குழி ஆப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழி ஆப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

4.7.22

"திங்க"க்கிழமை  :  குழி ஆப்பம் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி 

 நம்ம ரங்க்ஸுக்குச் சாப்பாட்டில் ஒரே மாதிரி இருந்தால் பிடிக்காது. எப்போவுமே. மாத்தி மாத்திச் செய்யணும்னு சொல்லுவார். அதுவும் இப்போ இந்தச் சர்க்கரை நம்ம நாட்டு விலைவாசி போல ஏறி ஏறி ஏறி இறங்காமல் இருக்கவே, என்ன செய்யறதுனு யோசிச்சு எல்லோரும் சொல்றாங்களேனு சிறு தானியத்துக்கு மாறினார் சில ஆண்டுகள் முன்னால்.  அது ஒரு ஏழு, எட்டு வருடங்கள் முன்னால். அப்போ போட்ட பதிவு இது. ஶ்ரீராமின் "திங்க"ற பதிவுக்குச் சிறு தானியங்களின் சமையல் குறிப்புகள் அதிகம் வராததால் இதைத் தேர்ந்தெடுத்து அனுப்பலாம்னு எடுத்தேன்.