10.7.10

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஸ்ரீராம் !

நமது மரியாதைக்குரிய, வலையுலக நண்பர், ஸ்ரீராம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 'எங்கள்' ஆசிரியர்களின் பிறந்த நாளில் வாழ்த்துக்களை சொல்ல வசதி செய்தமைக்கு நன்றிகள். முடிந்தால் வாசகர்களின் பிறந்த நாளிற்கும் 'எங்கள்' பிளாக் மூலம் பிறந்தநாள் வாழ்த்து பரிமாறலாமே.. எனது பிறந்த நாள்  27 ஜூலை.( நா கூட வருஷத்த சொல்லலையே.. ஆசிரியர் எவ்வழி, மாணவனும் அவ்வழியே..)


நன்றி..
--
Madhavan S 






எங்கள் அன்பு ஸ்ரீராம் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த அன்புப் நாள் வாழ்த்துகள்.எப்பவும் சுகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கணும் நீங்க.
                                                                                     அன்போடு ஹேமா.  



HAPPY  BIRTHDAY DEAR SRIRAM.

VALLIMA.  


அன்பு ஸ்ரீராமுக்கு
மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
என்றும் ஆரோக்கியமும் ஆனந்தமும் நிறைந்த வாழ்க்கை அமைய எங்கள் ஆசிகள்.

-- 
அன்புடன்,
ரேவதி & நரசிம்ஹன் 

எங்கள் வாழ்த்து: 



8.7.10

இது சோதனை ஊர்தல்

இதற்கு கவிதை / கமெண்ட் எழுதுங்கள். 
சப்தம் எதுவும் புரியாது. 
பயம் வேண்டாம்.

7.7.10

பயப்படாதீங்க ஒரு சோதனை ஓட்டம்.

எச்சரிக்கை: சவுண்ட் இருந்தா கட் பண்ணிடுங்க. இல்லாட்டி பயந்து போயிடுவீங்க. 
ஏதேனும் பாடல் ஞாபகம் வந்தால் எது என்று பின்னூட்டத்தில் பதியுங்கள். 

6.7.10

கூகிள் பிரச்னை.

வாசகர்கள் எல்லோருக்கும் இந்த விஷயம் தெரிந்திருக்கும். இருந்த போதிலும், நாங்கள் இதை ஒரு பதிவாகவே போட்டுவிடுகிறோம்.

கூகிள ப்ளாகர் - கருத்துரை பதிவு செய்வதில், ஒரு பிரச்னை இன்று (ஜூலை ஆறு ) காலை முதல் இருந்து வருகிறது.

கமெண்ட் பதிவு செய்வது, ஜி மெயிலில், ஆசிரியர் உள் பெட்டிக்கு நகல் வருகிறது. ஆனால், பதிவில் கருத்துரை வரவில்லை. 

எங்கள் பதிவு பற்றிய செட்டிங் எல்லாவற்றையும் மறுபடியும் சோதனை செய்து பார்த்து விட்டோம். நாங்கள் கொடுத்த செட்டிங் எல்லாம் சரியாக உள்ளன. கூகிள நிறுவனத்தின் ப்ளாகர் அமைப்பில் அவர்கள் 'பார்த்தவர் விவரங்கள்' பற்றி புதிய டாப் (tab) ஒன்றை சேர்த்திருக்கிறார்கள் - இதனால் எதுவும் ஏடா கூடம் ஏற்பட்டிருக்குமோ என்ற ஐயமும் உள்ளது. இதுவரை பல பதிவர்கள், அநேகமாக இந்த தடங்கல் பற்றி கூகிள நிறுவத்தினருக்கு எழுதியிருப்பார்கள் என்று தோன்றுகிறது. 

இதைப் படிக்கும் கூகிள ப்ளாகர்கள் உங்கள் பதிவுகளிலும், இந்தப் பிரச்னை உள்ளதா என்பது குறித்து எங்களுக்கு ஜி மெயில் அனுப்பவும். நன்றி. 

2.7.10

மாறு திசை.

திசைகளுக்கும், எங்களுக்கும், நெருங்கிய தொடர்பு ஒன்று உண்டு. எங்கள் ஆசிரியர் குழுவில் முதன் முதலில் வலைப்பூக்களை வட்டமிட ஆரம்பித்த ஓர் ஆசிரியர் ஒரு பிரபல வலைத் தளத்தில் எழுதிய முதல் பதிவு, ஆரம்பப் பாடங்கள்   என்பது. இது திக்குத் திசைகளைக் குறித்த அந்த ஆசிரியரின் மயக்கத்தை தெளிவாகக் கூறியது. ஒருவகையில், இது பிரசுரமான ஒரு வாரத்திற்குள், எங்கள் ப்ளாக் ஆரம்பிக்க வேண்டும் என்கிற உந்துதல் தோன்றி உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கினோம்.

பிரியமுடன் வசந்த் அவர்கள் அவருடைய பதிவில், 'மாறுதிசை' என்ற தலைப்பில் எங்களை எழுத அழைப்பு விடுத்திருப்பதைப் பார்த்தவுடன் எங்களுக்கு, இந்தப் பொருத்தம்தான் உடனே நினைவு வந்தது.

பிரியமுடன் வசந்த் அவர்களின் படைப்பாற்றலும், அவருடைய வித்தியாசமான சிந்திக்கும் திறனும் நம் வாசகர்களில் பெரும்பாலோருக்கு நன்கு தெரிந்திருக்கும். இதுவரை அனுபவித்திராதவர்கள், அவருடைய கற்பனை  ஆழத்தை படியுங்கள். இந்தப் பதிவில், அவர் இட்டிருந்த ஆறாவது தலைப்பு + விளக்கம் இது :


"ஆறாவது தலைப்பு " 


இந்த உலகம் சுற்றும் திசையில இருந்து ஆப்போசிட் திசையில சுற்றும்போது என்ன என்ன நிகழ்வுகள் நடக்கும் இது பற்றி எழுதப்போறவங்க எங்கள் பிளாக்...

தலைப்பு மாறுதிசை.."


இப்போ நம் வாசகர்களை மாறுதிசையில் அழைத்துச் செல்கிறோம்.


இந்த உலகம் சுற்றும் திசையிலிருந்து, ஆப்போசிட் திசையில் சுற்றும்போது ....
இதில் சூரியன் மேற்கே உதித்து,  கிழக்கே மறையும். இதில் ஒரு குழப்பமும் இல்லை.

சரித்திர, புராண, சமூகப் படங்களில் எப்பவுமே ஒரு வசனம் வரும். தமிழில் சூளுரைக்கும் நாயகன் அல்லது நாயகி, "கிழக்கே உதிக்கின்ற சூரியன் மேற்கே உதித்தாலும் .......நான் நிலை மாறமாட்டேன் .... / உன்னைக் கை விடேன் / இதிலிருந்து பின் வாங்கமாட்டேன் / " என்று வீர வசனம் உதிர்த்து கைதட்டல், விசில் ஆகியவற்றைப் பெற்றுவந்தவர்கள், நிலை மாறுவார்கள், கை விடுவார்கள்,  பின் வாங்குவார்கள். கொஞ்சம் குழப்பம் ஆரம்பம்.

காலையில் கிழக்கு வெளுத்தவுடன், ஊருக்கு கொக்கரக்கோ என்று கூவி விடியலை அறிவிக்கும் சேவல் கிழக்கே சூரியனை காலையில் காணாததால், மௌனவிரதம் காக்க நேரிடலாம். அல்லது மாலையில் கொக்கரக்கோ என்று கூவி, அதுவும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பக்கூடும். முன் காலத்தில் கோழி கூவியவுடன் படுக்கை விட்டு எழுந்தவர்கள் இந்தக் காலங்களில் கோழி கூவியவுடன் படுக்கப் போகலாம்.  

சூரியன் இருக்கும் பக்கம் எல்லாம் (சூர்யாவைப் பார்க்கும் ஜோதிகா போல), 'சூ மந்த்ரக்காளி போட்டு சுத்த வைக்கிறே....' என்று பாடிக்கொண்டு சூரியனைப் பார்த்துக் கொண்டிருக்கும் சூரியகாந்திப்பூ - குறிப்பிட்ட நாளிலிருந்து தலையை ஆப்போசிட் திசையில் சுற்ற ஆரம்பித்து கழுத்து சுளுக்கிகொண்டு, அயோடெக்ஸ் தேடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

'கிழக்கே போகும் ரயில்' என்னும் படத்தை இயக்குனர் ராஜபாரதி ரீ-மேக் செய்து, 'மேற்கே போகும் மெயில்' என்று புதுப்பெயர் இடலாம். 'கிழக்கு வெளுத்ததடி, கீழ் வானம் சிவந்ததடி' என்பது போன்ற பாடல்களை, 'மேற்கு வெளுத்ததடா மேல் வானம் சிவந்ததடா' என்று மாற்றிப் பாட வேண்டியது இருக்கும்.

ஆரம்பப் பள்ளி நாட்களில் நமக்குக் கிடைத்த பாடம், காலையில் நாம் சூரியனை நோக்கி நின்றால், நம் இடக்கைப் பக்கம் வடக்கு, வலக்கை பக்கம் தெற்கு. இதன் படி பார்த்தால், இதுநாள் வரை வடக்காக அறியப்பட்ட திசை தெற்கு ஆகிவிடும். தெற்கு என்று இவ்வளவு நாள் அறியப்பட்ட திசை வடக்கு ஆகிவிடும்.

'வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது' என்று சொல்லி வோட்டு கேட்ட அரசியல் வாதிகள், 'வடக்கு வாடுகிறது, தெற்கு செழிக்கிறது' என்று சொல்லி வோட்டு கேட்பார்கள்.  தென் மாநிலங்களில் வசிப்பவர்கள் ஹிந்தியில் பேசி, பாடி, சிரித்துக் கொண்டு இருப்பார்கள். வட மாநிலத்தவர் ஹிந்தி எதிப்புப் போராட்டங்கள் நடத்துவார்கள் !!

பூமி இப்பொழுது சுற்றிக் கொண்டிருக்கும் திசைக்கு நேர் எதிர் திசையில் சுற்ற ஆரம்பிக்கும் பொழுது முன்பு இருந்த வேகம் இருக்காது. வேகம் கொஞ்சம் குறையும். அப்போ வாரத்திற்கு ஏழு நாள் என்ற கணக்கு குறைந்து, ஆறுநாள் என்று வந்துவிடும். எங்கள் ப்ளாக் பதிவில், வார நாட்களில் எதை கட் பண்ணலாம் என்று படைப்பாற்றல் போட்டி வைக்கலாம். அந்த கால நிலை மாற்றங்களை சாதகமாக எடுத்துக் கொண்டு, மணி, நாள், மாதம் வருடம் ஆகியவற்றிற்கு மெட்ரிக் அளவு முறை கொண்டு வர சொல்லி, எங்கள் சார்பில் வற்புறுத்துவோம்.

10 வினாடி = 1 நிமிடம்.
10 நிமிடம் = 1 மணி.
10 மணி = 1 நாள்
10 நாள் = 1 மாதம்
10 மாதம் = 1 வருடம்.


(இப்பவும் எல்லோரும் தெளிவாகத்தானே இருக்குறீங்க? குழப்பம் ஒன்றும் இல்லைதானே?!)


'மாறுதிசை' தலைப்பில் தொடர் பதிவு எழுத, நாங்கள் அழைக்க நினைக்கின்ற இரு பதிவர்கள் 'ஸ்ரீ மாதவன், விஜய்' இருவரும் அழைப்பை ஏற்றுக் கொள்வதை, இதில் பின்னூட்டம் பதிந்து எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.