித்தான் ‘இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்’ என்று பலமுறை நான் எழுதுவதைக் கவனித்திருப்பீர்கள். காரணம், அந்தக் கதையை எழுத ஆரம்பித்தால், வந்த விஷயத்தைச் சொல்லாமல் கிளைக்கதைக்குச் செல்வதைப் போல ஆகிவிடும். அப்போ எந்தச் சந்தர்ப்பத்தில் இதனை நினைவு வைத்துக்கொண்டு எழுதுவது? அதனால் இப்போதே எழுதிவிடுகிறேன்.
நான் துறைத் தலைவனாக இருந்தபோது, சிலரை நம்பி அவர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக கம்பெனி மூலம் ஏற்பாடு செய்வேன். இது புது சாஃப்ட்வேராகவோ இல்லை ஆரக்கிள் போன்ற அப்ளிகேஷனாகவோ இருக்கலாம். இப்படிப் பயிற்சி பெறுவது, கம்பெனி அவன் மேல் இன்வெஸ்ட் பண்ணுவது போல. அப்படிப் பயிற்சி பெறுகிறவர், கம்பெனிக்காக தான் கற்றுக்கொண்ட திறமையை உபயோகப்படுத்தினால்தான் கம்பெனிக்கு நல்லது. இல்லாவிட்டால் என்னுடைய முடிவு தவறாகிவிடும். அதாவது கம்பெனி வீணாக ஒருவனுக்குப் பயிற்சி கொடுத்தது போல ஆகிவிடும். இப்படி நடப்பதை நான் விரும்புவதில்லை, ஏனென்றால் என்னுடைய முடிவின், சிபாரிசின் பேரிலேயே இதற்கான அனுமதியை என்னுடைய பாஸ் தருவார். இப்படிச் சில முறைகள் நடந்திருக்கிறது. பயிற்சியை முடித்த பிறகு, அவனது பெற்றோருக்கு உடம்பு சரியில்லை என்று சென்ற ஒருவன், சில வாரங்களில் பஹ்ரைனிலேயே வேறு கம்பெனியில் சேர்ந்தது நடந்தது. ‘எங்களுக்கு ஆட்சேபணை இல்லை’ என்ற சர்டிபிகேட் கேட்டால், நான் கொடுப்பதில்லை. கொஞ்சம் ‘ரிலீஸ் லெட்டர்’ வாங்கித்தர முடியுமா என்று கேட்பவர்களுக்கு என் பதில் ‘வாய்ப்பே இல்லை’ என்பதுதான்.
இப்போது அப்படி நடந்துகொண்டதைப் பற்றி நினைக்கும்போது எனக்குக் குற்ற உணர்வு வருவதில்லை. நான் நியாயமாகத்தான் நடந்துகொண்டிருக்கிறேன் என்றே தோன்றும். அதனால், எனக்கு துபாய் கம்பெனி எம்.டி. வேறு கம்பெனியில் சேர அனுமதி தராததை நான் தவறாக எண்ணவில்லை (அப்போது அப்படித் தோன்றியிருந்தாலும்)
என் பாஸ் மறுநாள் என்னிடம், நீ எடிசலாட்டில் வேலைக்குப் போகணும் என்று தீர்மானமாக இருந்தால், உன்னுடைய விசாவை கேன்சல் செய்துவிடுவார்கள், ஊருக்குப் போவதைத் தவிர வேறு வழியில்லை, என்று சொன்னார். நானும் எதற்கு இந்த விளையாட்டு என்று நினைத்து (உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா என்று ஆகிவிட்டால்?), எம்.டியிடம் சென்று நான் இங்கேயே தொடரப்போகிறேன் என்று சொல்லிவிட்டேன். அவரும், இதுவே சரியான முடிவு என்றார்.
இதனால் எனக்குக் கிடைத்த அனுபவம்… கடவுளிடம் ஒன்றைக் கேட்டு வேண்டிக்கொண்டால் கிடைத்துவிடலாம். ஆனால் அதனால் நாம் பலன் பெறுவோமா என்பது நம்முடைய கர்மாவினைப் பொறுத்தது. நான் ‘எது எனக்கு நல்லதோ அதைத் தரணும்’ என்று வேண்டிக்கொள்வதற்குப் பதிலாக, வேலை எனக்குக் கிடைக்கணும் என்று வேண்டிக்கொண்டது தவறு என்று பிறகு நினைத்தேன்.
அது கிடக்கட்டும்… நான் சொல்லவந்தது பஹ்ரைனில் கிடைத்த வேலையைப் பற்றித்தானே. அதற்குள் துபாய் பற்றி எழுத ஆரம்பித்துவிட்டாயே என்று நினைக்கவேண்டாம். பஹ்ரைன் ரீடெயில் கம்பெனியில் சேர்வதற்கு முன்னால் நடந்தவைகளைச் சொன்னால்தான் எதற்கு பஹ்ரைனுக்குச் சென்றேன் என்பதே தெரியும். அந்த தேசம் பற்றி எனக்கு அப்போது தெரியாது.
துபாய் அனுபவங்களைப் பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன். எனக்கு 1994 செப்டம்பர் வாக்கில் திருமண நிச்சயம் நடந்து டிசம்பரில் திருமணம் நடைபெற்றது. இந்தச் சமயத்தில், ஹாங்காங் பிரச்சனை (ஹாங்காங் பிரிட்டன் கையிலிருந்து சீனாவுக்குத் திரும்பச் செல்வது) நடந்தது. அதனால் துபாய் அரசு, நிறைய கம்பெனிகள் துபாய்க்கு வரும், நிறைய தகுதிவாய்ந்த தொழிலாளர்கள் துபாய்க்கு வருவார்கள் என்று எதிர்பார்த்தது. அதனால் இமிக்ரேஷன் மற்றும் வேலை சம்பந்தமான சட்டங்களைச் சிறிது சீர் செய்தது. திடும் என்று, Family Visa கிடைக்க வேண்டுமானால் (அதாவது வேலை பார்ப்பவர், தன் மனைவியையும் குழந்தைகளையும் துபாய்க்கு அழைத்துவர,) குறைந்தபட்சம் இவ்வளவு ஊதியம், அத்துடன் வேலை பார்க்கும் கம்பெனி இருப்பிடம் தரவேண்டும் என்றெல்லாம் புதிதாக சட்டம் வந்தது -நான் துபாய் என்று எழுதும்போது, எமிரேட்ஸ் என்று புரிந்துகொள்ளவும். 7 எமிரேட்டுகள் சேர்ந்து அராbப் எமிரேட்ஸ் என்ற தேசமாக அறியப்படுகிறது. அதில் பெரிய எமிரேட் அபுதாபி. அதற்கு அடுத்தது துபாய்.
இந்த சட்டச் சிக்கல்களினால், நான் என்னுடைய விசாவை, ஃபேமிலி விசாவாக மாற்ற, அதற்கான முயற்சிகளில் இறங்கினேன். என் கம்பெனியில் எல்லோருக்கும் அந்தப் பிரச்சனை இருந்ததாலும், என் கம்பெனி எம்.டியைப் பொறுத்த வரையில் முன்னுரிமை லிஸ்டில் நான் இல்லாததாலும், உடனடியாக விசா பெற முடியவில்லை.
இந்தச் சிக்கல்களினால், திருமணம் ஆனதும் என் மனைவி விசிட் விசாவில்தான் என்னுடன் துபாய்க்கு வர முடிந்தது. ஆனால் திருமணம் முடித்து இருவரும் சேர்ந்தே துபாய்க்குச் சென்றோம். அது ஒன்றுதான் ஆறுதல். 90 நாட்களுக்குப் பிறகு வேறு ஒரு தேசத்திற்கு அவள் சென்றுவிட்டு, மீண்டும் புதுப்பிக்கப்பட்ட விசிட் விசாவில் துபாய்க்கு வரவேண்டும். முதல் மூன்று மாதங்கள் முடிந்ததும் திரும்ப இந்தியாவிற்கு அனுப்பிவிட்டு புது விசாவில் அழைத்துக்கொள்ளலாமா என்று நினைத்தேன். பொதுவாக பக்கத்தில் இதற்காகவே இருக்கும் ஒரு இடம்/தீவு உண்டு. அங்கு அனுப்பிவிட்டு, உடனே புது விசிட் விசா தயார் செய்து அதில் திரும்ப எமிரேட்ஸ் வருவதுதான் நடைமுறை. இதில் செலவு மிகவும் குறைவு. ஆனால் எனக்கோ என் மனைவியை அங்கு தனியாக அனுப்பத் தயக்கம். ஒருவேளை என் கம்பெனி புது விசிட் விசா தர சில நாட்கள் ஆகிவிட்டால் அவளால் தனியாக இருப்பது கடினமே என்று நினைத்தேன். அப்போது சௌதியில் இருந்த என் அண்ணன், தனக்கு மனைவி வழியில் உறவினர் பஹ்ரைனில் இருக்கிறார், அவர் மூலமாக நீ பஹ்ரைன் சென்று இரண்டு நாட்களில் புது விசா வந்தவுடன் திரும்ப துபாய் வந்துவிடலாமே என்று சொன்னான். அது எனக்கு நல்ல யோசனையாகத் தோன்றியது. அதனால் இருவரும் பஹ்ரைனுக்குச் சென்றோம். அண்ணனின் உறவினர் வீட்டிலேயே தங்கினோம். விமானப் பயணத்திற்காக நான் செலவழித்த காசுக்கு ஏதேனும் உருப்படியாகச் செய்யலாம் என்று நினைத்து, என் பயோடேட்டாவுடன் (அப்போல்லாம் ரெஸ்யூம் என்று சொல்லும் வழக்கம் வரவில்லை) பஹ்ரைன் கல்ஃப் ஏர் கம்பெனிக்கு இண்டர்வியூவுக்குச் சென்றேன். அவர்கள் ஆரக்கிள் சாஃப்ட்வேர் உபயோகிக்கும் கம்பெனி. எனக்கு அப்போது ஆரக்கிள் சாஃப்ட்வேர் தெரியும், ஆனால் அனுபவம் கிடையாது. இன்னொரு கம்பெனியான Datamas என்ற கன்சல்டன்சி கம்பெனிக்குச் சென்று என்னுடைய பயோடேட்டாவைக் கொடுத்துவிட்டு வந்தேன். இதற்கு என் அண்ணனின் உறவினர், என்னைக் காரில் அழைத்துச் சென்று உதவினார்.
அப்போதெல்லாம் புதுப் படங்களின் டேப், வாடகைக்குக் கிடைக்கும். மாதம் இவ்வளவு தினார் என்று கட்டிவிட்டால், டேப் வாங்கி படம் பார்த்துவிட்டு, திரும்பிக் கொடுக்கும்போது இன்னொரு டேப் வாங்கிக்கொள்ளலாம். பஹ்ரைனில் நாங்கள் தங்கியிருந்த வீட்டில் பிரசாந்த் நடித்த ஆணழகன் படம் பார்த்தது நினைவில் இருக்கிறது.
துபாயில், என் கம்பெனி எம்.டிக்கு, இவன் வேறு தேசம் என்று சொல்லிவிட்டு பஹ்ரைன் சென்றிருக்கிறானே, விசாவிற்கு நாளானால், வேறு வேலை தேடிவிடுவானே என்று யோசித்தாரோ என்னவோ, இரண்டு நாட்களில் மனைவியின் விசிட் விசா தயாராகிவிட்டது. அதனால் திட்டமிட்டபடி துபாய் திரும்பினோம்.
இப்போது நினைத்துப் பார்க்கும்போது, எனக்கு எதுவுமே எளிதாகக் கிடைத்துவிடவில்லை என்பது புரிகிறது. ஒவ்வொன்றுக்கும் என் முயற்சியும், இறைவனின் கருணையும் காரணமாக இருந்திருக்கிறது. இறைவனின் கருணையினால், நமக்கு பிறரின் உதவியும் கிடைக்கிறது. தெய்வபலம் இல்லாமல் எந்த முயற்சியும் வெற்றிபெறுவதில்லை. நமக்கு அதற்கான நேரம் வரும்போதுதான் தெய்வபலம் கூடுகிறது. மற்றபடி வாழ்க்கையின் பெரிய திருப்பங்கள், அதற்கான நேரம் வரும்போதுதான் நடக்கிறதே தவிர பிரார்த்தனையினால் உடனே நடந்துவிடுவதில்லை என்பதை நான் கண்டிருக்கிறேன். நம்முடைய நேரம் சரியில்லாதபோது, நமக்கு கெடுதல் நடப்பதற்குத் தோதாக நம் பேச்சும் அமைந்துவிடுகிறது. இவற்றையெல்லாம் ஏதோ தத்துவம் என்ற அளவில் எழுதவில்லை. என்னுடைய அனுபவத்தில் நான் கண்டதினால் எழுதுகிறேன்.
இதை எழுதும்போது, பரிகாரங்கள் பற்றி ஒரு ஜோசியர் காணொளியில் சொன்னது நினைவுக்கு வருகிறது. நாம் பலவித பரிகாரங்கள் செய்கிறோம். ஆனால் அவற்றிற்கு பலன் இருப்பது போலத் தெரியாது. ஆனால் ஒவ்வொரு பரிகாரத்திற்கும் நிச்சயமாக பலன் உண்டு. அதற்கான நேரம் வரும்போதுதான் பலன் தெரியும். அந்த நேரம் இந்த ஜென்மத்தில் வராமலும் இருக்கலாம் என்றார். இதில் அர்த்தம் உள்ளது போல எனக்குத் தோன்றியது.
திருமணமான உடனேயே மனைவியை துபாய்க்குக் கூட்டிச் சென்றதைப் பற்றிச் சொல்லியிருந்தேன். 90 நாட்கள் விசா காலம் முடிந்ததும் நாங்கள் பஹ்ரைன் சென்று, அடுத்த விசாவில் துபாய் வந்தோம். (எனக்கு கம்பெனி வேலை விசா இருந்தது. மனைவிக்குத்தான் விசிட் விஸா) இதற்கிடையில் என்னுடைய பாஸ், சில பல காரணங்களால் கம்பெனியை விட்டு நீங்கி, இந்தியா திரும்பிவிட்டார். எனக்கு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல ஆகிவிட்டது. சில மாதங்கள் கஷ்டப்பட்டேன் (அதாவது பலரையும் அனுசரித்துச் செல்ல வேண்டியிருந்தது) நான் பஹ்ரைனில் ஒரு கம்பெனியில் (டேடாமாஸ்) என்னுடைய பயோடேட்டாவைக் கொடுத்திருந்தேன் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அந்த கம்பெனியின் பிராஜக்ட் மேனேஜர், துபாய் வந்தபோது என்னை நேரில் சந்தித்து இண்டர்வியூ செய்தார். அவர்களுக்கு நான் நல்ல கேண்டிடேட் என்று தோன்றிவிட்டது. அதனால் எனக்கு பஹ்ரைன் கம்பெனியிலிருந்து ஆஃபர் கடிதம் வந்தது. மனைவியின் இரண்டாவது விசிட் விசா காலம் முடியும் தருணம் வந்தது. அவளை சென்னைக்குத் திரும்ப அனுப்பிவிட்டேன். பஹ்ரைன் வேலையில் சேர்ந்து பிறகு வரவழைத்துக்கொள்கிறேன் என்று சொன்னேன்.
என் பாஸ் (எனக்கு துபாய் வேலை வாங்கித் தந்து அந்த கம்பெனியில் என் பாஸாக இருந்தவர்) இல்லாதபோது எனக்கு நான் வேலை பார்த்த கம்பெனி வாழ்க்கை கொஞ்சம் சந்தோஷம் இல்லாத காலம். இதன் காரணத்தை நான் பிற்பாடு அனுபவத்தினால் அறிந்துகொண்டேன். நாம் வாங்கும் சம்பளத்தைவிட பல மடங்கு நம் கம்பெனிக்கு நம்மால் லாபம் கிடைக்குமானால், அப்போதுதான் மனதுக்கு சந்தோஷம் வரும் என்பதைக் கண்டுகொண்டேன். பஹ்ரைன் வேலை கிடைத்தது தெய்வாதீனம் என்றே நான் நம்பினேன். துபாயிலேயே வேறு வேலை கிடைத்திருந்தாலும் வேலை பார்த்த கம்பெனியிடம் ‘ஆட்சேபணை இல்லை’ கடிதம் கிடைப்பது கடினம்.
இப்படியாக, நான் துபாயில் இரண்டு வருடம் நான்கு மாதம் வேலை பார்த்த பிறகு பஹ்ரைனுக்கு புது கம்பெனியில் வேலைக்குச் சேரப் புறப்பட்டேன்.
துபாய் வாழ்வைப் பற்றியோ, அதற்கு முன்பிருந்த காலத்தைப் பற்றியோ எழுதும் நேரம் இதுவல்ல. அது பற்றி விளக்கமாக எழுத இன்னொரு சந்தர்ப்பம் வரும். இந்தத் தொடரில், நான் எப்படி பஹ்ரைனில் ரீடெயில் க்ரூப் கம்பெனியில் சேர்ந்தேன் என்பது பற்றித்தான் எழுத நினைக்கிறேன். இப்போது Rock Garden, Palakkad படங்கள் தொடர்கிறது.
ராஜா ரதத்தில் வருகிறார். நல்லா திண்டுலாம் போட்டிருப்பாங்க. முன்னும்
பின்னும் ஆயுதங்களுடன் பாதுகாப்புக்கு வீரர்கள் வருவாங்க. இருந்தாலும் அந்தக் காலத்தில்
அத்தகைய பிரயாணம் ராஜாவுக்கு சௌகரியமாக இருந்திருக்குமா?
பார்ப்பவரின் கண்ணுக்கு எந்த விலங்கு தெரிகிறதோ அதைப்பொருத்து அவர்களின்
குணாதிசயம் இருக்கும் என்று சொல்லலாமா?
கேரளம்
செண்டை மேளத்துக்குப் புகழ் பெற்றது. துரதிருஷ்டவசமாக அந்தச் செண்டை மேளத்தை, தமிழகத்திலும்
நாதஸ்வரத்துக்குப் பதிலாகப் பயன்படுத்துகின்றனர். அதனால் நாதஸ்வர வித்வான்கள் மிகவும்
குறைந்துவிட்டனர். எங்க வளாகத்தில் ஏதேனும் விசேஷங்கள் வரும்போது Bபேண்ட் வாத்தியம்
வாசிக்கின்றனர். அது சில நேரங்களில் நல்லகாரியமா இல்லையா என்ற சந்தேகத்தை வரவழைத்துவிடுகிறது.
குட்டியின் பசி இந்தச் சிற்பத்தில் தெரிகிறதா?
நான் பாலக்காட்டில் இருந்தபோது சொன்னார்கள், கேரள அரசு, உள்ளூரில் காய்கறி விளைவிக்க மிகுந்த ஆதரவு தருகிறார்கள், மான்யம் கொடுக்கிறார்கள் என்று. இதன் காரணம், தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் அவ்வப்போது முல்லைப்பெரியார் அணை காரணமாகப் பிரச்சனை வரும்போதெல்லாம் கோயமுத்தூரிலிருந்து காய்கறிகள் கேரளாவுக்குச் செல்லாது, அதனால் தன்னளவில் தன்னிறைவு அடைவதற்காக இதனை ஆரம்பித்திருக்கிறார்கள் என்றனர்.
அடுத்த
வாரம் தொடர்வோமா?
(தொடரும்)
======================================================================================
மனசாட்சியம் - 4
KGY Raman

இப்போதெல்லாம் ஒரு கம்பெனியில் சேர்ந்து ஒரு தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு பிறகு விரைவிலேயே அதை வைத்தே வேறொரு நிறுவனத்துக்கு மாறும் மக்கள் ஐ டி துறையில் அதிகம். தெரிந்தே அவர்களும் கற்றுக் கொடுக்க செலவு செய்கிறார்கள்.
பதிலளிநீக்குவாங்க ஶ்ரீராம். ஐடி துறையில் சேர்பவர்களுக்கு இதனால் நன்மை. சேர்த்துக் கொள்பவர்களுக்கும், கற்றுக்கொடுப்பவர்களுக்கும் கஷ்டம்.
நீக்கு// பயிற்சியை முடித்த பிறகு, அவனது பெற்றோருக்கு உடம்பு சரியில்லை என்று சென்ற ஒருவன், சில வாரங்களில் பஹ்ரைனிலேயே வேறு கம்பெனியில் சேர்ந்தது நடந்தது //
பதிலளிநீக்குபயிற்சியை முடித்தால் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளாவது (அல்லது ஏதோ ஒரு குறிப்பிட்ட கால அளவு) இதே கம்பெனியில் பணியாற்றவேண்டும் என்று பாண்ட் எழுதி வாங்க மாட்டார்களா?
பான்ட் முறை கிடையாது. இன்னொரு கம்பெனியில் சேர ஆட்சேபமில்லை என்ற முறை முன்பு இருந்தது. பிறகு அதனை நீக்கிவிட்டார்கள்.
நீக்கு// வாழ்க்கையின் பெரிய திருப்பங்கள், அதற்கான நேரம் வரும்போதுதான் நடக்கிறதே தவிர பிரார்த்தனையினால் உடனே நடந்துவிடுவதில்லை என்பதை நான் கண்டிருக்கிறேன். //
பதிலளிநீக்குநானும் உணர்ந்திருக்கிறேன்.
அப்போ பிரார்த்தனைகளின் பயன், பலன் என்ன?
நீக்குமன ஆறுதல். அவரிடம் சொல்லி விட்டோம் அவன் பார்த்துப்பான் என்கிற மனதைரியம்...! எந்தப் பிரச்னை வந்தாலும் அதை சமாளிக்கும் திறனைக் கொடு என்று வேண்டுமானால் வேண்டலாம்!
நீக்குஎன்னவோ.. இதனை எழுதும்போது, உங்கள் கருத்தைப் படிக்கும்போது, மனதில் வெறுமை சூழ்கிறது. என் நஷ்டம் என நான் நினைப்பது அப்படிப்பட்டது
நீக்குவிதியை மதியால் வெல்ல முடியுமா? முடியுமே..
நீக்கு-
-
விதியை மதியால் வெல்லலாம் என்று விதி இருந்தால்!
// அத்தகைய பிரயாணம் ராஜாவுக்கு சௌகரியமாக இருந்திருக்குமா? //
பதிலளிநீக்குஅப்போதைய மற்ற பிரகியான வசதிககிளைவிட இது மேம்பட்டிருந்திருக்கும். எனவே ஓகே என்றுதான் இருந்திருக்கும்,.
இருக்கலாம். நூறு வருடங்களுக்கு முன் லொக்கடா லொக்கடா காரே டாம்பீகமாக இருந்தது, பெருமையாக நினைத்தார்கள்.
நீக்குஅதேதான்..
நீக்கு'பிரயாண வசதிகளை விட' என்னும் வார்த்தை குளறியிருக்கிறது!
// பார்ப்பவரின் கண்ணுக்கு எந்த விலங்கு தெரிகிறதோ அதைப்பொருத்து அவர்களின் குணாதிசயம் இருக்கும் என்று சொல்லலாமா?//
பதிலளிநீக்குஎனக்கு முதலில் ஆமைதான் தெரிந்தது. நான் சோம்பேறியாச்சே!
பெரும்பாலும் நாம் எல்லோரும் சுகவாசிகள்தாம், அவசியம் நேர்ந்தாலொழிய.
நீக்கு// தற்போது, தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை என்பதன் காரணமாகவோ என்னவோ //
பதிலளிநீக்குஅது மட்டும் இல்லை. தனக்கு குழந்தைமேல் அதிக பாசம் என்று காட்டுவக்காதற்கும் நான் கஷ்டப்பட்ட மாதிரி என் பிள்ளை கஷ்டப்படக்கூடாது என்றெல்லாம் நினைத்தும் அப்படிச் செய்கிறார்கள். எத்தனை பென்சில் தொலைத்தாலும் மறுவினாடி புது பென்சில்.. எந்த விளையாட்டுப் பொருள் கேட்டாலும் அடுத்த நொடி அது அவர்கள் கையில். எதையும் சிரமப்பட்டு வாங்குவது உண்டு என்பதை அறிய வாய்ப்பே இல்லாமல் வளர்க்கிறார்கள்.
என் அப்பா போலவே, நானும் சட் சட்னு எதையும் வாங்கித் தந்ததில்லை. குல வழக்கப்படி, அடம் பிடித்தால் நிச்சயம் செவிசாய்ப்பதில்லை. பிற்காலத்தில் பசங்க குறைபட்டுப்பாங்க. ஆனால் அவங்க என்ன பண்ணப் போறாங்க என்பதை பிறகுதான் பார்க்கணும்.
நீக்கு// "இல்லை" என்ற சொல்லை ஏற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் முற்றிலும் இல்லாமல் போனால், குழந்தைகளின் எதிர்காலத்தில் அவர்களது மனப்பான்மை சற்று விரும்பத்தகாத வகையில் மாறிப் போவதற்கு சாத்தியங்கள் நிறையவே இருக்கின்றன. இதை தற்காலப் பெற்றோர்கள் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. //
பதிலளிநீக்குஇதை என் நண்பரின் மகன் ஒருவனிடம் சொன்னபோது 'இல்லை அது உங்கள் மனம் நினைப்பது.. நாங்கள் இதுதவிர அவர்களை மனநல வகுப்புகளுக்கும் அனுப்பி விடுகிறோம்' என்றான். அப்போதும் நான் அவர்களின் 'இளமைக்கால விளையாட்டுகளை விளையாட முடியாமல் போகிறதே' என்று கேட்டேன். அதற்கும் ஏதோ பதில் வந்தது. கிரிக்கெட், யோகா வகுப்புகளுக்கும் அனுப்புவதாககச் சொன்னான் என்று ஞாபகம்.
எனக்கு இதில் மாறுபட்ட கருத்து இருக்கிறது ஶ்ரீராம். நான் பல வகுப்புகளுக்கும் பசங்களை அனுப்பியதில்லை. பலர் அப்படிச் செய்வதைக் கண்டிருக்கிறேன். எது நல்லது என்று சொல்லத் தெரியவில்லை.
நீக்குஎனக்கும் குழந்தைகளை அப்படி வதைப்பதில் கொஞ்சம் கூட இஷ்டமில்லை.
நீக்குநம்முடைய திறமை, அறிவு என்ன என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு, பசங்க தலையில் அதீத கனவைச் சுமத்துவதில் எனக்கு இஷ்டமில்லை. இதுபற்றி ஒரு முறை எழுதுகிறேன்.
நீக்குகரெக்ட்.. சந்தோஷ் சுப்பிரமணியம் நல்ல படம். அவர்களுக்கு எது விதித்திருக்கிறதோ அது கட்டாயம் சரியாக வரும். அவர்களை நாம் உருவாக்கவில்லை. நம் மூலம் கடவுள் அவர்களை உருவாக்கினார்.
நீக்குஇன்றைக்கு கேஜிஒய் அவர்களின் பகுதி எனக்கு ஒரு சம்பவத்தை நினைவுபடுத்துகிறது.
பதிலளிநீக்குலேக்லேண்ட் என்ற பகுதிக்கு இங்கிலாந்தில் சென்றிருந்தேன். அந்த பெரிய நிறுவனத்தின் தலைவர் என்னிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னது. என் அப்பா தொடங்கிய நிறுவனதை நாங்கள் சகோதர்ர்கள் மூவர், அவரவர்களுக்கு விருப்பமான துறையைப் பார்த்துக்கொள்கிறோம். ஆனால் என் பையனிடம் அவனுக்கு எந்தத் துறை பிடிக்குமோ அதில் படித்து முடித்துவிட்டு வேறு இடங்களில் வேலை தேடிக்கொள்ளச் சொல்லிவிட்டேன். இந்தக் கம்பெனியிலேயே அவனை பெரி பொசிஷனில் உட்கார்த்தி வைத்தால் கம்பெனி வளராது. திறமையான வெளி ஆட்களுக்கே பெரிய பதவிகள். அவன் இங்கு சேர நினைத்தால் சாதாரண வேலையில்தான் அவன் சேரவேண்டியிருக்கும் எனச் சொல்லிவிட்டேன் என்றார். (எல்லா நிகழ்வுகளையும் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்ளும் வழக்கம் எனக்குண்டு)
மேற்கத்தைய நாடுகளில் அவரவர் மகன்களை தங்கள் கம்பெனிகளுக்கு, ப்ரொஃபஷனுக்கு வாரிசாக்கும் வழக்கம் பெரும்பாலும் இல்லை.
// ஆனால் என் பையனிடம் அவனுக்கு எந்தத் துறை பிடிக்குமோ அதில் படித்து முடித்துவிட்டு வேறு இடங்களில் வேலை தேடிக்கொள்ளச் சொல்லிவிட்டேன். இந்தக் கம்பெனியிலேயே அவனை பெரி பொசிஷனில் உட்கார்த்தி வைத்தால் கம்பெனி வளராது. திறமையான வெளி ஆட்களுக்கே பெரிய பதவிகள். அவன் இங்கு சேர நினைத்தால் சாதாரண வேலையில்தான் அவன் சேரவேண்டியிருக்கும்//
நீக்குஇதுதான்.. இதுதான்.. நான் இப்போது பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் 'தி கோர்ட்' சீரிஸின் முக்கியக் கரு. நன்றாக போகிறது.