வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

பேர் மயக்கம்.





ராமச்சந்திரனின் பொறுமை எல்லை மீறிப் போய்க்கொண்டிருந்தது. மணி 11.30. இன்னும் அந்த பாழாய்ப் போன குடிகார ஜன்மத்துக்கு வீடு நினைவே வரவில்லை போலும். இன்னும் எத்தனை நேரம் காத்திருப்பது? இன்று வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கண்டித்துப் பேசிவிட வேண்டியதுதான்
  

ரமேஷ் வீடு திரும்பி தயக்கத்துடன் கதவைத் தட்டும்போது மணி 12.15. தள்ளாடியபடி உள்ளே வந்த பின்பு சுற்று முற்றும் கலக்கமாகப் பார்த்து " சுமதி தூங்கிட்டாளா?" என்று ஈன ஸ்வரத்தில் ஒரு கேள்வி!  

     
"ஊரே தூங்கியாச்சு. நாந்தான் ஒரு ஈனப்பிறவி முழிச்சுக் கிட்டு இருக்கேன். கொஞ்சமாவது ஒரு வெட்கம் ரோசம் இருக்க வேண்டாமா? அக்கம்பக்கத்தில் மட்டுமில்லை ஆபீசில் கூட என் மானம் கப்பலேறுது."

     
"விட்டுடணும்னுதான் பாக்கறேன். முடியல்லியேப்பா!"   

         
"முடியலியேப்பாவா! முடியணும்ப்பா! வயசு ஆகுது இந்த அளவு கூட செல்ஃப் கண்ட்ரோல் இல்லீன்னா.."    

     
"அம்பது வருஷப் பழக்கம். திடீர்னு விட்டுடமுடியுமா, பாக்கறேன். " என்று 30 வயசு மகனிடம் சொல்லிவிட்டு மாடி ஏறினார் அப்பா ரமேஷ். ராமச்சந்திரன் தன் விதியை நொந்துகொண்டு அம்மா சுமதி பாக்கி டோஸை விடுவாள் என்று எண்ணியவாறு உறங்கப் போனான்.    

     
சுபம்.    

?!

      
மேலே இருப்பது மேலும் ஒரு ஃபார்முலா கதை. இதற்கு முன் வெளியான வயசுக் கோளாறு பால் மயக்கம். இது பேர் மயக்கம். ரமேஷ் என்றால் இளைஞன் என்றும் ராமச்சந்திரன் பெரியவர் என்றும் ஒரு பிரமை தட்டுவதை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஸ்பின்

    
தற்போது வரும் கதைகள் பலவற்றிலும் ஒரு பலவீனமான முடிச்சு மட்டுமே பெரும்பாலும் காணப்படுகிறது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் குமுதம் இதழில் வெளியாகும் ஒரு பக்கக் கதைகள். இவற்றை நம்மில் ரசிப்போர்கள் எத்தனை பேர்? நான் பெரும்பாலும் இப்படிக் கூட ஒரு கதையா என்ற ஃபீலிங்குடன் படிப்பது வழக்கம்.   

               
"ஒரு சூப்பர் ஜோக் சொல்லட்டுமா?" என்று கேட்டு விட்டு "சொல்லு" என்றதும் "ஒரு சூப்பர் ஜோக் " என்று சொல்வதைப் போல புஸ்வாணக் கதைகள் ஒரு மாதிரியான பொழுது போக்கு. அவ்வப்போது மூளையை அதிகம் கசக்காமல் இப்படியும் ஒரு கதையை எழுதுவது தவறில்லையல்லவா?  
                           

12 கருத்துகள்:

  1. என்னங்க, பால் மயக்கம், பேர் மயக்கம்னு பதிவே ஒரே மயக்கமா இருக்கே!
    வார இதழ்களில் வெளிவரும் ஒரு பக்க கதைகள் வந்த புதுசுல ரொம்ப சுவரசியமாதான் இருந்துது. போக போக முதல் ரெண்டு வரிகளை படிக்கும்போதே, முடிவு இப்படிதான் இருக்கும்னு சரியா யூகிக்க முடியற மாதிரி ஆனதால, சுவாரசியம் ரொம்பவே குறைஞ்சு போச்சு. சில கதைகள் ரொம்பவே அபத்தமா இருக்கும்.
    //அவ்வப்போது மூளையை அதிகம் கசக்காமல் இப்படியும் ஒரு கதையை எழுதுவது தவறில்லை யல்லவா?//
    தவறில்லை, சுவாரசியமும் இல்லை.

    பதிலளிநீக்கு
  2. நல்ல தீம்.. Really unexpected.

    நா எழுதின ஒரு பக்க செய்திய படிக்கனும்னா.. இங்க வாங்க..
    http://madhavan73.blogspot.com/2010/08/blog-post_08.html

    பதிலளிநீக்கு
  3. வயசுக் கோளாரிலே சஸ்பென்ஸை நல்லா ஹாண்டில் பன்ணியிருந்தீஙக. இதுல பேர் மயக்கம்ன்னு பேர் வெச்சிருக்கக் கூடாது. ரமேஷைவிட வயசில பெரியவர் நேரேட் பண்ற மாதிரி கதையை எழுதியிருந்தா இன்னும் அதிகமான த்ரில்லை உண்டாக்கியிருக்கலாம்.

    “ரமேஷ் இன்றைக்கு மாட்டப் போகிறான். ராமச்சந்திரனுடைய முரட்டு டிசிப்ளினுக்கு முன்னால் டாராகக் கிழியப் போகிறான். ரமேஷ் மட்டும் குடிக்கிறதை நிறுத்தாவிட்டால் ராமச்சந்திரன் அவனை வீட்டைவிட்டுத் துரத்துகிற காலம் அதிக தூரத்தில் இல்லை....” etc

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு
  4. பேர் மயக்கம் என்று ஒரு இரண்டுங்கெட்டான் பெயரை வைத்து மயக்கம் கொள்ள வைத்து விட்டீர்கள். அது பெரிய மயக்கமா அல்லது பெயர் மயக்கமா ?

    பதிலளிநீக்கு
  5. பெரியவருக்கு பேர் இன்னும் இளமையா வைச்சு இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  6. ஒரு பக்கக் கதை படிக்கக் கூட மக்களுக்கு நேரமில்லை என்று சமீபத்தில் படித்தேன்; இன்னும் கொஞ்ச நாள் போனால் ஜோக் நீளக் கதைகள் வரலாம்.

    பதிலளிநீக்கு
  7. அப்பாதுரை சார் ஏற்கெனவே ட்விட்டர் கதைகள் வந்தாச்சு. 140 எழுத்துக்களில் கதை எழுதவேண்டுமாம். கல்கி இணையச் சிறப்பிதழில் படித்த ஞாபகம்.

    பதிலளிநீக்கு
  8. ரைட்டோ.... மூணு வரி எழுதி 'தொடரும்' 'foலோ மி' போடும் தொடர்கதைகள் ட்விடரில் வருவதாகக் கேள்வி. வார்த்தைகளைச் சுருக்கி சுஜாதா ஒரு தடவை கதையோ கட்டுரையோ எழுதிப் படித்த ஞாபகம் வருகிறது.

    பதிலளிநீக்கு
  9. பீர் மயக்கத்தைத் தான் அப்படி தப்பா எழுதியிருக்காங்கனு மொதல்ல நெனச்சேன்..>>>Anonymous said... பேர் மயக்கம் என்று ஒரு இரண்டுங்கெட்டான் பெயரை

    பதிலளிநீக்கு
  10. குமுதம் குங்குமம் வெளியிடும் ஒ.ப.
    கதைகளுக்கு இது தேவலாம்.

    பரமசிவம்,
    orupakkakkathaikal.blogspot.com

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!