6.11.26

ஆண்டவனும் கோவிலில் தூங்கிவிடும்போது யாரிடத்தில் கேள்வி கேட்பது

 

..... இதை எல்லாம் யோசித்து ஏற்கனவே இதுவா அதுவா என்று ஒற்றையா ரெட்டையா போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த மகன் டெலிவரி ராமச்சந்திராதான் என்று தீர்மானித்தான்..  அது கிளைக்கதை.

மெயின் கதைக்கு மறுபடி வருகிறேன்.....

ஒரு விசேஷத்துக்காக வெளியூர் செல்கிறேன் என்று சென்ற மருத்துவர் திங்கள் ஊர் திரும்பினார். அந்நேரத்தில் மாமியார் ஓரளவு பரவாயில்லை என்ற அளவில்தான் இருந்தார். ஆனால் ஆக்சிஜன் அளவு மட்டும் போதுமான அளவு வரவில்லை.

நாங்கள் என்ன நினைத்தோம் என்றால் 'இதயம் குறைந்த சதவிகிதம்தான் வேலை செய்கிறது. அவர்கள் தீவிர ரெஸ்ட்டில் இருக்க வேண்டும். சில மருந்துகள் தருகிறேன் தொடருங்கள்' என்று சொல்லி டிஸ்சார்ஜ் சிபாரிசு செய்வார் என்று.     ஆக்சிஜனுக்கு மட்டும் என்ன செய்வார்கள்? சரி. சில உறவுகள் வீட்டில் பார்த்திருக்கிறோம் ஒரு மெஷின் வாங்கி லெவல் சரியாகும்வரை வைக்க வேண்டியதுதான் என்று பேசிக் கொண்டிருந்தோம்.

வந்தவர் வேறு ஆஸ்பத்திரி போகச் சொல்கிறார் என்று செய்தி மட்டும் வந்தது. நாங்கள் இந்த ரிஷப்ஷனிஸ்ட் பெண்களிடம் கோபமாக பேசியது, ஆய்வகப் பெண்ணிடம் விவரம் கேட்டு பேசியதும் தவறோ என்று நினைக்கும் அளவு இது உடனடி எதிர்பாரா ஆக்ஷனாக இருந்தது. அவரே வந்து விளக்குவார் என்றார்கள்.

வந்தார்.

"அவங்களுக்கு ஹார்ட் 25% தான் வேலை செய்யுது..(தெரிஞ்சதுதானே? இப்போ என்ன புதுசா?) இங்க ICU கிடையாது (அது இப்போதான் தெரியுதா? எங்களுக்கே ஏற்கனவே தெரியுமே) ஹார்ட் டாக்டர். கிட்னி டாக்டர்னு அவச
ரத்துக்கு கூப்பிட்டா வெளிலிருந்துதான் வரணும்..  அப்பவும் அவங்க வசதிக்குதான் வருவாங்க (இதெல்லாம் புதுசா சொல்றீங்க... இப்பதான் தெரிஞ்ச மாதிரி) அவங்களுக்கு இப்போ உடனே அட்டென்ஷன் தேவை. ஆக்சிஜன் லெவல் வேற ஏறவே மாட்டேங்குது ட்ரிபிள் எம், அப்பல்லோ, ராமச்சந்திரா மூணுல எது உங்களுக்கு OK ன்னு சொல்லுங்க மாத்தறதுக்கு லெட்டர் தர்றேன்"

சென்ற வாரம் அழைப்பின்பேரில் வந்த கார்டியாலஜிஸ்ட் மிகவும் பொறுமை இழந்து பதில் சொன்னதும் நினைவுக்கு வந்தது. ஏதாவது கேள்வி கேட்டால் பொறுமை இழந்தார். இரண்டாவது முறை கேட்டால் பல்கலைக் கடிக்காத குறை..

நாங்கள் ராமச்சந்திரா என்று சொன்னோம். ஆனால் அவர்கள் டிஸ்சார்ஜ் 
சம்மரி எழுதி பைல்கள் தந்து, பணம் வாங்கி, இதற்கே மாலை ஆறுமணி ஆகி விட்டது. ஏற்கனவே கவனிக்காமல் இருந்தவர்கள் இப்போது டிஸ்சார்ஜ் என்று இன்னும் அலட்சியமாக இருந்தனர்.

ராமச்சந்திரா என்றதும் அங்கு எந்த டாக்டரைப் பார்க்கப் போகிறீர்கள் என்று கேட்டார் இங்கிருக்கும் பொது மருத்துவர். இரண்டு பேரைக் கேட்டு, எங்களுக்குள் பேசி டாக்டர் பெயரைச் சொன்னோம். "எனக்குத் தெரிந்தவர்தான். நானே ஒரு இன்ட்ரோ கொடுத்து விடுகிறேன்" என்று எங்கள் முன்னாலேயே போன் பேசிவிட்டுக் கிளம்பினார். நான் இப்போது சொல்லப்போகும் முக்கியக் குறை இங்கேதான் வருகிறது.

சாதாரணமாக பில் செட்டில் செய்து அவர்கள் கொடுக்கும் டிஸ்சார்ஜ் சம்மரியை வாங்கி கொண்டு கிளம்பி விடுவோம். என் மகன் அப்படிச் செய்யவில்லை. ஒவ்வொன்றாக ஆராய்ந்தான். கேள்விக்குட்படுத்தினான். இவன் கேள்வி கேட்டதால் ரிசப்ஷனில் மூஞ்சி காட்டினார்கள். இவன் அசரவில்லை. இவன் கேட்டது ஒன்றுதான். "இவ்வளவு டெஸ்ட் எழுதி இருக்கிறீர்கள். அதற்குண்டான ரிசல்ட் ஒவ்வொன்றையும் அதன் கீழே அடுக்கித் தாருங்கள்" 

"நீங்களே அடுக்கிக் கொள்ளுங்கள். நாங்கள் செய்ய மாட்டோம் " என்றார்கள்.

இவன் ஒவ்வொன்றாக அடுக்கியபோது இரண்டு டெஸ்ட் செய்யவே இல்லை என்று தெரிந்தது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு விழித்தார்கக்ள். கூடி கூடிப் பேசினார்கள். லேபுக்கு ஓடினார்கள். ரெஜிஸ்டரை எடுத்து ஆராய்வது போல பார்த்தார்கள். டியூட்டி டாக்டர் வந்து பார்த்து ஆராச்சி செய்தார். அடுத்ததாக ஆஸ்பத்திரி MD மேடமே எல்லாவற்றையும் கொண்டு வரச் சொல்லி ஆராய்ந்தார்கள். "ஏதோ தெரியாமல் தவறு நடந்திருக்கிறது. எப்படி இப்படி ஆச்சுன்னு தெரியலை" என்றெல்லாம் வசனம் பேசி அதறகான பணத்தை ரிடர்ன் செய்தார்கள். அடுத்ததாக மகன் கையில் எடுத்தது டாக்டர்ஸ் விசிட் விவரம். அதில் கட்டாயம் தப்பு இருக்கிறது என்று தெரிந்தாலும் ஒப்புக்கொள்ள மறுத்தார்கள். எங்களுக்கு ஆஸ்பத்திரி மாற நேரம் கொண்டிருந்ததால் நாங்களும் அதிகம் ஆராய முடியாத நிலை. நாங்களே ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தருவோம் என்று சொன்னவர்கள் எங்களைதான் பணம் கட்ட விட்டார்கள்.  ஆம்புலன்ஸ் லட்சணம் ஏற்கனவே எழுதியிருந்தேன்.

ஏற்கனவே டி மார்ட்,ரிலையன்ஸ் உள்ளிட்ட இந்த கணினி பில் போடுமிடங்களில் எல்லாம் மகன் செக் செய்வான். அதில் ஒன்று, கொடுக்காத ஐட்டம் பில்லில் சேர்த்திருப்பார்கள். அல்லது ஒரு பாக்கெட் கொடுத்து விட்டு மூன்று பாக்கெட் என்று விலை போட்டிருப்பார்கள்.

'எங்கெங்கு காணினும் ஊழலடா' என்று பாடலாம். ஆஸ்பத்திரியில் கூடவா என்று கேட்காதீர்கள். அங்குதான் நிறைய இருக்கும். கண்டு பிடித்தால் ஏதோ காரணம் சொல்லிக் கொள்ளலாம். அடிக்கற வரை அடியென்று அடிக்கிறார்கள்.

======================================================================================

மனசாட்சியம் - 35
KGY Raman

மாமனார் மெச்சிய  மாப்பிள்ளை !!


Mnemonic

தபால், தந்தி, தொலைபேசி, இன்டர்நெட் இதெல்லாம் இல்லாத ஒரு சூழலை இன்றைய தேதியில் நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அந்தக் கால சோழ மன்னர்கள் ஆட்சி செய்த போது தகவல் பரிமாற்றத்திற்கு குதிரையைத் தான் நம்பி இருந்தார்கள். புறாக்களின் காலில் செய்தி வைத்து அனுப்புவதைப் பற்றி வேறு பிரதேசங்களைக் குறிப்பிட்டுச் சொல்லப்படுகிறதே தவிர நம் பக்கத்தில் அப்படி பறவை விடு தூது ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. 

அதுவும் சோழர் காலத்துக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன் என்ற ஒரு காலத்தில் எப்பேர்ப்பட்ட வசதி,  சமூக சூழ்நிலை இருந்திருக்கும் என்று ஊகிப்பது கூட கஷ்டம்.  அப்பொழுது ராமாயணம் மகாபாரதம் மற்றும் வேதங்கள் உபநிஷத்துக்கள் இவை எல்லாம் பரவலாக தெரியப்பட்டிருந்தன என்று அறியும் போது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா ? இப்படி பாடங்களை மனனம் செய்து எழுத்தாணி பனை ஓலைகள் கூட புழக்கத்தில் இல்லாத காலம் தொட்டு மக்களிடையே பரப்பி இருக்கிறார்கள் என்பது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கும் செய்தி. இதனுடைய ஆழத்தை சரியாக நாம் புரிந்து கொண்டிருக்கிறோமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. 

ராமாயணம், மகாபாரதம், மற்றும் ஆயிரக் கணக்கான நீதிக்கதைகள் - இவற்றை வாய் - செவி வழியாகப் பரப்புவது என்பது மிக உயரிய நோக்கம் தான். ஆனால் அதை எப்படிச் செய்வது ?

வேத மந்திரங்களை மனப்பாடம் செய்வதற்கு கிரமம் கனம் என்றெல்லாம் வேறு வேறு வழி முறைகளை வகுத்து வைத்திருக்கிறார்கள் நம் பெரியவர்கள். அதனால் தான் தொன்மையை கணக்கிட்டு சொல்ல முடியாத அளவுக்கு தொன்மையான அந்த கிரந்தங்கள் இன்றும் நமக்கு கிடைத்திருக்கின்றன.

கதைகள் அல்லது நிகழ்ச்சிகளைப் பரப்புவதற்கு ஒரு உத்தியாக, விசித்திரமான திருப்பங்கள் கொண்ட நிகழ்ச்சிகளைக் கற்பனை செய்து அதில் சேர்த்தார்கள். சில நிகழ்ச்சிகளை சற்று திரித்தும், மற்றும் சிலவற்றை பெரிது படுத்தியும், இன்னும் சிலவற்றை நம்ப முடியாத கற்பனைகளை சேர்த்தும் அசல் கதைக்கு மெருகூட்டினார்கள். பெரிய இதிகாசங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் எழுதிய பகுதிகள் உண்டு என்று சொல்லக் கேட்டிருக்கிறேன் -  நிச்சயமாகத் தெரியவில்லை. தமிழில் இடைச்செருகல் கம்பராமாயணத்தில் வெகு அதிகம் என்று சொல்வார்கள். அவர்கள் முன்வைக்கும் வாதங்கள் பெரும்பாலும் ஒப்புக்கொள்ளக் கூடியவை தான். அற்புதமான பாடல்களைக் கொண்ட கம்பராமாயணத்தின் நடுநடுவே விரசமான பாடல்கள் இருப்பது பல்லைக் கூசச் செய்யவில்லையா ? இந்த விஷயத்தில் ரசிக மணி டி கே சி அவர்களின் பணி மகத்தானது.‌

நமது சமய இலக்கியங்களில் மிக்கது கூறல் என்று சொல்லப்படும் அதிகப்படுத்தி எழுதுதல் மிகவும் அதிகம். ராவணனுக்கு 10 தலை, தசரதன் 40 ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்பதெல்லாம் கூட இந்தக் கணக்கில் வரும் என்று நான் நினைக்கிறேன். 

அந்த மாதிரி ஒரு மிகை கூறல் பற்றித்தான் நான் இங்கு சொல்ல வருகிறேன். 

ஒரு சமயம் சைவம் வைஷ்ணவம் இரு பிரிவுகளுக்கிடையே நிறைய போட்டி இருந்து வந்திருக்க வேண்டும். இப்போது நம் எம்எல்ஏக்கள் கட்சி மாறுவது போல அப்போது சில பிரபலங்களும் இங்கிருந்து அங்கு அங்கிருந்து இங்கு என்று மாறி மாறிப் போய்க் கொண்டிருந்ததும் தெரிய வருகிறது. இதைப் பயன்படுத்தி காளமேகத்தின் பாடல் ஒன்றைச் சுற்றி ஒரு கதை புனையப்பட்டிருக்கிறது.

முதலில் கதையைப் பார்த்துவிட்டுப் பிறகு பாடலுக்கு வருவோம். அப்போதுதான் சுவாரஸ்யம் கெடாமல் இருக்கும். 

காளமேகம் பிறப்பால் சைவம். பெயரைப் பார்த்தாலே தெரிகிறது. இவர் பெருமாள் மேல் பக்தி கொண்டு வைணவத்துக்கு மாறினாராம். பிறகு என்ன காரணமோ தெரியவில்லை மீண்டும் சைவராகிவிட்டார். இதெல்லாம் உண்மையா என்று என்னைக் கேட்காதீர்கள். எனக்கும் தெரியாது. 

சைவத்திற்கு மீண்டும் போனபின் ஒரு நாள் காளமேகம் பெரிய மழையில் சிக்கிக் கொள்ளுகிறார். பக்கத்தில் இருப்பது திருக்கண்ணபுரத்து பெருமாள் கோயில். அங்கே மழைக்கு ஒதுங்கலாம் என்று சென்றால் கதவு அடைத்திருக்கிறது. சைவன் ஆகிவிட்டாயே என்று பெருமாள் நம்மேல் கோபித்துக் கொண்டு கதவை அடைத்திருக்கிறார் என்று காளமேகம் நினைத்துக் கொண்டு ஒரு பாடல் சொல்லத் தொடங்குகிறார் :

" கண்ணபுர மாலே! கடவுளிலும்நீ அதிகம் " 

கடவுளரில் நீ உயர்த்தி என்று சொன்னபின் கதவு இன்னும் மூடி இருக்குமா என்ன ? பெருமாள் கதவை திறக்கச் செய்கிறார். சொஸ்தமாக உள்ளே வந்த காளமேகம் பாடலைத் தொடர்கிறார்: 

" கண்ணபுர மாலே ! கடவுளிலும் நீ அதிகம் 

உன்னை விட நான் அதிகம் ஒன்று கேள் 

உன் பிறப்போ பத்து  உயர் சிவனுக்கு ஒன்றும் இல்லை 

என் பிறப்போ எண்ணத்  தொலையாதே! "

இப்படி,  பெருமாளையே ஏமாற்றி விட்டாராம் காளமேகம். மழை கோயில் ஒதுங்குவது எல்லாவற்றையும் விடுங்கள். பிறவிச் சுழல் பற்றி எவ்வளவு அழகாக சொல்லப்பட்டிருக்கிறது !!

இது போன்ற நூற்றுக்கணக்கான -  இல்லை ஆயிரக்கணக்கான சுவாரசியங்கள் நம் இலக்கியத்தில் இருக்கின்றன. 

தமிழில் இருக்கிற சிலேடை என்கிற பாடல் அமைப்பு சமஸ்கிருதத்தில் இருக்கிறது என்று லேசாகத் தெரியும்.  வேறு மொழிகளில் இருக்க முடியுமா என்று கூடத் தெரியவில்லை.

( Mnemonic - நினைவாற்றல் மேம்படுத்தும் யுக்தி )

=========================================================================================

குமுதம் தான் முதலில் இந்த ஆறு வித்தியாசங்களை தொடங்கியது என்று நினைக்கிறேன். பிறகு குங்குமம் சாவியும் இதை வெளியிடத் தொடங்கின.
இந்த ஆறு வித்தியாசங்கள் என்பது மூளைக்கு வேலை மட்டும் இல்லை, நகைச்சுவையாகவும் எடுத்துக் கொள்ளலாம். அதேசமயம் சமயங்களில் காலத்தின் கண்ணாடியாகவும் அமைந்துவிடும்.
இது அதற்கு ஒரு உதாரணம்!

===================================================================================



===============================================================================

 எஸ்ரா The Bet என்கிற கதையைப் பற்றி கதைக்கிறார்.


============================================================================================

மத்திய பிரதேசத்தில் உள்ள ஸத்கண்டா அரண்மனை..


=======================================================================================


நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் தமிழிருக்கும் வரை என்றென்றும் நினைத்திருக்க வேண்டிய ஒப்பற்ற கவிஞர் கண்ணதாசன், "கன்னியின் காதலி" படத்தின் "கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே" பாடல் மூலம் திரைத் துறையில் நுழைந்தார்.

4000-க்கும் அதிகமான சாகா வரம்பெற்ற பாடல்கள் தந்த அவரின் கடைசி படப் பாடல் "மூன்றாம் பிறை" படத்தில் இடம் பெற்ற "கண்ணே.. கலைமானே.. கண்டேன் உனை நானே..." சரி, இதெல்லாம் தெரிந்ததுதானே என்கிறீர்களா? அவர் கடைசியாக எழுதிய கவிதை எது தெரியுமா? அது இதுதான்..

"மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் - இங்கு மழலைகள் தமிழ் பேச செய்து வைப்பீர் தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை - பெற்ற தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை!'

அமெரிக்காவின் சியாட்டில் மருத்துவமனையில் தன்னைப் பார்க்க வந்திருந்த தமிழ் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த அவர், அவர்களின் குழந்தைகளிடம் பேச முற்படும்போது அவர்களுக்குத் தமிழ் தெரியவில்லை. அப்போது, ஒரு தாள் எடுத்து இந்த நான்கு வரிகளை எழுதி அவர்களிடம் கையளித்தார் கவிஞர். இதுதான் அவர் எழுதிய கடைசிக் கவிதை.

ஒருமுறை மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், கவிஞரிடம் “நான் எந்த தத்தகாரத்தை போட்டாலும் உங்களால் பாட்டு எழுத முடியுமா?” என்று கேட்டார்.

“ஏன் முடியாது?” 

அப்ப இந்த டியூனுக்கு பாட்டு எழுதுங்க பாப்போம்.. ‘டொயிங்.. டொயிங்.. டொயிங்..’ என்று தம்பூராவை மீட்டச் செய்கிறார். க

விஞர் யோசிக்க ஆரம்பிக்கிறார். விஸ்வநாதன் 'என்ன?' என்பதுபோல தலையை ஆட்டுகிறார். 'பொன்னென்பேன்' கவிஞர் சொல்கிறார்... விஸ்வநாதன் அதே போல மேலும் வாசிக்க 'சிறு பூவென்பேன்...' என்றார். "அண்ணே..” என்று கவிஞரை கட்டிப்பிடித்துக் கொள்கிறார் விஸ்வநாதன். "காணும் கண்ணென்பேன்; வேறு என்னென்பேன்?"

சில சமயம் டியூனும் அமையாது, பாட்டும் அமையாது. அந்த மாதிரி நேரத்தில் ஒரு இறுக்கம் ஏற்படும். இது ஒருசில பாடல்களுக்கு மட்டுமே நடந்திருக்கிறது. அப்படி ஒரு பாடல் இயக்குனர் ஸ்ரீதரின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் இடம் பெற்ற ‘நெஞ்சம் மறப்பதில்லை அது தன் நினைவை இழப்பதில்லை...’ என்ற பாடல்.

பாடலுக்கான சூழலை சொல்லிவிட்டு இயக்குநர் ஸ்ரீதர் “அடுத்த மாதம் படப்பிடிப்பு. உடனே பாடலைப் பதிவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.

விஸ்வநாதன் பல டியூன்களைப் போட்டார். கவிஞரும் பல பல்லவிகளைக் கொடுத்தார். ஆனால் ஸ்ரீதருக்கு எதுவும் பிடிக்கவில்லை. இப்படியாக இரண்டு மூன்று நாள்கள் போய்விட்டன.

இறுதியில் ஒருவழியாக ஒரு டியூனைத் தேர்வு செய்தார் ஸ்ரீதர். கவிஞருக்கு ஏனோ ‘மூட்’ வரவில்லை. அவர் சொன்ன வரிகள் ஸ்ரீதருக்குப் பிடித்தமானதாக இல்லை. அப்புறமும் ஒன்றும் நடக்கவில்லை. இதற்கிடையில் படப்பிடிப்புக்கான நாளும் நெருங்கியது. பதற்றமானார் ஸ்ரீதர்.

ஒரு நாள் கோபத்தின் உச்சிக்கு சென்று “என்னமோ செஞ்சு தொலைங்க...” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். பிறகு கவிஞரும் விஸ்வநாதனுமாக உட்கார்ந்து போராடினார்கள்.

கவிஞர் ஒரு பல்லவியைச் சொல்ல, உள்ளே டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஸ்ரீதரின் காதில் அது விழுந்துவிட்டது. சாப்பிடுவதை விட்டுவிட்டு வேகமாக வெளியே ஓடிவந்து “இதுதான் பல்லவி... சூப்பர்... மேல எழுதுங்க” என்று சப்தமாகச் சொன்னார்.

‘அப்பாடி... ஸ்ரீதருக்குப் பிடித்துவிட்டது’ என்று அதே வேகத்தில் மொத்த பாடலையும் எழுதி முடித்து ஸ்ரீதரை வரச் சொல்லி வாசித்து பாடிக் காட்டினார்கள். “இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்” என்று ஸ்ரீதர் சந்தோஷத்துடன் அவர்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். ஒரு வழியாக 21 நாள்களுக்குப் பிறகு பாடல் எழுதப்பட்டுவிட்டது. தன் வாழ்நாளிலேயே அதிக நேரம் எடுத்துக்கொண்டு கவிஞர் எழுதிய பாடல் இதுதான் - ‘நெஞ்சம் மறப்பதில்லை அது தன் நினைவை இழப்பதில்லை...’

தன் வாழ்நாளில் அதிக நேரம் எடுத்துக்கொண்டு கவிஞர் எழுதியது ஸ்ரீதரின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் என்றால், கவிஞர் மிகவும் குறைந்த நேரத்தில் எழுதிய பாடலும் இயக்குநர் ஸ்ரீதரின் படத்தில்தான்.

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தை ஸ்ரீதர், தனது சித்ராலயா நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். ஒரு ஆஸ்பத்திரி செட் போடப்பட்டு, படத்தின் பெரும்பாலான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்துகொண்டிருக்கும்போது படத்தைப் பார்த்த இயக்குநர் ஸ்ரீதர், அதில் இன்னொரு பாடலைச் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தார்.

படம் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகிறது என்ற விளம்பரமும் பத்திரிகைகளில் வந்துவிட்ட நிலையில், அவருக்கு இந்த யோசனை தோன்றியது. உடனடியாக எம்.எஸ். விஸ்வநாதனை ஆபீசுக்கு வரவழைத்து டியூன் போடச் செய்து, டியூனும் தேர்வாகிவிட்டது. இப்போது பாடல் எழுத கண்ணதாசன் வர வேண்டும். இன்றைக்குப் போல செல்போன் இல்லாத காலம் அது. கவிஞரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருவழியாக கவிஞரைக் கண்டுபிடித்தபோது, அவர் அரசியல் பொதுக்கூட்டத்திற்காக ஊருக்குக் கிளம்பிக்கொண்டு இருந்தார்.

“நேரமாகிவிட்டது, நான் போகிற வழியில் சித்ராலயாவுக்கு வந்துவிட்டுப் போய் விடுகிறேன்” என்று சொல்லிவிட்டார்.

தயாரிப்பு நிர்வாகி சண்முகத்திற்கு நம்பிக்கை போய்விட்டது. ‘இந்தப் பாட்டோடு படம் வெளியாக வேண்டும் என்றால், இந்தத் தேதியில் வெளிவராது. சொன்ன தேதியில் வெளியாக வேண்டும் என்றால், ஸ்ரீதர் எடுக்க விரும்புகின்ற பாடல் இல்லாமல்தான் வெளியாகும்’ என்ற முடிவோடு வாசலிலேயே உட்கார்ந்து இருந்தார்.

கூட்டத்திற்குக் கிளம்பிய கவிஞர் “சண்முகம், வா போகலாம்” என்று அவரையும் அழைத்துக்கொண்டு சித்ராலயாவுக்கு வந்தார். கவிஞர் வந்தவுடன் அங்கு பரபரப்பு பற்றிக்கொண்டது. ஸ்ரீதர் சூழலைச் சொல்ல எம்.எஸ். விஸ்வநாதன் டியூன் போட, சரியாக பத்து நிமிடங்களில் “முத்தான முத்தல்லவோ” பாடலை எழுதி விட்டு, “ஸ்ரீ, நான் ஊருக்குப் போறேன். ஒரு அஞ்சு ரூபா வேணும்” என்று கேட்டார். பாடல் அற்புதமாக வந்துவிட்ட மகிழ்ச்சியில் இருந்த ஸ்ரீதர், “இதோ” என்று பணத்தைத் தந்துவிட்டார்.

அன்று இரவே பாடல் பதிவு செய்யப்பட்டு, இரவோடு இரவாக செட் போடப்பட்டு, நடிகர்களுக்கும் கால்ஷீட் சொல்லி மறுநாள் காலையில் தொடங்கி மாலைக்குள் பாடல் படமாக்கப்பட்டு படத்தில் சேர்க்கப்பட்டு விட்டது.

ஒரு படத்திற்கு கவிஞர், கதை - வசனம் - பாடல்கள் எழுதினார். ஆனால், படப்பிடிப்பு தொடங்கி சில நாள்களிலேயே அந்தப் படம் நின்றுபோனது. அந்தப் படம் ஒரு வித்தியாசமான கதை அமைப்பை கொண்டிருந்ததால், அந்தப் படத்தின் கதையும் அதற்கு எழுதிய இரண்டு பாடல்களும் கவிஞரின் நினைவில் அப்படியே பதிந்துபோனது.

அந்தக் கதை இதுதான்- ஒரு அழகான கிராமம். அங்கே அருகருகே இரண்டு வீடுகள். அந்த இரண்டு வீடுகளுக்கும் வாசல் பகுதியிலும், பின் பகுதியிலும் அழகான பூந்தோட்டம். ஒரு வீட்டில் ஒரு சிறு குடும்பம் தலைமுறை தலைமுறையாய் வசித்து வருகிறது. தற்போது அங்கே ஒரு கணவன் - மனைவி, அவர்களின் இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்றனர். அந்த இரண்டு பெண்களும் திருமண வயதை அடைந்தவர்கள்.

பக்கத்து வீட்டிற்கு ஒரு இளைஞன் அவனது பெற்றோருடன் குடி வருகிறான். அந்த இளைஞன் ஒருநாள் அவர்கள் வீட்டு தோட்டத்தில் நின்று கொண்டிருக்கும் போது, பக்கத்து வீட்டில் இருந்து ஒரு அற்புதமான பாடல் கேட்கிறது. ஆர்வம் தாங்காமல் எட்டிப் பார்க்கிறான்.

பக்கத்து வீட்டில் ஒரு அழகான இளம்பெண், பூப்பறித்துக் கொண்டே பாடிக்கொண்டு இருக்கிறாள். அந்தப் பாட்டில் மனதைப் பறிகொடுத்து விடுகிறான். தினமும் அதே நேரத்தில் பக்கத்து வீட்டில் இருந்து வரும் பாட்டுக்காக காத்துக் கொண்டிருக்க ஆரம்பிக்கிறான்.

ஒரு கட்டத்தில் அவளை திருமணம் செய்துகொள்ள விரும்பி, தன் பெற்றோரைப் பெண் கேட்கச் சொல்கிறான். பெண்ணின் பெற்றோர் ஏதோ சொல்ல வரும்போதெல்லாம், “எங்களுக்கு உங்களைப் பற்றி எல்லாமும் தெரியும்” என்று அவர்களை பேச விடாமல் செய்து விடுகிறார் அந்த இளைஞனின் தந்தை. திருமணம் நடக்கிறது. முதலிரவில் அந்த இளைஞன் அவளை பாடச்சொல்ல, அப்போதுதான் அவள் வாய்பேச முடியாதவள் என்று தெரியவருகிறது.

அதிர்ச்சி அடையும் அவன் கோபத்துடன் அவளிடம் ஏதோ கேட்கப் போகும்போது, வெளியே இருந்து அதே பாட்டு கேட்கிறது. வேகமாக அவன் அந்த அறையை விட்டு வெளியே வந்து பார்த்தால் அவன் மனைவியின் தங்கை பாடிக்கொண்டிருக்கிறாள். அதே இனிமையான குரல்.

அக்கா பூப்பறிக்கும் போது தங்கை பாடுவாள், அந்தப் பாட்டினால் ஈர்க்கப்பட்டு அக்காவும் மவுன மொழியில் மனதுக்குள் பாடி, தங்கை பாடுவதற்கேற்ப வாயசைப்பாள் என்பது தெரிய வருகிறது. மனைவியை பிரிய நினைக்கிறான். தங்கை அவனிடம், தன் அக்காளுக்கு வாழ்வு கேட்டு கெஞ்சுகிறாள்.

“உன் பாட்டில் மனம் பறிகொடுத்து, அதைப் பாடியது உன் அக்கா என்று நினைத்து அவளை திருமணம் செய்து கொண்டேன். நீ திருமணம் செய்துகொள்ளாமல் எங்கள் கூடவே இருந்து தினமும் பாட ஒப்புக்கொண்டால் உன் அக்காளுடன் வாழ்கிறேன்" அன்று அவன் சொல்லி விடுகிறான். வாய்பேச முடியாத அக்காவுக்காக தங்கை ஒத்துக் கொள்கிறாள். இந்த நிலையில் அக்காவுக்குக் குழந்தை பிறக்கிறது.

அக்காவின் குழந்தைக்கு தங்கை தாலாட்டுப் பாடுகிறாள். இதுதான் பாட்டுக்கான சூழல்.

கவிஞர் எழுதிய பாட்டின் பல்லவி இது...

“தாய் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்.. தாய் தூங்கத் தாலாட்டு நீ பாட வேண்டும்.. நீ பாடும் தாலாட்டை தாய் கேட்க வேண்டும்.. தன் நிலை மாறி அவள்கூடமொழி பேச வேண்டும்..”

அந்தப் படம் நின்று போனதால், அதை அப்படியே விட்டுவிட்டார்.

பின்நாளில் ‘பாலும் பழமும்’ படத்திற்கு பாடல் எழுத அமர்ந்த போது, பாட்டுக்கான சூழல் சொல்லப்பட்டது. முன்பு தாலாட்டாக தான் எழுதிய பாடலை, இந்த இடத்தில் காதல் பாட்டாக மாற்றி எழுதினால் என்ன என்று கவிஞருக்குத் தோன்றியது. பிறகு அதையே மாற்றி எழுதித் தந்தார், அந்தப் பாடல்தான் இது..

“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்... நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்... நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்.. நீ காணும் பொருள்யாவும் நானாக வேண்டும்..”

வாய்பேச முடியாத தன் அக்கா மனவருத்தத்தில் இருக்கும்போது, அவள் மனதுக்கு ஆறுதலாக தங்கை பாடுவதாக இதே படத்திற்கு கவிஞர் இன்னொரு பாடல் எழுதி இருந்தார். அதன் பல்லவி-

“மண்ணில் கிடந்தாலும் மடியில் இருந்தாலும் பொன்னின் நிறம் மாறுமோ...” என்று தொடங்கும் பாடல். பின்னாளில் ‘பாசமலர்’ படத்திற்கு அதே டியூனுக்கு வார்த்தைகளை மாற்றி எழுதித் தந்தார். அந்தப் பாடல்தான்... “மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே” என்ற பாடலாகும்.

“ஏன் பிறந்தாய் மகனே... ஏன் பிறந்தாயோ...” பட்டிதொட்டி எங்கும் ஒலித்த பாடல் இது. இன்றும் கண்ணதாசனின் புகழ் பாடிக் கொண்டிருக்கின்ற பாடல்களிலே அதுவும் ஒன்று.

இந்தப் பாடல் கண்ணதாசனின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய பாடல் என்றால் நம்ப முடிகிறதா?ஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் தானே எழுத வேண்டும் என்ற ஆசையில், ‘கண்ணதாசன் பிலிம்ஸ்’ என்ற பெயரில் ஜனகா பிலிம்சுக்காக ‘மாலையிட்ட மங்கை’ படத்தை கவிஞர் தயாரித்தார். பாடல்கள் சூப்பர் ஹிட். ஆனாலும் பாடல் எழுத குறைவான வாய்ப்புகளே அவருக்கு வந்து கொண்டிருந்தன.

‘தெனாலிராமன்’ படத்தின்போது கவிஞருக்கும், சிவாஜிக்கும் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக, சிவாஜியின் படங்களுக்கு கவிஞர் பாடல் எழுதவில்லை.

‘கண்ணதாசன் எழுத வேண்டாம்’ என்று சிவாஜி சொல்லவில்லை. ஆனால் பிரச்சினையைப் பற்றி தெரிந்ததால், தயாரிப்பாளர்கள் ‘நமக்கு ஏன் வம்பு’ என்று அழைக்காமல் இருந்துவிட்டார்கள்.

அதே சமயம், கவிஞர் பாடல்களைவிட வசனம்தான் அதிகமாக எழுதிக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், மிகமிக பிஸியாக பாடல்கள் எழுதிக் கொண்டு இருந்தார்.

அவரிடம் ‘பாகப்பிரிவினை’ படத்திற்கான பாடல்களை எழுதும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அவரும் இரண்டு பாடல்களை எழுதித் தந்தார்.

மூன்றாவது பாடல் வேண்டும் என்று கேட்டபோது, “நான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களுக்கு பாடல் எழுத வேண்டும். நிச்சயம் அதற்கு இரண்டு வாரங்கள் ஆகிவிடும். நீங்கள் அவசரம் என்று கேட்கிறீர்கள். ஆகவே இந்தப் பாடலை கண்ணதாசனை வைத்து எழுதிக்கொள்ளுங்கள். நான் வேண்டுமானால் அவரிடம் பேசுகிறேன்” என்றார்.

சிவாஜியின் ஒப்புதல் இல்லாமல் கண்ணதாசனை வைத்து பாடல் எழுத முடியாது. மற்ற பாடலாசிரியர்களால் குறுகிய காலத்தில் பாடல் எழுத முடியாது. எனவே, சிவாஜியிடமே கேட்டு விடுவோம் என்று அவரிடம் சென்று முழு விவரத்தையும் சொல்லிக் கேட்டார்கள்.

“எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவன் ஒத்துக்கிட்டான்னா எழுதட்டும்” என்று சிவாஜி சொல்லிவிட்டார். “அவர் சரின்னு சொல்லிட்டாரு... கண்ணதாசன் சொல்லணுமே...” தயக்கத்துடன் வந்து கவிஞரை சந்திக்கிறார்கள்.

கவிஞர் சிறிது நேரம் யோசித்துவிட்டு, “எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை, எழுதுறேன்” என்று சொல்லி விட்டார். ‘பாகப்பிரிவினை’ படத்திற்கு கவிஞர் எழுதிய முதல் பாடல், “ஏன் பிறந்தாய் மகனே..”.

அடுத்த பாடலை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தை எழுதச் சொல்லி இருந்தார்கள். ஆனால் விதியின் கொடுமை... தவறாக செய்யப்பட்ட ஒரு அறுவைச் சிகிச்சையின் காரணமாக, பட்டுக்கோட்டையார் தனது 29-ஆவது வயதில் காலமானார்.

தன் சொந்த சகோதரனே இறந்து போனது போன்ற சோகம் கவிஞருக்கு.

“சின்ன வயது மகன் சிரித்த முகம் பெற்ற மகன் அன்னைக் குணம் படைத்த அழகு மகன் சென்றானே கன்னல் மொழி எங்கே கருணைவிழி தானெங்கே? மன்னர் மணிமுடியில் வாழ்ந்திருந்த செந்தமிழை(த்) தென்னவர் பொருளாக்கித் தீங்கவிதை தந்த மகன் கண்மூடித் தூங்குகிறான் கனவு நிலை காணுகிறான் தன்னுயிரைத் தருவதனால் தங்க மகன் பிழைப்பானோ?என்னுயிரைத் தருகின்றேன் எங்கே என் மாகவிஞன்?” என்று தன் சோகத்தைக் கவிதையாக்கினார்.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மட்டும் அன்று, “கண்ணதாசன் எழுதட்டும்” என்று சொல்லாமல் இருந்திருந்தால், தமிழ் சினிமாவிற்கும், சிவாஜிக்கும், கண்ணதாசனுக்கும் மிகப்பெரிய இழப்பாக இருந்திருக்கும்.

பிறகு திரையுலக நண்பர்கள் கவிஞரையும் சிவாஜியையும் தனியே சந்திக்க வைத்தார்கள். இருவரும் மனம்விட்டுப் பேசி சமாதானம் ஆனார்கள். அதன் பிறகு நடந்ததெல்லாம் சரித்திரம்!


- தினமணி நாளிதழில் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்னர் சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் வந்ததை மறுபடி எடுத்துக் போட்டார்கள்.  அதிலிருந்து 

============================================================================

அந்நிய மண்ணில் சிவந்த மண் - சிவாஜி கணேசன் 


காஞ்ச​னா. ​யாருக்கும் தெரியக் கூடாது என்று கைக் குட்டையா​ல் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண் டிருந்தார்.

"எதற்காக​ வ​ருத்தம்" என்று கேட்டேன்.

அவர் பதில் சொல்லவில்லை. பக்கத்திலிருந்த நன்னு, "காலையிவேருந்தே அவர் 'கலகல'ப்பாக இ​ல்லை" என்றான்​.

"காலையில் சென்னையிலிரு​ந்து அவருக்கு ஒரு கடிதம் ​வந்தது.  அதில் அப்பாவுக்கு உடல் நல​மில்லை என்று அவர் சகோதரி ​எழுதி இருந்தார்.  காஞ்சனாவுக்கு அப்பா என்றால்  உயிர், அவரது நினைவு ​வந்திருக்கும் " என்று மெதுவாக​க் ​காதைக் கடித்தா​ன் கோபு.

அதை ராஜேந்திரன் ஒப்புக்கொள்ளத் தயாரில்லை.

"முன் தினம் ஷூட்டிங் நடந்தபோது, ஒரு கல்பட்டு, அவர் கட்டை விரலில் காயம் பட்டது.  அதனால் அதிகம் வலிக்கிறது என்று என்னிடம் சொன்னார். அதுதான் காரணமாக இருக்கும்" என்றான் ராஜேந்திரன்.

எதற்கு சஸ்பென்ஸ்?  காஞ்சனாவையே கேட்டு விடலாம் என்று எண்ணி, "ஊரிலிருந்து ஏதாவது லெட்டர்...?" என்று இழுத்தேன்.

அவர் 'இல்லை' என்று தலையை அசைத்தார்.  "கால் வலியா?" என்றேன்.  அதற்கும் 'இல்லை' என்று தலையசைத்தார்.

"பின் எதற்காக வருத்தப்பட்டாய்?" என்று கேட்டவுடன் எங்கிருந்தோ வெட்கம் சேர்ந்த சிரிப்புடன் "ஒன்றுமில்லை" என்றார்.

நான் விடவில்லை.  காரணம் கேட்டு துளைத்தேன். 

"நான் ஓட்டலிலிருந்து புறப்படும்போது என் கோங்குரா சட்னி பாட்டிலை எடுத்துக்கொள்ள மறந்து விட்டேன்.  'அதைப் பிரிந்து விட்டோமே!  கோங்குரா இல்லாமல் மீதி நாட்கள் எப்படி சாப்பிடுவது? இந்த அயல் நாட்டு உணவு இறங்காதே' என்று நினைத்தேன்.  என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது" என்றார் காஞ்சனா.

"கஷ்ட காலம்.  அதற்காகவா அழுகிறீர்கள்?  அதை என் பையில் பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றான் கோபு.

காஞ்சனா முகத்தில் புன்சிரிப்பு தவழ்ந்தது.

=======================================================================

இந்த முன்னுரைகள் படிப்பது எதற்காக என்றால் அறியாத புத்தகமாயிருந்தால் ஒரு அறிமுகம் கிடைக்கும்.  யார் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்றும் தெரிந்து கொள்ளலாம்!


உயரப் பறத்தல் - வண்ணதாசன் சிறுகதைகள் தொகுதி
முன்னுரை

பாவை சந்திரன் ஒரு அருமையான மனிதர். அனுபவம் கூடிய பத்திரிக்கையாளர். நேரடிப் பழக்கம் இல்லை. அது அவசியமும் படாமல் ஒரு நெருக்கத்தை அவரிடம் உணர்ந்தேன். அவருடைய சிகையமைப்பு, முகம், தோலுக்குக் கீழ் ஒரு சோகம் படிந்திருப்பது போன்ற ஒரு சிரிப்பும் பார்வையும் எல்லாம் அப்படி. புதிய பார்வை இதழை அவர் நடத்தியவிதம், அவர் அதில் எழுதிய மிக அருமையான நாவல் 'நல்ல நிலம்' எல்லாம் என்னைப் போன்றவர்களுக்கு முக்கியமானது. அவருடைய கண்மணி வெளியீடுதான் 'உயரப் பறத்தல்'.

வெளிவரச் சற்று நீண்டதாமதமாயிற்று. வழக்கமாக அப்படி யெல்லாம் என்ன ஆயிற்று என்று கேட்பவனில்லை. அது என் சுபாவம் அல்ல. அந்த சுபாவத்தை மீறி கேட்டதில் அவருக்கு வருத்தம். கோபம் கூட. நானும் பதிலுக்குக் கொஞ்சமாவது கோபப்பட்டால்தானே நன்றாக இருக்கும். கதிர்வேலன் வந்து சமாதானம் செய்தார். உப்புப் புளிக்கு எல்லாம் சமரசம் செய்கிறவன் பாவை போன்ற ஒரு அருமையான ஆளுடன் சமரசம் செய்து கொள்ளக் கூடாதா என்ன? கொண்டதன் அடையாளம்தான் உயரப்பறத்தல் தொகுப்பு.

நான் மிகவும் உள்ளூரவும், வெளிப்படையாகவும் கொண் டாடுகிற மருதுவின் ஓவியத்துடன், அவருடைய சாயலாகப் படிந்துவிட்ட மருதுபாணி எழுத்துக்களுடன், ஒரு எளிய அழகிய முகப்பு அதற்கு. இப்போது பார்க்கும்போதும், அவருடைய 'வாளோர் ஆடும் அமலை'யின் சித்திர வீச்சுக்களுக்குச் சற்றும் பின்னகராத அழகுடன் அது திகழ்கிறது. மிஞ்சிப் போனால் மருது பதினைந்து நிமிடங்கள் எடுத்திருப்பார். அதை வரைந்து திருப்பது மருதுவின் தூரிகையால், நல்ல கலை அதைச் செய்யும். தர அந்தப் பதினைத்து நிமிடங்களை அகாலமாக்கிவிட முடிந் காலத்தை அகாலமாக்கும்.

இதன் முதல் பதிப்பிற்கு எழுதிய முன்னுரையே போது மானது. அதனுடைய பின்னிணைப்பாக, அப்போது சொல்ல முடியாததை இப்போது சொல்ல இந்த வரிகளை எழுத முயல்கிறேன். கொஞ்சம் வேடிக்கையாகக்கூட இருக்கிறது அப்போது சொல்ல வேண்டியதை அப்போதும், இப்போது சொல்ல வேண்டியதை இப்போதும் சொன்னால் போதாதா? எதற்கு அப்போது சொல்லாததை இப்போது?

எல்லாம் சொல்லுவதைவிட, எல்லாம் சொல்லாததுதானே கதை. எதற்கு எல்லாம் சொல்ல வேண்டும்? அன்றைக்கு அடிக்காத வெயிலும் அன்றைக்கு விழாத நிழலும் இன்றைக்கு என்ன செய்யப் போகின்றன. அதுவும் இந்தப் பதினோரு கதைகளையும் எழுதிய சென்னையை, சன்னலுக்கு வெளியே இருவாட்சிப் பூ பூக்க ஆரம்பித்திருக்கிற இந்தப் பெருமாள்புரம் சிதம்பர நகரின் மேஜையில் குனிந்து என்ன செய்துவிடமுடியும்.

எத்தனை கதைகளை, எத்தனை பத்திரிக்கைகளில் எழுதியிருக்கிறேன். ஓம் சக்தி, இதயம் பேசுகிறது குங்குமம், தாமரை, தழல், புதியபார்வை, ஆனந்த விகடன், கல்கி தீபாவளி மலர், இந்தியா டூடே, தினமணி தீபாவளி மலர் என்று. போதாது என சென்னை வானொலியில் ஒன்றிரண்டு. இத்தனை வாசல்களைச் சென்னையே திறந்து வைத்தது. வைக்க முடியும். உங்களுக்குச் சம்மதமெனில் காற்றாகவோ, வெளிச்சமாகவோ நுழைந்து வெளியேறிக் கொண்டே போகலாம். மாநகரம் யாரையும் சும்மா விடுவதில்லை. பேனாவை அது மூட அனுமதிப்பதில்லை. கதவைச் சாத்த வகையின்றி அது அழைப்புமணியை நாசூக்காக அடித்துக் கொண்டே இருக்கிறது. அந்தி மந்தாரை, கனகாம்பரம் என்று உங்கள் ஊரின் ஆதிப்பூக்களைத் தேடி நீங்கள் பெருமூச்சடை கையில், ஒரு ஆர்க்கிட் பூச்செண்டை அல்லது ஜெர்பெரா ஒற்றைப் பூவை உங்கள் கையில் கொடுத்து மேடையில் உட்கார்த்தி வைத்துவிடும், மாநகரம்.

எங்கு உட்கார்ந்தாலும், எழுத நினைப்பதைத்தானே எழுதுவோம். சென்னையில் இருந்தபடி அநேகமாக அ-சென்னைக் கதைகளையே எழுதினேன். கருப்புப் பசுவும், சைகைகள் மூலம் செய்திகளை நான் சென்னையில் இருப்பதால் மட்டுமே எழுத முடிந்தது என்பதில்லை. பெங்குவின் பறவையைப் பற்றிய ஒரு கவிதையை இடைகாலில் வைத்து எழுத முடியாதா என்ன?

மிக எளிய கதைகள் போல, மிக நுட்பமான கதைகளையும், மிக நுட்பமான கதைகள்போல மிக எளிய கதைகளை எழுதியிருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை, மனிதர்களும், வாழ்வுமே அப்படித்தானே ஒன்றென மயங்கும் இன்னொன்றாக இருக்கிறது. ஆயினும் ஈரம் கதை, 'மாறுதல்', 'சந்தோஷம்', 'ரதவிதி', 'கிணற்றுத் தண்ணீரும் ஆற்றுமீனும்' கதைகள் எல்லாம் எவ்வளவு எளிமையுமோ அவ்வளவு நுட்பமானவையும்தான். அப்பாவைக் கொன்றவனை, சைகைகள் மூலம் செய்திகளை, அழுக்குப் படுகிற இடத்தை. அழைக்கிறவர்களை என்னால் எழுத முடிந்ததற்காக நான் சற்று உயரப் பறக்கலாம்.

நான் இப்போது எல்லாம் அடிக்கடி உணர்வது போலவும், என் நண்பர்களிடம் சொல்வது போலவும், எல்லாப் பறத்தலும் பறத்தலற்றுவிடத்தானே. உயரப் பறக்கிற எல்லாப் பறவைகளும், ஒரு சிறு கணம் பறப்பதில்லை. மிதக்கிறது. நீங்களும் அதைப் பார்த்திருப்பீர்கள். இதுவரை பார்க்கவில்லையெனில் பார்ப்பீர்களாக! பறக்கவில்லையெனில் பறப்பீர்களாக!

கல்யாணி.சி

12.04.11

=============================================================================

கவிதைப் பக்கம்  :

பத்தாவது தடவையாக விழுந்தவனுக்கு 
முத்தமிட்டுச் சொன்னது பூமி 
ஒன்பதுமுறை எழுந்தவனல்லவா நீ    (தமிழன்பன்)


மௌனத்தை மொழிபெயர்த்து 
நாலே எழுத்துள்ள 
ஒரு மகாகாவியம் தீட்டினேன் 
ம. . . ர. . .ண . . . ம், 
எனது வாசகர்கள் 
வாசித்து - அல்ல 
சுவாசித்தே முடித்தவர்கள்     (சிற்பி)


வரங்களே 
சாபங்களானால் 
இங்கே 
தவங்கள் எதற்காக?             (அப்துல் ரகுமான்)



ராப்பகலாப் பாட்டெழுதி 
ராசகவி ஆனவனே! 
தமிழென்னும் கடலுக்குள் 
தரைவரைக்கும் போனவனே! 
அம்பிகா பதியிழந்து 
அமரா வதியுனது 
காதுக்குள் அழுதாளே 
கவியேதும் பாடலியே! 
கதைகதையாப் பாடினையே 
மனுஷக் காதலைநீ 
மரியாதை செய்யலியே!       (வைரமுத்து) கம்பனைப் பார்த்து)

=========================================================================================== 

முன்னர் ஒரு நாள் வந்தது.  சுவாரஸ்யமாய் இருக்கிறதே...     மறந்திருக்குமோ என்று மறுபடி தருகிறேன்!

வான் வெளியில் அற்புதங்கள் அளவிலடங்காதவை. லட்சக் கணக்கான நட்சத்திரக் கூட்டங்கள். சூரியன் கூட ஒரு நட்சத்திரம்தான். நம் பூமியின் அளவில் ஆயிரக் கணக்கான அளவில் உள் வாங்கிக் கொள்ளக் கூடிய அளவுக்கு சூரியன் பெரிய நட்சத்திரம். இந்த அகண்ட அண்டத்தில் நம் பால்வீதி போலவே கணக்கிலடங்கா பால்வீதிகள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். சொல்ல வரும் விஷயம் அது அல்ல. சூரியன் சுற்றி வர ஒரு வருடம், சந்திரன் சுற்றி வர ஒரு மாதமும் ஆகிறது. சரி சனி சுற்றி வர ஆகும் காலம் என்ன தெரியுமா? முப்பது வருடங்கள்.
அவர் அவ்வளவு மெதுவாக சுற்றி வர காரணம் என்ன? அவருக்கு ஒரு கால் கிடையாதாம். ஏன்? அது ஒரு சுவாரஸ்யமான கதை.
நவக்ரகங்களை வென்ற இராவணன் தன மகன் இந்த்ரஜித் பிறக்கும் சமயம் அவன் யாராலும் வெல்லப் படக் கூடாது என்றும் தோல்வியே ஏற்படக் கூடாது என்றும், இன்னும் சரியாக சொல்வதானால் மரணத்தை வெல்ல வேண்டும் என்று எல்லா கிரகங்களையும் பிடித்து பதினோராம் வீட்டில் அடைத்து விட்டானாம்!
செய்வதறியாமல் திகைத்த தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இந்த்ரஜித் பிறக்கும் சமயத்தில் சனி தன் இடது காலை நைசாக நாசத்தைக் கொடுக்கக் கூடிய பன்னிரண்டாம் வீட்டில் வைத்து விட்டானாம். பின்னர் ஜாதகம் கணித்த இராவணன் அதை அறிந்து சனியின் இடது காலை எடுக்க உத்தரவிட்டானாம்.
அதனால்தான் அவர் நொண்டி நொண்டி சுற்றி வர முப்பது வருடங்கள் ஆகின்றதாம்.
மெதுவாக சனியை வரும் படி செய்த இராவணன் நல்லவனா, கெட்டவனா?  21809

நண்பர் கேஜீக்கு,

உங்கள் கருத்து (comment) படித்தேன். நன்றி.
சிறு வயதில் முத்து என்ற சலவை தொழிலாளி துணிகளை வெளுத்து மடிப்புடன் கொண்டு வருவார். மொட மொடப்புடன், இஸ்திரி வாசனையுடன் அதை போட்டுக்கோள்ள என் பாட்டி விடமாட்டார். காரணம்அவை வெள்ளாவியில் யார் யார் வீட்டுத் துணிகளுடன் துவைக்கப்பட்டதோ, அதனால் அவை விழுப்பு என்று சொல்லி, கொம்பால் எடுத்து, தண்ணீர் கங்காளத்துள் முக்கி பிழிந்து உலர்த்தி விடுவார். மறுபடியும் இஸ்திரியாவது ஒண்ணாவது.அப்படியே சுருக்கங்களுடன் மாட்டிக்கொள்ளவேண்டியதுதான். ஹேர்கட்டிங் போனாலும் எல்லா ட்ரஸ்சையும் அவிழ்த்துப் போட்டுக் குளித்த பின்னேதான் வீட்டுக்குள் நுழைய முடியும். சுகாதாரமற்றவை விழுப்பு என்ற பெயரில் தவிர்க்கப்பட்டது. நாகரீகம் என்ற பெயரில் நாம் எதையும் தவிர்ப்பதில்லை. நோயும் நம்மை தவிர்ப்பதில்லை!
rangan

==================================================================================

பத்மினி  சொல்லும் சில ரகசியங்கள்...


==============================================================================================

ஆயுளை அழிக்கும் ஆறு வாள்கள்!

திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து, “மனிதனுக்கு ஆயுள் நூறு வருடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும், முழுமையான ஆயுள்வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே…. ஏன்?” என்று கேட்டார்.

அதற்கு விதுரர், “ஆறு கூரிய வாள்கள் தான் மனிதனின் ஆயுளை அழிக்கின்றன. அவை…. (1) அதிககர்வம், (2) அதிகம் பேசுதல், (3) தியான மனப்பான்மை, (4) கோபம், (5) சுயநலம், (6) நண்பர்களுக்கு துரோகம்” என்றார்.
விதுரர் கூறிய அந்த ஆறு வாள்கள் எப்படியிருக்கும்? அதைப் போக்க என்ன செய்ய வேண்டும்?

1. தான் கெட்டிக்காரன், தான் செல்வந்தன், தான் கொடையாளி, தான் நல்லவன், பிறர் கெட்டவர்கள் என்று நினைப்பதால் கர்வம் அதிகரிக்கிறது. கர்வம் கொண்டவனைக் கடவுள் சீக்கிரம் அழித்து விடுவார். ஆகவே, கர்வம் கொள்ளாமலிருக்க வேண்டுமானால், தன் விஷயத்தில் குற்றங்களைப் பார்க்க வேண்டும். பிறர் விஷயத்தில் குணங்களைப் பார்க்க வேண்டும்.

2. அதிகம் பேசுகிறவன் வீண் விஷயங்களைப் பற்றிப் பேசி, வீண் வம்பை விலைக்கு வாங்குவான். அதனால்தான் பகவான் கீதையில் கூறுகிறார்….. கடுமையில்லாததும், உண்மையானதும், பிரியமானதும், நன்மையைக் கருதியதுமான வார்த்தை எதுவோ, அது வாக்கினால் செய்யப்படும் தவம்.

3. எல்லாவற்றையும் நாம்தான் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசையின் காரணமாகத்தான் நமக்குத் தியாக மனப்பான்மை ஏற்படுவதில்லை, நாம் இந்த உலகில் பிறந்ததே நமக்காக அல்ல, பிறருக்கு உதவுவதற்காகத்தான் என்று உணர்ந்தால் தியாக மனப்பான்மை ஏற்படும்.

4. கோபம்தான் மனிதனுடைய முதல் எதிரி. கோபத்தை வென்றவன்தான் யோகி, அவன்தான் உலகில் சுகப்படுவான். கோபத்துக்கு வசப்பட்டவன், தர்மம் எது? அதர்மம் எது? என்ற விவேகத்தை இழந்து பாவங்கள் செய்கிறான். என்ன தீமைகள் ஏற்பட்டாலும், யார் நம்மைக் கோபித்துக் கொண்டாலும் அவற்றைச் சகித்துக் கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும்.

5. சுயநலம்தான் எல்லா தீமைகளுக்கும் காரணம். சுயநலம் பாராட்டுகிறவர்கள் தங்கள் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக எந்தப் பாவத்தையும் செய்ய அஞ்சமாட்டாக்ள். பிறர் இன்புறுவதைக் கண்டு நாம் இன்புற வேண்டும். பிறர் துன்புறுவதைக் கண்டு நாம் துன்புற வேண்டும். இப்படிச் செய்தால் சுயநலம் போய்விடும்.

6. உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது. அப்படியிருக்க, அவர்களுக்குத் துரோகம் செய்வதைப் போன்ற அநியாயம் உண்டா? பகவான் கீதையில் கூறியிருப்பதுபோல, நாம் எல்லோருடனும் வெறுப்பின்றியும், நட்பு மனப்பான்மையுடனும், கருணையுடனும் பழக வேண்டும்.

தமிழ்வேதா தளத்தில் படித்தது.

========================================================================================

1969 ல் வெளிவந்த துலாபாரம் ஏ வி எம் ராஜன், சாரதா முத்துராமன், மேஜர் நடித்த படம்.  தேவராஜன் இசையில் இனிமையான பாடல்கள் கொண்ட படம்.  'சங்கம் வளர்த்த தமிழ்' பாடலும், 'பூஞ்சிட்டு கன்னங்கள்' பாடலும் ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன்.  இன்று யேசுதாஸ் குரலில் 'காற்றினிலே பெரும் காற்றினிலே...'

காற்றினிலே பெரும் காற்றினிலே, 
ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும், 
காலம் எனும் கடலிலே சொர்கமும் நரகமும், 
அக்கரையோ இக்கரையோ?  

ஆண்டவனும் கோவிலில் 
தூங்கிவிடும் போது, 
யாரிடத்தில் கேள்வி கேட்பது, 
ஏழைகளின் ஆசையும் 
கோவில் மணி ஓசையும் 
வேறுபட்டால் என்ன செய்வது, 
தர்மமே மாறுபட்டால் என்ன செய்வது,  

ஆடுவது நாடகம் ஆளுக்கொரு பாத்திரம், 
இறைவனுக்கு வேஷமென்னவோ? 
ஆடவைத்து பாடுவான் 
மூடுதிரை போடுவான் 
மேடை அவன் மேடையல்லவோ 
வாழ்க்கையின் பாதை அவன் பாதையல்லவோ?

131 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். அனைவரும் எப்பொழுதும் நலமாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா.. வணக்கம். இனிய பிரார்த்தனைக்கு நன்றியுடன் இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  2. துலாபாரம் படம் வந்த போது பெண் தோழிகளோடு போய் விட்டு, எல்லோருமே கண் கலங்கியதால் பாதியில் வந்து விட்டோம். பூஞ்சிட்டுக் கன்னங்கள் அருமையான பாடல். அவள் பாசிட்டிவ் அவன் நெகட்டிவ். பாடல் முழுவதும் இப்படியே இருக்கும். அடுத்த ஜேசுதாஸ் பாட்டு என்னால் கேட்கவே முடியாது. ஸாரி ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயங்கர சோகப்படம்தான். ஆனால் பாடல் கேட்காமல் விட்டால் நஷ்டம், நமக்குதான் அம்மா.. என்ன பாட்டு.. என்ன உணர்வு..

      நீக்கு
  3. அதற்கு விதுரர், “ஆறு கூரிய வாள்கள் தான் மனிதனின் ஆயுளை அழிக்கின்றன. அவை…. (1) அதிககர்வம், (2) அதிகம் பேசுதல், (3) தியான மனப்பான்மை, (4) கோபம், (5) சுயநலம், (6) நண்பர்களுக்கு துரோகம்” என்றார்.
    விதுரர் கூறிய அந்த ஆறு வாள்கள் எப்படியிருக்கும்? அதைப் போக்க என்ன செய்ய வேண்டும்?'' அருமையான கேள்வி பதில்கள். விதுரரைப் போல ஒரு நீதிமானைப் பார்ப்பது கடினம். கண்ணனின் அத்யந்த நண்பர். போர் முடிந்ததும் கண்ணனைக் கோபிக்கிறார். இந்த யுத்தத்தை நீ தவிர்த்திருக்கலாமே என்று கேட்கிறார். அதற்குக் கண்ணன் தரும் பதில்கள் அற்புதமாக இருக்கும். ஏகாதசியன்று நல்ல விஷயத்தைப் படிப்பது அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா.  யதேச்சையாகத்தான் அமைகிறது   விதுர நீதி என்று ஒரு தனி பகுதியே இருக்கிறதே..  அதே போல யட்சனின் கேள்விகளுக்கு தர்மரின் பதில்கள்.  தர்மரின் கேள்விகளுக்கு பீஷ்மரின் பதில்கள்  இவை எல்லாம் மறுபடி மறுபடி படிக்க தூண்டுபவை..

      நீக்கு
    2. ஆமாம் பா. என்னிடம் இருக்கிறது. அப்பா வாங்கிக் கொடுத்தார்.

      நீக்கு
  4. பத்மினி அற்புத நடிகை. அற்புத நடனமணி. கடும் உழைப்புக்கு அஞ்சாதவர். சிவாஜிக்கு எதிரே நடிக்க எத்தனை தைரியம் வேண்டுமோ அது அவருக்கு இருந்தது. சிவாஜியும் பத்மினியும் திருமணம் செய்வார்கள் என்றே நாங்கள் எல்லாம் நம்பினோம்:) கதை மாறியது. அவர்கள் கெமிஸ்ட்டிரியை தி மோஹனாம்பாளில் ரசிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் பத்மினி சிவாஜிக்கு சீனியர் - திரையுலகில்.  சிவாஜி பிரமிப்புடன் அண்ணாந்து பார்த்த நடிகை.  இதை சிவாஜியே சொல்லி இருக்கிறார்.  பத்மினி சிவாஜி ரகசியக் காதல் இருந்ததோ என்னவோ..  அங்கே அமிதாப் ரேகா போல..  ஆனால் ரேகாவும் வினோத் மெஹ்ராவும் காதலித்திருக்கிறார்கள்.  விடுங்கள் இதெல்லாம் ஒரே குழப்பம்தான் எப்பவும்!

      நீக்கு
    2. அவர்கள் அனைவரும் உணர்ச்சி மேடைகளில் தள்ளப் படுகிறார்கள் மா. அதோட ரியாக்‌ஷன் தான் இதெல்லாம். பத்மினி சிவாஜி வெகுவாகப் பேசப்பட்ட ஜோடி.

      நீக்கு
    3. ​இவர் இப்படி இருந்துட்டு பின்னாட்களில் பிரபுவையும் குஷ்புவையும் பிரித்தார்.

      நீக்கு
    4. ஶ்ரீராம்... நீங்க எழுதியிருப்பது தவறு. உறவைப் பற்றி திரையுலகில் இருப்பவர்கள் அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் திருமணத்தை அனுமதிக்க மாட்டார்கள். சிவாஜியும் இன்னொரு திருமணம் செய்திருக்க மாட்டார். அது எப்படி பிரபுவின் திருமணத்திற்கு அனுமதி தருவார்?

      கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரும் இன்னொரு திருமணம் செய்தாலும், யாருக்கும் தெரியாது, குடும்பச் சொத்து வெளியில் போகவில்லை.

      நீக்கு
  5. கவிதைப் பக்கம் மிக அற்புதம். கம்பனைச் சாடி இருக்கும் வைரமுத்து. நிறைய அவதாரம் எடுத்திருக்கிறார்:)))))யார் கேட்பது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா திரையிசைப் பாடல்களில் அவரது வரிகளை நான் ரசிப்பேன்.

      நீக்கு
    2. ஆமாம். மிக மிக வியக்க வைக்கும் எழுத்துக் குரியவர்.

      நீக்கு
  6. ஆறு வித்தியாசங்களில் ஐயோ ஐயா முதலில். பிச்சைக்காரர் தாடி இரண்டாவது:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடைகளும் எடுத்து வைத்திருந்தேன்மா..  தொலைந்து விட்டது!

      நீக்கு
  7. அம்மா கையில் பை இல்லை மூன்றாவது. பிச்சைக்காரர் முதலில் நிறைய நீலம், அடுத்ததில் கொஞ்ச நீலம்:)

    பதிலளிநீக்கு
  8. பதிவு நீளம் . மேலேயும் கீழேயும் பார்த்துப் பதில் எழுதுவது கொஞ்சம் சிரமம் தான் :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படிச் சொல்லிடப் போறீங்களேன்னுதான் சேர்ந்திருந்த இன்னும் ரெண்டு ஐட்டத்தை எடுத்து விட்டேன்!

      நீக்கு
    2. அட ராமா. உங்கள் எழுத்தை ரசிப்பவர்களுக்காக எழுதுங்கள் மா.

      நீக்கு
  9. பட்டுக்கோட்டையார் 29 வயசுக்குள் எத்தனை சொல்லி விட்டுப் போய் விட்டார்.:(((((((((((((((((((( கண்ணதாசன் அவருக்கான இரங்கல் பாடலில் நம்மைக் கண்கலங்க வைக்கிறார்.

    பதிலளிநீக்கு
  10. நிறைய பகுதிகள். இன்டெரெஸ்டிங். இன்று படித்து கருத்திடுவேன்

    மருத்துவமனை அனுபவங்கள்..அடப்பாவிகளா கொள்ளை அடிக்க அளவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை.  நேற்று உங்களைக் காணோம்...

      நீக்கு
  11. ஆஸ்பத்திரி அனுபவங்கள் கலங்க வைக்கும். அதுவும் மியாட்டில் அம்மாவுடன் இருந்த போது பட்ட பாடு நினைக்கவே கலக்கம். பணம் தண்ணீராக செலவழிந்தது அங்கே தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு நான் சொல்லி இருப்பது அவர்கள் பில்லில் பொய்யாய் சேர்த்த டெஸ்டஸ்...

      நீக்கு
    2. அதுவும் தான். தேவைக்கு மேல் இருக்க வைப்பது, ரூம் வேண்டுமானால் டிஸ்சார்ஜ் இதைத்தான் நாங்கள் அனுபவித்தோம்.

      நீக்கு
  12. ஆறு கூரிய வாள்களில் - (3) ’தியான’ மனப்பான்மை என்கிறது மேலே!
    இந்த இடத்தில் வாசிப்பதை நிறுத்திவிட்டு ஓடிவிடுபவர்கள், முதலில் இந்த தியானம் செய்யறதை நிறுத்திரணும், அப்பத்தான் ஆயுள் கூடும் என்று முடிவெடுத்துவிடப்போகிறார்கள்!

    பதிலளிநீக்கு
  13. இரண்டாவது வரியில் ’ராசகவி’ என்றெழுதி சுத்தத் தமிழ் பக்தியைக் காண்பித்தவன்,
    கடைசி வரிக்கு முந்தைய வரியில் ’மனுஷ’ என்றெழுதி மறந்துவிட்டானே.. மடையன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போலி மனிதர்கள்தானே..  போலி கொள்கைகள்..

      நீக்கு
  14. மறந்து விட்டானே மடையன்:)))))) பராசக்தி வசனம் போல இருக்கிறது.!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசுகவி என்ற சொல்லை சேர்க்க நினைத்து அதற்கு ரைமிங்காக இதைச் சேர்த்து அதை மறந்து விட்டாரோ என்னவோ..

      நீக்கு
  15. உயரப்பறத்தல் புத்தக அட்டை அழகு. மருது ஓவியம்!
    முன்னுரையை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்:

    ...இதுவரை பார்க்கவில்லையெனில் பார்ப்பீர்களாக! பறக்கவில்லையெனில் பறப்பீர்களாக!//

    Wah re .. Wah...!

    பதிலளிநீக்கு
  16. தியாக மனப்பான்மை . மிக அரிது. தியாகம் என்ற பெயரில் விட்டுக் கொடுப்பவர்கள் ஏமாறுவதே வழக்கம். அப்படி இருந்தவர்களுள் என் தந்தையும் ஒருவர். அவசியம் இல்லையே என்று வாதாடி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாதாடிப் பயனில்லை அங்கே!

      நீக்கு
    2. உண்மைதான். பிறவித் தியாகி இறுதி வரை தியாகிதான்.

      நீக்கு
    3. தியாகத்துக்கு ஏமாளித்தனத்துக்கும் மெல்லிய கோடுதான்  வித்தியாசம்.  

      நீக்கு
    4. உண்மை. என் தந்தையை அப்படித்தான் நினைப்பேன். இப்படி ஏமாறுகிறாரெ என்று. அவருக்குக் கவலையே இல்லை. போனால் போகிறான் விடு என்பார்.

      நீக்கு
  17. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா . .வணக்கம். இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  18. சமகால இலக்கிய எழுத்தாளர்களில் வண்ணதாசன் குறிப்பிடத்தக்கவர். அவருடைய ‘சிதம்பர ரகசியம்’ சிறுகதை ஞாபகத்தில் வருகிறது. விகடனில் வாசித்தேனோ?
    ஜாக்ரதை: இதே தலைப்பில் மற்றவர்களும் எழுதியிருக்கிறார்கள்..கதை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேடிப்பார்க்கிறேன், படித்து விடுகிறேன்.

      நீக்கு
    2. நானும் எழுதி இருக்கேன், சிதம்பரம் பத்தி, "சிதம்பர ரகசியம்" என்னும் பெயரிலேயே!

      நீக்கு
  19. ''ஹேர்கட்டிங் போனாலும் எல்லா ட்ரஸ்சையும் அவிழ்த்துப் போட்டுக் குளித்த பின்னேதான் வீட்டுக்குள் நுழைய முடியும். சுகாதாரமற்றவை விழுப்பு என்ற பெயரில் தவிர்க்கப்பட்டது. நாகரீகம் என்ற பெயரில் நாம் எதையும் தவிர்ப்பதில்லை. நோயும் நம்மை தவிர்ப்பதில்லை!
    rangan'' பூரணமாக ஆதரிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா நோய்க்கும் நம்மைப் பிடித்திருக்கிறது என்பதில்தான் இருக்கிறது நமது வெற்றி!

      நீக்கு
    2. முன்னோர் எல்லாம் மூடர்கள் அல்ல நமக்குண்டு பண்பாடு அடியம்மாடி நமக்குண்டு பண்பாடு

      பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது!

      நீக்கு
    3. இதை விட இன்னும் அதிகமாக எங்க வீட்டில் (அப்பா, பெரியப்பா, தாத்தா ஆகியோரின் வீடுகள்) பள்ளிக்கூடம் போயிட்டு வந்ததுமே நேரே குளியலறைக்குப் போய்ப் போட்டுக் கொண்டிருக்கும் உடையை அவிழ்த்து அங்கே ஒரு வாளியில் தண்ணீர் வைச்சிருப்பார்கள் அதில் நனைச்சுப் பின்னர் வெளியே எடுத்துப் போட்டு வாளியைக் கவிழ்க்கணும். இன்னொரு வாளியில் இருக்கும் நீரால் உடலைச் சுத்தம் செய்து கொண்டு கொடியில் போட்டிருக்கும் மடியான உடையை எடுத்து அணிந்து கொண்டு பின்னரே வீட்டுக்குள் எல்லா இடங்களுக்கும் போகலாம். குடிப்பதோ, சாப்பிடுவதோ எல்லாமும் இதுக்குப் பின்னரே. பள்ளிக்கூடத் தீட்டு என்பார்கள் எங்க வீட்டில்.

      நீக்கு
    4. ஆஹா!!!!!!! பாட்டிக்கு இந்த விஷயத்தில் பற்று அதிகம். என் பெண் தன்னுடைய இரண்டாவது வயதில் என் பாட்டியைப் பார்த்ததும் ஓடிப் போய்க்கட்டிக் கொண்டு விட்டாள். எனக்குத்தான் பதற்றம். பாட்டி ஒன்றும் சொல்லவில்லை:))))

      நீக்கு
  20. வண்ணதாசனின் எழுத்து ஆத்ம பூர்வமானது. சுகாவின் எழுத்துகளில் வண்ணதாசன் ஐயாவைக் கொஞ்சம் புரிந்து கொள்ள முடியும். திருனெல்வேலியின் மூச்சுக் காற்றுகள் இவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் சுகா எழுத்துகள் பிடிக்கும். யாரோட பிள்ளை !

      நீக்கு
    2. அதானே!!!!!! தந்தை அனல் ,புயல் ,காற்று என்று வருவார். மகன் தென்றலோ தென்றல்:)))))

      நீக்கு
  21. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  22. ஆஸ்பத்திரி அனுபவங்கள் திகில் ஊட்டுகிறது.
    எப்படி இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறார்கள் , ஏமாற்றுகிறார்கள் என்று கேள்வி பட்ட வுடன் வருத்தமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலானோர் செக் செய்து பார்ப்பதில்லை. அவர்கள் சொல்லும் தொகையை அப்படியே கட்டி விட்டு வந்து விடுகிறோம்.

      நீக்கு
  23. வணக்கம் சகோதரரே

    இன்றைய வெள்ளி சிதறல்கள் அனைத்தும் அருமை. பதிவில் நிறைய படிக்க வேண்டியது உள்ளது. முதல் பகுதி ஆஸ்பத்திரியில் நடந்த பிரச்சனைகள் சிரமங்கள்தாம். எப்படித்தான் சமாளித்தீர்களோ? அந்த நேரத்தில் உங்களுக்கும், உங்கள் வீட்டில் மற்றவர்களுக்கும் ஆஸ்பத்திரி கலவரங்கள் எவ்வளவு மன வேதனைகளை தந்திருக்கும் என்பதை உணர முடிகிறது. வீட்டில் நிறைமாத கர்ப்பிணி மருமகள், ஆஸ்பத்திரியில் மாமியார், என பல கவலைகள் உங்களுக்கு. நல்லவேளையாக அனைத்தையும் இறைவன் நல்லபடியாக நடத்தி வைத்தான். இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

    எனக்கு மகள் பிறந்த போது (பிறந்த வீட்டில்) இந்த மாதிரியான ஒரு இக்கட்டில் நாங்களும் இருந்தோம். அதுதான் நினைவுக்கு வருகிறது. நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த இக்கட்டு அனுபவங்களை நாம்  எல்லோருமே சந்தித்திருப்போம்.  நேரமும் சூழலும் மாறுபட்டாலும் அவை அளவில் ஒன்றாகத்தான் இருக்கும்!

      நீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    ஆறு வித்தியாசங்கள் முன்பெல்லாம் சுவாரஸ்யமாக இருக்கும். வீட்டில் அதற்குத்தான் போட்டி அதிகம். இப்போதும் சுவாரஸ்யமாக இருந்தது.

    1. பிச்சைக்காரன் உடையின் கலர்.

    2. பிச்சைக்காரரின் தாடி.

    3. பிச்சைக்காரரின் நிழல்.

    4. அந்தப் பெண்மணியின் கைப்பை.

    5. பெரியவரின் ஜிப்பா காலர்.

    6.ஐயோ, ஐயா என்ற மாறுபட்ட எழுத்துக்கள்.

    சரியா? பிறகு எல்லாவற்றையும் படித்து விட்டு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட, வேகமாக கண்டு பிடித்து விட்டீர்களே...

      நீக்கு
  25. இன்றைய மனசாட்சியத்தில் உயர்வு நவிற்சி அணி
    கர்ணபரம்பரை கதைகளில் மிகைபடுத்தல்
    மற்றும் இலக்கியங்களில் இடை செருகல்கள் பற்றி எல்லாம் அருமையாக சொல்லி இருக்கிறார் சார்.

    உயர்வு நவிற்சி அணி பற்றி சிறு வயதில் படித்து இருக்கிறோம் அல்லவா மிகை படுத்தி கூறல் அது ஆறு வகைபடும் என்று எல்லாம் படித்து இருக்கிறோம்.
    செவி வழியாக கதைகள் கேட்டுவந்த கர்ணபரம்பரை கதைகளில்
    இந்த மிகைபடுத்தல் அதிகம் இருக்கும்.

    பெருமாளையே ஏமாற்றி விட்டாராம் காளமேகம் கதை நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  26. //இந்த ஆறு வித்தியாசங்கள் என்பது மூளைக்கு வேலை மட்டும் இல்லை, நகைச்சுவையாகவும் எடுத்துக் கொள்ளலாம். அதேசமயம் சமயங்களில் காலத்தின் கண்ணாடியாகவும் அமைந்துவிடும். //

    உண்மை. ஆறு வித்தியாசங்கள் பார்ப்பது பிடிக்கும். இப்போது முகநூலில் மூன்று வித்தியாசம், 15 வித்தியாசம் எல்லாம் அழகாய்வருகிறது. அதை பார்ப்பேன். இதிலும் ஆறு வித்தியாசங்கல் கண்டு பிடித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ வரும் சுடோக்கு போல அப்போது பொழுது போக்கு!

      நீக்கு
  27. எஸ்ரா பகிர்வு அருமை. அருமையான விஷயத்தை படித்து விட்டு அதை பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாமல் இருப்பது கொடுமைதான். பணத்திற்காக வாழ்க்கையை தொலைத்து விட்டதுதான் மிச்சம். பல மொழிகள் கற்று, பல புத்தகம் படித்து , கடிதம் எழுதி வைத்ததுகொடுமைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசனையாக சொல்கிறார் இல்லை..  அந்தப் புத்தகத்தை எடுத்துக் படிக்கும் ஆவல் வருகிறது!

      நீக்கு
  28. புரவி, புறாக்களை தகவல் அனுப்பும் சாதனங்களாக பயன்படுத்தி கொண்டதாக நீங்கள் சொல்லியிருப்பதை வாசித்த பொழுது அன்னத்தை தூது பறவையாக பயன்படுத்திக் கொண்ட நளன் -- தமயந்தி தம்பதிகள் எனக்கு நினைவுக்கு வந்தார்கள்!...
    'அன்னம் விடு தூது'. என்றே எண்பதுகளில் சிவகங்கையிலிருந்து ஒரு பத்திரிகை வெளிவந்தது. கவிஞர் சிற்பியை ஆசிரியராகவும் கவிஞர் மீராவை பொறுப்பாசிரியராகவும் கொண்டு வெளிவந்த இதழ் அது. நானும் அதில் எழுதி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்னம் விடு தூது நினைவுக்கு வருகிறது!   நளன் தமயந்தி பற்றி சமீபத்தில் கூட எங்கோ ஏதோ பாகிர்ந்திருந்தேனே..  ஓ நினைவு வந்து விட்டது.  பேஸ்புக்கில்!  

      நீக்கு
  29. பதில்கள்
    1. வாங்க செல்வாண்ணா  வணக்கம்.  நேற்று இதே போல வரவேற்பு எழுதி வைத்துக் கொண்டு உங்களுக்காக காத்திருந்தேன்.  உங்கள் தளத்தில் நீங்கள் கமெண்ட்ஸ் மாடரேஷன் செய்ததும் சாதாரணமாக இங்கே வருவீர்கள்.  நேற்று அப்படி முடித்ததும் அடுத்தது இங்கே என்று பார்த்திருந்தேன்!  வரவில்லை என்பதை அப்புறம்தான் கவனித்தேன்.

      நீக்கு
  30. தங்களது மாமியார் விரைவில்
    நலம் பெற வேண்டும்

    பதிலளிநீக்கு
  31. ஆண்டவனும் கோவிலில் தூங்கிவிடும்போது யாரிடத்தில்
    கேள்வி கேட்பது?..

    நியாயமான கேள்வி...

    அவன் தான் உறங்குவதில்லையே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பின்ன ஏன் என் கஷ்டத்தை கவனிக்கலைன்னு கேக்கறார் கவிஞர்.

      நீக்கு
  32. உயரப் பறத்தல் - வண்ணதாசன் சிறுகதைகள் தொகுதி பற்றி கல்யாணி.சி
    சொன்னது அருமை.
    அட்டைப்பட மருது ஓவியம் அருமை.

    கவிதைப்பக்கம் நன்றாக இருக்கிறது.
    மற்ற எல்லா பகிர்வுகளும் படித்தேன் , பத்மினி பேசியதை கேட்டேன்
    கடைசி சோக பாடல் பிடிக்கும் கேட்டேன், அந்த படத்தில் இந்த பாட்டை பாடுபவர் நிறைய படங்களில் குணசித்திர வேடங்களில் நடிப்பார், அவர் பேர் வீராசாமி என்று நினைக்க்றேன்.

    தீபாவளிக்கு ரயில் பயணம் போகும் போது புத்தகம் வாங்க போவது போல உங்கள் பதிவை படித்து கொண்டு போகலாம் அவ்வளவு விஷயம் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // தீபாவளிக்கு ரயில் பயணம் போகும் போது புத்தகம் வாங்க போவது போல உங்கள் பதிவை படித்து கொண்டு போகலாம் அவ்வளவு விஷயம் இருக்கிறது. //

      ஆஹா... தன்யனானேன். நன்றி கோமதி அக்கா.

      நீக்கு
  33. குமுதத்தைப் பார்த்து பல விஷயங்களில் மற்ற பத்திரிகைகள் ஏன் காப்பி அடித்தார்கள் என்று தெரியவில்லை. குமுதத்தில் தலையங்கப் பகுதியை கடைசி பக்கத்தில் பிரசுரித்தால் வேறு சில பத்திரிகைகளும் அந்தக்காலத்தில் அதே மாதிரி.

    அட! குமுதத்தில் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடி என்று போட்டால்
    நீ ஏழு வித்தியாசங்களைக் கண்டுபிடி என்று போடக்கூடாதா என்ன என்று கூட என்க்குத் தோன்றும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட ஆமாம்..  சரியாகத்தான் தோன்றி இருக்கிறது உங்களுக்கு!  முழுக்க நனைஞ்சாச்சு..  முக்காடு எதற்கு என்று அவர்கள் நினைத்திருக்கலாம்!

      நீக்கு
  34. ஸ்ரீராம்! கதைக்காதே என்றால் பேசாதே அல்லது வளவளவென்று அறுக்காதே, உண்மைக்குப் புறம்பாகப் பேசாதே என்று நெகட்டிவ்வாகத் தான் அந்த நாட்களில் அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தோம்.

    இப்பொழுது பார்த்தால் இந்த வார்த்தை ஒருவர் உரையாற்றுவதை குறிப்புடுகிற மாதிரி அர்த்தப்படுவதாக ஆகிவிட்டது.

    அதுவும் நான் மிகவும் மரியாதை கொண்டுள்ள எஸ்.ரா.-வை கதைக்கிறார் என்று நீங்கள் போட்டிருப்பதைப் பார்த்ததும் வருத்தமாகப் போய்விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதைப்பது என்றால் பேசுவது என்றும் பொருள் உண்டு ஜீவி ஸார்..  இலங்கை த்தமிழ்.  மட்டுமில்லாமல் கதையைப் பற்றி அவர் எடுத்துச் சொல்வதற்கும் கதைக்கிறார் என்று சொல்லலாம்.  இதில் feel செய்ய ஒன்றுமில்லை என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. எதுக்கும் AI - கிட்டே கேட்டுப் பார்க்கிறீங்களா?..

      நீக்கு
    4. உங்கள் ஆசைப்படியே கேட்டேன். வந்த பதில்

      கதைப்பது என்பது பொதுவாக பேசுவது (Talking / Conversing) அல்லது உரையாடுவதைக் குறிக்கும் ஒரு தமிழ்ச் சொல்லாகும். குறிப்பாக இலங்கைத் தமிழிலும் (Jaffna Tamil), தமிழ்நாட்டின் சில தென் மாவட்டங்களிலும் இச்சொல் அன்றாடப் பேச்சில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

      இச்சொல்லின் முக்கிய அர்த்தங்கள் மற்றும் பயன்பாடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

      • உரையாடுதல் (To Converse): ஒருவருடன் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுவது. (உதாரணம்: "நான் அவரோடு கதைத்துக் கொண்டு இருக்கிறேன்.")

      • விவாதித்தல் (To Discuss): ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் பற்றி அலசுவது. (உதாரணம்: "நாங்கள் அந்தப் பிரச்சினையைப் பற்றிக் கதைக்க வேண்டும்.")

      • கதை கூறுவது (Storytelling): சில சூழல்களில், குழந்தைகளுக்குக் கதை சொல்வதையும் 'கதைப்பது' எனக் குறிப்பிடுவர்.

      சுருக்கமாகச் சொன்னால், ஆங்கிலத்தில் "To Talk" அல்லது "To Chat" என்று சொல்வதையே தூய தமிழில் அல்லது வட்டார வழக்கில் 'கதைப்பது' என்கிறோம்.

      நீக்கு
  35. நேற்று மருத்துவரிடம் சென்றிருந்தேன்...
    ஒரு கண்ணில் அவ்வப்போது பிரச்னை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ..  அப்படியா..  எனது பின்னூட்டம் உங்களதளத்தில் மட்டறுக்கப்பட்டவுடன் அடுத்து இங்கேதான் விசிட் என்று எதிர்பார்த்தேன்.  அதுதானே வழக்கம்!

      நீக்கு
  36. பின்ன ஏன் என் கஷ்டத்தை கவனிக்கலைன்னு கேக்கறார் கவிஞர்...

    அது தான் கர்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏமி ராமா  ஈலாகு கஷ்டமுலோ நீ மஹிமோ நா ப்ராரப்தமோ...

      நீக்கு
  37. நடிகர்கள் கட்டுரையோ அல்லது அவர்களது சுயசரிதையையோ தொடராக எழுதுவதாக பத்திரிகைககளில் பார்க்கும் பொழுது உங்களுக்கு என்ன தோன்றும் ஸ்ரீராம்? (நீங்கள் அவ்வளவு அப்பாவி அல்ல என்ற நம்பிக்கையில்) :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ சுவாரஸ்யமாக படிக்கக் கிடைக்கிறதே என்று தோன்றும் ஜீவி ஸார்.

      நீக்கு
  38. கவியரசரின் கண்களைப் பாருங்கள். வசமாக மாட்டிக் கொண்ட உணர்வு.
    சிவாஜியோ?... அவருக்கு பழக்கப்பட்ட போஸ் இது. பெரும்பாலும் அந்த கைகள் வளைதலுக்குள் (பத்மினி, சரோஜா தேவி, கே.ஆர்.விஜயா) போன்று அவர் நெருங்கி நடிக்கும் நடிகைகள் இருப்பார்கள். இந்த மாதிரி காட்சிகளில் ஆரூர்தாஸ் வசனமென்றால் அட்டகாசமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த இருவராலும் எவ்வளவு இனிமையான பொழுதுபோக்குச் சுவைகளை பெற்றிருக்கிறோம்...

      நீக்கு
  39. /// மேடை அவன் மேடையல்லவோ
    வாழ்க்கையின் பாதை
    அவன் பாதையல்லவோ?..///

    இதுதான் வாழ்க்கை
    இதுதான் பயணம்!...

    பதிலளிநீக்கு
  40. வண்ணதாசன் -- அசோக் நகர் சந்தியா பதிப்பகத்தின் ஆஸ்தான எழுத்தாளர்!
    'ஊஞ்சல் உறவு' என்னும் என் முதல் சிறுகதைத் தொகுப்பை அவருக்கு அனுப்பி வைத்திருந்தேன். தென்னை மர கீற்றுகளிடையே எட்டிப் பார்க்கும் சூரியன், குதித்தோடும் அணில்கள், குடிசை உச்சியில் சேவல், கவிழ்த்து வைத்திருக்கும் கோழிக் கூடு என்று ஒரு இன்லேண்ட் லெட்டரில் கோட்டோவியம் போலப் படங்கள் போட்டு வாழ்த்துச் செய்தியுடன் அனுப்பியிருந்தார். எதற்காக அந்தப் படங்கள் என்றே அந்த நேரத்தில் புரிபடவில்லை.

    இது தான் கவிஞர்களின் மன ஊர்வலம். அந்த நேரத்தில் கல்யாண்ஜியாக ஆழ்மனம் வசப்பட்டிருக்கலாம். எந்த நேரத்தில் எந்த உணர்வுகளோடு கவிஞர்கள் இருப்பார்களோ, அதுவாகவே அந்த நேரத்தில் அவர்கள் ஆகிவிடுவார்கள் என்று சொல்வார்கள்.

    வண்ணதாசனின் தந்தையார் தோழர் தி.க.சி.யுடன் எனக்குப் பழக்கம் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே சமயம் மற்றவர்களை பாராட்டும் மனம் பெரிய மனம். அதையும் சொல்ல வேண்டும்.

      நீக்கு
  41. காளமேகம... பெயரைப் பார்த்தாலே சைவம்..... அது எப்படி? வைணவ திவ்யதேசமான திருமோகூர் (மதுரை) பெருமாள் காளமேகம். காளமேகமன்றி மற்றொன்றிலம் கதியே என்பது நம்மாழ்வார் வாக்கு

    பதிலளிநீக்கு
  42. காற்றினிலே பெரும் காற்றினிலே.... னக்கு மிகவும் பிடித்த பாடல்... துலாபாரம் பதின்ம அல்லது இருபது வயதுகளில் தூர்தர்ஷனில்்பார்த்து கண்ணில் எனக்குக் கண்ணீர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்ணில் என்ன கார்காலம் கன்னங்களில் நீர்க்கோலம்

      நீக்கு
  43. உங்கள் மருத்துவமனை அனுபவங்கள் ரொம்பவே பயமாகவும், வருத்தமாகவும் இருக்கு. ஆனால் இதை விடவும் மோசமாகவெல்லாம் நடந்து பார்த்திருக்கேன். முகநூல் மூலம் பலர் எழுதுவதையும் சொல்லுவதையும் பார்த்துண்டு இருக்கேன். எனக்கும் ஆஸ்பத்திரி அனுபவங்கள் உண்டு என்றாலும் இதைப் பார்க்கையில் என் அனுபவங்கள் பரவாயில்லை ரகம். இப்போ 2023 இல் இருந்து 25 வரை மாமா போவதும், வருவதுமாக இருந்தப்போ ஆஸ்பத்திரியின் ஊழியர்களை விடவும் மாமாவுக்கு நாங்கள் நியமித்திருந்த நர்ஸிங் அசிஸ்டன்டுகளின் படுத்தல் தான் அதிகம். அதோடு கூடவே வீட்டில் உள்ளவங்க படுத்தலும் இருந்தது. எல்லாவற்றையும் சமாளிச்சு 25 ஆம் வருஷம் பிறந்ததிலிருந்து மாமா தெம்பாகத் தனியா நடமாடிக் கொண்டு தன் வேலைகளைத் தானே செய்து கொள்ளுவதில் சந்தோஷம் கொண்ட நேரம் பார்த்து மே மாசம் சர்க்கரை அதிகம் ஆனதுக்காகக் கூட்டிப் போனதில் என்னென்னவோ வைத்தியங்கள் செய்து நாங்களே டிஸ்சார்ஜ் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தும் நன்றாகவே பேசிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். கதீடர் போட்டதால் நடக்கும்போது துணை வேண்டும். வழக்கம்போல் நர்சிங் அசிஸ்டன்டும் நானும் கிட்டேயே இருந்தோம். எல்லாத்தையும் மீறித் தான் நல்ல நினைவோடு பேசிக்கொண்டிருந்தவருக்கு இறைவன் தூங்கும்போதே அழைப்புவிடுத்துவிட்டான். :( நினைச்சு நினைச்சு மருகுவதைத் தவிர வேறே ஏதும் செய்யமுடியலை. :( விடுங்க. திரும்பத் திரும்ப சொல்லக் கூடாதுனு பார்க்கிறேன். மன்னிக்கவும் :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால் என்ன புரிகிறது அக்கா.  மருத்துவமனை என்பது வியாபார ஸ்தலமாகிவிட்டபின் என்ன செய்ய முடியும்!

      நீக்கு
    2. அன்பின் கீதா, இந்த்ஹ நினைவுகளை எல்லாம் மறக்க முடியாது. நண்பர்களுடன் தானே சொல்கிறீர்கள்...மனசுக்கு அமைதி கிடைக்கட்டும்.

      நீக்கு
    3. கீசா மேடம்... பிறரிடம் நம் வருத்தங்களைப் பகிரும்போது மனதில் பாரம் குறையும். திரும்பத் திரும்ப எழுதுவதால் படிக்கும்போது அலுக்காது.

      நீக்கு
  44. தொலைக்காட்சியில் துலாபாரம் படம் போட்டிருந்தாங்கனு நினைக்கிறேன். ஆனால் நான் பார்த்தது இல்லை. இவ்வளவு சோகம் பிழியப் பிழிய இருப்பது எல்லாம் திரைப்படங்களில் பார்த்தால் மனது ரொம்பவே நொந்து போயிடும். ஆகவே நான் பார்த்ததே இல்லை. :(

    புறா விடு தூது பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கேன். சிலது நேரிலும் பார்த்திருக்கேன். போட்டி ஒண்ணு நடத்துவாங்க முன்னெல்லாம் புறா வளர்ப்பவர்கள்னு நினைவு. அதில் இப்படிப் புறாக்களைப் பறக்க விடுவார்கள்னு கேள்வி. ஏதோ ஒரு ஹிந்தி சினிமாவில் காதலன்/காதலி டூயட் பாட்டில் காதலி முதலில் புறாவைப் பறக்க விட்டு, "கபூத்தர் ஜா ஜா!" எனப் பாடுவாள். அப்போல்லாம் ஓடிடி, பிரைம் எல்லாம் இல்லாத காலம். சினிமாத் தியேட்டர்களில் வடநாட்டில் புறாக்களைக் கொண்டு வந்து வைத்துக் கொண்டு இந்தப்பாட்டு வரும் சமயம் அரங்கிற்கு உள்ளே பறக்க விடுவார்கள். எனக்கெல்லாம் இது என்ன பைத்தியம்னு தோணியது. :)

    அப்புறம் இந்த ராவணனுக்குப் பத்துத் தலை என்பது பத்தி நான் விபரமாக என்னோட "கதை கதையாம் காரணமாம், ராமாயண்ம்" தொடரில் எழுதி இருக்கேன். சுட்டி தேடிக் கிடைச்சால் போடறேன்.

    காளமேகத்தின் சுவாரசியமான இந்தப் பாடல் கேள்விப் பட்டிருக்கேன். அப்போவே நினைச்சுப்பேன் திருமோகூரில் காளமேகப் பெருமாளாச்சேனு. நெல்லையும் சொல்லி இருக்கார். தமிழில் சிலேடைகளை சந்த வசந்தம் குழுமத்தில் முன்னெல்லாம் என் நண்பர் சிவசிவா என்னும் நாயன்மார் என்னும் ஐடியில் எழுதும் நண்பர் பகிர்வார். ஆர்வத்துடன் கலந்து கொண்டிருக்கேன். இப்போல்லாம் சந்த வசந்தத்தில் பங்கேற்பதே இல்லை. குழுமத்தில் இருக்கேன். அதுவே பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்லும் ஹிந்திப்படம் மைனே பியர் கியா.  சல்மான், பாக்யஸ்ரீ .  ராம்லக்ஷ்மன் இசையில் SPB  பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கும்.

      துலாபாரம் நான் தொலைக்காட்சியில்தான் பார்த்தேன்.  மிக இனிமையான பாடல்கள் 

      நீக்கு
    2. நான் இரண்டாம் வகுப்பு படித்த சமயத்தில் ஹைஸ்கூலில் ஹெட்மாஸ்டராக இருந்த என் அப்பா, குடியரசு தினம், விளையாட்டுப்்போட்டிகள் தினம் அன்று, தொடங்கும்போது புறாவைப் பறக்கவிடுவதைப் பார்த்திருக்கிறேன். (நேரு, சமாதானப் புறா போன்ற அர்த்தத்தில் இருந்திருக்கலாம்)

      நீக்கு
    3. பாவம்! பறந்து கொண்டிருக்கிற ஒரு புறாவை பிடித்து, அடைத்து வைத்து, மறுநாள் அதை ரிலீஸ் செய்வது. ரிலீஸ் செய்யும் வரை அதற்கு "திக்திக்" என்று இருந்திருக்கும் , வாணலியில் படுப்போமா, வானத்தில் பறப்போமா என்று!!

      நீக்கு
    4. ஆனால் இதையெல்லாம் ஆரம்பித்தது நேருதானே

      நீக்கு
  45. ஆறு வித்தியாசங்கள் எல்லோருமே சொல்லியாச்சு. எஸ்.ரா. மத்தியானம் தான். சத்கண்டா அரண்மனையும் மத்தியானமாத்தான். கண்ணதாசன் பற்றிய இந்தத் தகவல்கள் அனைத்தும் அவ்வப்போது படிச்சவை. ஆனால் "காதலிக்க நேரமில்லை" படத்தில் "விஸ்வநாதன் வேலை வேணும்" பாட்டுக்கான ட்யூன் போடுகையில் தான் கண்ணதாசனுக்கும் விசுவுக்கும் இம்மாதிரிப் பேச்சு வார்த்தை நடந்ததாகப் படிச்சிருக்கேன்.

    சிவந்த மண் கட்டுரையும் படிச்சிருக்கேன். இந்த வாரம் சாண்டில்யனுக்கு இடம் இல்லை போல. இதுவே எல்லாம் பெரிய பதிவுகளாக இருக்கின்றனவே.

    உயரப் பறத்தல், நமக்கு ஆசை தான். எங்கே! வண்ணதாசன் எழுத்து பிடிச்சது தான். இங்கேயும் இந்தக் கட்டுரை அருமை. கவிதைப் பக்கத்தில் பல ஆண்டுகள் கழிச்சுத் தமிழன்பனைப் படிக்கிறேன். கவிக்கோ எப்போதுமே கவிக்கோ தான். சிற்பி ஓகே. வைரமுத்து சோ சோ தான்.

    விண்வெளி பற்றிய கட்டுரையும் முன்னர் எப்போவோ படிச்சிருக்கேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ எல்லாமே ஏற்கனவே படிச்சதுதான்னு சொல்லுங்க... ம்ஹூம்...

      நீக்கு
  46. பத்மினி என்ன சொல்லி இருக்கார்னு தெரியாமல் அங்கே வீடியோவே இல்லை. காலியா இருக்கு பக்கத்தில் அந்த இடம் மட்டும். மத்தியானமா வந்தால் பார்க்கிறேன்.

    இப்போல்லாம் அதிகம் மஹாபாரதம் இடம் பெறுகிறாப்போல் இருக்கே. இங்கே விதுரர் கூறி இருப்பவை எல்லாம் அருமை. இணையத்திலும் இவற்றைச் சிலர் பகிர்கின்றனர். விதுர நீதி, அஷ்டவக்ரர் சொன்னவை, பீஷ்மரின் உபதேசம், உத்தவ கீதை எனப் பலவும் கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஹாபாரதம் இது இரண்டாவது அவ்வளவுதானே..  பத்மினி வீடியோ போடவில்லையா மற்றவர்கள் ஒன்றும் சொல்லவில்லையே...

      நீக்கு
    2. video is not coming. that part of the page seems blank. will try in the afternoon. :(

      நீக்கு
  47. இன்றைய பகிர்வு பல தகவல்களையும் அறியத் தருகிறது.

    கவிதைகள், காளமேக புலவரின் பாடல் என அருமை.

    மருத்துவ மனைகளின் ஏமாற்று வேலைகள்.:(

    ஆறு வாள்கள் பகிர்வுப் பகுதி என நல்ல பல விஷயங்களையும் பகிர்ந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  48. மருத்துவ மனைகளில் அகப்பட்டுக்கொண்டால் சட்டு புட்டுனு இஸ்சார்ஜ் பண்ண மாட்டாங்க. இழுத்தடிப்பாங்க. (நாமே வெளீல போய் யாரையேனும் தாக்கி நம்ம படுக்கைல கொண்டுவந்து போட்டுட்டுத்தான் நாம வெளீல போலாம் என்று எண்ணும்படியா இருக்கும். அதில் அனுபவம் இருக்கா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதேபோல அல்லது அதைவிட ரெவியூ என்கிற பெயரில் நடக்கும் கொடுமைகள்

      நீக்கு
  49. ஆறு கூரிய வாள்கள்... மிக நல்ல பெஇர்வு. பாராட்டுகள் (படித்ததில் மிகவும் பிடித்தது பயனுள்ளது). தியாகம்... கண்ணைத் திறக்கும் பாயின்ட். எல்லாம் நாமே அனுபவிக்கணும்னா தியாகம், பிறருக்கு உதவும் மனப்பான்மை வராது

    பதிலளிநீக்கு

பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!