புதன், 2 மார்ச், 2011

மாமி கடை

                  
உறவினர் அழைத்ததால், அவர் வீட்டிற்கு, சிறு விருந்து உண்ண சென்றிருந்தேன்.  முதலில் சர்க்கரைப்பொங்கல், அதன் பின் புளியோதரை,  வடாம், வற்றல என்று ஒரே ஹோம் லிங்க்ஸ் சமாச்சாரங்கள் படை எடுத்து வந்து, தட்டில் விழுந்து, வாயில் போட்டவுடன் சுவையாகக் கரைந்தன.

அரிசி அப்பளம், ஜவ்வரிசி வடாம் போன்ற சைடு டிஷ் சமாச்சாரங்களுக்கு நான் நிரந்தர ரசிகன். நண்பர் வீட்டில் இலையிடப்பட்ட பொரிக்கப்பட்ட அரிசி அப்பளம், இலேசாக, 0.25 mm / 0.5 mm திக்னஸ் உள்ள அரிசி அப்பளம், மிகவும் சுவையாக இருந்தது.

"வீட்டிலே செய்ததா?" என்று கேட்டேன்.

"ஆமாம்."

"அட! எப்படி செய்தீர்கள்?"

"ஹி ஹி நாங்க செய்யலை! ஆனா மாமி கடையில, அப்படித்தான் சொன்னாங்க!"

"என்ன? மாமி கடையா! எங்கே இருக்கு?"

"மாம்பலத்தில்."

"விவரமா சொல்லுங்க. அப்பளம் நன்றாக இருக்கின்றது. நான் காத்மாண்டு போகும்பொழுது பத்து பாக்கெட் வாங்கி போகணும்."

"இப்போ நீங்க சாப்பிட்ட ஹோம் லிங்க்ஸ் பொருட்கள் எல்லாமே மாமி கடையில் வாங்கியதுதான்."

"மாம்பலத்தில் மாமி கடை எங்கே இருக்கு?"

"ஸ்டேஷன் பக்கத்திலேயே. டி நகர் பக்கம் இறங்கி, ரங்கநாதன் தெருவில் அஞ்சு ஸ்டெப்ஸ் நடந்து, வலது பக்கம் திரும்பி நடந்தால், இடது பக்கத்தில் வரும் மாமி கடை. தெரியாவிட்டால் - 'மாமி கடை எங்கே?' என்று சின்னக் குழந்தையைக் கேட்டாக் கூட சொல்லிடும்!"

* * * * * *
உறவினர் சொன்னதைக் கேட்டு, உறுதிப் படுத்திக்காமல் வந்துவிட்டது அசட்டுத் தனமோ என்று அதற்குப் பிறகு தோன்றியது. அவர் சொன்ன அடையாளங்கள் வழியே நடந்து பார்த்தால் அங்கே ஒரு எலெக்ட்ரிக் டிரான்ஸ்பார்மர் என்னை மௌனமாகப் பார்த்தபடி நின்றிருந்தது. அதற்குப் பின்னே ஏதோ கட்டடம் உருவாகிக் கொண்டிருந்தது.

சரி, சின்னக் குழந்தையிடம் கேட்டால் கூட சொல்லிவிடும் என்றாரே என்பது ஞாபகம் வந்தது. ரங்கநாதன் தெருவில், (அதனுடைய) அம்மா தோளில் சாய்ந்து அரை உறக்கத்தில் இருந்த ஒரு இரண்டு வயதுக் குழந்தையிடம், 'மாமி கடை எங்கே இருக்கின்றது?' என்று கேட்டேன். அது, சற்று யோசித்துவிட்டு, 'மாமி பஜ்ஜி போட்டா' என்றது.
 
மாமி பஜ்ஜி போட்டா(ள்)? / பஜ்ஜி போ(ய்)ட்டா? / பஜ்ஜி போண்டா? / மாமி பஜ்ஜி, (நீ) போடா?  இந்தத் தேவை இல்லாத குழப்பங்கள் வேறு இப்போ சேர்ந்துகொண்டது!

ஸ்டேஷனை ஒட்டியே இருந்த ஒரு ஆப்பிள் வண்டிக்காரரை அணுகி, 'சார், இங்கே மாமி கடை எங்கே இருக்கு?' என்று கேட்டேன்.
            
'ஏன் என் கிட்ட ஆப்பிள் வாங்க மாட்டீங்களா?'

'அவங்க கிட்ட வடாம் வற்றல வாங்கவேண்டும், அதுக்குத்தான் கேட்கிறேன்!' 

'உங்களுக்கு மாமி முக்கியமா - இல்லே வடாம் முக்கியமா?'

'வடாம்தான்'

'அப்பிடீன்னா - இதோ ரங்கநாதன் தெருவிலேயே, "........ ....." கடை இருக்கே, அங்கே போயி வடாம் வற்றல எல்லாம் வாங்கிக்குங்க.' 

அந்தக் கடையில் சில சமயங்களில் வாங்கியது உண்டு. சில சமயங்களில், சில பொருட்கள் மட்டும் நன்றாக இருக்கும். ஆனால் அப்பள வகைகள் ஒன்றும் அவ்வளவு சுகம் கிடையாது. இதை எல்லாம் ஆப்பிள்காரருக்கு சொல்லி விரிவுரை ஆற்ற நேரம் இல்லாததால், மீண்டும் அந்த ஸ்டேஷனை ஒட்டிய வீதியில், டிரான்ஸ்பார்மர் தாண்டி, உலா சென்றேன்.
   
உறவினரை அலைபேசியில் அழைத்து, பட்ட அல்லல்களைக் கூறி, அதன் பிறகுதான், அந்தக் கடை நான் நினைத்தது போல அருகிலேயே இருக்காது, இன்னும் சற்று உள்ளே போகவேண்டும் என்று தெரிந்துகொண்டேன்.
   
ஒரு சிறிய ஹோம் லிங்க்ஸ் கடை, பிறகு பட்டாணிக் கடை, இலைக் கடை அதற்குப் பிறகு இருந்தது அந்த மாமி கடை.
    


மாமி கடையைக் கண்டுபிடித்துவிட்ட சந்தோஷத்தில், அரிசி அப்பளம், உளுந்து அப்பளம், நார்த்தங்காய், புளியோதரைப் பொடி என்று ஏகத்திற்கு வாங்கி, பிறகு கடையைக் கண்டுபிடிக்க, நான் பட்ட பாட்டைச் சொன்னேன். மாமி கடை பற்றி, ப்ளாக் எழுதப்போகும் விவரத்தையும் கூறினேன். மாமி சந்தோஷமாக, ஒரு சிறிய பேப்பரில், ஆங்கிலத்தில் இந்த விவரங்களை எழுதித் தந்தார்.

Dealing in household items like butter, ghee, appalam, vaththal, vadaam, pickles.

KANCHI KAMAKSHI HOMELINKS,
S.BHUVANESHWARI
SHOPNO 6,UMA COMPLEX,
NEW NO 36, OLD NO 1,NATESAN ST,
T NAGAR,
CHENNAI,600017
PHONE: 24354799

ஹோம் லிங்க்ஸ் பொருட்களில் ஆர்வம உடையவர்கள், மாம்பலம் பக்கம் சென்றால், இங்கே ஒருமுறை வாங்கி, சாப்பிட்டுப் பார்த்து, எங்கள் சாய்ஸ் சரியா இல்லையா என்று, எங்களுக்கு மெயில் அனுப்புங்கள்.
                 

26 கருத்துகள்:

  1. \\0.25 mm / 0.5 mm\\

    நல்லா சொல்றாங்கய்யா டீடைலு:-)

    பதிலளிநீக்கு
  2. அப்பளம் பத்தின பதிவின் வடை எனக்கே:-)

    பதிலளிநீக்கு
  3. ஹோம்லிங்க்ஸ் பற்றிச் சென்னை நண்பர்கள் சொல்லி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. சேத்துக் கிட்டாச்சு.
    ரொம்ப நன்றி.
    அளந்து செஞ்ச அரிசி அப்பளாம் - here i come!

    பதிலளிநீக்கு
  5. // மாமி சந்தோஷமாக, ஒரு சிறிய பேப்பரில், ஆங்கிலத்தில் இந்த விவரங்களை எழுதித் தந்தார். //

    அடுத்த தடவை சென்னை போகும்போது.. கண்டிப்பா விசிட் பண்ண வேண்டியதுதான். Thanks for the info.

    பதிலளிநீக்கு
  6. ஹோம் லின்க்ஸ் பத்தியெல்லாம் ஒன்னும் தெரியாதே?? ஆனா வீட்டிலேயே செஞ்சு விக்கிறாங்கன்னா, அடுத்த தடவை போறப்ப சென்னைல ஒரு நாள் தங்கி வாங்கணும் போலவே? கோவையிலும் இப்படி இருக்கோ??

    ஆனா தாயத்து பதிவு என்னாச்சு?? வெய்ட்டிங் வெயிட்டிங்... :(

    பதிலளிநீக்கு
  7. மாமி கடை பற்றி என் நண்பர்களுக்கு மெயில் அனுப்பிட்டேன். ஒரு நல்ல கடையை அறிமுகப்படுத்தினதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. மாமியின் சந்தோஷமான முகமே கடையின் தரம் சொல்கிறதே !

    பதிலளிநீக்கு
  9. சம்பவங்களை கதையாக அழகா சொல்றிங்க.

    பதிலளிநீக்கு
  10. குழந்தையை கேட்டாக் கூட சொல்லும்ன்னு சொன்னதுக்காக இப்படியெல்லாம் ட்ரை பண்ணக்கூடாது... நல்லவேளை அது "அம்மா..இந்த மாமா ஏதோ சொல்றா..." ன்னு சொல்லி அவங்க அம்மாட்ட அடிவாங்கி வைக்காம விட்டது நீங்க செஞ்ச புண்ணியம்... ;-)))))))))))))

    பதிலளிநீக்கு
  11. அது பெண் குழந்தையா இருந்தா, ஈவ் டீஸிங் கேஸ்ல உள்ள போயிருந்திருப்பீங்க!! தப்பிச்சுட்டீங்க!! பரவால்ல, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். :-)))))

    ஆமா, இதென்ன, புதிர், கேள்வி-பதில், பாட்டுப்போட்டி, ஃபோட்டோ போட்டி அப்படி இப்படின்னு புதுமை செஞ்சு, கடைசியில விளம்பரத்துறையிலும் இறங்கிட்டீங்க?

    எனிவே, நல்லதை நாலுபேர்க்குத் தெரிவிக்கணும்கிற உங்க நல்லெண்னத்துக்கு வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  12. நடேசன் தெரு என்று அந்தத் தெருப் பெயர் கேட்டிருந்தால், இத்தனைக் கஷ்டப்பட்டிருக்க வேண்டாம், இல்லையா?.. ஆனா, இத்தனை கஷ்டப்படாவிட்டால், இப்படிப்பட்ட லேசா புன்முறுவலுடன் படிச்ச இந்தப் பதிவு கிடைத்திருக்காது; வாஸ்தவம் தான்!

    ஆரம்பத்திலேயே எனக்கு ஏற்பட்ட சந்தேகம் என்னவென்றால், ஸ்டேஷன் பக்கமிருந்து ரங்கநாதன் தெருவில் நுழைந்தவுடனேயே நாலு தப்படியில் வலது பக்கம் திரும்பச் சொன்னார்களே, அது இடதுபக்கமோ என்கிற சந்தேகம் தான்! இடதுபக்கம் இராமேஸ்வரம் தெருவோ என்று..இராமேஸ்வரம் தெருவிலும் லிப்கோ தாண்டி இப்படி ஒன்று உண்டு என்று தான் நினைவு!

    அதெல்லாம் சரி, வாங்கிவிட்டால் மட்டும் போதாது; லேசா சிவந்தும் சிவக்காமலும் பொரித்து எடுக்கிறதிலேயும் ஒரு'நேக்'உண்டு;
    இந்த இடத்தில் மிஸ் பண்ணி விட்டால், மொத்த ருசியும் பணால்!
    எனக்கென்னவோ, அந்த தளி வடாம் மட்டும் அவ்வளவு சரிப்பட்டு வராது;
    ஜவ்வரிசி வடாம் ஓ.கே.! உமிழ்நீரில் கரைந்து தனியா அசட்டுத் திதிப்பில் தித்திக்கும்!

    ஆயிரம் சொல்லுங்கள், வடாம் இடுவதற்கு முன்னாடி, இடும் போதே அந்த அரைச் சூட்டோடு, இடற களி போன்ற மாவின் டேஸ்ட்டே தனிதான்! இடும் பொழுதே, விழுது விழுதா ஒரு ரெண்டு கப் காலியாயிடும்! வெந்த மாவும், பிழிந்த எலுமிச்சை ஜூஸூம் சேர்ந்து, ஒரு வழி பண்ணிவிடும்! இதுக்குத் தான் கடைப்பக்கம் போறதே இல்லை; வெயிலுக்கும் பஞ்சமில்லே; கொளுத்தறது.. ஏகாண்டமா இருக்கிற மொட்டை மாடிலே இட்டுட்டா,
    காக்காய், அணில், புறா என்று இதுகளையும் கொஞ்சம் ருசி பார்க்க வைத்த புண்ணியமும் கிடைக்கும்!

    பதிலளிநீக்கு
  13. ஜீவி உங்க வீட்டுப் பக்கம் வந்தால், எங்களுக்கும் வீட்டு வடாம் கொடுப்பீர்களா?

    பதிலளிநீக்கு
  14. அறிமுகத்துக்கு மிக்க நன்றி! இது போல் ஆயிரமாயிரம் மாமிகள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் கூட இது போன்ற அறிமுகங்கள் தேவை.
    ஜீவி உங்கள் பின்னூட்டம் சுவையோ சுவை! வடாத்து மாவுக்கு எப்பொழுதும் ஒரு தனி ருசிதான். வடாம் இட அம்மாவுக்கு உதவும் போது, ஒவ்வொரு முறை மாவை பிழிந்த பின் அடியில் தங்கும் மாவை நைசாக தின்பதற்காகவே ஓரம் கட்டி விடுவேன். காக்கா வராமா பாத்துக்கறோம்னு சொல்லிட்டு, நாங்களே பாதி காலி பண்ணிடுவோம். பாவம் கக்கா!

    பதிலளிநீக்கு
  15. நிச்சயம், 'எங்கள்'! எதற்கும் தனி மெயிலில் கூப்பிட வசதியா ஃபோன் நம்பர் தெரியப்படுத்திவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  16. அரிசி அப்பளம் என்னோட ஃபேவரைட்.. எங்க மாமி கட.. எங்க மாமி கட.. ஒஹ்ஹ் ரைட் வாங்கிறலாம்..:)

    பதிலளிநீக்கு
  17. ஜீவி... உங்க கமென்ட் படிச்சா அரிசி அப்பளம் சாப்பிடுற மாதிரியே இருக்குங்க.
    காக்காய் அணில் ருசி பாத்தா எச்சில் கிடையாதா?

    பதிலளிநீக்கு
  18. எங்கள் தங்கமே.. அப்படியே ஜீவி தொலைபேசி எண்ணை நினைவில் வைத்து எமது அடுத்த சென்னைப் பயணத்தில் சுவைகூட்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. ஜீவி சார்!
    வடாம் செய்து, அது காய்ந்து, டப்பாவில் அடைக்கின்ற நாளில் engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு ஒரு வரி அஞ்சல் செய்யுங்கள். விலாசம் / அலை / தொலைபேசி எண்களை. எங்கள் ரெப் ஒருவர் மூலமாக வடாம் கலெக்ட் செய்துகொள்கிறோம். (உரிய தொகை கொடுக்கவும் ஆட்சேபணை இல்லை!)

    பதிலளிநீக்கு
  20. ஹி..ஹி.. ஏகாண்டமாய் மொட்டை மாடி,அதுவும் மெட்ராஸிலேன்னு சொன்னதுமே தெரிஞ்சிருக்க வேண்டாமா, எல்லாம் உடான்ஸூன்னு.. கொளுத்தற வெயில்னு குறிப்பு வேறு கொடுத்திருந்தேனே?.. வேணும்னா, 'எங்கள்' மாதிரி ஏதாவது க்டைலே வாங்கிக்கறது தான்! ஒரு நல்ல கடையின் தகவல் கொடுத்ததற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  21. ஆஹா, ஜீவி சார் அடுத்த மாதம் செய்யவேண்டியதை, இந்த மாதமே செய்துவிட்டார். நாங்க மா ஃபூ ஆயிட்டோம்!

    பதிலளிநீக்கு
  22. இத படிக்கும்போது என் சின்ன வயசு எங்க ஊர்ல ஒரு பாட்டி இட்லி சுட்டு ஒரு பாட்டி எங்க ஊருக்கு பக்கத்து ஊருக்கெல்லாம் கொண்டுபோய் விற்பாங்க.
    இப்ப எங்க ஊர்ல அவங்களுக்கு மறுபடி யாரும் இட்லி சுட்டு விக்கறதே இல்ல. காலம் எவ்வளவோ மாற்றமாகிடுச்சு நான் அந்த பாட்டிகிட்ட ஸ்கூலுக்கு கொண்டுபோக இட்லி வாங்கிய நினைவுபடுத்திய உங்களுக்கும் என் நன்றிகள்..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!