ஞாயிறு, 19 மே, 2019

ஞாயிறு 190519 நிறைந்த ஏரியில் மறைந்த தரை...


ஷில்லாங்குக்கு வடக்கே 15 கிமீ தொலைவில் இருக்கும் உமியம் ஏரி.  இது பரப்பனி ஏரி என்று அறியப்படுவதாகச் சொல்கிறார்கள்.  1960 களில் இது உருவாக்கப்பட்டதாம்.  மின்சாரத் தயாரிப்புக்காக முக்கிய காரணமாக இந்த ஏரி உருவாக்கப்பட்டது. பின்னர் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமாக மாறிப்போனது.  ஆனால் இதே காரணத்தினாலேயே (மக்கள் கூட்டம்) சமீப காலங்களில் இந்த ஏரியில் வண்டல் அதிகரித்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.



என்ன! சாவி கிடைச்சுடுச்சா!! இல்லை முதலை கிதலை துரத்துதா?  இந்த ஓட்டம் ஓடறீங்க...



விட்டா ஏரித்தண்ணியை ஒரே மணியில் கலக்கிடுவாங்க...










360 டிகிரி  பார்வை 






மேகாலயா அழகிய பழங்கள், மருத்துவ மூலிகைகள், செடிகள், மற்றும் மல்லிகைகைகளுக்குப் பெயர்பெற்றது.  'காஷி' பழங்குடி இனத்தவரைப் போல உடை உடுத்தி புகைப்படம் எடுத்துக் கொள்வதும் இங்கே சுவாரஸ்யமான ஒன்று.

நம்ம பையனை வீரனாக்கறாங்க



 முதலில் புற முதுகு காட்டத்தான் சொல்லிக்கொடுத்தாங்களோ!



முன்னால் வந்து எடுங்கள் போட்டோ...



முன்னால்  வந்தால் அம்பெடுக்கிறாயே...



சரி...  சரி...  எடுங்கள்...



வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்...



பொதுவாக அஸ்ஸாம், மேகாலயா மக்கள், தங்கள் ஊரை மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.  அங்கிருக்கும் சிறு குழந்தைகள் கூட குப்பைகளை திரட்டி எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டு சுத்தத்தைப் பேணுகிறார்கள்.  இதோ...  இந்த பிரம்மாண்ட ஏரியையே பாருங்கள்...   எவ்வளவு சுத்தமாக இருந்தது தெரியுமா...

நம்மூர்ல இவ்வளவு தண்ணீர் எங்கே?  நினைவாய் வைத்துக்கொள்வோம்...   இந்த போஸில் ஒரு போட்டோ எடுங்கள்...






மலர்க்காதல்!



அங்கு வாட்டர் ஸ்கூட்டரில் (வாட்டர் ஸ்கூட்டரில் செல்ல முன்னூறு ரூபாய், படகில் பயணிக்க ஒரு ஆளுக்கு நூற்றைம்பது ரூபாய்) செல்வதை எல்லாம் மிகவும் ரசித்தோம்.  இந்தவகை சாகசப் பயணங்களினாலேயே இந்த இடம் மிகவும் விரும்பப்படுகிறது.

அலைமீது தடுமாறுதே சிறு ஓடம்....



அழகு மலராட...



73 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. துரை அண்ணா வணக்கம்...

      எப்படி இருக்கீங்க?! கொஞ்சம் டென்ஷன் இல்லாமல் நலமுடன் இருப்பீர்கள்!

      கீதா

      நீக்கு
    2. // டென்ஷன் இல்லாமல்.. //

      அதே.. அதே.. சபாபதே!...

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் எல்லோருக்கும்

    இன்று படங்கள் மிக மிக அழகாக சில விவரணங்களுடன் இருக்கிறதே சூப்பர்

    வருகிறேன் ஒவ்வொன்றிற்காக

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா... கொஞ்...சம் விவரங்களிருக்கிறது...!

      நீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் துரை செல்வராஜூ ஸார்... உங்களுக்கும் இனி வரப்போகும் மற்றும் நம் நட்புறவுகள் அனைவருக்கும் நல்வரவு...

      நீக்கு
    2. வரவேற்ற துரைக்கும் வந்திருக்கும் மற்றவர்க்கும் இனி வரப்போகும் அனைவருக்கும் வணக்கம், வாழ்த்துகள், நல்வரவு.

      நீக்கு
    3. வணக்கம் கீதா அக்கா...

      நல்வரவு.

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் பானு அக்கா.

      நீக்கு
    2. பானுமதி, உடம்பு பரவாயில்லையா? இரண்டு நாட்களாகக் கேட்க நினைத்து மறந்து விடுகிறேன். :(

      நீக்கு
    3. சரியாகிக் கொண்டு வருகிறது கீதா அக்கா. மருத்துவருக்கு வைக்க வேண்டிய மொய்யை வைத்து விட வேண்டும்.

      நீக்கு
    4. அதுதான் சரி. நானும் அப்படி நினைப்பதுண்டு. நம் கையிலிருந்து மருத்துவருக்கு நானூறு ரூபாய் போகவேண்டும் என்று இருக்கும். கணக்கு தீர்த்தவுடன், நோயும் காணாமல் போகும். பல தடவைகள் அனுபவபூர்வமாக இதை உணர்ந்ததுண்டு!

      நீக்கு
  5. கிணறும் நிறை கிணறு...
    களிறிம் சினை களிறு....

    மேற்கண்ட வரிகளை வேகமாகச் சொல்லுங்க பார்ப்போம்....

    சிரமம்.. ரொம்பவும் சிரமம்...

    அது மாதிரி
    ஊரையும் தண்ணியையும் சுத்தமா வெச்சிக்கிறதும் நம்மவர்களுக்கு சிரமம்...

    வேணாம்... விட்டுடுங்க... சாமியோவ்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே அதே துரை அண்ணா நம்மூர்ல இப்படி எல்லாம் ஹூம்..விட்டுடுங்க சாமியோவ் நு நீங்களே சொல்லிட்டீங்க...

      கீதா

      நீக்கு
    2. தண்ணியே இல்லாம சுத்தமா வச்சிருக்காங்க... சுத்தமாவா? மணல்கூட கிடையாது!

      நீக்கு
  6. உமியம் ஏரி பற்றி தெரிந்து கொண்டோம் சூப்பர். சுற்றுலாத் தலமாக மாறினாலும் மக்கள் கொஞ்சம் விழிப்புணர்வுடன் நடந்து கொண்டாலும், அரசும் சுற்றுலா தலங்களை நன்றாகப் பராமரித்தாலும் எப்போதுமே பசுமையாக வைத்துக் கொள்ளலாம். நம் மக்களுக்கும் விழிப்புணர்வு போதாதுதான்...வண்டல் சேர்ந்தால் தூர் வார வேண்டுமே..அந்த வண்டலை விளை நிலங்களுக்குச் சேர்க்கலாமே இல்லையோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மூர்ல இப்படி எல்லாம் எதிர்பார்க்க முடியாது. முக்கியமான காரணம் ஆட்சியாளர்கள் என்பதைவிட மக்கள். சொந்த அல்லது தனிமனித விழிப்புணர்வு இல்லாமலதையும் சாதிக்க முடியாது.

      நீக்கு
    2. ஶ்ரீராம் நீங்கள் சொல்லியிருப்பது மிகவும் சரி. தனி மனித விழிப்புணர்வு இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது.

      நீக்கு
  7. ஆகா .. தப்பாப் போச்சே!...

    கிணறும் நிறை கிணறு...
    களிறும் இணை களிறு!...

    இந்த கூகுள் பண்ற அட்டகாசம் தாங்கலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா... வரிகள் வசப்படும் நேரம்

      நீக்கு
    2. துரை அண்ணா சூப்பர்!!! ரொம்ப நல்லாருக்கு வரிகள் ரைமிங்கா வாசிக்க....!! இம்மாம் தண்ணிய பார்த்தா பாருங்க மேலதான் வார்த்தைகள்னா கீழயும் சுத்தம் நு ரெண்டு மீனிங்க்ல!!

      இப்படியான தண்ணிய பார்க்கும் போது வார்த்தைகள் கவிதை அருவியா கொட்டுது ஆனா எங்க ஊரை நினைச்சுப் பார்க்கையில் வார்த்தை முட்டுது !! ( கண்மணி அன்போடு!! பாட்டுலருந்து கொஞ்சம் சுட்டு எடுத்து ஹிஹிஹிஹி)

      கீதா

      நீக்கு
    3. மழைதான் கொட்டலை... கவிதை வரிகளாவது கொட்டட்டும் அருவியாய்!

      நீக்கு
  8. அங்கே தண்ணீர் தான் சுத்தம்..
    இங்கே ஆறு குளங்களே சுத்தம்!..

    இத்து எப்பிடிக் கீது?...

    பதிலளிநீக்கு
  9. 360 டிகிரி படங்கள் சூப்பர்!!! சூப்பர்!

    //பொதுவாக அஸ்ஸாம், மேகாலயா மக்கள், தங்கள் ஊரை மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் சிறு குழந்தைகள் கூட குப்பைகளை திரட்டி எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டு சுத்தத்தைப் பேணுகிறார்கள்.//

    வாவ் அந்த மக்களைப் பாராட்டுவோம் மற்றவர்கள் குறிப்பாகத் தமிழ்நாடு கற்றுக் கொள்ள வேண்டும்...அவர்களிடமிருந்து...

    ஸ்ரீராம் இந்த ஏரியை பெரிசா பண்ணி வீட்டுல மாட்டி வைச்சுக்கோங்க!! அப்பப்ப பார்த்து குளிர்ந்து கொள்ள வசதியாக ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  10. பொன்னியின் செல்வனில் இள வயது அருண்மொழித் தேவராக நடிக்க ஆளைத் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். உங்கள் வீட்டு இளவலிடம் சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ பானுக்கா இப்ப அந்தப் படத்தைப் பார்த்து இள வயது வீரனாக பொ செ வில் வரலாமோ என்று சொல்ல வந்தேன்....நீங்க சொல்லிட்டீங்க...

      ஆமாம்ல நன்றாக இருக்கிறார் இல்லையா?

      அக்கா உங்க லொக் லொக் பக் பக் நு போயிடுச்சா? எப்படி இருக்கீங்க?

      கீதா

      நீக்கு
    2. ஹா... ஹா... ஹா... சொல்லிட்டா போச்சு... ஆனால் அந்த இவனின் கனவுப்பார்வை வேறெங்கோ தூரத்தில்..

      நீக்கு
  11. துரை எழுதி இருப்பதை வேகமாய்ச் சொல்லிப் பார்த்துட்டேன். நல்லாவே வருது, வியாழக்கிழமை ஏழைக்கிழவன் வாழைப்பழம் தின்றதை விட! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யக்கா.. நீங்க எல்லாம் பழைய காலத்து ஆளுங்க...

      ஆனாலும் குழந்தையாகவே இருக்குறவங்க....

      இதெல்லாம் தமிங்கிலீஷ் கோஷ்டிக்காக!..

      நீக்கு
    2. இஃகி,இஃகி, நன்னி, நன்னி!

      நீக்கு
    3. //வியாழக்கிழமை ஏழைக்கிழவன் வாழைப்பழம் தின்றதை விட! :)))))//

      வியாழக்கிழமைன்னதும் ஏதாவது உள்குத்து இருக்கோன்னு ஊன்றிப்பார்த்துத் தெளிந்தேன்!

      நீக்கு
    4. ஹா ஹா ஹா ஹா இப்பல்லாம் ஸ்ரீராமுக்கு வியாழக்கிழமை என்றதுமே கொஞ்சம் உதறல் எடுக்கிறது யாரிடமாவது மாட்டிக் கொள்ளப் பொகிறோமோ என்று....ஏற்கனவே குண்டு தேவதை என்று சொல்லி ஹிஹிஹி...

      கீதா

      நீக்கு
  12. அந்த 360 டிகிரிப் படங்கள் தான் பனோரமா என்பார்களா? நமக்கெல்லாம் இதைப் பார்த்து "ஆ"வென்று வாயைப் பிளக்கத் தான் முடியும். ஏரியைப் பார்க்கப் பார்க்க சந்தோஷம். நிறையத் தண்ணீர்! இங்கே எல்லாம் பார்க்க முடியாது! இங்கே இருந்தாலும் தண்ணீர் சுரண்டப்பட்டு மணலும் சுரண்டப்பட்டு இவ்வளவு நாட்கள் வீடுகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள்னு வந்திருக்காதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்... அதுதான் மனோரமா... சே.... பனோரமா! அடுக்குமாடி குடியிருப்பு என்று ஞாபகப்படுத்தாதீர்கள் அக்கா....!

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  14. எல்லாப் படங்களும் அபாரம்! கொடுத்திருக்கும் வர்ணனை அதை விட அருமை. எந்த மாநிலம் சென்றாலும் அந்த மாநிலத்துப் பாரம்பரிய உடைகளைப் போடுவது அரசியல்வாதிகள் மட்டுமல்ல என்பதை இந்தப் படம் காட்டுகிறது. நேற்றுத் தான் முகநூல் நண்பர் ஒருவர் காஷ்மீர் போயிட்டுப் பாரம்பரிய உடையோடு படம் எடுத்துக் கொண்டு போட்டிருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா அக்கா.

      நம்மூருக்கு வரும் வெளி மாநில மக்கள் நம்மூர் பாரம்பரிய உடை அணிகிறார்களோ? அந்த வசதி அவர்களுக்கு இருக்கோ....

      நீக்கு
  15. உமியம் ஏரி உருவாக்கப்பட்ட ஏரியா ஆஹா! எவ்வளவு அழகா உருவாக்கியிருக்காங்க இல்லையா ஸ்ரீராம்!!!

    பழங்குடி மக்கள் பெயர் காஷி அறிந்து கொள்ள முடிந்தது. அவர்கள் உடையும் அழகாக இருக்கிறது! தினமுமே இப்படித்தான் உடுத்துவாங்களோ?!!

    உடுத்திய இளவல் மிக அழகாகவும் இருக்கிறார் போஸும் கொடுக்கிறார்.!!

    அதற்கான கேப்ஷன் //வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்...
    // சூப்பர்!!! அப்படியான போஸ் தான் எம்ஜி ஆர் ஸ்டைல்!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // இல்லையா ஸ்ரீராம்!!! //

      ஆமாம்.... ஆமாம்...

      நன்றி கீதா.

      நீக்கு
  16. மேகலாயா மக்கள் தங்கள் ஊரை சுத்தமாக வைத்து இருப்பது மகிழ்ச்சி.
    அந்த ஊரில் கிடைக்கும் பொருட்கள், ஏரியின் வரலாறு எல்லாம் சொன்னதற்கு நன்றி.
    // 'காஷி' பழங்குடி இனத்தவரைப் போல உடை உடுத்தி புகைப்படம் எடுத்துக் கொள்வதும் இங்கே சுவாரஸ்யமான ஒன்று.//

    அழகாக இருக்கிறது பழங்குடி இனத்தவர் உடையும், உடை அணிந்தவரும். அதற்கு நீங்கள் கொடுத்த வார்த்தைகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  17. அழகு மலராட ! அழகாகவே இருக்கிறது!

    வாட்டர் ஸ்கூட்டர் 300 ரூபாய் பரவாயில்லையே! பெரிய ஏரியாக இருக்கிறதே!!

    படகு 150 ரூபாய் அரை மணி நேரம் அழைத்துச் செல்வார்களா முழு ஏரியும் அந்த மலை எல்லாம் சுற்றி? ஆ நான் ரொம்பவே ஆசைப்படுகிறேனோ? கிளவி ( ஹையொ இந்த அதிராவின் கருத்து படித்து படித்து ஹா ஹாஹ் ஆ) கேள்வி கேட்கிறேனோ?!! ஏரியின் நடுவில் சிறு குன்று இருப்பது ரொம்ப அழகாக இருக்கிறது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கீதா.

      ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா பாடல் நினைவுக்கு வரவில்லையா?

      நீக்கு
    2. ஆமாம் நம்ம தாசேட்டன் பாடல்!! அப்புறம் அவர் பாடிய மற்றொரு பாடல்...ஏரிக்கரை பூங்காத்தே பாடலும் நினைவு வந்தது.

      ஏரிக்கரையின் மீது போறவளே பொன்மயிலே என்றும்....ஆனால் ஏரிக்கரையில் பொன்மயில் யாரையும் காணலியே!!!!
      ஆன்மீக!!!!!!!!!காசிப்பயணத்தில் ஒரு சமர்த்து குண்டு தேவதை வந்தாள்!!

      இப்படியான ஜாலி சுற்றுலாவில் யாரும் இல்லை போல!!! ஹா ஹா ஹா...ஆ!! ஆ!! யாரும் என்னை அடிக்க வராதீங்க நான் ஓடிப் போயிடறேன்....

      கீதா

      நீக்கு
  18. யெஸ் சாகசப் பயணங்கள் பயணிகளை மிகவும் ஈர்க்கும். அதை நம் ஏகாந்தன் அண்ணா நேற்று விமர்சனத்தில் கூடச் சொல்லியிருந்தாரே...கொடைக்கானல், ஊட்டில் ஏரியில் கொண்டு வரலாம் என்று !! அங்கெல்லாம் படகுப் பயணம் உண்டு ஆனால் வாட்டர் ஸ்கூட்டர் இல்லை. முதலியார் குப்பத்தில் (பாண்டிச்சேரி போகும் வழியில், மஹாபலிபுரம் தாண்டி அரை மணி நேரம், முக்கால் மணி னேரத்தில் இருக்கும் பேக்வாட்டர் ஏரி படகுக் குழாம் அங்கு இருந்தது ஆனால் இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் பல வகை படகுகள் உண்டு. கடற்கரை வரை சென்று அங்கு அரை மணி னேரம் பீச்சில் இருந்து விட்டு மீண்டும் வரலாம் ஆனால் விலை மிக மிக மிக அதிகம்...

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
  19. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  20. சுத்தமாக வைத்துக்கொள்வது பெற்றோர்கள் சொல்லிக் கொடுப்பதில்தான் பிறக்கிறது.

    நாம் எப்படியோ... நம் மக்களும் அப்படி.

    படங்கள் அழகு ஜி

    பதிலளிநீக்கு
  21. வணக்கம் சகோதரரே

    அத்தனைப் படங்களும் மிக அருமையாக உள்ளது. படங்களுடன் இணைந்த விமர்சன வாக்கியங்கள் நன்றாக உள்ளது.மிகப் பெரிய ஏரி, கண்களுக்கு பார்த்துக் கொண்டிருந்தாலே, குளுமையை தருகிறது. இந்த வாரம் இடத்தைப்பற்றிய விபரங்களும் அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.

    பழங்குடியினர் உடைலங்காரம் நன்றாகவே செய்வித்து இருக்கின்றனர். இந்த மாதிரி செய்பவர்களுக்கும், செய்வித்து கொள்பவர் களுக்கும் பொறுமை மிகவும் வேண்டும். ஒரு நிமிடம் புறமுதுகு காட்டினாலும், அம்பும், வாளும் சட்டென இரு கைகளில் ஏந்தி விட்டாரே.! அதுதான் வீரத்தின் மகிமை....!

    அலையில் ஆடும் ஓட்டத்தை விட, "நான் என்ன குறைந்து போய் விட்டேனா" என்ற எண்ணத்தில் "அழகு மலரும்" அழகாக ஆடுகிறது. அனைத்தும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  22. ஷில்லாங்க் ஏரி அழகு அதிசயிக்க வைக்கிறது.
    இந்தத் தடவை ஊரைக் குறித்தும் பல
    விவரங்கள் வந்திருக்கின்றன.

    சின்னப் பசங்களுக்கே உரிய உத்சாகத்துடன் அவர் உடை அணிந்திருப்பது
    மிக அழகு. நிஜமாகவே வீர சாகசம் புரிவது போலக்
    காட்சி அளிக்கிறார்.
    வண்டல் படிந்திருந்தால் தானே தண்ணீர் உள்ளே இறங்கும்.
    அந்த வண்டலை கரையோர மரங்கள் வாங்கி வளரும்.

    அருமையான படங்களுக்கு மிக நன்றி. அனைவருக்கும் இனிய நாளுக்கான் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லிம்மா... வணக்கம்.

      எல்லாம் வாராந்திர விமர்சனத்தின் விளைவுதான்!

      //இந்தத் தடவை ஊரைக் குறித்தும் பல
      விவரங்கள் வந்திருக்கின்றன. //


      எல்லாம் வாராந்திர விமர்சனத்தின் விளைவுதான்!

      நீக்கு
  23. அட! ஏரிக்கரை மீதினிலே போறவங்களே! நில்லு கொஞ்சம் நானும் வரேன்! சேர்ந்து பேசிப் போவோம், நண்பர்களே!

    ஏரிக் காட்சி அற்புதம். மனதிற்கு ஜில்லென்று இருந்தது.
    படை ஒடுங்கும் கைகள் என்று புறநானூற்றில் ஒரு வரி வரும். இப்போத் தான் நேராவே பார்த்தேன்.
    பையன் அந்த காஷி டிரஸ்ஸில் கனஜோர்! முதல் படத்தில் அந்தப் புன்னகை ஒன்று மட்டுமே போதும்!..
    ஸ்காட்லாந்துக்கு சமமானதாமே? ஷில்லாங் பக்கத்திலேயேயா இருக்கு?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி ஸார். இன்னொரு ஏரிப் பாடல்!

      ஏரி கண்ணையும் கருத்தையும் கவர்வதற்கு காய்ந்து கிடைக்கும் தமிழகம்தான் காரணம் என்று சொல்லலாமா?!!!

      நீக்கு
  24. ஷில்லாங்குக்கு வடக்கே 15 கி.மீ. தொலைவில்.... அட! ஆரம்ப வரியே இது தானே!

    பதிலளிநீக்கு
  25. படங்களும் காப்ஷன்களும்ரசிக்க வைத்தது

    பதிலளிநீக்கு
  26. காப்ஷன்ஸ் எல்லாமே சூப்பர்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  27. இம்முறை ஞாயிறு ஏரி எபியையும் நனைத்து நிறைத்தது எங்கள் மனதையும் குளிர்வித்து நிறைத்தது!

    கீதா

    பதிலளிநீக்கு
  28. படங்கள் அத்தனையும் அட்டகாசமாக இருக்கிறது ஸ்ரீராம்ஜி.

    கண்ணிற்கு விருந்தாக!

    மேகாலயா பழங்குடி மக்கள் காஷி எனப்படுவது தகவல். இளைஞர் காஷி மக்களின் பாரம்பரிய உடையில் அருமையாக இருக்கிறார்.

    படகுச் சவாரிகள் பற்றிய தகவலுக்கு நன்றி.

    கேப்ஷன்ஸும் வழக்கம் போல் அருமை.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  29. நல்ல தலைப்பு. பழங்குடியினர் உடையில் அசத்துகிறார் பையர். அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!