நாரணன் நம்பி - என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அது ஆண்டாள் பிரயோகம்.
நாராயணன் நம்பி - என்றால் யார் என்று நீங்க கேட்கக் கூடும். மஞ்சேரி நாராயணன் நம்பியார் - என்றால் கூட புருவத்தை நெரிப்பீர்கள்.
எம் என் நம்பியார் - என்றால் அட - அவரா! என்று வியப்பீர்கள்.
எம் ஜி யார் என்றால் யார் என்று தெரிந்தவர்களுக்கு,
நம்பியார் என்றால் யார் என்று தெரியாமல் போகாது.
நான் யார், நான் யார், நான் யார்? என்ற எம் ஜி யார் (குடியிருந்த கோவில்) படப்பாடலைக் கேட்டு இரசித்திருப்பீர்கள்.
அதில் அடுத்து வருகின்ற வரி,
நாலும் மிகுந்தவர் நம்பியார் - என்று பாடியிருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
எந்த நாலு?
நடிப்பு
நல்லொழுக்கம்
நம்பிக்கை (தன்னிடத்திலும், மற்றவரிடத்திலும், தெய்வத்திடத்திலும்)
நகைச்சுவை.
நம்பியார் பிறந்தது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து பத்தொன்பதாம் வருடம், மே மாதம், இருபத்தொன்றாம் தேதி. மறைந்தது, சென்ற வருடம், இதே மாதம், இதே தேதி, இதே நேரம் (மதியம்) - இந்த இடுகை இடப்படுகின்ற இந்திய நேரம்.
மேலே சொல்லப்பட்டுள்ள நாலில் மூன்று ஏற்கெனவே உங்கள் எல்லோருக்கும் தெரிந்தவைகள்தாம்.
நான்காவதான, நகைச்சுவைக்கு நல்ல உதாரணம் வேண்டும் என்றால், படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் எல்லோரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் இடைவேளையில், எம்ஜியார் அவர்கள் சப்தம் போட்டு, வாய் விட்டுச் சிரிக்கிறார் என்றால் - அது நம்பியார் அவர்களின் நகைச்சுவை கலந்த உரையாடலால் மட்டுமே இருக்க முடியும் என்பது படக்குழு சேர்ந்த பலருக்கும் தெரிந்திருக்கும்.
நம்பியாரின் தந்தை பெயர் கேளு நம்பியார் என்பதும், மனைவி பெயர் ருக்மணி என்பதும், இந்தப் பதிவைப் படிப்பவர்கள் பெரும்பாலோருக்கும் தெரிந்திருக்கும்.
இப்ப கொஞ்சம் - படைப்பாற்றல் சமாச்சாரங்கள் பார்ப்போம். நம்பியார் அவர்களுக்கும், படைப்பாற்றலுக்கும் பல சம்பந்தங்கள் உள்ளன. ஆச்சரியமாக இருக்கிறதா? - அவைகளில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.
* நம்பியாரைப் போல நடித்தவர்கள் - அவருக்கு முன் யாரும் கிடையாது. அவர் பாணி தனி. அந்த சிறப்பு அவருக்கு, படைப்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுக்கொடுத்துவிட்டது.
* சினிமா உலகில், நம்பியாரைப் போல நன்னடத்தைக் கொண்டவர்கள் என்று எடுத்துக் கொண்டால், விரல் விட்டு எண்ணிவிடலாம். சினிமா உலகில் பணம் எவ்வளவோ சம்பாதிக்கலாம்; ஆனால் - ஒரு வில்லன் நடிகர் - இந்த அளவுக்கு நற்பெயரைச் சம்பாதித்திருப்பது, அவரின் படைப்பாற்றலுக்கு மேலும் ஒரு சான்று.
* இப்பல்லாம் எவ்வளவோ தமிழ்ச் சானல்களில், 'கலக்கப்போவது யாரு?', அசத்தப்போவது யாரு?, சிரிக்க வைப்பது யாரு, சொரியப்போவது யாரு? என்றெல்லாம் நிகழ்ச்சிகள் வருகின்றன. இவைகள் எல்லாவற்றிற்கும் - முக்கியமான தீம் - "படைப்பாற்றல் கொண்டவர் யாரு?" - இந்த எல்லா நிகழ்ச்சிகளிலும் - நம்பியார் போல நாலு வரியாவது பேசிக் காட்டாமல் - எந்த ஒரு பங்கேற்பாளரும் பரிசு பெற்றிருக்கமுடியாது.
* இப்போ - இந்தப் பதிவாசிரியரின் சில கண்டுபிடிப்புகள்.
# நம்பியார் அவர்கள் பிறந்தது, 19 19 ஆண்டு.
# இறந்தது நவம்பர் 19.
# எம்ஜியார் வாழ்ந்தது 70 வருடங்கள். நம்பியார் வாழ்ந்தது 89 வருடங்கள். 89 - 70 = 19.
# பத்தொன்பது - ஒரு prime number (உத்தம எண்?)
# நம்பியார் அவர்கள் திகம்பர சாமியார் படத்தில் 11 வேடங்களில் நடித்துள்ளார். 11 is a prime number.
# நம்பியார் அவர்கள் நாடகத்தில் நடித்த நாட்களில், அவருக்குக் கிடைத்த முதல் மாத சம்பளம் மூன்று ரூபாய்கள். அதில் ஒரு ரூபாயைத் தான் வைத்துக் கொண்டு இரண்டு ரூபாய்களை அம்மாவிடம் கொடுத்துவிட்டாராம்! 3 is a prime number.
இப்போ வாசகர்களுக்கு கேள்வி -
1) நம்பியார் அவர்களையும், ப்ரைம் நம்பர்களையும் இணைத்து, ஏதேனும் ஒரு பின்னூட்டம் நீங்க இங்கே போடணும். வழக்கம்போல் - ஒவ்வொரு படைப்பாற்றல் மிக்க பின்னூட்டத்திற்கும், பாயிண்டுகள் உண்டு. சும்மா - புகுந்து விளையாடுங்க!
2) நம்பியார் அவர்களின் தாயார் பெயர் என்ன?
இரண்டு கேள்விகளுக்கும் பதில் அளிக்க,
உங்களால் முடியும்.
இந்த ஆட்டைக்கு நான் வரலை!
பதிலளிநீக்குஉயிரோடு இருந்தவரை, குருசாமியாகவும், போய்ச் சேர்ந்த பின்னாடி எவ்வளவு பேச்சில் பச்சை பச்சையாகவும், ஆபாசமாகவும் நடந்து கொள்வார் என்று ஆச்சி மனோரமா முதல் நிறையப் பேர் ப்ரைம் நியூஸ் கொடுத்து விட்டார்கள்.
பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருந்த தருணம், இதே நம்பியாரின் மகன் பிஜேபி கட்சியில் இருந்தார்;போயஸ் தோட்டத்துக்கு மிக நெருக்கமாக இருந்தார். இப்போது அட்ரசே காணோம் என்பது not so prime news!
இப்போது சினிமாவில் புருவத்தை மிகவும் கஷ்டப்பட்டு நெரித்துக் கண்கள் பிதுங்குகிற மாதிரி,கோரமாக வசனம் பேசும் வில்லன்களுக்கு மவுசு இல்லை!
இந்த நபருக்கு உங்கள் ப்ளோகில் prime slot கொடுத்திருப்பது சுத்த வேஸ்ட்!
கிருஷ்ணமூர்த்திஜி - ஐயோ - நீங்க பயங்கர வேகம். போய்ச்சேர்ந்தபின்னாடி - பேச்சில் --நடந்துகொள்வார் 'எங்கியோ இடிக்குதே?'
பதிலளிநீக்குசரி உங்களுக்கு இந்தக் கேள்வி - நம்பியாரிடம் நீங்க கண்ட ஐந்து நல்ல அம்சங்களை இங்கே இடவும்!
வாசகர்களே - கேள்விகள் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறோம். இரண்டு கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன. - அவைகளுக்கு பதில் எழுத முயற்சி செய்யுங்கள். மத்தபடி நாங்களும் கிருஷ்ணமூர்த்தி சாரும் சண்டை போடுவதை வேடிக்கைப் பார்க்காதீர்கள். அவர் அரவிந்தர் பற்றியும் எழுதுவார், புவிக்குட்டி பற்றியும் எழுத நினைப்பார். வித்தியாசமான நண்பர்.
பதிலளிநீக்குஐந்து கேள்விகள்? ஐந்து வார்த்தைகளே போதுமே!
பதிலளிநீக்கு"அதான் போய்ச் சேந்துட்டார்ல!ஆளை விடுங்க!"
ஆச்சரியக் குறிகள், வார்த்தைகளில் சேராது. போய்ச் சேர்ந்தவர் பத்தின சேதியும் கவைக்கு உதவாது.
கிருஷ்ணமூர்த்தி சார்!
பதிலளிநீக்குஉங்களுக்குத் தெரியாதது இல்லை. இருந்தாலும், சொல்கிறோம்.
தர்மர் பல இடங்களில் தேடியும் - கெட்டவன் யாரையும் பார்க்க முடியவில்லை என்று திரும்பிவந்தாராம்; துரியோதனன் எல்லா இடங்களிலும் தேடி - நல்லவன் யாரையும் பார்க்க முடியவில்லை என்று திரும்பி வந்தாராம். பார்க்கின்றதும், பார்க்கப்படுவதும் - ஒன்றா அல்லது வேறு வேறா?
இரண்டு பேருமே மக்குகள் என்று தான் அர்த்தம்!
பதிலளிநீக்குநூற்றுக்கு நூறு நல்லது என்றோ, நூற்றுக்கு நூறு கெட்டது என்றோ படைப்பில் எதுவும் இல்லை.இரண்டும் கலந்தது தான்! கலவையின் விகிதம் தான் ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம் மாறிக் கொண்டே இருக்கும்!
உணவுப் பொருட்களில் நாம் சர்வ சாதரணமாக அறிந்து உட்கொள்ளும் அதே ப்ரோடீன்!அணு அமைப்பில் ஒரு சிறிய மாற்றம்செய்யப்பட்டு பாம்பின் கொடும் நஞ்சாக, உயிரை எடுப்பதாக மாறுகிறது.அதுவும் பாம்பு தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக.
அதே நஞ்சை, ஒரு சிறிய விகிதத்தில் பயன்படுத்தும்போது, உயிர்காக்கும் மருந்தாகவும் ஆகி விடுகிறது. சிருஷ்டியின் இந்த இரட்டைத்தன்மையைப் புரிந்துகொள்வது, மிகப்பெரிய சவால்!
பார்க்கின்றதும், பார்க்கப்படுவதும் - ஒன்றா அல்லது வேறு வேறா?
பதிலளிநீக்குசரி கிருஷ் சார்.
பதிலளிநீக்குகேள்வியை மாற்றிக் கேட்கிறோம்.
நம்பியார் அவர்களிடம் இல்லாமலிருந்த, உங்களிடம் இருக்கின்ற ஐந்து நல்ல அம்சங்களை சொல்வீர்களா?
/பார்க்கின்றதும், பார்க்கப்படுவதும் - ஒன்றா அல்லது வேறு வேறா?/
பதிலளிநீக்குஇரண்டு கண்ணாடிகள் நேருக்கு நேர் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். இடையில் ஒரு பூங்கொத்து இருப்பதாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
கேள்வியில் படிக்கும்போது பூங்கொத்து ஒன்று தான் என்ற விடையை எளிதாகப் புரிந்துகொண்டுவிட முடியும்.
ஆனால், அதையே கண்ணாடியில் பிரதிபலிப்பதை எண்ணினால்....infinite என்று தானே விடை வரும்!
உங்கள் கேள்விக்கு இன்னமும் விரிவான விடை, என்னுடைய பக்கங்களில் கண்ணன் வந்தான் என்ற குறியீட்டுச் சொல்லை வைத்து, ஒரு கதையாக, இரண்டு பகுதிகளில் படிக்கலாம்!
/கேள்வியை மாற்றிக் கேட்கிறோம்.
பதிலளிநீக்குநம்பியார் அவர்களிடம் இல்லாமலிருந்த, உங்களிடம் இருக்கின்ற ஐந்து /
மறுபடியும் அஞ்சா?
நான் நம்பியார் இல்லை! இல்லவே இல்லை!
அதுதான் தெரிகிறதே!
பதிலளிநீக்குநாங்க கூடதான் நம்பியார் இல்லை.
அதனால அவரு நல்லவர் இல்லை என்று கூறிவிட முடியுமா?
ஸ்ரீராம் வர வர உங்க மறதிக்கு அளவே இல்லாமப் போகுது.மேல அப்பா பேரும்,மனைவி பேரும் தந்திட்டு அம்மா பேர் கேட்டா எப்பிடி ?
பதிலளிநீக்குநம்பியார் படம் பார்த்திருக்கேன்.
ஆனா அவரைப் பத்தி இப்போ நீங்க சொன்னது மட்டுமே தெரிஞ்ச விஷயமா இருக்கு.அதானால பதில் ஒண்ணுமே ஹேமாக்குத் தெரில.
ஹேமா - அய்! நாங்க கொடுக்கற பதிவிலிருந்து - கேள்வி கேட்டு, அதுக்கு நீங்க பதில் சொல்லறதா?
பதிலளிநீக்குஅதெல்லாம் முடியாது. நம்பியார் அவர்களின் அம்மா பெயரை நாங்க தேடி - அது சுலபமா கிடைக்கவில்லை. அதனாலதான் - தேடுகின்ற வேலையை, நாங்க வாசகர்களுக்குக் கொடுத்தோம்.
பிரைம் நம்பர் என்றால் என்ன என்று தொலைபேசியிலும், அலைபேசியிலும், மெயிலிலும் கேட்ட நண்பர்களுக்கு :
பிரைம் நம்பர் - தன்னாலும், ஒன்னாலும் மட்டுமே வகுபடுகின்ற, எண். ஆனால் - இரண்டு எண்களால் வகுபடவேண்டும். (அதாவது, ஒன்று பிரைம் நம்பர் இல்லை)
2,3,5,7,11,13,17,19,23,29,.........
இப்படி போகும்.
விட மாட்டேங்கறீங்களே!
பதிலளிநீக்குபோன வருஷமே எல்லாப் பதிவர்களுமே அஞ்சலிப்பதிவு போட்டுத் தங்கள் கடமையை செஞ்சுட்டாங்க! நீங்க என்னடான்னா, வருஷாவருஷம் அதே கடமை உணர்ச்சியோட நம்பியாரை நினைவு வச்சுக்கணும்னு..... தேவுடா!
விக்கிபீடியாவிலோ வேறு பதிவுகளிலோ கிடைக்காத ஒரு தகவல் போனால் போகிறதென்று!
ஒன்று-வில்லன் வேடம் கட்டத்தான் லாயக்கு என்று முத்திரை கட்டிக் கொண்டு நம்பியார் சினிமாவுக்கு வரவில்லை.நம்பியார் மட்டுமல்ல, அந்த நாட்களில் நடிக்க வந்தவர்கள் எல்லோருமே நாடகக் கம்பனிகளில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள். பசி, பட்டினித் துயரத்தை அனுபவித்தவர்கள். அதனால் எந்த வேடம் என்றாலும் சரி என்று நடித்தவர்கள். கலைச் சேவை செய்வதாக ஊரை ஏமாற்றவில்லை.
இரண்டு-மர்மயோகி என்ற படம். அதில் கோமாளியாகத் தான் நம்பியார் நடித்திருந்தார்! அதைக் காமெடி என்ற ரகத்தில் சேர்ப்பது ரொம்ப கஷ்டம்! உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அவர் வில்லனாகக் கண்ணை உருட்டி முழிப்பதே செம காமெடி!
மூன்று -அந்த நாளில் கதாநயகர்கள், நாயகியர்கள் மட்டுமல்ல, அத்தனை பேருக்குமே, ஒரு பாட்டு சீன் கிடைத்து விடும்! நம்பியாருக்கு அப்படி மர்மயோகி படத்தில் ஒரு பாட்டு சீன் கிடைத்தது.
"நம்ம கழுதை-இது நல்ல கழுதை!"என்று பாடிக் கொண்டு, படத்தில் கோமாளி வேஷம் தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, கோமாளிக் குல்லாய் வேறு அணிந்து பாடிவருவார்!
அந்தக் காலத்தில் கழுதைகள் கூட நல்ல கழுதைகளாக இருந்தது என்ற அரிய செய்தியைச் சொன்ன பாட்டு அது!
நான்கு-பாசமலர் படத்தில் சிவாஜியோடு! வில்லன் வேஷமில்லை என்றால் கூட, மனிதன், அதே ஸ்டீரியோ டைப் முறுக்கலில் தான் வசனம் பேசுவார்.
சந்தேகம் இருந்தால், நம்பியாரிடம், சாவித்திரி தன அண்ணனுக்காகப் பெண் கேட்டு வரும் சீனை மறுபடி பார்த்து விட்டுக் கொட்டாவி விடவும்.
ஐந்து -தூறல் நின்னு போச்சு படத்தில் தான் மனுஷனுக்கு நிஜமாகவே, வித்தியாசமாக நடிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது. ஒரு ஆட்டின் கீழே படுத்துக் கொண்டு பாலைத் திருட்டுத் தனமாக, ஆட்டுக் குட்டி மாதிரியே குடிக்கிற கதாபாத்திரம்! பெரிய வஸ்தாத் என்று சொல்லிக் கொள்ளும் ஆனால், வெத்து வெட்டு! இப்படி வெளுத்து வாங்கி இருப்பார் நம்பியார் என்று சொல்லப் போகிறேன் என்றா நினைத்தீர்கள்? இல்லை, அதெல்லாம் அந்த நாட்களில் கே.பாக்யராஜ் ஒரிஜினல் ஐடியாக்களுடன் கண்முன்னால் கொண்டு நிறுத்திய பாத்திரப் படைப்புக்கள். நம்பியார் செய்த ஒரே நல்ல விஷயம், ஓவர் ஆக்ட் கொடுத்து, கெடுக்காமல் இருந்ததே!
அஞ்சு ப்ரைம் தான்! அஞ்சும் ஒரிஜினல் தான்! நம்பியாரோட அம்மா பேர் தெரியாமல் தானே விக்கிபீடியா பக்கங்களில் வெறுமையாக இருந்தது? கண்டுபிடிச்சீங்கன்னா, அப்படியே,நம்பியாருக்கு எத்தனை அப்பப்பா, அம்மம்மா, சித்தப்பா பெரியப்பா மச்சினிச்சி என்ற விவரங்களையும் விசாரித்து அதையும் சொல்லுங்கள்!
ஐயா அப்படி வாங்க வழிக்கு!
பதிலளிநீக்குநன்றி.
அப்பச் சரி!
பதிலளிநீக்குநம்பி யார் இப்போ நம்பி யாரோ ஆகிட்டார்!
அடுத்த நவம்பர் பத்தொன்பதில்,நினைவிருந்தால் நம்பி யார் என்பதை மறுபடி re போஸ்டிங் இல் பார்ப்போம்! அதான் ப்ரைம் டைம் முடிஞ்சு போயாச்சே!
Why? 2 is also a prime number. Your 3 is split into another prime.
பதிலளிநீக்குஅனானி!
பதிலளிநீக்கு/. Your 3 is split into another prime/
எவர் 3?
என்ன விளையாட்டு இது.....
பதிலளிநீக்குஆனால் நம்பியாரை ஆராய்ந்த வித புதிது...........
இந்த ஆட்டைக்கு நானும் வரல...ஆனா ஒரு உண்மையான நல்ல மனிதர் நம்பியார்...
பதிலளிநீக்குஇதுவரை இங்கு காணப்படும் பின்னூட்டங்களில், கிருஷ் சார் தவிர வேறு யாரும் எங்கள் இரண்டு கேள்விகளுக்கு பதில் அளிக்க முயற்சி செய்யவில்லை! இந்த (மூன்றாம்) பதிவு மூலமாக படைப்பாற்றலின் ஒரு முக்கிய அம்சமான - சம்பந்தமே இல்லாத (அல்லது சம்பந்தமே இருக்காது என்று நாம் நினைக்கும்) இரண்டு விஷயங்களை, எப்படி சம்பந்தப்படுத்தி பார்க்கலாம் என்று உங்களை சிந்திக்க வைத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குபடைப்பாற்றல் பகுதி ஒன்றில், 'வித்தியாசமாக யோசிக்க முடிகிறதா என்றும், பகுதி இரண்டில்,
கவனம்,
Do not stop with one right answer என்ற கருத்தும்,
நீங்க நினைப்பதை அடைய - உங்களால் முயற்சி செய்யமுடிகிறதா - என்பதையும் சோதித்தோம்.
Please re-visit and see.
நண்பர்கள் கவனத்திற்கு
பதிலளிநீக்குதமிழர்ஸ் தளத்தில் உங்கள் பதிவை இணைக்கலாம் வாங்க....
ஆங்கிலம் | தமிழ் | SEO Submit
காணொளி தேடல் | வலைப்பூக்கள்
ரொம்ப நல்லவருக்காக இங்கே நீங்கள் நடத்திய மகோத்சவம் அங்கே என் பதிவின் ஒரு பகுதியாக!
பதிலளிநீக்குவிளையாடறதுக்கோ அல்லது திட்ட வர்ரவங்களையும் இங்கேயே ரெடைரக்ட் செய்திருக்கிறேன்.
http://consenttobenothing.blogspot.com/2009/11/blog-post_20.html
உங்க பதிவு புரிஞ்சுது.... ஆனால் பின்னூட்டங்களை பார்த்தேன் தலை சுற்றுது..
பதிலளிநீக்குஎனக்கு தெரியல
பதிலளிநீக்குசந்ரு பின்னூட்டங்களில்(?) தலைசுற்றிச் சொன்னது:
பதிலளிநீக்கு/உங்க பதிவு புரிஞ்சுது.... ஆனால் பின்னூட்டங்களை பார்த்தேன் தலை சுற்றுது../
ரொம்ப நாளைக்கப்புறம் சந்திக்கிறோம் இல்லையா சந்ரு? சரியாப்போயிடும்!
எதுக்கும், குடியிருந்த கோவில் படத்தில் நம்பியார் கண்ணை உருட்டி மிரட்டி பேசும் காட்சியைப் பத்து தடவை பாத்துடுங்க!
பின்னூட்டம் அப்ப புரிஞ்சுடும்!
நம்பியார் எ ரக ஜோக்குகள் அடிப்பார் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், தெய்வ பக்தி, நன்னடத்தை, வீட்டு சாப்பாடு மட்டுமே சாப்பிடுதல், அகங்காரம் இல்லாத வெற்றி ஆகியவை அவரது சிறப்பு அம்சங்கள். அவர் பையன் அரசியலில் அடி வாங்கினார் என்பது இதற்கு தொடர்பில்லாத விஷயம். எனினும் இந்து மதப் பற்று, தெய்வ நம்பிக்கை இரண்டுக்கும் BJP யை தொடர்பு படுத்தி ஒரு பிரமை பரவலாக இருந்து வருகிறது. இதன் தாக்கம் அவரிடமும் இருந்திருக்கலாம். விவாதங்களில் சிக்காத நல்ல நபர், பெரிய தர்மம் செய்தவரா என்பது தெரியவில்லை. வாழ்க அவர் நாமம்!!!
பதிலளிநீக்குராமன்,
பதிலளிநீக்குநீங்கள் சொல்கிற எதுவுமே நம்பியாருடைய வெற்றிக்கு அல்லது பதிவுகளில் நினைவு விழா கொண்டாடுகிற அளவுக்கு காரணம் இல்லை! என்னுடைய ஆதங்கமே வேறு! நினைவு வைத்துக் கொள்ள வேண்டியவர்களை எல்லாம் மறந்து விட்டு, கூத்தைப் பார்த்தோமா மறந்தோமா என்று விட்டுத் தொலைக்க வேண்டிய கூத்தாடிகளை இவ்வளவு தலைக்கு மேல் வைத்துக் கொண்டாட வேண்டுமா என்பது தான்.
மற்றபடி இங்கே பின்னூட்டங்களில், நகைச் சுவையாக மட்டுமே சில விஷயங்களைக் கேள்விகளாக, தகவல்களாக எழுதினேனே தவிர நம்பியார் மேல் விசேஷமான அக்கறையோ, காழ்ப்போ கிடையாது.
ஆலையில்லா ஊரில் இலுப்பைப் பூ சக்கரை என்ற மாதிரி முதிர்ச்சியடையாத தமிழ் சினிமாவில் அவரும் முதிர்ச்சி அடையாத ஒரு நடிகர் அவ்வளவு தான்! அது அவருடைய குற்றம் மட்டுமல்ல என்பதற்காகத் தான், கே.பாக்யராஜ் தன்னுடைய படத்தில் அவரைப் பயன்படுத்திக் கொண்டதையுமே சொல்லியிருந்தேன்.
சுகுமாரன் நம்பியார் பற்றி....தகப்பனின் பெயர், புகழ் மட்டுமே ஒருவனை அரசியல் என்று மட்டுமில்லை, எதிலுமே தூக்கி நிறுத்தி விடாது. சுகுமாரனுக்கு நான் செகண்டரி இம்பார்டன்ஸ் தான் கொடுத்திருந்தேன்.தன்னுடைய சொந்தத் தகுதியை வளர்த்துக் கொள்ளமுடியாத எவருக்குமே கூட அதுவே ஜாஸ்தியாக்கும்!
ஹூம்! எல்லோரும் எங்கள் கேள்விகளை மறந்துவிட்டு, இங்கே கும்மி அடிச்சுகிட்டு இருக்கீங்க!!
பதிலளிநீக்குதமிழில் பதிவுகள், கும்மி இல்லாமலா?
பதிலளிநீக்குகேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் இருக்கும் போது கும்மியடிப்பது நல்ல எஸ்கேப் ரூட்டாகவும் இருக்கலாம்!
கேள்விக்கு வேறு ரூட்டில் பதில் சொல்லிவிட்டுத் தான்.........!
தகுதி இல்லாத சினிமா நபர்களையும், கிரிக்கெட் "வீரர்களையும்" கொண்டாடி நேரத்தை வீணடித்து நம் கௌரவத்தையும் தொலைத்துக் கொள்கிறோம் என்பது உண்மைதான். அதே சமயம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டியவர் யார் என்ற கேள்விக்கு பதிலும் சற்று சிக்கலானது; விவாதத்துக்குரியது. அரசியல் அயோக்கியத்தனம் மிகுந்ததாகி விட்டது. அறிவியல் தனி நபர் சாதனைகளை தாண்டி குழு முயற்சி ஆகிவிட்டது. இலக்கியம் பணத்தாசைக்கு பலியாகி விட்டது, ஊடகங்கள் ஜால்ரா அல்லது அர்த்தமற்ற விமர்சனங்களுக்கு விலை நிலமாக இருக்கிறது. பின் யாரைக் கொண்டடுவதாம்? கேள்வி சற்று கடினமானதுதான்.
பதிலளிநீக்கு/பின் யாரைக் கொண்டடுவதாம்? கேள்வி சற்று கடினமானதுதான்./
பதிலளிநீக்குஅனானியாக முகம் தெரியாமல் வருவதற்குப் பதிலாக, சொந்த முகத்தோடு வந்து பார்க்கப் பழகினால், ஒரு வேளை, உங்களைக் கூடக் கொண்டாடலாம்!
அனானி! கேள்வியில், எந்தக் கடினமும் இல்லை. வாழ்க்கையை நீங்கள் எந்தவிதத்தில் எதிர்கொள்ளத் தயாராயிருக்கிறீர்கள், பக்குவப் பட்டிருக்கிறீர்கள் என்பது உங்களுடைய முயற்சி, உழைப்பு முதலானவற்றைத் தீர்மானிக்கிறது.
கற்பனையில், கனவில் மட்டுமேவாழுகிற சோம்பேறி, தான் சந்திக்க வேண்டிய சூழ்நிலை அல்லது சோதனையை, எம்ஜியார், நம்பியாரை உதைக்கும்போது, 'அப்படித்தான் நல்ல உதையுங்க வாத்தியாரே' என்று கைதட்டி விசில் அடித்து அத்துடன் நின்று விடுகிறான்.
அவனுடைய வாழ்க்கை அந்த அளவோடு தேக்கம் அடைந்து விடுகிறது இல்லையா?
கற்பனையை விட்டு, நிஜ உலகில் சந்திக்க வேண்டிய பிரச்சனைகளை சாமர்த்தியமாக எதிர்கொள்கிறவன் முன்னேறுகிறான் என்பதும் தெரிகிறது இல்லையா?
இப்போது சொல்லுங்கள், விடை தேடுவது கடினமாகவா இருக்கிறது?
அன்புள்ள அனானி,
பதிலளிநீக்கு//"ஊடகங்கள் ஜால்ரா அல்லது அர்த்தமற்ற விமர்சனங்களுக்கு விலை நிலமாக இருக்கிறது"//
'விளை' நிலங்களாக என்று எழுத எண்ணி இப்படி வந்ததா அல்லது காரணாமாகவே எழுதப் பட்டதா தெரியவில்லை.,..சில சமயம் ஊடகங்கள் பல்வேறு காரணங்களுக்காக விலை போவதால் அந்த வார்த்தைப் பிரயோகம் நன்றாகவே உள்ளது மற்றபடி 'எங்கள்' சார்பில் கிருஷ் சாரே நன்றாக விவாதித்துள்ளார்...!தொடரட்டும்...
//"கற்பனையில், கனவில் மட்டுமேவாழுகிற சோம்பேறி, தான் சந்திக்க வேண்டிய சூழ்நிலை அல்லது சோதனையை, எம்ஜியார், நம்பியாரை உதைக்கும்போது, 'அப்படித்தான் நல்ல உதையுங்க வாத்தியாரே' என்று கைதட்டி விசில் அடித்து அத்துடன் நின்று விடுகிறான்"//
பதிலளிநீக்குகிருஷ் சார்,
எனக்குத் தெரிந்த ஒருவர், வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக வெற்றி பெற்றவர், அப்போது நல்ல பதவியில் இருந்தவர், அவர் கூட MGR க்கு விசிலடித்துப் பார்த்திருக்கிறேன்...
ஒருமுறை MGR மதுரை ரேஸ் கோர்ஸ் சாலை வழியாக திறந்த காரில் சென்றார்... அதுவரை திட்டிக் கொண்டிருந்த இன்னொருவர (இவரும் நல்ல வேலையில் இருந்தவரே..) MGR தாண்டும்போது எழுந்து நின்று உணர்ச்சியுடன் கை ஆட்டியதை பார்த்திருக்கிறேன்..
Just thinking aloud (I hope it is allowed here). Do majority support somebody - because of his/her popularity or - due to support / opposition - somebody becomes popular? Or are they complimentary to each other? One more view is, that by opposing some popular figures, the opposer can become popular quickly and easily. What say you, the readers?
பதிலளிநீக்குஅனாமதேயமாக ஒளிந்து கொள்வதற்கும் சில காரணங்கள் உண்டு நண்பர் கிருஷ்! ஆட்டோவில் வந்து தடியடிப் பிரயோகம் செய்வார்களோ என்பதான பயம் ஏதும் இல்லை. இருந்தாலும் தகுந்த காரணம் இருக்கிறது. பாராட்டு விழாவுக்கு அலர்ஜி என்று வைத்துக் கொள்ளுங்களேன். பாராட்டுகள் பலவிதம். கத்தரிக்காய் கறி நன்றாக அமைந்தால் பாராட்டு என்பது போல் துவங்கி பல படிகள் மேல் செல்லுகிறது. நான் சொல்ல வருவது ஆண்டாண்டு தோறும் நினைவில் கொண்டு பாராட்ட அதிகம் பேர் கிடைப்பதில்லை. காலம் செல்லச் செல்ல பெரும் தியாகங்களும் நீர்த்துப் போய் விடுகின்றன. முன்பொரு காலம் கொண்டாடிப் பாராட்டிய சிலதை இன்று பார்த்தால் அட, இந்த திராபையையா அப்படிப் கொண்டாடினோம் என்ற சலிப்பு தோன்றுகிறது. அவ்வளவுதான்.
பதிலளிநீக்குமீண்டும் அனாமதேயமாக ஒளிந்து கொள்வதற்கு மன்னிக்கவும்.
கோடியில் ஒருவருக்கு, நூத்துப்பத்துக் கோடியில் ஒருத்தன் சொல்றது இன்னான்னா,
பதிலளிநீக்குதூக்கம், கொட்டாவி, சோம்பேறித்தனம், பத்துப்பேர் ஓடினாங்கன்னா என்னன்னே தெரியாம, பதினோராவது ஆளாப் பின்னால ஓடறது தொத்து வியாதி மாதிரி! இந்தப்பட்டியலில் இன்னும் நிறைய இருக்கிறது!
இப்படிஇருக்கிறதெல்லாம் ஒரே வார்த்தையில மந்தைத்தனம்னு சொல்வாங்க. உங்களுக்கும்முன்னாடிக் கமெண்டுல, எம்ஜியாரை வெறுத்தவர் கூட, எம்ஜியாரைப் பார்த்தவுடன் உணர்ச்சி வசப்பட்டுக் கையை ஆட்டினதாச் சொல்லியிருந்தது.
இதுக்கெல்லாம் கே.பாக்யராஜ் பாணியில் இன்னமும் பச்சையாச் சொல்லணும்னா, வாத்துமடையர்களாக இருப்பது நமக்கு இயல்பாகவே இருக்கிறது.இதிலிருந்து வெளியேறி, சுயசிந்தனையும், முயற்சியும் உள்ளவர்களாக இருப்பதற்குத்தான் போராட வேண்டியிருக்கிறது.
அப்புறம் அனானி,
அனானியாக இருக்க விரும்புவது கூட ஒருவிதமான பதிவுலகத் தொற்று வியாதியாக இருக்கலாம்:-))
விடை : கேள்வி 1
பதிலளிநீக்குpinnuttam -- நம்பியார்+ ப்ரைம் நம்பர்கள் =36 ( record no of comments )
ஒரு வாதத்திற்கு : ஒன்றுக்கும் உதவாத நம்பியாருக்கு இவ்வளவு commentsaa !
கேள்வி ௨
Mrs கேளு நம்பியார்
மாலி - உங்க கமெண்ட் முப்பத்தேழு - அது ப்ரைம் நம்பர் என்கிறீர்களா?
பதிலளிநீக்குMrs 'கேளு' நம்பியார்: இதப் 'பாரு'டா!
எவ்வளவு 'வாய்' சவுடாலா சொல்லியிருக்காருன்னு!
'மெய்'யாலுமே 'மூச்சு' அடைச்சிப் போயிடிச்சு!