சனி, 1 ஜூலை, 2017

வாடகை வேன் டிரைவர் மேஜர் அலி செய்த காரியம்...



1)  உடல் குறைபாட்டை மீறி பாஸிட்டிவ் ஆக நினைக்கத் தொடங்கிய பெண்.  அவருக்கு உதவத்தான் எத்தனை பாஸிட்டிவ் மனிதர்கள்... [நன்றி ராமலக்ஷ்மி]















2)  தன்னால் படிக்க முடியாததை தனது பிள்ளைகளைப் படிக்க வைப்பார்கள் நிறைய பேர்.  ஆனால் திரு ஆகாஷ் திரிபாதி செய்வது பாராட்டுக்குரியது.








3)  "......இதை நிறுவ, விவசாயிகளிடம் நாங்கள் பணம் வாங்குவதில்லை. சில இடங்களில் அரசிடம் நிதியுதவி கேட்டோம்; சில இடங்களில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் தருவர்....." 


'புங்க்ரூ' எனப்படும், தண்ணீர் சேமிப்பு கருவியை ஏழை, எளிய பெண் விவசாயிகளுக்கு வழங்கியவரும், 'கார்டியா' விருதை பெற்றுள்ளவருமான, த்ருப்தி ஜெயின்.












4)   சென்னை காவல்துறை அதிகாரி, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் படிப்பைப் பாதியில் நிறுத்திய 440 மாணவர்களை அடை யாளம் கண்டு, அவர்களை மீண் டும் பள்ளிக்கு அனுப்பி உள்ளார்.   சென்னை அடையார் துணை ஆணையர் பி.சுந்தரவடிவேல்









5)  அரசு பள்ளிக்கு, இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய, வாடகை வேன் டிரைவர் மேஜர் அலி.











தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு க்ளிக் செய்யவும்.
ரசு பள்ளிக்கு, இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய, வாடகை வேன் டிரைவரை
ரசு பள்ளிக்கு, இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய, வாடகை வேன் டிரைவரை
ரசு பள்ளிக்கு, இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய, வாடகை வேன் டிரைவரை

20 கருத்துகள்:

  1. பாராட்டுக்குரிய நல்ல உள்ளங்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. ஏழ்மையான நிலையில் மேஜர் அலியின் தானம் அளப்பெரிது

    பதிலளிநீக்கு
  3. நல்ல மனிதர்களால் தான் இந்த வையகம் இன்னும் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றது..

    இறைவன் அவர்களுக்கு எல்லா நன்மைகளும் அருள்வானாக...

    பதிலளிநீக்கு
  4. நம்பிக்கை தரும், பாராட்டுக்குரிய செய்திகள். ப்ரீத்தியின் கனவு மெய்ப்படட்டும். 440 சிறார்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திருக்கிறார் காவல் துறை ஆணையர்.

    செய்திகள் 2 மற்றும் 3 ஆகியவற்றை முழுதாக வாசிப்பதற்கான இணைப்பு கொடுக்கப்படவில்லையே.

    பதிலளிநீக்கு
  5. கல்வி மூலம் மட்டுமே சீர்திருத்தங்களையும், வளர்ச்சியையும் ஏற்படுத்த முடியும் என நம்பினேன்//
    உண்மை.
    துணை ஆணையர் பி.சுந்தரவடிவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    முக்கோண அன்பு நிறைந்த மனிதர்களால் வாழும் ப்ரூத்தியின் கனவு நனவாக வேண்டும்.
    அனைத்து நல்ல உள்ளங்க்களுக்கும் வாழ்த்துக்கள், வாழ்க வ்ளமுடன்.

    பதிலளிநீக்கு
  6. நன்றி ராமலக்ஷ்மி. சரி செய்து விட்டேன். இப்போது வருகிறதா என்று பார்த்துச் சொல்லவும்! :))

    பதிலளிநீக்கு
  7. இது போன்ற செய்திகளை படிக்கும்போதே நெகிழ்வாக இருக்கிறது...தொடர்ந்து பாசிட்டிவ் செய்திகளை பகிரும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  8. அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். தகவலைப் பரிமாறிய உங்களுக்கும் தான்..!

    சென்னை காவல்துறை அதிகாரியின் செயல் மேலும் தொடர வேண்டும். கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  9. அனைத்து உள்ளங்களுக்கும்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. ப்ரீத்தியின் கனவுகள் மெய்ப்பட பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துகள்!
    மேஜர் அலியின் நல்ல மனதிற்கு வணக்கங்கள்!!! மனமிருந்தால் மார்க்கமுண்டு!!
    சென்னை காவல்துறை அதிகாரி திரு சுந்தரவடிவேல் அசத்துகிறார்.!!! வாழ்த்துகள்! மேன்மேலும் அவர் பணி சிறக்கட்டும். அதே போன்று திரிபாதி!!! வாவ் போட வைக்கிறார். அவரது சேவையும் தொடர வாழ்த்துகள்!
    திருப்தி ஜெயின் வாழ்க!! வளர்க!

    கீதா: மேற் சொல்லப்பட்டக் கருத்துகளுடன்....திருப்தி ஜெயின் வியக்க வைக்கிறார். புங்க்ரு கருவி/இந்த முறை பற்றி முதல் முறையாகக் கேள்விப்படுகிறேன். விவசாயம் மேம்பாடுகளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இருப்பதால்..அவ்வப்போது இந்தியாவில் என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதால் இது இப்போதுதான் அறிந்தேன். நன்றி ஸ்ரீராம்..
    .... தமிழ்நாட்டிலும் அவர் அதனை அறிமுகப்படுத்த இருப்பது இரட்டிப்பு அல்ல நிறைய மகிழ்ச்சி. அவர் அதனை வெற்றிகரமாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் கூடவே வருகிறது. ஏனென்றால் நம் தமிழ்நாட்டைப் பற்றி நமக்குத்தான் தெரியுமே. இதற்கு அரசு உதவி அவருக்குக் கிடைத்தால் அதுவும் எந்த ஊழலும் இல்லாமல் கிடைத்தால் நல்லது. நம் ஆட்சியாளர்கள் இதைப் பற்றி எல்லாம் யோசிக்கவோ செயல்படவோ மாட்டார்கள் என்பது உறுதி. தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மக்கோல் விடுவார்களே தவிர.ஃபோட்டோ போடுவார்களே தவிர..இப்படியான ஆக்கப்பூர்வமான எதிர்காலத்திற்கு உதவும் வகையில் எல்லாம் சிந்திக்க மாட்டார்கள். சரி தாங்கள் தான் செய்வதில்லை ஜெயின் போன்றவர்களின் செயல்பாடுகளை எந்தவித இடையூறும் இல்லாமல் செயல்பட வைத்தாலே பெரிய விசயம்தான். அவரது முயற்சி வெற்றியடையவேண்டும் தமிழ்நாட்டு விவசாயிகள் அப்படியேனும் பிழைக்கட்டும். ஜெயின் வடநாட்டவர், குஜராத்தி, மோடியின் ரகசிய செயலாளர், ஹிந்தியைத் திணித்து தமிழ்நாட்டை வடநாட்டிற்கு அடிமைப்படுத்த சதித்திட்டம் என்று தமிழுக்காக, தமிழர்களுக்காக உயிரையும் கொடுப்போம் என்று முழக்கம் செய்பவர்கள் கூவாமல் இருந்தால் சரி! இந்தப் பயம் கூடவே எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!!

    பதிலளிநீக்கு
  11. ப்ரீத்தி பத்தி ஏற்கனவே படித்திருக்கேன். மற்றவர்கள் புதிது. இப்பேர்ப்பட்ட மனிதர்கள்தான் மனிதர்கள்மீதான நம்பிக்கையை தக்கவைக்குறாங்க.

    பதிலளிநீக்கு
  12. இம்மாதிரி நற்காரியங்கள்செய்வோர் நம்பிக்கை நட்சத்திரங்களே

    பதிலளிநீக்கு
  13. த்ருப்தி ஜெயினின் 'புங்க்ரூ'கருவியின் செயல்பாடு திருப்தியாக இருக்கும் பட்சத்தில் இது நாடெங்கிலும் விரைவில் பரவும் :)

    பதிலளிநீக்கு
  14. பாராட்டுக்குரியோரைத் தேடிப் பகிரும் உங்களது பணி சிறக்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. இப்போது வருகின்றன. இணைப்புகளில் சென்று பார்த்து விட்டேன்.

    /.....இன்னும், 10 ஆண்டுகளில் இந்த நிலை மாறும்.

    விவசாயிகளின் கால்களில் ஆட்சியாளர்கள் விழுந்து, 'ஐயா தயவு செய்து விவசாயத்தைத் தொடருங்கள். உங்களுக்கு என்ன வசதிகள் வேண்டுமோ நாங்கள் செய்து தருகிறோம். விவசாயத்தைக் கைவிட்டு விடாதீர்கள்' என, கெஞ்சி, கதறும் நிலை வரத்தான் போகிறது./

    உண்மை!

    பதிலளிநீக்கு
  16. அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு
  17. முதல் செய்தி ஏற்கெனவே படித்தேன். மேஜர் அலி அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டார்! இந்தப் பதிவு ஏன் அப்டேட் ஆகலைனு தெரியலை! :) இன்னிக்குத் தற்செயலா வந்தால்!!!!!!!!! :)

    பதிலளிநீக்கு
  18. வழிகாட்டி உள்ளங்களைப் பாராட்டுவோம்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!