சனி, 12 மார்ச், 2011

எ ப ப வி 01

        
எ ப ப வி - என்றால், எப்பவோ படிச்ச பயனுள்ள விஷயம்.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, அண்ணனுடைய புத்தக அலமாரியை நோட்டம் விட்டு, ஒரு மெல்லிய புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.

அதிலிருந்த ஒரு இரண்டு பக்க விஷயம், என் நினைவில் அப்படியே (பச்சக் என்று?) ஒட்டிக்கொண்டது!

'தெய்வந்தன்னை நம்பி தினம் வணங்கினால், ஆ எவ்வித இன்னலையும் நாம் வென்றுவிட முடிந்திடுமாம், வெற்றி நிச்சயமே!'

இதில் என்ன இருக்கிறது என்று கேட்கின்றீர்களா? இது ஒரு mnemonic வாக்கியம். அதாவது வேறு ஒன்றை நினைவிற்கொள்ள ஏற்படுத்தப்பட்ட வாக்கியம்.

இந்தப் பன்னிரண்டு வார்த்தை வாக்கியத்தைக் கவனித்து , ஒவ்வொரு வார்த்தையிலும் எவ்வளவு எழுத்துகள் உள்ளன என்று எண்ணிப் பார்த்தால், 7  3    3   6    1   4    6    2    5    7    3      5    என்ற எண்களை நினைவிற்குக் கொண்டு வரலாம். இவை ஜனவரி தொடங்கி டிசம்பர் வரை, ஒவ்வொரு மாதத்திற்கும், அந்த மாதத்திற்குரிய எண்.

இந்த எண்களால் என்ன பயன்?
     
இவைகளை வைத்துக்கொண்டு, எந்த வருடம், எந்த மாதம், எந்த தேதிக்கும் கிழமை கண்டு பிடிக்கலாம்.  
      
எப்படி?
உதாரணத்திற்கு ஆகஸ்ட் பதினைந்து, 1947 என்ன கிழமை என்று கண்டுபிடிப்போம்.

a) முதலில் வருடத்தை எழுதிக்கொள்ளுங்கள் :    1947

b) பிறகு, வருடத்தை நான்கால் வகுத்து வருகின்ற ஈவுத் தொகை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். மீதியை மறந்துவிடுங்கள். 1947/4 = 486.75 = 486.

c) பிறகு தேதி = 15.

d) அடுத்தது மேலே கூறியுள்ள ஃபார்முலா பார்த்து, ஆகஸ்ட் மாதத்திற்கான எண் பார்க்க வேண்டும். 7 3 3 6 1 4 6 2 5 7 3 5 - இதில் எட்டாவது எண் = 2.

அடுத்து, மேலே கண்டுள்ள a b c d நான்கு எண்களையும் கூட்டிக் கொள்ளுங்கள். அதாவது, 1947 + 486 + 15 + 2 = 2450.

அடுத்து, இந்த 2450 ஐ ஏழால் வகுக்க வேண்டும். மீதி வருகின்ற எண் எது என்று பார்த்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
    
2450 / 7 = 350, மீதி = 0.

மீதி 0 வந்தால் அன்று வெள்ளிக்கிழமை.
மீதி 1 வந்தால் அன்று சனிக்கிழமை.
மீதி 2 வந்தால் அன்று ஞாயிற்றுக்கிழமை.
மீதி 3 வந்தால் அன்று திங்கட்கிழமை
மீதி 4 வந்தால் அன்று செவ்வாய்க்கிழமை
மீதி 5 வந்தால் அன்று புதன்கிழமை
மீதி 6 வந்தால் அன்று வியாழக்கிழமை.

உதாரணம் எண் இரண்டு:

இன்றைய தேதி.  12-03-2011.
2011 + 502 + 12 + 3 (இது ஃபார்முலாவில் மார்ச் மாதத்திற்கான எண்) = 2528
2528/7= ஈவு 361, மீதி = 1. மீதி ஒன்று வருவதால் சனிக்கிழமை.

உங்கள் பிறந்த தேதி ஞாபகம் இருந்தால், என்ன கிழமை என்று கணக்கிட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

(பெப்ரவரி முப்பதாம் தேதிக்கு, ஏப்ரல் முப்பத்தொன்றாம் தேதிக்கெல்லாம் என்ன கிழமை என்று  கண்டு பிடிக்கின்ற அதிபுத்திசாலிகள்,  அதை அவர்களே பார்த்துப் பார்த்துப் பரவசமடையவும்!)
        
எப்பவோ படிச்ச பயனுள்ள விஷயம் ஏதாவது உங்களுக்கு ஞாபகம் இருந்தால், பின்னூட்டமாகப் பதியுங்கள்; அல்லது engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். நன்றி.

             

17 கருத்துகள்:

 1. சார்! நீங்க ரொம்ப மோசம்.. எங்க கணக்கு வாத்தியார் பரவாயில்லை.. ;-))))
  ரொம்ப நல்லா இருக்கு.. ;-))

  பதிலளிநீக்கு
 2. இது போல கிழமைக்கு ராகுகாலம் எமகண்டம் கண்டுபிடிக்க ஒரு பாட்டு இருக்கே ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 3. நன்றி பகிர்வுக்கு!
  ராகு காலத்திற்கு நான் எ ப ப வி -Mother Saw Father Wearing The Turban Suitably - முதல் எழுத்து/எழுத்துக்களை கிழமைகளைக் குறிக்கிறது. ராகு காலம் என்பது ஒரு நாளுக்கு ஒன்றரை மணி நேரம் - காலை 7.30 மணிக்கு தொடங்கும், என்று வைத்து கணக்கிட வேண்டும் - M - Monday - 7.30-9 மணி வரை, அதற்கடுத்ததற்கு அடுத்த ஒன்றரை மணி நேரம், Sa- Saturday - 9-10.30 - இப்படி

  பதிலளிநீக்கு
 4. ராகு காலம் கண்டு பிடிக்க " திருநாள் சந்தடியில் வெளியில் புறப்பட்டு விளையாடச் செல்வது ஞாயமா ? "
  என்ற வாக்கியத்தை மனதில் கொண்டு, ஒவ்வொரு கிழமையின் முதலெழுத்தைக் கண்டு, 07 - 30 முதல் 16 - 30 வரை 90 நிமிட இடை வெளியில் கணக்கிடலாம்.

  வியாழன் முதல் தலை கீழ் வரிசையில் வெள்ளிவரை 06 - ௦௦ முதல் 15 - ௦௦ வரை கணக்கிட்டால் எம கண்டம் கிடைக்கும்.

  இப்படிக்கு அண்ணன்.

  பதிலளிநீக்கு
 5. B.B. Roy of Great Britain Has a Very Good Wife (mnemonic for resistor color code)

  [img src="http://electricly.com/wp-content/uploads/2010/04/resistor-color-code.gif"]

  பதிலளிநீக்கு
 6. ஒரு நேரத்தில்..
  சொந்தக் வாகங்களுக்கு கருப்பு பலகையில் வெள்ளை எழுத்துக்களில் வண்டியின் பதிவு எண் எழுதி இருக்க வேண்டும்.
  வெள்ளை பலகையில் கருப்பு எழுத்தில் இருந்தால் அது வாடகைக்கு அல்லது பொது உபயோகத்திற்கு (eg. பேருந்து)

  கருப்பு வெள்ளை மட்டுமே ஞாபகம் இருக்கும்.. மற்றபடி குழப்பம்தான்.
  அதற்கு எனது அண்ணன் எளிய வழி சொல்லுவார்..
  "சொந்த காரனுக்கு வெள்ளெழுத்து"
  அதாவது சொந்த வண்டியில் வெள்ளை எழுத்து இருக்கணும்.

  பதிலளிநீக்கு
 7. தமிழில் menemonics நினைவில் இல்லை. அண்ணன் அவர்கள் சொன்னது போல ராகுகாலத்திற்கு ஒன்று சொல்வார்கள்

  திருட்டு சந்நியாசி வெளியே புறப்பட்டு விழுந்து செத்தான் ஞாயிற்று கிழமை


  ஆங்கிலத்தில் பல mnemonics உள்ளன.\

  Order of colours in the rainbow, or visual spectrum:
  (Red, Orange, Yellow, Green, Blue, Indigo, Violet)
  Mnemonic:
  Richard Of York Gave Battle In Vain.

  BECAUSE
  Big Elephants Can Always Understand Small Elephants

  பதிலளிநீக்கு
 8. @ yes.ke

  VIBGYOR என்ற அக்ரோனிம் மிகவும் தெரிந்த பிரபலமான வார்த்தை ஆயிற்றே !

  பதிலளிநீக்கு
 9. ரொம நல்லாத்தான் இருக்கிறது. ஆனால் சாரி. கணக்கெல்லாம் போட முடியாது.:)

  பதிலளிநீக்கு
 10. அன்பு நண்பரே நீங்கள் கூறியபடி செய்தால் லீப் வருடத்தின் ஜனவரி,பிப்ரவரி மாதங்களின் கிழமைகள் சரியாக வரவில்லையே!அம்மாதங்களில் 1 குறைத்துக் கொள்ள வேண்டுமா? என்பதை தயவு செய்து விளக்கவும்!நன்றி!!!!

  பதிலளிநீக்கு
 11. மாதத்தின் ரகசியக் குறி(ஜனவரி முதல் டிசம்பர் வரை):
  ”லீஃப்ஆண்டின்(7) முதல்(3) மாதம்(3) மட்டுமின்றி(6) நீ(1) அடுத்த(4) மாதத்திலும்(6) ஓர்(2) எண்ணிக்கை(5) குறைத்திட்டால்(7) கிழமை(3) பிழையாகுமா?(5)”

  கிழமை காணும் முறை:
  வருடமும், வருடத்தை நான்காக்கிய ஈவும், தேதியும், மாதத்தின் ரகசியக் குறியும் ஒன்றாக்கி, ஏழால் வகுக்கவரும் மீதி,
  பூஜ்ஜியமெனில் வெள்ளி,
  ஒன்றெனில் சனி,
  இவ்வாறு முறை வைத்தால் கிழமை கிடைத்திடுமே!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!