அவைகள் கண் வழியாக உள்ளே வந்தவையா?
அல்லது காது வழியாக - உள்ளே வந்தவையா?
எப்போது வந்தவை? எனக்குத் தெரியவில்லை!
ஆனால் உறங்குகின்ற நேரத்தில் - கண்ணசைவுகளாக
இமைகளுக்குப் பின்னே களிநடம் புரியும்.
அடிக்கடி மூளைக்கும் இதயத்திற்கும்
இடையே தத்தித் தத்தி தளிர் நடையிடும்!
இன்று என்னைப் பிரச்வித்துவிடேன்
என்று கெஞ்சலாய் ஒரு கோரிக்கை வைக்கும்.
அந்தப் பிரசவ வலி சுவையானது!
அது வந்தவுடன், மூளையும் இதயமும்
அதை வலையிட போட்டி போடும்!
அதை விரல்களுக்கு அனுப்பிவைத்து விட்டால்?
அவைகள் அடுத்த பிரசவம் பார்க்கப் போய்விடும்,
கண்களையும் காதுகளையும் திறந்துகொண்டு!
எப்பொழுது சூல்கொண்டதோ - ஆனால்
இப்போது இதோ இங்கே பிரசவம்,
விரல் நுனிகளால், விசைப் பலகையில்!
அல்லது காது வழியாக - உள்ளே வந்தவையா?
எப்போது வந்தவை? எனக்குத் தெரியவில்லை!
ஆனால் உறங்குகின்ற நேரத்தில் - கண்ணசைவுகளாக
இமைகளுக்குப் பின்னே களிநடம் புரியும்.
அடிக்கடி மூளைக்கும் இதயத்திற்கும்
இடையே தத்தித் தத்தி தளிர் நடையிடும்!
இன்று என்னைப் பிரச்வித்துவிடேன்
என்று கெஞ்சலாய் ஒரு கோரிக்கை வைக்கும்.
அந்தப் பிரசவ வலி சுவையானது!
அது வந்தவுடன், மூளையும் இதயமும்
அதை வலையிட போட்டி போடும்!
அதை விரல்களுக்கு அனுப்பிவைத்து விட்டால்?
அவைகள் அடுத்த பிரசவம் பார்க்கப் போய்விடும்,
கண்களையும் காதுகளையும் திறந்துகொண்டு!
எப்பொழுது சூல்கொண்டதோ - ஆனால்
இப்போது இதோ இங்கே பிரசவம்,
விரல் நுனிகளால், விசைப் பலகையில்!
விரல் வழிப் பிரசவங்கள்!
பதிலளிநீக்குஅட! தலைப்பு ரொம்ப ஜோராக இருக்கிறதே! மற்றப் பிரசவங்கள் மாதிரியே, எண்ணமும் கூட விரல் வழியாகப் பிரசவிப்பதும் நல்ல படிமமாகத் தெரிகிறது.
கிருஷ்ணமூர்த்தி சார் - யாராவது படிச்சாங்களா - பாத்தாங்களான்னு - அல்லாடிகிட்டு இருந்தேன். என் வயிற்றில் பால் வார்த்தீர்கள்!நன்றிகள் பல!
பதிலளிநீக்குஅழகாய் ஒரு பிருந்தாவனம்.
பதிலளிநீக்குராதையோடு கண்ணனா!
இல்லை...
களிப்பூட்டும் காரிகைகளோடு
கிருஷ்ணனா!
கற்பனைக்குள் காவியங்கள்.
பதறாத கால்களில் பரதம்
கண்ணும் இமையும் சேர்கையில்
உடலும் அசையும் பா(வ)வமாய்.
வெள்ளையனோ
உடல் அப்பியாசம் என்கிறான் !!!
ஹேமா - உங்க கவிதை சூப்பர்.
பதிலளிநீக்குஉங்க படைப்பாற்றலுக்குத் தலை வணங்குகிறோம்.
இதோ ஒரு வாசகர் படைப்பாற்றல் கேள்வி: இங்கு பதியப் பட்டுள்ள பதிவிற்கும் - படத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா? 'ஆம்' என்றால்,
பதிலளிநீக்குமூன்றே வார்த்தைகளில் - இணைத்து உங்களால் பின்னூட்டம் இட முடியுமா? அதிக பட்சம் - மூன்று வரிகள். - உங்களால் முடியும்.
அந்த அழகிய விரல்கள் நேர்த்தியாய் communicate செய்கின்றன. இந்த விரல் வழி பிரகாசம் எண்ண ஓட்டத்துக்கு சிறந்த illustration அல்லவா?
பதிலளிநீக்குவிரல் சுட்டும் பிரகாசம்.
பதிலளிநீக்குஹேமா, மிகவும் அருமை. அழகாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் பதிவிலும் உங்கள் கவிதைகளைப் படித்தேன். அதன் சோக வரிகள் கண்ணீரை வரவழைத்து விட்டது. சோகமும் ஒரு சுகம்தானே.
பதிலளிநீக்குஅட்டகாசமான வரிகள்!!
பதிலளிநீக்குநன்றி ART-KING!
பதிலளிநீக்குஅழகு...:-))))
பதிலளிநீக்குநன்றி பே நா மூடி!
பதிலளிநீக்குபேனா எங்கே?
ஆஹா...
பதிலளிநீக்குhttp://vaarththai.wordpress.com
நன்றி மீனாட்சி உங்கள் வாழ்த்துக்களுக்கு.நன்றி.
பதிலளிநீக்குநன்றி லொடுக்கு, நன்றி ஹேமா.
பதிலளிநீக்குவழக்கம்போல் தொலைபேசியிலும், அலைபேசியிலும், மின்னஞ்சலிலும் - வாசகர்கள் கேட்ட ஒரே கேள்வி, 'மொழிபெயர்ப்பா?' - நல்லா இருக்கே, மூலம் எது?
என் (கள்) பதில் : மூலம் எல்லாம் இல்லீங்க பூராடம் தான்!
மூன்று வார்த்தைகள்?
பதிலளிநீக்குஇதோ என் முயற்சி:
பிரசவம் - குழந்தை - தாய்.