Wednesday, March 30, 2011

உள் பெட்டியிலிருந்து. 2011 03
சுவையான குழப்பங்கள்..
(அ) தண்ணீருக்கு அடியில அழ முடியுமா?
(ஆ) மீனுக்கு தாகம் வருமா?
   
(இ) பறவைகள் தூங்கும்போது மரத்திலிருந்து விழுவதில்லையே...
   
(ஈ) முழுசா கட்டி முடிச்சிட்ட கட்டிடத்தைக் கூட ஏன் building னு சொல்றாங்க...? (Built என்று சொல்லலாமே! )

(உ) புதுசு, சுவை கூட்டப்பட்டதுன்னுல்லாம் சொல்ற நாய் உணவை யார் டேஸ்ட் செய்து செக் செய்வார்கள்?
       
(ஊ) குரங்குலேருந்து வந்தவன் மனிதன்னா, இன்னும் குரங்கு இருக்கே...

(எ) குடிச்சிட்டு வண்டி ஓட்டறது தப்புன்னா 'பார்' லல்லாம் பார்க்கிங் எதுக்கு...

--------------------------------------------------------------------------

அட...!

அடுத்தவங்க கிட்டேருந்து எதிர்பார்த்து ஏமாறுவதை விட, நம்ம கிட்டேயிருந்து நாமே எதிர்பார்த்தா உற்சாகமா முன்னேறலாமே..

-------------------------------------------------------------------------

அடடா...!

மீறப் படாத சத்தியங்கள்..
எழுதப் படாத நினைவுகள்...
உண்மை உறவுகளில்
பல சமயம்
வார்த்தைகள்
பகிரத்
தேவையே இல்லை.

உடைந்த பென்சில்கள்
முடிக்கப் படாத வீட்டுப் பாடங்கள்...
முடித்த வீட்டுப் பாடம்
அழியாமலிருக்க
கையில் ஸ்லேட்டு...
பையில் புத்தகங்கள்....

அந்த சந்தோஷத்தை
இப்போது லேப் டாப்பில் தேடினேன்..
கிடைக்கவில்லை!
நஷ்ட ஈடாக
இதை லேப் டாப்பில்
சேமிக்கிறேன்.
----------------------------------------------------------------------

வானின் கருமேகங்கள் மழையாகப் பொழிவது போல்,
வாழ்வின் கறுப்பு தினங்கள் பிறிதொரு நாளில் இனிய தினங்களாக சந்தோஷத்தைப் பொழியும்.. நம்பிக்கை இழக்காமல், வாழும் வரைப் போராடு..!

------------------------------------------------------------------------

அன்பு மனித நேயத்தைக் காட்டும். சமய சந்தர்ப்பங்கள் உண்மையை வெளிப் படுத்தும்.

----------------------------------------------------------------------------
              

22 comments:

அநன்யா மஹாதேவன் said...

//உடைந்த பென்சில்கள்
முடிக்கப் படாத வீட்டுப் பாடங்கள்...
முடித்த வீட்டுப் பாடம்
அழியாமலிருக்க
கையில் ஸ்லேட்டு...
பையில புத்தகங்கள்....
// sigh!!! Good old days! miss them a lot!

middleclassmadhavi said...

எல்லாமே நன்றாக இருந்தாலும் 'அட'க்கு ஒரு அட!

தமிழ் உதயம் said...

சுவையான குழப்பங்கள் : குடிகாரர்கள் தள்ளாடினாலும் ஸ்ட்ராங்காக இருப்பதாக சொலகிறார்களே...

கவிதை மிக நன்றாக இருந்தது.

Madhavan Srinivasagopalan said...

// (எ) குடிச்சிட்டு வண்டி ஓட்டறது தப்புன்னா 'பார்' லல்லாம் பார்க்கிங் எதுக்கு... //

பாருக்கு சீக்கிரம் போகணும்னா வண்டில போகணும். போயி பார்க் பன்னுட்டி குடிச்சிட்டு.. போதை தெளிந்ததுக்கு அப்புறம் வணியில வரலாமே.. !

ஜீவி said...

//அடுத்தவங்க கிட்டேருந்து எதிர்பார்த்து ஏமாறுவதை விட, நம்ம கிட்டேயிருந்து நாமே எதிர்பார்த்தா உற்சாகமா முன்னேறலாமே..//

அட! எதிர்பார்த்து ஏமாந்தாலும் நமக்கு நாமே ஏமாந்தமாதிரி ஆகிப்போச்சு!

Gopi Ramamoorthy said...

:-)

ராமலக்ஷ்மி said...

அட... அடடா!
அடடா... அட அட அட!

குழப்பங்கள் அதீத சுவை:)!

Chitra said...

அடுத்தவங்க கிட்டேருந்து எதிர்பார்த்து ஏமாறுவதை விட, நம்ம கிட்டேயிருந்து நாமே எதிர்பார்த்தா உற்சாகமா முன்னேறலாமே..


...the best! :-)

அப்பாதுரை said...

கவிதை அருமை.
குழப்பங்கள் அறுவை க்க்க்ம்ம் அருமை அருமை.

ஹேமா said...

சுவையான குழப்பங்கள்...

தண்ணீருக்கு அடியில அழ முடியுமா?

அழமுடியும்.அழுகை என்பது உணர்வு.கவலையால் கண்ணீர் வருவது என்பது ஒரு பொருட்டல்லவே.சிலநேரங்களில் மனதிற்குள்கூட அழுகிறோமே !


புதுசு, சுவை கூட்டப்பட்டதுன்னுல்லாம் சொல்ற நாய் உணவை யார் டேஸ்ட் செய்து செக் செய்வார்கள்?

வேற யாரு...அவங்களேதான் !


மற்றதெல்லாம்....அட...அடடாதான்.கவிதை அருமை !

அப்பாதுரை said...

நாய் உணவுன்னாலே உடனே முகம் சுளிக்கிறோமே? ஏன்? ingredients படிச்சுப் பாத்தா நாம் சாப்பிடுறது தான் அதுலயும். (ஷ்! ஒரே ஒரு தடவை மூக்கைப் பொத்திக்கிட்டு taste செஞ்சிருக்கேன். என் மகன் மூன்று வயதில் நாங்கள் பார்க்கவில்லையென்றால் நாய்க்கு வைத்ததை எடுத்து சாப்பிட்டு விடுவான் - கறுக் முறுக் என்று இருக்கு என்பான்)

HVL said...

//புதுசு, சுவை கூட்டப்பட்டதுன்னுல்லாம் சொல்ற நாய் உணவை யார் டேஸ்ட் செய்து செக் செய்வார்கள்?//
நாயை விட்டே டேஸ்ட் பண்ண வைப்பாங்களோ?

HVL said...
This comment has been removed by the author.
HVL said...

@அப்பாதுரை
//
ஷ்! ஒரே ஒரு தடவை மூக்கைப் பொத்திக்கிட்டு taste செஞ்சிருக்கேன். //
எப்படி இருந்ததுன்னு சொன்னீங்கன்னா எங்களுக்கும் உதவியா இருக்கும்.

HVL said...

//அடுத்தவங்க கிட்டேருந்து எதிர்பார்த்து ஏமாறுவதை விட, நம்ம கிட்டேயிருந்து நாமே எதிர்பார்த்தா உற்சாகமா முன்னேறலாமே..//

Nice

அப்பாதுரை said...

@HVL
சாப்பிடக் கஷ்டமாகத் தான் இருந்தது :) கோழி, காய்கறி, அரிசி எல்லாம் கலந்த காய்ந்த உப்பு காரம் இல்லாதப் பத்திய உருண்டை போல இருந்தது சுவை. வாயில் கரையும் போது தாங்க முடியாத வாடை.

அப்பாதுரை said...

crude protein சாப்பிடுவது கஷ்டம். வாடையும் அதனால் தான். செறிப்பதும் கஷ்டம்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

all are nice!

விஜய் said...

ஊ ) அந்த குரங்குகள் இன்னும் Mentos சாப்பிடாமல் இருக்கும் போல

விஜய்

RVS said...

It is Tastier... அப்படின்னு ஆட் குடுக்கலாமா அப்பாஜி! ;-)))
கவிதை நன்று. ;-))

வல்லிசிம்ஹன் said...

நானே அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்கும் இடையே
ஊசலாடிக் கொண்டிருக்கிறேன். நீங்க வேற கிளப்பி விடறீங்க.
அம்மா கட்டிக் கொடுத்த தயிர் சாதம் விட்டுப் போயிருக்கு:)
அழகான கவிதை.
பார்' க்குப் போறவங்க அதுக்காகத்தான் டிரைவரயும் அழைச்சுட்டுப் போவாங்க. அவரும் நிதானத்துல இருக்கணும்:)

meenakshi said...

நல்ல பதிவு! கவிதை மனதிற்கு ஒத்தடம்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!