கேள்வி பதில்கள் :
நெல்லைத்தமிழன் :
1 மற்றவர்கள் கஷ்டங்களைப் பார்த்து மனம் மகிழ்ச்சியடைவதும், நல்லதைப் பார்த்து பொறாமை அடைவதும் மனிதனின் இயல்பான குணங்களாக இருப்பதன் காரணம் என்ன?
# அது மனிதனின் இயல்பான குணம் அல்ல என்று தான் நான் சொல்வேன். பெரும்பாலானவர்கள் இப்படித்தானே இருக்கிறார்கள் என்று நீங்கள் சொன்னால், பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பது உலக நியதி என்று தான் நான் பதில் சொல்ல வேண்டும்.
& சேச்சே என் இயல்பு அப்படி கிடையாது. வாடிய பயிரைக் காணும்போதெல்லாம் வாடுவது என் இயல்பு.
2. எதிர்பாராத சங்கடங்கள் வாழ்க்கையில் நிகழும்போது நீங்கள் யாரிடம் ஆலோசனை கேட்பீர்கள்? தந்தையிடமா, சகோதரனிடமா இல்லை நண்பனிடமா? (இருபாலாரும்)
# ஆலோசனை பிரச்சனைக்கு தகுந்த மாதிரி எல்லாரிடமும் கேட்பேன். பெரும்பாலும் சகோதரர்களிடம் கேட்பது உண்டு. நண்பர்களுக்கு நிறைய ஆலோசனை சொல்லி இருக்கிறேன் தவிர அவர்களிடம் எதையும் கேட்டு பெற்றதில்லை.
& சங்கடங்கள் நிகழும்போது யாரையும் ஆலோசனை கேட்டதில்லை. முக்கிய தீர்வுகள் எடுக்கவேண்டிய கட்டங்களில் மூத்த சகோதரரை கலந்து ஆலோசித்தது உண்டு - உதாரணம் : அலுவலகத்திலிருந்து விருப்ப ஓய்வு பெறுவது என்ற நிலையில். அவர் ஒரு ஜோதிடம் பார்த்து சொன்ன ஆலோசனையை ஏற்றுக்கொண்டேன்.
3. ஆணின் பள்ளிக்கால நண்பன், கடைசி வரையில் நண்பனாக இருக்கும் வாய்ப்பு போல ஒரு பெண்ணுக்கு ஏன் அப்படி அமைவதில்லை- விதிவிலக்குகள் தவிர
# என் மகள்கள் இருவருக்கும் நெருக்கமான பள்ளி தோழர்கள் இன்னமும் தொடர்பில்தான் இருக்கிறார்கள். நீங்கள் சற்று அவசரப்பட்டு முடிவு செய்தீர்களோ என்று எனக்கு தோன்றுகிறது.
& என்னுடைய மனைவியின் சகோதரிக்கு சிறு வயது தோழிகள் இன்றும் நண்பிகளாகத் தொடர்கிறார்கள். இந்த வாட்ஸ்ஆப் யுகத்தில் நண்பிகள் / நண்பர்கள் தொடர்வது முற்றிலும் சாத்தியமே.
4. இன்றைக்கு ஆண் பெண் வயது வித்தியாசம் கூடாது என்று இளைய தலைமுறை ஆசைப்படுகிறதே. இது நல்ல போக்காக இருக்குமா?
# உங்கள் கேள்வி புரியவில்லை. திருமணம் செய்வதில் ஆண் வயது சற்றுக் கூடுதலாக இருக்க வேண்டும் என்பதற்கு சமூக & மருத்துவக் காரணங்கள் இருக்கின்றன. அவை ஆங்காங்கே மீறப்படுகின்றன என்பது ஒரு கசப்பான உண்மைதான் என்ன செய்வது!
5. பிறர் நம்முடைய ஆலோசனையைக் கேட்க வேண்டும் என்று நாம் ஏன் விரும்ப வேண்டும்?
# ஆலோசனை கேட்டால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பது என் கட்சி. ஆலோசனை கேட்டு பெற்றுக்கொண்டு அதை நடைமுறை படுத்தாமல் இருப்பது நமக்கு ஏன் வருத்தமளிக்க வேண்டும் ? நமது ஆலோசையை ஏற்றுக் கொள்வது என்பது அவர்களின் இஷ்டத்தைப் பொருத்தது அல்லவா ?
& நான் அப்படி எல்லாம் விரும்புவது இல்லை. ஆலோசனை கேட்பவர்களுக்கு மட்டும் கொஞ்சம் வழங்குவது உண்டு.
பானுமதி வெங்கடேஸ்வரன்:
மிடில் க்ளாஸுக்கும், அப்பர் மிடில் க்ளாஸுக்கும் என்ன வித்தியாசம்?
# மேலேறுவதில் சிறு வெற்றி கண்டவர்கள் அப்பர் மி.
ரயில் பெர்த் போல்தான், ஆனால் இதில் அப்பர் உயர்த்தி.
வாழ்க்கையில் ஜெயிக்க எதிர் நீச்சல் போட வேண்டும் என்றும், எதிர்நீச்சல் போடும்பொழுது சீக்கிரம் சேர்ந்து விடுவோம், ஜெயிப்பது கடினம் எனவே go with the flow என்றும் கூறப்படுகிறது. நீங்கள் எந்த கட்சி?
# உலகத்தொடு ஒட்ட ஒழுகல் இது ஆற்றின் போக்கில் நீந்தி வேகம் காண்பது.
முயற்சி தன் மெய்வருந்தக் கூலி தரும். இது சவால்களை எதிர்த்து நின்று வெற்றி காண்பது.
நீங்கள் எந்தக் கட்சி என்று கேட்டால் அதிகம் சச்சரவை விரும்பாத சாது நான். " விட்டுக் கொடுத்துப் போ - விவகாரத்தைத் தவிர் " என்பது தான் என்னுடைய சித்தாந்தம்.
வாழ்க்கையில் சிக்கல்கள் வரும் போது, இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும். எது எப்போது வேண்டும் என்று அறிவது சிறப்பு.
& எதிர்நீச்சல் போடவேண்டும் - வாலிப வயதில்.
ஆற்றின் போக்கில் செல்வோம் - வயோதிகத்தில்.
படமும் பதமும் :
நெல்லைத்தமிழன் :
தென்னகத்தின் புகழ் பெற்ற கோயிலில் எடுக்கப்பட்ட படம் இது. உடைந்து போயிருந்த யானைக்கும் யாளிக்குமான தொடர்பை மீட்டெடுக்க முயல்கிறார் ஸ்தபதி. இதற்காக அருகிலேயே ஓவியம் ஒன்றையும் வைத்திருந்தார். அதைப் பார்த்தபோது இப்படித்தான் அந்தக் காலத்திலும் சிற்பிகள் ஓவியத்தை வைத்துக்கொண்டு செதுக்கியிருப்பார்கள் என்று நினைத்தேன். ஒற்றைக் கல்லில் செதுக்கும்போது (அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள்) அது எவ்வளவு கடினமான வேலை, சிறிது தவறினாலும் மொத்த உழைப்பும் வீணாகிவிடும் என்பது புரியும். போற வர்றவனெல்லாம் நம் குழந்தையைக் கொஞ்சுகிறேன், செல்லமா இருக்கேன் என்று சொல்லிக்கொண்டு, விரலைப்பிடித்து இழுப்பது, கன்னத்தை இழுப்பது, காதைக் கிள்ளுவது, மூக்கை அமுக்குவது என்றெல்லாம் செய்தால் பொறுத்துக்கொள்ள இயலாத நாம், காலம் கடந்து நிற்கும் இந்தச் சிற்பங்களைப் பிறர் சிதைக்கும்போது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?
இதுதான் மாடல் ஓவியம். இதை வைத்துத்தான் சீர் செய்துகொண்டிருந்தார் ஸ்தபதி.
= = = = = = = = = = = = = = = = =
ஸ்ரீராம் :
ஆனந்த சயனமா
அபாய சயனமா
= = = = = = = = = = = = = =
மனசாட்சியம் - 27
KGY Raman
" பச்சை பச்சையாக .. "
( அடல்ட்ஸ் ஒன்லி அல்ல)
"காய்கறிகளைப் பச்சையாக சாப்பிடுங்கள், பழங்களை முழுதாக தோலோடு சாப்பிடுவது சிறந்தது (அதாவது உரிக்காமல் தோலோடு சாப்பிடுகிற பழங்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். பலாப் பழத்தையும் சத்துக்குடியையும் உரிக்காமல் சாப்பிட முடியுமா என்ன ?)
இப்படி எல்லாம் ஆரோக்கியம் குறித்த பதிவுகள் எல்லா தளங்களிலும் ஏராளமாக வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
சில பிராணிகளுக்கு சில இயல்புகள் இருக்கும். பெரும்பாலான பிராணிகள் எதையுமே முகர்ந்து பார்த்து, வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும். குரங்கு சற்று வித்தியாசமானது. மூக்கில் வைத்துப் பார்த்து அந்தப் பொருள் பாஸானால், அதை ஒரு கடி கடித்துப் பார்த்து அதற்குப் பின் தின்னுவதோ தூக்கி எறிவதோ செய்யும்.
" ஏண்டா உனக்கு இந்த குரங்கு புத்தி " என்று என்னை யாரும் கோபித்துக் கொண்டதில்லையே தவிர, என்னிடம் இந்தக் குரங்கு புத்தி இருப்பது எனக்கே தெரியும். விழித்துக் கொண்டிருக்கிற எல்லா நேரமும் ஏதாவது ஒன்றைக் கொறித்துக் கொண்டிருக்கிற குரங்கு புத்தி என்னுடையது.
இலை, தழை, பூ , காய், பழம், கிழங்கு என்று எல்லாவற்றையும் வித்யாசம் பாராமல் வாயில் இட்டுப் பார்ப்பது என்னுடைய சுபாவம். இது எந்த அளவுக்கு போனது என்றால், ஒரு சமயம் சேம்பு இலையை மென்று பார்த்து வாய் முழுதும் மகா அரிப்பு ஏற்பட்டு, என் அத்தை, நல்ல வேளையாக, புளி உப்பு இரண்டையும் சேர்த்து வாயின் உட்புறம் முழுதும் பாசி பிடித்த பித்தளைச் சொம்பைத் தேய்ப்பது போல் தேய்க்கச் சொன்னார். அப்பாடா ! ஒருவகையாக அரிப்பு நின்றது ! அத்தைக்கு நன்றி .. அத்தையை அங்கு எனக்கு அருகிலே இருக்க வைத்த இறைவனுக்கும் நன்றி.
சேம்பு இலை, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு இவற்றையே வாயில் போட்டுப் பார்த்த ஆளுக்கு கத்தரிக்காயும் அவரைக்காயும் எம்மாத்திரம் ? " அனைத்தும் யாம் அறிவோம் " என்று சிவாஜி சொன்ன மாதிரி நானும் " ருசி அனைத்தும் யாம் அறிவோம் " என்று தாராளமாகச் சொல்லிக் கொள்ளலாம்.
வெள்ளரிக்காய் போலவே இருக்கிற ஆனால் வெள்ளரிக்காய் அல்லாத கக்கிரிக்காய் என்ற பெயர் கொண்ட காயை நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்களா ? அதேபோல " சிலோனில் இருந்து வந்தது " என்கிற சிறப்புடன் ஒரு கையை விரித்துத் தாங்கக் கூடிய அளவுக்கு இருக்கிற மட்டையுடன் கூடிய பச்சைத் தேங்காய் ஒரு சமயம் எங்கள் வீட்டுக்கு வந்தது. அப்போது என் தகப்பனார் தென்னைப் பொருட்களை ஏற்றுமதிசெய்து கொண்டிருந்த ஒரு தனிநபர் முதலாளியிடம் வேலை பார்த்து வந்தார். தேங்காய் நார் வைக்கோல் போன்ற பொருட்களை நன்றாக இறுக்கி கட்டியாக சதுர வடிவில் கயிறு கட்டி நிறுத்தி அதன் மேல் கவர் செய்து ஏற்றுமதிக்கு அனுப்புவார்கள். இந்த கெட்டிப்படுத்துதல் பார்ப்பதற்கே ரொம்ப சுவாரசியமாக இருக்கும். அதற்கான அழுத்தும் இயந்திரம் ஒன்றை அந்தக் காலத்திற்குப் பின் நான் எங்கும் பார்க்கவில்லை.
சிலோன் தேங்காயை விட்டுவிட்டு எங்கேயோ போய் விட்டேனே. சிலோன் தேங்காய் விசேஷம் என்னவென்றால் அதனுடைய மட்டை, கரும்பு போல் இனிக்கும். அம்மா அரிவாள்மணையில் அதை ஜாக்கிரதையாக சிறு துண்டங்களாக நறுக்கி எடுத்துக் கொடுத்த போது, மிகுந்த அவநம்பிக்கையுடன் வாயில் போட்டுப் பார்த்தோம். நம்ப முடியாத அளவுக்கு அது இனிப்பாகவே இருந்தது. அதன்பின் அந்த சிலோன் தேங்காயை நான் எங்கும் பார்த்ததும் இல்லை வேறு ஒருவர் அது பற்றிச் சொல்லக் கேட்டதும் இல்லை.
பிஞ்சுக் கொத்தவரை, கீரை வகைகள் பிஞ்சு அவரைக்காய் என்று விதவிதமாக நான் மென்று முழுங்கியது உண்டு.
" பச்சைக் கத்தரிக்காயைக் கடிச்சுச் திங்காதே , பல் சொத்தை ஆகிவிடும் " என்ற பாட்டியின் கட்டளையை மீறி பிஞ்சுக் கத்திரிக்காயையும் தின்றிருக்கிறேன்.
இந்த பச்சைக் கத்திரிக்காய் கடித்து சாப்பிடுவதில் மட்டும் எனக்கு போட்டியாளர்கள் சிலர் இருந்தார்கள். என் அண்ணன் பிஞ்சுக் காயை அழகாக குறுக்கே எட்டு துண்டுகள் வரும்படி முழுதுமாக இல்லாமல் அளவாக நறுக்கி, உள்ளே மிளகாய் பொடி உப்பு திணித்து ஒரு நூலால் கட்டி உத்திரத்தில் இருந்து தொங்க விட்டிருப்பார். அது நன்றாக ஊறியதும் அதை எடுத்து ஆளுக்கு ஒரு துண்டு தின்போம். அதனால் தானா என்று நிச்சயமாக தெரியவில்லை, ஏனென்றால் அதை அவ்வளவு அதிகம் சாப்பிடவில்லை, என்றாலும் பற்கள் என்னவோ சொத்தை ஆனது உண்மை. பல் டாக்டர்கள் பிழைக்க வேண்டாமா ?
இப்படி ஆடு மாடு போல பச்சைக் காய்களை மேய்வது நான் என்றால் எங்கள் குடும்பத்தில் சிலர் காய்கறிகளை அழகாக நறுக்குவதில் ஆர்வம் காட்டுபவர்கள். என் சித்தப்பா ஒருவர் எங்கு பிரயாணம் போனாலும் எளிதாகச் சுருட்டி எடுத்துக் கொள்ளக்கூடிய அவருடைய சிறு மெத்தை, தலையணை, போர்வை இவற்றை அழகாக, கச்சிதமாக சுருட்டி, கயிற்றால் கட்டி எடுத்துக்கொண்டு போவார். படுக்கை எடுத்துக்கொண்டு போவது போலவே நல்ல கூர்மையான கத்தி ஒன்றும் அவரிடம் இருக்கும். அவருடைய சகோதரர்கள் யார் வீட்டுக்குப் போனாலும் " இன்றைக்கு என்ன சமையல் ? நான் காய் நறுக்கிக் கொடுத்து விடுகிறேன். காய்களை எடுத்துக் கொடுங்கள் " என்று கேட்டு வாங்கி மிக அழகாக அவற்றை நறுக்கித் தருவார். எப்படி சமைக்க வேண்டும் எப்படி சாப்பிட வேண்டும் என்று விலாவாரியாக எடுத்துச் சொல்வார். எல்லாவற்றிலுமே மிகுந்த ரசனையோடு இருந்த என் அபிமான சித்தப்பா.
காய் நறுக்கும் கலை பற்றி பேசும் போது எங்கள் மெஸ் சமையல்காரர் ராமன் நாயர் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. காய்கறிகளை சரியாகவும் நறுக்க வேண்டும், மிக வேகமாகவும் செய்ய வேண்டும் என்பது அவருடைய கொள்கை. காய்கறி நறுக்குவது அங்கே சாப்பிடுகிற எங்களது வேலை. நாங்கள் நறுக்குவதை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டே இருப்பார். அதை எப்படி நறுக்க வேண்டும் என்று எங்களுக்கு ஆர்டர் போட்டுக் கொண்டே இருப்பார். " இப்படி சாவகாசமாக நறுக்கிக் கொண்டிருந்தால் சாப்பாடு நாளைக்கு தான் சாப்பிடணும் " என்பது அவருடைய அபிமான வாசகம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
KGG பக்கம்.
மழைக் காலங்களில் காலை நடைப்பயிற்சி என்பது மிகவும் சவாலான விஷயம்.
தினமும் நடைப்பயிற்சி செய்தே ஆகவேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைத்திருப்பதால் அடித்துப் பிடித்து காலை நடைப்பயிற்சி எப்படியும் 2 கி மீ நடந்துவிடுவது என் வழக்கம்.
அடுக்ககத்தில் நடைப்பயிற்சி என்பது சுலபமான விஷயம். அடுக்ககத்தை உள்பக்க நடைபாதையில் ஒரு சுற்று சுற்றி வந்தால் 400 மீட்டர். ஐந்து சுற்று சுற்றினால் போதும். மழை என்றால், பேஸ்மெண்டில் கார்கள் நிறுத்தப்பட்டுள்ள பகுதியில் நடைப்பயிற்சி செய்யலாம். எனவே எந்தக் காலத்திலும் கவலை இல்லை.
சில நாட்களில் (அதாவது உதவியாளர் ஊருக்குப் போயிருக்கும் சமயங்களில்) மகன் குடும்பம் / மகள் குடும்பம் இவர்களுடன் தங்கவேண்டியது இருக்கும். மழை இல்லை என்றால் கவலை இல்லை - மகன் வீட்டு அருகில் உள்ள பார்க் / அல்லது மகளின் அடுக்கக கட்டிடத்தை சுற்றி நடைப்பயிற்சி சுமார் அரைமணி நேரம் சென்று வருவேன்.
மழை இருந்தால் பிரச்சனை - குடையுடன் மழையில் நடைப்பயிற்சி செல்லவேண்டும். குடையுடன் பார்க்கில் அல்லது அடுக்ககத்தைச் சுற்றி நடைப்பயிற்சி செய்யும் என்னை அதிசயமாக பார்ப்பவர்கள் ' யாருடா இந்தப் பைத்தியக்காரன்!' என்பது போலப் பார்ப்பதைத் தவிர்க்க இயலாது!
பார்க்கில் மழை நேரத்தில் அல்லது மழை காலத்தில் நடைப்பயிற்சி செல்வது என்பது இன்னும் சிக்கலான விஷயம். மழை பெய்யும்போது குடையுடன் நடந்தால் கொஞ்சம் வித்தியாசமாகப் பார்த்தாலும் அதிகம் கவனிக்கமாட்டார்கள். ஆனால் பார்க் போன்ற மரங்கள் நிறைந்த பாதையில் மழை நின்றாலும் மரங்களிலிருந்து சொட்டு சொட்டாக விழும் நீர்த்துளிகள் நம் மீது விழாமல் இருக்க குடை விரித்தபடிதான் தொடர்ந்து நடக்கவேண்டும் !
கிட்டத்தட்ட கடந்த ஒருவார காலமாக பெங்களூரில் காலை நேரத்தில் மழை பெய்து வருவதால், பார்க் பகுதியில் தினமும் நடைப்பயிற்சி சென்று வருவது கடினமாக உள்ளது.
ஆனாலும் மருத்துவர் சொல்லைத் தட்டாதே என்று மனம் சொல்வதை கேட்டு நடைப்பயிற்சி தொடர்கிறது !
= = = = = = = = = = = = =
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். நல்லதே நடக்கட்டும்.
பதிலளிநீக்கு//விட்டுக் கொடுத்துப் போ - விவகாரத்தைத் தவிர்// This is my policy too! :)
பதிலளிநீக்குஇன்றைக்கு குறைவான கேள்விகள் தான் போலும்!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம். புதன் கிழமை நன்மை செய்யட்டும்.
பதிலளிநீக்குகாய்கறிகள், இலைகள் போன்றவற்றை பச்சையாக சுவைப்பது என்னிடமும் உண்டு - ஆனாலும் எல்லா காய்கறிகளையும் இப்படி சாப்பிட்டதில்லை - குறிப்பாக கத்திரிக்காய்! :) முகர்ந்து பார்ப்பது உண்டு.
பதிலளிநீக்குவிவாதம் விவகாரம் மிகப் பிடிக்காத ஒன்று. சொல்லிப் பார்க்கலாம். மூர்க்கனும் முதலையும் கதை வந்தால் விட்டு ஓடிவிட வேண்டும்:)))
பதிலளிநீக்குகாலை நேர நடை - தொடர்வது சில சமயங்களில் கடினமாகத் தான் இருக்கிறது. இதோ இன்றைக்கு காலை நேர நடை கட்! :(
பதிலளிநீக்குஅது ஏன் கட் செய்யறீங்க? பல் தேய்ப்பதுபோல, குளிப்பது போல இதுவும் அன்றாடச் செயல்னு நினைத்தால் தவிர்க்க மாட்டோம் அல்லவா?
நீக்குமழைப்படமும் நடை பற்றின கருத்தும் நன்மை. என்னால் தனியே நடக்க முடியாது. வீட்டுக்குள்ளேயே நடக்க வேண்டியதுதான்.
பதிலளிநீக்குவெண்டைக்காய் பச்சையாகச் ச்ப்பிட்ட பழக்கம் உண்டு. முதன் முதலில் கத்திரிக்காய் கேள்விப்படுகிறேன்.!!!! அதுவும் உப்புக்கண்ட கத்திரிக்காய் இன்னோரு ஆச்சரியம். தரையில் எல்லாம் சாறு சிந்தி கரையாகாதோ? புது செய்தி இது. நல்லதொரு ஆர்வம்.
பதிலளிநீக்குசாப்பிட்ட என்று படிக்கவும்
நீக்குஇரவெல்லாம் ஓட்டியதால் காலையில் தூங்குகிறாரோ. பாவம் மழை வராமல் இருக்க வேண்டும். சாலியில் பயணிக்கும் போது லாரி க்ளீனர் இது போல லாரி மேல உறங்குவதைப் பார்த்திருக்கிறேன். விழாமல் இருக்க வேண்டுமே என்று ஆதங்கமாக இருக்கும். நல்ல படம் ஶ்ரீராம்.
பதிலளிநீக்குபள்ளித் தோழிகள் இருவர் இன்னும் தொடர்பில் இருக்கிறார்கள். ஆண்டவனுக்கு நன்றி.
பதிலளிநீக்குதம்பிகள் இருக்கும் போது அவர்கள் தான் ஆலோசகர்கள்.
பதிலளிநீக்குநல்ல வேளையாக ஆலோசனை சொல்லும் அளவுக்கு நான் புத்திசாலி இல்லை:))))))))
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குகேள்விகளும், பதில்களும் அருமை.
பதிலளிநீக்குதென்னகத்தின் புகழ் பெற்ற கோயிலில் எடுக்கப்பட்ட படம் அருமை.
ஓவியமும், பழுது பார்க்கப்பட்ட சிற்பமும் அருமை.
//தென்னகத்தின் புகழ் பெற்ற கோயிலில் எடுக்கப்பட்ட படம்// சிதிலமடைந்த சிலைகளைப் பார்க்கும்போதே மனதில் ஒரு வித வேதனை வந்து உட்கார்ந்து கொள்ளும்...
பதிலளிநீக்கு//ஆனந்த சயனமா
பதிலளிநீக்குஅபாய சயனமா
அதிகாலைக் காட்சி //
தூங்குபவருக்கு ஆனந்த சயனம், பார்க்கும் நமக்கு கீழே விழுந்து விட்டால் என்ற பயம் அபாயசயனமா தோன்றும்.
//அனந்த சயனமா அபாய சயனமா// - நமக்கு அபாய சயனமாகத் தோன்றினாலும் அவருக்கு அனந்த சயனம்.
பதிலளிநீக்குபச்சை காய்கறிகள் சாப்பிட்ட அனுபவங்கள் பகிர்வு அருமை. அத்தையின் நினைவுகள் பகிர்வு அருமை.
பதிலளிநீக்கு//என் அத்தை, நல்ல வேளையாக, புளி உப்பு இரண்டையும் சேர்த்து வாயின் உட்புறம் முழுதும் பாசி பிடித்த பித்தளைச் சொம்பைத் தேய்ப்பது போல் தேய்க்கச் சொன்னார்.//
நல்ல யோசனை சொன்னார்கள்.
பிஞ்சு பச்சை வெண்டைக்காய் என் கணவர் சாப்பிடுவார் வெண்டைக்காய் வாங்கி வரும் போது எல்லாம்.
இப்போது பிஞ்சு கொத்தவரங்காய் சாப்பிட சொல்கிறார்கள் அதில் நிறைய மருத்துவ பயன்கள் இருப்பதாய் சொல்கிறார்கள்.
இன்னும் சாப்பிட்டுப்பார்க்கவில்லை.
காய்கறி நறுக்குவதும் ஒரு கலை. உங்கள் அபிமான சித்தப்பா அதில் சிறந்தவர் , அடுத்தவர்களுக்கு உதவியது சிறப்பு.
கெளதமன் சார் கதை இன்று இல்லையா?
பதிலளிநீக்கு//மழைக் காலங்களில் காலை நடைப்பயிற்சி என்பது மிகவும் சவாலான விஷயம். //
ஆமாம், கவனமாக போய் வர வேண்டும்.
அடாது மழை பெய்தாலும் விடாது
நடைபயிற்சி செய்வது மகிழ்ச்சி.
1
நீக்குமுருகா சரணம்
பதிலளிநீக்குநலம் வாழ்க..
பதிலளிநீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
விட்டுக் கொடுத்த விஷயங்கள் எத்தனையோ...
பதிலளிநீக்குஎந்த விவாதத்திலும் கலந்து கொண்டதேயில்லை..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய கேள்வி பதில்கள் அனைத்தும் எப்போதும் போல் அருமை.
/பிறர் நம்முடைய ஆலோசனையைக் கேட்க வேண்டும் என்று நாம் ஏன் விரும்ப வேண்டும்/ என்ற கேள்விக்கான பதில்களையும் ,
/எதிர்நீச்சல் போடவேண்டும் - வாலிப வயதில்.
ஆற்றின் போக்கில் செல்வோம் - வயோதிகத்தில். /போன்ற பதில்களையும் ரசித்தேன்.
சரோஜா தேவி கதைப்பகுதியை இன்று காணவில்லையே.! கதை போன வாரம் வரை சுவாரஸ்யமாக இருந்தது. துப்பறியும் கவனத்தில் கதை மாந்தர்கள் பிஸியாக இருக்கிறார்களோ ? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
2.
நீக்குஎதைப்பற்றி இந்த எண்ணிக்கை.? கதை படிப்பவர்களையா, இல்லை ரசிப்பவர்களையா, இது எதைக்குறிக்கிறது.?அ. நா. தி. படத்தில் (மக்கள் திலகம் நடித்தது) அதிலும் இப்படி குறியீடுகள் வரும். ஆனால், விபரமாக சொல்லத் தெரியவில்லை. எப்போதோ பார்த்தது. இப்போது அந்தப்படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. ஆனால், வீட்டில் குழந்தைகளுக்கு இதுவெல்லாம் பிடிக்காது. நேரம் அமைந்தால் பார்க்கலாம். நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமழையிலும் தங்களது நடைப்பயிற்க்கு வாழ்த்துகள். நான் வீட்டில்தான் ஒருநாள் முழுவதும் கீழே அமராமல் உலாதிக் கொண்டே உள்ளேன். அது போதாது என்கிறார்கள். மழையில் வெளியே நடந்தால் தரை வழுக்கி விடுமோ என்ற அச்சம் வருகிறது. நிறைய தடவைகள் கீழே விழுந்து விழுப்புண்களை பெற்று விட்டேன். குழந்தைகளோடு வெளியில் சென்றால் நடைப்பயிற்சி கண்டிப்பாக நான்கைந்து மணி நேரத்திற்கும் மேலாகவே குறைவில்லாமல் கிடைக்கும். (இரு தினங்களுக்கு முன் மாலில் கிடைத்தது.) தங்களின் நடைப்பயிற்சி தினமும் தொய்வில்லாமல் தொடர வாழ்த்துகள். இரண்டொரு நாட்களாக குளிர் வேறு வந்து விட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//நான் வீட்டில்தான் ஒருநாள் முழுவதும் கீழே அமராமல் உலாதிக் கொண்டே உள்ளேன்.// மனைவியை தினமும் நடைப்பயிற்சி செய்யணும்னு சொல்வேன், அவள் வாரத்தில் 3-4 நாட்களாவது செய்வாள். ஆனால் ஆண்களுக்கு உள்ள சௌகரியம் பெண்களுக்கு இல்லை. நான் என் உடல்பயிற்சிகள்லாம் முடித்துவிட்டு அக்கடா என்று உட்கார முடியும். ஆனால் மனைவிக்கு, சமையல், வீட்டு வேலை, அடுத்த வேளை சமையல்.... மனதில் தோன்றும் எவ்வளவு நேரம் நின்றுகொண்டே இருக்கிறாள் என்று... சமூகம் பெண்களிடத்தில் கருணை வேண்டும் என்று சிறிய வயதிலிருந்து சொல்லித் தருவதில்லையோ?
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய மனசாட்சியம் பகுதியும் சுவாரஸ்யமாக இருக்கிறது. நான் பச்சை காய்கறி அவ்வளவாக சாப்பிட்டதில்லை. சிறுவயதில் பிறந்த வீட்டில் இருக்கும் போது தோட்டத்தில் விளையும் பிஞ்சு வெண்டைக்காய் சாப்பிட்டுள்ளேன். பிறகு என் நளபாகம் வரும் போது நறுக்கிய கேரட், தக்காளிகளை பச்சையாக சாப்பிட்டுள்ளேன். அதன் பிறகு பற்கள் ஒத்துழைத்தால்தானே, இவைகளை சாப்பிடுவது... ! இப்போதும் வாழைப்பழத் தோலை, தோலோடு சேர்ந்த பகுதியை சாப்பிடும் வழக்கம் உண்டு. அதன் துவர்ப்பு பிடிக்கும்.
சிலோன் தேங்காய் பற்றி விபரமாக அறிந்து கொண்டேன். உங்கள் அத்தையின் யோசனை நன்றாக உள்ளது. அதன் பயனை உடனடியாக நீங்கள் அடைந்ததற்கும் உங்கள் அத்தைக்கும் என் நன்றியும். சமையலுக்கு சேனைக்கிழங்கை நறுக்கும் போது கைகள் சில சமயம் அரிப்பு வரும். உடனே சிறிது நல்லெண்ணையை கைகளில் தடவி நலம் பெறுவோம்.
சமையல் செய்வது ஒரு கலையென்றால், காய்கறிகள் நறுக்குவதும் ஒரு கலை. உங்கள் சித்தப்பாவுக்கு அது நேர்த்தியாக அமைந்திருப்பது சிறப்பு. பதிவுக்கு நீங்கள் வைத்த தலைப்பு ஈர்த்தது. சிறப்பாக பழைய நினைவுகளோடு பதிவை தொகுத்து தரும்.தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய படமும், பதிவும் சிறப்பு. சிற்பக்கலை கடினமானதுதான். சிரமப்பட்டு உருவாக்கிய ஒவ்வொரு பொருட்களையும் சுலபமாக அழிக்க எனக்கும் பிடிக்காது. கோவில்களில் இந்த சிலைகள்தான் எத்தனை அடிகளை மட்டுமில்லாது, கோவில்களில் பிரசாதமாகத் தரும் சந்தனம் குங்கும, வீபூதிகளையும் தாங்கி நிற்கிறது. என்று யோசிப்பேன்.
சகோதரர் ஸ்ரீராம் அவர்கள் பகிர்ந்த படத்தைப் பார்க்கையில் வருத்தம் ஏற்படுகிறது. ஆபத்தான நித்திரை.. அதை உணராமல் உறங்கும் அளவுக்கு அவரின் உழைப்பு அவர் உடலை வாட்டுகிறது என நினைக்கும் போது, அவர் மீது பச்சாதாபம் வருகிறது. இறைவன்தான் இவர்களை காக்க வேண்டும். இன்றைய அத்தனை பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தாய் சொல்லைத் தட்டாதே யிலிருந்து மருத்துவர் சொல்லைத் தட்டாதே க்கு வந்து சேர்ந்திருக்கிறது நமது வாழ்க்கை..!
பதிலளிநீக்குதாய் சொல்லைத் தட்டினால், அடி விழும் அல்லது உணவில் பிரச்சனையாகும். மருத்துவர் சொல்லைத் தட்டுவதே நம் வழக்கமாகிவிட்டதே..
நீக்குஅட..! நானே இன்று இத்தனை கருத்துக்களை ஒரே மூச்சில் தந்து விட்டேனே என நினைக்கும் போது எனக்கே என் மீது ஆச்சரியம் மேலிடுகிறது..! அதனால்தான் இங்கு மழை நின்று, குளிர் வந்துள்ளது. (ஆனால், இந்தக் குளிரும், ஒரு பெரிய மழைக்கான ஆரம்ப அறிகுறியாகத்தான் இருக்கும்.)
பதிலளிநீக்குகுடையைப் பிடித்துக்கொண்டு நடக்கச் சொன்னால், நடப்பதுபோல் கொஞ்சதூரம் போய் பாவனை செய்துவிட்டு, முதலில் தென்படும் காஃபி கார்னரில் உட்கார்ந்து காப்பியை ரசித்துக் குடித்துவிட்டு வந்துடுவேன் நான். மருத்துவராவது வெங்காயமாவது!
பதிலளிநீக்குஇன்றைய கதைக்கு என்ன அழகிய படம்னு பார்க்க வந்தால் கதையையே காணோம். கற்பனை செய்ய நேரமில்லையா இல்லை வேறு வேலைகள் வந்துவிட்டனவா?
பதிலளிநீக்குவளாகத்தில் நடைப்பயிற்சி சுலபம்தான் என்பது உண்மை. தூரல் இருந்தாலும் நடந்துவிடுவேன். மழை என்றால்தான் முதல் அல்லது இரண்டாவது பேஸ்மென்ட்.
பதிலளிநீக்குபழக்கமாகிவிட்டால் நடைப்பயிற்சியை விடத் தோன்றாது. என் யோகா மாஸ்டர் சொல்லியிருக்கிறார்... உடம்பு எப்போதுமேசுகத்தைத் தேடும், இன்னைக்கி யோகா வேண்டாமே என்று சொல்லும். நாம் அதனைக் கவனிக்கவே கூடாது என்பார்.
பழங்களை, எவையெல்லாம் தோலுடன் சாப்பிட முடியுமோ அவற்றை தோலுடன் சாப்பிடுவேன். மாம்பழ வெரைட்டியில் சில தோல்கள் துவர்ப்பாக இருந்தாலும் சாப்பிடுவேன். சமீபத்தில் ஒருவர், வாழைப்பழத்தையும் தோலுடன் சாப்பிடணும் எனச் சொன்னார் (யூடியூப் வைத்தியர்). முயற்சிக்க எண்ணம்.
பதிலளிநீக்குமனைவியின் உறவினரில் ஒருவள், திராட்சைப் பழத்தை தோலெடுத்து உண்பாள்...
//உலகத்தோடு ஒட்ட ஒழுகல்/ சிந்திக்கத் தூண்டும் கேள்வி. நான் பையனுக்கு சிறு வயதிலிருந்தே, தோல்வி கிடைக்கும் என்று தெரிந்தால் போருக்குப் போகாதே என்றே சொல்லியிருக்கிறேன். Never fight a loosing battle.
பதிலளிநீக்குமிடில் கிளாஸ் அப்பர் மிடில் லோயர் மிடில்.... எல்லாப் பயலும் ஒன்றே. இருந்தாலும் எனக்கும் கீழே மிடில் இருக்கு, எனக்குக் கீழே லோயர் மிடில் இருக்கு என்ற ஜம்பம்தான் என்பது என் எண்ணம்.
பதிலளிநீக்கு/பெண்களுக்கு தோழிகள்/- எப்படி அவசரப்பட்டுனு சொல்லிட்டீங்க? உங்கள் மற்றும் அடுத்த ஜெனரேஷனிலும் என்னோட படிச்சவ, சிறுவயதுத் தோழினு யாரேனும் வீட்டுக்கு வந்திருக்காங்களா? (என் பசங்க, அவங்க தோழி, தோழர்களை அழைச்சிட்டு வந்திருக்காங்க. திருமணம் ஆனபின் ஒரு தோழி மாத்திரம் வீட்டுக்கு வருவது உண்டு)
பதிலளிநீக்குதிருமணமான பெண்களுக்கு அதற்கு அப்புறம் கிடைக்கும் தோழிகளே உண்டு என்பது என் அபிப்ராயம்.
எனக்கு, ஆலோசனை கேட்கணும்னா, என் அப்பாதான். ஆனால் ஆலோசனை தேவைப்படும்போது அவர் இல்லையே... நண்பனிடம் கேட்கலாம், அவனும் இல்லை. எல்லாவற்றிலும் ஆலோசனை கேட்க அப்பாவிற்கு அடுத்தது உயிர் நண்பன் என்பது என் எண்ணம். இருவருக்கும் நம் நலன் மாத்திரமே மனதில் இருக்கும். என் அப்பா எப்போதுமே நியாயத்தின் பக்கம்தான் இருப்பார். எனக்கு எப்போதுமே அவர் சொன்ன அறிவுரை, 'செய்நன்றி கொல்வது பாபம்'. சகோதரர்களிடம் கேட்பேன், பிறகு நான் நினைப்பதைச் செயல்படுத்துவேண்.
பதிலளிநீக்குஎன்ன ஆச்சு சரோஜா தேவிக்கு? சேலம் ஊர்க்கார வில்லனைப் பிடிச்சாச்சா இல்லையா?
பதிலளிநீக்குஇந்தப் பொறாமை இருக்கே, அதுக்கு அளவே இல்லை. இதை நான் நிறையவே அனுபவிச்சிருக்கேன். அதுவும் படிக்கிற நாட்களில். கஷ்டப்பட்டு நல்லாப் படிச்சு நல்ல மார்க் வாங்கி முதல் மூணு ராங்குக்குள் வந்திருப்பேன். அதை யாரிடமும் பெருமையாச் சொல்லிக்க முடியாது. உன் அப்பா பள்ளிக்கூட வாத்தியாராச்சே, அதான் உனக்கு மார்க் போட்டிருக்காங்கனு ரொம்ப சுலபமாச் சொல்லிடுவாங்க. அதுவும் ஹிந்தி படிக்கையில் முதல் வகுப்பில் பாஸ் பண்ணினதுக்குக் கூட அப்பா ஹிந்தி வாத்தியார் என்பதால் முதல் வகுப்புக் கிடைச்சிருக்கு என்பார்கள். இது படிப்பில் மட்டுமில்லாமல் மற்றவற்றிலும் இன்னமும் தொடர்கின்றது என்பது தான் வேடிக்கை. :))))
கஷ்டப்பட்டால் மகிழ்ச்சி கொள்பவர்களையும் பார்த்திருக்கேன். சிரிப்பாய்ச் சிரிப்பாங்க. இன்னும் சிலர் நாம் வழுக்கிக் கீழே விழுந்தால் கூடச் சிரிப்பாங்க. அதுவே அவங்க விழுந்துட்டால் யாரும் அப்படிச் சிரிக்கக் கூடாது என்பார்கள்.
வாழ்க்கையில் சங்கடங்கள் வராமல் இருக்குமா? நிறையவே வந்திருக்கு. ஆனால் ஆலோசனைனு யாரிடமும் போய்க் கேட்டதில்லை. நான் பொதுவாக எனக்குள்ளேயே ஒரு தீர்மானம் போட்டுப்பேன். பொதுவான குடும்பப் பிரச்னை எனில் நாங்க இரண்டு பேருமே பேசி முடிவு எடுத்துடுவோம்.
எனக்கு நண்பர்கள் அதிகம் இருந்தாலும் இப்படித் தொடரும்படி அமையவில்லை. இணையத்திலேயே பார்த்தால் ஆரம்ப காலத்தில் ஜீவ்ஸ், நாகை சிவா, அம்பி, வேதா, கார்த்திக் எனப் பல நண்பர்கள். இவர்களில் பலரும் நெருங்கிப் பழகியவர்களே. ஆனால் இப்போது யாரிடமும் தொடர்பு இல்லை. பின்னர் நண்பரான தி.வா. என்னும் வாசுதேவன் திருமூர்த்தியும் நெருங்கிய நண்பராகத் தான் இருந்தார். சொல்லப் போனால் கூடப் பிறந்த அக்கா, தம்பியைப் போல் பழக்கம். நிறையச் சண்டையும் போட்டுப்போம். ஆனால் இப்போத் தொடர்பே இல்லை. வலை உலகில் ஆரம்பத்திலிருந்து இப்போ வரை தொடர்பில் இருப்பவர்கள் வல்லி சிம்ஹனும், துளசி கோபாலும், இ.கொ. என அழைக்கப்படும் இலவசக் கொத்தனார் ராஜேஷ் கர்காவும் தான். இதில் இ.கொ.வைக் கூட எப்போதேனும் தான் பார்க்க நேரும்.
பதிலளிநீக்குபின்னர் வந்த இரண்டாம் பாதியில் அறிமுகம் ஆன கௌதமன் சார், ஸ்ரீராம், கேஜிசுப்ரமண்யம் (அடிக்கடி வாட்சப்பில் சாட்டிங் செய்து ஆயுர்வேத மருத்துவம் குறித்துக் கேட்பார்.) விஸ்வேஸ்வரன், ஜவர்லால் ஆகியோர். இவர்களில் கேஜிஎஸ்ஸும், விஸ்வேஸ்வரனும் மறைந்து விட்டார்கள். ஜவர்லால் இப்போத் தொடர்பே இல்லை. முகநூலில் கூட அவர் பதிவுகள் என் டைம்லைனுக்கு வருவதில்லை. இந்தக் கால கட்டத்தில் அறிமுகம் ஆன நெல்லை, ஜேகேசி, பானுமதி, கோமதி அரசு ஆகியோரும் தொடர்பில் இருக்காங்க. ஜேகேசி தான் திடீர் மறைவு. வெங்கட் நாகராஜ், ஆதி வெங்கட் ஆகியோர் இப்போக் கிட்டத்தட்ட உறவு மாதிரி இருக்காங்க. என்றாலும் எப்போவானும் தான் பேசிப்போம். அவரவருக்கு அவரவர் குடும்பப் பொறுப்பு என்பதால் எப்போவானும் நலம் விசாரித்துக் கொள்வோம். ஸ்ரீராம் தினமும் தொடர்பில் இருப்பார். இருந்து வருகிறார். தி/கீதா அவ்வப்போது கூப்பிடுவார். இப்போ அவருடைய உடல் நலம், அப்பாவின் உடல் நலம் காரணமாக அவரால் பேச முடியறதில்லை. மற்றபடி தோழமையை என்னால் எல்லாச் சமயங்களிலும் தொடர முடிவதில்லை. குடும்பச் சூழ்நிலையும் ஒரு காரணம்.
பதிலளிநீக்குபொதுவாகவே பெண்களுக்குக் குடும்பம் தான் முதலில் வரும். வருகிறது. ஆகவே தனிப்பட்ட நட்பைத் தொடருவது என்பது எல்லோராலும் முடிவதில்லை. ஆனால் நான் இங்கே குறிப்பிட்ட நண்பர்களில் பலரும் எங்க வீட்டுக்கு அம்பத்தூரிலும், பின்னர் ஸ்ரீரங்கத்திலும் வந்திருக்காங்க. வல்லி சிம்ஹனால் தான் ஸ்ரீரங்கம் வந்தும் வீட்டுக்கு வர முடியாமல் உடல் நலம் கெட்டிருந்தது. மற்றபடி எல்லோருமே வந்திருக்காங்க.
நெல்லையின் யாளி படமும், ஸ்தபதி குறித்த அவர் விளக்கமும் படித்தேன். அருமையான சிற்பம் யாளி சிற்பம். பொதுவாகத் தமிழ் நாட்டில் பழமையைப் போற்றுவது இல்லை. தஞ்சைக் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலெல்லாம் மத்திய அரசின் தொல்லியல் துறை பாதுகாப்பில் இருக்கோ, பிழைச்சது. இல்லைனா எப்போவோ நொறுக்கிச் சுக்கு நூறாக்கி இருப்பாங்க நம் மக்கள். குற்றாலத்தில் சித்திர சபையைப் பார்த்துட்டு நிஜம்மாக் கண்ணீர் விட்டேன். :( இப்போ என்னடான்னா செப்பறையில் மூல நடராஜர் விக்ரஹம் ஏதோ சின்ன விரிசல் கண்டிருப்பதால் புதிதாய்ச் செய்து வைக்கிறாங்களாம். பழைய விக்ரஹத்தையே சரி பண்ணி வைப்பது தான் முறை. அதான் வழக்கமும் கூட. ஆனால் இதெல்லாம் நம் கட்டுப்பாட்டில் இல்லையே. என்ன செய்ய முடியும்?
பதிலளிநீக்கு