வெள்ளி, 25 மார்ச், 2011

அ. ஆ. இலவச யோசனைகள்

                        
வந்து விட்டது தேர்தல் அறிக்கைகள்...அள்ளித் தெளிக்கப் படும் இலவச அறிவிப்புகள்...அள்ளி எடுப்பதில் கிள்ளி கொடுக்கிறார்கள் என்று தெரிந்தும் அதற்கு கை தட்டி ஆர்ப்பரிக்கும் தொண்டர் கூட்டம்... இலவசம் கொடுக்க மாட்டேன், வரி ஒழுங்காக விதிப்பேன் என்றெல்லாம் எந்த கட்சியும் சொல்லப் போவதுமில்லை.     
           
 இலவசம் தந்தால் வாங்க மாட்டோம் என்று தமிழர்கள் சொல்லப் போவதுமில்லை. டிவி, அரிசி சைக்கிள் தந்தது போய் இதோ மிக்சி, கிரைண்டர், லேப் டாப் என்று வந்து விட்டார்கள்.

இன்னும் என்னென்ன சொல்லலாம் என்று இவர்களுக்கு திகைப்பு வரலாம். இவர்களுக்கு உதவ எங்கள் யோசனைகளை சில....                     

# எங்கள் ஆட்சியில் வெளியாகும் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றவர்கள் படங்களுக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டிரண்டு இலவச டிக்கெட்டுகள் தருவோம்.

* நாங்கள் எல்லாப் படங்களுக்கும் தருவோம் (இது அடுத்த கட்சி)

# மிக்சி, கிரைண்டர் ஃபிரிஜ், வாஷிங் மெஷின் என்று இதில் எது உங்களிடம் இல்லை என்று தெரிந்து அதை வாங்கித் தருவோம். குறிப்பாக பத்து வோட்டுகளுக்கு மேல் இருக்கும் வீடுகளுக்கு முன்னுரிமை.
 
#  எங்கள் கட்சிக்கு சட்டசபையில் எவ்வளவு இடங்கள் கிடைக்கின்றதோ அவ்வளவு 
GB கெப்பாசிடி  கொண்ட பென் டிரைவ் எல்லோருக்கும் இலவசம்!

# சென்னையில் நடக்கும் கிரிக்கெட் மேட்ச் எல்லாவற்றுக்கும் இலவச அனுமதி. அரசே மொத்த டிக்கெட் பணத்தையும் கொடுத்து விடும்.

# அரசு ஊழியர்கள் (அதிகாரபூர்வமாக) மாதத்தில் பத்து நாட்கள் வேலைக்குப் போகாமலே சம்பளம் வாங்கலாம்.

# பஸ்ஸில் முதல் மூன்று ஸ்டேஜுக்கு டிக்கெட் கிடையாது. (ஆனால் மூன்றாவது ஸ்டேஜிலிருந்து மினிமம் பத்து ரூபாய்...இது ஆட்சிக்கு வந்ததும்!)

# ரேஷன் அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு மட்டும் ஒரு DTH டிஷ் ஆண்டெனா இலவசம். கம்பெனி உங்கள் சாய்ஸ்!

# ரேஷனில் அரிசி கிலோ ஐம்பது பைசாவுக்கும், பருப்பு வகைகள் கிலோ இரண்டு ரூபாய்க்கும் தருவோம்.

# பள்ளிகளில் முதல் பத்து வகுப்புகளுக்கு மட்டும் தேர்வு கிடையாது. கட்டாய பாஸ். ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூ மட்டும் பெயருக்கு தேர்வு எழுத வேண்டும்.

# வாரத்துக்கு ஒரு முறை உங்கள் வீடுகளுக்கு எங்கள் தொண்டர்கள் வந்து தேங்கிக் கிடக்கும் உங்கள் துணிகளைத் துவைத்துத் தருவார்கள்.

# மாதத்திற்கு ஒரு தொகுதி என்று தேர்ந்தெடுத்து அந்தத் தொகுதியில் உங்கள் பிள்ளைகளை எங்கள் தொண்டர்கள் பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். அதே போல மாதம் ஒருமுறை ஒரு இலவசச் சுற்றுலா ஏற்பாடு செய்து தரப் படும்.

# தினமும் காய்கறிகளை நறுக்கி வைத்திருக்கும் எங்கள் உழவர் சந்தைக் கடைகள். உங்களுக்கு தேவையான காய்கறிகளைச் சொன்னால் நறுக்கி பைகளில் போட்டுக் கொடுத்து விடுவார்கள் எங்கள் உழவர் சந்தைத் தொண்டர்கள்!

# வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்பது இனி நான்கரை நாட்கள் என்று குறைக்கப் படும்.

# கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்துணவும், மாத்திரைகளும் வாராவாரம் வீடு தேடி வந்து தருவோம்.

# மின் சாதனப் பொருட்கள் பழுதானால் அதைச் சரி செய்யும் பொறுப்பை அரசே ஏற்கும். (மின்சாரம் இருந்தால்தானே உபயோகப் படுத்தி சரியாய் இருக்கா என்று பார்க்க முடியும் என்ற நம்பிக்கைதான்)
             
# மாவு மில் வைத்திருப்பவர்களுக்கும், திரை அரங்கங்களுக்கும் இலவச மின்சாரம்.
          
# திரைக் கலைஞர்கள் நலிவுற்றவர்களாக திரைப் படத்தில் நடித்தாலே போதும். அவர்களுக்கான எல்லா செலவையும் அரசாங்கமே ஏற்கும்.
            
# நீங்கள் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை வாக்களிக்கக் கஷ்டப் படுவதைக் காண மனம் பொறுக்கவில்லை. எனவே நீங்கள் இனி பத்து வருடத்துக்கு ஒரு முறை மட்டும் அந்தக் கஷ்டத்தைப் படும் வகையில் சட்டம் மாற்றி அமைக்கப் படும்!
                  
இவ்வளவும் எதற்காக? உங்களுக்கு உழைக்க! எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்!
                            

19 கருத்துகள்:

 1. நீங்கள் ஐந்து வருடத்துக்கு ஒரு முறை வாக்களிக்கக் கஷ்டப் படுவதைக் காண மனம் பொறுக்கவில்லை. எனவே நீங்கள் இனி பத்து வருடத்துக்கு ஒரு முறை மட்டும் அந்தக் கஷ்டத்தைப் படும் வகையில் சட்டம் மாற்றி அமைக்கப் படும்!  ...... Best idea! ha,ha,ha,ha,ha....

  பதிலளிநீக்கு
 2. ஏதோ உங்களால் முடிஞ்ச சில கெட்டதை பண்ணிட்டிங்க.

  பதிலளிநீக்கு
 3. இந்த வாக்குறுதிகளுடன் தேர்தலில் நின்றால் எங்கள் வோட்டு உங்களுக்கே!

  பதிலளிநீக்கு
 4. இருக்கிற அடிபுடி போட்டிகள் போதாதென உங்களை ஆலோசகராய் ஆக்கிக் கொள்ளவும் அடித்துக் கொள்ளப் போகின்றன கட்சிகள்:))!

  பதிலளிநீக்கு
 5. இது எல்லாத்துக்கும் பினாமில எங்களுக்கே கண்ட்ராக்ட் குடுத்துப்போம்.:))

  பதிலளிநீக்கு
 6. பிலாகருக்கேல்லாம்.. இலவச இன்டர்நெட்

  பதிலளிநீக்கு
 7. //தினமும் காய்கறிகளை நறுக்கி வைத்திருக்கும் எங்கள் உழவர் சந்தைக் கடைகள். உங்களுக்கு தேவையான காய்கறிகளைச் சொன்னால் நறுக்கி பைகளில் போட்டுக் கொடுத்து விடுவார்கள் எங்கள் உழவர் சந்தைத் தொண்டர்கள்!//

  ஹ ஹ ஹா

  வருங்கால முதல்வர் ஸ்ரீராம் வாழ்க..!

  பதிலளிநீக்கு
 8. சுவிஸ் வரைக்கும் ஏதாச்சும் கிடைக்குங்களாண்ணா.சுவிஸ் பாராளுமன்றத்துக்கும் கொஞ்ச்ம் சொல்லிக் குடுக்கலாம்ல !

  பதிலளிநீக்கு
 9. இலவச யோசனைகள் அருமை! பின்னூட்டங்களில் வந்த யோசனைகளையும் சேர்த்து யாராவது தேர்தல் அறிக்கை விடலாம்!! :-)))

  பதிலளிநீக்கு
 10. இது போன்றவை தேர்தல் வாக்குறுதிகளா இல்லை தேர்தலுக்கு முன்னால் வழங்கப்படுபவையா? தேர்தல் கமிசன் எப்படி இதையெல்லாம் தடை செய்யாமல் சும்மா இருக்கிறது? இது போன்ற வாக்குறுதிகள் அரசியல் சட்டப்படியும் இந்திய constitution படியும் செல்லுமா? யாராவது கண்டறிந்து, செல்லாது என்று தெரிந்தால் stay வாங்க முடியாதா? அல்லது, இப்படியாவது மக்களுக்கு ஏதாவது கிடைத்தால் சரிதான் என்ற நினைப்பா?

  பதிலளிநீக்கு
 11. அப்பாதுரை சார், தேர்தலுக்கு முன்பு வேட்பாளர் வாக்காளர்களுக்கு ஒரு பூனை கொடுத்தால் கூட விதிமுறை மீறல் என்று கணக்காகும். ஆனால், தேர்தல் அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஆளுக்கு ஒரு யானை கொடுப்போம் என்று கூறினாலும் அது விதிமுறைகள் மீறல் கிடையாது!

  பதிலளிநீக்கு
 12. @அப்பாதுரை, எங்கள் ப்ளாக்

  http://www.goo​gle.co.in/#q=DMK%2C%​20PMK%20poll%20promi​ses%20are%20bribe%3A​%20Chennai%20advocat​e%20files%20complain​t&hl=en&biw=1280&bih​=709&prmd=ivnsu&um=1​&ie=UTF-8&sa=N&tab=n​w&fp=bf44e86cd8f82e7​9

  பதிலளிநீக்கு
 13. முதலில் கொடுத்த சுட்டி வேலை செய்கிறதா என்று தெரியவில்லை

  http://mangalorean.com/news.php?newstype=local&newsid=228904

  பதிலளிநீக்கு
 14. சுட்டிக்கு நன்றி கோபி ராமமூர்த்தி சார்! மங்களூரியன்.காம் பார்த்தோம். நம்ம ஊரு மலை விழுங்கிகளுக்கும், கல்லுளி மங்கர்களுக்கும் இதெல்லாம் தவிடு பொடி சமாச்சாரம்!

  பதிலளிநீக்கு
 15. hello
  we are give food in three times in a day to all our voters

  which party is announced ?

  பதிலளிநீக்கு
 16. நன்றி Gopi Ramamoorthy. நம்மளை மாதிரி யாரோ சிந்திச்சதோட நில்லாம செயலிலும் இறங்கியிருக்கார். சபாஷ்!

  i think we ought to fund this lawyer if there is a chance of getting a court ordered 'stay'.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!