8.3.14

பாஸிட்டிவ் செய்திகள்





1) ஏலகிரி ஹோட்டல். “பணத்துக்காக வாழறதில்லிங்க; வாழறதுக்குதாங்க பணம்” பெரிய தத்துவத்தை எளிதாகச் சொல்கிறார் இந்த ஓட்டலின் உரிமையாளர் நாகராஜ்.

2) உழைப்புக்கோர் ஆரோக்கிய சுஜித்.

3) அன்றைய குழந்தைத் தொழிலாளி. இன்றைய பொறியியல் பட்டதாரி!

        
                                              

 
4) சாதிக்க வயது ஒரு தடையல்ல! 40 வயதிலும் சாதிக்கலாம் சி.ஏ.! சி.ஏ., தேர்வில், 45 வயதில், முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றிருக்கும் மணிமேகலை: என் சொந்த ஊர், செட்டிநாட்டில் உள்ள ஓக்கூர். அப்பா, கோயம்புத்தூரில் பிசினஸ் செய்து வந்ததால், இங்கே தான் பி.காம்., படித்தேன். சி.ஏ., படிக்க வேண்டும் என்ற சின்ன ஆசை, மனதுக்குள் இருந்தது. ஆனால், பி.காம்., கடைசி ஆண்டு படிக்கும் போதே, கல்யாணம் ஆகி விட்டது. 

                                                       

 
அப்புறம், சி.ஏ., விஷயத்தையே மறந்து விட்டேன். கணவர் வேலை காரணமாக, முதலில், மும்பை, பிறகு, ஆப்பிரிக்கா நாடு என இடம் மாறவே, 15 ஆண்டுகள், அவருடன், அங்குமிங்கும் சென்றேன். 2003ல், இந்தியா திரும்பினோம். மகன் இன்ஜினியரிங் காலேஜில் சேர்ந்தபோது, அவ னுக்காக, கோயம்புத்தூரில் தங்கியிருந்தேன். பக்கத்து வீட்டுப் பெண்கள், சி.ஏ., சேர்ந்து படித்தது தெரிந்ததும், அடி ஆழத்தில் புதைந்து, கிட்டத்தட்ட மறைந்து போன ஆசையை, துளிர்விடச் செய்தது.
 
40 வயதில் படிப்பா என, நான் தயங்கின போது, 'இந்த வயசுல நீ சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் ஆனா, எங்களுக்குத் தானே பெருமை'ன்னு சொல்லி, கணவர் உட்பட அனைவரும், பக்கபலமா இருந்தனர். சி.ஏ., இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தபோது, சிறிய வயதினருடன், அம்மா வயதில் இருந்த எனக்கு, ஆரம்பத்தில் என்னவோ போல தான் இருந்தது. ஆனா, அனைவரிடமும் சேர்ந்து, விவாதித்து, குழுவாக படிக்கத் துவங்கியதும், கொஞ்சம் கொஞ்சமாக என் தயக்கங்கள் விலகின. 'இன்டர்' பிரிவில் ஏழு, 'பைனல்' பிரிவில் எட்டு என, இரண்டிலும் சேர்ந்து, 16 பேப்பர் எழுத வேண்டும். ஒன்றில், 'பெயில்' ஆனா கூட, திரும்ப அந்த குரூப் மொத்ததையும் எழுத வேண்டும். என்னுடன் சேர்ந்த பெண்கள், 'இன்டர், பைனல்' பிரிவை சேர்த்து எழுதினர். நான், தனித்தனியா எழுதினேன். அதனால, இன்டர் முடிச்சு, பைனல் வரும் போது, என்னுடன் படித்த யாருமே இல்லாததால், குரூப் ஸ்டடி மற்றும் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாமல் கஷ்டப்பட்டேன்.

கோச்சிங் சென்டர், ஆன்-லைனில் படித்து, 2013ல், வெற்றிகரமாக முடித்தேன். கோவை, பெங்களூரு கம்பெனிகளில் இருந்து, வேலைக்கான அழைப்புகள் வந்துள்ளன. இப்போதைக்கு, மதுரை போய், கணவருடன், 'செட்டில்' ஆக வேண்டும். அங்கேயே, தனியாகவோ, 'பார்ட்னர்ஷிப்'லயோ, 'பிராக்டிஸ்' ஆரம்பிக்க வேண்டும் என்ற, ஐடியா இருக்கிறது!


5) தனியார் பள்ளியில் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிப்ப தை நிறுத்தி, அரசு பள்ளியிலேயே நிறைவான கல்வி பெற உதவும், தலைமை ஆசிரியை சுகிகலா
 
                                                            Photo: அரசு பள்ளிக்கு விளம்பரமா!

தனியார் பள்ளியில் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிப்பதை நிறுத்தி, அரசு பள்ளியிலேயே நிறைவான கல்வி பெற உதவும், தலைமை ஆசிரியை சுகிகலா: 

நான், காஞ்சிபுரம் மாவட்டம், ஆத்தனஞ் சேரியில் உள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், தலைமை ஆசிரியராக பணியாற்றுகிறேன். ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில், எட்டுஆசிரியர்கள் பணியாற்றுகிறோம்.கடந்த, 1962ல் துவங்கப்பட்ட இப்பள்ளி, 2012ல், பொன் விழாவை கொண்டாடியது. 

2013-14ம் கல்வியாண்டில், இங்கு, ஆங்கில வழிக் கல்வியை, புதிதாக அறிமுகம் செய்தோம்.'பள்ளி கட்டணம், டொனேஷன், வேன் கட்டணம் என, ஆயிரக்கணக்கில் பணத்தை தனியார் பள்ளியில் செலவழிப்பதை நிறுத்தி, உங்கள் குழந்தைகள் நிறைவான கல்வி பெற, இந்த அரசு பள்ளியில் சேருங்கள்' என, துண்டு பிரசுரம் வெளியிட்டு, இப்பள்ளியை விளம்பரப்படுத்துகிறோம். அதற்கேற்ப, தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை, இங்கும் செய்து தந்துள்ளோம். 

இதனால், இந்த கல்வியாண்டில் மட்டும், 43 குழந்தைகள், முதல் வகுப்பில் சேர்ந்து உள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு வெறும், 20? பேர் தான் சேர்ந்தனர். ஆங்கில வழிக்கல்வியின் அறிமுகமும், அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களுமே, இக்கூடுதல் சேர்க்கைக்கு காரணம். தமிழ் வழி, ஆங்கில வழி என, பாகுபாடின்றி தரமான கல்வியை, எல்லா அரசு பள்ளியிலும் கொடுத்தால், பொதுமக்கள் தனியார் பள்ளிகளை நிச்சயம் நாட மாட்டார்கள். அதற்கு, எங்கள் அரசு பள்ளி, ஒரு சாட்சியாக இருக்கும். 

இங்கு படிக்கும் குழந்தைகள், தூய்மையான காற்றை சுவாசித்து, ஆரோக்கியமாக இருக்க, பள்ளி வளாகத்தில் மூலிகை தோட்டம் அமைத்தோம். திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்களும், காலை, 8:30? மணி முதல், 9:30 மணி வரை, 'ஸ்போக்கன் இங்கிலிஷ்' வகுப்புகள் எடுக்கிறோம்.மேலும், தினமும் மதியம், 12:00 மணிக்கு, 'யோகா' பயிற்சி தருகிறோம். சிறப்பு வகுப்புகள் மூலம், தினமும் பாட்டு, நடனம், கணினி மற்றும் நுண்ணறிவு திறனை வளர்க்கும் விளையாட்டுகளையும் சொல்லி தருகிறோம். 

இதற்காக, ஒவ்வொரு மாதமும், 13 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. என்னுடைய, ஆசிரியர் பணியை பாராட்டும் விதமாக, 2012-13ம் ஆண்டிற்கான, ஜனாதிபதியின், 'நல்லாசிரியர் விருது' கிடைத்தது. மேலும், தமிழக அரசின், 'சிறந்த பள்ளி'க்கான விருதும், கடந்த ஆண்டு, எங்கள் பள்ளிக்கு கிடைத்த தில், பெருமை அடைகிறோம்.

[தினமலர் - 'சொல்கிறார்கள்' பகுதியிலிருந்து]


6) சர்வதேசப் பெண்கள் தினமான இன்று, எழுத்துலகில் சாதனைகள் பல செய்துவரும், பல்வேறு திறமைகள் அமையப்பெற்ற  நம் வாசக பெண் நண்பர்கள் - மூத்த பதிவர் சொல்லுகிறேன் காமாட்சி அம்மா, 'எல்லோரும் இனிதாக வாழவேண்டும்' என்று எப்போதும் சொல்லும் அன்பே உருவான வல்லிம்மா,   எண்ணங்களையும், ஆன்மீகத்தையும், புகைப்படங்களையும், பயண விவரங்களையும், சமையல் விவரங்கள், கண்ணன் கதையும் என்று தனித் தனி ப்ளாக்குகளில் எழுதி கலக்கி வரும் கீதா மேடம்,  அழகிய கதைகள் எழுதும் ஹேமா (HVL), அறிவுசார் பதிவுகள் எழுதும் ஹுஸைனம்மா, கவிதாயினி ஹேமா

பல்சுவைப்பதிவுகள் வழங்கும் கோமதி அரசு மேடம், விவேகானந்தர் அச்சுப்புத்தகமும், சாதாம்மணிகள் மின்புத்தகமும் வெளியிட்டிருக்கும், பல்வேறு தளங்களிலும் சளைக்காமல் எழுதி வரும் ரஞ்சனி நாராயணன் மேடமும்,  அரட்டை ராஜலக்ஷ்மி பரமசிவம், துளசி கோபால் மேடம், அருணா செல்வம்,  கதம்ப உணர்வுகள் மஞ்சுபாஷிணி சம்பத்குமார், மாலாவின் எண்ணங்கள்  இஷா மாலா,

middleclassmadhavi அன்னபட்சி, ங்கா உள்ளிட்ட புத்தகங்களும், பல்வேறு பெண்கள் பத்திரிகையிலும் எழுதி வரும் திருமதி தேனம்மை லக்ஷ்மணன், கோவில் அனுபவங்கள், படித்த புத்தகங்கள், சமையல் என்று எழுதி வரும் திருமதி ஆதி வெங்கட், சிறந்த புகைப்பட நிபுணரும், அடைமழை, இலைகள் பழுக்காத உலகம் புத்தகங்கள் எழுதியவரும், பல்வேறு தளங்கள், பல்வேறு பத்திரிககைளில் எழுதி வரும் திருமதி ராமலக்ஷ்மி ராஜன், அதே போன்றே புகைப்பட நிபுணர்,  பல்வேறு தளங்களில் எழுதுபவர், 'சிறகு விரிந்தது' கவிதைப் புத்தகம் வெளியிட்டிருப்பவர் அமைதிச்சாரல் திருமதி சாந்தி மாரியப்பன் அவர்கள்,  

ஆன்மீகப் பதிவர் ராஜராஜேஸ்வரி மேடம் , இமாவின் உலகம் இமா, கற்றலும் கேட்டலும்   திருமதி ரேவதி வெங்கட்,  தென்றல் சசிகலா கீதமஞ்சரி, சமீபத்திய டிவி புகழ், முகநூல் பிரபலம் அனன்யா மகாதேவன்,  எங்கள் காசு சோபனா ஏஞ்சலின்  உள்ளிட்ட அனைத்து பெண் பதிவர்களுக்கும் எங்கள் வாழ்த்துகள். 

உங்கள் சாதனைகள் தொடரட்டும். மென்மேலும் சிகரங்கள் தொட 'எங்கள்' வாழ்த்துகள்.

5.3.14

உள்பெட்டியிலிருந்து 3 2014



                                                          

ஜோக்....ஜோக்...ஜோக்...!

வாத்தியார் : ஏண்டா டெய்லி என்னைப் பார்த்ததும் மட்டும் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கறே?"
மாணவன் : "டாக்டர்தான் தலைவலி வரும்போது மட்டும் கண்ணாடி போடச் சொன்னார்!"
 
*******************************************************************
ச்சே.... என்ன கண்டுபிடிப்பு!

உலகம் எவ்வளவு வேகமாக வெளியே மாறுதலடைந்தாலும் அதைப் பகிர நாம் தேடுவதென்னவோ நம் பழைய நண்பர்களைத்தான் இல்லை?
 
******************************************************************

அடுத்த கண்டுபிடிப்பு!

 
ரசாயன ஆயுதத்தைவிடத் தீவிரமான ஆயுதம் நேசிப்பவர்களின் மௌனம்.
 
****************************************************************************

ச்ச்ச்சே.... என்ன உலகமடா.... 

நம்மை விரும்புபவர்களை அலட்சியம் செய்கிறோம். அலட்சியம் செய்பவர்களை விரும்புகிறோம். புன்படுத்துபவர்களை நேசிக்கிறோம். நேசிப்பவர்களை புண்படுத்துகிறோம். விந்தையான உலகம்!
 
*********************************************************************
 
                                                      


கொடைவள்ளல்
 
உச்சியிலிருந்த அழகிய ஒற்றை மலரைப் பறிக்க மரம் ஏறியவன் தவறி விழுந்தானாம். கடவுளைச் சபித்தவண்ணம் கண்திறந்த போதுதான் தெரிந்ததாம் அழகிய தாமரை மலர்களின் நடுவே விழுந்திருப்பது. நம் விருப்பங்களைக் கடவுள் பறிப்பதில்லை. இன்னும் அதிகமான வாய்ப்புகளை அள்ளித் தருகிறான்.
 
***********************************************************

                                                             
 
வெள்ளைமனம் 
 
ஆசிரியர் கரும்பலகையை அழிக்கும்போது குழந்தையும் தான் எழுதியதை ரப்பரால் அழிக்கிறது. குழந்தை மனம்!
 
*************************************************************
 
                                                       
                                                       
யாதோங் கீ பாராத்...

நினைவுகள் விநோதமானவை. கூட்டத்திலிருக்கும்போது நம்மை அண்டுவதில்லை. தனித்திருக்கும்போது ஒரு பொதுக்கூட்டம் போலவே சூழ்ந்து கொள்கின்றன.
 
******************************************************************

எது பாஸிட்டிவ்?
 
மிகச் சிறப்பான விஷயங்கள் நல்லதாக நடக்கவேண்டும் என்று எதிர் பார்ப்பது பாஸிட்டிவ் எண்ணம் அல்ல. எது நடந்தாலும் ஏதோ நல்லதுக்குத்தான் நடந்திருக்கிறது என்று எண்ணுவதே பாஸிட்டிவ் எண்ணம்.
 
*****************************************************************
 
                                                     

அம்மாடி... இதுதான் காதலா...அட ராமா...

ஒரு இனிய சண்டைக்குப் பின்,

காதலன் : "எதற்காக எனக்கு பிளாங்க் மெசேஜாக அனுப்புகிறாய்?"
காதலி : "ஏனென்றால் நான் உன்னுடன் பேச மாட்டேன்!"
 
******************************************************************

ஆமாம்... கஷ்டமுங்கோ...

அன்பின் அளவை அளப்பது கடினம். அன்பின் காரணம் அறிவதும் கடினம். 
 
****************************************************************

டீலா?
 
"நீங்கள் தூங்குமுன் உங்களைப் புண்படுத்திய எல்லோரையும் மன்னித்து விட்டால், நீங்கள் விழித்து எழுமுன் உங்களை நான் மன்னித்து விடுவேன்" - சாய்ராம்.
 
***************************************************************

தவறில்லை...
 
தவறுகள் வெற்றியின் ரகசியக் கதவு. தவறுகள் அனுபவத்தை அதிகரிக்கின்றன. அனுபவங்கள் தவறுகளைக் குறைக்கின்றன. 

*******************************************************************
 
                                                

பலரும் சிலரும்!

நம்மை அறிந்தவர்கள் ஆயிரம் பேர்கள் இருக்கலாம். ஆனால் நம்மைப் புரிந்தவர் சிலரே. 

*************************************************************

3.3.14

திங்க கிழமை 140303:: வெந்தயக்கீரை உசிலி

                  
வெந்தயக் கீரை ஒரு கட்டு.
நல்லெண்ணெய் ஆறு டீஸ்பூன். 
மஞ்சள் தூள் கால் டீஸ்பூன். 
பெருங்காயப் பொடி அரை சிட்டிகை. 
மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன். 
கடலை மாவு அரை கப். 
உப்பு: தேவைக்கு ஏற்ப. 
    

வெந்தயக் கீரை இலைகளை மட்டும் கிள்ளி எடுத்து, நன்றாகக் கழுவி, பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். 

வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பிலேற்றி, எண்ணெய் காய்ந்ததும், பெருங்காயம், கீரை இலைகள் இரண்டையும் அரை கப் தண்ணீர் விட்டு, வதக்கவும். 

மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, கடலைமாவு இவற்றை நன்றாகக் கலந்துகொள்ளவும். 

வாணலியில் இருக்கும் கீரை வதக்கலில் கடலைமாவுக் கலவையை மெதுவாகத் தூவி, கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும். 

பிறகு, ஸ்டவ்வை சிம்மரில் வைத்து, வாணலியை மூடி வைத்து, மூன்று நான்கு நிமிடங்கள் கழித்து, இறக்கிவிடலாம்.  

இதை சாதத்தோடு பிசைந்தோ அல்லது சப்பாத்திக்குத் தொட்டுக்கொண்டோ சாப்பிடலாம். 
            

1.3.14

பாஸிட்டிவ் செய்திகள்




1) சாதாரண பேருந்து ஒட்டுனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் வருமானத்தில மனைவி, குழந்தைகளுடன் வாழும் சராசரி எளிய இந்தியன்.ஆனால் அந்த இந்தியனுக்குள் அடுத்தவருக்கு உதவுவது ஒன்றே தன் வாழ்க்கையின் லட்சியம் என்று எரியும் ஜோதிதான் அவரைப்பற்றிய இந்த கட்டுரை.இதற்காக பத்து பைசா கூட வாங்கியதும் கிடையாது, வாழ்நாள் முழுவதும் வாங்கப்போவதும் கிடையாது.பரமசிவம்.




2) கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி யானைக்கயம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் மாலிக். இரும்பழி என்ற இடத்தில் உள்ள பள்ளியில், 1992ம் ஆண்டு முதல் ஆசிரியராக பணியாற்றும் மாலிக், ஆற்றை நீந்திக்கடந்து பள்ளிக்கு சென்று, கிராமப்புற மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். இவரைப்பற்றி முன்னர் வந்த செய்தியை முன்னரே நம் பாஸிட்டிவ் செய்திகளில் சொல்லியிருக்கிறோம். இப்போது இந்த செய்தியை, ஊடகங்கள் வாயிலாக, லண்டன் டாக்டர் மன்சூர் ஆலம் என்பவர் கேள்விப்பட்டார். தொடர்ந்து இணையதளம் வாயிலாக, இப்பள்ளியை தொடர்பு கொண்டார்.

இந்நிலையில், திடீரென இந்தியா வந்த டாக்டர் மன்சூர் ஆலம்,70, நேற்று முன்தினம் குறிப்பிட்ட பள்ளிக்கு சென்று ஆசிரியர்கள்,மற்றும் மாணவர்களுடனும் உரையாடினார். தொடர்ந்து ஆசிரியர் மாலிக் தினமும் இரண்டு முறை நீந்தி கடக்கும் ஆற்றை பார்த்தார். ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பைபர் படகை வாங்கி பரிசளிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
                                           

அதுமட்டுமின்றி பள்ளியில் கூடுதல் வகுப்பறையும் அமைத்து தருவதாகவும், கம்ப்யூட்டர்கள் வாங்கித்தருவதாகவும் அவர் உறுதி கூறியுள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து இவர் 40 ஆண்டுகளுக்கு முன் லண்டனுக்கு சென்றுள்ளன மன்சூர் ஆலம், அங்கு 'மென்டல் ஹெல்த்தில்' டாக்டர் பட்டம் பெற்று, அங்கேயே பணியாற்றி வருகிறார். 'படகு கிடைத்தால் தனது தினசரி சிரமத்திற்கு முடிவு கிடைக்கும், மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வகுப்பு எடுக்க முடியும்', என, மாலிக் தெரிவித்துள்ளார்.

3) 'நான்தான் கை நிறைய சம்பாதிக்கிறேனே பிறகு எதற்கு அரசின் சலுகை...' என்று கேட்கிறார் பூவரசு.

                          


4) ஈரம் மகேந்திரன்.


                                  

5)  சாதனைப் பெ
ண்மணி  ஈரோடு கலைவாணி.