ஞாயிறு, 12 மே, 2019

அம்மா... எவ்ளோ தண்ணி...!




 கரையோர நாணல்

அலைகளிடையே மலை!


நாணம் கொண்ட நாணல்கள்!


மலை...   அலை....   இலை....!


அங்கே வருவது யாரோ....

செடியில் பூ மட்டுமே!


அதே மலைதான்..  மறுபடியும்!

இந்த மேகாலயா வெயிலுக்கே குடை பிடிப்பவர் மதராச பட்டினத்துக்கு வந்தால்?

ஸ்கூ ட்டர்லேர்ந்து  இறங்கின உடனே என்னவோ நினைவுல வீசிட்டாராம்   என்ன வீசினாரோ, கிடைத்ததானு அப்புறம் பார்த்தால்  கேட்கணும்...


இவ்வளவு கீழே போயி எழுதிவச்சுருக்காங்களே.. கொஞ்சம் தண்ணீர் ஜாஸ்தியானா எழுத்து தெரியுமா?
ஆமாம்ல.. கொஞ்சம் தண்ணி அதிகமானா எழுத்துப் புரியாது  தான்


........................................ 
(இங்கு எழுதப்பட்டிருந்த கமெண்ட் நீக்கப்பட்டது - ஆசிரியர்)


சீறி வரும் படகில்...


ஆடாமல் இருவர்!


 ஓட்டு போடப் போறயா?


உப்பு மூட்டைபோல இல்லை?


படகு ஒதுங்கட்டும்...   இயற்கையை ரசிப்போம்!


படகை விடுங்கள்...   மலையை விடுங்கள்...  அம்மா...   எவ்ளோ தண்ணி...!


போவோமா நாமும் ஒரு ரவுண்ட்?


தம்பி இன்னுமா கிளம்பலை?


தாத்தா, கையை விட்டா  கூட நேராப்போகுது  ...ஆமாம் பின்னாடி ஒருவர் உட்கார்ந்து...


எவ்வெங்கு நோக்கினும் 

தண்ணீரில் போகும்....ஊஹூம் மிதக்கும் ...ஊஹூம்  இயங்கும்....
இன்னும் என்னவோ சரியில்லையே! படகு ஸ்கூட்டர்?
இல்லை கம்பெனி மாதிரி அலையோடினு சொல்லிடலாமா?

75 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் எல்லோருக்கும்.

    ஆஹா இன்று ஏரியின் அழகுப் படங்கள்!!!

    இப்பத்தான் ப்ரயாக்ராஜில் நனைஞ்சுட்டு வந்தா இங்கும்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா... படங்களில் மட்டுமே நனைய முடிகிறது சென்னைவாசிகளால்!

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம்!

      நேற்று இங்கு மழை!!!

      இப்போதும் கூட மேகமூட்டமாகவே இருக்கிறது

      கீதா

      நீக்கு
  2. தம்பி இன்னுமா கிளம்பலை//

    ஹா ஹா ஹா ஸ்டார்ட்டிங்க் ட்ரபுள். பஜாஜ் ஸ்கூட்டரா என்ன? சரிச்சுட்டு உதைச்சு ஸ்டார்ட் பண்ண!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  3. ஆஅ!! இதென்ன யாருமே காணலை?!! இப்பல்லாம் ஸ்ரீராமும் லேட்டு!!

    பெஞ்ச் மேல நில்லுங்க!! ஹா ஹா ஹா ஹா

    துரை அண்ணா தாத்தா எனும் ஸ்தானத்தை எஞ்சாயிங்க்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா... முதலிலேயே வந்து விட்டேனே... நானும் ப்ரயாக்ராஜில் குளித்து விட்டு அம்மாவின் அன்பைப் படித்துவிட்டு வரத் தாமதமானது...

      நீக்கு
    2. அம்மாவின் அன்பினை சுத்தபத்தமா குளிச்சுட்டுப் போயிருக்கீங்க!! ஹா ஹா ஹா

      நான் ரெண்டு குளியல் போட்டுவிட்டு அடுத்து அம்மாவின் அன்பில் திளைக்கப் போகிறேன்..

      கீதா

      நீக்கு
    3. ஹா.... ஹா... ஹா.... நான் கூட அவ்ளோ தண்ணியில் குளிச்சுட்டுதானே ப்ரயாக்ராஜ் குளியலுக்குப்போனேன்!!! அப்பனானும் ரெண்டுதான்!

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை வணக்கம்.
    Mother's day wishes to all mothers.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் பானு அக்கா...

      அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் எங்கள் தரப்பிலிருந்தும்....

      நீக்கு
    2. இன்று அன்னையர் தினம் என்று பாஸ்தான் (உங்க பாஸ் தான் ஸ்‌ரீராம்!!!) வாழ்த்து தெரிவித்து இன்று அன்னையர் தினம் என்று தகவல்!!!ஹா ஹா ஹா

      அதுக்குத்தான் அம்மாவும் அம்மா அன்பு பற்றி போட்டிருக்காங்கனு மண்டைல உரைக்குது.

      பானுக்கா குட்மார்னிங்க்!!

      இங்கு வரும் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்! அப்பாக்களும் அன்னையர்களாக வாழ்வதுண்டு!! ஸோ எல்லோருக்கும்

      கீதா

      நீக்கு
    3. //பாஸ்தான் (உங்க பாஸ் தான் ஸ்‌ரீராம்!!!)//

      அடடே....

      நீக்கு
  5. காலை வணக்கம்.

    படங்களைவிட அதன் கேப்ஷன்ஸ் ரசிக்கும்படி இருந்தன.

    தலைவிகளுக்கு அன்னையர் தின வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் நெல்லை... இன்று என் கைவண்ணமும் உண்டு கேப்ஷன்களில்!

      நீக்கு
  6. அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் இனிய காலை வணக்கத்துடன். அருமையான படங்கள்.
    லைஃப் ஜாக்கெட் போட்டு விடும் அருமை அழகு.
    கூடவே ஓடி வரும் காப்ஷன் களும் சுவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வாழ்த்துக்கும், அன்புக்கும் நன்றி அம்மா. உங்களுக்கும் வாழ்த்துகள்.

      நீக்கு
  7. சுவாரஸ்யம்.மலை, அலை, இலையோடு இப்படி எழுதுவது "கலை....!!"

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். வந்திருக்கும் அனைவருக்கும் இனி வரப்போகும் நண்பர்களுக்கும் நல்வரவு, வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா.. குட்மார்னிங். நல்வரவு. அன்னையர் தின வாழ்த்துகள்.

      நீக்கு
  9. படங்களும், வார்த்தை ஜாலங்களும் ரசிக்க வைத்தன ஜி

    பதிலளிநீக்கு
  10. படங்களும் அதன் தலைப்புக்களும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. கூடவே நீக்கப்பட்ட கருத்து என்னவாக இருக்கும் என்னும் மண்டைக்குடைச்சலும் கூட!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா..

      வெற்றி... வெற்றி...

      நீக்கு
    2. நான் படித்தேன் காலையில் என்று நினைக்கிறேன், மறந்து விட்டது

      நீக்கு
    3. //நான் படித்தேன் காலையில் என்று நினைக்கிறேன், மறந்து விட்டது//

      நீக்கப்பட்ட கருத்தையோ? அட..!

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கோமதி அக்கா. வாழ்க வளமுடன். அன்னையர் தின வாழ்த்துகள்.

      நீக்கு
  12. அனைவருக்கும் அன்னையர்தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம்பியருக்கு என்று தினம் வருகிறது என்று பார்க்க வேண்டும்!!!!

      நீக்கு
    2. தந்தையர் தினம் இருக்கே உங்களுக்கு.
      தாயுமானவர்களாக குடும்பத்தை பேணுவதில் நீங்களும் உண்டு தானே
      சரிபாதி எனும் போது அன்னையர் தின வாழ்த்தில் நீங்களும் அடக்கம் தானே!

      நீக்கு
    3. ​தம்பியருக்கு ஒரு தினம் வேண்டும்!

      நீக்கு
  13. அனைத்து படங்களும் அழகு.
    கருத்துக்களும் அருமை.
    மலை... அலை.... இலை....!//

    படகை விடுங்கள்... மலையை விடுங்கள்... அம்மா... எவ்ளோ தண்ணி...!
    மிகவும் ரசித்தவை.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம் சகோதரரே

    உலகெங்கிலுமுள்ள அன்னையர்கள் அனைவருக்கும், அன்பான அன்னையர் தின வாழ்த்துக்கள்.

    ஏரிக்கரைப் படங்கள் மிக அழகாக இருந்தன. அதற்கு தகுந்த மாதிரி எழுதிய வாசகங்கள் அருமையாக உள்ளது.

    அந்த கரையோர பூவின் படம் மிகவும் நன்றாக உள்ளது.

    ஏரியில் படகு பயணங்கள் ("இளங்கன்று பயமறியாது") மிகவும் நன்றாகவே உள்ளது.

    வளைந்து கொடுத்து வாழ்வதற்கு நாணலும் ஒரு உதாரணம் அல்லவா..! அதனால் அதைப்பாராட்டி படங்கள் எடுத்துப்போட்டதும் அதுவும் நாணம் கொண்டதுவோ.!

    பிரமாண்டமான தண்ணீரும், மலையழகும் கண்களையும், மனதையும் கவர்கின்றன.
    இயற்கையெல்லாம் மிகவும் ரசிக்கும்படி உள்ளன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைவருக்கும் வணக்கம். யாவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் அன்புடன் ஆசிகள் யாவருக்கும்

      நீக்கு
    2. வணக்கம் காமாட்சி அம்மா.

      தங்களுக்கு அன்பான அன்னையர் தின வணக்கங்கள். தங்களின் ஆசிகளுக்கு மகிழ்வான நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வாங்க கமலா அக்கா.

      இளங்கன்று பயமறியாது... உண்மைதான்!

      படங்களையும், வரிகளையும் ரசித்ததற்கு நன்றி.

      நீக்கு
    4. வாங்க காமாட்சி அம்மா. அன்னையர் தின வாழ்த்துகள்.. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு

  15. //வளைந்து கொடுத்து வாழ்வதற்கு நாணலும் ஒரு உதாரணம் அல்லவா..! அதனால் அதைப்பாராட்டி படங்கள் எடுத்துப்போட்டதும் அதுவும் நாணம் கொண்டதுவோ.!//

    சூப்பர் கமலா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கோமதி அரசு சகோதரி

      தங்களுக்கும், மற்றும் நானறிந்த உலகமான எ.பியில் அன்பாக வந்து ஒவ்வொரு சிறப்பான பதிவுகளுக்கும் அழகாக கருத்துக்கள் பதிக்கும் அன்னையர்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.நேற்று தங்களுக்கு பதிலளிக்க என்னால் வர இயலவில்லை. மன்னிக்கவும்.

      இன்று தங்களின் அன்பான பாராட்டிற்கு என் மனமுவந்த நன்றிகள்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. கேப்ஷன்ஸ் அசத்தல்னா கமலா அக்கா அதை இன்னும் அழகூட்டறாங்க..

      எப்படி இருக்கீங்க கமலா அக்கா? உடல் நலம் தேவலாமா?

      கீதா

      நீக்கு
    3. வணக்கம் சகோதரி

      நலமாயுள்ளேன். தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    4. கமலா அக்காவின் எழுத்துத் திறமைக்குக்கு கேட்பானேன்?​

      நீக்கு
  16. வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி இனி சொல்லப் போறவங்களுக்கும் அட்வான்ஸ் நன்றி.

    ஸ்ரீராம் இன்று கேப்ஷன்ஸ் அசத்தல். உங்கள் கைவண்ணம் இருக்கிறது என்று தெரிகிறது.

    அந்த டாஷ் டாஷ் டாஷ் என்னவா இருக்கும்னு ஒரே ஓசனை!! கெஸ் பண்ணுகிறேன் மாலை வரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  17. //(இங்கு எழுதப்பட்டிருந்த கமெண்ட் நீக்கப்பட்டது - ஆசிரியர்)//

    ஆசிரியரும் நானே; நீக்கியவனும் நானே!

    நாம ஏதாச்சும் தலைப்பு கொடுக்கலாம்ன்னா, இந்தப் படத்தின் தலைப்பு தானா நீக்கப்பட வேண்டும்?.. :))

    பதிலளிநீக்கு
  18. படங்களும்,கேப்ஷன்களும் கொள்ளை அழகு. பதில் சொல்லவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிடும் வார்த்தைகள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  19. அன்பின் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  20. மலை அலை இலை!...

    கலையாய் வந்த கலையே - உனக்கு
    இணையாய் எதுவும் இலையே!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலையில் வந்த மொழியே - இதில் எனக்கு
      எதுவும் புரி யலையே...

      சும்மா ஜோக்குக்கு எழுதியிருக்கேன் துரைசெல்வராஜு சார்... விருந்துச் சாப்பாடு (தானே செய்யாமல் கிடைக்கும் உணவு) பலமா இருக்கா?

      நீக்கு
    2. மகள் வீட்டில்...
      நானே சமைத்து உண்ணும் வேளைகளை விட இனிமையாக இருக்கின்றது...

      நீக்கு
    3. சந்தோஷம் துரை செல்வராஜு சார்.... எனக்கு அதன் அருமை நன்றாகத் தெரியும். அதிலும் ரமதான் சமயத்தில் (நீங்கள் குவைத்தில் மற்றவர்களோடு ஒரே வீட்டில் தங்குவதால்). Enjoy your stay. இப்போவும் மாலை 4 1/2 - 5 மணிக்கு அபுதாபியில் வெளியில் பஜ்ஜிக் கடைகள் முளைத்துள்ளனவா?

      நீக்கு
    4. அபுதாபி பஜ்ஜிக் கடைகளைப் பற்றித் தெரியவில்லை...

      மருமகன் இருப்பது அபுதாபி சிட்டியை விட்டு சற்று தூரம்...
      மொஸப்பா எனும் பகுதி...

      இருப்பினும்
      அருகிலேயே சரவண பவன் மற்றும் வசந்த பவன்...

      புதினா சட்னி, தேங்காய் சட்னி என்று அசத்துகிறார்கள்...

      நீக்கு
    5. அபுதாபி பஜ்ஜியில் விசேஷம் எதுவும் உண்டா? அவ்வளவு ஸ்பெஷலிஸ்ட்களா அவர்கள்?

      //கலையாய் வந்த கலையே -
      உனக்கு இணையாய் எதுவும் இலையே!...//

      ஆஹா...

      நீக்கு
  21. கரையோர நாணல்// நல்ல தலைப்பு!! சினிமா/கதைத் தலைப்பு போல!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'நதிக்கரையோரத்து நாணல்களே...' என்கிற பாடல் கேட்டிருக்கிறீர்களா கீதா?

      நீக்கு
  22. மலை அலை இலை-இது
    ஸ்ரீராமின் கலை!!?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாரெங்கன் சகோதரி.

      சூப்பர்.. சூப்பர். உங்கள் வார்த்தைகளால் வரிகளை பின்னும் வலை...இந்த வலையுலகில் உங்கள் மாறாத இன்றைய நிலை....ஹா.ஹா.

      நலம்.தாங்கள் நலமா? உங்கள் பணிகள் நன்றாக நடைப்பெற்றதா? என் வலைப்பக்கம் உங்களுக்கு நேரம் கிடைத்தால், வரலாமே சகோதரி. அன்புடன் எதிர்பார்க்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      நீக்கு
    2. //ஸ்ரீராமின் கலை!!?//

      ஆம்... அவர் மட்டுமே செய்வார் இப்படி கொலை!!!

      ஹிஹிஹிஹி....

      நீக்கு
  23. எங்கெங்கும் நோக்கினும் தண்ணீரடா - சென்னையில்
    எங்கெங்கும் நோக்கினும் கானல் நீரடா!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கெங்கு நோக்கினும் அங்கு தண்ணீர்... அது இல்லாததால் சென்னையில் கண்ணீர்!

      நீக்கு
  24. தலைப்பு நீக்கப்படலை...வேணும்னே டாட் டாட் கொடுத்துட்டு நீக்கப்பட்டதுனு கொடுத்து நம்ம க்யூரியாசிட்டிய கிளப்பிவிட்டிருக்காங்க ஆசிரியர்/கள்...இது மாதிரி செய்யறது ஸ்ரீராமுக்குக் கைவந்த கலை ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் சகோதரரே

    இன்றைய பதிவின் தலைப்பு அன்னையர் தினத்திற்கு பொருத்தமானது. ஆரம்பமே "அம்மா"..என்ற வார்த்தை..! என் முதல் கருத்திலேயே இதை குறிப்பிட நினைத்தேன். மறந்து விட்டேன்.

    மலை, அலை, இலை என்ற வார்த்தை ஜாலத்தை "கலை" என அனைவரும் பாராட்ட, நானும் "பலே" என மனதாற பாராட்டுக்களை பகிர்கிறேன். அனைத்துப் படங்களும் மிகவும் நன்றாக உள்ளது.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலா அக்கா...

      நேற்று அன்னையர் தினத்தை நானும் விட்டு விடவில்லை. பாருங்கள் தலைப்பில் 'அம்மா' என்று இருக்கிறது என்று நேற்று கமெண்ட்டில் சொல்லவேண்டும் என்று நினைத்தேன். நீங்களும் அதைச் சொல்லி இருக்கிறீர்கள். இல்லை, இல்லை... அதற்கு நீங்கள் அதைச் சொல்லிவிட்டீர்கள்.

      நீக்கு
  26. அருமையான படங்கள்,அன்னையர் தின வாழ்த்துகள் நண்பரே ....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!