வெள்ளி, 6 நவம்பர், 2009

கண்ணனின் ஆரமுது.

பொதிகையில், இன்று காலை, இனிதே முடிந்தது, இந்தப் பொக்கிஷ நிகழ்ச்சி. இன்று எழுநூற்று முப்பத்தைந்தாவது, இறுதிப் பகுதி. 
திரு வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் ஊராகிய வேள்விக்குடி பெருமாள் பற்றியும், கிருஷ்ணன் அவருடைய பெற்றோர் பற்றியும் கூறினார். வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த தொலைககாட்சி நிகழ்ச்சிகளை காண முடியுமா - காண்பார்களா என்பது தெரியவில்லை. 
திரு வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள், பகவத் கீதையின் எல்லா சுலோகங்களையும் கடந்த மூன்றாண்டு காலத்தில், ஒவ்வொரு க்ஷேததிரத்துடனும் இணைத்து, சிறப்பாக அமைத்து, ஸ்தல மகிமைகளுடன், ஸ்தல காட்சிகளுடன் வழங்கியதற்கு - யாரெல்லாம் காரணமாக அமைந்தார்களோ - எல்லோரையும் வணங்குகிறேன். 
பொதிகையில் - மாலை ஆறு முப்பதுக்கு வருகின்ற இந்நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பு - இன்னும் சில மாதங்களுக்குத் தொடரும் என்று நினைக்கிறேன்.
அடுத்தது, ஸ்ரீமத் பாகவதம், நவம்பர் ஒன்பது அன்று காலை துவங்குகிறது என்று அறிவித்தார்கள். நண்பர்களே - உங்கள் மனம் என்னும் பொக்கிஷப் பெட்டியைத் திறந்து வைத்துக் கொள்ளுங்கள் - நவம்பர் ஒன்பது தொடங்கி, ஒவ்வொரு நாளும், ஒரு விலை மதிப்பில்லா இரத்தினக் கல் உங்களுக்குக் கிடைக்கும்.

5 கருத்துகள்:

  1. ஆம்!கண்ணனின் ஆரமுது'இன்றுடன் முடிந்து விட்டதே என்று எங்கள் குடும்பத்தினருக்கும் மிகவும் வருத்தமே. நானும் என்மனைவியும்
    108 திவ்ய தேசங்களையும் 5 வருடங்களுக்கு முன் தரிசித்து வந்தோம் வேளுக்குடியின் திவ்ய தேச விளக்கங்கள் மறுபடியும் எங்களை அங்கு கொண்டு நிறுத்தின. வேளுக்குடியின் நிகழ்ச்சி கேட்கும் நேரமே 'பொன்னான நேரம்' என்று என் மனைவி கூறுவார், அருவியென வரும் வேளுக்குடியின்
    கீதை விளக்கங்கள் செவிக்கு விருந்து. .' கணீர்' என்ற அவர் குரல் வளம் அவரது உபன்யாசத்திற்கு பிளஸ் பாயிண்ட்.
    மேலும் யாத்திரை தலங்களுக்கு அழைத்துப்போவதில் வேளுக்குடி ஒரு புரட்சி பண்ணி உள்ளார். 3000 யாத்ரிகர்கள், 72 பஸ், 200 சமையல்காரர்கள். குருத்ஷேத்திரத்தில் 3000 பேர் அமர்ந்து 'கீதை மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம்' பாராயணம். நினைத்தாலே புல்லரிக்கிறது Hats off to வேளுக்குடி!
    பி.கு வேளுக்குடி நான் பிறந்த 'கல்யாணமகாதேவி' கிராமத்திலிருந்து 5 கிலோமைல் தூரத்தில் உள்ளது என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. திருத்தம் -----ஐந்து கிலோமைல் அல்ல ஐந்து கிலோ மீட்டர்.

    பதிலளிநீக்கு
  3. திரு வேளுக்குடி கிருஷ்ணன் :

    அவர்களை இங்கு (நியூ ஜெர்சி, அமெரிக்கா) என் நண்பன் (ஐயங்கார் பயல் தான் !) ஒருவன் தன் வீட்டிற்கு உபன்யாசம் செய்ய அழைத்திருந்தான்.

    என்ன ஒரு ஆண்மையான கணிரென்ற குரல், ஆங்கிலமும், சான்ஸ்க்ரிட், தமிழும் கலந்து கண்ணனை பற்றியும் கீதையை பற்றியும் ஒரு மூன்று மணி நேரம் பேசினார். தமிழ் அவ்வளவாக புரியாத என் மகன்களே உட்கார்ந்து கேட்கும் அளவுக்கு அவரின் பேச்சில் ஒரு காந்தம்

    பதிலளிநீக்கு
  4. ஆசிரியர் குழு8 நவம்பர், 2009 அன்று 7:45 PM

    வரவுக்கும் கருத்துக்கும் வந்தனை சொல்கிறோம் - சாய்.

    பதிலளிநீக்கு
  5. வேளுக்குடி கிருஷ்ணன் ரசிகர்களுக்கு நற்செய்தி. கண்ணனின் ஆரமுது வந்த அதே வேளையில் இப்போது அவரே பாகவதம் சொல்கிறார். கேட்டு மகிழுங்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!