10.3.13

ஞாயிறு 192:: ஆதித்யா



'ஞாயிறே, இன்று ஞாயிறு!
விண்ணைத் தாண்டி வருவாயா?
விளையாட வருவாயா?'
என்று கேட்டேன்.
கதிரவன் ஆட வந்தான் .........
கண்ணாமூச்சி!
                           

9.3.13

பாசிட்டிவ் செய்திகள்... மார்ச் 3/2013 முதல் மார்ச் 10/2013 வரை


எங்கள் B+ செய்திகள்.  

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....  

=============================================================   
 1) மத்திய அரசின், "இளம் விஞ்ஞானி' விருது பெற்ற, சென்னை மாநிலக் கல்லூரி மாணவன், பிரபாகரன்:

                                   
பழநி அருகேயுள்ள, ஆண்டிப்பட்டி கிராமம் தான், என் சொந்த ஊர். அப்பா மயில்சாமி, விவசாயம் செய்கிறார். அப்பா, அம்மா படிக்கவில்லை என்றாலும், என்னை, நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், கஷ்டப்பட்டு படிக்க வைத்தனர். எங்கள் தலைமுறையில், முதல் பட்டதாரி நான் தான்.
கோவையில், பி.எஸ்சி., மைக்ரோ பயாலஜியும்; பழநி யில், எம்.எஸ்சி., தாவரவியலும்; மதுரையில் எம்.பில்., லும் படித்தேன். தற்போது, சென்னை மாநிலக் கல்லூரியில், ஆய்வு மாணவராக ஆராய்ச்சி செய்கிறேன்.
இதுவரை, 10 ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து, இந்தியாவிலும், சர்வதேச அளவிலும், பாராட்டு பெற்றேன். என் ஆய்வு கட்டுரைகளைப் பாராட்டிய மத்திய அரசு, "இளம் விஞ்ஞானி' விருது வழங்கியது. மாநிலக் கல்லூரியின் வரலாற்றில், முதல் மாணவனாக, இவ்விருதைப் பெற்றேன்.
ஒரு முறை, அப்பா, அதிக அளவில் துவரை பயிரிட்டார். பூச்சிகளின் தாக்குதல் அதிகளவு இருந்ததால், மிகுந்த நஷ்டம் ஏற்பட்டது. எனவே, பூச்சிகள் தாக்க முடியாத, துவரை இனத்தை கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டேன். சாதாரணமாக துவரையை பயிரிட்டால், துவரை செடியில் ஒரு தண்டு உருவாகி, கிளை பிரியும். ஆனால், என் கண்டுபிடிப்பில், மூன்று முதல் ஆறு தண்டுகளைக் கொண்ட செடியாக வளர்ந்து, அதிக மகசூலை தருவதுடன், பூச்சிகளின் தாக்குதலும் இருக்காது. பரிசோதனை வெற்றியில் முடிந்ததால், அரசின் அனுமதி பெற்று, விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தப்படும்.

உணவு மற்றும் மருந்துகளுக்கு, இயற்கையாக நிறங்களை தரும் நிறமிகளை கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளேன்.

இதற்கு, வெளிநாடு செல்லவும், அரசு அனுமதித்துள்ளது. ஆய்வுகள் இறுதி கட்டத்தில் இருப்பதால், உணவு மற்றும் மருந்துகளில், இயற்கை நிறமிகளை எதிர்பார்க்கலாம்.

2) ‘‘அரசு வழங்குகிற முதியோர் உதவித்தொகை வாங்குகிறீர்களா?’’ என்று கேட்டால் பாட்டியின் முகம் கோபத்தில் சிவக்கிறது. வயது 103.

                                              
 ‘‘உழைக்காம வாங்குற காசு உடம்புல ஒட்டுமா..? என் உழைப்பால வர்ற காசு எனக்குப் போதும். உடம்புல வலு இருக்கிற வரைக்கும் என்னால உழைச்சுச் சாப்பிட முடியும். புள்ளைகளுக்கே சுமையா இருக்கக்கூடாதுன்னு நினைச்சுத்தான் இன்னமும் யாவாரம் பண்ணிக்கிட்டு இருக்கேன். அரசாங்கத்துக்கு சுமையா இருக்கச் சொல்றீகளே... வேணாம் தம்பி...’’ என்கிறார் சீதாப்பாட்டி.

3) மது அரக்கனால் பாதிக்கப்பட்ட பலப்பல குடும்பங்களில் பெண்களின் கண்ணீர் கண்டு அந்தப் பெண்களை ஒன்று திரட்டி 'அக்னியஸ்த்ரி ' என்ற அமைப்பை உருவாக்கி போராக் கற்றுத் தருகிறார் நிர்மல்.

                                              

4) ‘‘நேர நிர்வாகம்கிற வார்த்தை ஜாலம் பத்தியெல்லாம் எங்க கிராமத்து மக்களுக்குத் தெரியாது. ஆனா, அவங்க அளவுக்கு வேற யாரும் நேரத்தை முறையா நிர்வாகம் பண்ண முடியாது. மரபுவழி வந்த அவங்க வாழ்க்கை முறையிலேயே எல்லா இலக்கணங்களும் உள்ளடங்கியிருக்கு... - கனிவும் பணிவுமாகப் பேசுகிறார் சாந்தி மதுரேசன்.


                                           

இந்தத் தோழியின்
பன்முகங்கள்
‘தானம்’ மக்கள் கல்வி
நிலையத்தின் இயக்குனர்

‘களஞ்சியம்’ பரஸ்பர
இயக்கத்தின்
முதன்மை நிர்வாகி

இந்திய குறுநிதி
கூட்டமைப்புகளுக்கான
பேரிணையத்தின் (இன்போஸ்) முதன்மை நிர்வாகி

பத்தரை லட்சத்துக்கும் அதிக அங்கத்தினர்களை உள்ளடக்கி சத்தமேயில்லாமல் மிகப்பெரும் மக்கள் புரட்சியை நிகழ்த்தி வரும் மதுரை ‘தானம்’ அறக்கட்டளையின் தூண்களில் ஒருவர். இந்திய பிரதமரையே கால் தொட்டு வணங்க வைத்த சின்னப்பிள்ளையைப் போல ஆயிரக்கணக்கான கிராமியத் தலைவிகளுக்கு அடையாளம் கொடுத்தவர். 12 மாநிலங்களைச் சேர்ந்த ஐந்தரை லட்சம் பெண்கள் ஒருங்கிணைந்து இயங்குகிற களஞ்சியம் அமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆறாக ஓடிய கள்ளச்சாராயத்தை பெண்களைத் திரட்டி அழித்தொழித்தவர்.

அகமதாபாத் ஐ.ஐ.எம்.மில் ‘மேனேஜ்மென்ட் எஜூகேஷன் புரோகிராம்’ படித்த சாந்தி, இப்போது பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகிக்கிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து லட்சக்கணக்கான பெண்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் இவர், தனது வெற்றிக்கான அடிப்படையாக நேர நிர்வாகத்தையே சுட்டிக்காட்டுகிறார்.

 இவரைப் பற்றிய விவரமும், இவர் எப்படிப் போராடி இந்த அமைப்பி முதலில் பிரதான் என்ற பெயரிலும் பின்னர் களஞ்சியம் என்ற பெயரிலும் உருவாக்கினார், நேர மேலாண்மையை  கடைப் பிடிக்கிறார் என்பது பற்றியும் நிறைய சொல்லியிருக்கிறார்கள் இந்த முகநூல் பக்கத்தில்.

முதல் கட்டமா கடலூர்ல நடந்த ‘அக்னிஸ்திரீ’ விழிப்புணர்வுக் கூட்டத்துல 80 ஆயிரம் பெண்கள் கலந்துக்கிட்டாங்க. அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுக்க முழுவேகத்துல களமிறங்கப் போறாங்க எங்களோட நெருப்புப் பெண்கள்...’’ என்கிறவரின் பேச்சில் அத்தனை ஆதங்கம், ஆவேசம்!
‘‘அக்னிஸ்திரீ’ அமைப்புல சில திட்டங்களையும் பயிற்சிகளையும் வச்சிருக்கோம். குடிச்சிட்டு வீட்டுக்கு வர்ற ஆண்கிட்ட சண்டை போடாம, திட்டாம, அவர் நிதானத்துக்குத் திரும்பின பிறகு, குடும்ப உறவுகள் சூழ உட்கார்ந்து அவர் ஆழ்மனசைத் தொடற மாதிரிப் பேசறதுக்கான பயிற்சிகள் இதுல உண்டு.

பாதிக்கப்பட்ட நபரே, தன் தவறை உணர்ந்து, குடிப்பழக்கத்தை விட்டு விலகச் செய்யற அளவுக்கு ரொம்பவும் சக்தி வாய்ந்த பயிற்சி இது. அடுத்து ‘நமக்கு நாமே’ங்கிற திட்டத்துல மது அடிமைகளைக் கூப்பிட்டு, அவங்களோட தனிப்பட்ட தகுதிகளை அவங்களை விட்டே எழுதச் சொல்லி, உளவியல் நிபுணரோட ஆலோசனைகளையும் கொடுத்து, மனம் திருந்த வைக்கிறது. ‘குடும்பங்களின் குடும்பம்’னு இன்னொரு திட்டம். உன் வீட்டு ஆம்பிளை குடிச்சிட்டு, அடிதடியில இறங்கினா ‘எனக்கென்ன’ன்னு போகாம, ஊரே திரண்டு வந்து அநியாயத்தைத் தட்டிக் கேட்கறது... இப்படி இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கு.

ஒவ்வொரு ஊர்லயும் பத்து பெண்கள் சேர்ந்து, எங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அவங்க அக்னிஸ்திரீ அமைப்புல இணைய அங்கீகாரம் கொடுப்போம். இந்த உலகத்துலயே மிகச்சிறந்த முதலீடு, மனித முதலீடு. பெண்கள் நினைச்சா, எதையும் சாதிக்கலாம். ‘தனியாக இருக்கிறபோது எதுவுமில்லாதவர்கள், சேர்ந்திருக்கும்போது எல்லாம் ஆகிறார்கள்’னு சொல்வாங்க. பெண்கள் சமுதாயம் ஒன்று சேர்ந்தா, எந்த இடத்துலயும், யார்கிட்டயும், எதுக்காகவும் ஏமாறாம வாழ முடியும்.

ஊர்கூடித் தேர் இழுக்கற ‘அக்னிஸ்திரீ’யோட கதவுகள், பெண்களுக் காக எப்போதும் திறந்தே இருக்கும். அப்பா, சகோதரன், கணவன், பிள்ளைகள்னு குடிகார ஆண்களோட வன்முறைச் செயல்கள், இனி அடுத்த தலைமுறைப் பெண்களை நிச்சயம் தாக்காது...’’ - நம்பிக்கையளிக்கின்றன நிர்மலின் வார்த்தைகள்.

5) தேக்கடி வந்த ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணி ஆவணங்களுடன் தவறவிட்ட 50 ஆயிரம் ரூபாயை நேர்மையான ஓட்டல் தொழிலாளி போலீசில் ஒப்படைத்தார்.தேக்கடி தனியார் ஓட்டலில் வேலை பார்ப்பவர் சுகுமார் (35). இவர் குமுளி காந்தி நகர் காலனியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவர் குமுளி ஆனவச்சால் பகுதி வழியாக வரும்போது, கீழே ஒரு பை கிடந்துள்ளது. அதை எடுத்து பார்த்தார். அதில் வெளிநாடு சுற்றுலா செல்லும் ஆவணங்களும், ஸி50 ஆயிரமும் இருப்பது தெரிந்தது. உடனடியாக சுகுமார் அந்த பையை குமுளி போலீசில் ஒப்படைத்தார்.

                                                                             
போலீசார் பையை சோதனை செய்தனர். அதில் இருந்த ஆவணங்கள் மூலம் அதன் உரிமையாளர் ஜெர்மனி ஏர்போர்ட் இன்ஜினியராக உள்ள என்ரிக்கோ (41) என தெரியவந்தது. பையில் அவரது ஏடிஎம் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், பான் கார்டு, இந்திய ரூபாய் 7,500, ரூ.42 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய யூரோ கரன்சி ஆகியவை இருந்தது. பையில் இருந்த தொலை பேசி எண் மூலம் போலீசார், என்ரிக்கோவு க்கு தகவல் தெரிவித்தனர்.

குமுளி வந்த அவர், சுற்றுலா வந்தபோது பையை தவற விட்டதாக தெரிவித் தார். பின்னர் அவரது பையை, ஓட்டல் தொழி லாளி சுகுமார் கையாலேயே பெற்றுக் கொண் டார்.இதுகுறித்து என்ரிக்கோ கூறுகையில், ‘இந்தியர்கள் நேர்மையானவர்கள் என கேள்விப்பட்டுள்ளேன். இப்போது அதை நேரில் பார்த்து விட்டேன்’ என்றார்.
பின்னர் அவரது பையை, ஓட்டல் தொழிலாளி சுகுமார் கையாலேயே பெற்றுக் கொண் டார்.


6) பெங்களூரு தேவசங்கரி நகர் பகுதியில் இருந்து வெளி வருகிறது ஒரு ஆட்டோ. அந்த ஆட்டோவை ஓட்டி வருகிறார் ஒரு பெண். மலர்ந்த கண்களும், சிரித்த முகமும் கொண்ட அந்த பெண்ணை பார்த்து, பலரும் வாழ்த்து தெரிவிக் கின்றனர். பதிலுக்கு அவரும் நன்றி தெரிவித்தபடி, தன் பயணத்தை தொடர்கிறார். இவரது இந்த ஆட்டோ ஓட்டுனர் பணி, இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அடுத்த மாதம் முதல், இவர் காக்கி சீருடையை கழட்டி வைத்துவிட்டு, கறுப்பு கவுனை மாட்டி, நீதிமன்றத்தில் வாதாடப் போகிறார்.

                                                 
ஆம்... ஆட்டோ டிரைவர் வெங்கடலட்சுமி, வழக்கறிஞர் வெங்கடலட்சுமி ஆகிறார். இது ஒன்றும் ஒரு நாள் கதை அல்ல, அவரது மனதிற்குள் விழுந்த பல நாள் விதை. எளிய குடும்பத்தைச் சேர்ந்த வெங்கடலட்சுமிக்கு, டிகிரி முடித்த கையோடு திருமணம் ஆகி விட்டது. கணவர் வெல்டிங் வேலை செய்பவர். திருமணத்திற்கு சாட்சியாக ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
பெண் குழந்தையை நல்லதொரு பள்ளியில் சேர்த்தார். படிப்பு செலவு அதிகமானது. கணவரது வருமானம் போதவில்லை. தனக்கு தெரிந்த சமையல் வேலையை மேற்கொண்டார். ஐம்பது, நூறு பேரின் தேவைக்கு, வீட்டிலேயே சமைத்து, எடுத்துப்போய் கொடுத்து, வருமானம் பார்த்து வந்தார். சமைத்த உணவுகளை எடுத்துப் போக வேண்டிய ஆட்டோ டிரைவர், பல சமயம் வராமல் போய், தொழிலில் சங்கடத்தை ஏற்படுத்தினார். இதன் காரணமாக, இவரே ஆட்டோ ஓட்டுவது என்று முடிவு செய்தார்.
ஆட்டோ வாங்கியதும், பலரும் இவரது ஆட்டோவில் பயணம் செய்ய விருப்பப்படவே, சமையல் தொழிலை விட்டுவிட்டு, ஆட்டோ ஓட்டுனராகி விட்டார். மீட்டருக்கு மேல் கட்டணம் வசூலிப்பது இல்லை. வாடிக்கையாளரிடம் சரளமாக ஆங்கிலத்தில் பேசுதல் போன்றவற்றால், இவருக்கு வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடியது. இப்படியே சில ஆண்டுகள் ஓடியது. இந்த நிலையில் தான் ஒரு நாள், ஐந்து பேர் கொண்ட ரவுடி கும்பல் இவரை தாக்கி, கடத்தி, விபச்சார கும்பலிடம் விற்பதற்கு முயன்றது. மிகவும் போராடி தப்பிய வெங்கடலட்சுமி, உடனே, போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இவரது புகார் அங்கே கண்டு கொள்ளப்பட வில்லை. "நாளைக்கு வாம்மா, அப்புறம் வாம்மா' என்று அலைக்கழிக்கப்பட்டார். குற்ற வாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில், தீவிரமாக இருந்த வெங்கடலட்சுமி, வழக்கு பதிவு செய்ய மிகவும் சிரமப்பட்டார். கோர்ட்டில் வெங்கடலட்சுமி சார்பில் வாதாடிய வழக்கறிஞரின் வாதத்தில் உயிரே இல்லை. மேலும், இந்த வழக்கை கோர்ட்டிற்கு கொண்டு வருவதற்கே பதிமூன்று ஆண்டு களாகி விட்டது.
தன்னைப் போல எத்தனை அபலைப் பெண்கள் இப்படி சத்தில்லாத, உணர்வில்லாத, உயிரில்லாத வாதத்தால் மோசம் போய்க் கொண்டு இருக்கின்றனர் என்று உணர்ந்து, அப்போதே தானும் ஒரு வழக்கறிஞராவது என்று முடிவு செய்தார். சட்டக்கல்வியை தபால் மூலம் படிப்பதால் பலன் இல்லை என்பதால், தன் 36வது வயதில், கல்லூரியில் சேர்ந்தார். காலை 8:00 மணியில் இருந்து, மதியம் 2:00 மணி வரை கல்லூரி வாழ்க்கை. பிறகு மதியம் 2:00 மணி முதல், இரவு வரை ஆட்டோ ஓட்டும் பணி. ஆட்டோவிலேயே பாட புத்தகங்களை வைத்திருப் பார். வாடிக்கையாளருக்காக காத்திருக்கும் நேரத்திலும், ஆட்டோவை ஓட்டாத நேரத்திலும், பாட புத்தகங்களை படிப்பார். வீட்டிற்கு போனதும், அன்றைய பாடக் குறிப்புகளை படித்து முடித்து விட்டே தூங்கப் போவார்.


இப்படியான இவரது ஐந்து ஆண்டு படிப்பு வீண் போகவில்லை. நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றிகரமாக, எல்.எல்.பி.,படித்து முடித்தார். ஆனாலும், பார் கவுன்சில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் தான், வழக்குகளில் ஆஜராக முடியும் என்ற நிலை. அந்த தேர்வையும் வெற்றிகரமாக முடித்ததன் எதிரொலியாக, வருகிற மார்ச் மாதம் முதல் கோர்ட்டிற்கு வழக்கறிஞர் வெங்கட லட்சுமியாக செல்ல இருக்கிறார். "ஒரு நியாயமான ஆட்டோ ஓட்டுனராக இருந்த நான், இனி நேர்மையான, அதே நேரத்தில், சமூகத்தில் நீதி கிடைக்காத பெண்களுக்காக வாதாடும் வழக்கறிஞராக இருப்பேன்...' என்கிறார் உறுதியாக. பெண்கள் தினம் கொண்டாட இருக்கும் இத்தருணத்தில், இவரது சாதனையை பாராட்டி வாழ்த்துவோம்.


7) வரும் 18ந் தேதி இ2ஓ எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா ரேவா கூட்டணி. இந்தியாவின் முதல் 4 சீட்டர் எலக்ட்ரிக் கார் என்ற பெருமையுடன் இந்த புதிய கார் வர இருக்கிறது.

இந்த புதிய எலக்ட்ரிக் காரில் 39.4 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். ரூ.5 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

                                                          
பெங்களூரில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய ஆலையில் இந்த புதிய எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்து மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் பவன் கோயங்கோ கூறுகையில், "எதிர்காலத்துக்கு தேவையான போக்குவரத்து தீர்வாக இந்த எலக்ட்ரிக் காரை முன்னோடியாக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்," என்றார்.

லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்ட மாடலை ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை செல்லலாம் என மஹிந்திரா ரேவா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எலக்ட்ரிக் காரில் ஒரு கிலோமீட்டர் செல்வதற்கு 50 பைசா மட்டுமே செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


18ந் தேதி அறிமுகமாகிறது 4 சீட்டர் எலக்ட்ரிக் கார்! வரும் 18ந் தேதி இ2ஓ எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்துகிறது மஹிந்திரா ரேவா கூட்டணி. இந்தியாவின் முதல் 4 சீட்டர் எலக்ட்ரிக் கார் என்ற பெருமையுடன் இந்த புதிய கார் வர இருக்கிறது.


8) மும்பையின் ஒர்லி குடிசைப் பகுதியில் வசித்து வரும் எம். பிரகாஷ் (35) என்ற தமிழர், மார்ச் 8ம் தேதி அரபிக் கடலில் 42 கிலோ மீட்டர் தூரத்தை நீந்தி கடந்து உலக சாதனை நிகழ்த்த இருக்கிறார். கேட்வே ஆப் இந்தியாவில் இருந்து ராய்கட் மாவட்டம் ரேவாஸ் வரையிலான 21 கிலோ மீட்டர் தூரம் நீந்தி பிறகு அங்கிந்து திரும்புவார். இந்த 42 கிலோ மீட்டர் தூரத்தை 15 மணி நேரத்தில் கடக்க அவர் திட்டமிட்டுள்ளார். பிரகாஷ் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு இரு கால்களும் பாதிக்கப் பட்டவர்.

                                                          
எனினும் தனது அயராத முயற்சியால் பல சாதனைகளை செய்துள்ளார். நீச்சல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு 81 தங்கம், 29 வெள்ளி மற்றும் 27 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். தற்போது, மும்பை-ரேவாஸ்-மும்பை ஸ்விம்மதான் போட்டியில் கலந்து கொண்டு இந்த உலக சாதனையை நிகழ்த்தவிருக்கிறார். ஒர்லி, மோதிலால் நகரில் உள்ள மதராஸ்வாடியில் பிறந்த பிரகாஷ், அங்கேயே வசித்து வருகிறார். அந்த பகுதியில் அரபி கடலில் கடக்கும் ஒரு சாக்கடை நீரில்தான் 20 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் நீச்சலை அவர் கற்றுக் கொண்டார்.

பின்னர் உள்ளூரில் நடந்த நீச்சல் போட்டி ஒன்றில் அவர் பங்கேற்றார். அதை நேரில் பார்த்த மூத்த போலீஸ் அதிகாரியான பாலாசாகேப் காட்கே (தற்போது உதவி போலீஸ் கமிஷனராக இருக்கிறார்) பிரகாசிடம் மறைந்து கிடக்கும் திறமையை கண்டு ஆச்சரியமடைந்தார். ஒர்லி, போலீஸ் முகாமில் உள்ள நீச்சல் குளத்தில் பிரகாஷுக்கு முறைப்படியான நீச்சல் பயிற்சி அளிக்க அவர் முயற்சி எடுத்துக் கொண்டார்.

தனது நீச்சல் திறமைக்கும், நீச்சல் போட்டிகளில் இத்தனை பதக்கங்கள் கிடைத்ததற்கும் போலீஸ் அதிகாரி காட்கேதான் காரணம் என்று பிரகாஷ் நன்றியுடன் குறிப்பிட்டார். மேலும் வரும் வெள்ளிக்கிழமை சர்வதேச பெண்கள் தினம் என்பதால் அந்த நாளில் இந்த உலக சாதனையை நிகழ்த்தி அதை தன் தாயார் எம்.பாலசுந்தரிக்கு அர்ப்பணிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

பிரகாஷ் கடந்த 18 ஆண்டுகளாக நீச்சலில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். சுவாபிமான் சங்கட்டணா தலைவர் நிதேஷ் ராணே மற்றும் வருமான வரி கமிஷனர் வி.மகாலிங்கம் ஆகியோர் கொடுத்த ஊக்கம் காரணமாகவே வரும் வெள்ளிக்கிழமை பிற்பகலில் அரபிக் கடலில் 42 கிலோ மீட்டர் தூரம் நீந்தி சாதனை படைக்க உள்ளார்.

பிரகாஷுக்கு சத்யா என்ற மனைவி, 6 வயதில் ஹரிஹரன் என்ற மகன் மற்றும் 4 வயதில் வர்ஷினி என்ற மகள் உள்ளனர்

9) தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த தயங்கும் நிலையில், மதுவை முற்றிலும் ஒதுக்கி முன் மாதிரியாக திகழ்கின்றனர் மதுரை சரந்தாங்கி கிராம மக்கள்.

இக்கிராமத்தில் 1,400 பேர் வசிக்கின்றனர். இம்மக்கள் ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை தவறாமைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகின்றனர். ஆண்கள் மது அருந்துவது கிடையாது. இங்கு "டாஸ்மாக்' கடையை திறக்க சிலர் முயன்றனர். கிராம மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பால் முடியவில்லை.

                                       

சரந்தாங்கி கிராம தலைவர் ஜெயக்கொடி:

ஊர்கட்டுப்பாட்டை நாங்கள் மீறியது கிடையாது. கட்சி பாகுபாடின்றி ஒற்றுமையுடன் ஊர்க்காரியங்களை செய்கிறோம். கிராமத்தில் யாராவது இறந்தால், கிராம நிதியில் இருந்து 500 ரூபாய் வழங்கப்படுகிறது. ஏழை, பணக்காரர் என வித்தியாசம் இங்கில்லை. பூரண மதுவிலக்கு இங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை மீறி மது அருந்தி ஊருக்குள் வரக்கூடாது. இங்குள்ள தோட்டங்களுக்கு வேலி கிடையாது. திருடாமை, பொய்கூறாமை எங்களது கொள்கை.

மூக்கம்மாள், சரந்தாங்கி:

மது விலக்கு கொள்கை அமலில் இருப்பதால், என் கணவருக்கு குடி பழக்கம் இல்லை. இக்கொள்கை இங்கு பின்பற்றப்படாமல் இருந்திருந்தால் பலர் குடி பழக்கத்திற்கு ஆளாகி குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும். எங்கள் ஊரில் யாருக்கும் இப்பழக்கம் இல்லாதது நாங்கள் செய்த புண்ணியம். சரந்தாங்கி கிராமத்தை முன்மாதிரியாக கொண்டு, குடியை கெடுக்கும் மது எனும் கொடூரனுக்கு சாவு மணி அடிக்க பிற கிராமங்களும் முன்வர வேண்டும்.


10) படத்திலிருப்பவர் பெயர் ராதாகிருஷ்ணன் என்று படித்த நினைவு. படித்த இடத்திலேயே பெயர் தவிர வேறு விவரம் இல்லை. படங்கள் பேசும் இவர் சேவையை என்று மட்டுமே பார்த்தேன். குறித்து வைத்திருந்த அந்தப் பெயர் விவரம் சேமிக்கப் படாததால் சரியான விவரம் கொடுக்க முடியவில்லை. மன்னிக்கவும்.

                                

6.3.13

(ம)ம.போ.ம.வ.... நிலவும் மயிலும்

                                           
                                                   
                                                    
                                                   நலமா நிலவே...

                                                   வில(க்)கிச் சென்ற நீ

                                                   ஏன் உன் நினைவுகளை மட்டும்
                                                   என்னிடம் விட்டுச் சென்றாய்?

                                                   

                                                    தளும்புகிறது இன்னும்
                                                    என் மனசு
                                                    வில(க்)கிய
                                                    காரணமறியாது..

                                                   தொலைக்காமல்

                                                   வைத்திருக்கிறேன் உன்
                                                   நினைவுகளைப் பத்திரமாக.
                                                   கலையவில்லை இன்னும்
                                                   உன் கனவுகள் என்னிடம்...

                                                  

                                                   நலமா நிலவே..

                                                   நான் துளியாவது

                                                   மிச்சமிருக்கிறேனா
                                                   உன்
                                                   நினைவில்?


====================================

மயில் பெண்ணே....

                                                

                                                வண்ணத் தோகை
                                                அமையாத
                                                சோகமா மயில் பெண்ணே...


                                               

                                                நிறம் என்னும்
                                                வரம்
                                                உடலிலும்
                                                அமையாத வருத்தமா கண்ணே..

                                                கைம்மையின்

                                                நிறமல்ல,
                                                களங்கமில்லா நிறம் அது!


                                                

                                                நிறத்தில் என்ன இருக்கிறது?

                                                வெண்மை
                                                தூய்மையின் நிறம்
                                                என்று
                                                யார் சொல்வார்
                                                உன்னிடம்?   

                         

4.3.13

கண்ணே, மணியே, சனியே, வெள்ளியே....

                    
நான் ஒரு விகடன் பிரியன். இன்றைய காலகட்டத்தில் விகடனில் மட்டும் தான் சரியான விகிதத்தில் எல்லாம் தருகிறார்கள் என்று நினைக்கிறவன்.
 ஒவ்வொரு இதழுக்கும் (சிலேடை இல்லை) ஒவ்வொரு தனித்துவம் உண்டு. அமுதசுரபி நான் வாங்கும் மற்றொரு பத்திரிகை. அவர்களுடைய ஸ்பெஷாலிட்டி அந்தக் காலத்து பெரிய எழுத்தாளர், பெரிய கவிஞர், பெரிய தேச பக்தர் இப்படியான ஒருவரது வாரிசு அல்லது ரசிகர் என்ன எழுதினாலும் அதை ஆர்வத்துடன் பிரசுரிப்பது.  
             
             
குமுதம் வாங்கிக் கொண்டிருந்தேன்.  அதில் தலை தூக்கும் ஆபாசத்தை சகிக்க முடியாமல் அதை நிறுத்தி விட்டேன்.  எப்படியானாலும் விற்பனை என்பதே அவர்களது தாரக மந்திரம் போலும்.  வம்பு, கிசுகிசு தாக்கு கிளுகிளுப்பு என்று மசாலா மிக்சர் ஆக ஆக்கிவிட்டார்கள் நன்றாய் இருந்த குமுதத்தை.  எஸ். ஏ பி என்ற கெட்டிக்காரர் மசாலாவை அளவாகப் போட்டு (நம்ம சுஜாதா மாதிரி) குமுதத்தை எப்போதும் டாப்பில் வைத்திருந்த காலத்தை எண்ணி ஏக்கப் பெருமூச்சு விடுகிறேன்.
             
அடுத்தது கல்கி.  ரா.கி. மேலிருந்த பக்தி காரணமாக விடாப்பிடியாக கல்கி வாங்கிப் படித்தது ஒரு காலம்.  அது இப்போது முற்றிலும் நமக்குத் தெரியாதவர்களால் எழுதப் படுகிறது.  விகடன் அளவு, விகடன் உத்தி, விகடன் எழுத்துரூ என்று என்ன செய்வது எப்படிச் செய்வது என்று தெரியாமல் திண்டாடுவதாக எண்ணத் தோன்றுகிறது. 
            
என் அபிமான விகடனுக்கும் தோல் வியாதி, விக்கல், இருமல் வருவதுண்டு.  என்றாலும் ஒப்பிடும்போது அது முன்னணியில் இருப்பதாக எனக்குப் படுகிறது. சமூக ஆர்வம், தொண்டு இவற்றில் அதன் பணி பாராட்டத் தக்கது.  

இது விகடன் பாராட்டுக்கட்டுரை அல்ல. விகடனில் கவிதைகள் சொல்வனம் என்ற தலைப்பில் வெளியாகின்றன.  குரு சுஜாதா சொன்ன மாதிரி யாரும் ஐம்பது வருஷம் கவிதை எழுதக் கூடாது என்று ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று நமக்கும் தோன்றும்.

விகடன் கவிதைகளில் குழந்தைகளைக் கொண்டாடுவதும், காதலிக்கு ஆர்வச் செய்திகளை அனுப்புவதும் அடிக்கடி காணக் கிடைக்கிறது. "குழந்தை எடுத்துக் கொஞ்ச பொம்மையில் ஒளிந்திருந்தார் கடவுள்" என்ற பாணியில் நிறைய கவிதைகள்.  இவர்கள் எல்லாம் குழந்தைகளை அதட்டி, அடித்து, கண்டித்து வளர்க்கவே மாட்டார்களோ என்று நினைக்கத் தோன்றும். "ஏ சனியனே சோத்தை முழுங்கிட்டு பாடத்தை படிச்சுத் தொலையேன் " என்று கூவும் ரகம் அல்ல போலும்!   
 
காதலி ஸ்தோத்திரம் இதற்கும் ஒரு படி மேலே. " கார்பன் டை ஆக்சைட் இருந்தால்தான் என்ன கண்ணே, அதுதான் எனக்கு தென்றல் காற்று, உன் மூச்சை என் முகத்தருகில் விடு" என்று புலம்பும் கவிஞர் குழு மிகப் பெரியது. 
               
ஒரு பெண் வர்ணிக்கப் படுவதிலிருந்து அவள் ஸ்டேடஸ் என்ன என்று தெரிந்து கொள்ள முடியும்.
                                                                      
மென்மலர்
ஓவியம்\
காவியம்
தேவதை
என் நெருங்கிய சிநேகிதி.  
என் ஆதர்சத் துணை
என் துணை
என் பெட்டர் ஹால்ப் 
என் மனைவி
ஏய் உன்னைத் தானே
இந்த சனி 
இன்னும் பலப் பல. 
    
Age cannot wither, nor custom stale her infinite variety என்று ஷேக்ஸ்பியர் சிரஞ்சிவி வரி ஒன்றை எழுதினார். (அதை மதுரை மணி அய்யரின் இசைக்குப் பொருத்தி ஒரு ரசிகர் எழுதியிருந்தது வேறு விஷயம்). அது சராசரி வாழ்க்கைக்குப் பொருந்தாது என்றுதான் சொல்லவேண்டும். 
             
ஒரு ஆண் அழைக்கப் படுவது இறங்கு வரிசையில் இப்படி இருக்கும்.
           
இந்த சனி,
இவரு
உங்க மாப்பிள்ளை, (அல்லது மாமா அல்லது தம்பி .....இப்படியாக )
டியர்
டேய்
ஹல்லோ 
என் நலம் விரும்பி
என் நெருங்கிய நண்பர்
             
ஆனால் கவிஞர்களுக்கு ஸ்தாயி ஒரு இடத்திலிருந்து மாறுவதில்லை. ஜோக் எழுதுபவர்கள் இதற்கு நேர் மாறு. அது தனிக்கதை. 
                  
:: ராமன் ::   
                  
எங்கள் கமெண்ட்: இதுக்கு போட்டி பதிவு போடுவதற்கு கீதா மேடம் தயாரா? 
               

3.3.13

ஞாயிறு 191: நிறுத்த முடியாத....


 
களைப்படைந்து போனாலும்
நிறுத்த முடியாது
சிறகசைப்பை.
இளைப்பாற முடியாமல்
இடைவிடாப் பயணம்.

2.3.13

பாசிட்டிவ் செய்திகள் 24/2/2013 முதல் 2/3/2013 வரை


எங்கள் B+ செய்திகள்.     

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும். 

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....   

 
====================================================================


1) ஆதரவற்றவர்களுக்கு உதவும் உண்மையான கதாநாயகன் திரு நாராயணன் கிருஷ்ணன்..(இன்று ஒரு தகவல் முகநூலில் கொடுத்திருக்கும் விவரம் இவ்வளவுதான் என்றாலும் புகைப்படம் பேசுகிறது)
 2)  தவித்த வாய்க்கு தண்ணீர் தருவது தமிழர் மரபு. ஆனால், சென்னையில், தங்கத்தை போலதண்ணீரையும் விலை கொடுத்து வாங்குவதால், அடுத்தவர்களின் தாகத்தை தீர்க்க யாரும் தயாராக இல்லை என்பது தான் நிதர்சனம்.

இந்த நிலையில், தங்கள் சொந்த பணத்தில் மாதம், 12 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து பாதசாரிகளுக்கும்,பயணிகளுக்கும் தரமான, "மினரல் வாட்டர்' வழங்கி, தாகத்தை தீர்த்து வருகின்றனர், சென்னை விமானநிலையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அமைப்பு சாரா ஆட்டோ ஓட்டுனர் நலச் சங்கத்தினர்.
                           பாதசாரிகளுக்கு இலவச "மினரல் வாட்டர்' ஆட்டோ ஓட்டுனர்களின் அசத்தல் சேவை

தவித்த வாய்க்கு தண்ணீர் தருவது தமிழர் மரபு. ஆனால், சென்னையில், தங்கத்தை போலதண்ணீரையும் விலை கொடுத்து வாங்குவதால், அடுத்தவர்களின் தாகத்தை தீர்க்க யாரும் தயாராக இல்லை என்பது தான் நிதர்சனம்.

இந்த நிலையில், தங்கள் சொந்த பணத்தில் மாதம், 12 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து பாதசாரிகளுக்கும்,பயணிகளுக்கும் தரமான, "மினரல் வாட்டர்' வழங்கி, தாகத்தை தீர்த்து வருகின்றனர், சென்னை விமானநிலையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அமைப்பு சாரா ஆட்டோ ஓட்டுனர் நலச் சங்கத்தினர்.

சங்கத்தின் முன்னாள் துணை செயலர் சரவணன்கூறியதாவது:கடந்த நான்கு ஆண்டுகளாக சங்கத்தின் சார்பில், 24 மணிநேர இலவச குடிநீர் சேவையை வழங்கி வருகிறோம். நாளொன்றுக்கு, 15 முதல் 40 லிட்டர் வரை செலவாகிறது. இந்த வகையில் மாதம் 12 ஆயிரம் ரூபாய் வரை குடிநீருக்காக செலவழிக்கிறோம். மீதி பணத்தை சங்க உறுப்பினர்களின் இல்ல திருமணத்திற்கும், மருத்துவ செலவிற்கும்வழங்குகிறோம்.

விமான நிலைய பாதசாரிகள், பஸ் பயணிகள், வாரசந்தைக்கு வருவோர், காவல்துறையினர், மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் என, அனைவரும் இந்தகுடிநீரை அருந்துகின்றனர். எங்கள் சேவையை பற்றி அறிந்தவர்கள், ஒரு சிலர் பணம் கொடுத்து, எங்கள் சேவையில் அவர்களும் பங்கெடுத்துக் கொள்கின்றனர். அவர்களின் பெயர்களை ஸ்டாண்டில் உள்ள தகவல் பலகையில் எழுதி நன்றி தெரிவிப்போம்.இவ்வாறு சரவணன் கூறினார். 
 சங்கத்தின் முன்னாள் துணை செயலர் சரவணன்கூறியதாவது:கடந்த நான்கு ஆண்டுகளாக சங்கத்தின் சார்பில், 24 மணிநேர இலவச குடிநீர் சேவையை வழங்கி வருகிறோம். நாளொன்றுக்கு, 15 முதல் 40 லிட்டர் வரை செலவாகிறது. இந்த வகையில் மாதம் 12 ஆயிரம் ரூபாய் வரை குடிநீருக்காக செலவழிக்கிறோம். மீதி பணத்தை சங்க உறுப்பினர்களின் இல்ல திருமணத்திற்கும், மருத்துவ செலவிற்கும்வழங்குகிறோம்.

விமான நிலைய பாதசாரிகள், பஸ் பயணிகள், வாரசந்தைக்கு வருவோர், காவல்துறையினர், மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் என, அனைவரும் இந்தகுடிநீரை அருந்துகின்றனர். எங்கள் சேவையை பற்றி அறிந்தவர்கள், ஒரு சிலர் பணம் கொடுத்து, எங்கள் சேவையில் அவர்களும் பங்கெடுத்துக் கொள்கின்றனர். அவர்களின் பெயர்களை ஸ்டாண்டில் உள்ள தகவல் பலகையில் எழுதி நன்றி தெரிவிப்போம்.இவ்வாறு சரவணன் கூறினார்.
 3)  குங்குமம் தோழி டிசம்பர் 2012 இதழில் வெளியான ‘சுதா சந்திரனுடனான சந்திப்பு’ எனக்குப் பல ஞாபகங்களைக் கிளறிவிட்டுவிட்டது. முதல் நாள் வரை பட்டுப்பூச்சி போலப் பறந்து திரிந்த என் 17 வயதே ஆன மகள் மிருதுபாஷிணிக்கு நடந்த ஒரு விபத்து, இப்போதும் குலை பதறச் செய்கிறது...அப்போது நாங்கள் ஹைதராபாத்தில் இருந்தோம்.

மிருதுபாஷிணி பொட்டி ஸ்ரீராமுலு பல்கலைக்கழகத்தில் ‘பி.ஏ. கிளாசிக்கல் டான்ஸ்’ படித்துக் கொண்டிருந்தாள். அழகாகவும் துறுதுறுவென்றும் இருந்ததால், அவ்வப்போது பல்கலைக்கழக நாடக்குழுவில் நடிக்கக் கூப்பிடுவார்கள். உற்சாகமாகக் கலந்து கொள்வாள். நடனத்திலும் நடிப்பிலும் அவ்வளவு ஈடுபாடு அவளுக்கு.

2000 மே 5... வாராங்கல் அருகில் நடந்த ஒரு திருமணத்துக்கு குடும்பத்தோடு போயிருந்தோம். திருமண வீட்டார் மண்டபத்திலிருந்து வாராங்கல்லுக்கு வர ஒரு ஜீப் ஏற்பாடு செய்திருந்தார்கள். திருமணம் முடிந்து நாங்கள் ஜீப்பில் திரும்பினோம். முன்சீட்டில் மிருதுபாஷிணி உட்கார்ந்திருந்தாள். அவள் பக்கத்தில் இரண்டு குழந்தைகள். 
                          
இன்றைக்கும் மிருதுபாஷிணி, சுதா சந்திரன் நடிக்கும் சீரியல்களை ரசித்துப் பார்க்கிறாள்.

அவர் நகையணியும் நேர்த்தி, ஆடை அலங்காரம், தூக்கலான மேக்கப் எல்லாமே அவளுக்கு மிகவும் பிடிக்கும். என் பெண், ஒரு பெரிய விபத்திலிருந்து மீண்டெழுந்து சாதாரணமாக வாழ்கிறாள் என்றால் அதற்கு சுதாவே காரணம்! அவரை இதுவரை சந்தித்தது இல்லை. என்றாலும், எங்களுக்கு அவர் தன்னை அறியாமலேயே செய்த உதவி ஒப்பற்றது. இதை என்னால் என்றைக்கும் மறக்கவே முடியாது. அவருக்கு ‘குங்குமம் தோழி’ மூலமாக நன்றி சொல்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
வேகமாக போய்க்கொண்டிருந்த ஜீப் திடீரென நிலை தடுமாறி, கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மோதியது. என் மகளைத் தவிர வேறு யாருக்கும் அதிக காயம் இல்லை. அவளுடைய இடதுகால் தொடை எலும்பு சுக்கல் சுக்கலாக உடைந்து போனது. நாங்கள் துடித்துப் போனோம். அவள் திரும்ப எழுந்து நடப்பாள் என்கிற நம்பிக்கையையே இழந்து போனோம். சிகிச்சை முடிந்தாலும் அவளால் நடக்க முடியவில்லை.

அழுகையும் வலியும் சுயபச்சாதாபமும் கதறலுமாக அந்தச் சின்னப்பூ கதறும்போதுதான் அருமருந்தாக, வாராது வந்த மாமணியாக உதவிக்கரம் நீட்டினார் சுதா சந்திரன். என் மகளுக்கு சுதா சந்திரனை மிகவும் பிடிக்கும். ‘மயூரி’ படம் பார்த்திருந்தாள். நிஜமாகவே அவருக்குக் கால் கிடையாது என்பது தெரிந்தது முதல் அவருடைய நடனத்தின் மீது அவளுக்கு தனி ஈர்ப்பு!

இதைத்தான் நான் பயன்படுத்திக் கொண்டேன்... அவள் வலிதாங்காமல் அழும்போதும், சுயபச்சாதாபத்தில் கதறும்போதும் சுதா சந்திரனை ஞாபகப்படுத்துவேன். ‘‘அவர் காலை இழந்துவிட்டு நடனமே ஆடுகிறாரே... குறைந்தபட்சம் நீ நடக்க வேண்டாமா? உன் காலை வெட்டிவிடவில்லை. அதைக் காப்பாற்றத்தான் இந்தப் போராட்டம்! நீ அவரைப் போல சாதிக்கப் பிறந்தவள்’’ என்றெல்லாம் பேசுவேன்.

‘‘நீ நடக்கணும்... நடந்துதான் ஆகணும்’’ என்று அவள் உறங்கும்போது, அவள் கையை பிடித்த வண்ணம் ஒரு மந்திரம் போல உச்சரித்துக்கொண்டே இருப்பேன். என் மகள் மெதுவாகத் தேறினாள். இரண்டு ஊன்றுகோல் கட்டைகளை வைத்துக்கொண்டு நடந்து பழகினாள். கல்லூரிப்படிப்பு முடித்து, எம்.பி.ஏ.யும் முடித்து இப்போது கட்டைகள் எதுவும் இல்லாமல் சாதாரணமாக நடக்கிறாள்.

விப்ரோவில் அசிஸ்டென்ட் மேனேஜராக பணியாற்றுகிறாள். 2012 டிசம்பர் 9 அன்று அவளுக்குத் திருமணமும் நடந்தது. என் கனவு நனவான நாள் அது! ‘மற்ற பெண்களைப் போல அவளும் திருமணம் செய்துகொண்டு வாழ வேண்டும்’ என்று ஒரு தாயாக நான் ஆசைப்படுவது நியாயம்தானே?
 4)  பெரம்பலூர் மாவட்ட கலெக்டர், அதிரடியான மாவட்ட ஆட்சி தலைவர்.

ஒரு நாள் பேரூந்தில் மக்களோடு மக்களாக பயணித்து கொண்டே அவர்களுடைய பிரச்சினைகளை விசாரிப்பார். இன்னொரு நாள் மாறு வேடத்தில் திரை அரங்குகளுக்கு சென்று டிக்கெட்டுகளுக்கு சரியான தொகை தான் வசூலிக்கிறார்களா என்று விசாரிப்பார். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஓர் அலுவலகத்திற்கு அதிகாரிகளுக்கே தெரியாமல் விசிட் அடிப்பார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக இயங்குபவர்கள் கைகளில் நிச்சயம் தாரேஸ் அஹம்மதுவின் மொபைல் எண்கள் இருக்கும் 
                                     Like here first -->> @[433124750055265:274:இன்று ஒரு தகவல். Today A Message.]
பேரூந்தில் பயணம் செய்த மாவட்ட கலெக்டர்...! 

யார் இந்த கலெக்டர்..? பெரம்பலூர் மாவட்ட மக்களின் புதிய ஹீரோ தாரேஸ் அஹம்மது. இவர் தான் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர், அதிரடியான மாவட்ட ஆட்சி தலைவர்.

ஒரு நாள் பேரூந்தில் மக்களோடு மக்களாக பயணித்து கொண்டே அவர்களுடைய பிரச்சினைகளை விசாரிப்பார். இன்னொரு நாள் மாறு வேடத்தில் திரை அரங்குகளுக்கு சென்று டிக்கெட்டுகளுக்கு சரியான தொகை தான் வசூலிக்கிறார்களா என்று விசாரிப்பார். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஓர் அலுவலகத்திற்கு அதிகாரிகளுக்கே தெரியாமல் விசிட் அடிப்பார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக இயங்குபவர்கள் கைகளில் நிச்சயம் தாரேஸ் அஹம்மதுவின் மொபைல் எண்கள் இருக்கும் 

குடி நீர் பிரச்சினையில் தொடங்கி, சாதிச் சண்டைகள் வரை எங்கே எது நடந்தாலும் ஒரே ஓர் அழைப்பில் பிரச்சினையை முடித்து கொள்கிறார்கள் பெரம்பலூர் மாவட்ட மக்கள்.

பதவி ஏற்று ஐந்து மாதங்களில் மக்களை தேடி 45 ஆயிரம் மனுக்களை பெற்றுள்ளார், அதில் 75 சதவீத மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது.

இவரது பணியை பாராட்டி முதல்வர் பரிசு வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

நம் வாழ்த்துக்களையும் மாவட்ட கலெக்டருக்கு பகிர்வோம்...!
 குடி நீர் பிரச்சினையில் தொடங்கி, சாதிச் சண்டைகள் வரை எங்கே எது நடந்தாலும் ஒரே ஓர் அழைப்பில் பிரச்சினையை முடித்து கொள்கிறார்கள் பெரம்பலூர் மாவட்ட மக்கள்.

பதவி ஏற்று ஐந்து மாதங்களில் மக்களை தேடி 45 ஆயிரம் மனுக்களை பெற்றுள்ளார், அதில் 75 சதவீத மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது.

இவரது பணியை பாராட்டி முதல்வர் பரிசு வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

நம் வாழ்த்துக்களையும் மாவட்ட கலெக்டருக்கு பகிர்வோம்...!