Saturday, November 21, 2009

பார்த்ததில் கேட்டதில் ரசித்தது, நினைத்தது...

சினிமாக்களில் பல அபத்தங்கள் உண்டு. பாடல்களே முதல் அபத்தம். ஆனால் இனிமையான அபத்தம்!
சண்டைக்காட்சிகள் மனதின் வக்கிரங்கள் என்று தோன்றும். நம்மால் செய்ய முடியாத ஒன்றை செய்வதால் வரும் கவர்ச்சி சண்டைகள், பாடல்கள். கதாநாயகனோ கதாநாயகியோ மலை உச்சியில் பாடும் பாட்டைக் கேட்டு அடுத்தவர் போய் அவரைக் காப்பாற்றி விடுவார்கள்! ஜப்பான் எக்ஸ்போ கண்காட்சியில் எங்கோ ஒரு மூலையில் தம்பி MGR பாடும் "உலகம் உலகம்" பாடல் கேட்டு அண்ணன் MGR "ஆ....என் தம்பி குரல் கேக்குது.." என்று தேடத் தொடங்கி, ஒன்று சேர்வார்கள். ஹிந்தி ஆராதனா படத்தில் ராஜேஷ் கன்னா ஜீப்பில் பாடிக் கொண்டே வருவதை ஷர்மிளா தாகூர் ரயிலில் வந்த படியே கேட்பார்...


ஆராதனா பற்றி இன்றும் நாளையும் CNN IBN சேனலில் அந்தப் படம் எப்படி சூப்பர் ஹிட் ஆனது என்று ஒருமணி நேர படம் காட்டினார்கள். நம் வலைப் பக்கப் பதிவுகளுக்கு Subject தேடுவது போல அவர்களும் எதையாவது காட்டி ரசிக்க வைக்கிறார்கள்...அதில் சொல்லப் பட்ட சில விஷயங்கள்...
1) அந்த 'மேரே சப்னோங்கி' பாடல் காட்சி எடுக்கப்பட்ட போது தனித் தனியாகத்தான் எடுத்தார்களாம். ஷர்மிளா சத்யஜித் ரே படத்துக்கே டேட்ஸ் தந்து விட்டதால் பிரச்னையாம்.


2) ராஜேஷ் கன்னா அப்போது புது முகமாக இருந்தாலும் அந்தப் படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ஆனாராம். அந்த ஜோடி ரசிகர்களைக் கவர்ந்ததால் அதன் பின்னரும் அமர்ப்ரேம், டாக் போன்ற படங்களில் ஜோடி தொடர்ந்ததாம். ஷர்மிளா இந்த திடீர் ஹிட்டினால் தன் கர்ப்பமாகும் திட்டத்தையே தளளி வைத்தாராம்!


3) S. D. பர்மன் தன் அபிமானப் பாடகர் முஹம்மத் ரபியை தெரிவு செய்து வைத்திருக்க, அந்தப் படத்தை முடித்து வைத்த அவர் மகன் R. D. பர்மன் தன் அபிமானப் பாடகர் கிஷோரை வைத்து மிச்சப் பாடல்களை முடித்தாராம். கிஷோர் காட்டில் அதற்கப்புறம் தான் நல்ல மழையாம்.


4) கிஷோர் தன் முதல் பில்ம்பேர் அவார்டும், ஷர்மிளாவும் பில்ம்பேர் அவார்ட் அந்தப் படத்துக்கு வாங்கினார்களாம்.


CNN IBN சேனலில் இன்றோ நாளையோ இரவு பத்து மணிக்கு போடுவார்கள். நேரம் இருந்தால் பாருங்கள். அந்தப் படத்தில் வரும் ராஜேஷ் கன்னாவை இப்போது பார்க்கும்போது ஆச்சர்யமாக இருக்கும்! அந்தப் படம் வந்த பிறகு அவர் கார்க் கண்ணாடியில் பெண் ரசிகர்கள் லிப்ஸ்டிக் கரையாக இருக்குமாம்....அந்த அளவு பெண் ரசிகைகள் அவர்மீது பைத்தியமானார்களாம் ...


கார் என்றதும் ஞாபகம் வருகிறது... இந்த ஸ்விஃப்ட் கார் விளம்பரம் கொஞ்சம் ஓவர் இல்லை...பைனாகுலர் வைத்துப் பார்த்து பார்த்து ரோடு கிராஸ் செய்கிறாராம்...அப்படியும் மோதறா மாதிரி ஒரு ஸ்விஃப்ட் கார் தாண்டுதாம்...அட...


போன சீசனை விட இந்த சீசன் அதிக மழை என்கிறது செய்தி... அதிகபட்சம் ஏழு நாள் பெய்திருக்குமா மழை? அதற்குள் இது அதிகம் என்றால்..."இந்த முறை வெயில் ரொம்ப அதிகம்ங்க" என்று வருடா வருடம் அலுத்துக் கொள்ளும் பொது ஜனம்... அது போல இருக்க முடியாது...ஏனென்றால் வானிலை மையம் சொல்லும் தகவல் இது...என்ன பெய்து என்ன..நிக்கிறதுதான் நிக்கும். மிச்சம்லாம் வழக்கம்போல கடலுக்குதான்...!


மழையோ வெயிலோ குளிரோ அதனால் சீசனுக்கு சீசன் பத்து பேராவது இறந்துவிடுவதாக நியூஸ் வந்து விடுகிறது...மரணத்துக்கு காரணம்தான் வேண்டும்...நேரம் வந்து விட்டால்...!

15 comments:

kggouthaman said...

அது ஆண்டு 1970. நாகையிலிருந்து நாங்க பாலிடெக்னிக் மாணவர்கள், திருச்சிக்கு இண்டஸ்ட்ரீ விசிட் போயிருந்தோம் - அவசரம் அவசரமாக - விசிட் முடித்துவிட்டு, எல்லோரும் ஓடினோம் - மெயின் கார்ட் கேட் அருகே உள்ள தியேட்டருக்கு. அடிச்சு பிடிச்சு உள்ளே போய் - ஆராதனா படத்தை (முக்கியமாக ஷார்மிளா - பாரீடா ஜலால் ஆகியோரை) தரிசித்து, பக்திப் பரவசத்துடன், மழையில் நனைந்தவாறு - ரயில்வே ஸ்டேஷன் ஓடி வந்து, ரயில் பிடித்து நாகை திரும்பினோம்! ஆராதனாதான் நான் நாகைக்கு வெளியே பார்த்த முதல் இந்திப் படம்.

ஹேமா said...

கௌதம் தெரியாத விஷயத்தைச் சொன்னா என்ன சொல்றது.ஆனா ஆராதனா படப் பாடல்கள் கேட்டிருக்கேன்."மேர ஷப்புனாங்கி"ன்னு தொடங்கும்.
இசையை ரசிச்சிருக்கேன்.

கடைக்குட்டி said...

டாக்டரோட பதிவுல..

“வாய் ஏங்க பாடனும்??”ன்ற உங்க பின்னூட்டத்த பாத்துட்டு உங்க இடத்துக்கு வர்றேன்....

நீங்களும் பதிவுக்கு மேட்டர் தேடி இப்ப்டி கண்டத எழுதுறீங்களா?? நீ என் ஜாதிடா செல்லம்.. வா வா...

“மேரெ சப்புனோக்கி...” பாடல் தவிர மற்றதெல்லாம் அந்நியமாக உள்ளது ..

கிருஷ்ணமூர்த்தி said...

இவ்வளவு நீளம் எதற்கு? பெரும்பாலான சினிமாக்களே அபத்தம்!

எங்கள் said...

ஹேமா... என்ன இது, ஆராதனா பற்றி தெரியாதா...என்ன சோகம்? அது சரி என்ன பின்னூட்டத்துக்கு பதில் சொல்றதை சத்தமில்லாம நிறுத்திட்டீங்க...

எங்கள் said...

வாங்க கடை(செல்லமா சுருக்கிட்டோம்!)
பின்னூட்டத்துனால இப்படிக் கூட ............... வருமா? (கோடிட்ட இடத்துல என்ன வார்த்தை வரும் சொல்லுங்க...)

எங்கள் said...

கிருஷ் சார்,
உட்கார்ந்து யோசிச்சா வாழ்க்கையே ரொம்ப அபத்தமாதான் இருக்கு. கடவுள் சத்தமில்லாமப் புன்னகைக்கிறார்...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//ஆ....என் தம்பி குரல் கேக்குது.." என்று தேடத் தொடங்கி, ஒன்று சேர்வார்கள்.//

அந்தத் தம்பி ஒவ்வொரு பாட்டுக்கு ஒவ்வொரு குரலில் பாடுவார்

கிருஷ்ணமூர்த்தி said...

/உட்கார்ந்து யோசிச்சா வாழ்க்கையே ரொம்ப அபத்தமாதான் இருக்கு./

சினிமாக் கொட்டாயில அல்லது டிவி முன்னாலேயே எப்போது உட்கார்ந்து யோசிச்சா அப்படித்தான் தோணும்!

அப்பப்ப வெளியில வந்து நின்னுக்கிட்டும் யோசிச்சுப் பாருங்க!

எங்கள் said...

அது பரவாயில்லை டாக்டர்,
நாளை நமதே படத்துல 'நான் ஒரு மேடைப் பாடகன்' என்ற பாடல்...கண்ணனுக்கு SPB குரல்... MGR க்கு TMS குரல்...சரணத்துல ரெண்டு பேர் குரலையும் MGR தானே பாடிடுவார்...

எங்கள் said...

கிருஷ் சார்,

//அப்பப்ப வெளியில வந்து நின்னுக்கிட்டும் யோசிச்சுப் பாருங்க!//

அங்க நிற்கறீங்க சார் நீங்க....நல்ல பதில்.

கடைக்குட்டி said...

பின்னூட்டத்துனால இப்படிக் கூட ............... வருமா? //

கோவம்?
காண்டு??
ஆத்திரம்??

அன்பு?
பாசம்?
ஆர்வம்?
நட்பு??

நீஙக் சொல்லுங்க எது கரெக்டுன்னு...

(கண்டிப்பா வித்தியாசமான நேர்மையான பின்னூட்டம் உங்களுக்கு நிறைய நண்பர்களை சேர்க்கும்..

டெம்ப்ளேட் பின்னூட்டம் நண்பனை. ..:-)

எங்கள் said...

அன்புள்ள கடை,

நீங்க கொடுத்துள்ள லிஸ்ட்டுல "ஆர்வம். நட்பு" ரெண்டையும் நாங்க டிக் செய்வோம்.... நாங்கள் நினைத்த்ததும் கூட அதேதான்.. கூட "ஆதாயம்" என்றும் சேர்த்துக் கொள்ளவும்!

mali said...

ஆராதனா சென்னை 'ஆனந்த்' தேயேட்டரில் ஓடோ ஓடு
என்று ஓடிய படம். R D பர்மன், கிஷோர் குமார் combination
தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். அந்த படத்தின்
வெற்றிக்குப்பின் ராஜேஷ்கன்னா கார் எங்கு சென்றாலும் சில தீவிர
ரசிகர்கள் அவர் காரில் படிந்த தூசியை எடுத்து விபூதிபோல
இட்டு கொள் வார்களாம்.

எங்கள் said...

மாலி சார்,

R.D. Burman இசை என்று நமக்கெல்லாம் தெரியும். ஆனால் படத்தில் இசை S.D.Burman என்றுதான் வரும் நினைவிருக்கிறதா?

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!