Tuesday, June 13, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை :: தவிக்கிறாள் தான்ய மாலினி - 2 - இராய செல்லப்பா - சீதை10தவிக்கிறாள் தான்ய மாலினி -2

- இராய செல்லப்பாபணிப்பெண்களுக்கான அறை. சாளரங்களின் அருகில் அதே உயரத்தில் விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. ஆனால் அசநியின் முகத்தில் சற்றும் வெளிச்சமில்லை.


தான்யமாலினிக்கும் இராவணேஸ்வரனுக்கும் திருமணமானபோது, மணப்பெண்ணின் தோழியாக வந்தவள் அசநி.


தான்யமாலினியின் அந்தரங்கம் தெரிந்த ஒரே பெண். அரசி - பணிப்பெண் என்ற வேறுபாடு இல்லாமல் உற்ற தோழிகளாய்குதூகலித்திருந்தனர் இருவரும். அந்த இன்பமான வாழ்வு முடிவுக்கு வந்தது ஒருநாள்.


இராமனால் மூக்கறுபட்டு, முகம் சிதைந்து, குருதியொழுக, சூர்ப்பனகை அண்ணனிடம் முறையிடுவதற்கு ஓடிவந்தது அன்றுதான்.  அசுரகுலத்துச் சக்ரவர்த்தியின் ஒரே தங்கையை  - இலங்காபுரியின் இளவரசியை - காட்டில் வாழும் மரவுரி தரித்த ஒரு சாதாரண மானிடனிடம் இருந்து காப்பதற்கு யாரும் இல்லையா என்று விசும்பினாள்.  வில்லன்றி வேறு ஆயுதம் இல்லாத சாதாரணன், இராமன்.   அவன் துணைவி சீதையோ, கரும்புவில்லேந்தும் மன்மதனையே மயங்க வைக்கும் பேரழகி.


‘அண்ணா, உன்னைப் போன்ற உத்தமச் சக்ரவர்த்திக்கே தகுதியான அவ்வழகியை, காட்டிலும் மேட்டிலும் நடக்கவைத்து, மழையிலும் பனியிலும் நனைய வைத்து, கனியும் கீரையுமே உண்ண வைத்து அல்லாட வைக்கிறான் அந்த இராமன்!” என்று புலம்பினாள். ‘என் காமத்தை மறுதலித்தாயல்லவா, இராமா, உன்காதலைப் பாழ்படுத்திக் காட்டுகிறேன் பார்’ என்று மனதிற்குள்சூளுரைத்தாள் சூர்ப்பனகை.


கொஞ்ச காலமாகப் போர்கள் இன்றித் தினவெடுத்திருந்த இராவணனை உசுப்பேற்றி விட்டன இவ்வார்த்தைகள்.  மண்ணோடு பெயர்த்துத் தன் புஷ்பகவிமானத்தில் அவளைக்கவர்ந்தான்.  இடைமறித்த பறவையரசன் ஜடாயுவைக்கொன்று வீழ்த்தினான்.  அந்தப்புரத்தில் அமரவைக்க விரும்பினான்.


உடன்படுவாளா சீதை?  அசோகவனத்தில் சிறைவைத்து விட்டான்.


இரண்டு மனைவிகள் இருக்கையில், இருவரிடமும் மனப்பூர்வமான திருப்தியோடு அவரும் இருக்கையில், சீதை என்ற மூன்றாவது ஒருத்திக்குத் தேவை என்ன வந்தது என்று ஆத்திரம் கொண்டாள் தான்யமாலினி.  அரசனுக்கு எத்தனை மனைவிகள்வேண்டுமானாலும் இருக்கலாம் என்று சாத்திரம் சொல்லட்டும்.  சக்கரவர்த்தி இராவணேஸ்வரன் அப்படிக் காம வெறிபிடித்து அலைபவர் இல்லையே!


சக்ரவர்த்தியின் செயல்களைக் கேள்வி கேட்கவோ விமர்சிக்கவோ தனக்கு அதிகாரமில்லை என்று தான்யமாலினிக்குத் தெரியும். அது மூத்தவளான மண்டோதரிக்கு மட்டுமே உள்ள தனியுரிமை.  மேலும், சக்ரவர்த்தியே முன்வந்து தன்னிடம் கூறாத ஒன்றை, தானாக அவரிடம் கேட்பதும் உசிதமாகப் படவில்லை. தனது அந்தரங்கப் பணிப்பெண்ணான அசநியிடம் கூடத் தன் மனதைப்பகிர்ந்துகொள்ளவில்லை அவள்.


ஆனால் அந்தப்புரத்துப் பெண்கள் சும்மா இருப்பார்களா?


பௌர்ணமி இரவில் அந்தப்புரத்துச் சேடிப்பெண்கள் குழுமிப்பேசிக்கொள்ளவும், குளித்துக் களியாடவும் தாமரைக்குளம் ஒன்று அமைத்துக் கொடுத்திருந்தார் மகாராணி மாண்டோதரி.


அவருடைய பணிப்பெண்கள் அழுத்தமானவர்கள். தாங்களாக எதையும் பேசமாட்டார்கள். இளையராணி தான்யமாலினியின்சேடிகளைப் பேசவைத்து விஷயத்தைக் கறந்துகொண்டு மகாராணியிடம் சேர்ப்பதில் கவனமாய் இருப்பார்கள். அன்றும்அப்படித்தான்.


அசநி,  நீ செய்வது நியாயமா?’ என்றாள் ஒருத்தி.  ‘பாவமடி, அவளை ஒன்றும் கேட்காதே. இளையராணி கோபிப்பார்’ என்று எடுத்துக் கொடுத்தாள் அவளுடைய தோழி.


அசநிக்கு இவர்களின் விஷமம் புரியாமல் இல்லை. எது பேசினாலும் முடிவில் இவள்தான் பேசினாள் என்று தன்பேரில்பழிபோட்டு இரண்டு இராணிகளுக்கும் இடையில் பனிப்போரை உண்டு பண்ணும் வல்லமை உடையவர்கள் இவர்கள். எனவே பேசாமல் இருந்தாள்.


‘உம், முன்பெல்லாம் பௌர்ணமி என்றால் சக்ரவர்த்தி பெரிய மகாராணியோடு இரவைக் கழிப்பார். நிலாவைப்பார்த்துக்கொண்டே நேரம் போவது தெரியாமல் நந்தவனத்தில் கிடப்பார்கள்.  அப்புறம் இளையராணி வந்தாலும் வந்தார்,


அவருடைய காட்டில் மழை. இனிமேல் என்ன ஆகுமோ! நந்தவனம்போய் அசோகவனம் வரப்போகிறது என்கிறார்களே!  அசநி ஏன் ஊமையாக இருக்கிறாள்?’ என்று உசுப்பினாள் ஒருத்தி.


‘அதானே, இவ்வளவு நடந்தபிறகும் அசனி பேசாமல் இருக்கிறாளே, நீயும் நானும் இப்படி இருப்போமா?’ என்றாள் இன்னொருத்தி.


அசநிக்கு இப்போதுதான் கொஞ்சம் புரிய ஆரம்பித்தது.  இவர்கள் மூலம் ஏதோ ஒரு விஷயத்தைப் பெரிய மகாராணி,  இளையராணிக்கு இலைமறை காய்மறையாகச் சொல்ல நினைக்கிறார் போலும்.


‘பாருங்கடி, நீங்கள் எல்லாரும் அதிகார பீடத்தில் இருப்பவர்கள்.  உங்களுக்குத் தெரியாதது எனக்கு எப்படித் தெரியும்? உங்கள் விளையாட்டுக்கு நான் வரவில்லை. ஆளை விடுங்கள்...’ என்றாள் அசநி.


முதலில் பேசியவள் அசநியை நெருங்கி அவளது கைகளைப் பிடித்துக்கொண்டாள். ‘இதோ பார், என் கண்ணைப் பார்த்துச் சொல்! அசோகவனத்தில் நடப்பது எதுவும் உனக்குத் தெரியாது என்கிறாயா? தினமும் காலையில் சக்ரவர்த்தி விழிப்பதே அந்த சீதாதேவியின் முகத்தில் தானாமே! ஒரு துளி நகையும் இல்லாமல், முகத்தில் சற்றும் புன்னகை இல்லாமல், துரும்பாக இளைத்துப்போய், ஒரே உடையை மாற்றக்கூட இல்லாமல், ஓவியம் தூசு படிந்ததுபோல் சுருண்டு கிடக்கும் ஒரு மானிடப்பெண் மேல் ஏன்தான் இப்படியொரு பைத்தியமோ இந்தச் சக்ரவர்த்திக்கு?


இதைப் பற்றியெல்லாம் இளையராணி யவர்கள் உன்னிடம் ஒன்றும் சொல்லவில்லையா?’


அசநிக்கு அவர்கள் நோக்கம் புரிந்துவிட்டது. சீதை விஷயத்தில் தான்யமாலினி ஏன் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறாள் என்று மகாராணிக்குத் தெரியவேண்டும். அவ்வளவே. இது பெரிய இடத்து விஷயம். மௌனமாயிருப்பதே புத்திசாலித்தனம்.


‘காட்டிலிருந்து ஓர் ராஜவம்சத்துப் பெண் சக்ரவர்த்தியின் கட்டுப்பாட்டில் இருக்கிறாள் என்றுதான் எனக்குத் தெரியும்.  அசோகவனத்திற்குள் போக எனக்கு அனுமதி இல்லை என்று உங்களுக்குத் தெரியாதா?’ என்றாள் அசநி.


பற்றிய கைகளை விடாமல் பரிகசித்தாள் முன்னவள். ‘அசநி, வேஷம் போடாதே! வயதில் இளையவள், அழகில் பெரியவள் என்றுதானே உங்கள் ராணியைக் கொண்டு வந்தார் சக்ரவர்த்தி!  இப்போது இன்னொருத்தியைக் கொண்டுவந்திருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்?  இளையராணியின் மீது அவருக்கு ஆசை குறைந்துவிட்டது என்றுதானே? திடீரென்று ஏன் இப்படி ஆனது?  ஒருவேளை இளையராணிக்கு உடல்நலம் சரியில்லையோ?’


அசநி ஏதோ சொல்ல நினைப்பதற்குள் பெரிய மகாராணியின் அறையிலிருந்த விளக்குகள் அணைந்தன. அனைவரும் கலைந்து போகவேண்டும் என்று அர்த்தம். அப்பாடா என்று தன் அறைக்கு ஓடினாள் அசநி.****‘ஆம், ராணி! அப்படித்தான் அவர்கள் பேசிக்கொண்டார்கள்’ என்றாள் அசநி.  குளியலின் போது கிடைத்த செய்தியை ஒன்றுவிடாமல் பகிர்ந்துகொண்டாள் தன் தலைவியுடன்.


தன்மீது சக்ரவர்த்திக்கு ஆசை குறைந்துவிட்டதாமோ? சிரித்துக்கொண்டாள் தான்யமாலினி.  அவரால் தனக்குக் கொடுக்கப்பட்ட தன்னிலை விளக்கம் இவர்களுக்கு எப்படித் தெரியப்போகிறது!


சூசகமாக அசநியிடம் விளக்கினாள்.  சீதையிடம் நயமாகச் சொல்லி அவள் மனத்தை சக்ரவர்த்தியின்பால் திருப்பவேண்டும். அதற்குக் கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடு ஒரு மாதம் என்பதையும் சொன்னாள். ‘இதற்கு உன்னைத் தானடி நம்பியிருக்கிறேன்’ அன்று அசநியிடம் உதவிகேட்டாள் தான்யமாலினி.


அசநி! எப்படிப்பட்ட ஆண்மகனும் தன் மனைவியை இன்னொருவன் கவர்ந்துபோய்விட்டதாகத் தெரிந்தால் வாளாவிருப்பானா? அதிலும் அரசனாக இருந்தவன் அப்படி இருக்கலாமா? இங்கே சீதை வந்து பத்து மாதங்கள் ஆகிறதாமே, இன்னும் அந்த இராமன் தேடி வருவதைப் பற்றித் தகவல் இல்லையே! இதிலிருந்து உனக்கு என்ன தெரிகிறது?’


சட்டென்று சொன்னாள் அசநி: ‘இந்தப் பெண் மீது அவள் கணவனுக்கு ஆசை இல்லை. எப்படியோ இவள் தன்னை விட்டுப் போனால் போதும் என்று இருக்கிறான். அல்லது, இவளை மணந்து கொண்ட காரணத்தால்தான் காட்டில் வாழும் துர்ப்பாக்கியம் ஏற்பட்டது என்றும் வெறுப்படைந்திருக்கலாம். தனக்கு வாரிசு உருவாக்கித் தரவில்லையே என்றுகூட வருந்தியிருக்கலாம்.’  அசநியின் புத்திசாலித்தனத்தை மெச்சினாள் தான்யா. ‘மிகவும் சரியாக அனுமானித்தாய் அசநி!  இனி நீ செய்யவேண்டியது என்னவென்றால், இந்தக் காரணங்களால்தான் இராமன் உன்னை வெறுக்கிறான், இனிமேல் அவன் உன்னைத்தேடிக்கொண்டு வரவே மாட்டான் என்று சீதையிடம் உருவேற்றவேண்டும். அவள் மனத்தில் இராமனைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்று தெரியவில்லை. ஆனால் எந்தப் பெண்ணுக்கும் இப்படிப்பட்ட கணவன் மீது கோபம் வரத்தான் செய்யும். அதை நீ சரியாகப் பயன்படுத்திக்கொண்டு அவள் மனத்தை மாற்றவேண்டும். சரியா?’


‘எனக்கு இன்னொன்றும் தோன்றுகிறது இளைய மகாராணி!  இவ்வளவு நாளாகத் தினமும் சக்ரவர்த்தி அவளை நேரில் பார்த்துக் குழைந்து கொண்டிருந்தாராமே, இனிமேல் அதை நிறுத்தச் சொல்லுங்கள். அப்போதுதான் நமது திட்டம் சீக்கிரம் பலிக்கும்’ என்றாள் அசநி.


‘எப்படி?’


‘சொல்கிறேன். முதலில் இவள்மீது இராமனுக்கு ஆசை கிடையாது.  எனவே இனி வரமாட்டான் என்பதை அடித்துச் சொல்கிறேன்.  அவள் மனம் பலவீனமடைந்த தருணத்தில், இப்படி அவளைப் பயமுறுத்தப் போகிறேன்: சீதாதேவியே, இதுநாள் வரை சக்ரவர்த்தி உன்மேல் ஆசையோடு இருந்தார். ஒவ்வொருநாளும் நீ மனம் மாறுவாய் என்று நம்பினார். நீ முரண்டுபிடித்தாய். இப்போது பார், அவரே வருவதை நிறுத்திவிட்டார். இனி உனக்கு ஆதரவு யார்?


பத்தினிப் பெண்ணைக் கணவனே கைவிட்டபிறகு, ஆசைநாயகர்களும் இல்லையென்றால், அவளின் கதி என்ன ஆகும்?  தற்கொலை செய்துகொள்வதுதான் ஒரே வழி! நீ என்ன செய்யப்போகிறாய் சீதாதேவி?’


தான்யமாலினியின் முகத்தில் பெரும் ஒளிவெள்ளம் பாய்ந்தமாதிரி  ஆனது. ‘நீ மட்டும் இதைச் செய்து காட்டிவிடு, உனக்கு என்ன வேண்டுமோ அதெல்லாம் நான் செய்கிறேன்’ என்று அசநியைக் கட்டித்தழுவிக்கொண்டாள். தன் கழுத்திலிருந்து முத்தும் பவழமும் இணைந்து பிரகாசித்த மாலையை அவளுக்குப் பரிசாக வழங்கினாள்.


மண்டோதரியைப் பின்தள்ளிவிட்டு, தானே மகாராணியாகும் நாள் தூரத்தில் இல்லை என்ற நப்பாசை அவள் மனத்தை ஆட்கொண்டது.


அதே சமயம் சக்ரவர்த்தி அன்றொருநாள், சீதையிடம், ‘இந்த நகரமும் நானும் உனக்கே சொந்தம். எல்லா ஆபரணங்களையும் அணிந்துகொண்டு வா. வண்ண வண்ணப்பூக்களால் தன்னுடலை அலங்கரித்துக்கொண்டு மிளிரும் சமுத்திரக்கரை நந்தவனங்களில் உல்லாசமாக இருப்போம் வா’ என்று கெஞ்சி அழைத்தாரே அது உண்மையாகிவிடக்கூடாதே என்றும் மனத்தில் ஓர் அச்சம் படர்ந்தது.'
****அசநியும் அவளது பிற சேடிப்பெண்களும் அன்றாடம் அசோகவனத்திற்கு வருகை தரலாயினர்.  வழக்கமாக சீதைக்குக் காவல் இருந்த பயங்கரத் தோற்றம்கொண்ட அசுரகுலத்துப் பெண்டிர் மாற்றப்பட்டனர்.


‘சீதாதேவி! உன் கணவன் இராமனுக்கு உன்மேல் சற்றும் ஆசையில்லை.  நீ ஒழிந்தால் போதும் என்றே இருக்கிறான். ஆகவே அவனுக்காக நீ காத்திருப்பதில் பயனில்லை.’ ‘அயோத்தியின் இளவரசியே, உன் கணவன் இராமன் வீரம் அற்றவன் மட்டுமல்ல, ஆண்மையற்றவனும் ஆவான். பத்து வருடங்களாக உனக்குக் குழந்தைகள் இல்லையே ஏன்?  அவனையா இன்னும் நீ எதிர்பார்க்கிறாய்?’


‘காவல் மிகுந்தது இந்த இலங்கை மாநகரம். ஆயுதமோ, படைபலமோ இல்லாத இராமன் இதற்குள் நுழைய முடியுமா?  நுழைந்தாலும் சக்ரவர்த்தியின் படைகளிடம் இருந்து உயிர் தப்பமுடியுமா? தன் உயிரையே காப்பாற்றிக்கொள்ள முடியாத ஒருவன், உன்னை மீட்டுச் செல்வது எங்ஙனம்?’


‘முக்கியமான ஒன்றைப் புரிந்துகொள் சீதாதேவி!  இப்பொழுதெல்லாம சக்ரவர்த்தி உன்னைப் பார்க்க வருவதில்லை.


ஏன் தெரியுமா? உன்மேல் அவர் கொண்ட ஆசை புளித்துப்போய் விட்டது. அவர் நினைத்தால் ஏழு உலகங்களிலிருந்தும் பேரழகிகள் கிடைக்காமலா போவார்கள்? உன்னுடைய பிடிவாதத்தினால் சக்ரவர்த்தியையும் இழந்துவிடாதே. அவர் விதித்த கெடுவுக்குள் உன்னை மாற்றிக்கொள். இந்த இலங்காபுரியின் மகாராணியாக  நீயே வலம்வரலாம்.’


-இப்படி ஒருவர் மாற்றி ஒருவராகச் சீதையின் மனத்தைத் திசை மாற்றம் செய்ய முயன்றதற்குப் பயன் இல்லாமல் இல்லை.

மிழ்த்தில் வாக்ளிக் இங்கு க்ளிக் செய்வும்.( தொடரும்.   அடுத்த பதிவில் முடியும்.)

36 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா, ஐயா அவர்களின் எழுத்துஅற்புதம்
தொடர்கிறேன் நண்பரே
தம +1

Geetha Sambasivam said...

முற்றிலும் புதியதொரு கோணம். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

KILLERGEE Devakottai said...

எழுத்தின் நடை இரசிக்க வைக்கிறது தொடர்கிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

எப்படியெல்லாம் சூழ்ச்சி...!

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா .... இந்தக்கதையை மிக அருமையாக ....
நத்தை வேகத்தில் நகர்த்திச் சென்றுள்ளீர்கள்.

இருப்பினும் ஒவ்வொரு வரியிலும், வாசிப்பவருக்கு ஏதோவொரு
மிகப்பெரிய எதிர்பார்ப்பினைத் தந்து மகிழ்வித்துள்ளீர்கள்.

உங்கள் எழுத்து நடை அழகு .... அந்த அந்தப்புரப்
பெண்களின் உடை அழகைப் போலவே :)

அடுத்த வாரம் இந்நேரம் இந்தக் கதை நிறைவு பெற்றுவிடும்
என்பதை நினைத்தால் மட்டும்தான் என்னால் என்
கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

மனம் நிறைந்த பாராட்டுகள் ஸ்வாமீ.

கோமதி அரசு said...

அசநியின் தந்திரங்கள் , தான்யமாலினியின் நப்பாசை எல்லாம் அழகாய் சொல்லி செல்கிறார் கதை நகர்வு அருமை.
தொடர்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

சுவாரஸ்யம்....தொடர்கிறோம் ஆவலுடன் முடிவிற்கு...

மனோ சாமிநாதன் said...

அசோக வனத்தில் சீதையின் துயருக்குப்பின்னால் வித்தியாசமான கதைக்களம்! முடிவும் வித்தியாசமாகவே இருக்கும் என்றும் தோன்றுகிறது!

துரை செல்வராஜூ said...

அந்தப்புரத்தின் அந்தரங்கம்..
அந்தப்புரத்தில் அந்தரங்கம்..

அந்தரங்கத்தின் அந்தரங்கம்..
அந்தரங்கத்திலும் அந்தரங்கம்..

ஆகா.. அருமை அந்தரங்கம்..

துரை செல்வராஜூ said...

அந்தப்புரத்தின் அந்தரங்கம்..
அந்தப்புரத்தில் அந்தரங்கம்..

அந்தரங்கத்தின் அந்தரங்கம்..
அந்தரங்கத்திலும் அந்தரங்கம்..

ஆகா.. அருமை அந்தரங்கம்..

நெல்லைத் தமிழன் said...

த ம +1. அப்பறம் வரேன்

Anuradha Premkumar said...

புதிய கண்ணோட்டத்தில்.. விறுவிறுப்பான கதை..

விஜய் said...

ரசித்தேன்,அருமை
தமிழ் செய்திகள்

asha bhosle athira said...

/////தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு க்ளிக் செய்யவும்.
/////
ஓஓஓஓ மை வயலூர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் முருகாஆஆஆஆஆஆ..... என்றும் இல்லாத மாஆஆஆற்றம் என்னதூஊஊஊஊ.......

வயசு ஏற ஏற கலறு கூடி இளமையாகுதூஊஊஊ.... ஹா ஹா ஹா எழுத்துக்களின் ஸ்டைல் கலருக்குச் சொன்னேன்:).... சூப்பர் கீப் இற் மேலே ஸ்ரீராம்:).

asha bhosle athira said...

கதையை வரிவரியாக ரசிச்சுப் படிக்கிறேன்ன்ன்... ராமாயணமாச்சே மிக அருமையாகச் சொல்லியிருக்கிறார் பழைய நியூஜெர்ஸி ஐயா:)...
கோயிலில் பிரசங்கம் கேட்பதுபோல இருக்கு... கொஞ்சம் லேட்டா வாறேன் பதில்களுக்கு.

asha bhosle athira said...

///வை.கோபாலகிருஷ்ணன்June 13, 2017 at 7:30 AM
ஆஹா .... இந்தக்கதையை மிக அருமையாக ....
நத்தை வேகத்தில் நகர்த்திச் சென்றுள்ளீர்கள். /////

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஹையோ கோபு அண்ணனை ஆராவது பிடிச்சுத் தாங்கோ பிளீஸ்ஸ்ஸ்... என் தேம்ஸ் இல் பாதி சொத்தை அப்படியே எழுதித் தாறேன்ன்ன்ன்ன்ன்:).... என்னால இதை எல்லாம் பார்த்திட்டும் பேசாமல் போக முடியல்ல வைரவாஆஆஆ:).

asha bhosle athira said...

////அடுத்த வாரம் இந்நேரம் இந்தக் கதை நிறைவு பெற்றுவிடும்
என்பதை நினைத்தால் மட்டும்தான் என்னால் என்
கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை./////
ஓவரா நடிக்கப்பிடாது ஜொல்லிட்டேஏன்ன்ன்ன்ன்ன் :) ஹா ஹா ஹா ஹையோ அஞ்சூஊஊஊஊ வெயா ஆ யூஊஊஊஉ என் வைர அட்டியலில் ஒன்று உங்களுக்குத்தேன்ன்ன்ன்ன் பீஸ்ஸ்ஸ் சேவ்வ்வ்வ்வ்வ் மீஈஈஈ:)

காமாட்சி said...

ராவணன் தான்ய மாலினிக்குப் பொறுப்பு கொடுக்க, தான்யா சேடி அசனிக்குப் பொறுப்பு கொடுக்க, அசனி ராமன் ஆண்மையற்றவன் என்று சீதைக்குச் சொல்கிராள். அந்தக்காலம்,இந்தக்காலம் எல்லாம் ஒன்றாக இருக்கிறது. பழி எப்படிவேண்டுமானாலும் சுமத்தலாம். மிக்க இன்ரஸ்டாக சேடிகளின் பேச்சுகளும்,கதையும் ஸ்வாரஸ்யம். வம்பு. வரிக்குவரி பிரமாதம். அன்புடன்

mohamed althaf said...

அருமை நண்பரே

Angelin said...

மிக அருமையாக சுவாரஸ்யமாக செல்கிறது ..செல்லப்பா சாருக்கு நன்றி ..ஸ்ரீராமுக்கும்தான் இரட்டை நன்றி ..

எனக்கு இதெல்லாம் அறியாத சம்பவங்கள் கதா பாத்திரங்கள் வியப்புடனும் ஆச்சரியத்துடனும் வாசித்து வருகின்றேன்

asha bhosle athira said...

///Angelin said...
மிக அருமையாக சுவாரஸ்யமாக செல்கிறது ..செல்லப்பா சாருக்கு நன்றி ..ஸ்ரீராமுக்கும்தான் இரட்டை நன்றி ..///

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈஈஈ:) அதென்ன இரட்டை நன்றி?:)... நான் கதை எழுதியபோது ஏன் இப்பூடி இரட்டை நன்றி சொல்லவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. விடுங்கோ மீ அந்தாட்டிக்கா போகிறேன்ன்ன்:).

asha bhosle athira said...

அது என்னமோ தெரியவில்லை.. அரசாங்கத்தால் மின்சாரம் தடைப்படுத்தப் பட்டிருந்தாலும்.. எக்குறையும் இல்லாமல் ஜெனரேட்டர் மூலம் யாழ்ப்பாணம்.. எப்பவும் அழகுகோலம் பூண்டிருந்த காலம்.

கோயில் இரவுத் திருவிழா முடிந்து, ஐயர் ஆட்கள் எல்லாம் உடை மாற்றி விட்டு வந்தமர்ந்து முடிய, ஒரு யானைக்குட்டியைப்போல அழகாக சிரித்த முகத்தோடும், ஒரு குடும்பியோடும் ஜெயராஜ் அங்கிள், மேடையில் ஏறிவந்து கும்பிட்டபடி அமர்வார்... கரகோசம் வானைத் தொடும்....

பென்னாம்பெரிய கோயில் வீதியில்.... மணல்மண் போடப்பட்டிருக்கும்... நிலவு வெளிச்சத்தைத்தாண்டி... ஜெனரேட்டர் ரியூப் லைட்டுகள், பகல் போல ஆக்கி இருக்கும் ஊரை...

அம்மாவிடம் பெர்மிஷன் வாங்கி.. சிலநேரம் அம்மாவும் சேர்ந்து.. நண்பிகள்/உறவுகள் கூட்டமாக கோயில் போய் , கச்சான் ஆச்சியிடம் வறுத்த கச்சானும்.. உருண்டைக் கடலையும் வாங்கிக் கொண்டு, இடம் பிடிச்சு இருந்து கொண்டு.... நம் ஏனைய நண்பர்கள்.. எக்சட்ரா.. எக்ஸ்சட்ரா:)..... எல்லோரும் நம் கண்ணுக்குத் தெரியும்படியாக இருக்கிறார்களா என்பதையும் கொன்ஃபோம் பண்ணிக்கொண்டு(தப்பா நினைச்சிடாதீங்கோ ச்சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்)... அந்த வயசில்..ஜெயராஜ் அங்கிளின் பிரசங்கம் கேட்ட காலமும்.. சந்தோசமும் திரும்பக் கிடைக்காது.. எல்லோருக்கும் இப்படிக் கிடைச்சும் இருக்காது.. எனக்குக் கிடைத்ததே:).

உண்மை சொன்னால்.. இலக்கியம் என்றாலே அலறி ஓடும் எனக்கு, சின்ன வயதிலேயே கம்பராமாயணம் மீதும்... பாரதப்போர் மீதும், போறிங் இல்லாமலும்.. நித்திரை வந்திடாமல் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்தபடியே... காதலை வளர்த்து விட்டவர்.. ஜெயராஜ் அங்கிள் தான்...

asha bhosle athira said...

//‘என் காமத்தை மறுதலித்தாயல்லவா, இராமா, உன்காதலைப் பாழ்படுத்திக் காட்டுகிறேன் பார்’ என்று மனதிற்குள்சூளுரைத்தாள் சூர்ப்பனகை.//

பெண்பாவம் பொல்லாததாம்:).. ராமன் சூர்ப்பனகையோடு ஏளனமாக விளையாடி அவரது மனதை நோகடிச்சமையால்தான்.. அச்சாபத்தால்தான் ராமனுக்கு இவ்ளோ இன்னல்கள் வந்ததாமே.

இங்கு தோழிகளும் அனைத்துப் பெண்களும் பேசிக்கொள்ளும் விடுப்ஸ்:) ஐ மிக அழகாக சொல்லிக் காட்டியுள்ளார் ஆசிரியர்.

பெண்கள் நினைத்தால் எப்படிப் பேசியும் ஒருவரின் மனதைக் கலைத்து சாதித்து விடலாம் என்பதைத் தெளிவாக்கியிருக்கிறது அரண்மனைப் பெண்களின் பேச்சுக்கள்.

அதே நேரம்.. யார் என்ன சொன்னாலும் ஒரு பெண்ணுக்கு உள்ள மன உறுதியை யாராலும் குலைத்துவிட முடியாது என்பதைக் காட்டுகிறது சீதையின் மனத்தைரியம்...

asha bhosle athira said...

//-இப்படி ஒருவர் மாற்றி ஒருவராகச் சீதையின் மனத்தைத் திசை மாற்றம் செய்ய முயன்றதற்குப் பயன் இல்லாமல் இல்லை.///

ஹா ஹா ஹா முடிவில் ட்டுவிஸ்ட்:) வச்சு... தொடரைப் போட்டிருக்கிறார்ர்...:).. சிலருக்கு இப்போ சந்தேகம் வந்திருக்குமே.. ஒருவேளை சீதையின் மனதை மாற்றி விட்டார்களோ:).. கரைப்பார் கரைச்சால் கல்லும் கரையுமாமே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் பொறுத்திருந்து பார்ப்போம்:)...

மிக அருமையான கதையாகப் போகிறது. எத்தனை தடவை கேட்ட கதையாயினும் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொருத்தர் சொல்லும்போதும்.. ஏதோ பல புதிய விசயங்கள் அங்கே வந்து விடுகிறது... நன்றி வயக்கம்_()_..

ஹொட்டா ஒரு நெக்ட்டோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)

G.M Balasubramaniam said...

விட்டால் ஒரு புது ராமாயணமே படைப்பீர் போல் இருக்கிறதே பாராட்டுக்சள் செல்லப்பா சார்

ஏகாந்தன் Aekaanthan ! said...

மூன்றாவது பகுதி எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பு வைத்ததுபோல் இருக்குமோ?

Angelin said...

//ஒரு யானைக்குட்டியைப்போல அழகாக சிரித்த முகத்தோடும், ஒரு குடும்பியோடும் ஜெயராஜ் அங்கிள்,//

இருங்க மோகன்ஜிகிட்ட கிட்ட சொல்லி இவருக்கு இதை ஜெயராஜ் அவர்களிடம் சொல்ல சொல்றேன் :) ஒரு அப்பாவி அங்கிளை யானைகுட்டின்னு சொல்லிட்டீங்களே :)

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

அற்புதமான கதை படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Asokan Kuppusamy said...

விறுவிறு கதைப் போக்கு நன்று

asha bhosle athira said...

Angelin said.../// ஒரு அப்பாவி அங்கிளை யானைகுட்டின்னு சொல்லிட்டீங்களே :)// இப்பவும், அவர் யானைக்குட்டியேதான் எனவும் சேர்த்துச் சொல்லிடுங்கோ:) சந்தோசப்படுவார்:)

middleclassmadhavi said...

enjoyed reading the story from new angle!

Rajeevan Ramalingam said...

மீண்டும் செல்லப்பா ஐயாவுக்கு வாழ்த்துக்கள். கதையோட்டம் மிக அருமை. தெளிந்த நீரோடைபோல கலகலவென நகர்ந்து செல்கிறது.

உண்மையில் இராவணனுக்கு தான்யமாலினி எனும் இரண்டாம் மனைவி இருந்ததாக முன்பு நான் கேள்விப்பட்டிருக்கவில்லை. நீங்கள் அப்படி ஒரு பாத்திரத்தை வடிவமைத்ததோடு, அவர்கள் எப்படிப் பேசிக்கொள்வார்கள் என்பதையும் அழகுறக் கற்பனை செய்துள்ளீர்கள்.

மண்டோதரி Vs தான்யமாலினி சண்டையை அல்லது இருவருக்குமிடையிலான போட்டியை நேரடியாகக் காட்டாது, சேடிப் பெண்கள் வழியே சொன்ன விதம் அருமை...!!

'ஆண்கள் சைட் அடிப்பதை பெண்கள் விரும்புவார்கள்' என்று பொதுவாகச் சொல்வார்கள் :) :) ( யாருமே சைட் அடிக்காவிட்டால் பெண்கள் உள்ளூர வருந்துவார்களாம் )

அந்த டெக்னிக்கை எடுத்துக்கொண்டு, 'இராமனுக்கு உன்மீது ஈடுபாடு இல்லை. இராவணனும் இப்போது மெனக்கெடுறமாதிரி தெரியவில்லை' என்று சேடிகள் அட்வைஸ் பண்ணுவது செம சுவாரசியம்.

முன்பு ஒருமுறை தன்னை இராவணன் வர்ணித்த விதத்தை, தான்யமாலினி எண்ணிப் பார்ப்பதும் உவகை கொள்வதும் அட அட...!!

செல்லப்பா ஐயா... பின்னிட்டீங்க

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

கதை அருமையாகச் செல்கிறது.
முடிவை நாடி உள்ளம்
காத்திருக்கிறது.

Durai A said...

//ஆஹா .... இந்தக்கதையை மிக அருமையாக ....
நத்தை வேகத்தில் நகர்த்திச் சென்றுள்ளீர்கள்.

:-) சிறுகதையை ஜவ்வாக இழுத்துச் செல்லும் உரிமை எனக்கு மட்டுமே இருப்பதாக நினைத்திருந்தேன்.

களத்திலும் எழுத்திலும் இருக்கும் வசீகரம் கட்டிப் போடுகிறது.

சென்னை பித்தன் said...

எப்படி முடிக்கப் போகிறாரோ!

Thulasidharan V Thillaiakathu said...

துளசி: வித்தியாசமா கொண்டு செல்கின்றீர்களே சார்! எப்படி முடிவு வர இருக்கிறது என்று காத்திருக்கிறோம்....

கீதா: //-இப்படி ஒருவர் மாற்றி ஒருவராகச் சீதையின் மனத்தைத் திசை மாற்றம் செய்ய முயன்றதற்குப் பயன் இல்லாமல் இல்லை// ஆஹா சீதையின் மனம் மாறியதாக இதுவரை எந்தச் சரித்திரமும் சொல்லவிலையே....செல்லப்பா சார் வித்தியாசமாகக் கொண்டு செல்கிறார்...சீதை இப்படி யோசித்து பின்னர் ராமனை மன்னிக்கிறாள் என்று முடியுமோ....

அப்பெண்களின் வசனங்கள் செம சுவாரஸ்யம். தான்யமாலினிக்கும் மண்டோதரிக்கும் இடையே இருக்கும் (பின்னே இருக்காதா மண்டோதரிக்கு??!!முதல் மனைவி அல்லவா??!!) அந்தப் பொறாமையை மறைமுகமாக பெண்கள் பேசிக் கொள்வது போல சொல்லியிருப்பதும் அட! தொடர்கிறோம் ...

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!