வேப்பிலைக் கட்டி என்னும் நார்த்தை இலைப் பொடி
கலா கோபால்
தேவையான பொருள்கள்:
நார்த்தை இலை - இரண்டு கையளவு
எலுமிச்சை இலை - இரண்டு கையளவு
ஓமம் - 1 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1 அல்லது 1 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 4 அல்லது 5
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
இளசான நார்த்தை இலை மற்றும் எலுமிச்சை இலைகளை பறித்து அலம்பி, துடைத்து வைத்துக் கொள்ளவும். ஈரம் இல்லாமல் இருக்க வேண்டியது முக்கியம். மின்விசிறிக்கு அடியில் வைத்து காய வைத்துக் கொள்ளலாம். பிறகு இலைகளின் நடு நரம்பை கிழித்து எடுத்து விட வேண்டும்.
நன்கு உலர்ந்ததும் அதோடு மிளகாய் வற்றல், ஓமம், பெருங்காயம், உப்பு இவைகளை சேர்த்து மிக்ஸியில் அரைத்து உருட்டி வைத்தால் வேப்பிலை கட்டி, தூளாக வைத்தால் நார்த்த இலைப் பொடி.
தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள இதை விட சிறப்பான வேறு ஒன்றைப் பார்க்க முடியாது. சில சமயங்களில் சாப்பிட பிடிக்காமல் அன்ன துவேஷம் ஏற்பட்டு விடும், அப்பொழுது வேப்பிலை கட்டியோடு தயிர் சாதம் சாப்பிட்டால் சரியாகி விடும்.
ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வேப்பிலை கட்டி செய்து சாப்பிட வேண்டுமாம், காரணம் தெரியவில்லை.
நார்த்தை இலையோடு எலுமிச்சை இலையும் சேர்த்து போட வேண்டும் என்பது நிர்பந்தம் கிடையாது.
இதை செய்தது என் சகோதரி கலா கோபால். அவர்கள் வீட்டிலேயே எலுமிச்சை மற்றும் நார்த்தை மரங்கள் இருப்பதால் இது கார்டன் ஃப்ரஷ்!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!