நான் டேடாமாஸ் என்ற கன்சல்டன்சி கம்பெனியில் செப்டம்பர் 1995ல் சேர்ந்தேன். அந்த கம்பெனியில் சுமார் 30 பேர்களுக்கு மேல் பணி புரிந்தோம். அதில் பலர், ஆன் சைட் சப்போர்ட் என்று சொல்லப்படுவது போல, அந்த அந்த கம்பெனிகளுக்கே நேரடியாக ரிப்போர்ட் செய்து வேலை பார்ப்பார்கள். வேலை பார்க்கும் கம்பெனியின் நேரத்தைத்தான் கடைபிடிப்பார்கள். ஒரு கம்பெனிக்கு, நல்ல ஆரக்கிள் ப்ரோக்ராம் டெவலப்பர்கள் மற்றும் சப்போர்டர்கள் தேவை என்றால் எங்கள் கம்பெனியைத் தொடர்பு கொள்வார்கள். அந்தக் கம்பெனி ஒருவருக்கு 1800-2000 தினார் மாதத்திற்குத் தருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்கான சரியான ஆட்களை source செய்து, இண்டெர்வியூ நடத்தி, பிறகு கம்பெனியின் I.T. துறை மேனேஜரும் ஏற்றுக்கொண்டபின், அவர்களை பஹ்ரைனுக்குக் கொண்டு வருவது எங்கள் கம்பெனி பொறுப்பு. மாதச் சம்பளம் இன்ன பிறவற்றைக் கொடுக்கும் பொறுப்பு எங்கள் கம்பெனியினுடையது. எங்கள் கம்பெனி சார்பாக, அந்தக் கம்பெனியில் வேலை பார்ப்பார்கள். அந்தக் கம்பெனி எங்கள் கம்பெனிக்கு பணத்தைச் செலுத்திவிடும். ஆள் சரியில்லை என்றாலோ, இல்லை கம்பெனியை விட்டு விலகிவிட்டாலோ, அடுத்த ஆளைத் தரவேண்டியது எங்கள் கம்பெனியின் பொறுப்பு. இந்த மாதிரி நிறைய பேரும், கம்பெனியின் சாஃப்ட்வேர் அப்ளிகேஷனை டெவெலப் செய்வது, சப்போர்ட் செய்வது, புது கம்பெனிக்கு இன்ஸ்டால் செய்வது என்று பலரும் இருப்பார்கள்.
ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்து பிறகு பஹ்ரைனுக்கு கொண்டு வந்து பயிற்சி தந்து அவர்கள் மூலமாக கம்பெனி லாபம் சம்பாதிக்கவேண்டும். கம்பெனிக்கு வந்து சில பல மாதங்கள் பணி புரிந்தபிறகு, பொதுவாக பலர் அமெரிக்க வேலை வாய்ப்பை நோக்கிச் செல்வர். அதிலும் Y2K எனப்படும் 21ம் நூற்றாண்டு ஆரம்பிப்பதால் செய்யவேண்டிய சாஃப்ட்வேர் மாற்றங்களால் நிறைய டெவலபர்கள் அமெரிக்க கம்பெனிகளுக்குத் தேவையாக இருந்தனர். (அதாவது அமெரிக்காவில் இருக்கும் கன்சல்டன்சி கம்பெனிகள்). அதனாலும் நிறைய ஆட்களை இண்டர்வியூ செய்து வேலைக்கு எடுப்பது அதிகரித்தது. சில நேரங்களில் இரண்டு மாதங்களுக்கு மூன்று பேர் ரிசைன் பண்ணிவிடுவார்கள். (இடையில் உடம்பு சரியில்லை என்று விடுமுறை எடுத்தாலோ இல்லை, போக வேண்டிய கம்பெனிக்கு போகாமலிருந்தாலோ, எங்கள் பொது மேலாளர்., அவர்கள் அமெரிக்கன் எம்பஸிக்குத்தான் விசா ஸ்டாம்ப் பண்ணச் சென்றிருப்பார்கள் என்று சொல்வார்). நான் பல நாட்கள் இரவிலும் 11 மணி வரை வேலை செய்வேன். அதனால் என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியும்.
என்னுடன் பணியாற்றுபவர் பலரும், இரவில் அமெரிக்க வேலைக்காக டெலெபோன் இண்டெர்வியூ அட்டெண்ட் செய்வார்கள். இதைப் பார்த்த எனக்கு, நம்முடைய திறன் அல்லது மதிப்பீடு இப்போது எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆசை வந்தது. என்னுடன் கூட வேலை பார்ப்பவர்கள் போன வாரம் இண்டெர்வியூ அட்டெண்ட் பண்ணினேன், செலெக்ட் ஆகிவிட்டேன் என்று சொல்லும்போது என்னுடைய தகுதியையும் சோதித்துக்கொள்ளும் ஆசை வந்தது. (இது நடந்தது 96-97 வாக்கில்)
ஒரு நாள் நான் கம்பெனியின் பொது மேலாளரைப் போய்ப் பார்த்தேன் (அவர்தான் கம்பெனியின் தலைவர்). அவரிடம், நான் நிச்சயம் அந்த கம்பெனியில் 3 வருடங்கள் வேலை பார்ப்பேன் என்றும், பஹ்ரைனிலேயே வேறு நல்ல வாய்ப்பு வரும்போது புதிய கம்பெனியில் நான் சேர, எனக்கு ‘ஆட்சேபணை இல்லை’ என்ற சர்டிபிடிகேட் தரவேண்டும் என்றும் சொன்னேன். நிச்சயமாக அமெரிக்காவிற்குச் செல்ல மாட்டேன், ஆனால் என்னுடைய தகுதியைச் சோதித்துக்கொள்ளும் ஆசை இருப்பதால் நானும் டெலெபோன் இண்டெர்வியூ அட்டெண்ட் செய்யும் எண்ணம் இருக்கிறது, எனக்கும் ஆஃபர் கிடைத்தது, ஆனால் நான் போகவில்லை என்று சொல்லத்தான் எனக்கு இஷ்டம் என்றேன். நானே நேரிடையாக அவரிடம் என்னுடைய நிலையைத் தெரிவித்துவிட்டதால், அவருக்கு என் மீது நல்ல நம்பிக்கை வந்தது. அவரிடம் சொல்லாமல் நான் டெலெபோன் இண்டெர்வியூ அட்டெண்ட் செய்தால், யாரேனும் அவரிடம் சென்று போட்டுக்கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதாலும், எனக்கு அந்தக் கம்பெனியிலேயே அடுத்த மூன்று வருடங்கள் தொடரணும் என்ற எண்ணம் இருந்ததாலும், நானே சென்று பொது மேலாளரிடம் சொல்லிவிட்டேன்.
பிறகு இரவில், நானும் டெலெபோன் இண்டெர்வியூ அட்டெண்ட் செய்தேன். ஒரு சில கம்பெனிகளின் ஆஃபர் லெட்டர் வந்தது. அதிலும் ஒரு கம்பெனி, உடனே விசா ஸ்டாம்ப் பண்ணுங்க, நாங்களே ஓரிரு வருடத்தில் கிரீன் கார்டுக்கு அப்ளை செய்வோம் என்றார்கள். நான் ஆஃபர் லெட்டரை வாங்கி என்னுடைய personal fileல் வைத்ததோடு அமெரிக்க வேலையை மறந்துவிட்டேன். விசா ஸ்டாம்ப் செய்து, பிறகு நான் வரவில்லை என்று சொல்லி அவனுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடாது என்ற எண்ணத்தால்.
யாராவது அமெரிக்க வேலை வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லுவார்களா என நீங்கள் நினைக்கக் கூடும். என்னுடைய நெருங்கிய உறவினர்கள் பலர் (20-30 பேர் இருக்கலாம்) அமெரிக்கவாசிகளாக இருக்கிறார்கள். அவர்களில் சிலர் 60 வருடங்களுக்கு முன்பே சென்றவர்கள். இருந்தாலும் எனக்கு அமெரிக்காவில் வேலை செய்வதில் ஆர்வம் இருந்ததில்லை. ஏனோ.. அமெரிக்கா செல்லவேண்டும், சுற்றிப்பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் கூட வந்ததில்லை. அதைப்பற்றி எழுதினால் என் எண்ணம் தவறு என்று பலரும் நினைக்கலாம். எனக்கு என் கல்ச்சர், வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள இஷ்டமில்லை. நான் மாறமாட்டேன் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. ஆனால் பசங்களைப் பற்றிச் சொல்ல முடியாதல்லவா? அதனால் அமெரிக்கா போகவேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டேன். இப்படி எழுதுவதால், அமெரிக்கா சென்ற எல்லோருக்கும் கல்ச்சர் மாறிவிட்டது என்று அர்த்தம் இல்லை. அமெரிக்கா கனடாவில் நிறையபேர் நம்முடைய வாழ்க்கை முறையில் வாழறாங்க, ஆனால் அவங்க பசங்களும் அப்படியே இருப்பார்கள் என்று சொல்லமுடியாது. இருந்தாலும் என் எண்ணம் அப்படித்தான் இருந்தது.
நாம் ஒரு தேசத்தையும் இன்னொரு தேசத்தையும் நினைத்துக் குழப்பிக்கொள்ளக் கூடாது. ஒவ்வொரு நாடும் தன்னளவில் ஒரு கலாச்சாரத்தையும், வாழ்க்கை முறையையும், உணவுப் பழக்கங்களையும், கல்வி முறையையும் கொண்டிருக்கும். இது உயர்ந்தது, இன்னொன்று தாழ்ந்தது என்று சொல்வது சரியான செயல் அல்ல. ஒவ்வொரு தேசத்திற்கும் நேர்மறைகள் இருக்கும் எதிர்மறைகளும் இருக்கும். அமெரிக்கா மிகவும் நல்ல தேசம். அங்கு வாய்ப்புகள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கிறது. நல்ல திறமை உள்ளவர்கள் எதிலும் முன்னேறும் வாய்ப்பு உண்டு. இருந்தாலும் என் எதிர்காலம் அமெரிக்காவில் இல்லை என்று நான் முடிவு செய்திருந்தேன். நான் பல தேசங்களுக்கும் பயணப்பட்டு, அங்குள்ள வாழ்க்கை முறைகளையும் சிறிது தெரிந்துவைத்துள்ளதால், எனக்கு எது சரி என்று தெளிவாக இருந்தேன். அவ்ளோதான்.
அது சரி.. இந்த Y2K பிரச்சனை என்றால் என்ன என்று தெரியுமா? பலருக்கும் தெரிந்திருக்கும். கணிணியில் தேதியைக் குறிக்க, dd-mm-yy என்ற முறை வைத்திருப்பார்கள். ஆரம்ப காலத்திலிருந்து கிபி 2000க்கு அப்புறம் எப்படிக் குறிப்பது என்ற யோசனையே யாருக்கும் எழவில்லை. ரொம்ப தாமதமாகத்தான் (அதாவது 1990களுக்குப் பிறகு) 2000 வந்துவிட்டால் என்ன செய்வது, எல்லா சாஃப்ட்வேர்களையும் மாற்றவேண்டுமே, இன்னும் பல இடங்களிலும் மாற்றவேண்டுமே என்ற எண்ணம் வந்தது (அப்படி மாற்றாவிட்டால், ஜனவரி 1, 2000ம் ஆண்டை கணிணியில் 01-01-00 என்று குறிப்பிடவேண்டியிருக்கும். பிறகு இந்த 00, 1900வா இல்லை 2000மா என்ற பெரும் குழப்பம் வரும். இது மாத்திரம் அல்ல. வேறு பல குழப்பங்களும் உண்டு). அதனால் எல்லா சாஃப்ட்வேர்களிலும் இந்த மாற்றத்தைச் செய்தாகவேண்டிய நிலையில் இருந்ததால், டெவெலப்பர்களுக்கு ஏக டிமாண்ட். அதுமட்டும் அல்லாமல், கன்சல்டன்சி கம்பெனிகளுக்கும் பணம் பண்ண நிறைய வாய்ப்பு. இந்தக் காரணத்தினால் அந்தக் காலகட்டத்துல நிறையபேருக்கு வேலைவாய்ப்பு பல்வேறு தேசங்களில் கிடைத்தது.
இன்றைய
டாபிக் ரொம்பவே போரடித்திருக்குமோ என்ற சந்தேகம். இனி புகைப்படங்களைப் பார்க்கலாம்.





நாங்கள் வார நாளில் காலையில் சென்றதால் கூட்டம் இல்லை.












இந்தவகைப் புல்வெளி, செயற்கை. இத்தாலியிருந்து முதலில் இந்தியா வந்தது
என்று நினைவு. நான் 89களிலேயே கெம்ப்ளாஸ்டில் இத்தகைய புல்வெளியைப் பார்த்து வியந்திருக்கிறேன். (அப்போ வேலை செய்த இடதிற்கு இப்போது சென்று அங்கு
கேண்டீனில் சாப்பிட்டால், அதே ருசி இருக்குமா என்று யோசிக்கிறேன்)


இந்தப் பூவின் பெயர் என்ன? நான் தாய்லாந்தில் பல இடங்களில் பெண்கள்
(வேற என்னத்தை நீ கவனிச்சிருப்ப என்று நீங்கள் நினைப்பது என் காதில் விழுகிறது) இதனை
அணிந்திருந்ததைப் பார்த்தேன். மிக அழகா இருந்தது, அந்தப் பூக்கள் (ளை அணிந்தவர்கள்னு
எழுத வரலை)




இன்று படங்களும் கதையும் அதிகமாகிவிட்டதோ? அடுத்த வாரம் தொடர்வோம்.
(தொடரும்)
=====================================================================================\
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குவாங்க வல்லிம்மா. எல்லோரும் நலம் வாழ நாம் பாடுவோம்.
நீக்குஅந்த மரம் டெம்பிள் டிரீ. அந்தப் பூக்களின் வாசம் அளவிட முடியாதது. மயக்கும். எங்கள் வீட்டில் இருக்கிறது.
பதிலளிநீக்குஅந்த வாசனையை கொஞ்சம் மெயிலில் அனுப்புங்களேன்..!!!\
நீக்குஇந்த வெள்ளை வண்ண அழகுப் பூக்கள் நாங்கள் இருக்கும் இடத்திலும் இருக்கிறது. இது கொஞ்சம் சின்ன சைஸ். ஹவாய் தாய்லாந்து பெண்கள் அணிந்து கொள்வது கொஞ்சம் பெரிதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவை எளிதில் வாடாத வகையை சேர்ந்தவை என்று தோன்றுகிறது. ஒருவேளை ஆர்கிட் என்கிறார்களே அந்தப் பூவாக இருக்குமோ ?
நீக்குவல்லிம்மா. அதில் மூன்று வகைகள் பார்த்திருக்கிறேன், வெள்ளை, மஞ்சள் நிறம் சேர்ந்தது, சிவப்பு, வயலட். இங்கு எங்கள் வளாகத்திலேயே உண்டு. நான் ஏதேனும் சொன்னால் புகைப்பட ஆதாரம் வைத்திருப்பேன்... பார்க்கிறேன் தாய்லாந்து ரிசப்ஷனிஸ்ட் அல்லது மற்றப் பெண்களை புகைப்படம் எடுத்திருக்கிறேனா என்று. புதனில் பகிர்கிறேன்.
நீக்கு//வாசனையை கொஞ்சம் மெயிலில்// அல்லது நீங்கள் தாய்லாந்துக்குச் சென்று அதனை (வாசனையை... ) அனுபவிக்கலாம். அதுவே பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்ற கேள்விக்கும் பதில் கூறலாம்
நீக்குஎங்க வீட்டிலும் இருந்தது இந்த மரம்.
நீக்குஅமெரிக்காவில் குழந்தைகள் தமிழ் கற்கிறார்கள். கோவிலில் பாடுகிறார்கள். நாட்டியம் கற்கிறார்கள். தியாகராஜ உத்சவம் நடக்கிறது. இந்த இல்லினாய்ஸ் மாகாணத்தில் 40 இந்துக் கோவில்கள் இருக்கின்றன.
பதிலளிநீக்குஒருவேளை அம்மா.. அது பின்னாளில் ஏற்பட்ட மாற்றங்களோ என்னவோ அப்போதைய நிலைமை கவலைப்படத்தக்கதாய் இருந்திருக்கலாம். மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வந்திருக்கலாம்.
நீக்குவல்லிம்மா..உண்மைதான். என் மாமா 60களில் சென்றபோது, பிட்ஸ்பர்க் வெங்கடேஸ்வரா கோயில் பற்றி பின்னாட்களில் சொல்லியிருக்கிறார். பிறகு நிறைய மாற்றங்கள், அதாவது நிறைய கோயில்கள், விழாக்கள்..... ஏன் நானிருந்த பஹ்ரைனிலேயே கிருஷ்ணர் கோயில் இருந்தது. துபாயில் கேட்கவே வேண்டாம், மூன்று கோயில்கள் அந்தக் காலத்திலேயே. வெள்ளிக்கிழமையில் இலவச பிரசாதம் வேறு
நீக்குஸ்ரீராம்... கவலைப்படத்தக்கதாக நிலைமை இருந்ததில்லை. கோயில்கள் அப்போதே உண்டு. இருந்தாலும், நம் பசங்க, நம்மிடம் இருப்பதை விட, வெளியில் பன்னாட்டு மாணவ நண்பர்களுடன் மிக அதிகமாக இருப்பாங்க. அதனால் அவங்களுக்கு இரு கலாச்சார அதிர்வுகள், அதிர்ச்சிகள் இருக்கும் இல்லையா? மேற்கத்தைய நாடுகளில் (ஐரோப்பாவிலும்) நம்மாக் நம் குழந்தைகளைக் கட்டுப்படுத்துவது கடினம் என்ற எண்ணமும் என்னுள் ஆழப்பதிந்திருந்தது
நீக்குரொம்பவெல்லாம் குழந்தைகளைக் கண்டித்தால் அங்கே எல்லாம் குழந்தைகளே போலீஸுக்குச் சொல்லிடுவாங்க என்பார்கள். ஒரு சின்னத் தாய்ப்பால் குடிக்கும் குழந்தையைக் கொடுமைப் படுத்திட்டதாகச் சொல்லிச் சில காலம் முன்னர் இந்தியப் பெற்றோரிடமிருந்து அரசு குழந்தையைப் பிரித்து வைத்திருந்ததாகப் பத்திரிகைச் செய்திகளில் பார்த்திருக்கோமே!
நீக்குவாங்க கீதா சாம்பசிவம் மேடம்.... ஐரோப்பிய தேசத்தில் இருந்த ஒரு பெற்றோரை அவருடைய மகன் (இளவயது) இப்படி மிரட்டினானாம். அப்புறம் வெகேஷனுக்கு கேரளா வந்தபோது, ஏர்போர்ட்டில் இறங்கியவுடன் அவனை வெளுத்து வாங்கினார் என்று சொல்வார்கள்.
நீக்குநம் வளர்ப்பு முறை, நம் குழந்தைகளுக்குச் சரி. நாம மேற்கத்தையவர்கள் மாதிரி வளர்க்க முயல்வது சரிப்படுமா என்று தெரியவில்லை. ஆனால் எனக்குத் தெரிந்து சிலர் மேற்கத்தைய வளர்ப்பில், நமக்கு பொறுப்பு இல்லை, 18 வயசாச்சுன்னா அவங்க என்னமேனும் பண்ணிக்கட்டும் என்றும் இருக்காங்க.
தமிழ் மன்றம்,கேரள சமாஜ், கர்னாடகா மஹிளா மண்டலி, எல்லாம் இருக்கின்றன. பெற்றோர்கள் நல்லவர்களாக இருந்தால் வளர்ப்பு முறையும் சரியாக இருந்தால் குழந்தைகள் நன்றாகவே இருக்கின்றன.
பதிலளிநீக்குஆமாம். பெற்றோர் சரியாக வளர்த்தால் பிரச்னை இருக்காது. இப்போது அமெரிக்காவில் இருக்கும் நமக்குத் தெரிந்த குடும்பங்கள் யாவும் இங்கு இந்தியாவில் இருப்பவர்களைவிட நம் முறைகளை நன்றாகக் கடைப்பிடிக்கிறார்கள்.
நீக்குஆமாம். உண்மை. அருமையான கருத்து. இதற்கு உதாரணம் நம் சகோதரி கோமதி அரசு அவர்களின் அன்பான மகன் குடும்பம். அனைத்து இந்திய கலாசாரங்களையும் அழகாக பின்பற்றி ஒவ்வொரு பண்பாட்டு விழாக்களையும் சிறந்த முறையில் கொண்டாடி நமக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்போதும் என் இதயபூர்வமான நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
நீக்குவல்லிம்மா... உங்க கண்ணோட்டம் சரிதான். இருந்தாலும் நான் நினைத்தது, என் குழந்தைகளுக்கு அடுத்த தலைமுறையை (ஏண்டா..நீயே இருக்கப்போறதில்லை. உனக்கு எதற்கு அடுத்த அடுத்த தலைமுறை பற்றிக் கவலை? என்று நினைப்பது சரிதான். ஆனால் வீழ்ச்சிக்கு நான் காரணமாக இருக்கக்கூடாது என்று நினைத்தேன்)
நீக்கு//அமெரிக்காவில் இருக்கும் நமக்குத் தெரிந்த குடும்பங்கள் யாவும் இங்கு இந்தியாவில் இருப்பவர்களைவிட// ஓரளவுக்கு உண்மைதான். இருந்தாலும் எனக்கு நிறைய உறவினர்கள், நண்பர்கள்-அதாவது தெரிந்தவர்கள் மேற்கத்தைய நாடுகளில் இருக்கின்றனர். பலர் வீட்டிலும் நீர்த்துவிட்டது. ஆனால் வேர், மிக மிக ஆச்சாரமாக இருந்த குடும்பங்கள்.
நீக்குகமலா ஹரிஹரன் மேடம்.... நான் எழுதும்போது கோமதி அரசு அவர்களின் குடும்பமும் நினைவில் வந்துபோனது. அதிரடி அதிராவும் கேனடாவில் கோயில் திருவிழாக்களில் கலந்துகொண்டதை எழுதியிருந்ததும் நினைவுக்கு வந்தது. என் மகள், என்னப்பா..இங்க வந்தாலும் ச்ராத்தம் செய்வதற்கு வசதி இருக்கிறது என்று சொன்னதும் நினைவுக்கு வந்தது. ஜீவி சார் அருமையான கல்வி முறைகள் வசதிகள் பற்றி எழுதியிருந்தாரே தவிர கலாச்சாரம் பற்றி எழுதிப் படிக்கலை. பானுமதி வெங்கடேஸ்வரன் மேடம் குடும்பமும் விதிவிலக்குகளில் இருக்கும் என்றே நம்புகிறேன். ஆனால் உதாரணங்கள் எல்லாமே முதல் மற்றும் இரண்டாவது தலைமுறைதான் என்பதை நினைவில் வைக்கணும்.
நீக்குஇருந்தாலும், அந்த உதாரணங்கள் நூற்றில் பத்து என்பது என் எண்ணம்.
நம் ஊரில் வளரும் குழந்தைகள் எல்லா விதத்திலும் இருக்கிறார்கள். எல்லா விதமாகவும் திருமணங்கள் நடக்கின்றன.I would not generalize any civilization. It depends upon so many factors.
பதிலளிநீக்குஆனால் நெல்லைத்தமிழனின் அப்போதைய கவலையும் அக்கறையும் புரிகிறது. இதற்காக அதிக சம்பளம் கூட என்று வேண்டாம் என்று அவர் எடுத்த முடிவும் ஆச்சரியப்பட வைக்கிறது. பாராட்டத் தோன்றுகிறது.
நீக்குவல்லிம்மா... நீங்கள் எழுதியிருப்பது உண்மை. நிறைய காரணிகள் இருக்கின்றன. வளர்ப்பு, குடும்பம்-இதற்கு பெரிய முக்கியத்துவம் உண்டு. குலம் என்பது அவ்வளவு முக்கியம் வாரிசுகளின் குணத்திற்கு. இதனை சாதியுடன் சம்பந்தப்படுத்தாதீர்கள்.
நீக்குஇருந்தாலும், நாம் (இந்தியாவில் பிறந்து இங்கேயே வளர்ந்து), நம் பெற்றோர் போல இல்லை, நீர்த்திருக்கிறோம். நம் பெற்றோர் அவர்கள் பெற்றோர் போல இல்லை, நீர்த்திருந்தனர். இந்தியாவிலேயே இப்படி என்னும்போது, வெளிநாட்டில் இன்னும் வேகமாக நீர்த்துப்போகும் என்பது என் நம்பிக்கை. (விதிவிலக்குகளை நாம் உதாரணமாகக் கொள்ள வேண்டாம்)
//இதற்காக அதிக சம்பளம் கூட என்று வேண்டாம் என்று அவர் எடுத்த முடிவும் // வாங்க ஸ்ரீராம்... அது ஒரு பெரிய காரணியாக நான் நினைக்கவில்லை. ஆனால் வேலை எப்போதும் நிச்சயமாக இருக்கவேண்டும், நல்ல சூழல் இருக்கவேண்டும், அமைதியான குடும்பமாக இருக்கணும் (பக்தியுடன், நம் கலாச்சாரத்துடன்) என்பதுதான் எனக்கு முக்கியமாகத் தோன்றியது.
நீக்குஎல்கேஜியில் என் மகளின் ஆசிரியை, அவருக்கு ஒரே பெண் குழந்தை என்பதால், ஸ்லீப் ஓவருக்கு என் மகளை வார இறுதியில் வரச் சொன்னபோது நான் சொன்ன பதில் NO NO ஹா ஹா ஹா
மீண்டும் காலை பார்க்கலாம்.
பதிலளிநீக்குபார்க்கலாம் வல்லிம்மா.. நான் எழுதிய கருத்தில் குறை இருந்தாலும் சுட்டிக்காட்டத் தவறாதீர்கள்
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம். பிரார்த்தனைக்கு நன்றி
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குநலம் வாழ்க..
நீக்குசரணம் சண்முகா. வாங்க துரை செல்வராஜு சார்... நலமா? நிறைய நாட்கள் உங்களைக் காண முடிவதில்லையே. செல்போன் பிரச்சனை தீர்ந்ததா?
நீக்குபதிவின் படங்கள் அழகு..
பதிலளிநீக்குஅருமை...
மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.
நீக்குசில லட்சியங்களை விடாமல் வைத்துக் கொண்டு நண்பர் நெ.த இருப்பது எனக்கு ஒரு மகிழ்ச்சியைத் தருகிறது. என்றாலும் எல்லாமே காலப்போக்கில் மாறித்தான் போகும் என்கிற இயற்கை விதிக்கு ஏற்ப நாம் விடாப்பிடியாக வைத்திருக்கும் நம்பிக்கைகளும் கொள்கைகளும் கூட கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் அடையலாம். அவை யாவும் இப்போதே கூட மிகவும் மாற்றம் அடைந்த நிலையில் தான் நமக்கு வந்திருக்கிறது என்றும் நான் நினைக்கிறேன்.
பதிலளிநீக்குபாலக்காடு படங்கள் எப்போதும் போல் அருமையாக இருக்கிறது.
வாங்க கேஜிஒய் சார்... விடாப்பிடியாக வைத்திருக்கும் நம்பிக்கைகளும் கொள்கைகளும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் அடையும். நாமுமே நம் பெற்றோரை விட, சிறு வயதில் வளர்ந்த சூழல் நம்பிய விஷயங்களைவிட நிறைய மாறியிருக்கிறோம். இது பற்றி நிறைய எழுதினால் தவறாயிடுமோ என்ற அச்சம் இருக்கிறது.
நீக்குஆனால் பாலில் தண்ணீர் சிறிது கலப்பதற்கும் தண்ணீரில் பாலைக் கலப்பதற்கும் வேறுபாடு உண்டல்லவா?
மிகவும் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். எதனாலும் நிதானமாக இருந்தால் நல்லது தானே.
நீக்குஇங்கு கலாச்சாரங்களைப் பின்பற்றுபவர்களுக்கு வழிகாட்டுபவர்களை விட குழப்பி விட்டு கலகம் செய்பவர்கள் அதிகம்...
பதிலளிநீக்குதுரை செல்வராஜு சார்... நான் குழம்பாமல் இருக்கிறேன். எதை என் அப்பா, பெற்றோர் கடுமையாக விரும்பமாட்டார்கள் OBJECT செய்வார்களோ அதனை நான் செய்வதில்லை, வீட்டிலும் அதே நடைமுறைதான். எனக்கு அடுத்த தலைமுறை, அதில் மாற்றம் செய்யணும் என்று சொன்னால், அதை உங்கள் வீட்டில் செய்துகொள்ளுங்கள் என்றே சொல்லிவிடுகிறேன்.
நீக்குவணக்கம் நெல்லைத் தமிழர் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பதிவும் அருமையாக உள்ளது. பணியாற்றிய தங்கள் கம்பெனி மீது தாங்கள் கொண்ட தங்களின் அக்கறையும், பொறுப்புத்தன்மையும், நேர்மையும் ஆச்சரியப்பட வைக்கிறது. பொதுவாக எல்லோரும் மேல்நாட்டுக்குச் செல்ல மிக ஆசைப்படுவார்கள். மேல்நாட்டு படிப்பு, வேலை, அங்கேயே நிரந்தரமாக வாழும் வாழ்க்கை கிடைக்காதா என ஏங்குபவர்கள்தான் அதிகம். தாங்கள் கிடைத்த வாய்ப்பையும், புறக்கணித்து... உண்மையிலேயே உங்களின் பெருந்தன்மையாக பிற்காலத்தை பற்றி சிந்திக்கும் மனப்பான்மைக்கு ஒரு சல்யூட் வைக்கத் தோன்றுகிறது. .(ஆனால், தங்கள் குழந்தைகளுக்கு, அவர்களுக்கு விபரங்கள் தெரிந்த பின் வருத்தப்பட்டிருப்பார்களோ என்னவோ.?) கிடைப்பதை புறந்தள்ளுவதும், கிடைக்காதற்காக ஏங்கும் மனித இயல்பென்பதையும் "அவன்" வகுத்துத்தானே அனுப்பியிருக்கிறான் என்றுதான் எனக்கு எப்போதும் தோன்றும். எல்லாம் "அவன்" செயல்.
பாலக்காடு படங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. பெண்கள் தலையில் வைத்துக் கொள்ளும் மலர்கள் என்பதால், மலர்கள் மணம் வீசுகின்றன . (மனதில்) வல்லிசிம்ஹன் சகோதரியும் சொல்லி விட்டார். நான் கூட இறைவனுக்குச் சூடும் வெள்ளை நந்தியாவட்டை என நினைத்தேன். அத்தனைப் படங்களும், அலுவலக விபரங்களும் பார்க்கப் படிக்க நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா ஹரிஹரன் மேடம்.
நீக்குஎன்னவோ தெரியலை 88லிருந்து எனக்கு மேல் நாட்டிற்கு வேலைக்குச் செல்ல ஆசை. 93ல்தான் அது சாத்தியமாயிற்று. 93லிருந்து 25 வருடங்கள் நான் கல்ஃபில்தான் இருந்தேன். (துபாய் பஹ்ரைன்)
நிரந்தரமாக எங்கேயும் தங்க ஆசைப்படலை. இந்தியாவிற்கு வருவதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது.
குழந்தைகள் என்று எழுதியிருப்பதால் இதனை எழுதுகிறேன். தவறாக நினைக்க வேண்டாம். எளிதாக என்னால் அவர்களுக்குச் செய்ய முடிந்ததை நான் செய்ததில்லை. காரணம் சுகம் அவர்களுக்கு பழகிவிடக் கூடாது என்று. இப்போதும் அவர்களுக்கு அந்தக் குறை இருக்கிறது, வெளிப்படையாக என்னிடம் சொல்வார்கள், கிண்டல் பண்ணுவாங்க.
இயல்பாக குழந்தைகளுக்கு பிட்சா சாப்பிடுவது, ஐஸ்க்ரீம், பெரிய மால்களுக்குப் போய் அங்கு விளையாடுவது (காசு கொடுத்து), காரில் தினமும் பள்ளிக்குச் செல்லணும் என்ற ஆசைகள் உண்டு. இதெல்லாம் எனக்கு ஜுஜுபி என்றாலும் செய்ததில்லை. ஹாஹா.
நான் செய்ததில், என்னடா மாதம் நாலு பவுன்களை வாங்காமல் விட்டுவிட்டோமே என்பது மாத்திரம்தான் வருத்தமாக (அதை தவறவிட்ட வாய்ப்பு என்று அர்த்தப்படுத்திக்கொள்ளுங்கள்) இருக்கு.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய மனசாட்சியம் பகுதியும் அருமை. தங்கத்தின் மகிமை பற்றி அப்போதுள்ளவர்கள் அறிந்து கொள்ளவில்லையோ என நானும் அப்போது அவ்வப்போது எண்ணுவேன். எங்கள் அம்மாவும் அவர்கள் இளவயது காலத்தில் ஒரு பவுன் 13 ரூபாய் என சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அந்த ரூபாயின் மதிப்பையும் அவர்கள் கதை கதையாக கூறும் போது அன்றைய தங்கத்தின் விலையும் எவ்வளவு உயர்ந்தது எனபதையும், விபரம் அறிந்த வயதில் புரிந்து கொண்டேன். காலணா, அரையணா,போன்றவற்றின் பெருமைகளை அவர்கள் விவரிக்கும் போது அக்காலத்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். சகோதரர் திரு ராமன் அவர்களின். அக்காலத்திய எண்ணங்களான கட்டுரை நன்றாக உள்ளது. படித்தேன். ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ரசித்துப் படித்து கருத்துகளைச் சொல்லி இருக்கிறீர்கள். மிக்க நன்றி
நீக்குஇன்றைக்கு கேஜிஒய் அவர்கள் எடுத்துக்கொண்ட டாப்பிக் என்னைக் கடுப்பேற்றும் டாப்பிக். இது பற்றி விளக்கமாக எழுதினால்தான் புரியும். என் ஐபேடில் பதில் கொடுக்க இயலவில்லை. அதனால் இன்று புதிய வழக்கமாக காலையிலேயே லேப்டாப்பில் கருத்து எழுதறேன். இனித்தான் தாய் சீ உடற்பயிற்சி 45 நிமிடங்கள் செய்ய ஆரம்பிக்கணும். நடை ஓவர்.
பதிலளிநீக்குஒன்று மாத்திரம் நிச்சயம். பிறக்கும்போதே ஒவ்வொருவரும் எவ்வளவு சம்பாதிக்கணும், எவ்வளவு asset வாங்கணும் என்று தலையில் எழுதிக்கொண்டே பிறப்பார்கள். அதற்கு மேல் எதையும் வாங்க இயலாது அல்லது மீறி வாங்கினால் அழிந்துபடும்.
இதனை கிராமத்தில், எவ்வளவுதான் எண்ணெயைத் தடவிக்கொண்டு விழுந்து புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும் என்று சொல்வார்கள்
நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்பது ஒரு உண்மை என்பதை விட நடந்து போனதற்கு நாம் செய்து கொள்ளும் சமாதானம் என்று தான் நான் எடுத்துக் கொள்வேன். நீங்கள் சொல்லி இருப்பதை ரசித்துப் படித்தேன்
நீக்குஇதனை எழுதினால் அலட்டுவதாக அமையுமோ என்ற அச்சமும் உண்டு. உண்மையை எழுத நினைக்கிறேன். எனக்கு, எதனாலோ தெரியவில்லை, ஒரு கொள்கை சிறிய வயதிலிருந்தே இருக்கிறது (ஒன்றா. பல கொள்கைகள் அல்லவா? அதனால் நான் கஷ்டப்படுவதை யாரிடம் சொல்வது என்று மனைவி நினைப்பாரோ என்னவோ). எந்தக் காரணம் கொண்டும் கடன் வாங்கக்கூடாது, கிரெடிட் கார்டில் (அதாவது எதிர்கால பணத்தை நினைத்துக்கொண்டு) பொருட்கள் வாங்கக்கூடாது. இதனால் இப்போது நினைத்துப்பார்க்கும்போது நான் இழந்தது அதிகம், ஆனால் ஒரு வேளை என் வாழ்க்கை மாறிப்போயிருந்தால் அப்போது, ஏண்டா அந்தக் கொள்கையைப் பின்பற்றாமல் விட்டோம் என்று நினைத்துக்கொண்டிருப்பேனோ என்னவோ.
பதிலளிநீக்குநான் 25 வருடங்கள் வாழ்ந்தது வரி இல்லாத இடங்கள். என் அப்பா, அவர் திருமணத்துக்கு நகை என்ன வேண்டும் என்று அவருடைய மாமனார் வீட்டில் ரொம்பக் கேட்டபோது, வாட்ச் செயின் தங்கத்தில் வேண்டும், வேறு நகை நான் போட்டுக்கொள்வதில்லை என்றாராம். அந்த செயினை நான் பார்த்திருக்கிறேன்.
அதனால் துபாயில் முதன் முதலில் நான் வாங்கியது கிராம் 35 திர்ஹாமில், ப்ரேஸ்லெட் (அது 20 கிராமுக்கு மேல் இருக்கும். பார்க்கணும்). அதற்கு முன்பு, எனக்கு ஒரு கம்பெனியில் மேட்டூரில் வேலை கிடைத்தபோது முதன் முதலில் மூன்று மாத சம்பளத்தைச் சேர்த்து ஒரு நவரத்ன மோதிரம் 10 கிராமுக்கு வாங்கினேன்.
வெளிநாட்டில் இருந்தபோது ஏன் நிறைய தங்கம் வாங்கவில்லை என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. நினைத்தால் எரிச்சலாக இருக்கும், மாதம் மூன்று பவுன்கள் வாங்கியிருந்தாலும் அது எனக்கு பண விஷயத்தில் ஒரு பாதிப்பும் உண்டாக்கியிருக்காது. என்னவோ வாங்கவில்லை.
என் அம்மா 2012ல் இரண்டாவது முறை வந்திருந்தபோது, பெண் குழந்தையை வைத்துக்கொண்டு தங்கம் வாங்காமல் இருக்கிறாயே என்று கடிந்துகொண்டார். அவரையும் கூட்டிச் சென்று தங்கம் வாங்கினேன். அப்போது விலை கிராம் 135 திர்ஹாம். அப்போதும் நான் மாதம் நான்கு சவரங்கள் வாங்கியிருந்தாலும் எனக்கு பணப் பிரச்சனை இருந்திருக்காது, அதாவது இந்த மாதம் இவ்வளவு செலவழித்துவிட்டோமே என்ற எண்ணமே வந்திருக்காது.
கடைசியாக நான் தங்கம் வாங்கினபோது கிராம் 220 திர்ஹாம். அது 2017ல்.
சவரன்கள் என்பது 8 கிராம். பொதுவா வெளிநாட்டில் ஒரு பவுன் என்றால் பத்து கிராம். நான் உறவினர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒவ்வொரு முறை வரும்போதும் அவர்களுக்கு தங்கம் வாங்கிக் கொடுத்திருக்கிறேன் (அவர்கள் பணத்தில்தான்). அப்போதும் எனக்கு வாங்கிக்கணும் என்ற எண்ணம் இல்லை.
நீக்குஆனால் எனக்கு எப்போதுமே, கட்டை விரல் தடிமனில் கழுத்தில் ஒரு செயின் (நீங்க ரவுடிகள் கழுத்தில் அந்த முறுக்கு செயினைப் பார்த்திருப்பீங்க) வாங்கிக்கணும் என்று ஆசை. மனைவி அனுமதி தரலை.
எல்லாவற்றையும் ஆழ்ந்த சிந்தனை செய்து முடிவு செய்யும் உங்களுக்கு இந்த விஷயம் எப்படி தப்பி போயிற்று என்பது எனக்கும் புரியத்தான் இல்லை
நீக்குஎனக்கும் புரியலை கேஜிஒய் சார். இத்தனைக்கும் என் அண்ணன் சௌதியிலிருந்து வருடா வருடம் பஹ்ரைனுக்கு வரும்போது நிறைய வாங்குவான். மனைவியில் உறவினர் என்னிடம் வருடா வருடம் திட்டமிட்டு வாங்கிவரச் சொல்லுவார். நானும் மனைவியைக் கடைக்குக் கூட்டிச் செல்லும்போது, என்னுடைய அறியாமையால், செயின் எவ்வளவு வேணுமானாலும் வாங்கிக்கொள் என்று வற்புறுத்துவேன் ஆனால் நெக்லஸ் வாங்கமாட்டேன் (காரணம் செய்கூலி அதிகம் என்று நான் நினைத்ததால். அதுவுமே சல்லிசுதான்). பெண்ணைக் கூட்டிக்கொண்டு சென்றபோது அவளோ கண்ணுக்குத் தெரியாத ஒல்லியில் செயின் கேட்பாள் வாங்கமாட்டேன். தடிமனாக எடுத்துக்கொள்ள மாட்டேன் என்பாள். இந்த மாதிரி சல்லிக் காரணங்களால் நான் வாங்கவில்லை. இதுதான் இறைவன் சித்தம் என்று பிற்பாடு எடுத்துக்கொண்டுவிட்டேன்.
நீக்குமுதன் முதலில் என் மாமனார், பெங்களூரில் எனக்கு மாநகராட்சி ஏலத்தில் கலந்துகொண்டு வீட்டிற்கு இடம் வாங்கலாம் என்றார். நான் அவரிடம், எந்தக் காரணம் கொண்டும் கடன் வாங்க மாட்டேன், என்னிடம் இதுதான் இருக்கிறது, இதற்கு இடம் வாங்குங்கள் என்றேன். அவர் எவ்வளவோ சொன்னார், வங்கியில் கடன் வாங்கினால் 1 கிரவுண்ட் அல்லது அதற்கு மேலும் வாங்கலாம் என்று. நான் கேட்கவில்லை. என் எண்ணத்திலும் நியாயம் உண்டு. நாளை நாம் இருப்போமா என்று யாருக்குத் தெரியும்? மனைவிக்கு பணத்தை வைத்துப் போகாவிட்டாலும் கடனை வைத்துவிட்டுப் போகக்கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன். அதனால் சிறிய இடம் மாத்திரம் ஜெயநகரில் வாங்கினேன். அதில் நான் உடனே வீடும் கட்டினேன் (அதற்கு அவ்வப்போது பணம் அனுப்பினால் போதும்). இருந்தாலும் மனதில், அடுத்த மாதம் வேலை போய்விட்டால், மீதிப் பணம் எப்படி புரட்டுவது என்ற பயம் இருந்துகொண்டே இருந்தது.
பதிலளிநீக்குஎத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் இடங்களை நான் வாங்கவில்லை.
அதனால்தான் சொல்கிறேன், நமக்கு என்ன எழுதியிருக்கோ அதுதான் நமக்குக் கிடைக்கும். எனக்கு ஒரு குறையும் இதனால் மனதில் இல்லை என்பதையும் சொல்லிவிடுகிறேன்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்குபணியிட அனுபவங்கள் நன்று. Y2K பிரச்சனை சமயத்தில் எத்தனை எத்தனை அனுபவங்கள் - இன்று போல அன்று Social Media இருந்திருந்தால் இன்னும் அதிகமாக பேசப்பட்டு இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. எங்கள் அலுவலகங்களிலும் கணினிகளில் இதற்கெனவே நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது.
அந்தப் பூ இங்கேயும் நிறைய உண்டு. ஹிந்தியில் இந்தப் பூவை Champa என்றும் Frangipani என்றும் அழைப்பதுண்டு.
பாலக்காடு மற்ற படங்களும் நன்று. நாங்கள் சென்று வந்தபோது கிடைத்த அனுபவங்கள் நினைவுக்கு வருகின்றன.
தங்கம் குறித்த எண்ணங்கள் எனது அனுபவங்களையும் நினைக்கத் தூண்டியது. எனது அம்மா, அவரது சிறுவயதில் தங்கத்தின் விலை என்னவாக இருந்தது என்று கூறியது இப்போது நினைவில் இல்லை. ஆனால் தங்கம் மீது எப்போதுமே ஒரு மோகம் அதிகமாகவே இருக்கின்றது - குறிப்பாக தென்னகத்தில்! வடக்கில் பெரிதாக தங்கத்தின் மீது ஈடுபாடு கிடையாது. விதம் விதமான மணிகள் அணிவதில் சிலர் விருப்பம் காட்டினாலும் பலர் வெறுங்கழுத்தாகவே இருப்பார்கள். தாலி என்பது கூட பெரிய அளவில் தங்கம் இருக்காமல் இருப்பதே நிறைய.
தங்கம், வெள்ளி, பணம் காசு என எதுவாக இருந்தாலும் அளவுக்கு அதிகாம ஆசைப்பட்டு சேர்த்தால் பிரச்சனை தான். அளவுக்கு மிஞ்சினால் எல்லாமே பிரச்சனை தான்.
வாங்க வெங்கட் நாகராஜ்.
நீக்குY2K எனக்கு நிறைய அனுபவங்கள். அதுதான் என்னால் முடியும் என்ற எண்ணத்தை, என் திறமையை எனக்குக் காட்டிய நேரம். அந்தப் பூச்சாண்டியை வைத்து கம்பெனிக்கு ஏகப்பட்டது சம்பாதித்துக் கொடுத்தேன்.
தங்கம் எப்போதுமே எட்டாத உயரத்தில்தான் இருந்துவந்திருக்கிறது. தங்கத்தின் மீதான மோகம், அவசரத்துக்கு பணம் புரட்டலாம் என்பதுதான்.
வடநாட்டில், முகலாயர் படையெடுப்புகளால்தான் தங்கத்தின் மீதான ஆசையே எல்லோருக்கும் போய்விட்டது என்பது என் எண்ணம். கோயில்களும் அதனால்தான் நகைகள் ஆடம்பரங்கள் விக்ரஹங்கள் இன்றி சாதாரணமாக இருக்கின்றன (வடநாட்டில்). சோம்நாத் கோயில் எத்தகைய மஹோன்னதத்தில் இருந்தது, அங்கிருந்து எத்தனை எத்தனை தங்க வைர வைடூரியங்கள் கொள்ளை போகின என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா?
வாழ்க்கையில் எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் விஷம்தான், அது குடும்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒரு தடவை என் சித்தப்பாவிடம், எவ்வளவு சம்பாதித்தால் போதும் என்று திரும்பிவிடலாம் என்று கேட்டேன். அதற்கு அவர், 'போதும்' என்பது மனதைப் பொறுத்ததுதான். அதற்கு இந்த அளவு, 1 கோடி, 3 கோடி என்று எதுவும் கிடையாது. இப்போது இருப்பதே போதும் என்று நினைத்தால், நம்மால் நன்றாக வாழ முடியும் என்று சொன்னார்.
அளவோடு இருக்க வேண்டும் என்பது சரிதான். ஆனால் அந்த அளவு எவ்வளவு ? இந்த விஷயத்தில் தான் நாம் எல்லாருமே பெரும்பாலும் தவறு செய்கிறோம் என்பது என் எண்ணம்.
நீக்கு'அளவு' என்பதில் நாம் தவறு செய்துதான் ஆகவேண்டும். காரணம் எத்தனை வருடங்கள் இருப்போம் (இருவரும்), என்ன என்ன உடல்நிலைப் பிரச்சனைகள் வரும் என்று நமக்கு இறைவன் தெரிவிப்பதில்லையே. அதுதான் காரணம்.
நீக்குநெல்லையின் பஹ்ரைன் அனுபவங்களும் அருமை. அவர் ஒரு குறிப்பிட்ட பதவியில் இருந்திருந்தாலும் அதன் அதிகாரத்தைப் பிரயோகம் பண்ணாமல் வெகு கவனமாக இருந்திருக்கார். இது ரொம்பவே முக்கியமும் கூட இல்லையா? முன்னெல்லாம் நினைச்சுப்பேன். வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகிறவங்க எப்படி, யார் மூலமாப் போவாங்கனு புரியாது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிஞ்சாலும் நெல்லையின் விபரமான பதிவு அதைத் தெளிவாகச் சொல்லுகிறது.
பதிலளிநீக்குஎங்க வீட்டில் முக்கியமா என் குடும்பத்தில், அப்பாவழி, அம்மாவழி, மாமியார், மாம னார் ஆகியோரின் வழியில் முதல் முதலாக வெளிநாடு போனது எங்க பெண் தான். 30 வருஷம் ஆகப் போகிறது அவங்க வெளிநாடு போய். கல்யாணம் ஆன ஓரிரு மாதங்களிலேயே போய்விட்டார்கள். இங்கே இந்தத் தென்னிந்திய கலாசாரத்தைப் பின்பற்றும் குடும்பங்கள் பற்றிய பேச்சின் போது இங்கே எபியில் கருத்துச் சொன்னவங்க யாரும்எங்க பெண் குடும்பம், பையர் குடும்பம்னு அவங்களைப் பத்தியோ எங்களைப் பத்தியோ எதுவும் குறிப்பிட்டு எதிர்பார்த்துச் சொல்லவில்லை. மறந்திருப்பாங்க. ஆனாலும் ஓரளவுக்குக் கலாசாரத்தைப் பின்பற்றியே வருகிறார்கள். இதில் எங்க பெரிய பேத்தி கொஞ்சம் சுணங்குவாள். ஆனால் சாப்பாடு எப்போதும் தென்னிந்திய உணவு தான். அவளுக்காக நான் பொடியெல்லாம் தயார் செய்து ஸ்ரீரங்கத்தில் இருந்து அனுப்பி இருக்கேன். பண்டிகைகள் பற்றிய புரிதல் இருந்தாலும் தனியாக இருப்பதால் தீபாவளி, பொங்கல் தவிர்த்த பண்டிகைகளுக்குக் குடும்பத்தோடு இருக்க முடிந்ததில்லை. சின்னவள் அப்பு இன்னமும் குழந்தை தான். போகப் போகத் தெரியும். கு.குவோ எல்லாமும் கேட்டுத் தெரிஞ்சுக்கும் டைப். இப்போவே பத்து வயசு ஆகிட்டதாலே இன்னும் மாற்றங்கள் இருக்குமா அல்லது இப்படியே தான் இருப்பாளானு புரியலை. அவள் அம்மாவுக்குக் குழந்தையோடு இந்தியா போகணும் என்பதே ஆசை. ஆனால் பையருக்கு இங்கே வேலை கிடைப்பது ரொம்பவே அரிது. ஷெல் கம்பெனி "பெண்"களூரில் மட்டும் இருக்கு. அதுக்கு ஏகப்பட்ட போட்டி.
கீதா சாம்பசிவம் மேடம்...தெரிந்தவர்களின் குடும்பத்தைப் பற்றித் தெரியாமல் எழுதிடக்கூடாது இல்லையா? இங்கு வருகிற நீங்கள், வல்லிம்மா, கோமதி அரசு மேடம் மற்றும் பலரும் இயல்பாகவே பக்தி, ஒழுக்கம் நிரம்பப்பெற்ற குடும்பம். நாங்களும் ரொம்பவே ஆச்சாரமாக எல்லா வழக்கங்களையும் பின்பற்றும் (அதாவது எனக்கு முந்தைய முந்தைய தலைமுறை) குடும்பம். இருந்தாலும் எல்லா வாரிசுகளின் வாரிசுகளும் அதே நிலையுடன் இல்லை என்பதையும் அவதானித்திருக்கிறேன் (வெளிநாட்டில் வசிப்பவங்களில் எல்லா வாரிசுகளின் வாரிசுகளும்)
நீக்குஇந்தத் தங்கம் வாங்குவது பற்றிப் பெரியவர் திரு ராமன் எழுதி இருப்பது எல்லாமும் சரியே. எங்க வீட்டில் அப்பாவுக்குக் கொஞ்சம் இதில் ஈடுபாடு உண்டு. பெரியப்பாக்கள் வீட்டிலும் உண்டு. ஆனால் அம்மா வழித் தாத்தா வீட்டில் எக்கச்சக்கச் சொத்து இருந்தாலும் இதில் யாருக்குமே ஈடுபாடு இருந்ததில்லை. பெரியம்மா, அம்மா, சித்திகளுக்கு மட்டுமே ஆதங்கமாக இருக்கும்.. எங்க வீட்டிலும் அண்ணா விடத் தம்பிக்கும் அவன் மனைவிக்கும் ரொம்பவே ஈடுபாடு. மாசம் குறைந்தது பத்து கிராம் காசு வாங்கிடுவாங்க. முக்கியமான விசேஷங்களுக்கு நகை தேவைப்படும்போது அந்தக் காசுகளைக் கொடுத்துப் பண்ணிப்பாங்க. அல்லது வாங்கிப்பாங்க. எனக்கும் அதுக்கான வாய்ப்பு இருந்தும் நானும் பயன்படுத்திக்காமல் குடும்பத்திலேயே உப்பு, புளி, மளிகை சாமான்களிலேயே என் சேமிப்பை எல்லாம் போட்டிருக்கேன்.
பதிலளிநீக்குஇப்போ நினைக்கத் தோணும் அப்போ அது வாங்கி இருக்கலாம். இப்போ இது வாங்கி இருக்கலாம்னு. அப்படி எல்லாம் வாங்கி இருந்தால் வீடு கட்டும்போது 15 பவுன் நகைகளை விற்றிருக்கவே வேண்டாம். அதான் போகட்டும்னு விட்டுட்டாலும் என் பெரியப்பா எனக்காகக் கொடுத்த பணமான பத்தாயிரத்தையும் (எழுபதுகளில்) சரியான முதலீடு செய்யாமல் அதுவும் துண்டு துண்டாகக் குடும்பத்தில் போட்டுச் செலவாகி விட்டது.முக்கியமாய் உறவுகளே சாப்பிட்டார்கள். நெல்லை சொல்லுவது போல நமக்கு என்ன தேவையோ அதுக்கு மேலே ஒரு பைசா கூடக் கிடைக்காது. இதே தான் சாப்பாடு விஷயத்திலும். நிறையப் பார்த்திருக்கேன். இன்னிக்குச் சாப்பாடு கிடைக்கும்னாத்தான் நம்மால் சாப்பிட முடியும். இல்லைனா ஒரு கவளம் கூடக்கிடைக்காத சூழ்நிலை உருவாகும்.
சாப்பாடு பற்றி நீங்கள் சொல்லியிருப்பாது முற்றிலு உண்மை. ஆனால் அதில் ஒரு திருத்தம். நமக்கு என்ன சாப்பிடணும்னு விதிச்சிருக்கோ அதை மாத்திரமே நாம் சாப்பிடுவோம். காசு நிறைய இருந்தாலும் நமக்கு இனிப்பு இனி சாப்பிட எழுதி வைக்கலைனா, டயபடீஸ் மற்றும் பல தடைகள் வரும். அதனால்தான்,
நீக்குஇருப்பதைக் கொண்டு திருப்திப் படுவது, நமக்கு மிகவும் நல்லது. நானும் அப்படித்தான் நினைத்துக்கொள்கிறேன். நழுவி வீணாகிவிட்ட பாலைப் பற்றி நினைத்து மனதைத் தளர விடுவதில்லை, இப்போல்லாம்.
விவரமாக கருத்துச் சொல்லி இருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.
நீக்குதிரு ராமன் அவர்கள் சொல்லி இருப்பது போல் நாங்களும் பிஎஃப் கடனில் தான் குழந்தைகளுக்கான பள்ளிச் சீருடை, ஷூ, சாக்ஸ்கள், புத்தகங்கள், நோட்டுக்கள் போன்றவை வாங்கித் தருவோம். இத்தனைக்கும் பள்ளிக்கட்டணமே கிடையாது. கேந்திரிய வித்யாலயா பள்ளி. அதுக்கேப்பள்ளி ஆரம்பிக்கையில் இருவருக்குமாகச் சேர்த்துக் குறைந்தது 5,0000க்குள் தேவைப்படும். அடுத்தது தீபாவளி. தோட்டியிலிருந்து தொம்பன் வரை துணி எடுக்கணும் என்பதால் எங்களோடது பெரிய பட்ஜெட். அதுக்கும் பி.எஃப் தான் கை கொடுக்கும். பின்னர் 88இல் மீண்டும் ராஜஸ்தான், குஜராத் என வந்தப்புறமாத் தான் எங்களால் பணம் சேர்க்கவே முடிந்தது.
பதிலளிநீக்குஆனால் நல்ல வாய்ப்புகள்னு பொதுவா எல்லோரும் சொல்லக் கூடிய இரு வாய்ப்புக்களை வேண்டாம்னு சொல்லிட்டோம். ஒண்ணு அந்தமானுக்குப் போவதற்கான ஆர்டர். இன்னொன்று ஸ்ரீலங்கா போவதற்கான வாய்ப்பு. இரண்டிலும் சம்பளமெல்லாம் இரட்டிப்பு. ஏகப்பட்ட சலுகைகள். திரும்ப இந்தியாவுக்கு வரும்போது குழந்தைகளின் மேல்படிப்புக்கு அவங்க விரும்பும் படிப்புப் படிக்க நிச்சயமாப் பதிவு செய்யப்பட்ட ஓர் இடம்னு எல்லா வசதிகளும் இருந்தது. ஆனாலும் ஏற்கெனவே என் அம்மா இறந்துவிட்டார். அப்போது மாமனார், மாமியாருக்கும் 60,65க்கு மேல் வயசு. என்னோட அப்பாவுக்கும் 60க்கு மேல் வயசு. அதனால் போகவில்லை.
5000 என்று வாசித்தேன். வாய்ப்பும், வேலையும் நம் தலையெழுத்துப்படிதான் நடக்கும். அதுபோல இன்னொரு விநோத விஷயத்தையும் கவனித்திருக்கிறேன். ஒரு கம்பெனியில் மிகக் கடுமையாக வேலை பார்த்து, குறைந்த சம்பளமே கிடைத்திருந்தாலும் வாழ்க்கையில் போகப் போக, குறைந்த வேலை பார்த்து நிறைய சம்பளம் வந்து அதனை காம்பன்சேட் செய்திருக்கிறது.
நீக்கு-he-he-he-he, typo error! :)))) 50,000? haiya jollynu aadi iruppeen,paadi iruppeenee, appoo! :))))))
நீக்குசுவாரசியமாகக் கருத்தைச் சொல்லி இருக்கிறீர்கள் நன்றி. எல்லாருடைய வாழ்க்கையிலுமே தொலைத்துவிட்ட நல்ல சந்தர்ப்பங்கள் என்பது இருக்கத்தான் செய்யும்போல இருக்கிறது. நானும் அதற்கு விளக்கல்ல.
நீக்குஆஹா! அந்தப்பூவின் ஒரிஜினல் பெயர் மனதிலேயே ஊறிக்கொண்டிருந்தது. இப்போ வெங்கட் வந்து சொல்லிட்டார். ஆமாம், இதை "சம்பா" என்பார்கள். நசிராபாதில் மால் ரோடு வீட்டுத் தோட்டத்தில் இருந்தது இது. இப்போத் தான் நினைவு வருது. லானில் உட்கார்ந்தால் மணம் மூச்சுக்காற்றோடு உள்ளுக்குப் பரவும்.
பதிலளிநீக்குஇந்த 'சம்பா'விலிருந்துதான் செண்பகம் என்ற பெயர் வந்திருக்குமோ/
நீக்கு@ நெல்லை
பதிலளிநீக்கு// நிறைய நாட்கள் உங்களைக் காண முடிவதில்லையே. செல்போன் பிரச்சனை தீர்ந்ததா?... //
உடல் நிலைக் கோளாறும்
அவ்வப்போது சேர்ந்து
கொள்கின்றதே....
கோளறு பதிகம் நிச்சயம் உங்கள் கவலையைத் தீர்க்கும் துரை செல்வராஜு சார். என்னுடைய பிரார்த்தனைகளும். தொடர்ந்து வாருங்கள்.
நீக்குவீடு, வாசல், நகை, நட்டு எல்லாம் வரவேண்டுமென இருந்தால் மட்டுமே வரும். இல்லை என்றால் இல்லை.
பதிலளிநீக்குஎதற்கும் ஓவராக ஆசைப்படாதிருந்தால்.. மனசுக்கு நல்லது. விளைவாக, உடம்புக்கும் நல்லது!
வாங்க ஏகாந்தன் சார். ஆசையே துன்பத்துக் காரணம்னு புத்தரின் மொழிகளைச் சொல்லிட்டீங்களே.
நீக்குஒருத்தர், கதவைத் திற காத்து வரட்டும் னு சொல்றார். இன்னொருவர் அனைத்துக்கும் ஆசைப்படு னு சொல்றார்