சனி, 7 நவம்பர், 2009

எங்கள் வலை பாடங்கள். 01

* வலை மேய்வது என்றால் என்ன?
@ வலை உலகம் - என்றுமே பசுமையானதுதான். இங்கு, ஒவ்வொரு நிமிடமும், புதிய இடுகைகள் துளிர்த்துக்கொண்டுதான் உள்ளன. இவைகளை யார் மேய்ந்தாலும் அவை அழிவதில்லை. மாறாக, மேய மேய செழிப்பாக வளரும்! google போன்ற தேடல் நிலங்கள் - மிக மிக செழிப்பானவை. பசலைக் கீரைகள் தொடங்கி, பார்த்தீனியங்கள் வரை - இங்கு இல்லாதவையே கிடையாது. உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டியது எல்லாம் முப்பத்தாறு விஷயங்கள்தாம். அதாவது 
A to Z = 26 alphabets and
0 to 9 = 10 numerals - Total 36.கூகிள் நிலத்தில், தமிழ் தேடல்களும் சாத்தியம்.
* வலை உலகில் - நீங்க விளைவிக்கலாம்; அறுவடையும் செய்யலாம்.
* அறுவடைகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும்.
* விளைவிப்பவை - உங்கள் சந்ததியினரின் முன்னேற்றத்திற்கு உதவும்.
* நீங்க நல்ல விளைச்சலை ஏற்படுத்த விரும்பினால் - நல்ல விதைகளை தேர்ந்தெடுங்கள். நல்ல விதைகள் என்பது - நல்ல கருத்துகள்.
* நல்ல நிலத்தைத் தேர்ந்தெடுங்கள் - நல்ல நிலம் என்பது - உங்க கருத்துகளை - நீங்க - எந்த மொழியில், எந்த பெயரில் - எப்படி இடுகை இடப்போகிறீர்கள் என்று தேர்ந்தெடுப்பது.
(தொடரும்) 

8 கருத்துகள்:

  1. நன்றி புலவரே - நாளும் அதில் நாம் பாடுபடுவோம்!

    பதிலளிநீக்கு
  2. அருமையான விளக்கம் தான், நான் அதை ஆமோதிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. வலை உலகம் என்பது பொருத்தமான பெயராகவே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. பார்த்தீனியங்கள்-னா என்னண்ணே?
    விவசாயம் நடக்கட்டும்...நடக்கட்டும்...

    பதிலளிநீக்கு
  5. நன்றி ரோஸ்விக் அவர்களே. உங்கள் கேள்விக்கு - இதோ என் சிற்றறிவிற்கு எட்டிய பதில்.
    பசலைக் கீரையது பல்லுயிர்க்கும் உணவாகும் - பல நன்மைகள் உண்டாக்கும் - பாத்தி கட்டி வளர்க்க வேண்டும்.
    பார்த்தீனியங்கள் - எவ்வுயிர்க்காவது ஏதாவது நன்மையுண்டா ? இன்றுவரை தெரியவில்லை - பாத்தி கட்டி வளர்ப்போரும் உண்டா?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!