வியாழன், 17 மார்ச், 2011

ஆனந்த அதிர்ச்சி 03

                            
ஆனந்த அதிர்ச்சி அடுத்த பகுதியை உடனே வெளியிடாவிட்டால், இரசிகர் மன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்வோம் என்று சில வாசகர்கள் பயமுறுத்தல் மெயில் அனுப்பியதாகக் கனவு கண்டேன். உடனே உறக்கத்திலிருந்து விழித்து எழுந்து இதை அவசரம் அவசரமாக எழுதுகின்றேன்.

அவசரத்தில் இதில் விவரங்கள் கோர்வையாக இல்லாமல் போகலாம். அப்படி ஏதாவது இடைவெளி இருந்தால், வாசகர்கள், அந்த இடைவெளிகளை, அவரவர்களின் கற்பனைக் களிமண் இட்டு நிரப்பிக் கொள்ளவேண்டும்!



ஆகியவைகளைப் படித்த வாசகர்கள் சிலர், தங்கள் அனுமானங்களை சரியான பதிலின் பக்கம் வருகின்றாற்போல் எழுதியிருந்தனர்.  

1) geetha santhanam said...
என்ன ஆச்சு? அதை வைத்து ட்ரைவேலி யூனிவர்சிட்டி மாதிரி அவர் நடமாட்டங்களை track பண்ணினாங்களா?

 
2) meenakshi said...
நிச்சயமாக அது ஒரு உளவு பார்க்கும் சிறு கருவியாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் அதை இடுப்பில் கட்டி கொள்ளாமல், கையிலோ, கழுத்திலோ கட்டிக் கொண்டிருந்தால் சூரிய வெளிச்சத்தில் அது தானாகவே ரீ சார்ஜ் ஆகி இருக்கும். சரியா?
      
============
  
வலையாபதியின் முடிச்சு, அந்தத் தாயத்தின் உள்ளே ஒரு நீலப்பல் விசிலடிச்சான் இருந்தது என்பதுதான்! (bluetooth whistler என்பதை நீலப்பல் விசிலடிச்சான் என்று மொழி பெயர்த்த ஆசிரியரை, வலையாபதி ஃபோனில் என்ன சொல்லி திட்டுவார் அல்லது வாழ்த்துவார்? Any guess?)

அந்த நீ ப வி - அனந்தராமனின் தனித்தன்மை அடையாள எண்ணை (UID No) 'பன்னிரண்டு டிஜிட் நம்பர் ஒன்று சொல்வேன், உன் பவிஷை எல்லாம் டிரான்ஸ்மிட் செய்வேன்' என்று (பத்துக்குள்ளே நம்பர் ஒன்று சொல்லு ... ராகத்தில்) பாடியபடி டிரான்ஸ்மிட் செய்துகொண்டு இருந்தது.

அது சரி - அது டிரான்ஸ்மிட் செய்தால், அதை யாரால், எப்படிக் கேட்க முடியும்? அதை எவ்வளவோ ரிசீவர்கள், சென்சர் கொண்டு கேட்டு, பிக் செய்து, கூகிள் போன்ற தேடு பொறிகளுக்கு தகவல் அனுப்ப முடியுமே!
     
தனித்தன்மை அடையாள எண்ணைக் கொடுத்தவுடன், அனந்த ராமனின் அனைத்துத் தகவல்களையும், கம்பியூட்டரில் உள்ள தேடு பொறிகளின் உதவியால் சில வினாடிகளில் தெரிந்துகொண்டு விடலாம். வியாபாரிகள், ஏஜெண்டுகள், ஷேர் ப்ரோக்கர்கள், வங்கிகள்  போன்று  வர்த்தகம் புரிவோர் / விழைவோர்  எல்லோருக்கும், கூகிள் போன்ற தேடுபொறி மக்கள் இந்த வசதியை, ஆண்டுக் கட்டணம் ஏதேனும் பெற்றுக்கொண்டு செய்ய விரைவில் முன்வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்.

அடுத்த பத்தாண்டுகளுக்குள், இந்த அனந்தராமன் கதை உண்மையிலேயே நடக்க சாத்தியக் கூறுகள் அதிகம்.

அப்போ கூட நம்முடைய எலக்ட்ரிசிட்டி ஆபீசில், 'எல்லோரும் கியூவுல நில்லுங்க, இப்போ பணம் கட்ட முடியாது - இந்தக் கவுண்டர் ஆள் சாப்பிடப் போயிருக்காரு, என்ன பியூஸ் போயிடுச்சா? நாளைக்கு ஒரு ஆளை அனுப்புகிறோம் சார், என்ற நிலையில்தானே இருக்கும்? அங்கே அற்புதங்கள் நடந்ததாக எழுதி இருக்கின்றீர்களே என்று சிலர் கேட்கக் கூடும். இப்போ எல்லோரும் ஆன்-லைன் எலெக்ட்ரிக் சார்ஜ் கட்டமுடிகின்றது. செப்டம்பர் 2007 முதல், இந்தத் தேதி வரையிலும், நாம் கட்டிய மின் கட்டணங்கள் இன்டர்நெட்டில் கிடைக்கின்றது. இந்த விவரங்களை எடுத்து வைத்துக் கொண்டு, ஸ்டாடிஸ்டிகல் அனாலிசிஸ் செய்ய அதிகம் சிரமப்படாமல் இயலும். அப்படி அனலைஸ் செய்கின்ற புத்திசாலி, மின்கட்டண அலுவலகத்தில் ஒருவர் இருந்தால் கூட, அது போதும், மின்சார உபயோகிப்பாளர் விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பதற்கு.

எனவே, மக்களே, உங்க ஏரியாவில், எப்பொழுது, தனித்தன்மை அடையாள எண்ணுக்காக (Unique Identification Number) நந்தன் நிலேகணி பரிந்துரைத்த குழு வருகின்றதோ, அப்பொழுது, பத்துவிரல் ரேகைகள், கண் படம் எல்லாம் கொடுத்து, அடையாள எண்ணை பெற்றுக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் அந்த எண் மூலமாக பல நன்மைகள் ஏற்படப் போகின்றது.
                        

12 கருத்துகள்:

  1. இப்படி ஒன்னு எங்கள் ப்ளாகில் வந்ததே மறந்து போச்சு

    பதிலளிநீக்கு
  2. அவசரத்தில் இதில் விவரங்கள் கோர்வையாக இல்லாமல் போகலாம். அப்படி ஏதாவது இடைவெளி இருந்தால், வாசகர்கள், அந்த இடைவெளிகளை, அவரவர்களின் கற்பனைக் களிமண் இட்டு நிரப்பிக் கொள்ளவேண்டும்!


    //இதுவே அதிர்ச்சியா இருக்கு..:)

    பதிலளிநீக்கு
  3. புதிரில் இருந்து கதைகள் வரை எல்லாவற்றிலும் வித்தியாசம்.

    இனி தாயத்து யாராவது கொடுத்தா வாங்காம்ம இருக்கிறது நல்லது.

    பதிலளிநீக்கு
  4. அயம் வெரி சாரி..
    எனக்கு புரியலை..

    பதிலளிநீக்கு
  5. நாங்களே நிரப்பணுமா...சரியாப்போச்சு !

    பதிலளிநீக்கு
  6. privacy regulation எதுவும் கிடையாதா? விளையாட்டா போயிடுச்சே! நீப மாறினா uid (என்னங்கே பேரிது? கர்ப்பத்தடை வஸ்து மாதிரி) மாறுமா இல்லை அதற்கும் நீபவுக்கும் சம்பந்தம் இல்லையா?

    பதிலளிநீக்கு
  7. கடைசில குடுகுடுபாண்டி ஸ்டைல்ல..'நன்மை ஏற்படப்போகுது'.. என்ன நன்மை?

    பதிலளிநீக்கு
  8. அப்பாதுரை சார், இந்த யு ஐ டி (UID) எண் அமெரிக்காவின் எஸ் எஸ் என் (சோசியல் செக்யூரிட்டி நம்பர்) போன்றது என்று நினைக்கின்றோம். அந்த எண்ணை, ஒலிபரப்பும் ஒரு சிறிய ஒலிபரப்புக் கருவியும், அதை ரிசீவ் செய்து டீ-கோட் செய்து, தேடு எந்திரத்தின் மூலம் சந்தாதாரர்களுக்கு விவரம் அறிவிக்கும் வசதியும் வந்துவிட்டால், இன்னும் சில வருடங்களில், நீங்க மாமி கடைக்குப் போனால், அவர்கள், 'மூன்றாம் சுழி' ஆசிரியரே, வாங்க, வாங்க, அரிசி அப்பளம் வேண்டுமா?' என்று கேட்கக் கூடும்!

    பதிலளிநீக்கு
  9. //எனவே, மக்களே, உங்க ஏரியாவில், எப்பொழுது, தனித்தன்மை அடையாள எண்ணுக்காக (Unique Identification Number) நந்தன் நிலேகணி பரிந்துரைத்த குழு வருகின்றதோ, அப்பொழுது, பத்துவிரல் ரேகைகள், கண் படம் எல்லாம் கொடுத்து, அடையாள எண்ணை பெற்றுக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் அந்த எண் மூலமாக பல நன்மைகள் ஏற்படப் போகின்றது. //

    அந்தக்காலத்தில் எடுத்த என் தேர்தல் அடையாள அட்டையே இன்னும் என்னை கரு கரு மீசையுடன் "பெண்பால்" என்று போட்டு கொடுத்தார்கள். இது வேறையா இப்போ ?

    பதிலளிநீக்கு
  10. தங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
    http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_4203.html

    பதிலளிநீக்கு
  11. நன்றி எஸ் கே. படப் புதிர் பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு!

    பதிலளிநீக்கு
  12. happaa... konjam late aayichunnaalum ippathaan ithai padiccu mudichen.padikkaamalee irunthirukkalaamo?? sariyaa puriyalai...!!!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!