செவ்வாய், 24 நவம்பர், 2009

உள் பெட்டியிலிருந்து...

உலகம் உங்களுக்கு உதவ மறுத்தால் உடைந்து போகாதீர்கள். உங்கள் வேலையை நீங்களே செய்து தெரிந்து கொள்ள வாய்ப்பளித்ததற்கு நன்றி கூறுங்கள்.

அனுபவிக்க நினைப்பவர்கள் இன்று வாழ்வின் முதல் நாள் என்று எண்ணிக் கொள்ளுங்கள். சாதிக்க நினைப்பவர்கள் இன்று வாழ்வின் கடைசி நாள் என்று எண்ணிக் கொள்ளுங்கள்.

பறவைகளுடன் பறக்க நினைப்பவர்கள் வாத்துக்களுடன் நீந்தி நேரத்தை வீணாக்காதீர்கள்.(ஒபாமா)

வாழ்க்கை உங்களை பின்னால் இழுக்கும்போது விசனப் படாதீர்கள். அம்பைப் பின்னால் இழுத்து விட்டு விடும்போதுதான் அதற்கு வேகம் கிடைக்கிறது.
காதலித்த ஜோடி விவாகரத்தானபோது அவரிடம் கேட்கப் பட்ட கேள்வி : "அவள் உன்னைக் கை விட்டாளா. அல்லது நீ அவளை கை விட்டாயா?" அவர் புன்னகையுடன் சொன்ன பதில் : "காதல்தான் எங்களைக் கை விட்டது"

தோல்வி என்பது நீங்கள் கீழே விழுவதில் இல்லை, நீங்கள் எழ மறுப்பதுதான்.

பேசும் முன் அடுத்தவரைப் பேச விடுங்கள்...எழுதும் முன் யோசியுங்கள் செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.
கடைசி மரம் வெட்டப் பட்ட பின்னரும், கடைசி நீர் ஆதாரம் விஷமாக்கப்பட்ட பிறகுதான் மனிதன் தன்னிடமுள்ள பணத்தை தன்னால் உண்ண முடியாதென்று உணர்வான்.

அந்தக் காலத்தில் யாரிடமும் கடிகாரம் இல்லை, ஆனால் எல்லோரிடமும் நேரம் இருந்தது. இப்போது எல்லோரிடமும் கடிகாரம் இருக்கிறது. ஆனால் யாரிடமும் நேரம் இல்லை!

இதுவா, அதுவா என்று முடிவெடுக்கக் காசை சுண்டி விடுங்கள்... அதனால் முடிவு கிடைக்கும் என்பதால் அல்ல...எது கிடைக்க வேண்டும் என்று நம் மனம் எதிர்பார்க்கிறது என்பதை அறிய...!

20 கருத்துகள்:

 1. அனைத்தும் மிக அருமை. பகிர்விற்கு நன்றிகள். தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 2. Good read. Food or thought. Thank you!

  பதிலளிநீக்கு
 3. //இப்போது எல்லோரிடமும் கடிகாரம் இருக்கிறது. ஆனால் யாரிடமும் நேரம் இல்லை!//

  100 சதம் உண்மை...

  பதிலளிநீக்கு
 4. ரொம்ப நாள் கழிச்சி வந்தா மாதிரித் தெரியுது ரோஸ்விக், நலம்தானே...

  பதிலளிநீக்கு
 5. நன்றி தியாவின் பேனா...உங்கள் கட்டுரைகள் அடர்த்தியான விஷயங்களுடன் இருக்கு.

  பதிலளிநீக்கு
 6. ப்ரியமுடன் வசந்த்,

  உங்களுக்கு நேரம் கிடைத்து வந்து விட்டு சென்றது சந்தோஷம்...வர்றதே இல்லை போல...

  பதிலளிநீக்கு
 7. நன்றி புலவன் புலிகேசி,

  பாசக்காரத் தந்தையின் பதைபதைப்பை அழகுற சொல்லி உள்ளீர்கள்....

  பதிலளிநீக்கு
 8. அத்தனையும் அருமையான வாசகங்கள் தலைவரே... ரொம்ப நல்லாயிருக்குது..

  என்னோட பெஸ்ட் இதுல,

  அந்தக் காலத்தில் யாரிடமும் கடிகாரம் இல்லை, ஆனால் எல்லோரிடமும் நேரம் இருந்தது. இப்போது எல்லோரிடமும் கடிகாரம் இருக்கிறது. ஆனால் யாரிடமும் நேரம் இல்லை!

  செம்ம கலக்கல்!

  பதிலளிநீக்கு
 9. வந்தனம் சென்ஷி -- உங்களை மாதிரி ரசிகர்கள் வந்தால்தான் 'எங்கள்' கச்சேரி களைகட்டுகிறது. அடிக்கடி வாருங்கள். ஆதரவு தாருங்கள்.

  பதிலளிநீக்கு
 10. செலவழிக்குமுன் சம்பாதியுங்கள்!
  Very Nice!

  பதிலளிநீக்கு
 11. செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்; அப்புறம் கல்யாணம் செய்துகொள்ளுங்கள்!

  பதிலளிநீக்கு
 12. உமது உள்பெட்டியை அடிக்கடி கவிழ்க்க வேண்டுகிறேன். வாராது வந்த மாமணியாக அவ்வப்போது அருமையாக ஒரு கருத்து கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

  பதிலளிநீக்கு
 13. நேத்து இந்தப் பக்கம் வரல.கொஞ்சம் மனசு என்னமோ அலட்டிக்கிச்சு.
  பொன்மொழிகள் அத்தனையும் அருமை.எனக்கும் தேவை ஸ்ரீராம்.நான் என் தளத்தில் எப்போதும் பாவிக்கிறேன்.இன்று உங்கள் சமர்ப்பணம்.நன்றி.

  பதிலளிநீக்கு
 14. எல்லாமே அருமையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 15. நன்றி...நன்றி... நன்றி...

  அனானி, (பெட்டியைக் கவிழ்த்ததில் ஒரே ஒரு முத்துதான் தேறியது போலும்...)

  ஹேமா, (பெரிய வார்த்தைகள்...நன்றி..)

  மீனாக்ஷி..

  பதிலளிநீக்கு
 16. kggouthaman said...

  "செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்; அப்புறம் கல்யாணம் செய்துகொள்ளுங்கள்!"

  என்ன கே.ஜி சார், கல்யாணம் ஆனா பிறகு அப்பறம் எங்கே சேமிப்பது என்றா இந்த அறிவுரை !

  பதிலளிநீக்கு
 17. அதாகப் பட்டது நான் சொல்ல வந்தது என்ன என்றால் சாய்,
  செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள் -
  சம்பாதித்தபின் கல்யாணம் செய்துகொள்ளுங்கள்.
  கல்யாணம் செய்துகொண்டபின்
  செலவுகளை 'அவர்' பார்த்துக்கொள்வார்!
  பழைய பாட்டு:
  'இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்?'
  எங்கள் அடுத்த வரி:
  'செலவினம்'

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!