புதன், 3 ஜூன், 2020

எல்லோரும் பதில் சொல்லுங்க ...


சென்ற வாரம், யாரும் எங்களை எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. 
அதனால், நாங்களே இங்கே உங்களை ஐந்து கேள்விகள் கேட்கிறோம்.




எல்லோரும் பதில் சொல்லுங்கள். 

1) உங்கள் வாழ்க்கையில், நீங்கள் பெரிதும் மதிக்கும் ஒரே ஒரு நபர் யார்? ஏன்? (ஒரே ஒரு நபரை மட்டும்தான் சொல்லலாம்)

2) முதல் கேள்விக்கு நீங்கள் சொல்லும் பதிலில் உள்ள அந்த நபர், அதாவது நீங்கள் பெரிதும் மதிக்கும் நபர், எங்கள் ப்ளாக் படிப்பவரா?

3)  மனிதர்களுக்கு இன்றியமையாத முக்கிய, அடிப்படை தேவைகள் : உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க ஒரு வீடு. இவற்றிற்கு அடுத்தபடியாக ஒன்றைச் சொல்லவேண்டும் என்றால், எதைச் சொல்வீர்கள்? (ஒன்றை மட்டும்தான் சொல்லலாம்) 

4)  கோவில், குளம், ஆறு, கடல், மேகக்கூட்டம், யானை, இரயில், குழந்தை - இவற்றில் எதைக் கண்டால், உங்களுக்கு மனம் லேசாகி, காற்றில் பறப்பதுபோல இருக்கும். (ஏதேனும் ஒன்றை மட்டும்தான் குறிப்பிடலாம்) 

5)  உங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை, உங்களுக்குப் பிடித்த நபர் ஒருவர் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நிலையில், நீங்கள் .. 

அ) கண்டுக்காம விட்டுடுவீங்க ?

ஆ) இதெல்லாம் எனக்குப் பிடிக்காது என்று முகத்துக்கு நேரே சொல்வீர்கள்?

இ) குறிப்பால் உங்கள் எண்ணத்தை உணர்த்த முயற்சி செய்வீர்கள்?


=========================================

மின் நிலா பற்றி சென்ற புதன் பதிவிலும், ஞாயிறு பதிவிலும் கூறப்பட்டுள்ள சில கருத்துரைகளை ஆவணப்படுத்துவதற்காக இங்கே கொடுத்திருக்கிறேன். 

இவற்றில் சில கருத்துகளுக்கான எங்கள் விளக்கம் மின் நிலா 003 புத்தகத்தில் கொடுக்கப்பார்க்கிறோம். 

===================

திங்கள் முதல் சனி வரை என்னும்போது ஞாயிறன்றுப் பதிவு விடுபடுமே!
====
புதிய பக்கங்களை இணைக்கலாம்.
=====
புத்தகத் தோற்றம் கிடைக்க இங்கிருக்கிற பதிவுகளைத் தூக்கி அப்படியே அங்கே போடக்கூடாது. நிறைய எடிட்டிங் சமாச்சாரங்கள் தேவை.

திங்கள், செவ்வாய் போன்ற கிழமைப் பெயர்கள் பதிவுகளுக்கானவை. அதனால் புத்தகத்தில் அவற்றை எடுத்து விடுங்கள். ஒரு தலைப்பின் கீழ் வருகிற மேட்டர் என்ற தோற்றம் மட்டுமே கொடுக்க வேண்டும். பின்னூட்டம்?.. அறவே வேண்டாம். அதற்கு பதில் பத்திரிகை உள்ளடக்கம் பற்றி வாசகர் கருத்துச் சொல்ல வேண்டுமானால், 'ஆசிரியருக்கு..' என்று கடிதப் பகுதியைத் துவக்கலாம். பொறுக்கி எடுத்த மாதிரி பத்தே கடிதங்கள் போதும். அது ஆசிரியரின் தேர்வின்படி இருக்கலாம்.

ஒரு கிழமைக்கான பதிவில் துண்டு துண்டாக இருக்கிற மேட்டர்களை புத்தகத்தின் வெவ்வேறு பக்கங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம். திங்கள், செவ்வாய், புதன் கிழமைப் பதிவுகளைத் தவிர்த்து மற்ற கிழமைப் பதிவுகளில் இப்படிப் பிரித்துப் போடுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

திங்கள், செவ்வாய் என்று இப்படி வரிசையாக புத்தகத்தில் வர வேண்டும் என்றில்லை.

கலந்து கட்டி ஒரு வாரப் பதிவுகளை மாற்றி மாற்றிப் போடுங்கள்.

கவிதைகள் முக்கியம். அதுவும் காலத்திற்கேற்பவான புதுக்கவிதைகள். ஸ்ரீராமின் கவிதைகளை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். எங்கள் பிளாக்கில் தனியே கவிதைகளுக்கான பக்கங்களைத் துவக்கலாம்.

கேள்வி--பதில் பகுதிக்கு ஒரு பெயர் கொடுங்கள். 'தேசிங்குராஜனைக் கேளுங்கள்' என்ற பெயரில் ஒரு பத்திரிகையில் தொடர்ந்து கேள்விகளுக்கான பதில்களை நான் எழுதிக் கொண்டிருந்தேன். அந்த மாதிரி ஒரு பெயர் கொடுங்கள்.

கணினி விஷயத்தில் இதெல்லாம் எப்படி சாத்தியப்படும் என்று எனக்குத் தெரியாது.
ஆசிரியர் குழுவின் பங்களிப்பு தான் முக்கியமாகிப் போகிறது.

மின் நிலா -- நிலாவுடன் பொருந்தாத பெயராக எனக்குத் தோன்றுகிறது. நிலா வேண்டாம் என்றால் அம்புலி என்று பெயர் கொடுத்துக் கொள்ளுங்களேன். இல்லையென்றால் உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு பெயர்த் தேர்வு. யோசியுங்கள்.

மனசில் தோன்றியவைகளை வரிசை படுத்தியிருக்கிறேன். அவ்வளவு தான். ஒரு ஆலோசனை என்றளவில் எடுத்துக் கொண்டால் போதும். 'எங்கள் பிளாக்' ஒரு பத்திரிகை ரூபமெடுப்பது தான் முக்கியமாகிப் போகிறது. அதனால் உங்களால் சாத்தியப்பட்டவைகளைச் செய்யுங்கள். அவை புதுமையாக இருக்கட்டும். மற்றவர்கள் பார்த்து வியக்கிற மாதிரி இருக்கட்டும். வாழ்த்துக்கள்.

======

உங்களின் மின் நிலா முயற்சிக்கு வாழ்த்துக்கள் இந்தப் பதிவைப்படித்துவிட்டு அருமை பாராட்டுக்கள் என்று சொல்லி செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு முயற்சி ஆரம்பிக்கும்போது அதைப் பாராட்டுவதோடு ஆக்கப் பூர்வமான எண்ணங்களைப் பகிர வேண்டும் அப்படிச் செய்ததில் ஜீவி ஒருவர் மட்டுமே அதற்காக அவருக்கு ஒரு பாராட்டு ஜீவி சார் சொன்ன சிறப்பான கருத்துக்கள் அனைத்தும் சரியாகவே இருக்கிறது

அவர் சொன்ன கருத்தோடு என் மனத்தில் தோன்றுவதையும் சொல்லுகிறேன். நீங்கள் இந்த புக்கை வெளியிடும் தளத்தில் இந்த புத்தகம் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் அதன் பின் அதை டெலீட் செய்துவிடுகிறார்கள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் அதற்குக் கட்டண சேவையைப் பயன்படுத்த வேண்டும்.. அதற்குப் பதிலாக நாம் மைக்ரோ சாப்ட் வோர்டில் பதிந்து அதை பிடிஎஃப் ஃபார்மெட்டில் சேமித்து அதை கூகுல் டௌகுமெண்ட்ல் சேவ் செய்து அதை embedded இணைப்பாக எடுத்து நம் தளத்திலே பதிவு செய்தால் நிரந்தரமாக இருக்கும்..

அல்லது சில தளங்கள் இருக்கின்றன அதன் மூலம் இப்படி புத்தகமாக வடிவமைக்கலாம் இது பற்றி முழு விபரத்தை சுரேஷ் என்ற பதிவாளரிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம் அவர் கையெழுத்து பத்திரிக்கை மாதிரி இணையத்தில் எழுதி வெளியிடுகிறார்

அடுத்தாக தற்போதைய பதிவையே எடுத்து வெளியிடுவதற்குப் பதிலாக உங்களின் ஆரம்பக்கால பதிவுகளிலிருந்து ஒரு கதை சமையல் குறிப்பு கட்டுரைகள் இப்படி 2 வாரத்தில் வெளிவந்ததிலிருந்து சிறந்தவைகளை எடுத்து புக் செய்யலாம் இப்படிச் செய்யச் சொல்லக் காரணம் இப்போது பதிவைப் படிக்க ஆரம்பித்தவர்கள் உங்களின் ஆரம்பக் கால பதிவுகள் அனைத்தையும் படித்து இருக்கமாட்டார்கள் அப்படிச் செய்யாமல் இப்போது உள்ள கரெண்ட் பதிவுகளைப் போட்டால் இப்போதுதான் அதைப் படித்தோம் என்று கடந்து சென்றுவிடுவார்கள்...அதன் உங்கள் முயற்சி வீணாகிவிடும்

இப்படி பழைய பதிவுகளை எடுத்து இதழ் தயாரிக்கும் போது உங்கள் குழுவில் உள்ளவர்கள் இது வரை வெளி வராத துணுக்குகள் கட்டுரைகள் நகைச்சுவைகளை ஆங்காங்கே சேர்க்கும் போது அந்த இதழ் புது பொழிவுடனும் ஏற்கனவே பழைய பதிவுகளை படித்தவர்கள் கூட இந்த இதழில் வேறு என்ன புதிய செய்திகள் வந்து இருக்கும் என்று ஆவலோடு மீண்டும் அதைப் பார்க்க ஆரம்பிப்பார்கள் அது உங்கள் முயற்சிக்கு உற்சாகம் மூட்டும்

இப்படி பழைய பதிவுகளில் போடும் போது அதற்கு வந்த சிறப்பான பின்னூட்டங்களையும் சில வற்றை தேர்ந்தெடுத்து அதையும் அவர்கள் பெயருடன் போடுவது நல்லது காரணம் அதைப் பார்க்கும் அந்த கருத்தை இட்டவர்களுக்குச் சந்தோஷம் கொடுக்கும் உதாரணமாகச் சமையல் குறிப்பி வரும் திங்கள் பதிவைப் பகிரும் போது அந்த குறிப்பைப் படித்துவிட்டு சிலர் இப்படிச் செய்தால் இன்னும் சுவையாக இருக்கும் என்று தரும் டிப்ஸ் மற்றவர்களுக்கும் பயன்படும் அது போல உள்ள பின்னூட்டங்களையும் இந்த இதழில் பதியலாம்.

===========
(பதிவுகளை அன்றே) படிக்க முடியாத போது சேர்த்து படித்துக் கொள்ள வசதிதான்.
நன்றி.
=========
வார புத்தகம் சிறந்த முயர்ச்சி. புத்தகத்தை epub ஃபார்மேட்டில் freetamilebooks தளம் செய்வது போல பதிவேற்றிநால் திரைவாசிப்பான் மென்பொருள் கொண்டு வாசிக்கும் எம் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் உபையோகமாக இருக்கும்.
========
மின் நிலா 2 இதழ் பற்றி :

மின் நிலா தொகுப்புப் புத்தகம் நன்றாக இருக்கிறது. அந்த இலைகளோடு கூடிய படம்? அடுக்கு மல்லிப் பூ மாதிரியும் இருக்கு, பாரி ஜாதம் மாதிரியும் இருக்கு. படத்தைப் பெரிசு பண்ணியும் பார்த்தேன். இது ஞாயிற்றுக்கிழமைப் பதில் வந்த படமா? நினைவில் இல்லை. மற்றபடி ஒவ்வொரு பதிவுக்கும் தேர்ந்தெடுத்த கருத்துகளைச் சேர்த்திருக்கிறீர்கள். அரட்டையும் பரவாயில்லை. அவரவர் பெயரோடு வந்திருக்கலாம் என்றாலும் எழுதி இருக்கும் விஷயத்தை வைத்து யார் எழுதினது என்பது புரிகிறது. மஞ்சள் முகப்பு/அட்டை(?) நன்றாக இருக்கிறது. சென்ற வாரம் பார்க்கவில்லை, மறந்துட்டேன். அதான் இன்னிக்கு உடனே பார்த்துக் கருத்தும் சொல்லிவிட்டேன். லே அவுட் நன்றாக உள்ளது. இதிலே உள்ளடக்கம், தலையங்கம் மாதிரிக் கருத்துகள்னு போட்டால் ஓர் மின் இதழுக்கான முழுப் பதிப்பாக ஆகி விடும்.
=============

மின் நிலாவும் அழகான அட்டைப் படங்களுடன் நன்றாக உள்ளது. ஒவ்வொரு நாளும் விடுபட்ட பகுதிகளை அனைவரும் படிக்க உதவும் என்பதோடு, புதுமையாகவும் இருக்கிறது. முதல் பகுதியில் அரட்டையில் ஆசிரியர்களின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் சிந்தனைக்கு விருந்து. ரசித்தேன். மின் நிலாவுக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
===============

இப்போதான் மின்நிலா மின்னூலைப் பார்த்தேன், விரைந்து படித்தேன்.

1. அரட்டை - நல்ல பகுதி. வெறும்ன எ.பி. இடுகைகளைக் கோர்ப்பதற்குப் பதிலாக.
2. கவர்ந்த பின்னூட்டங்கள் அல்லது முக்கிய பின்னூட்டங்கள் - இதைத் தவிர்க்கலாம். இல்லாவிடில், யார் எழுதியது என்று சொல்லாமல் பின்னூட்டங்களை மட்டும் போடலாம் (கண்டண்ட் உள்ளவை மட்டும்). இல்லைனா, சிலர் பெயர் மட்டும் வருவது அவ்வளவாக நன்றாக இருக்காது என்று தோன்றுகிறது.
3. மின்னூலின் முதல் படமும் (மலர்), சில இடுகைகளுக்கு முன் இருக்கும் படமும் கவரவில்லை. இதற்கு நீங்க தேர்ந்தெடுத்து படங்கள் சேர்க்கலாம். அல்லது வாசகர்களிடமிருந்தே படங்கள் வரவைத்து அதனைப் போடலாம் (காபிரைட்டைத் தவிர்க்க. எப்போ உங்களுக்கு போரடிக்குது என்று தோன்றுகிறதோ அப்போ இருக்கவே இருக்கு அனுஷ்கா, பாவனா, தமன்னா போன்றவர்கள்)
4. ஒரு இடுகைக்கும் அடுத்த இடுகைக்கும் இடையில் ஒரு ப்ரேக் (Clear marking) இருக்கணும்.

பொதுவா இடாலிக் ஃபாண்ட் உபயோகிக்க வேண்டாம். படிப்பது கஷ்டம்.

போகப்போக, இது நல்ல புத்தக வடிவம் பெறும். வாழ்த்துகள்.

=============


=============================================



174 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. //ஸ்காட் அதிரா..//
      அச்சச்சோ.. கா வன்னாவுக்குக் காலை எடுத்துப்போட்டு ரெண்டு கொம்பு போடாமல் விட்டாரே:) அதுவரை மகிழ்ச்சி ஹா ஹா ஹா:))

      நீக்கு
  2. ஹா ஹா ஹா நானே வந்தேன்:).. ஆனா நாளைக்குத்தான் வருவேனாக்கும்:) கெள அண்ணன் வன் மினிட் லேட்டூஊஊ:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தூங்கிப்போட்டு பைய வாங்க அதிரா...

      நீக்கு
    2. ஒரு ரகசியம் ஜொள்ளட்டோ... திங்கள் இரவு... திடீரெனப் பார்க்கிறேன்.. எங்கள் புளொக் போஸ்ட் வர ஒரு நிமிடங்கள் இருக்கெனக் காட்டிச்சுதா:))... உடனே என் மனசு சொல்லிச்சுது.. ஆஆஆ புதன்கிழமை எல்லோ.. அப்போ கெள அண்ணனின் போஸ்ட் வரப்போகுது.. 1ஸ்ட்டா ஓடிடலாம் என அடிச்சுப் பிடிச்சு முதல்க் கொமெண்ட்டும் போட்டுவிட்டுப் பார்க்கிறென்ன்.. மேலே போஸ்ட் போட்டவர் ஸ்ரீராம் எனக் காட்டிச்சுதா..

      ஆஆஆ கெள அண்ணனுக்கு என்ன ஆச்சோ.. ஸ்ரீராம் போஸ்ட் போட்டிருக்கிறாரே என கீழிருந்து மேலே படிச்சனா.. அது ஏதோ கதைபோல இருக்கவும், ஆஆஆஆ வியாழக்கிழமை போலும்.. என நினைச்சு.. மேலே வந்தனா.. கேட்டு வாங்கிப்போடும் கதை என இருந்துது ஹா ஹா ஹா அப்போதான் தெரிஞ்சுது அட செவ்வாய்க்கிழமை என ஹா ஹா ஹா... ஜாமத்தில முழிப்பதால் இதுதான் பிரச்சனை கர்ர்ர்:))

      நீக்கு
  3. ஒருமையுள் ஐந்தடக்கல் ஆற்றின் ஒருவர்க்கு எழுமையும் ஏமாப் புடைத்து..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு வார்த்தை விட்டுப்போச்சே! அண்ணன் சீமான் கறி சமைத்துச் சாப்பிட்டுவிட்டாரோ!

      ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
      எழுமையும் ஏமாப்பு உடைத்து.
      (அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:126)

      பொழிப்பு (மு வரதராசன்): ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது.

      நீக்கு
  4. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
    கேள்வி இல்லாத புதனா.?
    ஒருவருக்கும் சந்தேகமே இல்லையா.?
    தொற்று வந்ததில் இவ்வளவு பாதிப்பா.?

    ஒருவருடன் ஒருவர் உரையாடுவதில் தயக்கம் வருமா?

    இது பல குழுமங்களில் பார்க்கிறேன்.
    அவரவர் தன்னுள் உண்டான பயத்தில் ,வேதனையில்
    ஒதுங்குகிறார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த வாரத்துக்கான கேள்விகளா?

      நீக்கு
    2. ஆமாம் என்றே சொல்கிறேன். இந்த நிலை என்னுள்
      எழ வைத்த கேள்விகள். மனித குலத்தின் போக்கையே
      மாற்றிவிட்டதே இந்த நோய்.நன்றி கௌதமன் ஜி.

      நீக்கு
  6. 1,என் வாழ்க்கையில் நான் மதிக்கிறவர் என் அன்னை.
    2
    அவர் இவ்வுலகில் இல்லை. இருந்தால் எபி படித்திருப்பார்.
    3,ஆரோக்கியம். இது இல்லாவிடில் எது இருந்தும் பயனில்லை.
    4,குழந்தை.
    5,பிடிக்காததைக் குறிப்பால் உணர்த்த முற்படுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதில்களுக்கு நன்றி. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்.

      நீக்கு
  7. அவரவர் தன்னுள் உண்டான பயத்தில் /
    வேதனையில்....

    வல்லியம்மா அவர்களில் வார்த்தைகள் சிந்திக்க வைக்கின்றன...

    பதிலளிநீக்கு
  8. முதலாம் கேள்விக்கு இப்போது இங்கே இருப்பவர்களைச் சொல்வதென்றால்
    எழுத்துலகத் தாத்தா திரு.கி.ராச நாராயணன் ஐய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கி ரா ! ஆஹா ! மண்ணின் மணம் வீசும் எழுத்துகள்!

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கேள்வி பதில்களை எதிர்பார்த்து வந்தால் கேள்விகளை இந்த வாரம் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பும் மாநிலங்கள், மாநகரங்கள், நகரங்கள், கிராமங்களில் உள்ள அனைத்து மக்களும் கவனமாகத் தங்கள் ஆரோக்கியத்தைப் பேணும்படிப் பிரார்த்திக்கிறேன். அனைவருக்குமாகப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்குமாகப் பிரார்த்தனைகள். எல்லோரும் இனிது வாழ வேண்டும்.

      நீக்கு
  10. 1.பெரிதும் மதிக்கும் நபர் எனில், நிறையப் பேர் இருந்தாலும் தற்சமயம் எங்கள் குருநாதர் மட்டும்.

    2.ஹாஹா, அவர் இருக்கும் இடம் ஒரே ஒரு நபருக்குத் தான் தெரியும், அவரும் சொல்ல முடியாத நிலை. ஆகவே எங்கள் ப்ளாகெல்லாம் படிக்க மாட்டார்.

    3.இது எல்லாவற்றிற்கும் செலவு செய்யத் தேவையான பணம்

    4.எல்லாமே தான். தினந்தோறும் காலை எழுந்து வரும்போதே கண்களில் படும் அரங்கன் கோபுரத்தில் இருந்து அனைத்துமே என்றாலும் குழந்தைகள், குழந்தையைக் கொஞ்சுவது போன்ற இன்பம் வேறே ஏதும் இல்லை.

    5.மனதுக்குள் வேதனையாக இருக்கும். ஆனால் வெளியே காட்டிக்கொண்டாலோ, அது தப்பு என்றாலோ பிரச்னை வரும் எனத் தெரிந்தால் சும்மாவே இருந்து விடுவேன்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல பதில்கள். நன்றி. யார் அந்த குருநாதர்? (ஸ்ரீராம் உங்களுக்குத் தெரியுமா?)

      நீக்கு
    2. வல்லிக்குத் தெரியும். அவங்க பெண்ணுக்குக்கூடத் தெரியும். எங்க பெண்ணுக்கும் தெரியும். :))))))) ஸ்ரீராமுக்கெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை.

      நீக்கு
    3. ஆமாம். மறக்க முடியாத அருமை குரு நாதர்.
      அன்பின் வடிவம்.

      நீக்கு
    4. ..ஸ்ரீராமுக்கெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை.//

      தெரிய வாய்ப்பில்லை என்றாலும் பரவாயில்லை. வாய்ப்’பே’ இல்லையா!

      நீக்கு
    5. கீசா மேடம்,

      யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்

      என்பதைப் படித்ததில்லை போலிருக்கு

      நீக்கு
    6. ஏகாந்தன், ஸ்ரீராமுக்கோ, நெல்லைத்தமிழருக்கோ தெரிய வாய்ப்"பே" இல்லை தான். எனக்கு நான் இணையத்துக்கு வந்ததில் இருந்து பழக்கம். 2006 ஆம் ஆண்டில் இருந்து 2015 வரை வீட்டுக்கு வந்திருக்கார். ஆனாலும் ஒவ்வொரு முறையும் வருவாரா, வருவாரா என்னும் ஏக்கமே அதிகமாக இருக்கும். நம் மனதில் எந்த சந்தேகங்கள் எழுகின்றனவோ அல்லது என்ன பிரச்னைகளில் இருக்கோமோ குறிப்பிட்டு அவற்றைக் குறித்துப் பேசுவார். நாம் சொல்லவே வேண்டாம். எங்கள் பெண் இந்தியா வந்திருந்தப்போ இப்படித்தான் அவள் பிரச்னை குறித்து அவராகப் பேசினார். அவள் திகைத்துப்போய்விட்டாள்.

      நீக்கு
    7. //யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
      என்பதைப் படித்ததில்லை போலிருக்கு.// படிச்சிருந்தாலும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கணுமே! நேரம், காலம், உங்கள் அதிர்ஷ்டம் எல்லாவற்றையும் பொறுத்தது அது. இவரைப் பற்றிச் சொல்லி என் கணவரின் அத்தான் மிக ஆவலுடன் வந்து பார்த்தார். பின்னர் இன்னொரு முறை பார்த்துத் தன் பிரச்னைகள் குறித்துக் கேட்க நினைத்தார். ஆனால் அவரால் வர முடியவில்லை. அதுக்கப்புறம் அவருக்குப் பார்க்கவே முடியவில்லை. நாங்களுமே மிகுந்த முயற்சியின் மேல் 2015 ஆம் வருஷம் அவரைப் பார்த்தோம். அதன் பின்னர் இரு முறை தொலைபேசியில் பேசியதோடு சரி!

      நீக்கு
    8. ஒரே சஸ்பென்ஸ் ஆகவே போய்கிட்டு இருக்கு. அட! பெயரையாவது சொன்னால், நாங்க பார்த்திருக்கோமா இல்லையா என்றாவது தெரிந்து கொள்வோமே!

      நீக்கு
    9. நித்யானந்தாவா இருக்குமோ!

      நீக்கு
    10. ஹாஹாஹா, கௌதமன் சார், நீங்கல்லாம் பார்த்திருக்கவோ, கேட்டிருக்கவோ வாய்ப்பே இல்லை. அந்தக் குழுமத்தில் "நம்பிக்கை" இருந்தவர்களில் நானும், ரேவதியும் தான் இப்போ எ.பி.யில் இருக்கோம். மற்றவர்கள் யாருமே இல்லை.

      நீக்கு
    11. நாங்கள் அவரை அழைப்பது "காழியூரார்" என்னும் பெயரில். உண்மைப் பெயர் வேறு. அதிகம் போனால் இப்போ 55 அல்லது 60க்குக் கீழே தான் வயசு!

      நீக்கு
    12. நீங்கள் இவர் பற்றி முன்னரே சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

      நீக்கு
    13. ..படிச்சிருந்தாலும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கணுமே! நேரம், காலம், உங்கள் அதிர்ஷ்டம் எல்லாவற்றையும் பொறுத்தது அது.//

      விஷயம் சீரியஸாப் போகுதே! நீங்கள் அழைப்பது ‘காழியூரார்’ என்றால்.. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரைச் சொல்லிக்கொண்டே போவது எங்கேபோய் முடியும்! எதிரே அவர் வந்தாலும் தெரிந்துகொள்ளமுடியாதுபோகுமே..

      இவர் அறியப்பட்ட குருவா -அதாவது பலராலும் அறியப்பட்டவரா.. அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அல்லது ‘அறிந்தவரா’? எந்த வகையில் நீங்கள் இவரைப் பார்க்கிறீர்கள் என சொல்லுங்கள்.. கேட்கிறோம்.

      நீக்கு
    14. ஏகாந்தன், அவரே தன்னைக் காழியூரன் என்றே அழைத்துக் கொள்வார். உண்மைப் பெயர் வேறே. தெரியும். ஆனால் சொல்லக் கூடாது! சீரியஸாக/தீவிரமாக எல்லாம் போகலை. ஒவ்வொருவர் ஒவ்வொரு பெயரைச் சொல்லி எல்லாம் அழைப்பதும் இல்லை. இவரை இங்கே யாரும் பார்த்திருக்கவே முடியாது. எங்களுக்கு அவரைப் பார்த்தால் அடையாளம் தெரியும். எங்கள் குழுவினுள் அறியப்பட்டவர். அநேகமாக அனைவருமே பார்த்திருக்கோம். என்னையும், என் கணவரையும் பொறுத்தவரையில் வயதில் சின்னவர் ஆனாலும் எங்கள் மானசிக குரு. எங்களைப் புரிந்தவர். சாதாரணமாக உங்களைப் போல் தான் உடை அணிவார். காவி உடையோ, துறவிகளுக்கான உடைகளோ கிடையாது. பார்த்தால் அவர் ஓர் துறவி என்பதே தெரியாது. அம்மாவைப் பார்க்கவென்றூ அவ்வப்போது தன் யோகிகள் கூட்டத்தில் இருந்து வருவார். அம்மாவைப் பார்க்க வரும் அந்த நேரமே எங்களையும் சந்திக்கும் நேரம். மிஞ்சினால் 2 மாதம் இருப்பார். மீண்டும் தன் இடம் சென்றுவிடுவார். அது எங்கே என யாருக்கும் தெரியாது. நகரத்துக்கு வந்தால் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் அவர்களுக்கெனத் தனி இடம் இருப்பதாகச் சொல்லுவார். அங்கே தங்குவார். வீட்டில் எல்லாம் தங்கினது இல்லை. வந்த வேலை முடிந்ததும் திரும்பிவிடுவார்.

      நீக்கு
    15. இப்போது 3 வருடங்களாக வராததால் அவர் அம்மா இருக்காரா/இல்லையோ என்னும் சந்தேகம் வருது. :(

      நீக்கு
    16. அவர் ஆன்ம பலம் அவர் கண்களில் தெரியும் ஏகாந்தன்! மர்மங்கள் ஏதும் இல்லை.

      நீக்கு
    17. @ GS, @ JC :

      நன்றி. லிங்கில் போய்ப் படித்தேன்.

      நீக்கு
  11. 1) நிறைய நபர்கள் உண்டு இருப்பினும் எனது வாழ்வை மாற்றியமைத்த ஓர் அரேபியச் சகோதரி.

    2) அவர் எங்கள் பிளாக் படிக்கமாட்டார் என்பதை நான் சொல்ல வேண்டுமா ?

    3) இன்றைய சூழலில் எனக்கு ஆறுதலாக இருப்பது வலைப்பூ உறவுகளே... ஆகவே வலைப்பூவே துணை

    4) குழந்தை, குழந்தைகள், குழந்தைகளே...

    5) திறந்த மனதாய் அவரது தவறை உணர்த்துவேன்.

    - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  12. மின்நிலா பற்றிய அலசல் நன்றாக இருக்கிறது. எனக்கு இந்தப் பெயரே நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது. வேணுமானால் "இணைய நிலா" எனப் பெயரை மாற்றிக்கொள்ளலாம். மற்றபடி மின் நிலாவுக்கு ஜே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இணைய நிலா என்னும் பெயர் நன்றாக இருக்கிறது. இணையம் 100, நிலா 10என்று குறிப்பிடவும் வசதியாக இருக்கும்.

      நீக்கு
    2. கீசா மேடத்தையும் பா.வெ. மேடத்தையும், குழந்தையைத் தொட்டிலிடும் வைபவத்துக்கு அழைத்தால், 'குழந்தைக்கு என்ன பேர்... இந்தப் பேர் நல்லாருக்குமே, அந்தப் பேர் இன்னும் அழகா இருக்குமே' என்று குழப்பிவிடுவார்களோ? எதுக்கும் கொஞ்சம் யோசனையாத்தான் இருக்கு

      நீக்கு
    3. நெல்லையாரே, விஷ்ணு சஹஸ்ரநாமத்திலும், லலிதா சஹஸ்ரநாமத்திலும், மஹாலக்ஷ்மி சஹஸ்ரநாமத்திலும் இல்லாத பெயர்களா?

      நீக்கு
  13. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  14. ..சென்ற வாரம், யாரும் எங்களை எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.
    அதனால்..//
    தண்டிப்பதென முடிவா !

    பதிலளிநீக்கு
  15. பதில்கள்
    1. நன்றி. பெயர் புதுமையாக உள்ளது. புனைபெயரா ?

      நீக்கு
    2. திருக்கண்ணபுரம் முடிக்காத பிரார்த்தனை ஒன்று இருக்கு. சௌரிராஜர் எப்போ அழைப்பாரோ, காத்திருக்கோம்.

      நீக்கு
    3. திருக்கண்ணபுரத்தில் சௌரிராஜப் பெருமாளா? லாக்டவுன் தளர்வில் போய்விட்டு வந்துவிடுங்கள். அல்லது அன்லாக் 5.0 வந்தால்தான் கோவில்பக்கம் போக உத்தேசமா!

      நீக்கு
    4. ஏகாந்தன், அது 20 வருஷங்களுக்கும் மேலாகக் காத்திருக்கு. ஸ்ரீராம் கல்யாணம் ஆகப் பிரார்த்தித்துக் கொண்டதை 2. 3 வருஷங்களுக்கு முன்னர் இரு வளர்ந்த பிள்ளைகளுடன் போய் நிறைவேற்றியதைப் போல் நிறைவேற்றணும்னு நினைக்கிறேன். பார்ப்போம், எப்போ அழைப்பு வருதுனு!

      நீக்கு
  16. யாரும் கேள்விகள் கேட்கவில்லையா? இரண்டு வாரங்களாக கேள்விகள் அனுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டேயிருக்கிறேன். இந்த வாரம் அனுப்பி விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட? நானுமே கேட்க நினைத்துக் கேள்விகள் காத்திருக்கின்றன. போன வாரம் எப்படி மறந்தேன்னு தெரியலை.

      நீக்கு
    2. கேளுங்க, கேளுங்க, கேட்டுகிட்டே இருங்க!

      நீக்கு
  17. நான் மதிக்கும் நபர் : மனைவி  (அப்படின்னு எழுத அவர் சொன்னார்).

    அவர் எங்கள் ப்லோக் மட்டுமில்லை, எந்த பிலாக்கையும் படிப்பதில்லை. ஒய்வு என்பது யுடியூபில் சமையல் குறிப்புகள் பார்ப்பது மட்டும்தான். 

    நீர். குளிக்க, மற்றும் தூய்மைப்படுத்த. 

    கடல். நான் கடலூரில் பிறந்து வளர்ந்தவன். தற்போதும் கடல் உள்ள ஊரில் வசிப்பவன். 

    5  கேள்வி விடை. இ  குறிப்பால் உணர்த்த முயல்வேன். பெரும்பாலும் அது முகத்தில் மட்டுமே காட்டுவேன். இவை வெறுப்பு, கோபம், மற்றும் ஆணை என்பன. 


    Jayakumar

    பதிலளிநீக்கு
  18. பெரிதும் மதிக்க வேண்டும் என்றால் அவர் flawless ஆக இருக்க வேண்டுமல்லவா? அப்படி யாரையும் இதுவரை சந்திக்கவில்லை. ஆனாலும் பலபேரை அவர்களிடம் இருக்கும் நல்ல குணத்திற்காக மதிக்கிறேன். உண்மையைச் சொன்னால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே என்பதுதான் என் பாலிஸி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவர் flawless ஆக இருக்க வேண்டுமல்லவா?// - அப்போ கடவுளைச் சந்திப்பதற்காகத்தான் நீங்க வெயிட்டிங் போலிருக்கு. அவருமே 'கிருஷ்ண' ரூபத்தில் வந்தால் flawless என்பீர்களா இல்லை 'ராமர்' ரூபத்தில் வந்தால் flawless என்பீர்களா?

      குறை இல்லாதவர் என்று யாருமே கிடையாது. சீதை ஹனுமானிடம் சொன்னது,

      ந கச்சித் ந அபராத்யதி - Who in the world is blameless? It is the part of noble souls to be compassionate towards all.

      நீக்கு
    2. நான் சொல்லியிருக்கும் பதிலை முழுவதுமாக படித்து விட்டு பதில் சொன்னால் நன்றாக இருக்கும்.

      நீக்கு
    3. கேள்வி ' யாரேனும் ஒருவரை மட்டும்'

      நீக்கு
    4. இந்த மூன்றையும் தாண்டி என்றால் கல்வி.

      நீக்கு
  19. உண்ண,உடை,வீடு இவைகளில் உடை முக்கியம். மனிதர்களுக்கு மானம்தானே முக்கியம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @பா.வெ. பெரியோர்கள் சிந்திக்காமல் இதனை வரிசைப்படுத்தவில்லை. மனிதனின் முதல் தேவை உணவு. அது கிடைக்காவிடில் மானம் இழந்து மதி கெட்டுப்போய்விடுவான். பிறகுதான் மானம் காக்க உடை. அதன் பிறகுதான் வீடு.

      //மானம் முக்கியம்// - என்று எதைவைத்துச் சொல்றீங்க? 'மானம்' என்பது உடையில் இல்லை. மானம் என்பது நம் மாண்பில்தான் இருக்கிறது. வெட்கமில்லாமல் டாஸ்மாக்கில் நிற்கும்போது, காசு இருந்தும் அரசின் இலவசப் பொருட்களுக்கு வரிசையில் நிற்கும்போது, அடுத்தவன் பொருளை அபகரிக்கும்போது, எளியவர்களை ஏறி மிதிக்கும்போது, சம்பளம் வாங்கிக்கொண்டு சேவை செய்ய லஞ்சம் வாங்கும்போது, ஊழல் செய்யும்போது, அடுத்தவருக்குக் கெடுதல் செய்யும்போது போகாத மானமா, உடையினால் போயிடப்போகுது?

      இந்தக் காலத்தில், அதற்கு அடுத்தது செல்ஃபோன் என்பதைச் சொல்லவும் வேணுமோ?

      பணம் என்பது எல்லாவற்றிர்க்கும் பின்னணி என்பதால் அதனைக் குறிப்பிடக்கூடாது.

      நீக்கு
    2. நான் கேட்டது - மூன்றில் எது முக்கியம் என்பது அல்ல. அவற்றுக்குப் பிறகு நான்காவதாக முக்கியத்துவம் நீங்கள் எதற்குத் தருவீர்கள் என்பதுதான்.

      நீக்கு
  20. வணக்கம் சகோதரரே

    இன்றைய வாரம் கேள்விகள் இல்லாமல் போனது, அதிலும் எங்களை பல கேள்விகள் கொண்டு வளைத்து பதில் கேட்டிருப்பது, இத்தனை நாள் கேள்விகளுக்கு தகுந்த முறையில், யார் மனதையும் புண்படுத்தாமல், அருமையாக பதில்கள் கூறி வந்த எ.பி ஆசிரியர்களின் அசாத்திய திறமைகளை முழுதாக உணர்ந்து கொள்ள வைக்கிறது. அதற்கு முதலில் எ. பி ஆசிரிய பெருமக்களுக்கு என் நன்றிகள்.

    1.என் வாழ்க்கையில் நான் பெரிதும் மதித்து முதல் மதிப்பு தருவது என்னை பெற்றெடுத்து, சீராட்டி வளர்த்து, புத்திமதிகள் சொல்லி நல்லபடியாக வாழ வைத்த என் அம்மாவுக்குதான்..

    2. அவர்கள் இப்போது இல்லை. ஆனால் இப்போது இருந்திருந்தால், புத்தகங்கள் படிக்கும் ஆர்வமுள்ள அவர்,எ. பி யையும் ஆழமாக படித்து மகிழ்ந்திருப்பார். நான் ஏதோ தத்து பித்தென்று எழுதி வரும் என் எழுத்துக்களையும் சிலாகித்து, தட்டிக் கொடுத்திருப்பார்.

    3.இறையருள். இது அமைந்தால்தான் நம் விரும்பும்படி இந்த அடிப்படை தேவைகள் நல்லபடியாக நமக்கு அமையும்.

    4.மேகக்கூட்டம். மாறி மாறி வரும் இது பல்லாயிரம் கதைகளை விதவிதமாகச் சொல்லி, நம் செல்லக் குழந்தைகளையும் நம் அருகில் இருத்தி விடும்.

    5.பிடிக்காத விஷயங்களை பிடித்தவர் செய்தால் மட்டுமே லேசாக சுட்டிக் காண்பிக்க விரும்புவேன். மற்றபடி நம்மை பிடித்தவர்களாக இருந்தாலும் தலையீடு என்பது பகை உண்டாக்கும் என நினைப்பவள் நான்.

    கடைசி இரண்டு பதில்கள் என்னையும் அறியாமல் வந்து விட்டது என நினைக்கிறேன். என்ன செய்வது..! கேள்விகளின் தாக்கம் அவ்வாறு உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விளக்கமான பதில்களுக்கு நன்றி. ஐந்தாவது கேள்வி - நம்மைப் பிடித்தவர்கள் பற்றியது அல்ல; நமக்குப் பிடித்தவர்கள், நமக்குப் பிடிக்காத செயலை செய்தால், நாம் என்ன செய்வோம் என்பதே.

      நீக்கு
    2. அதைத்தான் சொல்லியிருக்கிறேன் என நினைக்கறேன். இருப்பினும் ஒரு தெளிவிற்காக.. "நமக்குப் பிடித்தவர்கள் நமக்கு பிடிக்காத செயல்களை செய்தால், இது நன்றாகயில்லை என லேசாக (ஒரிரு தடவைகள்) சுட்டிக் காண்பிப்பேன். அதற்கு மீறி அவர்களின் எண்ணங்களுக்கு இடையூறாக இருந்தால் அநாவசியமாக எங்களுக்குள் வீண் கசப்பு வரும். அதை என் மனம் விரும்பாததால், உறுதியாக மறுபடி எந்த செயலுக்கும் அவர்களை வறுப்புறுத்த மாட்டேன்." எனச் சொன்னேன்.

      அது சரி.. நமக்கு பிடித்தவர்கள் என்ற போது அவர்களுக்கு நாமும் பிடித்தவர்கள் என்ற பொருளில் வராதா?

      நீக்கு
    3. பதிலுக்கு நன்றி. நமக்குப் பிடித்தவர்களுக்கு நாம் பிடித்தவர்களாக இருக்கவேண்டும் என்னும் நிபந்தனை எதுவும் இல்லையே! உதாரணமாக எனக்கு ரஜினிகாந்தைப் பிடிக்கும் என்று சொன்னால், அவருக்கு என்னைப் பிடித்திருக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் இல்லைதானே!
      அது போல எனக்கு பக்கத்து வீட்டு சிறுவனைப் பிடிக்கும் என்று சொன்னால் அவனுக்கு என்னைப் பிடிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியில்லைதானே.

      நீக்கு
  21. 4. குழந்தைதான். ஆறும் பிடிக்கும்.
    5. பெரும்பாலும் முகத்திற்கு நேரே சொல்லி விடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆறு பிடிக்கணும்னா, அதில் தண்ணீர் ஓடவேண்டுமல்லவா? காவிரி மணலை மட்டும் பார்த்துக்கொண்டு இருப்பது எப்படி நமக்குப் பிடித்ததாக இருக்க முடியும்?

      நீக்கு
    2. ஆறும், ஆறு வயதிற்குள் இருக்கும் எல்லோரும் என்று சொல்லலாமா?

      நீக்கு
    3. முன்னெல்லாம் முகத்துக்கு நேரே சொல்லிக் கொண்டிருந்தேன் தான். ஆனால் அது யாருக்கும் பிடிக்கவில்லை என்பதால் இப்போதெல்லாம் தயக்கத்துடனேயே நிறுத்திவிட்டேன். அநேகமாய் பதில் சொல்லாமல் கடந்து விடுகிறேன்.

      நீக்கு
    4. //ஆறு பிடிக்கணும்னா, அதில் தண்ணீர் ஓடவேண்டுமல்லவா?/ அடடா! எப்பூடி?

      நீக்கு
  22. 1. பெரிதும் மதிப்பது - என் தந்தையாரைத்தான். அவரை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்லாதது, என் காரில் எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்லாதது என்னுள் இருக்கும் மிகப்பெரிய குறை.

    3. தொடர்பு கொள்ளும் சாதனமான செல்ஃபோன் (அல்லது எதுவாகிலும்)

    4. ஒன்றைத்தான் குறிப்பிடணும் என்பது சரியான பதில் வருவதற்கான வழி கிடையாது. இருந்தாலும், கடல் மற்றும் குழந்தை. அதிலும் கடல். குழந்தை ஒரு சமயத்தில் நமக்கு போரடித்துவிடும் (சும்மா 10 நிமிடங்கள் இல்லாட்டா 1/2 மணி நேரம் கொஞ்சுவோம். அவ்ளோதான்). கடலை நாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அது நம் மன எண்ணங்களையும் தூண்டிவிடும். ஆனால் பார்த்த உடனே நம் மனம் லேசாகணும் என்றால் சிரிக்கும் எந்தக் குழந்தையும்.

    5. பிடிக்காத விஷயங்களை பிடித்த நபர் - ரத்த சம்பந்தமானவர்கள், மற்றும் உயிர் நண்பன் என்றால் முகத்துக்கு நேராக. மற்றவர்களிடம் குறிப்பால்தான் உணர்த்த முடியும். கேஜிஜி சாரை (Eg. தான்) சந்திக்க வரும்போது, முகத்துக்கு நேராக சிகரெட் பிடித்தால் நான் என் முக மாறுதல்மூலமோ இல்லை இதமாகவோதான் சொல்லமுடியும். முகத்துக்கு நேராகச் சொன்னால், 'தம்பி... நான் உன்னைப் பார்க்க வரலை. நீதான் வந்திருக்க. அதுனால நான் சிகரெட் பிடித்து முடிக்கும்வரை நீ கொஞ்சம் வெளிலவேணா போயிட்டு வாயேன்' என்று சொல்லும் வாய்ப்பு அதிகமல்லவா? ஹா ஹா. இதுவே என் பெண் நூடுல்ஸ் வாங்கிவந்தால் (எனக்கு நூடுல்ஸ் உடலுக்கு கெடுதி என்று பதிந்துவிட்டது) , 'I dont like this. Why did you buy?' என்று முகத்துக்கு நேராகச் சொல்லிடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்றைத்தான் குறிப்பிடவேண்டும் என்று சொன்னதன் காரணம், பதில் அளிப்பவர் எந்த குறிப்பிட்ட விஷயத்துக்கோ அல்லது ஆளுக்கோ priority தருகிறார் என்று தெரிந்துகொள்ள.

      நீக்கு
    2. //கேஜிஜி சாரை (Eg. தான்) சந்திக்க வரும்போது, முகத்துக்கு நேராக சிகரெட் பிடித்தால் நான் என் முக மாறுதல்மூலமோ இல்லை இதமாகவோதான் சொல்லமுடியும்.// இதைப்படிக்கும் பொழுது என் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நான் ஓமானில் மினிஸ்டரியில் வேலைக்கு  சேர்ந்த புதிது. அங்கு ஒரு ஜான்சிபாரி டாக்டர் என்னிடம் ஏதோ லெட்டர் டைப் செய்வதற்காக என் கேபினுக்கு வந்தார். அவர் ஒரு செயின் ஸ்மோக்கர். அதுவும் ரோத்மான்ஸ் என்னும் ஒரு கண்ராவி  சிகரெட்டைப் பிடிப்பார்.  நான் அப்போது கருவுற்றிருந்ததால் எனக்கு அந்த ஸ்மெல்  ரொம்பவும் குமட்டும். அவர் என் கேபினில் வந்து புகை பிடித்த பொழுது நான் அவரிடம்,"doctor I can't bear this cigarette smell, can you put it off?" என்று நேரடியாகவே கேட்டு விட்டேன். அவரும் உடனே "ஓ! ஐயம் சாரி" என்று சிகரெட்டை அனைத்து விட்டார். இதற்காக என் மீது கோபமோ, வன்மமோ கொள்ளவில்லை.  ஒரு சீனியரிடம் இப்படி பேசிய என் அதிகப்பிரசங்கித்தனத்தை நினைத்து பலமுறை ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். 

      நீக்கு
    3. Middle Eastல பெண்களுக்கு ரொம்பவே மரியாதை உண்டு. அதுவும் கருவுற்றிருக்கும்போது, மற்றவர் சிகரெட் பிடிப்பது, அதிலும் டாக்டர் பிடிப்பது தவறு என்று அவருக்கே தெரியும்.

      அது சரி.... சிகரெட்டில் இது கண்ராவி, இது சூப்பர் என்று எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? என்னைப் பொறுத்தவரையில், எல்லா சிகரெட்டுகளும் கண்ராவிதான்.

      நீக்கு
  23. 1) என்னை வளர்த்த தாய். என் மேல் அதிகம் அன்பு காட்டியவர்.
    2) தொடர்பில்லை (இணைய தளங்கள் பற்றி அறியாதவர்)
    3) வாசிக்க ஏதாவது அவசியம்
    4) கோயில்
    5) அ) கண்டுக்காம விட்டுவிடுவேன்.

    பதிலளிநீக்கு
  24. நகைச்சுவையான இரண்டாவது கேள்வி, முதல் கேள்வியின் சிறப்பை கெடுத்து விடுவதால்... இரண்டிற்கும் // ஒன்றை மட்டும்தான் சொல்லலாம் // நோ கமெண்ட்ஸ்...!

    3. புத்தகங்கள்...!
    4. குழந்தைக்கு இன்னொரு குழந்தை மிகவும் பிடிக்கும்...!
    5. மேலே பதில் சொன்னது போல... + சிரிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்...!

    பதிலளிநீக்கு
  25. 1) உங்கள் வாழ்க்கையில், நீங்கள் பெரிதும் மதிக்கும் ஒரே ஒரு நபர் யார்? ஏன்? (ஒரே ஒரு நபரை மட்டும்தான் சொல்லலாம்)

    நான் பெரிதும் மதிக்கும் நபர் என் அப்பாதான். நான் அப்பா செல்லம். அவர்களிடம் எப்போதும் என் மனதில் உள்ளதை எல்லாம் பகிர்ந்து கொள்வேன். அப்பா எனக்கு தோழன் போல்.

    கல்யாணம் ஆன புதுதில் என் அப்பாவின் பெருமைகளை என் கணவரிடம் சொல்லி கொண்டே இருப்பேன் அவர்களுக்கு எரிச்சல் ஏற்படும் அளவுக்கு.

    2) முதல் கேள்விக்கு நீங்கள் சொல்லும் பதிலில் உள்ள அந்த நபர், அதாவது நீங்கள் பெரிதும் மதிக்கும் நபர், எங்கள் ப்ளாக் படிப்பவரா?

    அவர்கள் இப்போது இருந்தால் என் விருப்பு, வெறுப்புகளை அப்பாவிடம் பகிர்ந்து கொள்வேன் . அப்போது கண்டிப்பாய் அப்பாவிடம் எங்கள் ப்ளாக் பற்றி சொல்லி இருப்பேன். படித்து கருத்துக்கள் சொல்லி இருப்பார்கள்.

    3) மனிதர்களுக்கு இன்றியமையாத முக்கிய, அடிப்படை தேவைகள் : உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க ஒரு வீடு. இவற்றிற்கு அடுத்தபடியாக ஒன்றைச் சொல்லவேண்டும் என்றால், எதைச் சொல்வீர்கள்? (ஒன்றை மட்டும்தான் சொல்லலாம்)

    அடிப்படை தேவைகள் அனைத்தும் கிடைத்தாலும் மனநிறைவு இல்லையென்றால் இவை அனைத்தும் கிடைத்தாலும் நிம்மதி இருக்காது. தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

    அடுத்தபடியாக சொல்லவேண்டும் என்றால்- மனநிறைவு .

    4) கோவில், குளம், ஆறு, கடல், மேகக்கூட்டம், யானை, இரயில், குழந்தை - இவற்றில் எதைக் கண்டால், உங்களுக்கு மனம் லேசாகி, காற்றில் பறப்பதுபோல இருக்கும். (ஏதேனும் ஒன்றை மட்டும்தான் குறிப்பிடலாம்)

    இவை எல்லாமே மனதுக்கு ஆனந்தம் கொடுக்க கூடியது என்றாலும் .

    யார் என்று தெரியாமலே நம்மைப்பார்த்து சிரித்து நட்பு பாராட்டும் குழந்தை . அதன் சிரிப்பு மனதை லேசாக்கும் எவ்வளவு மனபாரம் இருந்தாலும்.


    5) உங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை, உங்களுக்குப் பிடித்த நபர் ஒருவர் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நிலையில், நீங்கள் ..

    இ) குறிப்பால் உங்கள் எண்ணத்தை உணர்த்த முயற்சி செய்வீர்கள்?
    முயற்சி செய்து பார்ப்பேன், முயற்சிப்பதில் தப்பில்லையே . முடியவில்லை என்றால் அடுத்த முறை முயற்சிக்க மாட்டேன்.





    பதிலளிநீக்கு
  26. மின்னூல் மாற்றுத்திறனாளி சொன்ன கருத்தின் படி செய்யலாம்... அது தான் மின்னூல்...!

    எடுத்துக்காட்டாக நேற்று பதிவு எழுதிய குமார் அவர்களின் கதை...

    இதுவரை அவர் இங்கு பகிர்ந்து கொண்டவற்றை தொகுத்து, அதையும் அடுத்தடுத்து ஆர்வத்துடன் வாசிக்கும் வகையில் வகைப்படுத்தி பிரித்து, அதை மின்னூல் ஆக்கலாம்... அவருக்கு உங்களின் குழு செய்யும் சிறு நன்றிக்கடன்...! அடைப்படமும் தலைப்பும் முக்கியம்... முன்னுரையும் சேர்க்கலாம்... முன்னுரை வழங்குபவர்கள் 40 சதவீதம் மட்டும் வலைப்பூ வாசிப்பவராக இருக்கலாம்...!

    இவ்வாறு வெளியிட்டு, அதற்கு வரும் விமர்சனங்கள், முக்கியமாக தரவிறக்கம் செய்யப்பட்ட எண்ணிக்கை மற்றும் மதிப்பீடுகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு, அடுத்து மின்னூல் ஆசையை தொடரலாம்...

    இதில் ஓரளவு வெற்றியடைந்து விட்டால் உடனே கிண்டிலில் கிண்டுவதற்கு தயார் ஆகலாம்...

    இதை செய்வதற்கு உதவி செய்ய அனுபவம் வாய்ந்த நம் வலைப்பதிவர்கள் பலர் உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல யோசனைகள். கவனத்தில் கொள்கிறோம். நன்றி.

      நீக்கு
  27. அனைவருக்கும் காலை வணக்கங்கள்.

    1. என் அன்னை. என் பெண்கள் இவ்வளவு முன்னேரி நற்பண்புகளுடன் இருப்பதற்கும் நான் இவ்வளவு நல்ல நிலைக்கு உயர்ந்தத்ற்கும் ஒரே காரணம் அவர்தான்.

    2. என் அன்னை டிசம்பர் 2015ல் இறந்து விட்டார்.

    3. இவை மூன்றயும் தவிற நான் இன்றியமையாததாகக் கருதுவது "நேர்மை". அது இருந்தால் எல்லாம் தேடி வரும்.

    4. கோவிலைக் கண்டவுடனேயே எனக்கும் ஓர் எழிச்சி எழுவதை நான் மீண்டும் மீண்டும் உணர்ந்திருக்கின்றேன்.

    5. இந்த பிரச்சினை அடிக்கடி என் கணவருக்கும் எனக்கும் இடையே தலை தூக்கும். அவர் பாவம். தன் அன்னையையும் விட்டுக் கொடுக்க முடியாது. என்னையும் விட்டுக் கொடுக்க முடியாது. தன் அன்னை என்பதால், நேருக்கு புரம்பாக ஒரு கருத்தைக் கூறினால், முகத்திலேயே "இதெல்லாம் எனக்கு பிடிக்காது" என்று நறுக்கென்று கூறி விட்டுதான் மறு வேலை பார்ப்பேன்.

    பதிலளிநீக்கு
  28. அட இந்த வாரம் உங்களை யாருமே கேள்வி கேட்கலையா? வியப்பாக இருக்கிறது. அதனால் நீங்கள் கேள்வி கேட்டு விட்டீர்களா? :) இதுவரை வந்த பதில்களில் சில ஸ்வாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  29. 1. எனது அப்பா.குடும்பத்தினர்களும் சுற்றத்தாரும் வியக்கும் மனிதர் ( இறை வழிபாடு,பொதுதொண்டு,நேர்மை,நேரம்தவறாமை,சுறுசுறுப்பு,அனைவருக்கும் உதவும் குணம்) கை வரப் பெற்றவர்.


    2. 25.3. 2008 இல் இறைவனடி சேர்ந்தார்
    இருந்தால் படித்திருப்பார்.

    3.போதும் என்ற மனம்

    4. குழந்தை.

    5.குறிப்பால் எண்ணத்தை சொல்ல முயற்சி செய்வேன்.

    பதிலளிநீக்கு
  30. 1. ஆன்மிகம் வேறே பக்தி வேறே என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்கள் நாட்டம் ஆன்மிகத்திலா, பக்தியிலா?

    2. உங்கள் ஆன்மிக குரு என யாரும் இருக்கிறார்களா?

    3. நேற்று/இல்லை, இன்று இளையராஜா பிறந்த நாளாம்! முகநூலில் நிரம்பி வழிந்தது. இதை எல்லாம் படிக்கையில் மக்கள் இவ்வளவு பித்தாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியமாக இருக்கு! இது சரியா? தனியொருவனை வழிபடுவது சரியா?

    4. இந்தத் தனிமனித வழிபாடு மனிதனுக்கு எப்போது வந்திருக்கும்? யாரேனும் ஒருவரைத் தன் தலைவனாக ஏற்றுக்கொண்டே தீர வேண்டும் என்பது மனிதனுக்குக் கட்டாயமா?
    5. பஞ்சாங்கங்கள் இப்போது கொரோனா பற்றியும், வெட்டுக்கிளி தாக்குதல்கள் பற்றியும் முன் கூட்டியே கணித்திருப்பதாக அனைவரும் எடுத்துப் போடுகின்றனர். இது ஏன் நமக்கு முன்னரே தெரியவில்லை? தெரிந்தும் ஏன் சும்மா இருந்தோம்/இருக்கிறோம்?

    6.கொரோனா தாக்குதலினால் ஏற்பட்ட ஊரடங்கினால் வீடுகளில் சண்டை, சச்சரவு அதிகம் ஆனதாகச் சிலரும், இல்லை எனச் சிலரும் சொல்கின்றனர். ஆனால் இதனால் பாதிக்கப்பட்டது ஆண்கள் அதிகமா, பெண்கள் அதிகமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இதனால் பாதிக்கப்பட்டது ஆண்கள் அதிகமா, பெண்கள் அதிகமா?// - இதுலயுமா சந்தேகம் உங்களுக்கு. வீட்டுக்கு யார் இன்சார்ஜ்? யார் சமையல் பண்ணிப் போடணும்? எல்லாரும் வீட்டிலேயே இருந்தால் தொடர்ந்து 3 வேளைகள், அதிலும் வித விதமாகச் செய்யவேண்டாமா? கொரோனா காலத்தில் பெண்களுக்குத்தான் வேலை அதிகம். ஆண்கள், சாப்பிட்டோமா, உலக விஷயங்களில் ஆர்வம் காட்டினோமா என்று இருப்பார்கள். ஹா ஹா

      நீக்கு
    2. எங்கயோ ரொம்ம்ம்ம்ப அடி வாங்கியிருக்கிறாரோ எனும் சந்தேகம் வருதே:)) பெண்களுக்கு ஓவர் சப்போர்ட் குடுக்கிறார் ஹா ஹா ஹா:)..

      நீக்கு
    3. ஹா ஹா ஹா.... அப்படி இல்லை அதிரா.... நான் சமைக்க ஆரம்பித்த பிறகுதான் (தனியாக அங்கு வேலை பார்த்தபோது) கிச்சன் வேலைகள், அதில் உள்ள கஷ்டம் என்பதெல்லாம் புரிந்தது. அப்புறம் பசங்களோட இருக்கும்போது, அவங்க 'இதைப் பண்ணிக்கொடு', 'இது வேண்டாம்' என்றெல்லாம் சொல்லும்போது இன்னுமே கஷ்டம். நான் கிச்சன் உதவிகள் செய்யத் தயங்குவதில்லை (பெரும்பாலும்).

      சப்போர்ட் பண்ணலைனா, மேல் ஷாவனிஷ்ட். சப்போர்ட் பண்ணினா, பயந்துகொண்டு சப்போர்ட் பண்ணறாங்க என்றெல்லாம் சொல்லுவதால்தான் இசைஞானி,

      பெண்மனசு ஆழமென்று ஆம்பளைக்குத் தெரியும், அது பொம்பளைக்கும் தெரியும்
      அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும்

      என்று சொல்லியிருக்கிறாரோ?

      நீக்கு
    4. நான் மாத்தி மாத்தி அடிப்பேன்:)... நீங்கதான் எதையும் தாங்கும் இதயத்தை வளர்த்துக் கொள்ளோணுமாக்கும் நெ தமிழன் ஹா ஹா ஹா:)

      நீக்கு
  31. 7. நோய்த்தொற்று அதிகமாக இருக்கும்போதே ஊரடங்கைத் தளர்த்தியதும், பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவிட்டதும் சரியா?

    8. உண்மையான புள்ளி விபரங்கள் சொல்லுவதில்லை எனப் பலரும் சொல்லுகின்றார்கள். இதில் உண்மை இருக்குமா?

    9.சுகாதாரப் பணியாளர்களுக்குத் தேவையான உபகரணங்கள் சரியாகக் கொடுக்கப்படவில்லை என்கிறார்கள். ஆனால் தொலைக்காட்சியில் காட்டுபவர்கள் அனைவரும் உடலை முழுதும் மூடிக் காணப்படுகிறார்கள். இதில் எது உண்மையாக இருக்கும்?

    10. மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளைக் கவனிப்பதில்லை என்று சிலரும் கவனிப்பதாகச் சிலரும் சொல்கின்றனர்! உண்மை எது? மருத்துவர்களும் மனிதர்கள் தாமே! அவர்களுக்கும் அலுப்பு வந்திருக்குமோ?

    பதிலளிநீக்கு
  32. 11. பரிசோதனைக்கு வரப் பிடிவாதம் பிடிப்பவர்கள் பயத்தினால் அப்படிச் செய்கிறார்களா? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் தப்பி ஓடுகிறார்களே ஏன்? மருத்துவம் அவ்வளவு கடினமானதாக இருக்கிறதா?

    பதிலளிநீக்கு
  33. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளிப்போம்

    பதிலளிநீக்கு
  34. கெள அண்ணன், ஏழியா நித்திரை ஆகிடாதீங்கோ.. மீ கொஞ்சம் பிசி அதனால கொஞ்சம் லேட்டாகும் இங்கு வர... இம்முறை பெரிய போஸ்ட்டாக இருப்பதால், மினக்கெட்டுப் படிச்சுப் பதில்போடோணும் எல்லோ அதுதான்... வருகிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆஆஆஆஆஅ நித்திரை ஆகிட்டாரோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அதிரா வந்துட்டேன்ன்.. திரும்ப வந்திட்டேன் ஹா ஹா ஹா:)) மகிழ்ச்சி!!:).

      நீக்கு
  35. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  36. ) தந்தையின் மனதை அறிய தந்தையாய் நான்... இத்தனை காலம் அறிய முடியாதது அன்புக்குரிய தாயின் மனம் தான்...

    பதிலளிநீக்கு
  37. 2) இருபது வயதுகளில் நான் எழுதியவற்றைப் பற்றி எனது நண்பர்கள் வாயிலாகக் கேட்டு மகிழ்ந்த தந்தை இன்று இருந்திருப்பாரேயானால் வாசித்து மகிழ்ந்திருப்பார்...

    பதிலளிநீக்கு
  38. 3) உ,உ,உ - க்களுக்கு அடிப்படையான
    உருண்டோடும் பணமே.. பணமே...

    கில்லர் ஜி அன்பானவர் தான்.. அவருடன் அளவளாவினால் அன்பு மழை தான்...

    ஆனாலும் வயதான காலத்தில் தஞ்சாவூரில் இருந்து தேவகோட்டைக்குச் சென்று அவரைப் பார்ப்பதற்கும் துட்டு வேணுமே... துட்டு!...

    சரி... வலை வழி சந்திக்கலாம் என்றால்
    அதற்கும் பணம்... வேணுமே.. பணம்!...

    இதற்குத் தான் அன்றைக்கே சொல்லி வைத்தார்கள் -

    கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும்
    கதவைச் சாத்தடி!...

    நாம் தான் தவறாகப் புரிந்து கொண்டோம்..

    பதிலளிநீக்கு
  39. 4) ஆலயம் அருகினில் ஆனை.. இவற்றின் அருகில் அழகு மலர்களாகக் குழந்தைகள்...

    பதிலளிநீக்கு
  40. 1) உங்கள் வாழ்க்கையில், நீங்கள் பெரிதும் மதிக்கும் ஒரே ஒரு நபர் யார்? ஏன்? (ஒரே ஒரு நபரை மட்டும்தான் சொல்லலாம்)


    பதில் = எனது அப்பா .எனக்கு என்ன வேணும் என்னத்தேவை எது பிடிக்கும் வருங்காலத்தில் எனக்கு தேவை எதிர்பாரா விளைவுகள் ஏற்பட்டாலும் அதை தாங்கும் உறுதி என எனக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தவர் அவர் செய்ததில் மிக முக்கியமானது மிக சிறப்பானது எனக்கு தேடித்தந்த வாழ்க்கைத்துணை  ..ஆஹா எப்படியோ இரண்டு பேரை இன்க்ளூட் செஞ்சிட்டேனே :)..இப்படி எவ்வளவோ இருக்கு .

     2) முதல் கேள்விக்கு நீங்கள் சொல்லும் பதிலில் உள்ள அந்த நபர், அதாவது நீங்கள் பெரிதும் மதிக்கும் நபர், எங்கள் ப்ளாக் படிப்பவரா?  பதில் = இல்லை .
    3)  மனிதர்களுக்கு இன்றியமையாத முக்கிய, அடிப்படை தேவைகள் : உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க ஒரு வீடு. இவற்றிற்கு அடுத்தபடியாக ஒன்றைச் சொல்லவேண்டும் என்றால், எதைச் சொல்வீர்கள்? (ஒன்றை மட்டும்தான் சொல்லலாம்) 

    பதில் = நிபந்தனையற்ற அன்பு  எவ்வித எதிர்பார்ப்புமில்லா அன்பு .அன்பு செய்து பாருங்கள் உங்களுக்கு எல்லாம் கிடைக்கும்      மனிதர்களுக்கு தேவை மேலுள்ள நீங்கள் கூறியவை கிடைக்கும்போது கூடவே அன்பும் சேரும்போது வேறேதும் வேண்டாம் 

    4)  கோவில், குளம், ஆறு, கடல், மேகக்கூட்டம், யானை, இரயில், குழந்தை - இவற்றில் எதைக் கண்டால், உங்களுக்கு மனம் லேசாகி, காற்றில் பறப்பதுபோல இருக்கும். (ஏதேனும் ஒன்றை மட்டும்தான் குறிப்பிடலாம்) 

    பதில் = கோவில் .
    5, 5)  உங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை, உங்களுக்குப் பிடித்த நபர் ஒருவர் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நிலையில், நீங்கள் .. 
    அ) கண்டுக்காம விட்டுடுவீங்க ?

    ஆ) இதெல்லாம் எனக்குப் பிடிக்காது என்று முகத்துக்கு நேரே சொல்வீர்கள்?

    இ) குறிப்பால் உங்கள் எண்ணத்தை உணர்த்த முயற்சி செய்வீர்கள்?

    பதில் = இ ,குறிப்பால் உங்கள் எண்ணத்தை உணர்த்த முயற்சி செய்வீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பதில் = நிபந்தனையற்ற அன்பு எவ்வித எதிர்பார்ப்புமில்லா அன்பு .அன்பு செய்து பாருங்கள் உங்களுக்கு எல்லாம் கிடைக்கும்///

      aல்லோ மிஸ்டர் அஞ்சு...வைர அட்டியலும் கிடைக்குமோ ?:)) ஹா ஹா ஹா:)).. ரொம்ம்ம்ப சீரியசாகப் பதில் சொல்லியிருக்கிறா பிள்ளை, எக்ஸாம் பேப்பருக்குப் பதில் குடுப்பதைப்போல ஹா ஹா அஹ.

      ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்.. மீ பனானா கேக் ரெண்டாம் தடவையாகச் செய்யப்போறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)) இம்முறை வோல்நட்ஸ் உம் போட்டாக்கும்:))

      நீக்கு
    2. ///ல்லோ மிஸ்டர் அஞ்சு...வைர அட்டியலும் கிடைக்குமோ ?:)) ஹா ஹா ஹா:)).. ரொம்ம்ம்ப சீரியசாகப் பதில் சொல்லியிருக்கிறா பிள்ளை, எக்ஸாம் பேப்பருக்குப் பதில் குடுப்பதைப்போல ஹா ஹா அஹ.//

      சிலர் மட்டும் கொஞ்சமும்  இரக்கமின்றி மனுஷத்தன்மையின்றி இவ்வுலகில் இருந்து பூமியை அசுத்தப்படுத்துகிறார்களே :(  இப்படி பிறக்கிறார்களா இல்லை இவர்களின் வளர்ப்பா :(  என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில் வந்த பதில் அது ..இதற்குமேல் எதுவும் கேட்க வேண்டாம் :( 

      நீக்கு
    3. விளக்கமான பதில்களுக்கு நன்றி.
      அதிரா, ஏஞ்சல் சேர்ந்துவிட்டால் பதிவில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது! நன்றி!

      நீக்கு
  41. 5) பிடிக்காதவற்றைச் செய்பவர்
    பிடித்தவருக்கான வட்டத்துக்குள் வரமாட்டார்...

    அப்படியே நிகழ்ந்தாலும் கண்டு கொள்ள மாட்டேன்... அது நட்புக்கு இழுக்கல்லவா!..

    ஒருவரைத் திருத்துவதற்கு காலம் இது அல்லவே!...

    உன் நெஞ்சே உன்னைச் சுடட்டும்!.. - என்று நகர்ந்து விடுவேன்...

    பதிலளிநீக்கு
  42. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  43. கெளதமன் சார் கேள்விகள்தான் வந்து விட்டதே என்று ஒரே நாளில் அத்தனைக்கும் பதில் சொல்லிவிட வேண்டாம். ஒரு வாரத்திற்கு நாலு அல்லது ஆறு கேள்விகளுக்கு மட்டும் விடை கொடுக்கலாமே. இதை ஏற்கனவே தீ.கீதா முன் மொழிந்திருக்கிறார்,நான் வழி மொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  44. 1. குறிப்பிட்டு ஒருவர் என்றில்லை. பலர் இருக்கிறார்கள். இங்கும் கூட!. வயது கணக்கல்ல. ஒவ்வொரு வகையில் பெரும் மதிப்பிற்குரியவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொருவரிடம் இருந்தும் பல கற்றுக் கொள்வதால். அப்படிப் பார்க்கும் போது நபர் என்று சொல்வதை விட எனது அனுபவ ஆசிரியரையே நான் பெரிதும் மதிக்கிறேன். அப்ப்டியான ஒரு வாய்ப்பைக் கொடுத்த இறைவனை. அப்ப்டி ஒவ்வொன்றிற்கும் நன்றி சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.

    2. எனவே இறைவனும் எபியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம்தானே!!!!!!!!!!!!!!!!!!!

    3. மனநிறைவு

    4. இந்தக் கேள்வி கொஞ்சம் அல்ல நிறையவே டஃப் பதில் சொல்ல. நீங்கள் கொடுத்திருக்கும் எல்லாமே எனக்கு மகிழ்வைத் தரக் கூடியவை. எதை விட்டு எதைச் சொல்ல என்ற கஷ்டம் இருக்கே.

    5. இ

    யானை என்பதைப் பார்த்ததும் மனம் இன்று காலை கிடைத்த செய்தியை நினைத்து மீண்டும் வருந்தத் தொடங்கிவிட்டது. காலை செய்தி வாசித்து அழுதேவிட்டேன். தாங்க முடியலை அதை நினைத்து. ரொம்ப நேரம் அதிலிருந்து மீள முடியாமல் மனம் தவித்தது..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காலை செய்தி வாசித்து// - தெரிந்தே செய்த கொடிய பாவம் அது. அதில் பங்குகொண்டவர்கள் அனைவருக்கும் இறைவனின் பதில் காத்திருக்கும். என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை... இப்படி ஒரு கொடூர மனம் ஒருவருக்கு இருக்கும் என்று. தீபாவளி சமயத்தில் கழுதையின் வாலில் பட்டாசைக் கட்டிவிட்டு கொளுத்திவிடுவார்கள் (எப்போதோ..இப்போ கழுதை எங்க இருக்கு?). அதைவிட ஆயிரம் மடங்கு அதிக பாவம் இது.

      நீக்கு
    2. உண்மைதான். யானைக்கு அந்தக் கொடுமையை செய்தவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கவைண்டும்.

      நீக்கு
  45. மின் நிலா.....வலை நிலா?

    நல்ல ஐடியாஸ் சொல்லப்பட்டிருப்பவை. நானும் இன்னும் யோசிக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  46. ///
    புதன், 3 ஜூன், 2020
    எல்லோரும் பதில் சொல்லுங்க ...///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஐ ஒப்ஜக்சன் யுவர் ஆனர்:)).. பதில் சொல்வது உங்கள் வேலை:)) கேள்வி கேட்பதுதான் எங்கள் வேலை:)) ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது நல்லா இருக்கே நாங்களே பதில் சொல்லிகிட்டு இருந்தா எங்களுக்கு போர் அடிக்காதா? அதனால்தான் இன்று ஒரு டைவர்ஷன்.

      நீக்கு
  47. @ பி.பெ. அதிரா: .. ஐ ஒப்ஜக்சன் யுவர் ஆனர்:)//

    இதுக்குத்தான் பிஞ்சோ பெதும்பையோ .. நீங்க வரணுங்கிறது. ’பதில் சொல்லுங்க’ன்ன உடனேயே எல்லாரும் வரிஞ்சு கட்டிக்கிட்டு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. நீங்கதான் ஓசிச்சு அப்ஜெக்‌ஷன் போட்டது! பாராட்டு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீங்கதான் ஓசிச்சு அப்ஜெக்‌ஷன் போட்டது! பாராட்டு !//

      ஹா ஹா ஹா நன்றி ஏ அண்ணன்:)).. நான் இங்கிருந்து கையைக் குடுக்கிறேன் நீங்களும் அங்கிருந்து நீட்டுங்கோ.. எயாரில சியேர்ஸ்ஸ்ஸ்:))..

      திட்டுவதையும் திட்டோணும் ஆனா மரியாதையும் குடுக்கோணுமெல்லோ:)) அதனால கேள்விகளை மதிச்சுப் பதில்கள் கீழே குடுக்கிறேனாக்கும் ஹா ஹா ஹா:))

      நீக்கு
  48. //1) உங்கள் வாழ்க்கையில், நீங்கள் பெரிதும் மதிக்கும் ஒரே ஒரு நபர் யார்? ஏன்? (ஒரே ஒரு நபரை மட்டும்தான் சொல்லலாம்)///

    மதிப்புக்கும் அன்பு பாசத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கெல்லோ.. அதனால மரியாதைக்குரியவர் எனும்போது அது வெளிநபராக இருக்கும் வாய்ப்பே அதிகம் என நினைக்கிறேன்... இல்லை எல்லாம் ஒன்றுதான் எனில்..

    அப்பா: எனக்கு அடிக்கடி அட்வைஸ் பண்ணி, என்னை எந்த இடத்திலும் சோர்ந்து போயிடாமல் நிமிர்ந்து நிற்க வைத்தவர்.. என்னை ஒரு சுறுசுறுப்பான உற்சாகமான பெண்ணாக வளர்த்த மொத்தப் பொறுப்பும் அவரையே சாரும்...

    அம்மா: .. எப்படி இருக்க வேண்டும், எப்படிச் சாப்பிடோணும் எப்படிச் சிரிக்கோணும்.. எப்படி நித்திரை கொள்ளோணும்.. என அ முதல் சொல்லி சொல்லி வளர்த்தவர்...

    கணவர்: கைப்பிடிச்ச நாளில இருந்து, சினிமாவில் பார்ப்பதைப்போலவே, மனைவி எனில் கண் கலங்கிடக்கூடாது, மனைவி கண்ணில் தன்னால ஒரு துளி கண்ணீர்கூட வந்திடக்கூடாது என, எப்பவும் கலகலப்பாக வைத்திருக்க நினைப்பவர், எதிலும் எப்பவும் மனைவிக்கே முதலிடம், அடுத்துத்தான் மற்ரையதெல்லாம் என முன்னுருமை தருபவர்..., எது கேட்டாலும்.. அது எதுவாயினும் மறுக்காமல் வாங்கித்தருபவர்.. காரில இருந்து என்ன வேணும் எனக் கேட்டால்.. நான் கே எஃப் சி.. கே எஃப் சி எனக் கத்துவேன், பிள்ளைகள் மக்டொனால்ட் மக்டொனால்ட் என்பினம்.. ஆனா கார் முதலில் போய் நிற்பது கே எஃப் சி வாசலிலதான்.. பின்புதான் மக் ல போய் நிற்கும் ஹா ஹா ஹா... இன்னும் நிறையச் சொல்லலாம் ஆனா எதுக்கு வீட்டுக்கதைகளைச் சொல்ல வச்சிட்டார் கெள அண்ணன் கர்ர்ர்:))..

    இப்படி இந்த மூவருக்குமே என் முதலிடம்.... இதில் ஒருவர்தான் எனில், என்னால முடியாது, நீங்களே செலக்ட் பண்ணுங்கோ இல்லை எனில் எனக்குத் தெய்வக் குற்றமாகிடும்... ஹா ஹா ஹா.
    --------------------------------------------

    இதை விடுத்து நான் வளர்ந்து, அறிஞ்சு, தேடலின் மூலம் என் மதிப்பிற்கும் அன்புக்கும் மிகவும் பாத்திரமானவர் என் அங்கிள் கண்ணதாசன்:)).. அது என்னமோ தெரியவில்லை, எனக்கு அவரில அப்படி ஒரு அன்பு.. அவரின் பேச்சு, புத்தகம் எதுவாயினும் உடனே மனம் அங்கு தாவும்..

    சமீபத்திலதான் பார்த்தேன், அவரின் மகள் ரேவதி என்பவ ஒரு யூ ரியூப் ஷனல் வச்சிருக்கிறா, அவ, இதுதான் எங்கள் அப்பா வாழ்ந்த வீடு என, வீட்டைச் சுற்றிக் காட்டி, இதிலதான் அப்பா இருப்பார் இங்குதான் இருந்து சாப்பிடுவார்... இப்படி வீட்டைச் சுற்றிக் காட்டினா.. நான் அப்படியே மெரிசலாகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @ கௌதமன் சார் .. ஒரேயொருவரை  சொல்ல சொன்னா இவங்க 3 பேரை சொல்லியொருக்காங்க ..முடியாது நாட்டாமை தீர்ப்பு சொல்லவும் இல்லைனா 3 பேர்னு கேள்வியை மாற்றவும் 

      நீக்கு
    2. அச்சோ அங்கிளையும் சொல்லியிருக்காங்க முடியாது ஏற்க மாட்டேன் .இப்படி சொல்லலாம்னா எத்தனையோ பேரை சொல்லலாம் :)

      நீக்கு
    3. //Angel3 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 6:30
      @ கௌதமன் சார் .. ஒரேயொருவரை சொல்ல சொன்னா இவங்க 3 பேரை சொல்லியொருக்காங்க//

      அல்லோ மிஸ்டர், இந்த.. “ஒரு பதில் மட்டுமே சொல்லோணும்”.. எனும் பழக்கத்தைப் பழக்கி விட்டதே நீங்கதான் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கேள்விகளில் சொல்லி:))

      நீக்கு
    4. அஆவ் இப்போ லிங்க் வேலை செய்யுது :) நீங்க அனுப்பியது .தேங்க்ஸ் மியாவ் பின்னே ஒரு கேள்விக்கு பத்து பதிலா எழுதுவாங்க :) எக்ஸாம் பேப்பரில் 

      நீக்கு
    5. The reason behind our stress on
      ' one ' person only is to know who gets top most priority in the mind of the person responding.

      நீக்கு
  49. ///3) மனிதர்களுக்கு இன்றியமையாத முக்கிய, அடிப்படை தேவைகள் : உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க ஒரு வீடு. இவற்றிற்கு அடுத்தபடியாக ஒன்றைச் சொல்லவேண்டும் என்றால், எதைச் சொல்வீர்கள்? ///

    நிம்மதி...

    நிம்மதி நிம்மதி உங்கள் சொயிஸ்..
    இன்பமும் துன்பமும் உங்கள் சொயிஸ்:))

    பதிலளிநீக்கு
  50. //4) கோவில், குளம், ஆறு, கடல், மேகக்கூட்டம், யானை, இரயில், குழந்தை -//

    இவை அனைத்துமே ஆனா ஒன்றுதான் எனில்.. மேகக்கூட்டம்.. அப்படியே நானும் பறக்கோணும் அதில விழுந்து உருண்டுபுரளோணும் என மனம் சொல்லும்... இதனாலதான் பாகுபலி 2 இல், அந்த நநநநா பாட்டில, பாகுபலி படகை ஒரு வெட்டு வெட்டித் திருப்புவார் அது அப்படியே மேகக்கூட்டம் மேலே போய், குதிரையாக மேகங்கள் ஓடும்.. நான் உண்மையில் நாடிநரம்பெல்லாம் செய்த்துப்போச்சு அந்நேரம் ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் இன்னும் பாகுபலியில் இருந்து வெளிவரவில்லை :) நான் இன்னும் பகத் பாசிலின் நடிப்பை  பார்த்து ஆச்சர்யப்பட்டுக்கொண்டிருக்கிறேன் 

      நீக்கு
    2. சூப்பர் பதில் அதிரா!

      நீக்கு
  51. //5) உங்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை, உங்களுக்குப் பிடித்த நபர் ஒருவர் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நிலையில், நீங்கள் .. //

    இதுக்கு டக்குப்பக்கென விடை சொல்லிட முடியாது, கேள்வி தெளிவாக இல்லையாக்கும்:))...

    எனக்குப் பிடித்த நபர், எனக்குப் பிடிக்காது எனத் தெரிஞ்சே சொல்கிறார் எனில் என் பதில் வேறாகவும், தெரியாமல் செய்கிறார் எனில், வேறாகவும் இருக்கும்...

    தெரிஞ்சே செய்கிறார் எனில், அவர் வேண்டுமென்றே, ஏதோ என்னை மனம் நோகவைக்கவென்றே செய்கிறார் எனத்தானே அர்த்தம், அந்நிலையில், மனதுள் மிகவும் வருந்துவேன், அழுவேன் கவலைப்படுவேன், ஆனா அவரிடம் மோதலுக்குப் போக மாட்டேன்.. கடவுளிடம் விட்டுவிடுவேன் பொறுப்பை.

    தெரியாமல் செய்கிறார் எனில், அதில் தப்பில்லையே, அதனால நேரே சொல்லி விடுவேன்.. பதில் ஆ:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல பதில். அவர் செய்வது, நமக்குப் பிடிக்காத விஷயம் என்பது அவருக்குத் தெரியாது என்றே வைத்துக்கொள்வோம்.

      நீக்கு
  52. மின் நிலா..

    நான் உள்ளே புத்தகத்தை திறந்து பார்த்தேன்.. எனக்கு அது புரியவில்லை, மின்னூல் போல இல்லாமல் பிடிஎஃப் ஆக போட்டிருக்கிறீங்களா? அதுக்கும், புளொக்கில் வந்து படிப்பதற்கும் என்ன வித்தியாசம்?

    புளொக் படிக்க நெட் வேண்டும், இது பிடிஎஃப் ஐ ஒரு தடவை டவுன்லோட் பண்ணி விட்டால் பின்பு நெட் தேவை இல்லை என்பதாலா?..

    அப்படி எனில் என்னைப்பொறுத்து, இப்படி கிழமை கிழமையாக போடுவதைவிட, வருடம் வருடமாக, சமையல் குறிப்பு ஒரு புத்தகமாகவும், கதைகள் ஒரு புத்தகமாகவும் ஸ்ரீராமின் பகுதி ஒன்றாகவும்.. இப்படிப் போட்டால் நமக்கு எது தேவையோ அதை நாம் டவுன்லோட் பண்ணி வச்சுப் படிக்க வசதியாக இருக்கும், நாம் விரும்புவதைப் படிக்கலாம் என நினைக்கிறேன்..
    நான் புரிஞ்சவரையில் இப்படிச் சொல்லியிருக்கிறேன், மற்றும்படி எனக்கு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.. புரியவில்லை மின்நிலா பற்றி.... தப்பாக புரிஞ்சிருக்கிறேன் எனில் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின் நிலா இணைப்பு எனக்கு திறக்கவேயில்லை எப்படி நீங்க மட்டும் படிச்சீங்க கர்ர்ர்ர்ர் 

      நீக்கு
    2. இப்போஸ்ட்டில் லிங் தரப்படவில்லை என நினைக்கிறேன் அஞ்சு, போன புதன்கிழமைதான் லிங் தந்திருக்கிறார் கெள அண்ணன், இப்போஸ்ட்ட்ட்டிலும் இணைச்சிருக்கலாம்...

      திறக்கிறது அஞ்சு.. ஆனா எங்கட ஆண்டி [மக்.. அஃபீ]அடிக்கடி ஓடிவந்து இது சேஃப் இல்லை எனச் சொல்லுறா ஹா ஹா ஹா

      இதில போய்ப் பாருங்கோ..

      https://www.docdroid.net/RN8SXCo/nila-001-pdf

      நீக்கு
    3. அஆவ் இப்போ லிங்க் வேலை செய்யுது :)

      நீக்கு
    4. அதிரா உங்கள் கருத்து எனக்கு சரி என்று படுகிறது.

      நீக்கு
    5. நன்றி வல்லிம்மா... எனக்குப் புரிஞ்சவரையில் சொல்லியிருக்கிறேன்

      நீக்கு
    6. நேற்றைய ஒரு பதிவு மட்டுமே வலைப்பூக்கு உரிய பதிவும், அதற்கேற்ப வந்த கருத்துரைகளும்... 98% சதவீதம் மற்ற நாட்கள் எல்லாம் கும்மி அடித்தல் as WhatsApp...! I like that also...!

      மின்னூல் என்பதை கெடுக்க அடுத்ததாக ஒரே திட்டம் - ஆ'சிரி'யர் குழுமத்தின் சிரிப்பு தொழினுட்பத்திற்கு பஞ்சமே இல்லையாக்கும்...! அதான்...
      எ' ஃ' பி..!

      நன்றி...

      நீக்கு
  53. 1. அப்பா. அன்பு பாசம் இதெல்லாம் அறிந்தது, பிறருக்கு கொடுக்க வேண்டியதானது அவசியம் என்று உணர்ந்தது நான் அப்பாவான போது நான் முன் மாதிரியாக அப்பாவை எடுத்துக் கொள்வது இதெல்லாம் தான்.

    2. அவர் இப்போது இல்லை.

    3. மொபைல்

    4. கோயில்

    5. இ

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  54. சென்ற ஞாயிறு பதிவிலும் கடைசியில் மின் நிலா 2 சுட்டி கொடுத்துள்ளோம். இனி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைப் பதிவிலும் பதிவின் கடைசியில் மின் நிலா சுட்டி கொடுப்போம். எங்கள் ஒரு வாரப்பதிவுகள் + ஆசிரியர்கள் அரட்டை + பிரத்யேகமான சில படங்கள் எல்லாம் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாடாஆஆஆ சுற்றுலா முடிஞ்சுபோச்சாஆஆஆஆஆ ஹா ஹா ஹா தகவலுக்கு நன்றி கெள அண்ணன்

      ////பிரத்யேகமான சில படங்கள் எல்லாம் வரும்.////
      இப்பூடி எனில், ஆசிரியர்கள் எல்லோரது செல்பியும் வருமோ?:)... முக்கியமாக அந்த மூணாவது ஆசிரியர்:).... குட்டித்தாடியாம் கொஞ்சம் தலைமயிராம்( நன்றி கீதா)... அவரது செல்வியும்:) வரும்தானே:)... ஹா ஹா ஹா

      நீக்கு
    2. ஹி ஹி ! பிரத்யேகப் படங்கள் என்று நான் சொன்னது, எங்கள் ப்ளாக் ல வெளியாகாத, ஆனால் எங்கள் ப்ளாக் ஆசிரியர்களோ அல்லது அவர்களது உறவினர்களோ நண்பர்களோ எடுத்த படங்கள். நீங்க சொல்லும் ஆசிரியருக்கு சங்கோஜம் அதிகம். போடோ எடுக்க யாராவது வந்தால் ஓட்டமாக ஓடிப் போயிடுவார்.

      நீக்கு
  55. மின் நிலா டவுன்லோட் செய்து வைத்துள்ளேன். இனிதான் பார்க்க வேண்டும். ஆன் லைன் க்ளாஸஸ் எடுக்க வேண்டியுள்ளதாலும், மகன் ரஷ்யாவிலிருந்து வந்து இப்போ அரசு க்வாரண்டைனில் வீட்டிற்கு வந்தும் க்வாரண்டைன் உண்டு என்பதால் வீடு சுத்தம் செய்தல், அவனுக்கான ரூமை ரெடி செய்வது என்று போகிறது. மின் நிலா பார்க்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துளசிதரன் சார். நேரம் கிடைக்கும்போது படித்து, கருத்துகளை engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்புங்க.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!