திங்கள், 9 நவம்பர், 2009

சொல்லாதீங்க நோ

இப்பத்தான் இருக்கே - எவ்வளவோ!
அலுவலக மேலாளர் - ஒருநாள் எங்கள் எல்லோரிடமும் கூறினார். "நீங்க எல்லோரும் - சில விஷயங்களை உன்னிப்பாகக் கேட்டுக் கொள்கிறீர்கள்; சில விஷயங்களைக் கேட்கும்பொழுது உங்க ஆண்டென்னாவை மடக்கி வைத்துவிடுகிறீர்கள்."  மேலும் தொடர்ந்து அவர், வண்டியின் chassis engineering பகுதியின் வடிவமைப்புகளின் ஒரு பகுதியைப் பார்த்துக் கொள்ளும் என்னைப் பார்த்துக் கேட்டார், " நான் இந்த மீட்டிங்கில், எஞ்சின் பற்றிய சில - வாடிக்கையாளர் அதிருப்தி விஷயங்கள் சொன்னேனே - அது என்ன என்று உன்னால் சொல்லமுடியுமா?"
நான் என் தோல்வியை ஒப்புக்கொண்டேன்.
அன்று, அந்தக் கணம் முதல், நான் எதற்குமே என்னுடைய கேட்கும் / பார்க்கும் திறனை ஆப் செய்யாமல் இருக்க ஆரம்பித்தேன். எவ்வளவோ விஷயங்கள் அதற்கப்புறம் தெரிந்துகொண்டேன்.
இன்று கேள்விப் பட்ட ஒரு தகவல், ஆங்கிலத்தில் ஆறு லட்சத்து, முப்பத்தேழாயிரம் வார்த்தைகளுக்கு மேல் உள்ளன. ஆனாலும், அதில் ஆயிரத்து ஐநூறு தெரிந்தாலே போதும், நம் அன்றாட வாழ்க்கை உரையாடல்களுக்கு; அந்த ஆயிரத்து ஐநூறில் நமக்கு ஏற்கெனவே தெரிந்தது, கிட்டத்தட்ட ஆயிரம்!

13 கருத்துகள்:

  1. மீட்டிங் ஒழுங்கா கவனிக்கனும் போல. கவனிக்கிறேன். 1500 போதுமா ? ஆச்சர்யமான தகவல்

    பதிலளிநீக்கு
  2. காலாசிரியர் மூன்று9 நவம்பர், 2009 அன்று 12:52 PM

    ஆமாம் பின்னோக்கி -- ஆயிரத்தைநூறு போதும் என்றுதான் சொன்னார் ராஜகோபாலன்.

    பதிலளிநீக்கு
  3. நிச்சயம் அடுத்தவரின் கருத்துக்கள் உன்னிப்பாக கவனிக்கப் பட வேண்டும். அப்போது தான் நாம் அடுத்த நிலைக்கு செல்ல முடியும்..நன்று நண்பரே...

    பதிலளிநீக்கு
  4. நன்றி புலவரே!
    எல்லா சமயங்களிலும், கண்ணையும், காதையும் திறந்து வைத்துக்கொண்டு, மனமும் உடலும் ஒத்துழைத்து, எதையும் கவனமாகப் பார்த்தால், எவ்வளவோ விஷயங்கள் தெரிந்துகொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  5. ஐயா - ஒரு தமிழ்த் திரைப்படப் பாடலில், 'தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்' என்று வருகிறதே, அப்படியானால் - தமிழ், ஆங்கிலத்தில் பாதிதானா?

    பதிலளிநீக்கு
  6. என் சைக்கிளை பிடி அய்யா9 நவம்பர், 2009 அன்று 1:56 PM

    அனானி, ஆங்கிலத்தில் ஆறு லட்சத்திற்கு மேல் வார்த்தைகள் இருந்தாலும், அவைகளில் பல வார்த்தைகள் - மற்ற மொழிகளிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டவைதாம். ஆங்கிலத்தில் தமிழிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட வார்த்தைகளும் உண்டு. தெரியுமா?

    பதிலளிநீக்கு
  7. அடுத்தவரின் கருத்துக்கு நாம் மதிப்பளித்தால் நம்மை நாம் உயரச் செய்யலாம்

    பதிலளிநீக்கு
  8. தியா - நீங்க சொல்றது அடுத்த கட்டம் - அதாவது அடுத்தவரின் கருத்துக்கு மதிப்பு அளிப்பது.
    இந்தப் பதிவில் பதிவாசிரியர் சொல்லியிருப்பது, மற்றவர் என்ன சொல்கிறார் என்று - அது எதுவாக இருந்தாலும், குறுக்கிடாமல், முழுவதுமாகக் கேட்டுக் கொள்வது - என்று நான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. "அலுவலக மேலாளர் - ஒருநாள் எங்கள் எல்லோரிடமும் கூறினார். "நீங்க எல்லோரும் - சில விஷயங்களை உன்னிப்பாகக் கேட்டுக் கொள்கிறீர்கள்; சில விஷயங்களைக் கேட்கும்பொழுது உங்க ஆண்டென்னாவை மடக்கி வைத்துவிடுகிறீர்கள்.""

    ஐயா, நீங்கள் சொல்லுவது இரண்டு விஷயங்கள் எனக்கு நூறு சதவிகிதம் பொருந்தும்.

    நான் ஒரே சமயத்தில் ஓராயிரம் சிந்தனையை மனிதில் வைத்துக்கொண்டு பலர் பேசுவதை காதில் வாங்கிக்கொள்ளாமல் இருந்துவிடுவேன் !! இதுவே என்னை பல சிக்கல்களில் கொண்டு சென்றுள்ளது !!


    "இன்று கேள்விப் பட்ட ஒரு தகவல், ஆங்கிலத்தில் ஆறு லட்சத்து, முப்பத்தேழாயிரம் வார்த்தைகளுக்கு மேல் உள்ளன. ஆனாலும், அதில் ஆயிரத்து ஐநூறு தெரிந்தாலே போதும், நம் அன்றாட வாழ்க்கை உரையாடல்களுக்கு; அந்த ஆயிரத்து ஐநூறில் நமக்கு ஏற்கெனவே தெரிந்தது, கிட்டத்தட்ட ஆயிரம்!"


    இன்று காலை தான் என் தந்தையுடன் ஒரு ஈமெயில் அனுப்பும்போது என்னுடைய இங்கிலிசை கண்டு வியந்தார். அவரிடம் நான் சொன்னேன், அப்பா எனக்கு இங்கிலீஷ் கிராமர் தெரியாது, மிஞ்சி மிஞ்சி போனால் ஆயிரம் வார்த்தைகள் தெரியும் அதை வைத்து இருப்பத்து நான்கு வருடம் விற்பனை துறையில் கொடிக்கட்டி வருகின்றேன் என்று !! நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை.

    கார்ப்பரேஷன் பள்ளியில் தமிழ் மீடியத்தில் பயின்று இப்படி ஒரு வாழ்வை கொடுத்ததே என் முன்னோர்களின் கிருபை !!

    வேலைக்கு வந்த புதிதில் ஐ.ஐ.டி-இலும், ஐ.ஐ.எம்-மிலும் படித்த சக உழியர்களின் வேடிக்கைக்கு பாத்திரமாகி இப்போது இந்த பத்து வருடங்களின் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் வெள்ளைக்காரனுக்கு இணையாக பேசி அவன் பேசுவதும் புரிகின்றது என்றால் - அது போதும் சார்.

    பதிலளிநீக்கு
  10. எங்களை மெய் சிலிர்க்க வைத்துவிட்டீர்கள் சாய் ராம்..
    உங்க அனுபவம் - எங்க பதிவோடு ஒத்துப்போவதை எடுத்துக்கூறி!

    பதிலளிநீக்கு
  11. கண்ணையும் காதையும் திறந்துகிட்டே வாழணும்ன்னு சொல்றீங்க.நல்ல விஷயம்தான்.
    யோசிக்கிறேன்.கவனத்தில எடுக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. வாய்ஸ் அப் அமெரிக்கா பி பி சி போன்ற அமைப்புகள் வெளிநாட்டினருக்காக ஒளிபரப்பும் / ஒலி பரப்பும் நிகழ்ச்சிகளில் எளிய, இரண்டாயிரத்துக்கு மேற்படாத வார்த்தைகள் மட்டுமே பயன் படுத்துவர். ஆனால் கேட்கும் போது அது எளிமைப் படுத்தப் பட்டது என்று தெரியாதவாறு எலி கண்ட் ஆக இருக்கும். கீ வோர்ட்ஸ் என்று சொல்லப் படும் சொற்களை அறிந்து கொண்டு சரிவர எழுதினால் போதும். ஸ்டைல் தானாகவே வந்து விழுந்துவிடும்.

    பதிலளிநீக்கு
  13. ஒருவர் பேசும்போது நாம் கவனிக்காதது ஏன் என்று சிந்திப்போமா?

    பேசுபவருக்கு கேட்போரை கவரும் வண்ணம் பேசத் தெரிய வில்லை. இந்தக் காரணத்தால் தள்ளத் தக்கது ஆன்மிகம், இலக்கியம், பட்டி மன்றம் என்று பொழுது போக்குக்காக பேச்சுக் கேட்கிறோமே அதற்கு பொருந்தும். அம்மாதிரி இல்லை என்றால் அடுத்த காரணங்களுக்குச் செல்ல வேண்டும்.

    பேசப்படும் மொழி கேட்பவருக்குப் புரியவில்லை. கவனிக்கவும், தெரியாது அல்ல, புரியவில்லை. ஆங்கிலம் அறிந்த எனக்கு பலப் பல ஆங்கில சினிமாக்கள் கண்ணைக் கட்டி காட்டில் விட்டார் போலே இருக்கும். என் பேரன்கள் எனக்கு ஜோக்கை விளக்கிச் சொன்ன பின்பு சிரிப்பேன்!! இதற்கு ஒரே மருந்து கேட்கும் பயிற்சி தான். நான் இந்தி கற்றுக் கொண்டது முற்றிலுமாக விவித் பாரதி மற்றும் இந்திப் படங்கள் பார்த்து தான்.

    பேசப்படும் விஷயத்தில் கேட்பவருக்கு நாட்டம் இல்லை. இதற்கு மருத்துவம் தேவை இல்லை. நாட்டம் இல்லாத விஷயத்தை தாராளமாக ஒதுக்கி விடலாமே.

    பேசப்படும் இடத்தில் நிறைய டிஸ்ட்ராக்ஷன்கள் உள்ளன. எதிரில் ஒரு அழகி, ஒரு பொறாமையைக் கிளரும் gadget, artpiece, எதோ ஒன்று இருக்கிறது. கவனம் சிதறுகிறது. மனதை ஒருமைப் படுத்தி இந்த ஆள் பேசுவது எனக்குப் பயன் தரக் கூடியது, அதைக் கேட்கவேண்டும் என்று சீரியஸ் ஆகச் சொல்லிக் கொள்ளவும்.

    அடுத்து நாம் செய்ய வேண்டியது பற்றிய கவலை கவனத்தை கலைக்கிறது. சரியான திட்டமிடல் தவிர இதற்கு வேறு மருந்து இல்லை. இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல் என்றார் வள்ளுவர்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!