Friday, June 30, 2017

வெள்ளி வீடியோ : தேன் உண்ணும் வண்டு..
     

     என்னுடைய கணினி பழுதாகி இருக்கிறது.  பதிவிடுவதில் சுணக்கம்.  அதனால் நிறைய எழுத முடியவில்லை!  (யார் அங்கே?  பிழைத்தோம் என்று பெருமூச்சு விடுவது?!!) 

     சலபதிராவ் இசையில் ஏ எம் ராஜா சுசீலா குரலில் இந்தப் பாடல் பிடிக்கவில்லை என்று சொல்பவர்கள் இருக்கிறார்களா என்று தெரிந்து கொள்ள ஆவல்.  எவ்வளவு ஒல்லியான சாவித்திரி!  மிஸ்ஸியம்மா சாவித்திரி போலவே..  ஜிவாஜி  (ஹிஹிஹி... நன்றி கீதாக்கா) கூட ஒல்லி!


தமிழ்மண வாக்களிக்க இங்கு சொடுக்கவும்!

35 comments:

Geetha Sambasivam said...

ஹெஹெஹெ, கூடவே என்ன படம்னும் சொல்லி இருக்கலாமுல்ல! அதுவும் என்னை மாதிரி சினிமா அறிவிலிகளுக்கு! :)

Geetha Sambasivam said...

பாட்டு என்னமோ கண்ணை மூடிட்டுக் கேட்டா நல்லாத் தான் இருக்கு! நாட்டியம்ங்கற பேரிலே சாவித்திரியோட அசைவுகளையும் கம்பீரம்னு நினைச்சுட்டு (ஹிஹிஹி)ஜிவாஜி நடக்கறதையும் பார்க்கச் சகிக்கலை! :)))))) ம்ம்ம்ம்ம்ம் ஏதோ ஸ்ரீதர் படமோனு தோணுது!

Geetha Sambasivam said...

அட, அதிலேயே வருதே! அமரதீபம்? அப்படி ஒரு படம் வந்திருக்கு?

Anandaraja Vijayaraghavan said...

தமிழன் என்றால் வாக்களிக்கவும் ன்னு படிச்சுட்டேன். BtW இந்தப் பாட்டை முதல்முறையா கேக்குறேன். I feel his voice suits more for Gemini Ganesan.

KILLERGEE Devakottai said...

ஸ்ரீராம் ஜி நான் பெருமூச்சு விடவில்லை இது மிஸ்ஸியம்மா மீது சத்தியம்.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு கேட்கிறேன் இப்பாடலை...

நெல்லைத் தமிழன் said...

த ம +1. பாடல் நல்லாதான் இருக்கு கண்ணைமூடிக் கேட்டால். செட்டும் நல்லாப் போட்டிருக்காங்க. இப்போ பூங்கா பாடல்காட்சு, ரெண்டுபேர் ஆட்டம்லாம் காணும்போது நகைச்சுவையா இருக்கு.

சாவித்திரியைப் பார்க்கும்போது அவரது அவல பிற்கால வாழ்க்கைதான் நினைவுக்கு வருது.

துரை செல்வராஜூ said...

எப்போதும் முணுமுணுக்கும் பாடல்...
அருமை..

ஏகாந்தன் Aekaanthan ! said...

டெல்லியின் காலையில் கனவுபோல் பெய்கிறது கோடைமழை. கூடவே வாடைக்காற்றும் வீசியதுபோல் வருகிறது நீங்கள் போட்டுவிட்ட ‘தேன் உண்ணும் வண்டு..’. சுசீலாவின் குரலுக்கு அவருக்கு பாரத ரத்னாவே தரலாம். பத்மஸ்ரீயாவது வாங்கினாரா, தெரியவில்லை. ஏ எம் ராஜா, ஜெமினி கணேசனை விட்டுவிட்டு, இங்கு சிவாஜிக்குத் துணைபோகிறார். பாடல் அமுதம். சலபதி ராவ், சுசீலா, ராஜா இப்படி யார் காலைத் தொட்டு வணங்குவது என்பதில் சிறு சந்தேகம்! இத்தகைய இசைகொஞ்சும் பழையபாடல்களைக் கேட்டுக்கொண்டே உயிர்நீத்துவிடலாமோ எனவும் சில சமயம் தோன்றுகிறது.

பாடலைத் தாண்டி, இன்னொரு விஷயத்தை கவனித்தீர்களா? அந்தக்காலத்தில் காதல் என்கிற மென் உணர்வினை எப்படி லாவகமாக கையாண்டிருக்கிறார்கள், எப்படித் திரையில் மனதுக்கிதமாய்க் காட்டியிருக்கிறார்கள்? தலைவியும் தலைவனும் அருகில் நெருங்கியும், நெருங்காமலும், சொல்லியும், சொல்லாமலும், பார்வை, உடலசைவுகளிலேயே பல விஷயங்கள் மனதிலிருந்து மனதிற்கு மரமேறுவதை கவனித்தீர்களா? இப்படி ஒருகாலத்தில் இருந்த தமிழ்ப் படம், தமிழர் ரசனை, ஏன் இப்போது கேவலமாகப் போய்விட்டது என்பதில்தான் என் ஆற்றாமை. ’லவ்’ என்கிற பெயரில் ‘வவ்’ என்று ஒருத்தர்மேல் ஒருவர் விழுந்து கடித்து, புரண்டுகொண்டு.. சகிக்கவில்லை. நடிப்பு என்கிற பெயரில் இவர்கள் செய்யும் நாதாரித்தனங்கள். கடவுளே, நீ இருக்கிறாயா ? தமிழ் சினிமா பார்ப்பதுண்டா?

கோமதி அரசு said...

இனிமையான பாடல் , மிகவும் பிடித்த பாடல்.பகிர்வுக்கு நன்றி.

Vasudevan Tirumurti said...

கீக்கா 'ஜிவாஜி'ன்னாலே aunty mode க்கு போயிடுவாங்க. அப்பல்லாம் நெகடிவ் கமெண்டாத்தான் வரும்! வெவ்வெவ்வே! :-)))))

திண்டுக்கல் தனபாலன் said...

என்றும் ரசிக்க வைக்கும் பாடல்...

Rajeevan Ramalingam said...

எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்..! தினமும் காலை 5.15 தொடக்கம் 6 மணிவரை 'என்றும் இனியவை' நிகழ்ச்சி இ.ஒ.கூட்டுத் தாபனத்தில் ஒலிபரப்பாகும். அதில் பல முறை இப்பாடலைக் கேட்ட நினைவுகள் வருகின்றன.

விஜய் said...

அருமையான காணொளி
தமிழ் செய்திகள்

ராஜி said...

சாவித்திரியும், சிவாஜியும் ஜோடி சேர்ந்திருக்காங்களா?!

Geetha Sambasivam said...

@Vasudevan Tirumurthi, hehehehehehehe me the enjoying! :)))))

Bagawanjee KA said...

எ எம் ராஜா குரல் இனிமை என்றாலும் சிவாஜிக்கு கொஞ்சமும் பொருத்தமில்லை :)

Asokan Kuppusamy said...

தேனினும் இனிய பாடல் மகிழ்ச்சி பகிர்வுக்கு

ஸ்ரீராம். said...

வாங்க கீதா அக்கா.. அமரதீபம் படம். உங்களுக்கே தெரிந்து விட்டது. ஸ்ரீதர் படம்தான். சாவித்திரியின் நடனம் நளினமாக நன்றாகத்தானே இருக்கிறது? நான் ரசிச்சேன்ப்பா...!!

ஸ்ரீராம். said...

//தமிழன் என்றால் வாக்களிக்கவும் ன்னு படிச்சுட்டேன்.//

ஹா... ஹா... ஹா... அதுசரி ஆவி... வாக்களித்தீர்களா இல்லையா? முதல்முறை இப்போதான் கேக்கறீங்களா? அப்போ நான் பாட்டைப் பகிர்ந்ததற்கு ஒரு அர்த்தம் கிடைத்து விட்டது! ஆமாம்... சிவாஜிக்கு ஏ எம் ராஜா குரல் அவ்வளவாகப் பொருந்தவில்லைதான்!

ஸ்ரீராம். said...

வாங்க கில்லர்ஜி. இப்படி நல்ல இனிமையான பாடல்கள் இப்போது வருவதில்லை என்பதால்தானே பெருமூச்சு!

ஸ்ரீராம். said...

வாங்க நெல்லை... மருந்தைச் சாப்பிடும்போது குரங்கை நினைக்கக் கூடாது என்பார்கள். பாட்டு போட்டா பாட்டை ரசிக்கணும்! அவல வாழ்க்கையை எல்லாமா நினைப்பது! ஆனாலும் சாவித்ரியம்மா பாவம்தான் !(சாவித்திரி பாட்டி என்று சொல்லணுமோ!)

ஸ்ரீராம். said...

வாங்க துரை செல்வராஜூ ஸார். நன்றி.

ஸ்ரீராம். said...

வாங்க ஏகாந்தன் ஸார்.. பாடல் ரசனை உங்கள் ஏக்கத்தையும் ஆதங்கத்தையும் கிளப்பி விட்டு விட்டது போல. சங்கராபரணம் வெளியானபின் விபத்தில் உயிர்போகும் நிலையில் இருந்த ஒருவர் அந்தப் படப்பாடல்களைக் கேட்டுக்கொண்டே உயிர் நீத்தாராம். அது நினைவுக்கு வருகிறது. எனக்கும் இப்படிச் சிறந்த பாடல்களைக் கேட்கும்போது அவர்கள் கைகளை பிடித்து கண்களில் ஒற்றிக்கொள்ளத் தோன்றும். சுசீலாம்மாவுக்கு விருது கிடைத்ததா என்று எனக்குள்ளும் இப்போது கேள்வி வருகிறது. நன்றி ஸார்.

ஸ்ரீராம். said...

நன்றி கோமதி அரசு மேடம்.

ஸ்ரீராம். said...

ஆ.... வாசுதேவன் ஸார்... வருகைக்கு நன்றி. ஆனால் கீதாக்காவை மட்டும் சீண்டி விட்டு, பாடல் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே!!

ஸ்ரீராம். said...

நன்றி தி.த

ஸ்ரீராம். said...

வாங்க ராஜீவன்... இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தை மறக்க முடியுமா? இல்லை, கே எஸ் ராஜா, மயில்வாகனம் சர்வானந்தா, ராஜேஸ்வரி ஷண்முகம் ஆகியோரைத்தான் மறக்க முடியுமா? ரசனைக்காரர்கள்.

ஸ்ரீராம். said...

வாங்க ராஜி.. ரெண்டு பேரும் ஜோடியா நடிச்சிருக்காங்க...

ஸ்ரீராம். said...

வாங்க பகவான்ஜி. பாடல்களை ரசிப்பதில் என் முதல் விதி, காட்சியைப் பார்க்கக் கூடாது!

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.

காமாட்சி said...

இந்தப்பாட்டெல்லாம் இன்னமும் மனதில் வருகிறது. இப்போது எந்தப்பாட்டு மனதில் வருகிறது. அருமையாக இருக்கிறது. அன்புடன்

Thulasidharan V Thillaiakathu said...

அருமையான பாடல்! கேட்டுப் பல வருடங்களாகிவிட்டது ஸ்ரீராம். இன்று உங்கள் உதவியால்!! மிக்க நன்றி.

கீதா: சுசீலாவின் வாய்ஸ் என்ன அருமையான வாய்ஸ்!! பாடல் கேட்டதுண்டு. ஜெமினிக்கு ஏம் ராஜாவின் குரல் கேட்டுப் பழகிவிட்டதாலோ என்னமோ சிவாஜிக்குப் பொருந்தியது போல் இல்லை. இசை சலபதிராவ் என்பது இப்போதுதான் தெரிந்தது. நான் ஏ எம்ம்ராஜா என்று நினைத்திருந்தேன்...இனிமையான தேன் கிண்ணம்!!

Thenammai Lakshmanan said...

arumaiyana padal ! thanks for sharing :)

வெங்கட் நாகராஜ் said...

இனிமையான பாடல். பெரும்பாலும் வீடியோ இல்லாமல் கேட்டு மட்டும் ரசித்த பாடல்! :) முதன் முறையாக வீடியோவுடன் ஆரம்ப வரிகளைக் கண்டேன். பிறகு கேட்க மட்டுமே பிடித்திருந்தது! :)

ஜிவாஜி! :)

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி
தம +1

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!